Friday 31 March 2017

மதம் மக்களுக்கு அபின். தோழர் கோவை பாரூக்கின் நினைவாக...மதம் மக்களுக்கு அபின். மதம் இதயமற்ற மக்களின் ஆன்மாவாக இருக்கிறது.


பொதுவுடமைக் கொள்கையை வகுத்தவரான காரல் மார்க்ஸ் சொன்ன மொழி இது. இதன் ஒவ்வொரு சொல்லும் மிகவும் பொருள் பொதிந்தவை என்பது நமது தோழர் கோவை பாருக் படுகொலை செய்யப்பட்டதுவரை நிருபணங்கள் பல.

கற்கால மனிதன் தனது உணர்வுகளைப் பரிமாற்ற ஓவியங்களாக பதிவு செய்தது முதல் இன்று நாம் கணிணியில் பதிவு செய்யும் வரை ‘மதம் மக்களுக்கு அபின்’ என்பதற்கு ஆவணங்கள் ஏராளம். கற்கால மனிதன்கூட தமது எதிரிகளை பிடித்தவுடன் கடவுளின் பெயரைச் சொல்லி கழுத்தை அறுத்து பலியிட்டுள்ளான். மதங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட பிறகு, அதனை ஒரு விதிமுறையாக வேதநூல்கள் என்பதில் பதிந்துக் கட்டாயமாக நடைமுறை படுத்தவேண்டும் என்று உறுதி செய்துள்ளான். இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. யூதர்களின் தோரா முதல் இறுதியாக தோன்றிய குர்ஆன்வரை இவ்விதி தலையாயதாக இருந்து வருகிறது.

பைபிளின் தொடக்கமே, தேவன் மோசஸஸின் கூட்டத்தாருக்கு வாக்களிக்கப்பட்ட இடமாக கானான் தேசத்தை அடையாளங்காட்டி, அங்குள்ள மக்களை கொன்று துடைத்தொழித்து மோஸஸின் மக்களுக்கு வழங்கப்பட்டாதக உள்ளது.

குர்ஆன், காபிர்களை (தன் மதத்தை ஏற்றுக் கொள்ளதவர்களை) காணும் இடங்களிலெல்லாம் கொன்றொழி என்கிறது. மறைந்திருந்து கொல் என்கிறது. (குரான் வசனம்: 9 : 5) முகம்மது, தான் மக்காவைப் தன் வாளால் தனது ஆளுகைக்குள் கொண்டுவந்ததும் அதிலிருந்த 900 சிலைகளையும் அடித்து நொறுக்கினார். அக்கம் பக்கத்திலுள்ள இனக்குழுக்களின் பிரதேசங்களிலெல்லாம் உள்ள சிலைகளை உடைத்து நொறுக்கினார். ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருந்த சிலைகளைக்கூட உடைத்து நொறுக்கினார். பிற ஆட்சிப் பகுதிகளுக்கெல்லாம் இஸ்லாத்திற்கு மாற ஆணையிடுகிறார். மறுத்த நாடுகள் மீது படையடுத்து கைப்பற்றுகிறார். அகண்ட இஸ்லாம் அவரின் கண்களில் வெறியாக இருந்தது. அவருக்குப் பின் ஆண்டோர்களின் கண்களிலும் அதே மதவெறி.

இன்றையநிலையில் இந்த மதவெறி இஸ்லாம், இந்து மதம் தவிர்த்து பிற மதங்களில் குறைந்துவிட்டது. குறைந்துவிட்டது என்று சொல்வதைவிட ஒழிந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். ஆனால் இஸ்லாத்தில் 1300 ஆண்டுகளுக்கு முன் உருவான அந்த வெறி இன்னும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

தமிழ்திரைப்பட நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற இஸ்லாமிய தீவரவாதிகளைக் குறித்து ஒரு திரைப்டம் வெளியிட்டார். இஸ்லாமியர்களின் பெரும் எதிரப்புக் கிடையில் அப்படம் வெளிவந்ததை அனைவரும் அறிவர். இப்படத்தில் ஒருகாட்சி : மதபோதை ஊட்டப்பட்டு மனித வெடிகுண்டாக ஒரு சிறுவன் உருவாக்கப்படுகிறான். நாளை அவன் வெடித்துச் சிதறப்போவதை தெளிவாக உணர்ந்துள்ளான். இன்று, அவன் இஸ்லாத்திற்காக தனதுயிரை தியாகம் செய்யப்போவதாக எண்ணி தனது இருகண்களையும் மூடிக்கொண்டு இன்ப உணர்வுடன் ஊஞ்லாடுகிறான். எதார்த்தமான காட்சிப் படைப்பு. 70 கன்னிப் பெண்களுடன் கூடிய சொரக்கம் அவனது கண்களில் காட்சியளித்ததாக நாம் புரிந்து கொள்ளலாம்.

