Friday 25 January 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-18


Pedophilia-2


ஆயிஷா அவர்கள் வயது குறைவாக இருந்தாலும், திருமண வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடல் முழுவளர்ச்சியடைந்து இருந்தது என்றும் வாதிடுகின்றனர். ஆயிஷா தான் மிகச்சிறிய பெண்ணாகவும் மிகவும் எடை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் (புகாரி 2661, 3388,4141,4750,4757)

புகாரி ஹதீஸ் -2661
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
…..என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன்.

இச்சம்பவம் நிகழும்பொழுது சுமார் 13 வயது இருக்கும். அப்படியானால் ஒன்பது வயதில் எப்படி இருந்தருப்பார் என்று கற்பனை செய்துபாருங்கள்.
திருமணத்திற்கான  வயதெல்லை? 
நய வஞ்சகர்களால் அவதூறு பேசப்படுமளவு முழுமையாக வளர்ந்துள்ளார்கள்.
இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சிறுவனை ஆயிஷா (ரலி)அவர்களுக்கு வழித் துணையாக நபி (ஸல்) அனுப்புகிறார்கள். சிறுவனுக்கும் ஆயிஷா (ரலி)அவர்களுக்குமான தெளிவான வித்தியாசத்தை இது காட்டுகிறது.
"இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், 'என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்' என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்)  அவர்கள் அனுப்பிவைத்தார்கள்." [புஹாரி :4757]
இன்னும் அதிகமாக அவர்களது அறிவுத்திறமையை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது

அவதூறு பேசப்படுவதையும், சிறுவனை வழித்துணையாக பெற்றதும்  உடல்வளர்ச்சியின்  அளவுகோலாக பார்க்கலாமா? அவதூறு செய்தியை நபி  உண்மையென நம்புவதை உணர்ந்த ஆயிஷா அவர்கள், இறைத்தூதர்  அவர்களிடம், 'என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்' என கூறுவதை அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக எவ்வாறு காணமுடியும்? இதில் என்ன அறிவுத்திமை இருக்கிறது?
திருமணத்திற்கான  வயதெல்லை? 
முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம்.
நபி (ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா (ரழி) அவர்கள் மட்டுமே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தின் பலன்களை இஸ்லாம் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது .(இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.
ஹதிஸ்கள் என அறியப்படும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை அதிகம் அறிவித்தவர்களில் இவரும் ஒருவராகும்.
பெண்ணியல் சட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார்.
ஆறு வயது  குழந்தைக்கு,  கல்வியில் என்ன புலமை இருக்க முடியும்?  ஆயிஸா  அவர்களைத் திருமணம் செய்கின்ற வேளையில் இஸ்லாம் ஓரளவு நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. பலர் முழுமையாக இஸ்லாத்தில் இருந்தனர் அவர்களில் கல்வியறிவு பெற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரும் இல்லையா? என்ற கேள்விக்கு திருமணத்திற்கான வயதெல்லை?  ஆசிரியரின் பதில்

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா (ரழி) அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம். (அதிலொன்றே)
பெண்ணியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார். (மற்றவைகளை இறைவனே அறிவான்.)
          ஒரு மனைவி தன் கணவரின் செயல்பாடுகளை தெரிவிப்பது மிகவும் சாதரணமான ஒரு நிகழ்வு. இதை உலகமகா அறிவுகூர்மை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பிறப்பால் முஸ்லீமான ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். முஹம்மது நபி  அவர்களின் காலத்தில் பிறப்பால் யாரும் முஸ்லீமாக இருக்கவில்லை(?) முஹம்மது நபி  அவர்கள் உட்பட.   எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தார் என்று வாதிடுகின்றனர்.  இவர்கள்  மார்க் அறிவு அல்லது பகுத்தறிவுடன்தான் வாதிடுகிறார்களா என தெரியவில்லை.  பிறப்பால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையால் முஸ்லீம் ஆகிறவர் சிறந்தவரா? இதைக் கூட நபி  அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
ஆயிஷா  அவர்களின் அழகையும், வல்லமைமிக்க நினைவாற்றலையும், அறிவு கூர்மையையும் கண்டுவியந்து அவர் மேல் விருப்பம் கொண்டார். மார்க்கத்தை முழுமையாக கற்பித்து முழுமையான முஸ்லீமாக, பின்வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக  உருவாக்கவே ஆறு வயது குழந்தையை திருமணம் செய்தார் என்றும் ஒரு விளக்கம். ஆனால் ஆயிஷா அவர்கள் அறிவித்த பல ஹதீஸ்களைக் காணும் பொழுது அறிவுகூர்மைக்கு பதிலாக வெகுளித்தனமே தெரிகிறது. மேலும் அவர் அறிவித்த ஹதீஸ்களில் பல "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற வகையைச் சேர்ந்தது.
