Friday 20 July 2018

கொலைகார மதங்கள்-1

கடந்த ரமலான் மாதத்தில் ஈமாந்தாரியாக வேஷமிட வேண்டிய சூழல். இஃப்தார்–நோன்பு துறப்பதற்காக பள்ளிவாசலுக்கு முஃமின் நண்பர்களுடன் செல்வது வாடிக்கையாக இருந்தது. இம்முறை என்னுடன் இருந்த நண்பர்கள் அனைவரும், கேரளாவின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்தவர்கள்; அவர்கள், பிற மதநம்பிக்கைகளை, வழிபாடுகளை விமர்சித்தோ கேலி செய்தோ நான் பார்த்ததில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருமே இனிமையான, அமைதியான குணம் படைத்தவர்கள். அவர்களது சகிப்புத்தன்மைக்கு ஒரேயொரு உதாரணம் மட்டும் சொல்லிவிடுகிறேன். ஒரு முறை, பெந்தகோஸ்த் சபையினர் நற்செய்திக் கூட்டங்ககளில் செய்யும் அற்புதங்கள்(!) அடங்கிய பகடி காணொளியை வாட்ஸ்அப்பில் நான் பகிர்ந்த பொழுது,
 
“நிங்களு எந்தினா ஈ வேண்டாத பணினச் செய்யுனு? அவர் எந்தோச் செய்திட்டு போகட்டே… அது அவர விசுவாசம்; நிங்களு எந்தினா களியாக்குனு?”
 
-- என்று  என்னைக் கடிந்து கொண்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அத்தகைய புனித ஆத்மாக்கள் எனது மலையாள முஃமின் நண்பர்கள். அதேவேளையில் முஹம்மதியர்கள் என்ற உயர்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். எல்லோருக்கும் வெவ்வேறு வயது; சுமார் 18 லிருந்து 70 வயது வரை இருக்கும். வெவ்வேறு வயதினர் எப்படி ஒரே குழுவாக இருக்க முடியுமென்று ஆச்சரியப்பட வேண்டாம்; எல்லாம் ஈமான் செய்யும் வேலை.
 
எங்களது இருப்பிடத்திற்கும் பள்ளிவாசலுக்கும் சற்று தொலைவு. எனவே எனது வாகனத்தில் எல்லோரும் இஃப்தாருக்கு செல்வதும் வழிநெடுகிலும், எதையாவது எதையாவது பேசிக் கொண்டு வருவது வழக்கம். பெரும்பாலும் அவை அலுவல வேலை தொடர்பான உரையாடல்களாத்தான் இருக்கும். அன்று பள்ளிவாசலிலிருந்து வரும்வழியில் ஒரு உணவகத்திற்கு தேநீர் அருந்தச் சென்றிருந்தோம்.  பெரிதாக கூட்டம் எதுவுமில்லை. நான் வாகனத்தை பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி வருவதற்குள், நண்பர்கள் ஏதோ ஒரு உரையாடலை துவங்கியிருந்தனர். எனவே நான் சற்று தாமதமாக அதில் இணைந்து கவனிக்கத் துவங்கினேன். எங்களில் வயதில் முதியவர்; முஹம்மதிய சட்ட திட்டங்களை நன்கு பயின்றவர்,
 
“ஃபைசல்ண்ட குடும்ப செலவு ஒக்க பள்ளிக்காரு ஏற்றெடுத்து; ம்.. ஒன்னாந் தர பெற (வீடு) கட்டி கொடுத்துக்கினு…!” என்றார்  விழிகளை அகல விரித்து பெருமையாக.
 
எங்கள் அலுவலகத்தில்  ஃபைசல் என்ற பெயரில் இருவர் இருக்கின்றனர். அவர்களிலில் யாருக்கு பள்ளிவாசல் நிர்வாகம் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறது? எதற்காக அவ்வாறு செய்ய வேண்டும்? என்று எண்ணங்கள் ஓட,
 
“ஏது ஃபைசல்?” என்றேன்
 
கேள்வியைப் புரிந்து கொண்ட அவர், சிரித்துக் கொண்டே,
 
“இது நாட்டிலுள்ள வேற ஆளு!” என்றார்
 
ஏதாவது ஏழ்மையானதொரு குடும்பத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உதவியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு,
 
“எவிட…?” என்றேன்.
 
“திரூர்லு…!”
 
மதப் பெருமைகளைப் பேசாமல் இவர்களால் இருக்கவே முடியாது நான் அமைதியாக இருந்தேன். அப்பொழுது எங்களில் வயதில் இளையவர்,
 
அங்ஙெனத்தன்னச் செய்யனம்!” என்றார் சற்று கோபமாக,
 
எனக்குப் புரியவில்லை. ஏதோ வசதியற்ற குடும்பத்திற்கு உதவியிருக்கிறார்கள்;  ஒரு நல்ல விஷயத்திற்கு இவனெதற்கு இப்படியொரு மோசமான ரியாக்ஸனைக் கொடுக்கினே என்று மனதில் நினைத்து கொண்டு புருவத்தை சுருக்கியவாறு அவனைப் பார்த்தேன். அதற்குள் முதியவர்,
அவன வெட்டி நுறுக்கி…!” என்றவாறு கைகளால் வெட்டுவது போலக் காண்பித்தார்.
 
“இல்லங்ஙில் பேடி விட்டுப் போகும்..!”  என்றார் இளையவர் சற்று ஆக்ரோஷமாக,
 
“அவனெ அங்ஙென வெட்டி வெட்டி நுறுக்கி” என்று மீண்டும் கைகளை கொத்துக்கறி வெட்டுவது போல செய்து காண்பித்து சிரித்தார்.
 
“அதென்ன சரி…! அவருகெக்க அங்ஙெனத்தன்ன வேணம்; அங்ஙெனத்தென்னச் செய்யனம்; ஜோசப் மாஷ்டர கையின வெட்டியது அவன் செய்த தெட்றினு கிட்டிய  ஷிக்ஷையானு…! நம்மள அல்லாஹ்வினையும் ரசூலையும் களிப்பிச்சங்கில் வெறுத விடோ? காணிச்சு கொடுத்தில்லே… …? என்று குரூரமாகப் புன்னகைத்தார் இன்னொருவர்.
“… …!?”
 
“இதினெக்க NDF-கார சம்மதிக்கனம்; மிடுக்கம்மாரானு! என்று கூறி எல்லோரும் புன்னகைத்துக் கொண்டனர். அதற்குள் உணவகப் பணியாள் தேநீர் பரிமாற எங்களருகில் வரவே, அந்த உரையாடல் அத்துடன் நின்றுவிட்டது. மதம் சம்பந்தப்பட்ட ஏதோ கொலை விவகாரம் என்பது மட்டும் புரிந்தது.
அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை என்னால் ஓரளவிற்குத்தான் யூகிக்க முடிந்த. ஜோசப் மாஸ்டர் கையை வெட்டியை விவகாரம் கேள்விப்பட்டிருக்கிறேன். துண்டு துண்டாக வெட்டப்பட்டது யார்?  எங்களைப் போன்று முர்தத் எவரையாவது கொன்று விட்டனரா? கொலையும் செய்துவிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியும் செய்கின்றனரா? என்னுள் பலவிதமான குழப்பம். ஆனால் நிச்சயமாக இது மதம் சம்பந்தப்பட்ட கொலை விவகாரம் என்பது மட்டும் புரிந்தது. அவர்களிடம் மேலும் துருவித் துருவி நான் கேட்க விரும்பவில்லை.
 