தாலிபான்கள் தங்கள் உரிமைக்காகத்தானே அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து உயிர் தியாகம் செய்தனர் என்று நீங்கள் கூறலாம். தாலிபான்கள், அமெரிக்காவினால் வளர்க்கப்பட்ட வன்முறையாளர்கள். அவர்களால் ஆப்கானிய மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை உலமே அறியும்.

சில படுகொலைகள் :

தாலிபான் பயங்கரவாதிகாளால், பாகிஸ்தானில் பெஸ்வார் என்னுமிடத்தில் இராணுவப் பள்ளி ஒன்றின் 132 குழந்தைகள் மற்றும் 11 ஆசிரியர் பணியாளர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை தாலிபான்கள் தாங்கள் செய்ததாக அறிவித்துக்கொண்டனர்.

பாகிஸ்தான் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கஜல் பாடல் இசைக்கலைஞர் அம்ஜத் சபரி, தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாலிபான்களின் தலைவர் சபியுள்ளா மசுத் இக்கொலைக்கு, இவரது இசை மதத்திற்கு எதிரானது என்ற காரணத்தால் கொலை செய்தோம் என்று ஏற்றுக்கொண்டார்.

மேலுள்ள இரண்டு எடுத்துக்காட்டுகள் இஸ்ஸமியர்களை இஸ்லாமியர்களே கொன்றொழித்தற்கான சான்றுகள். காரணம், இவர்கள் தூய இஸ்லாத்திற்கு புறம்பானவர்கள்; இஸ்லாத்தை சிறுமை படுத்துபவர்கள் என்பதே.
பாகிஸ்தானிலுள்ள முல்டன் நகரில், ரஷீத் ரஹ்மான் என்ற வழக்கறிஞர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருக்கா வழக்காடியதால், அலுவலகத்திலிருக்கும்போது சுட்டுக்கொள்ளப்பட்டார். அவரது இரு உதவியாளர்களும் காயமடைந்தனர். அப்பேராசிரியர் இஸ்லாத்தை விமர்சித்ததே இதற்குக் காரணம்.
பங்களாதேஷ்ஷில், ஜகன்னாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்த மாணவர் 28 வயதுள்ள நிஜாமுத்தீன் சமத் என்பவர் நாத்திகராக, இஸ்லாமிய பழமைவாதத்தை கேள்ளவிக்குள்ளாக்கி பரப்புரை செய்து வந்தார். இவர் தலைநகர் டாக்காவில் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது அல்லாஹூ அக்பர் என்று முழக்கத்துடன் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தும் இது போன்றதும் இதைவிட அதிபயங்கரமான வெடிகுண்டு வைத்து மக்கள் திரளினரை கொன்றோழித்தது எல்லாம் இஸ்லாமிய பழமைவாதத்தை உலமுழுவதும் நிலைநிறுத்த வேண்டும் என்பதே. அகண்ட இஸ்லாமிய அரசுக் கனவு.

இஸ்லாம் சாந்தியும் சமாதானமும் கொண்ட மதம் என்றும், உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மாரக்கம் எங்களுக்கு என்று தானே முல்லாக்கள் பரப்புரை செய்கிறார்கள் என்ற கேள்வி இவ்விடத்தில் உங்கள் மனதில் எழலாம். நாம் அவதூறு செய்வதாகக்கூட நீங்கள் கருதலாம். மேலே தந்துள்ள படுகொலை விவரங்கள் உலகமறிந்த ஒன்று. அதற்கு இனி சான்றுகள் தேவையில்ல. கீழே இரண்டு காணொளிகள் உள்ளது. பாருங்கள்; பார்த்தபின் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

காணொளி - 1 

         காணொளி - 2

           

நான் சொல்லும் இந்தக் கருத்துக்கு ஆதாரம் தரவேண்டியது எனது கடமை. அவ்வாதாரங்களைப் படிப்பதற்க்கு முன் மொழிபெயர்ப்புப் பற்றி சிறிது பார்த்துவிடுவோம். மொழிபெயர்ப்பின் தகிடுதத்தங்களை நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். ஆனாலும் இங்கும் இதுபற்றிப் பார்ப்பது இன்றியமையாதது.

