Friday, 17 March 2017

பாசிசத்தின் மொழி ஆயுதம். கோவை பாருக்கின் மரணம் விதைக்கப்படும் பகுத்தறிவு.

பாசிசத்தின் மொழி ஆயுதம். கோவை பாருக்கின் மரணம் விதைக்கப்படும் பகுத்தறிவு.

கோவை, பெரியார் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பாருக் என்பவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விசாரணை காவல் துறையில் நடந்து வருகிறது. 
சமுதாயத்திற்காக தன்னுயிர் ஈந்த தோழர் பாருக் அவர்களுக்கு இறையில்லா இசுலாத்தின் இரங்கலை அறிவித்துக் கொள்கிறோம். அவரைப் பிரிந்து துன்புறும் அவரது துணைவியார் பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கொலைக்கான காரணம் அறிந்ததும் விரவான கருத்தினை பதிவிடுவோம்.


தோழர் பாருக் மரணத்திற்கு வீரவணக்கம்!

Facebook Comments

6 கருத்துரைகள்:

Ant said...

பா.ஜ.க எவ்வாறு முத்தலாக் குறித்து முடிவு செய்ததே அதுபோல் இஸ்லாமை விட்டு வெளியேறும் நபர்களுக்கு சமுகபாதுகாப்பு அளிக்க சட்ட வடிவில் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யும் நிலையில் அது இஸ்லாமை சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கும். கேள்விகள் கேட்கப்படும் நிலையில் அதன் அடித்தளம் ஒரு மாயை என்பது விளங்கும். இஸ்லாமின் பலம் என்பது அச்ச உணர்வில்தான் அடங்கியுள்ளது. சுதந்திரமான செயல்பாடு சிந்தனையை ஊக்குவிக்கும். இஸலாமிய கொள்கைகளை கேள்விக்கு உள்ளாக்குவதே சிற்நதது அதற்கு சட்ட பாதுகாப்பு அவசியம். ”பாசிசத்தின் மொழி ஆயுதம். கோவை பாருக்கின் மரணம் விதைக்கப்படும் பகுத்தறிவு” மிகச்சரியானது.

தஜ்ஜால் said...

தோழர் ஃபாருக் கொலைக்கு முகம்மதிய அடிப்படைவாதம் காரணம் என்பது ஊடகங்களில் காணப்படும் செய்தி . அவருக்கு சமீபாகாலமாக முகம்மதிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தார் என்றும் செய்திகள் கிடைக்கிறது.

தோழர் ஃபாருக் முன்னாள் முஸ்லீம் மட்டுமல்ல திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயற்பாட்டாளரும் கூட. மத நம்பிக்கைகளைத் துறந்தும், முஹம்மதியத்தை விமர்சனம் செய்ததுமே அவரது கொலைக்கு காரணமாக ஊடகங்களில் கூறப்படும் செய்தி. மேலும் தோழர் ஃபாருக்கின் கொலைக்கு இதுவரை வேறு எந்த காரணமும் முன்வைக்கப்படவில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முஹம்மதியத்தை துறக்கும் எவரும் அல்லாஹ்வுடனும் அவரது தூதருடனும் போர் புரிபவர்களாகக் கருதப்பட்டு கொள்ளப்பட வேண்டுமென்பது குர்ஆன் கற்பிக்கும் விதிமுறை. இந்த விதிமுறையை தனிமனிதர்கள் கையிலெடுக்கக்கூடாது என்று கூறி மறுப்புரை செய்வது முல்லாக்களின் வாடிக்கை. உண்மை என்னவெனில் குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிளோ எந்த விதிமுறை எவர் செயல்படுத்தலாம் அல்லது செயல்படுத்த வேண்டும் என்ற எந்த வரைமுறையும் கூறப்படவில்லை. மாறாக தனிமனிதர்களின் இத்தகைய செயல்பாடுகளை ஹதீஸ்கள் ஆதரிக்கவே செய்கிறது. காரணம் எந்த விலைகொடுத்தாவது தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டுமென்ற முஹம்மதின்-முஹம்மதியத்தின் கையாலாகாத்தனம். இத்தகைய கொடூர அடிப்படைகளைக் கொண்ட ஒரு ஒரு மதசித்தாந்தத்தினால் படுகொலை செய்யப்படடவர்தான் நமது தோழர் ஃபாரூக் அவர்கள்.
இங்கு வருத்தம் தரும் இன்னொரு செய்தி என்னவென்றால், அவர் சார்ந்திருந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் அறிக்கைதான்.

