Thursday, 3 December 2015

பைஅத் ரிள்வானும் பைத்தியக்கார கடவுளும்!ஹிஜ்ரி  ஆறாம் ஆண்டு உம்ரா வழிபாடு செய்வதற்காக முஹம்மது தனது தோழர்களுடன் மக்காவிற்கு செல்கிறார். அல்லாஹ்விற்கு  பலியிட ஒட்டகங்களையும், அவரது தோழர்கள் 700 பேர் இருந்ததாக அஹ்மத் ஹதீஸும், 1400 பேர் இருந்ததாக புகாரி ஹதீஸூம் கூறுகிறது. நாம் இரண்டு ஹதீஸ்களுக்கும் பொதுவாக 1050 பேர்கள் இருந்ததாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்கள் மனதில் இப்படியொரு கேள்வி எழலாம், அல்லாஹ்விற்கு பலியிட 1050 மனிதர்களையா முஹம்மது அழைத்துவந்தார்? 

ஆமாம்..!  என்றுதான் சொல்லுவேன்!

அல்லாஹ்விற்காக(!) முஹம்மது நிகழ்த்திய போர்களைப்பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு மனித இரத்தவாடையின் மீதிருக்கும் மோகம் என்னவென்பது புரியும்!

ஆனால் முஹம்மது இந்தப் பயணத்தை ஒரு புனிதப் பயணமென்றே கூறிக் கொண்டார். அதாவது ஒருவர் தனது மறுமை வாழ்விற்காக நன்மைகளைச் சேர்க்க இதர வழிபாடுகள் செய்வதப் போன்று உம்ராவும் ஒரு வழிபாடு என்று கூறியதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். முஹம்மது தனது மறுமை வாழ்வு சிறக்க வழிபாடு செய்யட்டும் தவறில்லை அது அவரது நம்பிக்கை. ஆனால் அதை  1050பேர் புடைசூழ சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா?
சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கிறது!

முஹம்மது, மக்கா குறைஷிகளை ஆழம் பார்ப்பதற்காக, கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகளில் சிலர்  அறுத்து, கிராஷையும் கொலை செய்யவும் முனைந்தனர். அதற்குள் அங்கிருந்த பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய முயன்றவர்களைத் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை, முஹம்மதுவிடம் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.

உடனே முஹம்மது, ஊரறிந்த முரடரான  உமரை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மானை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று  சமர்த்தியமாகப் பேசி நழுவிவிட்டார்.

வேறுவழியில்லாமல், முஹம்மது உஸ்மானை அழைத்து, "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகிறார்.

மக்கா சென்ற உஸ்மான், அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைத் தெரிவிக்கிறார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மானிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளிக்கிறார். தொடரும் பேச்சுவார்த்தைகள் உஸ்மான் திரும்பிச் செல்வதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கால தாமதம் முஹம்மதிடம்  வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக தவறான செய்தி முஹம்மதுவின் கூட்டத்தினரைச் சென்றடைகிறது. இரத்தவாடையை நுகர  ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்தவர்களுக்கு  இந்தத் தகவல் ஆறுதலை அளித்தது. முஹம்மதுவும் அவரது, தோழர்களும் கடுமையான கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து குறைஷிகளும். இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் முஹம்மது தனது அடியாட்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்து, தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார். அதன் பின்  ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்தனர். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

புஹாரி 4169.
யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்.
நான், ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்" என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று பதிலளித்தார்கள்..

முஸ்லீம் 3793
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சலமா (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)" என்று பதிலளித்தார்கள்.

உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்று இரத்தவாடையை நுகர அல்லாஹ்வும் மூக்கைத் தீட்டிக் கொண்டு உற்சாக வசனங்களை இறக்குகிறான்.

குர்ஆன் 48:10
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

முஹம்மதுவும் அவரது அல்லாஹ்வும் இரத்தவாடைக்காக காத்திருந்த பொழுது, ஒரு திடுக்கிடும் செய்தி வந்து சேர்கிறது. அதாவது, உஸ்மான் கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் அவர்களை வந்தடைகிறது. வேறுவழியில்லாமல் விருந்தை வேறொரு நாளுக்கு வைத்துக் கொள்வோமென்று சமாதான நடவடிக்கைக்கு முஹம்மது செல்கிறார்.

உஸ்மான் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்பது முஹம்மதுவிற்குத் தெரியாது. காரணம் அவர் ஒரு சாதாரண மனிதர்; தனது மருமகன் உஸ்மான் கொலை செய்யப்பட்டுவிட்டாரே என ஆத்திரம் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?

”அட... அரை லூஸுகளே உஸ்மான் கொல்லப்படவில்லை! உயிருடன்தான் இருக்கிறார். தேவையில்லாமல் துள்ளிக் குதிக்காதீர்கள்” என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்?

எதார்த்த உண்மை புரியாமல், உளறிக் கொட்டிய அல்லாஹ்வை, பைத்தியக்காரன் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்?


தஜ்ஜால்

Saturday, 24 October 2015

குர்ஆனும் விபச்சாரமும்!


குர்ஆனும் விபச்சாரமும்!

எனது தனிப்பட்ட பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக எழுத்துப்பணிகளை நிறுத்தியிருந்தேன். மீண்டும் எழுதுவதற்கான வாய்புக்களை உருவாக்கிக் கொண்டிருந்தபொழுது எனது Data Base-ஐ விட்டு வெகு தொலைவிற்கு பயணிக்க வேண்டிய சூழல்; மேலும் சென்ற இடத்தில் எழுதுவதற்கான  கருவிகளும், தேவையான தகவல்களை திரட்டும் வாய்ப்பின்றிப் போனது. (இறை நாடவில்லையென்று நினைக்கிறேன்!)
ஒரு வழியாக கிடைத்த வாய்ப்புகளையும், என் நினைவிலிருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி எழுதுவதென்று முடிவெடித்து, குர்ஆன் வசனங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல தமிழ் மொழிபெயர்ப்புகள், அந்தந்த மொழிபெயர்ப்பாளர்களின் சொந்த சரக்குகளால் இனிப்பு முலாம் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் புரட்டிய பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சந்தேகம் தோன்றியதால் Google translator-க்குள் கொடுத்துப்பார்த்தேன். அந்த ஆங்கில வாக்கியம் இதுதான்
”…And if one force them, then (unto them), after their compulsion, lo! Allah will be Forgiving, Merciful. (Pickthall)
…But if anyone compels them, yet, after such compulsion, is Allah, Oft-Forgiving, Most Merciful (to them). (Yusuf Ali)
 إِكْرَاهِهِنَّ - ik'rāhihinna
Pickthall மொழிபெயர்ப்பிலிருந்து “after their compulsion” என்ற பகுதியை மட்டும் -ல் கொடுத்தேன். என்ன ஆச்சரியம் அவர்களது கொண்டை வெளியே தெரிந்துவிட்டது. (அல்ஹம்துலில்லாஹ்!) 
 
நீங்களும் அதைப்பாருங்கள். இவர்கள் தங்களது புத்தகத்தை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் என்பதற்கு இது ஒரு எளிய உதாரணம்.
their compulsion- பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட


Yusuf Ali யின் மொழிபெயர்ப்பிலிருந்து “after such compulsion” என்ற பகுதியைக் கொடுத்தபொழுது இப்படிக் காண்பித்தது.தலைப்பிற்கு வருகிறேன்.

இஸ்லாமிய பரப்புரைகளில் மிகப் பிரதானமாக இடம் பெறுவது அதன் குற்றவியல் தண்டனைகளைப்பற்றி இருக்கும்.

இந்திய போன்ற நாடுகளில் பணநாயகம் குற்றவாளிகளை விடுவிக்கும் பொழுது, இவர்களது பரப்புரை உச்சகட்டத்தை அடையும். குறிப்பாக பாலில்குற்றங்கள் விவாதிக்கப்படும் பொழுது குர்ஆனிய சட்டங்களை ஆதரிக்கும் மாற்று மதநம்பிக்கையாளைகளையும் காணமுடியும்.

