எனக்குத் தெரிந்த ஒரு முஹம்மதியத்
தம்பதிகளுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. அவர்களும் செய்யாத வழிபாடுகள் இல்லை.
குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை.
வேறுவழியின்றி ஒரு குழந்தையைத்
தத்தெடுப்பது என்ற முடிவிற்கு வந்தனர். அவர்கள் மருத்துவத்திற்காக செல்லும் வழக்கமான
மருத்துவமனையில், பிறந்து ஒரு சில மணிநேரங்களே ஆன நிலையில் அழகிய ஆண்குழந்தை கிடைக்க,
முறைப்படி அக் குழந்தைய பெற்றுக் கொண்டனர்.
அன்றிலிருந்து அந்த குடும்பத்தில்
நிலவிய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை எனலாம். பெயர் சூட்டுவிழா, கத்னா என்று அனைத்து நிகழ்வுகளுக்கும்
நானும் சென்றிருக்கிறேன். அந்த குழந்தைக்கு நான்கு வயது எட்டியநிலையில் முஹம்மதியத்
தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது.
வளர்ப்பு குழந்தையின் நிலை
கேள்விக்குறியாகுமோ என சுற்றமும், நட்பும்
அஞ்சிக் கொண்டிருக்க, மனிதநேயமிக்க அத்தம்பதிகள் முன்னைவிட இரண்டு குழந்தைகளையும்
துளியளவும் மாற்றமின்றி சீரும் சிறப்புடனும் போற்றி வளர்த்தனர். அவனைத் தங்களது சொந்த
மகனாகவே அறிவிக்கவும் செய்தனர். இந்தச் செய்தி முஹம்மதின் போதனைகளை உயிராக போற்றும்
மதவாதிகளை அடைந்தது. உள்ளுக்குள் புகையத் துவங்கி முல்லாக்களின் தாடிகளின் வழியே கசிய
ஆரம்பித்தது.
அந்தப் பகுதி முல்லாக்கள்,
இஸ்லாமில் வளர்ப்பு மகன் என்ற உறவுமுறை கிடையாது. ”அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து
அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது.” என்று குர்ஆன் 33:05 சொல்கிறது, எனவே நீங்கள்
உங்களது வளர்ப்பு மகனிடம் உண்மையைக் கூறிவிட வேண்டும்; உண்மையை மறைப்பது அல்லாஹ்வின்
சாபத்திற்குரியது என்றெல்லாம் தினமும் அந்த அப்பாவி முஃமினை துளைத்தெடுக்க ஆரம்பித்தது.
அந்த நல்ல மனிதர் அன்பைப்பொழிந்து வளர்த்த அந்த மகனிடம் உண்மையை சொல்ல முடியாமல் தயங்கித்
தயங்கியே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார். முல்லாக்களில் தொல்லையும் தொடர்ந்து கொண்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன்புதான்
அந்தச் சிறுவன் பதிமூன்று வயதை எட்டினான். மகிழ்ச்சியான அக் குடும்பத்தில் முஹம்மதின்
போதனைகள் வடிவத்தில் நுழந்தத வேதனை அனைத்தையும் சின்னாபின்னமாக்கியது. வேறுவழியின்றி,
ஒரு நாள் வளர்ப்பு மகனிடம் தயங்கித் தயங்கி
உண்மையைப் போட்டுடைத்தார். வளர்ப்பு மகன் நிலை குலைந்து போனான். இன்று அவன் குடும்பத்துடன்
ஒட்டாமல் நிற்கிறான். சிறிய விஷயங்கள்கூட பூதகரமாக வெடிக்கிறது. “உங்களது சொந்த மகனாக
இருந்தால் இப்படிச் செய்வீர்களா?”, ”நான்தான் உங்களது உறவில்லையே?”, ”நானொரு அநாதை!”
”எனக்கென்று யார் இருக்கிறார்கள்?” என்று அந்த பிஞ்சு உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது.
அமைதி இழந்த அந்தக் குடும்பம் வழிதெரியாமல் தவிக்கிறது.