எத்தனை அமைதியான மனிதர்கள்; எல்லோரிடமும் மிக அன்பாகப் பழகக் கூடியவர்கள்; மதச் சார்பின்மையைப் பற்றி எனக்கே வகுப்பெடுத்தவர்கள் ஆனால் இவர்களுக்குள் இப்படியொரு மிருகமா? என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எங்கோ… யாரோ… செய்த கொலையை, இவர்கள் இங்கு அமர்ந்து கொண்டு ஆதரிப்பதற்கு ஒரே காரணம் மதம் மட்டும்தான்.
 
உடன்பிறவா சகோதரன் ஃபாரூக்கின் முகம் நினைவில் வந்து போனது. அவனை இந்த மதவாதிகள் துடிக்கத் துடிக்க கொலை செய்த பொழுது வெளியில் சமாதானம் பேசிக் கொண்டு, இப்படித்தானே தங்களுக்குள் ஆதரவு கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ‘முர்தத்’களை அதாவது முஹம்மதிய மதநம்பிக்கைகளைக் கைவிடுபவர்களை கொலை செய்யுமாறு குர்ஆனும் ஹதீஸ்களும் வலியுறுத்துவது நமக்கு நன்கு தெரிந்த செய்திதான்.
பொதுவாகவே முஹம்மதியத்தை மறுப்பவர்கள் மீது குர்ஆனும் ஹதீஸ்களும் வன்மத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது. அதைப்பற்றிக் கூறும் பொழுது,
 
குர்ஆன் 5:33:
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் (fasādan) செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.
 
-- இவ்வசனத்தைப்பற்றி பலமுறை பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நானும் விமர்சித்திருக்கிறேன். ஆயினும் இதை  அவ்வளவு எளிதில் என்னால் கடக்க முடியவில்லை. காரணம், முஃமின்கள் கொடுக்கும் விதவிதமான சப்பைக்கட்டுகள் மட்டுமே. முஃமின்கள் தரப்பில் இவ்வசனத்திற்கு தரப்படும் விளக்கங்களை சுருக்கமாக இப்படி வகைப்படுத்தலாம்.
 
இது வன்முறையை ஊக்குவிக்கவில்லை மாறாக குற்றவியல் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறது. அதாவது கொலை, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் மூலம் பொது அமைதியைக் குலைக்கும் நபர்களைத் தண்டிப்பது பற்றியே குறிப்பிடுகிறது.
 
தண்டனை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு மட்டுமே இருக்கிறது சட்டத்தை தனிநபர் கையிலெடுக்க முடியாது.
 
குர்ஆனின் வேறு சில வசனங்களை மேற்கோள் காண்பித்து, ஒருவர் முஸ்லிம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்வதற்கு அனுமதியில்லை. இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது இஸ்லாமிய அரசின் கடமையாகும்.
 
“…எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்…” என்று குர்ஆனின் 5:32-ம் வசனத்தை மேற்கோள் காண்பிப்பது.
 
முதலில், குற்றவியல் தண்டனைச் சட்டம் என்ற வாதத்தை கவனிப்போம். திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம், கள்ளத் தொடர்பு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தண்டனை முறைகளை குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் இந்த சிலுவையில் அறைதல், மாறுகால் மாறுகை வாங்குதல் தண்டனை குறிப்பாக எந்த குற்றத்திற்கானது?
 
அதைத்தானே பூமியில் குழப்பம் விளைவித்து அதன் அமைதியைக் குலைப்பவர்களுக்கான தண்டனையென்று குர்ஆன் கூறிவிட்டதே என்பார்கள்.
 
அதென்ன fasādan-குழப்பம்?
 
பூமியில் என்று குர்ஆன் குறிப்பிடுவது சமுதாயத்தில் என்று எடுத்துக் கொள்வோம். சமுதாயத்திற்குள் குழப்பம் ஏற்படுவதற்கு ஏற்படுவதற்குக் காரணங்கள் இருக்கிறது.
 
பசி, பஞ்சம், வறுமை, இயற்கைப் பேரிடர் போன்றவைகளாலும் சமுதாயத்தின் அமைதி குலையும். அப்பொழுது யாரைப் பிடித்து சிலுவையில் அடிப்பது? யாருடைய கையையும் காலையும் துண்டிப்பது? இந்தக் குழப்பத்திற்கு, உலகை நிர்வகிப்பவனாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்வை பிடித்து சிலுவையில் அடிக்கலாம் என்பது எனது கருத்து. ஆனால் இது முஃமின்களுக்குப் பிடிக்காது.
 
அதிகார மையத்தில் குழப்பம் ஏற்படும் பொழுதும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகள் நிலைபெறும் பொழுதும்  சமுதாயத்தில் குழப்பமான நிலை ஏற்படும். அப்பொழுது அதற்குக் காரணமானவர்களைப் பிடித்து மாறுகால் மாறுகை வாங்கிவிடலாமா? இவர்கள் கூறும் விளக்கத்தின்படி, அண்மையில் அதிகார வர்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக தூத்துக்குடியில் திரண்ட மக்களில்,  பதிமூன்று உயிர்களைக் கொன்றது சரியென்று கூறுலாம். என்ன… குறிபார்த்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதற்குப் பதிலாக, சிலுவையிலறைந்தோ மாறுகால், மாறுகை வாங்கியோ கொன்றிருந்தால் குர்ஆன் கூறும் சட்டத்தை அப்படியே நிறைவேற்றிய நன்மையாவது நமது ஆட்சியாளர்களுக்குக் கிடைத்திருக்கும். அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நல்லதொரு வாய்ப்பை இவர்கள் தவறுவிட்டுள்ளனர்.
 
குர்ஆன் 5:33 கூறுவது, கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் செயல்களினால் ஏற்படும் குழப்பமல்ல! எனவே விளக்கம் என்ற பெயரில் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்று நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதில் பொருளில்லை.
 
fasādan என்பதன் பொருள் என்ன?
 
அழித்தல், கட்டளைக்கு மாறுபடல், இணங்க மறுத்தல், அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்தல் என்று பலவிதமான பொருட்களில் fasādan என்ற பதத்தைப் பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் குர்ஆன் பயன்படுத்தியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் அல்லாஹ்வுடன் இணங்கிப் போகாத எல்லாவிதமான செயல்களுமே fasādan-குழப்பம்தான். உதாரணத்திற்கு இரண்டு குர்ஆன் வசனங்களைக் காண்போம்.
2:11. "பூமியில் குழப்பம்(tuf'sidū) செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
 
16:88 (நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம்(yuf'sidūna) செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.
 
அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க மறுப்பதால் இங்கு fasādan-குழப்பம் ஏற்படுகிறது. எனவே குர்ஆன் 5:33-ல் குறிப்பிடப்படும் குழப்பம் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க மறுத்தல் என்பதுதான். முஹம்மதுவின் தலையாய போதனை தன்னை அல்லாஹ்வின் தூதன் என்று கூறிக் கொண்டது மட்டுமே! அவரது கருத்தை மறுதலித்தவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொல்லச் சொல்லுகிறது. இவ்வளவுதான் இதற்குமேல் இதில் விவாதிக்க எதுவுமில்லை!
இரண்டு கேள்விகள்,
 
1. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் செய்தல் என்றால் என்ன?
2. தண்டனையைச் செயல்படுத்துவது யார்?
 
அல்லாஹ்வுடன் எப்படிப் போர் புரிய முடியும்? நிச்சயமாக முடியாது! ஏனென்றால் அல்லாஹ்வுடன் தொடர்பில் இருந்தது முஹம்மது மட்டும்தான். வேண்டுமானால் அவர்கள் இருவரும் போர் மட்டுமென்ன காதல், கலவியென எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். அது அவர்களது தனிப்பட்ட விஷயமென நாமும் விலகிடலாம். நான் முன்பு கூறியதுபோல முஹம்மதின் கோரிக்கையை மறுத்து அல்லாஹ்வின் பெயரால் அவர் விட்ட சரடுகளுடன் நம்மால் கருத்துப் போர் புரிய முடியும். அதைத்தான் இங்கு போர் என்று குறிப்பிடுகின்றனர். முஹம்மதுவுடன் கருத்துப் போர் புரிந்தவர்களை எவ்வாறு அன்பாக, தனது  வாள்முனையில் வருடி, அரவணைத்துச் சென்றார் என்பதை நாம் முன்பே பலமுறை விவாதித்திருக்கிறோம். முஹம்மதுவின் அடிமைகளும் அவருக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல; அவர்களின் அன்பைப்பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
 
தண்டனைகளை தீர்ப்பளித்து நிறைவேற்றும் பொறுப்பு யாரச் சார்ந்தது?
 
ஆட்சியாளர் மட்டுமே தண்டனைகளைத் தீர்ப்பளித்து செயல்படுத்த வேண்டுமென்று குர் ஆனின் எங்குமே கூறப்படவில்லை. முஹம்மதுவிற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தால் யார் வேண்டுமானாலும் தண்டனையைச் செயல்படுத்தலாமென்று அபூதாவூத் 4348, 4349 கூறுகிறது. நடைமுறை உதாரணங்களுடன் இதை பார்ப்போம். பங்களாதேசத்தில் முஹம்மதியத்திற்கு எதிராக கருத்தை இணையத்தில் பரப்பியதற்காகக் கொல்லப்பட்ட Asif Mohiuddin, Ahmed Rajib Haider, Sunnyur Rahaman, Avijit Roy, Washiqur Rahman, Ananta Bijoy Das, Niloy Chakroborty மற்றும் இன்னும் பலரும் தனிநபர்கள் மற்றும் மதவாத, அடிப்படைவாதக் குழுக்களால்தான் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரிய, ஈராக் போன்ற நாடுகளில் தண்டனைகளை அடிப்படைவாத குழுக்களே நிறைவேற்றுகின்றன! நாம் இதைப் போன்ற செய்திகளைக் குறிப்பிடும் பொழுது முஃமின்களிலிருந்து ஒரு கூட்டம் கிளர்ந்தெழுந்து, யாரோ எங்கோ செய்த தவறுகளுக்கு ஒட்டு மொத்த சமுதாயத்தையே குற்றம் சொல்வது என்ன நியாயம் என்கின்றது.
 
இதையே இவர்கள் எத்தனை காலத்திற்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்? முஹம்மதிய மதவாதக் குழுக்கள் என்பது வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல! இவர்கள் கூறும் மதத்தை துய்மையாக அதன் உண்மை வடிவில், செயல்படுத்த முயற்சிக்கும் தன்னலமற்ற அமைப்புகள். இன்னொரு உதாரணத்தைத் தருகிறேன்.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஆப்கானிஸ்தான்-காபூல் நகரில் முஃமின்களால் பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிந்துவந்த ஃபர்குந்தா (Farkhunda) என்ற 27 வயது இளம்பெண் கொல்லப்பட்டாள். காரணம், தான் பயிற்றுவிக்கும் மதரஸாவில், ஒரு முல்லாவுடன் மதம் தொடர்பாக எதையோ விவாதித்திருக்கிறார். அந்த முல்லா வெளியில் என்ன கூறினாரோ தெரியவில்லை. ஆனால் ஃபர்குந்தா குர்ஆனை எரித்து அவமானப் படுத்து விட்டார் என்ற செய்தி காபூல் நகரம் முழுவதும் பரவுகிறது. அவர் பணி புரியுமிடத்திற்கு வெளியே கூடிய பெரும் கும்பல் கூடி அந்த இளம்பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கிறது; அங்கிருந்த சொற்ப எண்ணிக்கைக் காவலர்களால் வெறிபிடித்த கூட்டத்தைக் கட்டுபடுத்த முடியவில்லை. உண்மையென்னவெனில் அவள் தண்டிக்கப்பட வேண்டுமென்றே காவலர்களும் விரும்பிருக்கின்றனர். பெயரளவிற்கு வன்முறையைத் தடுக்க முயற்சிப்பதைப் போல பாவனை செய்துவிட்டு கண்டுகொள்ளாமல் ஒதுங்கிவிட்டனர். வெறிகொண்ட கும்பல் அவள்மீது கோரத்தாண்டம் ஆடியது. அந்த அப்பாவிப் பெண் மதவெறி ஓநாய்களின் கோரப் பற்களுப் பலியானாள். இதில் மிக வேதனையான செய்தி ஃபர்குந்தா குர்ஆனை எரிக்கவில்லை என்பதுதான்.
 
அதிக விவரங்களுக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
 
 
முஃமின்கள் பெரும்பான்மையாக இருக்குமிடங்களில், மதநிந்தனையின் எதிர்விளைவு எப்படியிருக்கும் என்று இன்பதற்கு ஃபர்குந்தாவின் படுகொலை மிகச் சிறந்த உதாரணம். கொலைகாரகளில் சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் எதுவும் அந்த அபலைப்பெண்ணின் மரணத்தை ஈடுசெய்ய முடியாது.
 