அன்றாட வாழ்வில் மிக திறமையான அறிவுகூர்மையான பல சின்னஞ்சிறு சிறுமிகளைக் காண்கிறோம். ஒரு ஐம்பது வயது மனிதர் அத்தகைய சிறுமிகளைக் கண்டு வியந்து தனக்கு அந்த சிறுமியை தனக்கு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் தனக்கு இருந்த நெருக்கமான நட்பை மேலும் வலுப்படுத்த ஆயிஷா  (ரலி)  அவர்களை திருமணம் செய்ய விரும்பினார்.
நபி அவர்களும் அபூபக்கரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களைப் வாழ்ந்தவர்கள். இத் திருமண உறவு மட்டுமே அவர்களது நட்பை நீடிக்கச் செய்யும் என்று வாதிடுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது. உணர்வுகளின் அடிப்படையில்  நபி, ஆயிஷாவை தன் (சகோதரரின்) மகளென்றே கூறியிருக்க வேண்டுமே தவிர அவரது ஆறு வயது பெண் குழந்தையை மனைவியாக காண்பது அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம்.
எந்த இடத்தில் உறங்க வேண்டும் என்ற முதிர்ச்சி கூட இல்லாத ஒரு சிறுமியை வதந்திகளை உண்மையென நம்பி சந்தேகப்படுகிறார், சிறுமியான ஆயிஷா  அவர்களை விட்டு நீண்ட நாட்கள் விலகியிருக்கிறார். இறுதியில் ஆயிஷா  அவர்களை மணவிலக்கு செய்ய முடிவு செய்து தோழர்களுடன் ஆலோசிக்கிறார்.

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து பேசப்பட்ட செய்தி.... (இதைப்பற்றி விரிவாக பின்னர் காணலாம்)                                                    
(புகாரி 2661,3388,4141,4750,4757)
எனவே ஆயிஷா அவர்களை திருமணம் செய்தது அற்பமான தேவைகளுக்காக மட்டுமே!
புகாரி ஹதீஸ் -2581
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
….. அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனைதராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு)எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.
நபி  அவர்களின் இந்த வாக்குமூலம் உங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லயா? (அல்லாஹ்வின் வஹீ (வேதவாக்கு) படுக்கையறையிலும், கம்பளி போர்வைக்கு அடியில், ஆயிஷாவுடன்  “……” இருக்கும் போதும் விடாது பின்தொடர்வதன் மர்மம் என்னவோ?)
நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….
முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.
உண்மையான வரலாற்றுச் செய்திகளை அறிந்தவர்களால் மட்டுமே இதைப் போன்ற அபாண்டமான புளுகு மூட்டைகளை இனம்காண முடியும். முஹம்மது நபியின் மனைவியர்களின் அழகு, வயது மற்றும் நபி அவர்களின் பாலியல் திறமைகளைப் பற்றியும் முந்தின அத்தியாயத்தில் நான் விளக்கியிருப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களது விளக்கத்தின் அபத்தங்களை நீங்களே அறிந்து கொள்ளலாம். மேலும் நபி  அவர்கள் தனது ஆண்மையை நிரூபிக்கவே சிறுமியுடன் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். இவர்கள் இதைப்போன்ற முதிர்ச்சியற்ற விளக்கங்களை என்று நிறுத்துவார்கள்?
திருமணத்திற்கான வயதெல்லை? 