இஸ்லாமிய மொழிபெயர்பாளர் அனைவரும் ஒன்று சொன்னாற்போல் ஒரே மாதிரியாக காத்திலு ( تِلُوْ ) என்ற அரபிச் சொல்லிற்கு, இவர்கள் பிறரைக் கொல்லச் சொல்லும் இடங்களில் (ஓரு சில இடங்கள் தவிர்த்து) போர்  என்று மொழி பெயர்த்துள்ளனர். இச்சொல்லின் சரியான பொருள் ‘கொல்’ என்பதே. ஆனால் பிறர் தங்களை கொல்லுமிடங்களிலெல்லாம் ‘கொல்’ என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கூகுள் மொழிபெயரப்பு மற்றும் பிற மொழிபெயரப்பு இணையதளங்களிலும் இச்சொல்லிற்கான பொருள் என்னவென்று நீங்களே பார்த்துக்கொள்ளலாம். உங்கள் சிரமம் தவிரக்க கீழே இரண்டு இணைய சுட்டிகள் தந்துள்ளோம். உங்கள் விருப்பம் போல் வேறு இணையங்களிலும் பார்த்துக்கொள்ளலாம். 


பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக அமையும் குர்ஆன் வசனங்கள் சில :

2:216.  (நம்பிக்கையாளர்களே!) போர்கொலை செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்;  நீங்கள் அறியமாட்டீர்கள்.

5:33.  கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும்  போர்கொலை  செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

4:77.  "உங்கள் கைகளை (போர்கொலை  செய்யாமல்) தடுத்துக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்!'' என்று கூறப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்களுக்குப் போர்கொலை   கடமையாக்கப்பட்ட போது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர். "எங்கள் இறைவா! எங்களுக்கு ஏன்  போர்கொலை செய்வதைக் கடமையாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா'' எனவும் கூறுகின்றனர். "இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது. அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்''  எனக் கூறுவீராக!

4:74. மறுமை(வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர்கொலை  செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர்கொலை  புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவர்களுக்கு அதிசீக்கிரத்தில்  மகத்தான  கூலியைக்  கொடுப்போம்.

(கவனிக்க : அல்லாஹ்விற்காக கொலை செய்து அதனால் ஒருவர் கொலை தண்டனையோ அல்லது வேறு எந்த தண்டனையோ பெற்றாலும் அல்லது பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டு உயிர்துறப்பதாலும் அதிசீக்கிரத்தில் சொர்க்கம் உண்டு.)

4:76.  (ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்கொலை புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்கொலை புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களை நீங்கள் போர்கொலை புரியுங்கள். (அவர்களின் தொகை அதிகமாக இருக்கின்றதே என்று தயங்காதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதே!

4:84.  (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர்கொலை  புரியுங்கள். நீங்கள் உங்களைத் தவிர (மற்றெவரையும் போர்கொலைக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போர்கொலைச் செல்ல) தூண்டுங்கள். நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர்கொலை செய்வதில் மிக வல்லவனாகவும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான்.

4:89 (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

8:12.  (நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்" என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.

8:39.  கலகம் இல்லாதொழிந்து அதிகாரம்  முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!கொலைசெய்யுங்கள். அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.

(அகண்ட பாரதம் இஸ்லாமிய அரசுக் கனவு)

9:5. (ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர்கொலை புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந் நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பில் இருந்தும்) பாவத்திலிருந்து விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(கவனிக்க : இவ்வசனம் கூறுவது அரசு வழங்கு வேண்டிய தண்டனைச் சட்டங்களையா? தனிநபர் பயங்கரவாதத்தையா?)

9:14.  நீங்கள் அவர்களுடன் போர்கொலை  புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான்.