இப்படுகொலையை ஆப்கான் மக்கள் எல்லோருமே ஆதரிக்கவில்லை என்பது உண்மை. அவர்கள் இக்கொலையைக் கண்டித்தனர்; வெகுண்டு எழுந்தனர்; ஊர்வலம் சென்றனர் என்பதெல்லாம் சரிதான். அதற்கு ஒரே காரணம் ஃபர்குந்தா குர்ஆனை எரிக்கவில்லை என்ற உண்மை தெளிவுபடுத்தப்பட்டதால்தான். ஒருவேளை ஃபர்குந்தா குர்ஆனை எரித்திருந்தால், மதவெறியர்களின் செயல் வெகுஜன முஹம்மதியர்களால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். ஆஃப்கான் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஹம்மதிய உலகமும் இப்படுகொலையைக் கொண்டாடியிருக்கும்! அதுதான் இஸ்லாம்! அப்பொது யார் தீர்ப்பளிக்க வேண்டும், யார் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்ற சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றாது! சட்டங்கள் என்பதும் அதற்கு தண்டனை அரசுதான் வழங்க வேண்டும் என்பதும் அதிகாரத்திலுள்ளோர் கையும் களவுமாக மாட்டும்போது மட்டுமே இவர்கள் சொல்லும் பம்மாத்துகள். இந்த குள்ள நரிகள் ஒன்று திரண்டு தாஈங்களே அடித்து, எரித்து,  வெட்டிக் கொன்றதே வரலாறு.
 
அந்த இளம் பெண் கொலை செய்யப்படும் காட்சியை கவனியுங்கள் எத்தனை குரூரம், வெறித்தனம். அந்த கும்பலுக்கும் அவளுக்கு அப்படியென்ன விரோதம்? ஒன்றுமில்லை!  நாம் இதில் கவனிக்க வேண்டியது, ஏன் இவர்கள் இப்படி? இதன் ஆணிவேர் எங்கிருக்கிறது? என்பதைத்தான். இக்கேள்விகளுக்கு ஒரே பதில் முஹம்மதுவின் கேடுகெட்ட போதனைகள்!
 
தண்டனையை ஒரு முஹம்மதிய அரசுதான் வழங்க வேண்டுமென்று இவர்கள் முன்வைக்கும் வாதங்களை இவர்களே கேலிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையே இப்படுகொலைகள் நமக்கு உணர்த்துகின்றன.  இதுபோன்ற ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் சம்பிரதாயமாக கண்டன அறிக்கைகளையும் செய்திகளை வெளியிடுவதுடன் நம்முடைய அரசியல் மற்றும் ஊடகங்களின் பணி நிறைவடைந்து விடுகிறது. இஸ்லாமி ஊடகங்கள் ஒருவரிகூட எழுதாமல் தங்களின் ஆதரவு அரிப்புகளை கள்ள மௌனத்துடன் தீர்த்துக் கொள்கிறது.
 
முஹம்மதியர்கள் மட்டுமல்ல அரசியல் மற்றும் ஊடகங்களில் எத்தனை பேர் இக்கொலைகளை உளமாறக் கண்டித்திருக்கின்றனர்? ஊடகங்களில் எத்தனை இதன் வேர்களைத் தேடிச் சென்றிருக்கிறது?  அல்லது இவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவளித்திருக்கிறது? மதங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை முன்னுரிமை?
 
உண்மையைச் சொல்லுவதென்றால் இவர்களிடமிருந்து வரும் கண்டன அறிக்கைகளில் கொலையைக் கண்டிப்பதைவிட எப்பாடுபட்டாவது குறிப்பிட்ட மதத்தின் மீது விழுகின்ற அவச் சொல்லை நீக்கும் பதட்டம் மட்டுமே அதிகமாகக் காணப்படுகிறது.
 
இனி, “ஒருவர் முஸ்லிம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்வதற்கு அனுமதியில்லை. இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது இஸ்லாமிய அரசின் கடமையாகும்” என்ற வாதத்தை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை காரணம் அனைத்தையும் ஃபர்குந்தாவின் படுகொலை தவிடு பொடியாக்கிவிட்டது.
 
மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றி குர்ஆனின் சொல்லாடல்களை சுருக்கமாகத்  தருகிறேன் விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்களுடைய குர்ஆன் வசனங்களைப் தேடிப் படித்துக் கொள்ளவும். என் மீது எரிச்சலிலும், புகைச்சலிலுமிருக்கும் முஃமின்களின் மனம் குளிர வைப்பதும் எனது கடமை. அவர்களுக்காகவும்  இந்தக் குளு குளு குர்ஆன் வசனங்கள்… …
 
 • உலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96
 • நஷ்டவாளிகள் 2:121
 • கூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171,
 • செவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171
 • குரங்குகள், பன்றிகள் 5:60,
 • குரங்குகள் 7:166
 • நாய்கள் 7:176
 • கேவலமான கால்நடைகள் 8:22
 • மிகக் கெட்ட மிருகங்கள் 8:55
 • அசுத்தமானவர்கள் 9:28
 • மிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44
 • பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2
 • அநியாயக்காரர்கள் 62:5
 • சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4
 • படைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6
 
இதற்கு மேலும் முஃமின்களின் சப்பைக்கட்டுகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது! கூடாது என்பதையே இக் குளுகுளு வசனங்கள் கூறுகின்றன. மாற்று நம்பிக்கையாளருக்கே இந்த கதியெனில் குறிப்பாக எங்களைப் போன்ற முஹம்மதிய மதத்தைக் கைவிட்ட முர்தத்களின் நிலை அந்த சமுதாயத்திற்குள் எப்படியிருக்கும், என்னவாகும்? என்பதை உங்களது கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் இப்படியெல்லாம் எழுதினால், உடனே “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்றொரு புண்ணாக்கு வசனத்தை தூக்கிக் கொண்டு சில காரியக் கோமாளிகள் வரலாம். எனக்கு நேரமில்லாத்தால் அதைப்பற்றி வேறொரு பதிவில் விளக்குகிறேன்.
 
கொலைகார மதங்கள் என்றொரு தலைப்பை வைத்துவிட்டு, ஒரேயொரு மதத்தைமட்டும் விமர்சித்துக் கொண்டிருக்கிறானே, திரூரில் நிகழ்ந்த கொலையைப்பற்றி துவங்கி எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறானே இவனென்ன “லூஸா” என்று உங்கள் மனதின் ஓரத்தில் எழும் குரல் எனக்குக் கேட்காமலில்லை!.
 
தொடரும்…
தஜ்ஜால்
+++++++++++++++++++++++
கொலைகார மதங்கள்-2
++++++++++++++++++++++++++
Coming soon
++++++++++++++++++++