இறைவனது ஏற்பாடே ஆயிஸா (ரழி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான திருமணம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

புகாரி ஹதீஸ் -7012
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள் உன்னை நான் மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம் (அந்தத் துணியை) விலக்குங்கள் என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்துகொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் (இத்துணியை) நீக்குங்கள் என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக்கொண்டேன்
(புகாரி 5078,  5125)
(நிச்சயமாக இது கால விரயமல்ல…! வரலாற்றையும், மார்க்கச் சட்ட விளக்கங்களையும் மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பிய என்னை, ஆயிஷாவின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதீஸ்களே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. மார்க்க அறிஞர்களின் மழுப்பலான பதில்களும், அர்த்தமற்ற அச்சுருத்தல்களும் என் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியது, பல உண்மைகளை உணர வைத்தது)
ஆழ் மனதில் புதைந்துள்ள நினைவுகளும், ஆசைகளும் கனவுகளாக வெளிப்படுகின்றன என்பது நாம் நன்றாக அறிந்த செய்தி. நபி  அவர்கள்,  ஆயிஷாவை மணமுடிபதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன் என்கிறார்.  ஆயிஷாவின் திருமண வயது ஆறு என்பதை நாம் அறிவோம். அப்படியானால் ஆயிஷா சின்னஞ்சிறிய குழந்தையாக இருக்கும்பொழுதே இவரின் பார்வை வேறுவிதமாக இருந்துள்ளது என்பதையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.
இது  தெய்வீகத்திருமணம். இத்திருமணம் அல்லாஹ்வின் ஏற்பாடு. நபி  அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார். ஒருவேளை நபி  அவர்கள் ஆயிஷா  அவர்களை திருமணம் செய்வது,  Child sex -ல் ஈடுபடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால்?  அவ்வாறு இருப்பின், மருமகள் ஜைனப்பை திருமணம் செய்யவும்,  தேன் அருந்துவதற்கும்(?), சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்யவும் வஹீ இறக்கிக் கொண்டிருந்த அல்லாஹ் இதற்கு எந்த வஹியையும் அனுப்பவில்லை. அப்படி எந்த ஒரு விளக்கத்தையும் நான் காணவுமில்லை கேள்விப்படவுமில்லை. ஆயிஷா  அவர்களிடம் கொண்ட காதலையே மிகுதியாக  நபி அவர்களின் செயலில் காணமுடிகிறது.
          ஆயிஷா சிறப்பு என்னவென்றால், பெண்களில் ஆயிஷா ஸரீத் என்று தன் ஆசை மனைவி ஆயிஷா  அவர்களைப் பற்றி நபி  அவர்கள் வர்ணனை செய்கிறார் (புகாரி 3343). ஸரீத் என்பது இறைச்சி மாற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உயர்ரக அரேபிய உணவு.
புஹாரி ஹதீஸ் -2028
அபூசயீத் அல்குத்ரீ(ரலி)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியாவது :நபி (ஸல்)அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது தமது தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.
(புகாரி 2028-2031, 2046)
மேலும் தன் மனைவியரிடையே நீதம் செலுத்த தவறியுள்ளார். அவர்களிடையே தன் அன்பையும், பிரியமான ஆதரவையும் மற்ற மனைவியரிடையே சரிவர நிகழ்த்தவில்லை. நபி  அவர்களின் நேசம் ஆயிஷா அவர்கள் பக்கமாக சாய்ந்த போக்கை அனுசரித்து மற்ற மனைவியர்தான் விட்டுக் கொடுத்துள்ளனர். தன்னுடைய இறுதிகாலத்தில் ஆயிஷா அவர்களுடன் தங்கியிருப்பதையே மிகவும் விரும்பினார். அவர் மடியிலேயே  நபி  அவர்களின் உயிரும் பிரிந்தது.
புஹாரி ஹதீஸ்  : 4450  
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன். நாளை நான் எங்கே இருப்பேன் என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி) க்கும் இடையே அவர்களது தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப் படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.