குர்ஆன் எவற்றையெல்லாம் பாலியல் குற்றங்களாகக் கருதுகிறது?

1. பெண்கள் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவது.
2. பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது.
கற்பழிப்பு எனப்படும் வன்புணர்ச்சியைப்பற்றி குர்ஆனுக்குத் தெரியாது எனவே அதை விட்டுவிடுவோம்.

சரி... குர்ஆன்  என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
குர்ஆன் 4:15
 உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்!
அதென்ன மானக்கேடான செயல்?
அதை பெண்கள் மட்டும்தான் செய்வார்களா?
உங்களுக்கு பதில் சொல்வதற்கு முன் அடுத்த வசனத்தைக் கூறிவிடுகிறேன்.

குர்ஆன் 4:16
அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
அதே செயலா ...?  எந்த செயல்...?

தண்டனை கொடுப்பது இருக்கட்டும். செயல் என்வென்றே தெரியவில்லை. பிறகெப்படி அதைக் குற்றமாகக் கருதி நான்கு பேரை சாட்சிக்கு கொண்டுவர முடியும்? தண்டனை கொடுக்க முடியும்?

சரி.. உங்களில் இருவர் என்றால்....? எந்த இருவர்?
பெண்ணும் பெண்ணுமா...?

ஆணும் ஆணுமா..?

இல்லை ஆணும் பெண்ணுமா?

எந்த இருவர்?

மறுபடியும் முதலிலிருந்து..

மானக்கேடானது என்றால் என்ன?

மானத்தை பாதிக்கக் கூடியது எல்லாமே மானக்கேடானதுதான்

அடுத்த கேள்வி யாருடைய மானத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது?

உதாரணத்திற்கு, ஆடை விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆதிவாசிகளுக்கு ஆடை ஒரு பொருட்டல்ல. இன்றும் ஆடை அணியாத ஆதிவாசிகளை நாம் காணமுடியும்.  நாகரீக மேற்குலகில் ஆடை அவரது விருப்பம். அல்லாஹ்விற்கோ நடமாடும் கூடாரத்துடன் இருக்கவேண்டும்.  அல்லாஹ்வின் பார்வையில் ஆதிவாசியும், நாகரீக மேற்குலகமும் மானக்கேடான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் பிடித்து தண்டிக்கலாமா...?

யார் தண்டிப்பது...?

குர்ஆனை வாசித்தவரெல்லாம் தண்டனை கொடுக்கலாமா...?

தண்டிப்பதற்கான  அதிகாரம் யாரிடம் இருக்கிறது..?

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் தண்டனைகளை செயல்படுத்த வேண்டுன்று முல்லாக்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா...? குர்ஆனின்படி சரியானதா...?
ஒரு ஆட்சியாளர் அல்லது அதிகாரி அல்லது நீதிபதி எப்படி இருக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் ஏதேனும் குர்ஆனில் இருக்கிறதா என்றால் நிச்சயமாகக் கிடையாது. அப்படி ஏதேனும் இருந்திருந்தால் இத்தனை இஸ்லாமியக் குழுக்கள் எப்படி ஏற்படமுடியும்?

எந்த அளவுகோலும் கிடையாது. யார் தண்டிப்பது என்றும் கிடையாது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பார்களே  அதுதான் என்றும் இஸ்லாமில் நிகழ்ந்து கொண்டிருப்பது.

முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்காக நிகழ்ந்த வன்முறைகள் இன்னுமொரு உதாரணம். நமது தலைப்பிற்கு அது தொடர்பில்லாதால் நாம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டாம்

சரி..... நாம் மேற்கொண்டு நகருவதற்கு வசதியாக, மானக்கேடானது என்று குர்ஆன் கூறுவது விபச்சாரத்தைதான் என்றும் யாரோ ஒரு' X' தான் நீதிபதி; அவர் தண்டனை வழங்குவதாகவும்  வைத்துக் கொள்வோம்.

குர்ஆனின் வேறு பகுதிகளில், விபச்சாரம் தவறென்றும், தண்டனைக்குரிய குற்றம் என்றும், தண்டனை முறையும் காணப்படுகிறது.
குர்ஆன் 17:32
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது.
குர்ஆன் 24:2
விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும்.(IFT)
நாம் முதலில் கவனித்த குர்ஆன் (4:15&4:16) வசனங்களை  மேற்கண்ட இந்த (24:2) வசனம் இரத்து செய்துவிட்டதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். இப்படி வாலும் தலையுமில்லாமல் ஒரு விதிமுறையைக் கூறினால்  நீக்காமல் வேறு என்ன செய்வார்களாம்?

الزِّنَا (alzina) விபச்சாரம் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 
இதற்கு குர்ஆனில் பதில் இல்லை. நாம் சமுதாயத்திலிருந்துதான் தேட வேண்டும் சட்டத்திலிருந்து அல்ல!

ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து பாலியல் தொடர்பு கொள்வதை சட்டம் தவறாகப் பார்க்கவில்லை. ஆனால் சமுதாயம் தவறாகப் பார்க்கிறது. அதாவது திருமண பந்தத்திற்கு அப்பால் பொருளுக்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ நடைபெறும் பாலியல் தொடர்புகளை விபச்சாரம் என்று கூறுவதாக வைத்துக் கொள்ளலாமா?

குர்ஆனின் சட்டங்களை விவாதிப்பதென்றால் முஹம்மதின் கால நடைமுறைக்கு அதாவது குர்ஆனிய காலாச்சாரத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். குர்ஆன் அனுமதிக்கும் பாலியல் துணைகள் :

குர்ஆன் 4:24
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்
PJ மொழிபெயர்ப்பு

4:24. கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் (திருமணக் கட்டணமாகிய "மஹரைக்" கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரோடு வீடு கூடிவிட்டீர்களோ அவருக்கு குறிப்பிட்ட "மஹரை" அவரிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்து விடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதனைக் குறைக்கவோ கூட்டவோ) இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது யாதொரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்.

4:24. மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
(IFT) தமிழாக்கம்
மூன்று மொழிபெயர்ப்புகளும் ஒன்றையொன்று மிகைக்கும் விதத்தில் இனிப்புமுலாம் தடவப்பட்டிருக்கிறது. யாருக்கும் முதலிடம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

மேற்கண்ட 4:24 வசனத்தின் துவக்கத்தில் வரும் وَالْمُحْصَنَاتُ (வல்முஹ்ஸனாத்) என்ற பதம் இங்கு பிறரது மனைவியர், கணவனுள்ள பெண், திருமணம் என்றெல்லாம் படாதபாடு படுகிறது. உண்மையில் இதன் பொருள் “மேலும் கற்புள்ள பெண்- And chaste women” என்பது மட்டுமே. நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் அரபியில் இருக்கும் பதத்தை tranalator-ல் கொடுத்துப்பாருங்கள். தாங்கள் விரும்பும் பொருளில் மொழிபெயர்ப்பு அமையவேண்டுமென்பதற்காக இந்த முல்லாக்கள் இடத்திற்கேற்ப அதை மாற்றிவிடுகின்றனர். இதைப்பற்றி அண்ணன் பிஜே எழுதியிருப்பதை பாருங்கள்

wal-muḥ'ṣanātu என்பதை கற்புள்ள பெண்கள் என்று மொழிபெயர்த்தால் என்னவாகும்?

"மேலும் கற்புள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது". என்று நகைச்சுவையாக மாறிவிடும். மூளை கொண்டு சிந்திப்பவர்களுக்கு உண்மை புரிந்துவிடும் அதனால்தான் அல்லாஹ், இதயத்தைக் கொண்டு சிந்திக்குமாறு கெஞ்சுகிறான்.