9:111.  அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்குச் சுவனபதி தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர்கொலை  புரிந்து (எதிரிகளை) கொள்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சுவனபதி தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ் வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான்.) அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இது(வன்றோ) மகத்தான பெரும் வெற்றி!

9:123. நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கும் (விஷமிகளாகிய) நிராகரிப்பவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காணவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

حرب  ஹர்ப் என்ற அரபிச் சொல்லே போர் என்பதைக் குறிக்கும். இவ்வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ஹரப  ஹரிப  என்ற சொல்லிற்கு கூகுள், ‘சண்டை’ என்றே மொழிபெயர்கிறது. இச் சொல் பயன்படுத்தப்பட்ட குர்ஆன் வசனம் சிலவற்றை பார்ப்போம்.

حَارَبَ حَارِبُ (இச்சொற்களை போருத்தமான இடத்தில் பொருத்த முடியவில்லை)

5:33.  எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர்சண்டை தொடுத்தும், பூமியில் விஷமம் செய்துகொண்டும் திரிகின்றார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்று விடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். அன்றி, மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு.

புகாரி : 2818.  உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையான சாலிம்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு, 'சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என (கடிதம்) எழுதினார்கள். மூஸா இப்னு உக்பா(ரலி) அவர்களிடமிருந்து இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) வாயிலாக உவைஸீ(ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்தார்கள்

புகாரி : 5057. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் குறைந்தவயது கொண்ட இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. எனவே, அவர்களை நீங்கள் எங்கு எதிர்கொண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்' என்று கூறினார்கள். 
என அலீ(ரலி) அறிவித்தார்.

புகாரி : 6922.  இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ(ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கிற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறினார்கள். மாறாக, நபி(ஸல்) அவர்கள், 'தம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரணதண்டனை அளியுங்கள்' என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன்' என்றார்கள்.

பொதுவாக அடைப்புக் குறிக்குள் வரும் சொற்றொடர்கள் மொழிபெயர்பாளர்களின் இடைச் சொருகல்கள். அவ்வடைப்புக் குறிக்குள் இருக்கும் சொற்களை நீக்கிவிட்டு படிப்பதே மூல மோழின் மொழிபெயர்ப்புகள். அதனால் மேலே உள்ள இந்த ஹதீதில் அவசியம் குறித்து அடித்துக் காட்டப்பட்டுள்ளது.

புகாரி : 6930.  அலீ(ரலி) அறிவித்தார்.
 இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள (போர் போன்ற) ஒரு விவகாரம் தொடர்பாக நான் உங்களிடம் பேசினால், போர் என்பது சூழ்ச்சியே (என்பதை நினைவில் கொள்ளுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் குறைந்த வயதுடைய இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியுற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் உயிரோடுவிடாதீர்கள். ஏனெனில், அவர்களை அழிப்பது, அதைச் செய்தவர்களுக்கு மறுமைநாளில் நற்பலனாக அமையும்.

முஸ்லீம் : 3859.  அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அபூமூசா அல்அஷ்அரீ - ரலி) அவர்கள் (ஒரு போரில்) எதிரிகளின் முன்னிலையில் இருந்தார்கள். அப்போது "சொர்க்கத்தின் வாசல்கள் வாட்களின் நிழலுக்குக் கீழே உள்ளன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
உடனே நலிந்த தோற்றத்தில் இருந்த ஒரு மனிதர் எழுந்து, "அபூமூசா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீர் கேட்டீரா?" என்று வினவினார். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள் "ஆம்" என்றார்கள். உடனே அந்த மனிதர் தம் தோழர்களிடம் திரும்பிச் சென்று, "உங்களுக்கு நான் என் (இறுதி) சலாமைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். பிறகு தமது வாள் உறையைக் கிழித்துப் போட்டுவிட்டு, எதிரிகளை நோக்கி நடந்தார். அந்த வாளால் போரிட்டு வீரமணமும் அடைந்தார்

இன்னும் பல வசனங்கள் உண்டு.

