Thursday 28 February 2013

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2


கடந்த பதிவில் ஒலிவடிவில் பாதுகாக்கப்பட்ட குர்ஆனிலிருந்த குளறுபடிகளைப் பற்றி கவனித்துக் கொண்டிருந்தோம் கொண்டிருந்தோம்.

அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது… 
                                                             நான் முஸ்லீம் தளத்திலிருந்து

அதென்ன வரிவடிவ குர்ஆன்? எழுத்துபூர்வமான ஆவணமாக அல்லாஹ் வழங்கவில்லையாம். அல்லாஹ் எழுத்துபூர்வமாக வழங்கவில்லை எனில் எவ்வாறு முஹம்மதை வந்தடைந்தன? 

வஹீ, அல்லாஹ்வின் தூதராக முஹம்மது பதவியேற்றதிலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஹீரா குகையில் இருந்த பொழுது ஜிப்ரீல் “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா” கொடுத்ததிலிருந்து அவரது துர்மரணம்வரை தொடர்ந்துள்ளது. 23 ஆண்டுகள்வரை சிறிது சிறிதாக வெளியாகிக் கொண்டிருந்தது. ஹிரா குகையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் செய்திகள் சற்று விநோதமானவைகள்தான். அவைகள் நம்பிக்கை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்படுகிறது; அதை எந்த ஒரு முஸ்லீமும் ஆராயமுற்படுவதில்லை. 

முஹம்மது, தனது குடும்ப வாழ்க்கையிலிருந்து சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு காணாமல் போவது வழக்கம்.  ஹீரா குகையில் தங்கி வழிபாடுகள் செய்வதாக எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தார். அவ்வாறான நிலையில், அங்கு திடீரென தென்படும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர்,

ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறியதாவது.
அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, துவீராக என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள் வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு ஓதுவீராக என்றார் அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார்….
புகாரி  0003  
உதாராணத்திற்கு நீங்கள் (மட்டுமே) தனிமையிலிருக்கும் பொழுது திடீரென தென்படும் ஒரு நபர் தான் யார், எதற்காக வந்துள்ளேன் என்ற எவ்விதமான அறிமுகமின்றி படாரென்று மூச்சு திணறுமளவிற்கு “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா” கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

 அந்தத் ”தழுவலுடன் கூடிய உம்மா”வை விரும்பாத நபராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் எதிராளியின் கன்னங்களை அறைந்து சிவக்க வைத்திருப்பீர்கள் அல்லது குறைந்தபட்சம் அவரைத் தள்ளிவிட்டு விலகி ஓடியிருப்பீர்கள்.   மீண்டும் மீண்டும் அணைப்பிற்கு காத்திருந்தால் என்னவென்று சொல்லலாம்?

ஹதீஸிலுள்ள வானவர் அல்லது ஜிப்ரீல் என்ற விபரங்கள் பிற்காலச் சேர்க்கையாகும். உண்மையில், தனக்கு “உம்மா” கொடுத்தவர் யாரென்றே முஹம்மதிற்குத் தெரியாது. அது நாமூஸ் என்கிற ஜிப்ரீல் என்பதாக பார்வையற்ற ஒரு கிருஸ்துவர், தன்னிடமிருந்த பைபிளை ஆராய்ந்து கூறுகிறார். முஹம்மதின் மனைவி கதீஜாவோ வினோதமான ஒரு சோதனையின் மூலம் ஹீரா குகையில் வந்தது காம இச்சை கொண்ட ஜின் அல்ல ஒரு நல்ல ஜின்னாக இருக்கலாம் என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஜிப்ரீலின் அணைப்பு ”ஒரு மாதிரியாக” இருந்ததோ என்னவோ? (கதீஜா செய்த ஆய்வுகளை ”இஸ்லாத்தைக் கடந்த சுவடுகளின் 17வது” பகுதில் பார்த்தோம்.) ஜிப்ரீல் தன்னை யாரென்ற அறிமுகத்துடன் வந்த காரணத்தையும் கூறியிருக்கலாம். முஹம்மதிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானே அதன்படி மட்டுமே ஜிப்ரீலால் செயல்படமுடியும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி அதுதான் பகுத்தறிவற்ற படைப்பாயிற்றே?  