 (இறந்த தங்களது உறவினர்களை அல்லது நண்பர்களைப் பற்றி நம்மில் பலர் இவ்வாறு சொல்வதுண்டு, அவர் தொழுகையில் ஸஜ்தாவில் இறந்தார், ஹஜ் செய்யும் போது இறந்தார், மதப்போரில் ஷஹீதானார் (உயிர்த்தியாகி) ஒளுவுடன் தூய்மையாக இறந்தார் என்றெல்லாம் அவர்களது மரணத்தைப் பற்றி உயர்வாக கூறுவார்கள். உண்மையில் அவை சுன்னத்தான மரணங்கள் இல்லை. ஆண்கள், விருப்பமான தங்கள் மனைவியின் மார்புக்கு நடுவே அவர் மனைவியின் எச்சிலும் கலந்த நிலையில் மரணிப்பதே நபி வழி மரணம். இதுவே நபி  அவர்களின் சிறந்த முன்மாதிரி. பெண்கள் நபிவழிப்படி  மரணிப்பது எப்படி?)  
மேலும் சில ஹதீஸ்களையும் பார்ப்போம்,
புகாரி ஹதீஸ் -5218
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது
என் அண்டைவீட்டு அன்சாரி நண்பர் நபி (ஸல்)அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று என்னருமை மகளே! தம் அழகும் தம்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர்-ஆயிஷா-(நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே! என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்...
 (புகாரி 4913,5115, 5218).
புகாரி ஹதீஸ் -2581
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
….மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.  உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில் ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.
….பிறகு அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா (ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவாகளிடம் பேசினாகள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்க அவர்கள் ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (சற்று) கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூ கஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறைகூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால் அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நான் ஸைனவுக்கு பதில் சொல்லி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்கள்.

மற்ற மனைவியரை விட நபி  அவர்களின் மீது ஆயிஷா அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ள நபி  அவர்கள் அனுமதித்தார். அவரும் ஒரே பக்கமாக சாய்ந்திருநதார் என்பதை உமர்  மற்றும்  பாத்திமா  அவர்களின் கூற்று வெளிப்படுத்துகிறது. 
ஆயிஷா அவர்களை இச்சையின் காரணமாகவே நபி  அவர்கள் திருமணம் செய்தார் என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து. ஆதாரம் த்ரீயெம் PRINTERS வெளியிட்ட குர் ஆன் மொழிபெயர்ப்பின் 265 வது Foot Note ஐ காண்க.
புகாரி ஹதீஸ் -2581
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
….அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள் ஆகவே அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால் அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால் அதை தள்ளிப் போட்டு என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்.
நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….
பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு 'அது தவறு' என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.
பால்ய விவாகம் அந்த சமுதாயத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்தாலும் இறைத்தூதரின் இறுதிக் காலத்தில் அத்தகையத் திருமணங்கள் இல்லாமலாக்கப்பட்டு விட்டன… திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பால்யவிவாகம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. எனவே இன்றைக்கு அத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை. இது குறித்து வாய்ப்பு வரும் போது விளக்குவோம்.
அல்பாக்கவி.com–ன் "அன்னை ஆயிஷா (ரலி)-1"என்ற இணையதள  கட்டுரையிலிருந்து….
சிறுமிகளை திருமணம் செய்யலாமா?
சிறுவயதில் திருமணம் செய்தததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு விட்டது.
புகாரி ஹதீஸின் விரிவுரையில் இவ்வகை திருமணம் காரணம் முஹம்மது நபி  அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என்ற விளக்கம் காணப்படுகிறது. Child sex அந்தக் கால நடைமுறை இறைவானால் அனுமதிக்கப்பட்ட வழிமுறை எனவே முஹம்மது நபி  அவர்கள் செய்தது சரிதான். இவ்வகை திருமணத்திற்கு இன்று அனுமதியில்லை என்றும் விளக்கம் தரப்படுகிறது.