மேலே தரப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை நன்றாக நிதானமாக படித்துப் பாருங்கள். இவைகள் ஒரு அரசு அதாவது இஸ்லாமிய அரசு வழங்க வேண்டிய தண்டனைச் சட்டங்களா? தனிநபருக்கு கட்டளையிடப்படும் அறிவிப்புகளா? கீழுள்ள காணொளியையும் பார்த்துவிடுங்கள்.
காணொளி – 3


நியூஸ் 18 தொலைக்காட்சியில் நேர்கானல் செய்பவர், கொல்லுங்கள் என்று சமூகவலைத் தளங்களில் பதிவிடுகிறார்களே என்று கேட்பதற்கு இவை தண்டனைப் பற்றிய வசனங்கள் என்றும் சட்டத்தை கையிலெடுத்துக்கொள்ள எவருக்கும் உரிமையில்லை என்று பிஜே பம்முகிறார். இவர்தான் பிற வணக்கவழிபாட்டினை ஒழிக்கவேண்டும் என்று, கூட்டம் பக்கபலமாக இருக்கிறதுபோது முழங்குகிறார். தர்காக்களை இடிக்க தன் அமைப்பினரை தூண்டிவிட்டு பல ஊர்களில் அவரது அமைப்பைச் சேரந்தவர்கள் தர்காக்களின் முன் கலகங்கள் செய்து வருகின்றனர். அனைத்து ஊர்களிலும் இவ்வமைப்பினருக்கு வழக்குகள் உண்டு.

விபச்சாரம், போன்றவை  தேசவிரோதச் செயல் என்றும் அதற்கு அரசு தண்டனை வழங்குவது முறைதானே என்கிறார். இஸ்லாத்திலிருந்து வேளியேறுவது தேசவிரோதச் செயல். இl தேசவிரோதச் செயலுக்கு கொலை தண்டனை வழங்குவது நியாயமானது என்று ஜாகிர் நாயக் கக்கிய நச்சுவை இவரும் உண்மையில் கூறுவதாகத்தான் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இப்பேட்டியில் அப்படிச் சொல்ல முடியாது என்பதால் விபச்சாரம், அது இது என்று பம்முகிறார். விபச்சாரம் ஒரு தேசவிரோத குற்றமா?

அப்படியானால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் நல்ல கருத்துக்களே இல்லையா? சில ஜனநாயகவாதிகளும், இஸ்லாமிய பரப்புரையாளர்களும் சொல்வதெல்லாம் பொய்யா? இவை பற்றியும் இங்கு பார்ப்பது இன்றியமையாதது என்று கருதுகிறேன்.

10:99.  உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியுமா?

10:100எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் அருள் (நாட்டம்) இன்றி நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை ஆக்கி விடுகிறான்.

5:105.  நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தப்பிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கின்றது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.

13:31.  (நபியே! நாம் இவர்களுக்கு இதனையன்றி வேறு) யாதொரு குர்ஆனை அருள் செய்து, அதைக் கொண்டு மலைகள் நகரும் படியாகவோ அல்லது பூமியைத் துண்டு துண்டாகவோ அல்லது மரணித்தவர்களைப் பேசும்படியாகவோ செய்தபோதிலும், (நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.) எனினும், எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மனிதர்கள் அனைவரையுமே நேரான வழியில் நடத்தி விடுவான் என்பதைப் பற்றி நம்பிக்கையாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? நிராகரிப்பவர்களை அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக்கூடிய) யாதேனுமோர் சம்பவம் அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அல்லது  அவர்களின் வீட்டிற்குச் சமீபத்திலேயே (அத்தகைய சம்பவங்கள்) சம்பவித்துக் கொண்டே இருந்து ("நீங்கள் வெற்றி கொள்வீர்கள்" என்று உங்களுக்குக் கூறப்பட்ட) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடய வாக்குறுதியில் தவறுவதில்லை.

மேலே உள்ள வசனங்கள் மதநல்லிணக்கத்தையும் அன்புடன் வாழவும் போதிப்பதாகத் தானே உள்ளது. நாங்கள் தான் அவதுறுகளைச் சொல்கிறோம் என்று எண்ணத் தோன்கிறதல்லவா?