இந்த மொழிபெயர்ப்பாளர்கள் வல்முஹ்ஸனாத் என்ற பதத்திற்கு எப்படி கணவனுள்ள அல்லது திருமணமான பெண்கள் என்று பொருள் கொண்டார்கள்?

திருமணமாகாத அல்லது கணவனில்லாத பெண்களுக்கு கற்பு இருக்கதென்று முடிவு செய்துவிட்டார்களா?

மேலும் குறிப்பிட்ட இந்த வசனத்தில் எங்குமே திருமணம், திருமணக்கொடை, மஹ்ர், என்ற பொருள்படும் எந்தப் பதங்களும் கிடையாது. ஆனால் ujūrahunna என்ற பதத்தைக் கொண்டுதான் நமது முல்லாக்கள் "திருமணம்”, “கணவன்” “மனைவி” மஹ்ர்." என்றெல்லாம் நீட்டி முழக்கியிருக்கிறார்கள்.

Ujūrahunna என்றால் கூலி, ஊதியம், வெகுமதி என்று பொருள் கொள்ளலாம். நாமாக வலிந்து திணித்தாலொழிய மஹ்ர் என்பதாக பொருள் கொள்ள முடியாது.மஹ்ர்’ என்றால் என்னவென்பது உங்களுக்கே தெரியும்.
“…மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது…” என்ற இந்த அனுமதியைத்தான், ஷியாக்கள் முத்ஆவிற்கான அனுமதியாக கருதுகின்றனர். அவர்கள் கூறும் பொருளில்தான் இந்த வசனம் இருக்கிறதென்பதை சற்று கவனித்தால் உங்களுக்கே புரியும்.

அடிமைபெண்களைத் தவிர மற்றவர்களுக்கு கட்டாயமாக கூலி அல்லது ஊதியத்தை ஒப்பந்தப்படி கொடுத்துவிடவேண்டும். இவர்கள் சுந்திரமான பெண்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடிமைப்பெண்களுக்கு விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் அவர்களுடன் கூடி வாழ்வதற்கு எந்த  வரைமுறையுமில்லை

திருமணபந்தமோ அல்லது எவ்வித வரைமுமுறைகளுமோ இல்லாமல் அடிமைப்பெண்களுடன் கூடுவது விபச்சாரம்தானே என்ற கேள்வி நம்மைப் போலவே அவர்களுக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் பெயரால் அதை பழிப்புக்குரியதல்ல என்று சரிகண்டுவிட்டனர்.

அதே போல முத்ஆவை விபச்சாரம் என்று சொல்வதற்கு தயக்கமாக இருந்ததினால் திருமணம் என்று சொல்லிக் கொண்டனர். அதாவது வழிப்பறிக் கொள்ளைப் பொருட்களை கனீமத் என்று சொல்லிக் கொண்டதைப் போல!

ஆக குர்ஆன் அனுமதிக்கும் பாலியல் துணைகள்,
1. மனைவி
2. அடிமைப் பெண்கள்
3. முத்ஆ மூலம் அடைந்த பெண்கள்

நான் முன்பே சொன்னதுபோல பெரும்பாலான விபச்சாரம் மற்றும் கள்ளத்தொடர்பு பற்றிய குர்ஆன் வசனங்கள் பெண்களை மையப்படுத்தி மட்டுமே பேசுகிறது. இது அல்லாஹ் அல்லது முஹம்மதின் கோணல் புத்தியின் வெளிப்பாடு அல்லது அன்றைய முஹம்மதின் காலப்பெண்கள் விபச்சாரத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சில வசனங்களைப் பார்க்கலாம்
குர்ஆன் 4:15
உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள்.
குர்ஆன் 4:25
….அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்…
குர்ஆன் 60:12
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ,……

விபச்சாரம் பற்றி குர்ஆன் மேலும் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்
17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது.

முத்ஆ, அடிமைப்பெண்கள் என்றெல்லாம் என்று கடையத் திறந்துவிட்டு விபச்சாரத்தைப்பற்றி அல்லாஹ் எதற்காக வருத்தப்படுகிறான் என்பது தெரியவில்லை. பின்வரும் குர்ஆன் வசனத்தை சற்று கவனியுங்கள்.

குர்ஆன் 24:33
…மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருப்பது இந்தக் குர்ஆன் வசனத்தைதான். இவ் வசனத்தின்(24:33) குறிப்பிட்ட இந்தப் பகுதி பொருள் பேதம் தரக் கூடியது. காரணம் அல்லாஹ்வின் தரமற்ற மொழிநடைதான்.

இந்த வசனம் அடிமைப்பெண்களை பலவந்தப்படுத்தி பாலியல்தொழில் செய்யவேண்டம் என்றுதான் சொல்கிறது. இதன் மறுபுறம் எவ்விதமான பலவந்தமுமில்லை எனில் அடிமைப்பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் செய்யலாம் என்றாகிறது. ஆனால் எவ்விதத்திலும் அடிமைப்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யக்கூடாது என்று தடுக்கவில்லை. இந்த வசனத்தைக் கொண்டு அப்படியொரு தடையைக் கூறமுடியாது. குர் ஆனின் தவறான மொழிநடைக்கு இது ஒரு உதாரணம்.

மேலும் அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால்..?
…min(after) ba’di (after)ik'rāhihinna(their compulsion) ghafūrun(Oft-Forgiving,) raḥīmun(Merciful)
பின்பும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
”…And if one force them, then (unto them), after their compulsion, lo! Allah will be Forgiving, Merciful. (Pickthall)
…But if anyone compels them, yet, after such compulsion, is Allah, Oft-Forgiving, Most Merciful (to them). (Yusuf Ali)

அவர்களை வற்புறுத்தினால் மன்னிப்பான், கருணை செய்வான் எனில், விபச்சாரத்திற்காக வற்புத்தலாமா?

இங்கு அல்லாஹ் என்ன சொல்ல வருகிறான்?

ஒரு விதிமுறையைச் சொல்லும் பொழுது அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான் சொல்ல முடியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொன்னால் முஹம்மதின் 'கைலி' கழன்றுவிடும். இதை அறியாதவரா முஹம்மது?

தன்னிடமும் அடிமைகள் இருக்கிறார்கள், புனிதப் போர்கள் வேறு அடிமைகளை வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது. அடிமைவியாபாரம் சொல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கும் பொழுது அதையெல்லாம் எவனாவது விதிமுறைகள் என்றபெயரில் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்வானா?

இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்!

அப்படியானால்...?

அது அப்படித்தான்!


தஜ்ஜால்


Wednesday, 10 June 2015

ஏமாற்றுவாதங்கள்!

விடாமுயற்சியைப்பற்றிச்  சொல்லும் பொழுது வழக்கில்,

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

அம்மியை எதற்கு அடிக்க வேண்டும்?

பழமொழி சொன்னால் கேட்க வேண்டும் ஆராயக் கூடாது!

சரி.. சரி... நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்!

இணையத்தில் நாம் என்னதான் விளக்கினாலும், உணர்ச்சி வசப்பட்ட ஒரு சில இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் கண்டும் காணாதவர்களைப் போல இருக்கின்றனர்.

அந்த சிலரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமைப்பற்றித் தெரியாதவர்கள்.  தங்களது சொந்தக் கருத்துக்களையெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் முன்வைத்து நமது ஆவியை(!) எடுப்பவர்கள்.

புத்திசாலித்தனமாக சிந்த்திப்பவர்களோ, தாங்கள் சொல்லும் மூத்திரச் சந்திற்கு வந்தால் மட்டுமே பதில் சொல்வோமென்று அடம்பிடித்து அறைக்கூவல் விடுபவர்கள்.

என்ன நடந்தாலும் சரி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் மட்டும் வாயைத் திறக்கவே மாட்டார்கள்!