 உலமாக்கள் தரும் விசித்திரமான விளக்கங்களில் ஒன்று. சிறப்பு அனுமதி என்று கூறியது யார்? நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு எந்த ஒரு செய்தியையும் கூறவில்லை. முஹம்மது நபி  அவர்கள் கூறினார் என்றால் தன்னுடய செயல் மிகப்பெரும் தவறு, இந்த செயலை மற்றவர்கள் பின்பற்றினால் உலகில் ஒரு பெண் குழந்தை கூட வாழ முடியாது. எனவே, இது தவறான முன்னுதாரணம் இது தவிர்க்கப்படவேண்டும் என முஹம்மது நபி  அவர்கள்  உணர்ந்திருந்தார்கள் என்று பொருள்படும். இதனால் அவரின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகிவிடும். (இவரின் நம்பகத்தன்மையைப்பற்றி அடுத்துவரும் அத்தியாயத்தில் பார்க்கலாம்)
 நாகரீகத்தின் வளர்ச்சியால் இன்று தவறாக தெரிகிறது என்றால், கொள்கைகள் காலத்தின் மாற்றத்திற்கு உட்பட்டது என பொருள்படும். அல்லாஹ்விற்கும்,  நபி  அவர்களுக்கும்  உலகநாகரீகத்தின் வளர்ச்சி புரியவில்லை, மேலும்  அவர்களின் பார்வையில் காலத்தை கடந்த ஞானமில்லை எனவும் பொருள்படும். காலத்தைக் கடந்த ஞானமில்லை என்றால் அவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? என்று புதிய கேள்வி பிறக்கும்.
Child sex முஹம்மது நபி அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி என அல்லாஹ்வும் குறிப்பிடவில்லை. ன்னைத்தவிர வேறுயாரும் Child sex  செய்யக்கூடாது என நபி அவர்களும் கூறவில்லை.  நபி  அவர்களின் செயலில் நிச்சயம் படிப்பினை இருக்கிறதென்றால், Child sex -ல் அப்படி என்ன படிப்பினை இருக்கிறது?. இன்று வரை யாருக்குமே தெரியாத, விளக்க முடியாத ரகசிய படிப்பினையால் யாருக்கு, என்ன உபயோகம் இருக்க முடியும்?.
மேலும், நமக்குள் இஸ்லாம் இணையதள கட்டுரையில் கூறப்பட்ட விளக்கங்கள்,  தவறென்பதை இவர்கள் அளித்துள்ள இறுதியான பதில்களும், சமீபத்திலும் சில முஸ்லீம் நாடுகளில் நிகழ்ந்துள்ள திருமணங்கள் உறுதி செய்கிறது.
இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம்
நபியின் மரணத்திற்குப் பிறகு (ஹிஜ்ரி 17ல்) நிகழ்ந்த உமர்  அவர்களின் குழந்தைத் திருமண செய்தி இது.
Umar ibn al-Khattab, the 3rd caliph of Islam, at the age of 55 married Umm Kulthum bint Ali when she was between 10 and 12 years old. Some sources even say that she was five years old when Umar married her.
"'Umar asked 'Ali for the hand of his daughter, Umm Kulthum in marriage. 'Ali replied that she has not yet attained the age (of maturity). 'Umar replied, 'By Allah, this is not true. You do not want her to marry me. If she is underage, send her to me'. Thus 'Ali gave his daughter Umm Kulthum a dress and asked her to go to 'Umar and tell him that her father wants to know what this dress is for. When she came to Umar and gave him the message, he grabbed her hand and forcibly pulled her towards him. 'Umm Kulthum asked him to leave her hand, which Umar did and said, 'You are a very mannered lady with great morals. Go and tell your father that you are very pretty and you are not what he said of you'. With that 'Ali married Umm Kulthum to 'Umar." [In Tarikh Khamees, Volume 2, p. 384 ('Dhikr Umm Kalthum') and Zakhair Al-Aqba, p. 168]
ஏமன் நாட்டு பெண்கள் நீதிமன்றம் எட்டு வயது சிறுமிக்கு இதே சாயலில் நடந்த திருமணத்தை நாகரீகமற்ற, மனிதத் தன்மையற்ற செயல் என கருதி ரத்து செய்தது. இதே போன்ற ஒரு நாகரீகமற்ற நிகழ்வு  பாகிஸ்தானிலும் நடைபெற்றது. சவுதி அரேபியாவில் எட்டு வயது வயதான சிறுமி, வயதான கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். வெளி உலகிற்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ உள்ளது.
இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைச் செய்ததற்காக, பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இஸ்லாத்தில் இத்தகைய திருமணங்களுக்கு அனுமதியில்லை என்பது உண்மையானால், குழந்தைத் திருமண வழக்கில் விவாகரத்து எப்படி வழங்க முடியும்?
திருமணத்திற்கான வயதெல்லை? 
நபி (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.
முஹம்மது நபி, உலக மக்களுக்கு முன்னுதாரணமோ இல்லையோ, நிச்சயமாக, முஸ்லீம்களுக்கு முன்னுதாரணம் அவர் மட்டுமே…!
ஆம்…! 
முஸ்லீம்கள் முஹம்மது நபியைப் போலவே எல்லா விதங்களிலும் இருக்கவே முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்கள் பலவருடங்களாக மதரஸாக்களில் கற்ற அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாவை (செயல்முறைகளை) மற்ற முஸ்லீம்களுக்கு கற்பிக்கின்றனர்.
சுன்னாவைக் கற்பதன் மூலம் முஹம்மது நபி எவ்வாறு முகம், கைகள், கால்களைக் கழுவிக் கொண்டார், எவ்வாறு தொழுகை நடத்தினார், எவ்வாறு பல் துலக்கினார், மூக்கு, காதுகளை எப்படி குடைந்து சுத்தம் செய்தார் என்றும், அவர் ஆடை அணிந்த விதம், ஆடையின் வடிவம், நிறம், தைக்க உபயேகித்த நூல் எது? என்றும், அவர் எந்தெந்த உணவுகளை சப்பிட்டார், எந்தெந்த விரல்களை சப்புகொட்டி உறிஞ்சி நக்கினார், அவருக்குப்பிடித்த உணவு எது? எவ்வாறு தூங்கினார், எந்தப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தார், அவர் தலைமுடி, தாடி மற்றும் மீசையின் அளவுகள் என்ன? அவர் தன் நகங்களை எந்தமுறையில் நறுக்கிக் கொண்டார்? எந்த விரல் நகத்தை முதலில் நறுக்கினார்? எப்படி சொறிந்து கொண்டார்? எத்தனைமுறை சொறிந்து கொண்டார்?
அவர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செய்த செயல் முறைகள் யாவை? அதை எவ்வாறு செய்தார்? கழிப்பறையில் எந்த காலை முதலில் வைத்தார்? சிறுநீர் எவ்வாறு கழித்தார்? நின்று கொண்டா அல்லது அமர்ந்து கொண்டா கழித்தார்? எந்த கையால் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்சினார்? மலம் கழிக்கையில்அவர் முகம் எந்த திசையை நோக்கியிருந்தது? அவ்வாறு மலம் கழிக்கையில் எந்த காலின் மீது தன் முழுஉடல் பாரத்தை வைத்திருந்தார்? எந்த கையால் தன் பிட்டத்தை எப்படி கழுவிக் கொண்டார்?
இவையனைத்துமே முஸ்லீம்களுக்குப் புனிதமானவைகள் மறுமையின் வெற்றிக்கும் உரியவைகள். இவைகள் தங்களின் இயல்புக்குப் பொருந்தவில்லையென்றாலும், இவைகளை உயிராக கருதி  பின்பற்றி வாழ்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். மற்ற முஸ்லீம்களையும் பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். பின்பற்றாதவர்களை, நரக தண்டனைகளைக் கூறி எச்சரிக்கின்றனர். ஆனால் மிக முக்கியமான குழந்தைத் திருமண சுன்னத்துகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.
எனவே ஏதேதோ பொருளற்ற சுன்னத்துகளை (நபிவழி செயல்முறைகளை) வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் நாமும், நம்முடைய மார்க்க அறிஞர்களும், பகுத்தறிவிற்கு மிகவும் ஏற்புடைய (?), முஹம்மது நபி அவர்களின்  Child sex சுன்னத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். புனிதமான Child sex செயல்முறைகளை எதிர்க்கும் சமுதாய திணிப்புகளை தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாமிய பிரச்சார பிரங்கிகளால் முடியுமா? அல்லது உங்களால்தான் முடியுமா?