அறிக்கை இவ்வாறு துவங்குகிறது, அதிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன் முழுவதையும் படிக்க விரும்புபவர்கள் “http://dvkperiyar.com/?p=19510”இந்த முகவரிக்குச் செல்லவும்
//இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது…//
//… தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார்.//
என்று முஹம்மதியப் புகழ்பாடி ஓய்ந்த பிறகு, கொலையைப்பற்றி பேசுகிறது
//இப்போது தோழர் ஃபாரூக் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சூழலில் எழும் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்வைத்து சில முற்போக்கு வேடமிட்டிருக்கும் அமைப்புகளின் முகத்திரைக் கிழித்தெறியப்பட்டிருக்கிறது.//
//அமைப்புகள் என்பவை மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் அல்ல. எப்படி ஒரு ஜாதி சங்கம் ஒட்டு மொத்தமான அந்த ஜாதி மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதோ அது போலத்தான் வேடமிடும் இந்த அமைப்புகளும்.
வேடமிடும் அமைப்புகள் வேறு, மக்கள் வேறு.
எம் தோழன் ஃபாரூக் அப்படி முற்போக்கு வேடமணிந்திருந்த சில அமைப்புகளின் முகத்திரையை கிழித்து அவற்றின் உண்மை முகத்தைக் காட்டி இருக்கிறான் இந்த வாய்ப்பில் அவர்களை நாங்கள் அடையாளம் அறிந்து கொள்கிறோம்.
அமைப்புகளற்ற சில முற்போக்கு முன்னாள் இசுலாமிய சகோதரர்கள் எமக்கு பாடம் சொல்வதை விட்டு விட்டு, அப்படியே திரும்பி மத அடிப்படைவாதிகளுக்கு பாடம் எடுப்பதுதான் அனைவருக்கும் நல்லது.//

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்த அறிக்கை பற்றிய என்னுடைய தனிப்பட்ட (கவனிக்கவும்) விமர்சனத்தை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

தஜ்ஜால் said...

பிழைத் திருத்தம் :

"கொள்ளப்பட வேண்டும்" என்றிருப்பதை "கொல்லப்பட வேண்டும்" என்று திருத்தி வாசிக்கவும்

சிந்திக்கமாட்டார்களா said...

குரானில் அல்லாசாமி சொன்னதுபோல் நம்ம பகுத்தறிவுவாதிகளுக்கு "திகிலை" ஏற்படுத்திவிட்டானோ? ...பயந்து நடுங்குறானுங்களே!! அது எப்படி அரேபிய முஹம்மதின் சித்தாந்திற்கு மட்டும் இவர்கள் தொப்புள்கொடி உறவானார்கள் இந்து மக்கள் எந்த கொடி உறவு?

A.Anburaj Anantha said...


Those who creates factions are to be killed forthwith-says Mohammed.Faruk had criticised Arabian Mohammed.So Homicide is the reward.

Ant said...

//இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது…//
பருக்கிக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கு கிடைக்க நாளாகாது என்பது அவர்களுக்கு நன்றாக புரிந்துள்ளதன் வெளிப்பாடுதான் இந்த வார்த்தைகள். (Read in between the lines).
//… தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார்.//
தீண்டாமை என்பதற்கு வரையிலக்கணம் தெரியாதவர்கள். ஒரு இந்து கிருத்தவ பெண் (அ) ஆண் திருமணம் நடைமுயைில் உள்ளது. இங்கு தீண்டாமை என்பது சாதி தாண்டி திருமணத்தை மட்டுமே குறிப்பிடுகின்றனர்.
இஸ்லாம் அல்லாத நபருடன் திருமண உறவு குறித்து நினைத்து பார்க்கவே முடியாது. திருமணம் ஆகியிருந்தாலும் கூட விவாக ரத்து தான். இது இவர்களுக்கு தீண்டாமையாக தெரிவில்லை.
//5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் // 5.00 மணிக்கு இசுலாமியன் அல்லாதவனாக மாறினால் 5.05க்கு உன் தலை போய் விடும் என்பதே சரி!