இப்பிரபஞ்சத்திற்கே அருளாகத் தேர்தெடுக்கப்பட்டவரிடம் சராசரி மனித நாகரீகத்தைக்கூட பின்பற்றாதது சற்று அல்ல மிகவுமே வினோதமானதுதான். கதீஜாவின் ஏடாகூடமான சோதனையை கண்டு வெறுத்துப்போன அல்லாஹ், அதன் பிறகு ஜிப்ரீலை மரியாதையாக நடந்து கொள்ளச் செய்ததுடன் ”ஒலி வடிவிலான” அல்லாஹ்வின் கட்டளைகளை முஹம்மதிடம் வழங்கியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் முழுவதுமே ஜிப்ரீல் என்ற இரண்டாம் நபர் கூற ஒலிவடிவிதான் வழியாக முஹம்மதை அடைந்ததா? என்றால், நிச்சயமாக அவ்வாறில்லை. முஹம்மதின் மனதில் உள்ளுதிப்பாகவும், கனவாகவும் தோன்றியிருக்கிறது.  ஒலியல்லாத முறையிலும் வஹீ முஹம்மதை அடைந்துள்ளது. அல்லாஹ்வுடன் நேரடி உரையாடல் விண்வெளிப்பயணத்தில் பேரம் பேசியபொழுது மட்டுமே.

ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. …
புகாரி 0003  
அவ்வப்பொழுது ஜிப்ரீல் தன்னிடம் கூறும் செய்திகளையும், அல்லாஹ் உள்ளுதிப்பாக உருவாக்கும் செய்திகளையும், கனவுகளையும் உறவினர், நண்பர்கள் அண்டைவீட்டார் என்று எல்லோரிடமும் கூறத் துவங்கினார். குர்ஆன் ஒலிவடிவில் மட்டுமே முஹம்மதை வந்தடைந்தன என்பது தவறானது மட்டுமல்ல, மக்களை ஏமாற்றும் கருத்தாகும். 



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பெற்றே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான்.
முஸ்லீம்  239




முஹம்மதிற்கு ’வஹீ’ என்ற முறையில் கூறப்பட்ட செய்திகள் எவை? அல்லாஹ் முஹம்மதிடம் வழங்கியதாகக் கூறும் “வஹீ” குர்ஆன் என்ற புத்தகத்தில் மட்டும்தான் உள்ளதா? என்றால் நிச்சயமாக அவ்வாறில்லை!  ஹதீஸ்களிலும் தொடர்கிறது. 

…"குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி; ஹதீஸ்கள் இறைச் செய்தி அல்ல'' என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்:
பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை இருந்ததாக அல்லாஹ் கூறுகிறானே அவ்வாறு தடை விதிக்கும் வசனம் எது? குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்று வாதம் செய்வோர் அந்தக் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாமல் இருந்து அவர்கள் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை. "நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறி விட்டார்'' என்று இறைவன் கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாமல் "நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்; நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லா விட்டாலும் அதை மீறுவது பாவம் தான்; என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன்'' என்ற பொருள்பட மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.
50. நபிவழியும், மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும்
onlinepj.com

அறிஞர் பீஜே செல்வது சரிதான்.  இஸ்லாமில், குர்ஆனை மட்டும் வைத்துக் கொண்டு எந்த ஆணியையும் பிடுங்க முடியாது.  குர்ஆனின் விளங்காத பகுதிகளுக்கு முஹம்மது மீண்டும் விளக்கம் கொடுத்திருப்பதைதான் நாம் ஹதீஸ்களில் காண்கின்றோம். அவைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளே.

எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக
பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
குர் ஆன் 75:18-19
முஹம்மதின் காலத்திலேயே குர்ஆனுக்குத் தவறான பொருளைக் கூறி தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். 
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்'' என்று சொன்னார்கள். 
                                                                          முஸ்லீம் 5180
அன்றே அப்துல்லா ஜாமலியும் பீஜேவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழல்களில் தர்க்கத்தினால் வெறுப்படைந்து போன அல்லாஹ், பொறுப்பை முஹம்மதிடம் சாட்டி விடுகிறான்.
…இன்னும், அவர்களின் மனங்களில் (பதியும் படியான) தெளிவான வார்த்தையை அவர்களுக்கு கூறிவீராக!
குர்ஆன் 4:63
குர்ஆனில் கூறப்படாத வஹீ இவ்வாறுதான் உருவாகியிருக்கவேண்டும்.  ஒலிவடிவில் அருளினான், இதயங்களில் பாதுகாப்பாக உள்ளது என்பவர்கள் குர்ஆனில் இல்லாத வஹீக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? குர்ஆனைத் தொகுத்தவர்களுக்கு இந்த “குர்ஆனில் இல்லாத வஹீ”யை ஏன் பொருட்படுத்தவில்லை? ஆக, தற்பொழுது நம்மிடமுள்ள இந்த 6666 வசனங்கள் மட்டுமே குர்ஆன் அல்ல என்பது தெளிவாகிறது. 