(இது போன்ற ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு தொலைத்து விட்டால் அவ்வளவுதான் அவர்களது மத உணர்வுகள் புண்பட்டுவிடும், உங்களை அடித்து நொறுக்கி விடுவார்கள் அல்லது  ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப் போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். ஆனால் பதில் மட்டும் கிடைக்காது.)
நிச்சயமாக முடியாது. காரணம் Child sex  ன் மனிதத் தன்மையற்ற வெறியை, கொடூரத்தை, வலியை அவர்களால் நிச்சயமாக உணர முடியும். அப்படி மனிதர்களாகிய நாம் உணர்ந்ததால்தான் நாம் மேற்கண்ட மருத்துவ அறிவியல் கொள்கைகள் பிறந்தது. இல்லையெனில் முஹம்மது நபி அவர்களின் Child sex போன்ற செயல்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் நியாயப்படுத்திக்  கொண்டு இருப்பார்கள்.
இந்த குறிப்பிட்ட சுன்னத்தை ஆதரித்தால் பிற சமுதாயம் மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமுதாயத்தின் வெறுப்பிற்கு ஆளாவது உறுதி என்பதை உணர்ந்ததால் இன்றுவரை இச்செய்தி மார்க்க அறிஞர்களால் மறைக்கப்பட்டும் மழுப்பப்பட்டும் வருகிறது.  முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்களின் முடிவைப்போல இறைவன் படைத்த பெண் இனம் ஆண்களின் இச்சைக்கு மட்டுமே வயதும் மனிதத் தன்மையும் ஒரு பொருட்டல்ல என விட்டுவிடலாமா?. (இன்றும் அதே நிலைதான்)
நாகரீகம், தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டையும், உறவுமுறைகளையும் சீரழிப்பதாகக் கூறப்படும் மேலை நாட்டில் கூட Child sex is a Crime என்ற விளம்பரங்களை அனைத்து Media களிலும் காணலாம்.
நாகரீகம், மனிதத்தன்மை மிக்கவர், உலகத்திற்கே ரஹ்மத்தானவர், இந்த பிரபஞ்சத்திற்கே அழகிய முன்மாதிரி என்று இறைவனால் போற்றப்படுபவர்  செய்யும் செயலா இது?. மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  என்று ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் உங்களால் ஆதரத்துடன் மறுக்க முடியுமா?.
Child Sex செய்தி தொடர்பான அனைத்து ஹதீஸ்களும் தவறானவை பச்சை பொய், புளுகு மூட்டை, நம்பகத் தன்மையற்றவை என உறுதிபட கூறுங்கள் என் தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
என்னுடைய கேள்விகளால் "திருமணத்திற்கான வயதெல்லை ?யின்ஆசிரியர் எரிச்சலடைந்து போனார்.
இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை.
"ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக் கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது."
Islamic Q & A வின் பதில்
In summary, then, it is permitted to contract marriage with a young girl and to hand her over to her husband to stay with him before she reaches adolescence. As for consummating the marriage, this does not happen until she is physically able for it. Thus the matter becomes quite clear. Do you see anything wrong with a man living with his young wife in one house, bringing her up and teaching her, but delaying consummation until she is ready for it? We ask Allaah to show us truth and falsehood and to make each clear. And Allaah knows best.

திருமணம் என்ற பெயரில் இவ்வகையான மனிதத் தன்மையற்ற செயலை இஸ்லாம் பகிரங்கமாக அனுமதிக்கிறது!  நிச்சயமாக  Child sex முஹம்மது நபி  அவர்களின்  வழிமுறையாக இருக்கிறது.
புகாரி ஹதீஸ் -4788
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி  வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) றைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.
சிறுமியாக இருப்பினும் ஆயிஷாவின் துடுக்குத்தனமான பதிலில் பொருளில்லாமலில்லை. முஹம்மது நபியின் பலதார குடும்ப வாழ்க்கையும், அதற்கு ஆதரவாக  உடனுக்குடன் அல்லாஹ் இறக்கிக் கொண்டிருந்த குர்ஆனின் வசனங்களும், என் மனதை நெருடியது...