Monday 16 April 2018

ஆதாமின் மருமகள்


ஆதாமின் மருமகள்
அண்மையில் முகநூல் விவாத மொன்றில், தங்கையை அனுபவிப்பதற்கு தனிமனித சுதந்தரத்தில் எந்ததடையும் இல்லையாமே?" என்றும் நீ பென்(ண்) உரிமை பற்றி பேசுகின்றாய் மனிதனுக்குள் உறவுமுறை இறைவன் ஏற்படுத்தியது நாஸ்த்தீவாதிக்கித்தான் எதுவும் இல்லையே; தாயும் சேயும் உங்களுக்கு ஒன்றுதானப்பா நீ ஏன் பென்னுரிமை(பெண்ணுரிமை) பற்றி யோசிக்கற தம்பிஎன்றும் முஹம்மதிய அடிமைகள் கேள்வியை எழுப்பியிருந்தனர். இதில் இக்கேள்வியின் கருத்துகள் உள்முரண்பாடானது என்று எளிதாக எங்களால் நிராகரிக்க முடியும். இருப்பினும் மதப்புரோகிதர்களால் மூளை சலவை செய்யப்பட்ட சிந்திக்கத் மறுக்கின்ற அப்பாவி முஃமின்களை மீட்டெடுக்க முயற்சியாகவே இப்பதிவை எழுதுகிறேன்.
இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலர் இதுபோல போகிறபோக்கில் சேற்றைவாரி இறைமறுப்பாளர்கள் மீதுவீசியெறிந்து தங்களுக்குள் சுய இன்பம் அடைந்து கொள்வதும் புதிதல்ல. விவாதங்களில் அவர்கள் முட்டுச்சந்தில் சிக்கிக்கொள்ளும் பொழுது அவர்களிடமிருந்து இத்தகைய தாக்குதல்கள் வெளிப்படுவதும், கடவுள் படைத்த முதல் இணையர்களாக அவர்கள் கருதும், ஆதாம்-ஏவாளிலிருந்து மனித குலம் எப்படிப் பல்கிப் பெருகியது என்ற எதி ர்கேள்விக்கு, மழுப்பலான பதில்களுடன் அவர்கள் கடந்து விடுவது வாடிக்கை. நம்முடைய முஃமின்களின் கேள்விக்கு விரிவான பதிலைக் காண்பதற்கு முன்,
ஆப்ரஹாமிய மதங்கள் கூறும் ஆதாம்-ஹவ்வாவிலிருந்து மனித குலம் எப்படிப் பெருகியது என்பதைக் கவனிப்போம்.
ஆதாமின் இரு மகன்களான, ஹாபீல்-காபீல் (ஆபேல்-காயீன்) இருவரும் கடவுளுக்கு பலி செலுத்திய விவகாரத்தில் காபீல், ஹாபீலைக் கொலை செய்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 4:4-9;குர்ஆன் 5:27-31) ஆனால் இவர்களின் தலைமுறை எப்படிப் பெருகியது என்ற கேள்விக்கு, இவற்றை வலியுறுத்தி போதிக்கும் பைபிள் பழையஏற்பாடு மற்றும் குர்ஆனில் பதில் இல்லை.
ஏன்இல்லை?
ஆசரிப்புக் கூடாரமும், பலிபீடமும், விதவிதமான பலிகளையும், அதை நிறைவேற்றும் சடங்கு முறைகளையும், பலி மிருகங்களின் கொழுப்பையும் குண்டிக் காய்களையும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று விலாவாரியாக சொன்ன கர்த்தருக்கும்; முஹம்மதிற்கு, ஆண்மை விருத்தி லேகியம் தயார் செய்யவும், அவருக்கும் விதவிதமாக மனைவிகளையும் அடிமைப் பெண்களையும் வழங்கி, விந்தை எங்கு எப்படிச் செலுத்த வேண்டுமென்று வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அல்லக்கை அல்லாஹ்விற்கும், ஆதாமின் தலைமுறை எவ்வாறு பெருகியது என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஏனோ வெட்கப்படுகின்றனர்.
சரி, ஆதமின் மகன்கள் இருவரும் எதற்காகப் பலிசெலுத்த சென்றனர்?
சுருக்கமாக, The History of al-Tabari, Volume I, page 307-314,
இமாம் தபரி ஒரு சிறு அறிமுகம் :
முஹம்மதின் மரணத்திற்கு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு முஹம்மதியம் அதிகார-ஆடம்பர போட்டிகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த வேளையில் முல்லாக்களும் தங்களது பங்கிற்கு அதிகாரப் போட்டியில் பங்கெடுத்தனர். வாட்களால் பேசிக் கொண்டிருந்த அன்றைய அதிகார வர்க்கத்தை அடக்கியாள மதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தனர். அதிகார வர்க்கத்தையும்  அப்பாவி வெகுமக்களையும் முஹம்மது மற்றும் அல்லாஹ்வின் பெயரால் மீண்டும் பயமுறுத்தினர். குர்ஆனைக் கொண்டு எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்பதால் சுன்னாஎனப்படும்  முஹம்மதின் சொல் செயல்களுக்கு புத்துயிரூட்டி, அவற்றை ஹதீஸ்கள் என்ற பெயரில் அவற்றைத் தொகுக்கத் துவங்கினர்.
ஹதீஸ் தொகுப்பில் பலர் ஈடுபட்டனர். இதில் தங்களுக்குக் கிடைத்த செய்திகளில் பாதகமானவைகளை வடிகட்டித் தொகுத்தவர்களும் கிடைத்த செய்திகளை அப்படியே தொகுத்தவர்களும் அடங்குவர். இமாம் தபரி என்றறியப்படும் அபூ ஜாஃபர் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி (CE 839-923)இரண்டாம் வகையச் சேர்ந்தவர். அவர் தனக்குக் கிடைத்த பலதரப்பட்ட கருத்துக்களை அப்படியே தொகுத்ததுடன் முடிவாக தன்னுடைய தனிப்பட்ட கருத்தையும் கூறுகிறார். தஃப்ஸீர் அல்-தபரியை வாசித்தவர்களுக்கு நான் சொல்வது எளிதில் விளங்கும்.  ஆய்வு நோக்கில் முஹம்மதியத்தை நெருங்குபவர்களுக்கு  இமாம் தபரியின் தொகுப்புகள் ஒரு வரப்பிரசாதம். படைப்பின் துவக்கதிலிருந்து சற்றேறக்குறைய தன்னுடைய காலம் வரை இருந்த முஹம்மதிய வரலாற்றை 40 பாகங்களாக தொகுத்திருக்கிறார்.
CE 839-ம் ஆண்டு, அபூ ஜாஃபர் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி தபரிஸ்தானில் உள்ள அமுல் என்ற நகரில் பிறந்தார். கல்விக்காக இன்றைய தெஹ்ரான், பாக்தாத், பஸ்ரா, கூஃபா, பெய்ரூட், சிரியா, எகிப்து,  என்று பல இடங்களுக்கும் பயணம் செய்தவர். கடைசிவரைக்கும் திருமண வாழ்க்கையில் டுபடவேயில்லை.
The History of al-Tabari, Volume I, page 307-314_லிருந்து சுருக்கமாக,
ஆதாம்-ஹவ்வா இணையர்களுக்கு, ஒவ்வொரு பிரசவத்திலும் ஒரு ஆண் குழந்தையுடன் ஒருபெண் குழந்தையும் பிறந்தது. அவ்வாறு ஒரு பிரசவத்தில் பிறந்த மகனுக்கு மற்ற பிரசவத்தில் பிறந்த ஒரு சகோதரியை திருமணம்(?) செய்து வைப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். அதுபோல் ஆதாமிற்கு ஹாபீல், காபீல் என்ற இரு ஆண் குழந்தைகள் இரு பெண் குழந்தைகள் இரட்டையர்களாப் பிறந்தனர். காபீல் உழவுத் தொழில் செய்பவனாகவும் ஹாபீல் கால்நடைகளை மேய்ப்பவனாகவும் இருந்தனர். காபீல் இருவரை விடப் பெரியவன். காபீலின் (அவனுடன் பிறந்த) சகோதரி ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட அழகானவள். யார் வேண்டுமானாலும் எந்த சகோதரியையும் திருமணம் செய்து கொள்ளலாம் அவனுடன் இரட்டையர்களாகப் பிறந்த குறிப்பிட்ட அந்த சகோதரியைத் தவிர என்றொரு நடைமுறையை தனது குடும்பத்தில் செயல்படுத்துபவராக ஆதாம் இருந்தார். எனவே ஹாபீலுடன் பிறந்த பெண்ணை காபீலுக்கும், காபீலுடன் பிறந்த பெண்ணை ஹாபீலுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இதை காபீல் ஏற்கவில்லை. காரணம் ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட, தன்னுடன் பிறந்த சகோதரியே தனக்கு மிகவும் பொருத்தமானவளாக இருப்பாள் என காபீல் நினைத்தான்.  காபீலிடம், உன்னுடன் இரட்டையராகப் பிறந்த உனது சகோதரி உனக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல என்று ஆதம் கூறுகிறார். இதை காபீல் ஏற்கமறுக்கிறான். இவ்விவகாரத்திற்கு சரியான முடிவை எட்டுவதற்காக ஆதாம், மகன்கள் இருவரையும் அழைத்து கடவுளுக்கு பலி செலுத்தும் போட்டியை வைக்கிறார்.  இதில் ஹாபீல் கால்நடை மேய்ப்பவன், காபீல் உழவுத் தொழில் செய்பவன். இவரும் அவரவர் வசம் இருக்கும் நல்ல பொருட்களைக் கடவுளுக்குக் கொடுத்து அழகிய சகோதரியை அடைய நினைக்கின்றனர்.