பொதுவாக ஹதீஸ்கள் என்னதான் வலுவான அறிவிப்பாளர்கள் வரிசை கொண்டிருந்தாலும், குர்ஆனுக்கு, அதாவது ஆயிஷாவின் கணிப்பின்படி 6666 வசனங்களைக் கொண்ட தொகுப்பிற்கு (மற்றவர்களின் கணிப்பின்படி இதுவும் 6212 வரை மாறுபடுகிறது) முரண்பட்டால் நிராகரித்துவிடுகின்றனர். ’வஹீ’ ஹதீஸிலும் இருக்கிறது என்பது குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 

மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டதாக குர்ஆன் கூறுகிறது. “குர்ஆனில் இல்லாத வஹீ”க்களும் உண்டு என்கிறார் பீஜே. இப்பொழுது ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டவைகளா? என்ற கேள்வி தவிற்க முடியாததாகிறது. 

ஹதீஸ்களின் நிலையை நான் சொல்வதைவிட அறிஞர் பீஜே சொல்வதைக் கேளுங்கள்.




பீஜே இங்கு, குர்ஆனில் சொல்லப்படாத வஹீயான ஹதீஸ்களின் பரிதாப நிலையைப்பற்றி மட்டும் கூறவில்லை. ஆவணத்தின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்கிறார். இதற்கு மேலும் நாம் ஹதீஸ்களைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
தொடரும்…

தஜ்ஜால்

Thursday 21 February 2013

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1



நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
குர்ஆன் 15:09

இஸ்லாமின் அடிப்படை, அல்லாஹ்வின் வார்த்தைகளாகக் கருதப்படும் குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் முஹம்மதின் சொல்-செயல்களைக் கூறும் ஹதீஸ்களும்தான். இதில் முஹம்மது தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக வஹியை அதாவது வேதம் வெளிப்பட்ட முறையையே முன்வைத்தார். அல்லாஹ்வால் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டதென்று தனக்குத் தானே சாட்சி கூறிக்கொள்கிறது.

அண்மையில் ஒரு இஸ்லாமிய நண்பருடன் விவாதத்தில் இருந்தபொழுது பாதுகாக்கப்பட்ட குர்ஆன் என்பது ஒரு நம்பிக்கையே, நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல என்றேன்.

அதற்கு அவர், குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் அல்லாஹ் முஹம்மது நபிக்கு அருளியவாரே இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது; அதற்கு குர்ஆன் 15:09 ஆதாரம் என்றார். ஏனெனில் குர்ஆன் கடவுள் அல்லாஹ்வின் வார்த்தைகளாம்.  ’நான் முஸ்லீம்’ தளமும் அதே பதிலைத்தான் கூறுகிறது.

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்...
நான் முஸ்லீம்
நமது கேள்வியே குர்ஆனின் நம்பகத்தன்மையைக் குறித்துதான் அதற்கு பதிலைக் குர்ஆனிலிருந்தே கூறுவர். பொதுவாகவே முஸ்லீம்களின் வாதம் வளைவிற்குற்குள் சுற்றிக் கொண்டே இருக்கும்.  அந்த நண்பரிடம், குர்ஆன் தொகுக்கப்பட்ட கதையைக் கூறுங்கள் என்றதும், முடியாது என்று திடமாக மறுத்துவிட்டார்.  இதுதான் குர் ஆனின் யதார்த்த நிலை!

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்” என்ற இந்த இரண்டு வாக்குறுதிகளின் அவசியம் என்ன? அன்றைய மக்கத்துக் குறைஷிகள் இவர்கள் சொல்வதைப் போல முட்டாள்கள் அல்ல! அவர்கள் தெளிவாகவே, முஹம்மது கடவுளின் பெயரால் கதையளப்பதாகக் கூறினர். அதற்காகத்தான் ”நாமே இந்த அறிவுரையை அருளினோம்” என்ற மாபெரும் விளக்கம். இந்த பதிலைக் காணும் பொழுது, நாம் இன்று காணும் அரைவேக்காடு இஸ்லாமிய அறிஞர்களும்,  அப்பாவி முஸ்லீம்களும் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. அவர்கள், குர்ஆன் சர்வவல்லமையுடைய கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபிக்க, அவர்கள் மேற்கொள்ளும் சிரமங்களைப் பார்க்கையில் எனது கண்களில் நீர் தழும்பி நிற்கிறது. 