இவர்களின் அமைதி(!) நம்மைப் போன்றவர்கள் இணையத்தில் முன்வைக்கும் விமர்சனங்கள், உண்மையிலேயே இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைச் சென்றடைகிறதா? என்று நாமே சற்று குழம்பிப் போகுமளவிற்கு இருக்கிறது.

இவர்களின் அமைதிக்கு  சில காரணங்கள் இருக்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு ஆலிம்கள் பதில் கூறத் துவங்கினால் நாம் பெரிய ஆளாக ஆகிவிடுவோமாம்!

இவைகளுக்கு பொதுவெளியில் பதிலளிக்கத் துவங்கினால் எதிர்க் கருத்துக்கள் மிக எளிதாக கடைநிலை முஸ்லீம்களையும் சென்றடைந்து விடும் என்ற அச்ச உணர்வு அவர்களைத் தடுக்கிறதாம். இது ஒரு முல்லா என்னிடம் கூறிய பதில்.

ஆனால் கேள்விக்கணைகள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.

விளைவு!

அம்மி நகரத் துவங்கியிருக்கிறது.

மாஷா அல்லாஹ்!

பீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிதுபுதிதாக விளங்கங்கள் இணைந்து கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளை தனித் தொகுதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்ஷா அல்லா!


பாவம் அல்லாஹ்!

குர்ஆன் விளக்கமானது(3:128), தெளிவானது(5:15), தெளிவுபடுத்தப்பட்டது(18:54) விவரித்துத் தெளிவாக்கப்பட்டது என்றெல்லாம் அல்லாஹ்(!), தனக்குத்தானே சான்றிதழ்களை வழங்கி கரடியாக கத்துவது எந்த முல்லாக்களின் காதுகளிலும் விழவில்லை! மூடர்கள், குருடர்கள், செவிடர்கள் என்று குர்ஆனில் அல்லாஹ்(!), அழகிய முறையில் வர்ணனை செய்வது இவர்களைத்தான் என்று நினைக்கிறேன்.

நகர்ந்திருக்கும் அம்மியைப்பற்றி சிறிது கவனிக்கலாம்.

குர்ஆன் அறிவியலுடன், வரலாற்றுடன், சமகால நாகரீகத்துடன், மனிதநேயத்துடன் முரண்படுவதுடன் தனக்குத்தானே முரண்படுவதை நாம் அறிவோம். மனிதன் படைக்கப்பட்ட விதத்தை குர்ஆன் கூறும் விதங்கள் அதன் உள்முரண்பாடுகளுக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்று. அதை விதவிதமாக நமது ஆலிம்கள் விளக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களது அறியாமையை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவார்கள். அறியாமை என்று கூறுவதைவிட ஏமாற்றுவாதம் என்று கூறுவது சரி!

பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளில் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக கூறும் TNTJ வின் அதிகாரபூர்வ இணையதளத்திலிலிருந்து...
இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.
இவ்வசனங்களில் (19:67, 76:1) முன்னர் எந்தப் பொருளாகவும் மனிதன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (21:30, 25:54, 32:8, 76:2, 86:6) தண்ணீரால் மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) கருவுற்ற சினைமுட்டையில் இருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (3:59, 18:37, 22:5, 30:20, 35:11) மண்ணால் உங்களைப் படைத்தோம் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (16:4, 18:37, 22:5, 23:13, 23:14, 35:11, 36:77, 40:67, 53:45, 75:37, 76:2, 80:19) மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்படி குர்ஆன் முரண்பட்டுp பேசுவது ஏன் என்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

”கருவுற்ற சினைமுட்டையிலிருந்து” என்ற பீஜேவின் கற்பனையை பலமுறை நாம் விவாதித்திருக்கிறோம் எனவே அதைபற்றி நான் இங்கு விவாதிக்கப் போவதில்லை.  பீஜே என்ன சொல்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.

ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை. எல்லாமே சரியான கருத்து தான் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இடியாப்பம் எனும் உணவைப் பற்றி பேசும்போது
நெல்லில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசியில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
மாவில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசிமாவில் இருந்து தயாரிக்கப்பபட்டது எனவும் கூறலாம்.
தண்ணீர் மற்றும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்.
இதை முரண்பாடு என்று யாரும் கூற மாட்டார்கள். இதில் எந்த ஒன்றையும் பொய் என்று சொல்ல முடியாது.
பீஜேவின் விளக்கத்தை ஆன்லைன் பீஜேவில்தான் படிப்போம் என்பவர்கள் இணைப்பை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.

குர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான் என்பதை அறிந்துதான் இதற்கு இடியாப்பத்தை உதாரணமாக கொடுத்திருக்கிறாரோ என்னவோ?
அல்லாஹ்வே அறிவான்!

ஒரு சமையல்காரரிடம் இடியாப்பத்தை எவ்வாறு செய்கிதீர்கள்? என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாரா?

அதிலும் மிகத்தெளிவாக எல்லோருக்கும் விளங்கும்வகையில் விவரித்திருப்பதாக கூறிக் கொள்ளும் சமையல்காரர் இப்படித்தான் பதிலளிப்பாரா?

பீஜேவின் இடியாப்பத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பீஜே மிகபுத்திசாலித்தனமாக தனது விளக்கத்தில் இடியாப்பத்தின் மிக முக்கிய மூலப்பொருளை தவறாது குறிப்பிட்டு குர்ஆனை முட்டுக் கொடுத்து நிறுத்தப்பார்க்கிறார்.

தேறியதா என்பதுதான் இங்கு கேள்வி!

மனிதனின் படைப்பிற்காக குர் ஆன் பட்டியலிடும் மூலப்பொருட்கள்,

மண்

களிமண்

பிசுபிசுப்பான களிமண்

களிமண்ணின் மூலத்திலிருந்து

தட்டினால் ஓசைதரக்கூடிய களிமண்

நீர்

குதித்துக்குதித்து வெளியாகும் நீர்

விந்து

சொட்டுசொட்டாக ஊற்றப்பட்ட நீரிலிருந்து

எந்தப் பொருளாகவும் இருக்காத நிலையிலிருந்து

ஆகுக

ஓர் ஆத்மாவிலிருந்து..

பீஜேவின் ’இடியாப்ப’ உதாரணத்தை குர்ஆனுடன் பொருத்திப்பாருங்கள் பீஜே, இடியப்பத்தின் மூலம் அல்லாஹ்விற்கு முட்டுக் கொடுத்து நிற்க வைக்க எடுத்திருக்கும் பெருமுயற்சிகள் உங்களுக்கே புரியும்.

நெருப்பு அல்லது அதிக வெப்பத்தில் சுடப்படும்பொழுதுதான் களிமண் ஓசை தரக்கூடையதாக மாற்றமடையும்; எனவே மனிதன் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என்று கூறலாமா?

இடியாப்பம் தண்ணீரால் செய்யப்பட்டது.

குதித்து குதித்து வெளியாகும் நீரிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது

எதுவுமில்லாததிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது.

’குன்’ என்றவுடன் இடியாப்பம் உருவாகிவிட்டது. என்று குர்ஆனுக்கு பீஜே விளக்கம் கொடுக்க வேண்டும்.

இறுதியாக அவர் குறிப்பிட்டிருக்கும் ”என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்” என்ற பதில் இடியாப்பத்தை உருவாக்கியவர் யார் என்ற கேள்விக்கான பதில்!
எனவே பீஜே இங்கும் சறுக்கி விழுகிறார்.

வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.
வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வானம் என்ற சொல் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் பீஜே, மெல்ல நழுவி, இருவகையான வானங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

...இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.
...இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை.எனவே வானம் என்பது,

வெட்டவெளியாகவும்,

ஏழு அடுக்குகள் கொண்ட வேறொரு அமைப்பாக,

இருவகைப்படும் என்ற அறிய கண்டுபிடிப்பை மனிதகுலத்திற்கு அறிவிக்கிறார். அவர் கூறுவதற்கு தயங்கினாலும், குர்ஆனைப் பொருத்தவரையில் வானம் என்பது திடப்பொருளாலான ஏழு அடுக்குகளைக் கொண்டது.