காபீல், தன்னிடமிருந்த விளைந்த கதிர்களையும், ஹாபீல் கால்நடைகளில் இளம் கன்றுகளை வைத்தும் பலிசெலுத்துகின்றனர். பாவம் காபீல்! அல்லாஹ்/கர்த்தர் இரத்த வெறிபிடித்த கடவுள் என்பதை அவன் அறியவில்லை. இரத்த பலியை ஏற்றுக்கொண்டு, காபீலின் விளைந்த கதிர்களை கடவுள் நிராகரிக்கிறான். இதனால் பொறாமை கொண்டு கோபமடைந்த காபீல், ஹாபீலுடன் தனிமையில் இருக்கும் நேரம்பார்த்து, தலையில் தாக்கி கொன்று விடுகிறான். ஆடை கலைந்து வெட்கத்தலங்கள் வெளியான நிலையில் இறந்து கிடக்கும் ஹாபீலின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.

ஆதாமின் குடும்பத்தில் இருந்த திருமண(!) நடைமுறையும், கடவுளுக்குப் பலி செலுத்தும் போட்டியும் நிச்சயமாக அல்லாஹ்வினால் பயிற்றுவிக்கப் பட்டதாகவே இருக்க முடியும். காரணம் ஆதாம் ஒரு களிமண். அதற்கு எந்த அறிவும் கிடையாது பொருட்களின் பெயர்களைக்கூட அல்லாஹ் கற்பித்துக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. (நான் அல்லாஹ் என்று மட்டும் குறிப்பிடுவதால் கர்த்தரை விசுவாசிப்பவர்கள், நமது கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று வருத்தம் கொள்ளக் கூடாது. அவர்கள்அல்லாஹ் என்பதற்குப் பதிலாக கர்த்தர் என்று அந்தந்த இடங்களில் திருத்தி வாசித்துக் கொள்ளவும்)
ஆதாமிற்கே சுயமாக சிந்திக்கும் அறிவில்லை எனும் பொழுது அவனிருந்து தோன்றிய ஹவ்வாவிற்கும் அவர்களிலிருந்து தோன்றிய வாரிசுகளுக்கும் அதே நிலைமைதான் என்பது தெளிவு. ஒருவரின் அறிவு என்பது சமுதாய அனுபவங்களிலிருந்து பெறப்படுவது. ஆதாம் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொருத்தவரையில்  அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அல்லாஹ் மட்டுமே. அதனால் அவர்களின் அறிவாற்றலைப் பற்றி மேலும் கூறத்தேவையில்லை.
ஹாபீலின் உடலை போட்டுவிட்டு காபீல் ஓடும்வரை ஹூரிகளின் நினைவில் மயங்கிக் கிடந்தானோ என்னவோ தெரியவில்லை, டொட்டொடைங்ய்ங் என்ற பின்னணி இசையுடன் “யு ஆர் அண்டர் அரெஸ்ட்!” என்று பழைய திரைக்கதைகளின் முடிவில் வரும் காவல்காரர்களைப் போல அல்லாஹ்வும் வருகிறான். காபீலால் கொலை செய்யப்பட்ட ஹாபீலின் உடலை மறைப்பது எப்படியென்பதை ஒருகாகத்தை அனுப்பி வகுப்பெடுக்கிறான் (குர்ஆன் 5:31).  இதன் மூலம் அல்லாஹ்வின் வழிமுறையை மனிதனுக்குக் கற்பித்த முறையில் காகம் என்ற பறவையும் முஹம்மதியத்தில் இரண்டாவதாக வந்த இறைத் தூதராகிறது. முஹம்மதியத்தைப் பொருத்தவரையில் சவ அடக்கமென்பது மிகக் கண்ணியமான வழிபாடு. இவர்களின் ஒரு சவ அடக்கத்தை அருகிலிருந்து கவனித்திருந்தால் நான் கூறுவதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இறந்த உடலில் உயிர் அல்லது ஆன்மா மட்டும்தான் இல்லை. மற்றபடி அப்பிணத்திற்கு அனைத்து உணர்வும் இருக்கு மென்பது முஹம்மதிய ஐதீகம். உ
உயிர் இல்லாத உடலில் ஐம்புலன்களின் உணர்வுகள், பேச்சுக்கள், சிந்தனைகள் அனைத்தும் இருக்கும் என்பது முஹம்மதிய அறிவியல். அது மட்டுமல்ல மனிதனின் நிலையான, உண்மையான வாழ்க்கை பிணமான பின்புதான் துவங்குகிறதென்பது முஹம்மதியத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. இத்தகைய மாபெரும் வாழ்கையின் துவக்கத்தை முதன்முதலில் மனித இனத்திற்குக் கற்பித்துக்கொடுக்க வந்த காகம்நபி(அலை) அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஹாபீல், காபீல் சிலை வணக்கம் செய்ததையும் அதனால்தான் இந்துக்கள் காகத்திற்கு பிண்டம் போடுகிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அல்லாஹ், காபீல் மற்றும், காகம்நபி(அலை) அவர்களும் சேர்ந்து ஒரு வழியாக ஹாபீலின் பிணத்தை பூமியில் குழிதோண்டி புதைத்து விடுகின்றனர். இன்றும் காகம்நபி(அலை) அவர்கள் கற்பித்துக் கொடுத்த சுன்னாவைப் பின்பற்றியே இன்றும் முஹம்மதியர்கள் சவ அடக்கம் செய்கின்றனர். அதோடு தன் கடமை பணி செய்து கிடப்பதே என்று அல்லாஹ் மீண்டும் ஹூரிகளைக் காணச் சென்று விட்டான்.
ஆனால் கர்த்தருக்கு கோபம் தீரவில்லை, தனக்கு முதன் முதலாக பர்பிக்யூ உணவைக் கொடுத்தவனைக் கொன்று விட்டானே என்ற கோபம்.  காபீலை நோக்கி, “நீ நிலத்தைப் பயிரிடும் போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய்என்றுச பிக்கிறார். “பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டு பிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானேஎன்று காபீல் புலம்பினான். காபீலைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழுபழி சுமரும் என்று சொல்லி, கர்த்தர் தன் சாயலாகவே அவனைப் படைத்துவிட்டதால் இரக்கம் கொண்டு காபீலைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக்கொன்று போடாதபடிக்குக் ஒரு அடையாளத்தைப் போட்டார். அங்கிருந்து வெளியேறிய காபீல் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள் என்று கூறி பைபிள் பழைய ஏற்பாடு அவனது கதையை நிறைவுக்குக் கொண்டு வருகிறது (ஆதியாகமம் 4:11-17).
அன்றைய கதை சொல்லிகள் உழவர்களின் அவல நிலைக்கு காரணமாக, காபீலின் மீதான சாபத்தையும் அல்லாஹ் நெற்கதிரை பலியாக ஏற்காததையும் கொண்டு வடிவமைத்திருக்கலாம் என்பதை நான் சொல்லாமலேயே யூகித்திருப்பீகள் என நினைக்கிறேன்.
இந்த செய்தியை சற்று வெவ்வேறு வடிவங்களில் தபரி குறிப்பிடுகிறார். தபரி தரும் இவ்விளக்கத்தை ஆபிரஹாபிய முஃமின்கள் ஏற்கமாட்டார்கள். இதுபொய்; இட்டுக் கட்டப்பட்டது; அறிப்பாளர் வரிசை குறைபாடுடையது; அறிவிப்பாளருக்கு உடல்நிலை சரியில்லை; சளி பிடித்திருந்தது; வயிற்றுப் போக்கு இருந்தது; அறிவிப்பாளரின் தாடிமயிரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது; கோள் மூட்டி விடுபவர்களாக இருந்தனர்; பொய்யுரைப்பவராக இருந்தனர்; குர்ஆனுக்கு முரண்படுகிறது; குர்ஆனைவிட விரிவாக செய்திகளைக் கூறுவதால் ஏற்க முடியாது என்றெல்லாம் மறுக்கலாம். பொய்யான செய்திகளைக் கொண்டு விவாதிப்பதால் இதற்கு பதிலளிக்கத் தேவையில்லை என்றும் நழுவலாம். அவர்களிடம் நாம் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், இவை இறை மறுப்பாளர்களாகிய எங்களது கைச்சரக்குகள் அல்ல. உங்களது நம்பிக்கைகளில் பற்றுகொண்ட மனிதர்கள் எழுதிவைத் திருப்பவைகள்; அன்றைய முஃமின்களிடையே இருந்த நம்பிக்கைகளைத்தான் தபரி தொகுத்துத் தருகிறார். அன்றைய முஃமின்களிடம் இத்தகைய நம்பிக்கைகள் இருந்ததேயில்லை என்று நினைப்பவர்கள் அதற்கான ஆதரங்களைத் தரலாம். மதவாதிகள் போற்றிப் புகழும் புனிதர்களின் கதைகள்மன்னிக்கவும்! வரலாறுகளும் இதேபோன்ற அன்றைய மக்களின் நம்பிக்கைகள்தான்.
நம்முடைய விவாதத்திற்கு, அன்றைய மக்களிடையே நிலவிலிருந்த நம்பிக்கைகளைத் தபரி எழுதியிருக்கிறார் என்றளவில் முடித்துக் கொள்ள முடியும்; ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. அன்றைய ஆப்ரஹாமிய அடிமைகள் இவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு ஏதாவது ஒரு தொடக்கம் இருக்கவேண்டுமே? நம்மிடைய இன்று புழக்கத்தில் இருக்கும் பழையஏற்பாடு ஆதியாகமமத்தின் மற்றொருவடிவமான “The book of Jubilees”-ல் இதற்கானப் பதில் இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் இருப்பினும் சிறு அறிமுகம்,