 சரி..! ”நாமே பாதுகாப்போம்” என்று எதற்காகக் கூறவேண்டும்? குர்ஆனை அழித்துவிட யாராவது முயன்றனரா? என்றால், முஹம்மது, குர்ஆனைக் கூறிக் கொண்டிருந்த காலத்தில் அப்படி எந்த ஒரு முயற்சியும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. பிறகு ஏதற்காக இப்படியொரு உறுதிமொழி? 

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.
குர்ஆன் 2:75

இவ்வாறு மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை குர்ஆன் திரும்பத் திரும்பக் கூறுவதால், குர்ஆனின் தன்மை எத்தகையது என்ற கேள்வி எழுவதைத் தவிர்ப்பதற்காகக் கூறப்பட்டிருக்குமோ? அல்லது பிற்காலத்து இடைச்சொருகலா?

இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்பாக, நாம் அல்லாஹ்வின் இயல்பை சற்று கவனிக்கலாம். மூலப்பதிவேடு என்ற நூலில் துவங்கி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புத்தகம் என்ற கணக்கில் எண்ணற்ற புத்தகங்களை, எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறான். முந்தைய வேதங்களாக அல்லாஹ் கூறும் தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், மட்டுமல்லாது அவன் அனுப்பிய ஒவ்வொரு தூதர்களுக்கும் வேதங்களை வழங்கியுள்ளான். அன்றுமட்டுமல்ல இன்றும் தனது எழுத்தர்களை கொண்டு மனிதனது செயல்களைக் எழுதிக் கொண்டே இருக்கிறான். 

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்...
முஸ்லீம் 263

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.
குர் ஆன் 17:13

இவ்வாறாக அல்லாஹ்வின் அலுவலகத்தில் எழுத்துப்பணி இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொன்றும் எழுத்துவடிவத்தில் பாதுகாக்கப்படுவதை குர்ஆனும் ஹதீஸும் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  மோசேவிற்கு கற்பலகைகளில் தனது கட்டளைகளை எழுதிக் கொடுத்துள்ளதாகவும் அதை அவர்கள் ஒரு பேழையில் (உடன்படிக்கைப் பெட்டி) வைத்திருந்ததாகவும் பழைய ஏற்பாடு கூறுகிறது. 

பேழையின் மாதிரிப் படங்கள்.



 குர்ஆனும் தனது பங்கிற்கு மூஸாவிடம் ஒரு பேழை இருந்ததாகக் கூறுகிறது

"அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்குச் சான்று உள்ளது'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.
குர்ஆன் 2:248

மூஸா விட்டுச் சென்ற பெட்டியை மலக்குகள் வானிலிருந்து சுமந்துவந்து மக்களின் முன்பாக வைத்தனர் என்றெல்லாம் விரிவுரைக்கதைகள் கூறுகின்றன. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு தேவையில்லாத காரணத்தினால் அதை பின்னர் பார்க்கலாம்.
இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, ஈஸா வானுலகிற்குக் கடத்திச் செல்லப்பட்டபொழுது தனது அடியார்களுக்கென்று இன்ஜீல் என்றொரு வேதப் புத்தகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அந்த புத்தகம் என்ன ஆனது? இயேசு, அப்படி எந்த ஒரு எழுத்துப்பூர்வமான வேதத்தையும் விட்டுச் செல்லவில்லை என்பதாக கிருஸ்துவம் கூறுகிறது. இவர்களில் யார் சொல்வது சரியானது?  

ஆக அல்லாஹ், வெளியிட்ட குர்ஆனுக்கு முந்தைய எந்த ஒரு வேதமும் இன்று உலகில் இல்லை. அவை மனிதக் கரங்களால் உருமாறிவிட்டது. அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இஸ்லாமியர்களின் வாதம். 