வானம் என்றால் என்ன?
நீலநிறத்தில் நாம் காண்கிற வானம் என்பது காட்சிப் பிழை என்கிறது அறிவியல். பூமியைச் சூழ்ந்துள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வெளியேரும் அலை நீளம் குறைவான நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நமக்கு பகலில் நீல நிறமாகத் தெரிகிறது. இதில் ஒளிஅலைநீளமும், பார்வைக் கோணமும், நமது விழியின் கிரகிக்கும் தன்மையும் கூடுதல் காரணிகளாக அமைகிறது. இதை நாம் துவக்கப்பள்ளி அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம்.
வானம் நமக்கு நீல நிறமாகத் தெரியும் அதேவேளையில் புவியின் வேறுபகுதிகளில் செந்நிறமாக உதயத்திலும், அந்திவேளையிலும், இரவாக இருளுளிலும் இருக்கிறது.

வானத்தைப்பற்றிய குர்ஆன் மற்றும் முல்லாக்களின் உளறல்களை நாம் முன்பே மிக விரிவாக விவாதித்திருக்கிறோம். குர்ஆன் மட்டுமல்ல பீஜேவும் தனக்குத்தானே எவ்வாறெல்லாம் முரண்படுகிறார் என்பதை இந்த இணைப்பை  சொடுக்கினால் உங்களுக்கே புரியும்.

அறிவுள்ள மனிதர்கள், மூடத்தனமான கருத்துக்களின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பற்று அவர்களை எவ்வாறெல்லாம் சிந்திக்க வைக்கிறதென்பதற்கு பீஜேவின் விளக்கங்கள் சிறந்த உதாரணம்!


தஜ்ஜால்Thursday, 30 April 2015

ஒரு மரணம் சில கேள்விகள் – 11

உமரிடம் ஒரு ஒற்றைப் பெருமூச்சு வெளிப்பட்டது. அழுது கொண்டிருந்த ஆயிஷாவை நோக்கினார், அந்தப் பார்வை ‘இறுதிநேரத்தில், இறைத்தூதர் எதையோ சொல்ல முயன்று கொண்டிருந்த பொழுது, மிகச் சாதுர்யமாக மிஸ்வாக் குச்சியை வாய்க்குள் திணித்ததுச் இறைத்தூதரை பேசவிடாமல் செய்து நாம் நினைத்ததை சாதித்து விட்டாய்!’ என்பதைப் போன்றிருந்தது.

முஹம்மதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர்களிடையே கிளம்பிய கண்ணீரும், சலசலப்பும் மெல்ல பரவி கூட்டத்தின் இறுதி வரை சென்றது.  இறுதியில் இப்ன் சுன்னா, இப்ன் ஷியா மற்றும் முனாஃபிக் நின்று கொண்டிருந்தனர்.

உமர், தலையை அசைத்து சுற்றிலும் நோட்டமிட்டார் எல்லோருமே முண்டியடித்துக் கொண்டு முஹம்மதின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

உமர் தனது உதவியாரை அழைத்து மெல்லிய குரலில்,

” அபூபக்கருக்கு தகவல் சொல்லிவிடு” என்றார்

அந்த உதவியாளர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியேற, அவரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த உமர், அடுத்த காட்சியை அரங்கேற்ற தயாரானார்.முஹம்மதின் உடல் அப்படியே இருந்தது. அங்கிருந்த சிலரால் முஹம்மது இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. ஒருவேளை திடீரென எழுந்து விடுவார் என நம்பி, உடலையே கவனித்துக் கொண்டிருந்தனர். முஹம்மதின் முகத்தை துணியால் மூடுவதற்கு எவருக்கும் துணிவில்லை. (தபரி-9, பக் 185)

வெளியில் உமர்,

“சில நயவஞ்சகர்கள் இறைத்தூதர் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். அவர் இறக்கவில்லை. மூஸா இப்ன் இம்ரான், அல்லாஹ்வைச் சந்திக்க சென்று நாற்பது நாட்கள் தனது சமுதாயத்தினரை விட்டு மறைந்திருந்தார். மூஸா இறந்துவிட்டதாக அவர்கள் கூறிக் கொண்டிருந்த திரும்பிவந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக இறைத்தூதர் திரும்ப வருவார்கள் தான் இறைந்துவிட்டதாகக் கூறியவர்களின் கையையும் காலையும் வெட்டுவார்கள்!” என்று கோபமாக உறுமினார். (தபரி-9, பக் 184).

சுற்றியிருந்தவர்கள், உமரை வினோதமாகப் பார்த்தனர்.  ஆனால், அங்கு ஒரு கூட்டம் ஒருவருக்கொருவர் கண்களால் சமிக்கை செய்தவாறு  மெல்ல விலகி வெளியேறிக் கொண்டிருந்ததை உமர் உட்பட எவருமே  கவனிக்கவில்லை.

“ரஸூலுல்லாஹ் தனக்கு மரணமில்லையென்று ஒருபொழுதும் சொன்னதில்லையே? உமருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று  கிசுகிசுத்துக் கொண்டனர் எவருக்கும் வெளியில் சொல்லும் துணிச்சல் இல்லை!

உள்ளே ஒரு கூட்டம் முஹம்மதின் உடலையே பார்த்துக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல வெண்மையான முஹம்மதின் முகம் சாம்பல் நிறத்திற்கு மாறத் துவங்கியது. (தபரி-9, பக்-185) இனி முஹம்மது திரும்பி வரமாட்டார் என்று முடிவு செய்து அவரது முகத்தை மூடியது!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முனாஃபிக் அந்தச் சூழ்நிலையிலும் அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்.

 இப்ன் சுன்னாவும், இப்ன் ஷியாவும் அவனது தலையைப் பிடித்து கீழே அழுத்தியவாறு சற்று தொலைவிற்கு அழைத்துச் சென்றனர்.

“அறிவுகெட்டவனே இந்த இடத்தில் எதற்காக சிரித்துக் கொண்டிருக்கிறாய்..?” என்று எரிந்து விழுந்தான்.

“உமர் பேசுவதையும், இவர்கள் செய்து கொண்டிருப்பதையும் கவனிக்கும்பொழுது சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்? உண்மையிலேயே இவர்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா?”

“இறைத்தூதர் இறந்த அதிர்ச்சியில் இப்படி பேசுகிறார்!” என்றான் இப்ன் ஷியா.

“ஒருவேளை உமர் சொல்லுவதைப் போல அல்லாஹ்வின் தூதர் திரும்பிவந்து கையையும் காலையும் வெட்டுவதாக இருந்தால் அல்லாஹ்வின் தூதர் இறந்துவிட்டதாக முதலில் அறிவித்த ஆயிஷாவின் கையையும் காலையும்தான் வெட்டவேண்டும்!”

”இறைத்தூதரின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக அவரால் இந்த மரணச் செய்தியை உடனடியாக ஏற்கமுடியவில்லை!”

“அன்பா...? இதை வேறு எவரிடமாவது போய்ச் சொல்! என்னிடம் வேண்டாம்!” என்றான் முனாஃபிக்.

”... ...!?”

“இறைத்தூதர் மரணத்தருவாயில் இருப்பதும் எந்த நேரத்திலும் அவரது மரணம் நிகழக்கூடுமென்பது இந்நகரத்திலிருக்கும் குழந்தைக்குகூடத் தெரியும்! இவரென்னவென்றால் மூஸா திரும்பிவந்ததைப் போல நமது இறைத்தூதரும் திரும்பி வருவாரென்று இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார். மூஸா, சினாய் மலைக்கு சென்றதாகக் கூறுவதும் இதுவும் ஒன்றா?”

“... ...!?”