The book of Jubilees என்ற இத் தொகுப்பு 50 அதிகாரங்களைக்கொண்ட, பழம் பெரும் எத்தியோப்பிய யூதர்களின் நூலாகும். சிறிய ஆதியாகமம் என்றும் அழைக்கப்படுகிறது. கிபி 1947-1956-ல், West Bank, Qumran பகுதியிலுள்ள 12 குகைகளிலிருந்து ஹிப்ரு மொழியில் எழுதப்பட்ட 980திற்கும் மேற்பட்ட சுருள்களும், 50,000-க்கும் மேற்பட்ட பைப்ரஸ் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டது. Dead sea scrolls என்றயப்படும் இக்கையெழுத்துப் பிரதிகளில் சுமார் 230 சுருள்கள் இன்றைய பழைய ஏற்பாட்டிலுள்ள செய்திகளையும், சுமார் 15 சுருள்களில் பழைய ஏற்பாட்டில் இல்லாத செய்திகளைக் கூறுகிறது. இந்த 15 சுருள்கள் The book of Jubilees செய்திகளுடன் பொருந்துகிறது. இக் கையெழுத்துப் பிரதிகளின் காலம் கி.மு.இரண்டாம்நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தையதாக இருக்கலாமென்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.மோஸே, சினாய் மலையில் நாற்பது இரவு-பகல் இருந்தபொழுது கடவுளின் கட்டளைப்படி ஒரு தேவதூதனால் மோஸேவிற்குக் கற்பிக்கப்பட்டதாக துவங்குகிறது. அதாவது முஹம்மதிய முறையில் தேவதூதன் வழியாக வெளிப்பாடுகள் கொடுக்கப்பட்டதாகத் துவங்குகிறது (முஹம்மதியர்கள் மகிழ்ச்சியாக தாடியைக் கோதிவிட்டு, சட்டைக் காலரையும் தூக்கி விட்டுக்கொள்ளலாம்) 7 x 7 என்ற முறையில் வாரங்களாக, 49 வருடங்களாகப் (Jubilee) பிரித்து கதை சொல்லப் பட்டிருக்கிறது. பெரும்பாலும் பைபிள் பழைய ஏற்பாட்டுடன் பொருந்திப் போவதுடன், அதில் கூறப்படும் கதைகளுக்கு மேலதிக விபரங்களையும் கூறுகிறது. பைபிள் தொகுப்பில் மட்டுமல்ல அவர்களது பிரச்சாரங்களிலும் திட்டமிட்டு தவிர்க்கப்படும் செய்திகளிலிருந்து நமக்குத் தேவையான பகுதிகள்
27. And He said to the angel of the presence:  "Write for Moses from the beginning of creation till my sanctuary has been built among them for all eternity.
****
IV. Cain and Abel
1 And in the third week in the second jubilee she gave birth to Cain, and in the fourth she gave birth to Abel, and in the fifth she gave birth to her daughter ’Âwân.
8. And in the sixth week he begat his daughter ‘Azûrâ.
 9. And Cain took ’Âwân his sister to be his wife and she bare him Enoch at the close of the fourth jubilee.
(According to R. Eliezer, Cain's wife was his twin-sister.)
10. And Adam knew Eve his wife and she bare yet nine sons.
11. And in the fifth week of the fifth jubilee Seth took ‘Azûrâ his sister to be his wife, and in the fourth (year of the sixth week) she bare him Enos.
12. He began to call on the name of the Lord on the earth.
13. And in the seventh jubilee in the third week Enos took Nôâm his sister to be his wife, and she bare him a son in the third year of the fifth week, and he called his name Kenan.
14. And at the close of the eighth jubilee Kenan took Mûalêlêth his sister to be his wife, and she bare him a son in the ninth jubilee, in the first week in the third year of this week, and he called his name Mahalalel.
காபீல் மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைகளும் அவரவர் சகோதரிகளுடன் இணைந்தே சந்தியைப் பெருக்குகிறது. (பின்னால் திருத்தி எழுத்தப்பட்ட) மதப் புத்தகங்கள் மட்டும் இல்லையெனில், மனிதர்கள், தாய்-சகோதரி என்ற வேறுபாடின்றி அனைவரையும் புணர்ந்து கொண்டு திரிவர் என்று ஓலமிடும் ஆபிரஹாமிய மதவாதிகள், அவர்களது கடவுளின் இந்த முறைமைகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