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.
குர்ஆன் 2:213

முஸ்லீம்களின் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் சுமார் 30-லிருந்து 1,24,000 வரை நபிமார்கள் வந்துள்ளதாக அறிகிறோம். மேற்கண்ட வசனத்தை கவனத்தில் கொண்டால் தவ்ராத், ஜபூர், இன்ஜீல் மட்டுமல்லாது இன்னும் அதிக எண்ணிக்கையில் வேதங்கங்கள் இருந்துள்ளதாக பொருள் கொள்ளலாம்.

”வேதங்களை மாற்றிவிட்டனர்” என்று குர்ஆனில் அல்லாஹ் புலம்புவதை அடிப்படையாகக் கொண்டால், வேதங்களை திருத்தம் செய்யக் கூடாது என்ற எச்சரிக்கைகளை, ஒவ்வொரு வேதத்திலும் நிச்சயம் கூறியிருக்க வேண்டுமில்லையா? தனது வேதங்களை மாற்றியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேதங்களைப் பாதுகாக்கவுமில்லை!
 
பொதுவாக, மனிதர்கள், தாங்கள் எழுதியவற்றை தகுந்த அனுமதியின்றி பிறர் திருத்தம் செய்வதை அனுமதிப்பதில்லை. ஆனால், அல்லாஹ்வோ என்னைக் கேட்காமல் எனது புத்தகத்தை திருத்திவிட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். கொடுமையான தண்டனை வழங்குவேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்தும், அவனை அவர்கள் ஏனோ சிறிதுகூட பொருட்படுத்தவில்லை, பயம் கொள்ளவில்லை என்கிறது குர்ஆன். அல்லாஹ்வின் ஆணைகளயும், படைப்புகளையும் மனிதர்களால் அவனது அனுமதியின்றி மாற்றமுடியும் என்பதை அல்லாஹ்வும் ஒப்புக்கொள்கிறான்! 

சர்வல்லமையுடைய கடவுளுக்கு அடுத்தடுத்து புதிய தூதர்கள் மற்றும் வேதங்களின் தேவையென்ன? எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய, அனைத்துவிதமான சட்டங்களையும் உள்ளடக்கிய ஒரே வேதத்தை ஏன் இறக்கிப்பாதுகாக்கவில்லை?

இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது "முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல...உலகின் இறைவன்!
நான் முஸ்லீம்

இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் விரும்பியவர்களெல்லாம் கடவுளின் அந்தரங்க காரிதரிசியாக பதவியேற்கலாம். அல்லாஹ்வின் அருகிலிருந்து அவனது நடவடிக்கைகளை கண்காணித்தவர்களைப் போன்று எவ்வளவு நுணுக்கமான செய்திகளைக் கூறுகின்றனர். இவர்கள்தான் அல்லாஹ்விற்கே ஆலோசனைகள் வழங்கியதைப் போன்று அளந்து விடுகின்றனர். அவனால் எதுவும் செய்ய முடியாது என்ற துணிச்சல்தான். 
 
நாம்  நாத்தீகர்களா? இல்லை அவர்களா?  அண்மைக் காலங்களில் இந்த சந்தேகம் அடிக்கடி எழுகிறது.

தோட்டக்காரனுக்கு, இஸ்லாம் என்ற மததத்தை மன்னிக்கவும் மார்க்கத்தை வேலியமைத்து பாதுகாக்க சுமார் 5500-க்கும் அதிகமான ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

குர்ஆன் என்ற வேதம் வழங்குவதற்காகத்தான் மற்ற வேதங்களை பாதுகாக்க விரும்பவில்லையாம்! பாவம், அந்தத் தோட்டக்காரன் இத்தகைய விளக்கங்களை எதிர்பார்க்கவில்லை போலும், அவனது புலம்பலை பார்ப்போம்.

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …
குர்ஆன் 2:79

முதலில் குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபித்த பிறகு தவ்ராத் மற்றும் இன்ஜீலையும் அதன் மூலப்பிரதிகளுடன் ஒவ்வொரு எழுத்தாக, வாக்கியமாக ஒப்பீடு செய்தபின்னர் இப்படியொரு முடிவைக் கூறியிருந்தால், ஏற்புடையதாக கருதலாம். ஆனால் திடீரென்று ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்பதைப் போல வேதங்கள் மாற்றப்பட்டுள்ளன அறிக்கைசெய்வது குழந்தைத்தனமானது.