முனாஃபிக் தொடர்ந்து கொண்டிருந்தான்,

“அல்லாஹ்வைச் சந்திக்கச் செல்கிறேன், திரும்பிவந்துவிடுவேன் என்று எப்பொழுது அல்லாஹ்வின் தூதுர் கூறினார்?”

“இறைத்தூதரின் இறப்பை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியால் துக்கத்தில் புலம்புகிறார்!” என்றான் இப்ன் ஷியா மறுபடியும்.

“துக்கமா... இவர்களுக்கா... அதை நீ பார்க்கத்தான் போகிறாய்!”

“உமரின் துக்கம் பொய்யானது என்கிறாயா?”

“ஆமாம்!” என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுது சற்று தொலைவில் குதிரையில் யாரோ வருவது போன்று தோன்றியது. மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு அதை கவனிக்கத் துவங்கினர். இன்னும் நெருக்கமாக வர,

“அபூபக்ர் போன்று தெரிகிறது!” என்றான் இப்ன் ஷியா

”இத்தனை அருகில் இருந்தும் அபூபக்ர் இங்கு ஏன் வரவில்லை? மரண நேரத்தின் பொழுது  அருகில் இருந்து இறைத்தூதரை கவனித்திருக்கலாம்! அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் இருப்பதைவிட அபூபக்ருக்கு வேறு ஏதாவது ’முக்கிய’ அலுவல் ஏதாவது இருந்திருக்குமோ?” என்றான் இப்ன் சுன்னா.

”அல்லாஹ்வின் தூதர் இறந்து மூன்று மணி நேரமாகி, அவரது உடல் கூட  சாம்பல் பூத்துவிட்டது. அருகிலிருந்தும் அபூபக்கரால் மட்டும் வரமுடியவில்லை. அப்படியென்ன   ‘முக்கிய’ அலுவலோ? என்றான் முனாஃபிக்.

“அல்லாஹ் நாடவில்லை என்று நினைக்கிறேன்!” என்றான் இப்ன் ஷியா.

“முக்கு’வதற்கா...?” என்றான் இப்ன் சுன்னா

”பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லையோ?” என்றான் முனாஃபிக்.

“இருக்கலாம்...!” என்றான் இப்ன் சுன்னா

”அல்லாஹ்வின் தூதரையே வாயடைக்கச் செய்யும் ஊரறிந்த முரடர் உமர் இங்கு பொறுப்பில் இருக்கும் பொழுது அபூபக்ர் கவலைப்பட வேண்டியதில்லை.” என்றான் முனாஃபிக்.

”வா... அபூபக்ர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்கலாம்! ” என்றான் இப்ன் சுன்னா.

“சரி.. வா போகலாம்!” என்று முனாஃபிக்கின் கையை இழுத்தான் இப்ன் ஷியா

”நான் வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை ஏற்படும்!”

“பரவாயில்லை வா போகலாம்! உனக்குப் பிடிக்கவில்லையெனில் வெளிப்படையாகக் காண்பிக்காதே மனதிற்குள் வைத்துக்கொள்!” என்று முனாஃபிக்கை இருவரும் கையைப் பிடித்து இழுத்தனர்.

மூவரும் கூட்டத்தை நோக்கித் திரும்பிவந்தனர். இவர்கள் திரும்பி வருவதற்கும் அபூபக்ர் அங்கு வந்து சேருவதற்கும்  சரியாக இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் முஹம்மதின் உடல் வைக்கப்பட்ட இடத்தை நோக்கிச் சென்றார். அருகில் சென்று முகத்தை மூடியிருந்த துணியை விலக்கி நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் முஹம்மதின் முகத்தை மூடினார். வெளியில் வந்து  உறுமிக் கொண்டிருக்கும்  உமரிடம் சென்றார்.

“உமரே! அமருங்கள்" என்றார்.

உமர் உட்கார மறுத்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் உமரை விட்டுவிட்டு அபூபக்ரை நோக்கி வந்தனர்.

"நிற்க, உங்களில் யார் முஹம்மத் அவர்களை இறைவன் என நம்பி வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மத் நிச்சயம் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும் உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் 'அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவேமாட்டான்' என்பதை அறிந்துகொள்ளட்டும்.

"அல்லாஹ் கூறினான்; முஹம்மது ஒரு  தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழை மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்”  என்றார்.

உமர் உட்பட அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போன்றும், அபூபக்ர் மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.

அப்பொழுதுதான் சுயநினைவிற்கு வந்ததைப் போன்று திடீரென உமர் தரையில் வீழ்ந்து, கண்ணீர்விட ஆரம்பித்தார்.

அபூபக்ர் உமரின் அருகில் வந்து,

“ம்ம்... போதும்.. எழுந்திருங்கள்! அடுத்த பணியை கவனிப்போம்!” என்று கிசுகிசுத்தார்.

உமர் அழுதுகொண்டே எழுந்தார்.

“அழுதது போதும்! போய் கண்காணிப்பை அதிகப்படுத்துங்கள்” என்றார் அபூபக்ர். அதைக் கேட்டவுடன்,

“சரி...!” என்று கண்களைத் துடைத்து, சட்டென இயல்பு நிலைக்கு வந்தார் உமர்.

உமர் அங்கிருந்து வெளியேறினார்.

அலீ உட்பட இன்னும் சில ஸஹாபாக்கள், முஹம்மதின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அபூபக்கர் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
+++++

சிறிது நேரத்தில், முஹம்மதின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குத் திரும்பிவந்தார் உமர். அவரது முகத்தில் பரபரப்பும் கோபமும் குத்தகைக்கு எடுத்து குமுறிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் நோட்டமிட்டபடி குதிரையிலிருந்து இறங்கினார். என்ன செய்வதென்பது புரியாமல் அவரது கைகள் வாளை இறுகப்பற்றிக் கொள்வதும் விடுவிப்பதுமாக இருந்தது.

அபூபக்ர் எங்கே இருப்பார்?’ என்று கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அருகிலிருந்த நபரை அழைத்து,

“நான் வெளியில் காத்திருப்பதாக அபூபக்கரிடம் போய்ச் சொல்!” என்றார்.

அந்த நபர் மெல்ல அன்னநடை பயின்றவராக வீட்டினுள் சென்றார். சிறிது நேரத்தில் அவர்மட்டும் திரும்பிவந்தார்.

“அபூபக்கரிடம் நான் வந்திருப்பதாகச் சொன்னாயா?”

“சொன்னேன்! அவர் இறைத்தூதரின் உடலை தூய்மைப்படுத்தும் பணியை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறாராம் அதனால் வரமுடியாது என்று சொன்னார்!”

“மீண்டும் அவரிடம் போய், அதைவிட முக்கியமான பணியிருக்கிறது உடனே வெளியில்வந்து என்னை சந்திக்கச் சொல்!”

அந்த நபர் மீண்டும் ஆட்டிக் கொண்டு, மெல்ல நடைபயின்று செல்வதைப் பார்க்கையில்  பொறுமையிழந்த உமரின் கைகள் வாளை இறுகப்பற்றி, அப்படியே இவனது காலை வெட்டியெறிந்தால் என்னவென்று தோன்றியது.

அந்த நபர் உள்ளே சென்று அபூபக்கரிடம்,

”மிக அவசரமான பணியாம், உமர் உங்களை நேரடியாக வரச்சொன்னார்!”

“உள்ளே வந்து சொல்லமுடியாத அளவிற்கு அப்படியென்ன அவசரம்?”

“அதை நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்!”