சில ஜனநாயகவாதிகளின் கூற்று, இஸ்லாமிய கோட்பாட்டினை முழுமையாக உள்வாங்காததன் விளைவு, அல்லது அல்லவை நீக்கி நல்லவை பார்ப்போம் என்றும் இருக்கலாம். அது மட்டுமட்டுமல்ல; மக்களிடம் மதம் உள்ளதால் நல்லவைகளை எடுத்துச் சொல்லி பண்போடு வாழவேண்டும் என்று பெரும் விருப்பம்கொண்டும் இவ்வாறு சொல்கின்றனர் என்றும் கருதலாம்.

ஆனால் தந்தை பெரியார் மக்களிடம் மதம் இருக்கிறது என்று எக்காலத்திலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி; கடவுளை பரப்புபவன் அயோக்கியன்; கடவுளை நம்புபவன் முட்டாள் என்று பரப்புரை செய்தார். அவர் தமிழகத்தில் கொண்டுவந்த மாபெரும் மாற்றத்தை போல பிற எந்த அமைப்புகளாலும் இதுவரை நிகழ்த்த முடியவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இந்த ஜனநாயகவாதிகளின் அறிவுரைகள் எங்கேனும் எட்டுகிறதா? மதப் பயங்கலவாதிகளின் வளர்ச்சிதான் மேலோங்கி வருகிறது. இவர்கள் இதனைச் சொல்லி தமக்குத் தாமே ஆறுதலடைந்து கொள்ளலாம்.

ஆனால் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் முழுப் பூசனிக்காயையும் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள். தாங்கள் வலுவற்றவராக இருக்கிறோம் என்று கருதிய காலங்களில்  இலக்கும் தீனுக்கும் வலியதீன் – உங்கள் மாரக்கம் உங்களுக்கு; எங்கள் மாரக்கம் எங்களுக்கு – என்று சொல்லி வந்தார்கள். இன்று நிலைமை அப்படியில்லை. தம்மை பெரும்பான்மையான ஜனநாயக அமைப்புகள் ஆதரிப்பது உறுதியானது என்றும், தாங்கள் இப்பொழுது இந்தியாவிலும் வலுப்பெற்று விட்டோம் என்று கருதுவதாலும், இலக்கும் தீனுக்கும் வலியதீனை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டார்கள். குர்ஆனின் போதனையும் முகம்மதின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருந்தது. இதற்குச் சான்றாக மேலே தரப்பட்டுள்ள காணொளிகளை மீண்டும் பார்க்கவும். கோவை பாரூக்கின் படுகொலையும் இதற்கொருச் சான்று.

இஸ்லாமிய அடிப்படை வாதிகள், மதவெறியுள்ள வசங்களை வேறு மதத்தினர் எவர் எடுத்துக்காட்டினாலும் அவை சொல்லப்பட்ட காலவரிசையை பார்க்கவேண்டும்; அவை அக்காலச் சூழ்நிலைக்கு சொல்லப்பட்டவை; செயல்படுத்தப்பட்டவை என்றுச் சொல்வார்கள். அப்படியானால் இன்றைய சூழ்நிலைக்கு இவை பொருந்தாதுதானே என்று நீங்கள் திருப்பிக் கேட்டால் கள்ள மௌனம் காப்பார்கள்.

இதில் மிகப் பெரும் உண்மை என்னவென்றால் உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு போன்ற சமரசப் போக்குள்ள வசனங்கள் முகம்மது தன்னை ஆதரிப்பவர்கள் மிகச் சிலராக இருக்கும்போது ஏற்பட்ட நெருக்கடியில் கூறியவை. ‘கொல்லுங்கள்’ போன்ற வசனங்களெல்லாம் தாம் வலுவடைந்த நிலையில் சொல்லப்பட்டவை. கால வரிசைப்படி பார்த்தால் உங்கள் மாரக்கம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்பது காலவதியானவை. அப்படிச் சொன்ன முகமது, மக்காவை வென்றதும் பிற மதத்தினர் மீது நடத்தின தாக்குதல்கள் பற்றிய வரலாறுகளைப் படியுங்கள்.  அதனாலேயே ஜனநாயகவாதிகளின் பரப்புரை வேறாகவும், மத பயங்கரவாதிகளின் பரப்புரையும் செயலும் வெவ்வேறானதாக இருக்கிறது. மீண்டும் இங்கு மேலே உள்ள ‘ஷிர்க்’ ஒழிப்பு மாநாட்டின் காணொளியை (காணொளி - 2) பார்த்துக்கொள்ளுங்கள்.