சனிக்கிழமை தடை நீக்கம், கொழுப்பு உண்பது அனுமதிக்கப்பட்டது என்று தவ்ராத்திற்கு மாற்றமான சில அனுமதிகள் பற்றி குர்ஆனில் உள்ளன. நமது விவாதம் அதைப்பற்றியல்ல என்பதை அறிவீர்கள்.  

...வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்...
குர்ஆன் 5:13

முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுவதில் முரண்பாடுகள் உள்ளன. இன்னும் சொல்வதென்றால் முஹம்மதின் காலத்தில் மட்டுமல்ல அதற்குப்பின்னும் குர்ஆனைவிட அவைகளே பாதுகாப்பாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.        
நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், '(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) 'ரஜ்கி' (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?' என்று கேட்க, யூதர்கள், '(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை' என்று பதிலளித்தனர். உடனே, (யூதமார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், 'பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்' என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்கி' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, 'இது என்ன?' என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, 'இது ரஜ்முடைய வசனம்' என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள்
புகாரி 4556

முஹம்மதின் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாப்பாக இருந்துள்ளதாக குர்ஆனும் கூறுகிறது.

"அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
குர் ஆன் 2:91

மேற்கண்ட வசனம் இறக்கப்படும் பொழுது, யூதர்களிடமிருந்த தவ்ராத்தும், கிருஸ்துவர்களிடமிருந்த இன்ஜீலும் உண்மையாக இருந்துள்ளது என்பதுதான் இதன் பொருள்! கடவுள் அல்லாஹ்வின் கட்டளைகளென்று  கூறிக்கொண்ட  முஹம்மதின் குர்ஆனை மறுத்ததும், நபிமார்களைக் கொலை செய்ததும்தான் அவர்கள் செய்த குற்றம். தவ்ராத் மற்றும் இன்ஜீல் பாதுகாப்பாகவே இருக்கையில் மாற்றப்பட்டதாக புலம்புவது வேடிக்கையானது. மற்றப்பட்டதாக அல்லாஹ் குற்றம்சாட்டுவது எதை? சரி… பாதுகாப்பாக இருந்த அந்த தவ்ராத்தும் இன்ஜீலும் எங்கே?

தன்னுடைய தூதர்கள் கொலை செய்யப்படும் வரையில் அல்லாஹ் என்ன செய்து கொண்டிருந்தான்? கொலை செய்யப்பட்ட நபிமார்கள் யார்? இதற்கான பதில் விளக்கமாக நன்கு விவரிக்கப்பட்ட குர்ஆனில் இல்லை. பதில் வேண்டுமென்றால் மாற்றப்பட்ட(?) வேதங்களில்தான் தேடிப்பார்க்க வேண்டும்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின்படி முந்தையவேதம் பாதுகாப்பாகவே இருந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் முஹம்மது துப்பறிந்து கண்டுபிடித்த “ரஜ்ம்” என்ற கல்லெறி தண்டனை பற்றிய அல்லாஹ்வின் அறிவிப்பு குர்ஆனில் இல்லை என்பதுதான்!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
….நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்…
புகாரி 6830
மட்டுமல்ல,
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப் பட்டிருந்தது.  பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
முஸ்லீம் 2876

அதென்ன சிலரால் மட்டும் ஓதப்பட்ட வசனம்? மற்றவர்கள் ஓதிப் பாதுகாக்கவில்லையா? 

அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது…
நான் முஸ்லீம் தளத்திலிருந்து

இந்த வசனமும் தற்பொழுதைய குர்ஆனில் இல்லை. ஒலிவடிவில் பாதுகாப்பாக இருக்கிறது என்பவர்களிடம் நாம் கேட்கவிரும்புவது, 

முஹம்மதிடம் அல்லாஹ் கூறியவாறே சிறிய மாற்றம்கூட இல்லாமல் ரஜ்கி மற்றும் ஐந்தாகக் குறைக்கப்பட்ட பால்குடி எண்ணிக்கைத் தொடர்பான வசனங்களைக் கூறமுடியுமா? மனிதர்கள் பாதுகாக்கும் தற்பொழுதைய குர்ஆனில் அவர்களால் இணைக்க முடியுமா?

ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து குர்ஆனை எப்படி குறை கூறலாம்?  நாய் வாலை ஆட்டலாம், வால் நாயை ஆட்டமுடியாது, ஆட்டக்கூடாது என்பதுதானே உங்களது ஆதங்கம்?
தொடரும்…
தஜ்ஜால்