“ம்ம்... சரி... வருகிறேன் என்று போய்ச் சொல்!” என்றார் சிடுசிடுப்பாக

நான் என்ன செய்தேன், இவர்கள் எதற்கு என்மீது எறிந்து விழுகின்றனர் என்று நினைத்தவாறு அந்த நபர் அங்கிருந்து விலகினார்,

அபூபக்ர் மனதிற்குள்,  

’வரவர இந்த உமரின் தொல்லை தாங்க முடியவில்லை, இறைத்தூதரின் உடலை அடக்கம் செய்வதைவிட அப்படியென்ன முக்கியவிஷயம் இருக்கப்போகிறது?’ என்று எண்ணியவாறு வீட்டிலிருந்து வெளியில் வந்து, பொறுமையிழந்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் உமரிடம் சென்றார்.

”என்ன விஷயம் சொல்லுங்கள்! இறைத்தூதரின் உடலைத் இறுதிப்பயணத்திற்கு தயார் செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது!” என்றார் விரைப்பாக,

அவரது கையைப் பிடித்து தரதரவென்று ஓரமாக இழுத்துச் சென்று,

“அன்சாரிகள் தங்களது தலைவரை தேர்ந்தெடுத்துவிட்டனராம்!” என்றார் பரபரப்பாக.

அபூபக்கருக்கு ஒரு நிமிடம் நினைவு தவறி உலகமே தலைகீழானது போலிருந்தது. எதுவும் பேசத் தோன்றமல் சிலைபோல நின்று கொண்டிருந்தார்.

“நீங்கள் போய் இறைத்தூதரின் இறுதிப் பயண பணிகளை கவனித்துக் கொள்ளுங்கள்” என்றார் கிண்டலாக

“என்ன சொல்கிறீர்கள்?”

“ஆமாம் அன்சாரிகள் அடுத்த ஆட்சியாளரை தேர்தெடுத்து பை’த் வழங்க 'பனூசாஇதா' சமுதாயக்கூடத்தில் ஒன்றுகூடியிருக்கின்றனராம்!”

“இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை? நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா?”

“எனக்கே இப்பொழுதுதான் தெரியும். தகவல் வந்தவுடன் உங்களிடம் வந்து விட்டேன். “முதலிலேயே என்றால்...? அன்சாரிகள் ஒன்றுகூடுவதற்கு முன்பாகவா? அல்லாஹ்வின் தூதர் இறப்பதற்கு முன்பாகவா?”

“சரி...! விடுங்கள். பதட்டத்தில் ஏதோ உளறிவிடேன். நாம் இப்பொழுது என்ன செய்வது?”

”அவர்களை எப்படியாவது தடுத்தாக வேண்டும்! இல்லையெனில் நாம் இத்தனை நாட்களாக போட்ட திட்டங்கள் அனைத்தும் வீண்!”

“வாருங்கள் நாம் நேரடியாகச் சென்று அன்சாரிகளைச் சந்திப்போம்!”

“இறைத்தூதரின் இறுதிச்சடங்கு...? என்று இழுத்தார் உமர்.

“அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் இறைத்தூதர் எங்கும் போய்விடமாட்டார். நாம் வரும்வரை அவர் காத்திருக்கட்டும்!” என்றார்.தபரி V -10, Page 3, 4

இருவரும் 'பனூசாஇதா' சமுதாயக்கூடம் இருக்கும் திசையை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.

இருவரும் ஓட்டமும் நடையுமாக 'பனூசாஇதா' நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது  அங்கு நின்று கொண்டிருந்த கொண்டிருந்த அபூஉபைதா இப்னு ஜர்ராஹ்-வையும் அழைத்துக்  மூவரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிரில் வந்து கொண்டிருந்த ஆஸிம் பின் அதியும் உவைம் பின் சஇஅதாவும்,

“திரும்பிப் போய்விடுங்கள் நீங்கள் விரும்புவதைப் போல எதுவும் நடைபெறாது“ என்றனர்.

”அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொள்கிறோம்!” என்றவாறு மூவரும் பனூசாஇதா நோக்கி முன்னேறினர்.

+++++++++++

தபரி V -10, Page 1, 2, 3

சிறிது நேரத்திற்கு முன்பு 'பனூசாஇதா' சமுதாயக்கூடத்தில்.
ஏறக்குறைய முன்னூறு பேர் அங்கு கூடியிருந்தனர். அனைவருமே அன்சாரிகள் அதாவது மதீனாவாசிகள். கூட்டத்திலிருந்த ஒருவர்,

“நம்முடைய தரப்பிலிருந்து சஅத்பின் உபாதா அல் அன்சாரீ அவர்கள் பொறுப்பாளியாக இருக்கட்டும்” என்றார்

சஅத்பின் உபாதா அல் அன்சாரீக்கு உடல் நலம் குன்றியிருந்ததால் அவரால் எழுந்து நிற்கவே உரக்க பேசவோ முடியவில்லை. படுக்கையில் இருந்தவாறு, தனக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் அவரது உறவினர் வாயிலாக அந்தக் கூட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பினார்.

“என்னுடைய உடல்ந்லம் சரியில்லாததால், எல்லோருக்கும் கேட்கும்படி என்னால் உரக்க பேசமுடியாது. எனவே நான் சொல்வதை எல்லோரும் கேட்குமாறு செய்யுங்கள்” என்றார் சஅத்பின் உபாதா.

அவரது உதவியாளர்,

”நீங்கள் சொல்வதை அப்படியே மனனம் செய்து உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்குபடி நான் சொல்கிறேன்” என்றார்.

சஅத்பின் உபாதா தனது உரையை ஆரம்பித்தார்.

“அன்சாரிகளே! இஸ்லாமில் மற்ற அரபு இனங்களுக்கில்லாத முன்னுரிமையும் பலன்களும் உங்களுக்கு இருக்கிறது. முஹம்மது தனது இனத்தினருடன் பத்து வருடங்கள் இருந்து, அவர்களை உருவ வழிபாடுகளிலிருந்து விலகி, கருணையாளனை வழிபட அழைத்தார்தார். அவரை ஒரு சிலரே நம்பினர். அவர் சிறந்ததை உங்களுக்கு வழங்கும் வரை
அவர்களால்  அல்லாஹ்வின் தூதரை பாதுகாக்கவோ, தங்களது மார்க்கத்தை பாதுகாக்கவோ அல்லது அவரது மதத்தை மற்றவர்களின்  எதிர்ப்பிலிருந்து உறுதியாக்கிக் கொள்ளாவோ முடியவில்லை. அவர் உங்களுக்கு மேன்மையை வழங்கி உயர்த்தினார். அவர் மீது நம்பிக்கையை ஏற்படும்படி அல்லாஹ் செய்து, அவரையும் அவரது தோழர்களையும் பாதுகாத்தான். நீங்கள்தான் அவரது எதிரிகளுக்கு எதிராக அதிகமாக போராடியது நீங்கள்தான். அவருக்காக அதிகமாக சிரமங்களை எதிர்கொண்டது நீங்கள்தான். எனவே வேறு எவரிடமும் கொடுக்காமல் நிலைமையை உங்களது கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்குமாறுவைத்துக் கொள்ளுங்கள்”

உடனே கூடியிருந்தவர்கள்,

“நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் சொல்வதிலிருந்து நாங்களும் மாறுபடவில்லை மேலும் இந்த விஷயத்தைக் கையாளுவதற்கு உங்களையே பொறுப்பாளியாக நியமிக்கிறோம். நீங்களே எங்களுக்கு போதுமானவர்!” என்றனர்.

அவர்களுக்குள் விவாதங்கள் கிளம்பியது.

”இதை குறைஷிகளான முஹாஜிர்கள்(மெக்காவாசிகள்) ஏற்கவில்லையென்றால்?”

“.... ...?!”

“அவர்கள், அல்லாவின் தூதரது முதல் தோழர்கள் நாங்கள்தான்! நாங்கள் அவரது உறவினர்கள் என்று முஹாஜிர்கள் கூறினால்?”

கூட்டத்திலிருந்த சிலர்,

“அப்படியானால், நம்மிலிருந்து ஒரு தலைவர் அவர்களிலிருந்து ஒரு தலைவர் என்று சொல்ல வேண்டும்! ஆனால் இந்தத் தலைமைப் பொறுப்பு என்பதைத் தவிர வேறு எதுவும் நம்மைத் திருப்தி கொள்ளச் செய்யாது ” என்றனர்.