எவன் எப்படி நாசமாகப் போனால்
என்ன?
நமக்கு அல்லாஹ்வின் சட்டங்கள்
நிலை நாட்டப்பட வேண்டும்!
தஜ்ஜால்
8 கருத்துரைகள்:
இது போன்ற முட்டாள்தனமான சட்டங்கள் காரணமாகவே எம்மில் பலர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
//அந்தச் சிறுவன் பதிமூன்று வயதை எட்டினான். மகிழ்ச்சியான அக் குடும்பத்தில் முஹம்மதின் போதனைகள் வடிவத்தில் நுழந்தத வேதனை அனைத்தையும் சின்னாபின்னமாக்கியது. வேறுவழியின்றி, ஒரு நாள் வளர்ப்பு மகனிடம் தயங்கித் தயங்கி உண்மையைப் போட்டுடைத்தார். வளர்ப்பு மகன் நிலை குலைந்து போனான். இன்று அவன் குடும்பத்துடன் ஒட்டாமல் நிற்கிறான்.// துவக்கத்திலேயே தெரிவைத்து வளர்பதே சரியானது என தத்து எடுப்பவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தத்து பெற்றோர் தங்கள் உண்மையான பாசத்தால் தங்கள் பெற்ற குழந்தையாக பாவிக்க துவங்குவதால் வளர்ந்த நிலையில் இதுபோன்ற சிக்கல்கள் எழுகின்றன.
//குடும்பத்தில் முஹம்மதின் போதனைகள் வடிவத்தில் நுழந்தத வேதனை அனைத்தையும் சின்னாபின்னமாக்கியது.// முல்லாக்கள் சந்தோஷம் உள்ள இடத்தில் புகுந்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம். இவ்வளவு நாளும் எங்கே போனார்கள்.
வாங்க Ex Muslims Sri Lanka,
நட்பு, திருமணம், விவாகரத்து, தொழில், வியாபாரம் வழிபாடுகள் என அனைத்திலும் முஹம்மதின் முட்டாள்தனம் நிறைந்துள்ளது.
வாங்க ANT,
//முல்லாக்கள் சந்தோஷம் உள்ள இடத்தில் புகுந்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம். //
உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அல்லாஹ்விற்குப் பிடிக்காது. மறுமையில் அல்லாஹ் கொடுக்கும் மகிழ்ச்சியை மட்டுமே அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
இந்தக் கொடுமையைக் கண்ட எனது முஃமின் நண்பர் தத்தெடுக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார்.
mohMAD the 666,
https://www.youtube.com/watch?v=-kp6te0DFl0
https://www.youtube.com/watch?v=cAoXgZLRee0
//இந்தக் கொடுமையைக் கண்ட எனது முஃமின் நண்பர் தத்தெடுக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார்.//
ஒரு தத்துக்குழந்தை தொடக்கத்தில் பயலாஜிகல் பெற்றோரை இழந்தது தொடர்ந்து வாழ்வில் தத்து பெற்றோரையும் இழந்து அனாதையாகிறது. ஒரு குழந்தை குடும்ப சூழலில் வளருவதே சிறந்தது என்பதால் தத்து எடுப்பது ஊக்கப்படுத்தப்படுகிறது. இஸ்லாம் அதற்கு முட்டுக்கட்டை என்பது வேதனையான சமூக தடை. ஒரு பெற்றோரும் தங்கள் வாரிசுகளை இழப்பதோடு வாரிசின்றி வாழ்நாள் முழுவதும் துயர் அடைகின்றனர். அவர்களின் வேதனை அளவிட முடியாதது.
childrens need a loving parents -biological /adopted for their mental physical development.A child brought out in a Loving atmosphere always loves his society.If betrayed he may grow to hate his society. Adoption of children is a noble virtue.It is highly promoted in India and elsewhere except Arabia.Why should we take an Arabian as our role model ?
இதெல்லாம் வளர்ப்பு மகனின் மனைவியை புணர்ந்ததை நியயப்படுத்த அல்லா வடிவில் இருந்த முஹம்மதால் அடித்து விடப்பட்டவை
Post a Comment