காலவரிசை, காலச் சூழ்நிலைச் சர்ச்சையை விட்டுத்தள்ளுவோம். ஏன் இந்த முரண்பாடான வசனங்கள்? பயங்கரவாத வசனங்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படுகிறது? இஸ்லாமிய அறிவுஜீவிகள் கோட்பாடு கொள்கைகளை முழுமையாக அறிந்தவர்களா? பொதுவாழ்வில் இருக்கும் ஜனநாயகவாதிகள் அறிந்தவர்களா? உலகம் முழுவதும் நடக்கும் பயங்கரவாத படுகொலைகளைச் செய்பவர்கள் அறியாமையால் செய்தவையா?
எந்த வசனம் நடைமுறையில் இருக்கும் என்பதை அவர்களின் பலமும் அதிகாரமும்தான் தீர்மானிக்கிறது.

குர்ஆனின் அடிப்படை விதிகள் :

  1. குர்ஆன் ஒன்றே (தற்பொழுது) அண்டம் முழுவதையும் படைத்த ஏக இறைவனின் வேதம்.
  2. குர்ஆன் எக்காலத்துக்கும் பொருத்தமுடையது.
  3. குர்ஆனின் ஒரு எழுத்தும் ஒருசொல்லும் மாற்றப்படாது; மாற்ற முடியாதது. அது அல்லாவால் பாதுகாக்கப்படுகிறது.
  4. அறியாமைக் கால மக்களைப்போல் வாழ்பவர்களை சீர்திருத்த வந்தது. (அறியாமைக் கால மக்கள் = காபிர்கள். இச்சொல் இஸ்லாத்தை ஏற்காத பிறருக்கான பொதுச் சொல்.)
  5. உண்மையான அறிவியலை சொல்லும் ஒரே வேதம்.
  6. குர்ஆனும் ஹதீதும் ஒவ்வொரு இஸ்லாமியரின் இருகண்கள். மக்களுக்கான ஒரே வழிகாட்டி.
  7. மேலுள்ள விதிகளை ஏற்றுக்கொள்பவன் மட்டுமே உண்மையான முஸ்லீம்.


இவ்வுலக வாழ்வு அற்பமானது; இறந்தபின் கிட்டும் சொர்க்க வாழ்வே நிரந்தரமானது; இஸ்லாத்தினை இவ்வுலகம் முழுவதும் நிலைநாட்ட இஸ்லாத்தினை நிராகரிப்போரை கொல்லுங்கள்;  அதனால் உயிர் துறப்பவர்களுக்கும் தண்டனை பெறுவோர்களுக்கும் 70 கன்னிப் பெண்கள் உட்பட,  நூறு விழுக்காடு நேரடி சொர்க்கம். கழுத்தை அறுத்து கொல்லுங்கள் என்ற போதனை பாருக்கின் கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது. தமக்கும் இக்கொலையில் பங்கு இல்லாமல் போகக்கூடாது என்று கொலை செய்ய வந்தவர்கள் அனைவரும் உடலின் பல இடங்களிலும் குத்தி தங்கள் சொர்க்கத்தை உறுதி செய்துக்கொண்டார்கள்.

சொர்க்கம் என்ற பொதனை கொலையாளிகளை மனமுவந்து சரண்டையச் செய்திருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாத போதனையே தோழர் கோவை பாரூக்கையும் படுகொலை செய்துள்ளது என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

இறுதியாக ஒரு கேள்வி. தலாக் சட்டத்தில் திருத்தம் செய்வது இஸ்லாமிய சட்டத்தில் கைவைப்பதாக கூக்கிரலிடும் அமைப்புகள், இலங்கைச் சிறுமி ரிஸானா நபிக் தலையைவெட்டிக் கொன்று தண்டனை வழங்கியதை, தம் இஸலாமியக் கோட்பாட்டின்படி நியாயமே என்றுச் சொன்ன அமைப்புகள், தோழர் கோவை பாரூக்கை கொலை செய்தவர்களுக்கு மரதண்டனை வழங்க வேண்டும் என்று போராடுவார்களா?

குறிப்பு : எங்களது கோரிக்கை அவ்வாறிருக்காது. கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் என்றே நாங்கள் கூறுவோம்.
தஜ்ஜால்

*****************************************