“இதுவே பலவீனத்தின் ஆரம்பம்” என்றார் சஅத்பின் உபாதா.

அபூபக்ர், உமர், அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் மூவரும் மூச்சிரைக்க அங்கு வந்து சேர்ந்தனர்.

அன்சாரிகளிடம் பேசுவதற்கென்று உமர் எந்த உரையையும் தயாரித்து வைத்திருக்கவில்லை. துண்டு துண்டாக தன் மனதில் இருப்பவைகளை இணைத்து பேசிவிடலாம் என்று முடிவு செய்து பேசுவதற்கு முற்படுகிறார்.

உமரின் நிலையை உணர்ந்த அபூபக்ர்,

“இது நமக்கு எளிதானதுதான். நான், எனது உரையை நிறைவு செய்த பின்னர் நீங்கள், உங்கள் மனதிலிருப்பதை பேசுங்கள்” என்றார்

”அல்லாஹ்வைத்தவிர கற்சிலைகளையும், மரச்சிற்பங்களையும் வணங்கிக் கொண்டிருந்த சமுதாயத்தில் அல்லாஹ் தனது தூதரை அனுப்பினான். தூதரின் போதனைகளும்,  தங்களது முன்னோர்களின் மதத்திலிருந்து விலகுவதும் அரேபியர்களுக்கு கடும் துன்பமாக இருந்தது. அல்லாஹ் உண்மையைப் பேசவும் தூதரின் மீது நம்பிக்கை கொள்ளவும் அவர்களிலிருந்து முஹாஜிர்களை வெளியாக்கினான். குறைந்த எண்ணிக்கையிலிருந்த முஹாஜிர்கள் கடும் எதிர்ப்பையும் துன்பங்களையும் சந்தித்தனர். அவர்கள்தான் இந்த உலகில் முதன்முதலாக அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்கள் அல்லாஹ்வின் தூதரது நண்பர்கள், உறவினர்கள் துதரின் மறைவிற்குப் பின்னர் இந்த தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர்கள்.  வழி தவறியவர்களே முஹாஜிர்களை மறுப்பார்கள். அன்சாரிகளே இஸ்லாமில்ல் உங்களுக்கு மிகச் சிறந்த முக்கியத்துவம் இருப்பதை மறுக்க முடியாது. அல்லாஹ் அன்சாரிகளைப் பொருந்திக் கொள்வானாக. நாங்கள் தலைவர்கள் நீங்கள் உதவியாளர்கள். எந்த விஷயத்தையும் உங்களது ஆலோசனையின்றி முடிவு செய்ய மாட்டோம். உங்களது முடிவின் படியே செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்” என்றார் அபூபக்ர்


ஹுபாப் பின் அல்முந்திர், என்பவர் எழுந்து நின்று,

”அன்ச்சாரிகளே...! அதிகாரத்தை நீங்கள் எடுங்கள் உங்கள் நிழலில் மற்றவர்கள் இருக்கட்டும். உங்களை எதிர்க்க எவருக்கும் தைரியமில்லை உங்களது அலோசனையின்றி எவராலும் இந்த விஷயத்தை செயல்படுத்தவும் முடியாது. செல்வத்திலும், எண்ணிக்கையிலும் வலிமையிலும் எதிரியை அதிர்க்கும் தைரியமும் கொண்டவர்கள் நீங்கள்தான். இவர்(அபூபக்ர்) சொல்வதால் உங்களது முடிவிலிருந்து பின்வாங்க வேண்டாம்.  அதனால் நாம் நம்மிலிருந்து ஒரு தலைவரையும்; அவர்கள் அவர்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுக்கட்டும்”

”நிச்சயமாக முடியாது! இரண்டு பேர் சேர்ந்து செயல்பட முடியாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் தூதர் உங்களில் ஒருவராக இல்லாத நிலையில் அரேபியர்கள் உங்களது தலைமைப் பொறுப்பை ஒருபொழுதும் ஏற்க மாட்டார்கள். அவர்களிலிருந்து ஒருவர் தூதுத்துவம்  பெற்றிருக்கும் பொழுது, அவர்களில் ஒருவர் வழிநடத்துவதை  தடுக்க முடியாது. எங்களுக்குரிய தலைமைப் பதவியை பறிக்க விரும்புபவர்கள், நாங்கள் முஹம்மதுடைய உறவினர்கள், நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!”

ஹுபாப் பின் அல்முந்திர் மறுபடியும் எழுந்து,

”ஓ அன்சாரிகளே உங்களுடைய செயல்பாடுகளுக்கு நீங்களே தலையேற்க வேண்டும். ஸஹாபாக்களில் ஒருவர் சொல்வதை கேட்க வேண்டியதில்லை. உங்களுடைய பங்கிற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கேட்பதை கொடுக்க மறுப்பவர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறலாம்.
'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்ச மரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒருதலைவர்; குறைஷிகுலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்' என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. உமர் பொறுமையிழந்து,

“அப்படியானால் அல்லாஹ் உன்னைக் கொல்லட்டும்!” என்றார்

“அல்லாஹ் உன்னைத்தான் கொல்வான்!” என்றார் ஹுபாப் பின் அல்முந்திர்

அபூபக்ருடன் வந்திருந்த அபூ உபைதா,

“ஓ  அன்சாரிகளே! இஸ்லாத்திற்கு முதன் முதலில் உதவி செய்தது அதை வலிமைப்படுத்தியது நீங்கள்தான்! நீங்களே அதை மோசமாக்கிவிடாதீர்கள் என்றார்.

அப்பொழுது அன்சாரிகளில் ஒருவரான பஷீர் இபின் ஸஅத் எழுந்து,

உண்மையில் அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காகவும்தான் காஃபிர்களை போரில் எதிர் கொண்டோம். உலகின் அற்ப பதவிகளை எதிர்பார்த்து அல்ல! மேலும் முஹஹம்மது  குறைஷி குலத்தைச் சேர்ந்தவர் அவரது உறவினர்களே இதற்குத்  தகுதியானவர்கள். எனவே அவர்களை எதிர்க்கவோ அவர்களின் கருத்தில் வேறுபடவோ நான் விரும்பவில்லை” என்றார்

நிலைமை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வருவதை உணர்ந்த அபூபக்கர்,

”இது உமர்;  இது அபூ உபைதா இவர்களில் விருபுபவர்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள்” என்றார்.

ஆனால் அவர்கள் இருவரும்,

 ”அல்லாஹ்வின் மீது ஆணையாக அவ்வாறு அல்ல! நீங்களே சிறந்த முஹாஜிர், நண்பர், நல்லவர், அன்று குகையில் ஒளிந்திருந்த இருந்த இருவரில் ஒருவர்; கொள்கையிலும், தொழுகையிலும் அல்லாஹ்வின் தூதருக்கு அடுத்தது நீங்கள்தான்; உங்களைவிட இதற்குத் தகுதியானவர் யார்? எனவே உங்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்!”  என்றனர்.

எப்படியோ நாம் நினைத்தது நடந்துவிட்டது என்று தயக்கத்துடன் கையை பிசைந்து கொண்டிருந்த அபூபக்கரின் கையைப் பிடித்து உமரும். அபூ உபைதாவும் அபூபக்ரின் தலைமைக்கு கட்டுப்படுவதாக வாக்குறுதி அளித்தனர்.

முன்பே அபூபக்ருக்கு ஆதரவளித்துப் பேசிய அன்சாரிகளில் ஒருவரான பஷீர் இபின் ஸஅத் தாவிக் குதித்து அபூபக்ருக்கு பை’த்(வாக்குறுதி) வழங்கினார்.

மீண்டும் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது.
தொடரும்…

தஜ்ஜால்.