ஆதியாகமம் 35, 49, லேவியராகமம் 18,20, உபாகமம் 27, எசேக்கியேல் 22 என பல அத்தியாங்களில் யாரையெல்லாம் நிர்வாணமாக்கலாகாஎன்று பைபிள் கூறிவிட்டதே என்றும் வேறு மனிதர்களோ வாய்ப்புகளோ இல்லாதகாரணத்தினால் இப்படியான நடைமுறைகளை அல்லாஹ்/கர்த்தர் அனுமதித்திருந்தான் என்றும் பிற்காலத்தில் மனித குலம் பெருகியதும் புதிய நடைமுறைகளைச் செயல்படுத்தினான் என்பது ஒருபதிலாக இருக்க முடியாது.
உடன் பிறந்த சகோதர உறவுகளுக்குள் பாலியல் உறவு கொள்வது தவறென்பதாக கடவுள் முன்னமே கருதியிருந்தால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அவன் முன்னமே செய்வதுதானே சரியாக இருந்திருக்கும்? ஆனால் அவ்வாறில்லாமல் முறையற்ற உறவுகள் மூலம் மனித குலத்தை பெருக்குவது ஒன்றே கடவுளின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதே இவர்களது புனித புத்தகங்கள் நமக்கு கூறும்செய்தி. இது இத்துடன் முடியாமல் பலநூறு ஆண்டுகளுக்கு தொடர்கிறது. உதாரணத்திற்கு, நோவா அவனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் மருமகள் என எட்டு நபர்களிலிருந்து மீண்டும் மனித உற்பத்தியானதையும் (ஆதியாகமம் 8:18, 9:1) அதன் பிறகு வந்த லோத்தும் அவனது மகள்களும் புணர்ந்து வாரிசுகளை உற்பத்தி செய்ததையும் (ஆதியாகமம் 19:30-38), தவறென்பதாக பைபிள் எவ்விடத்திலும் குறிப்பிடவேயில்லை. (சரி, லோத்தின் மகள்களுக்குள் அப்படியொரு எண்ணத்தை விதைத்த்துயார்?) இவ்விவகாரங்களைப்பற்றி குர்ஆன் 2:89, 2:97, 2:101, 3:3, 5:48 வசனங்களில் முந்திய வேதங்களை மெய்ப்படுத்துவதன் மூலம் அமைதியாக ஒப்புக் கொள்கிறது. ஆப்ரஹாமிய நம்பிக்கைகளில் பெரிதும் போற்றப்படும் ஆப்ரஹாமும் அவனது மனைவி சாராளும் ஒரேதகப்பனின் வெவ்வேறு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள்தான் (ஆதியாகமம்20:12).
லேவியராகமம் 18:9
உன்தகப்பனுக்காவது உன்தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
என்று கட்டளையிட்ட கர்த்தர், ஆப்ரஹாம் சாராளை நிர்வாணமாக்கும் பொழுது அமைதியாக இருந்ததேன்? ஆப்ரஹாமின் காலத்தில் வேறுபெண்களே இல்லையா?
நடக்கமாட்டதவன் சித்தப்பன் வீட்டிலிருந்து பெண் எடுத்தானாம்!” என்றொரு பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் அதற்கு மிகச்சரியான உதாரணம் நம்முடைய முஃமின்கள்தான். நாம் மேற்கண்ட லேவியராகமம் 18:9_ன் கட்டளையை, கண்ணுமணி தனது தேவைகளுக்கேற்ப மறுபடியும் மாற்றிக் கொண்டார். உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளுக்கிடையே அதாவது சிற்றப்பா சின்னம்மா குழந்தைகளுக்கிடையே திருமண உறவென்பது முஹம்மதை அடி பிறழாமல் பின்பற்றும் முஃமின்களிடையே இன்றும் வழக்கிலிருப்பதுதான்.  இது எங்களது கண்ணுமணி பொண்ணுமணியின் பாரம்பரியம் என்று மிகநெருங்கிய சகோதர இரத்த உறவுகளுக்கிடையே திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  இதற்கு உதாரணங்களை, முஹம்மதுவின் இரகசியக் காதலிகள் உம்முஹானி, கவ்லா மற்றும் அலீ-ஃபாத்திமா என நிறைய உதாரணங்களை அவர்களது வரலாற்றிலிருந்தே காண்பிக்க முடியும்.
இவர்களின் கதை இப்படியென்றால் சநாதன தர்மம் என்று பீற்றிக் கொள்ளும் இந்து மதத்தில் கூறப்படும் கடவுளர்களின் ஒழுக்கக் கேடுகளையும், அந்நிய பெண்களை அடைவதற்காக இவர்கள் நிகழ்த்திய  காம வெறியாட்டங்களையும், இது போதாதென்று புத்ரோ உற்பத்திக்காகப்  புண்ணி ஆத்மாக்களென்று போற்றப்படும் ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் நிகழ்த்திய ஒழுக்கக் கேடுகளையும்  நினைத்தாலே அருவெறுப்பில் உடலெல்லாம் கூசுகிறது. நாம் இவற்றை விவாதிக்கத் துவங்கினால் இவைகள் மட்டுமே பல பதிவுகளாகிவிடும். மேலும் இவற்றைப்பற்றி தந்தைப் பெரியார் அவர்கள் மிகவிளக்கமாக 100 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துவிட்டார்.
தாயின் உடன் பிறந்த சகோதரனை அதாவது தாய் மாமனைத் திருமணம் செய்வது இந்து மத வழக்கம். உடன் பிறந்தவர்களின் குழந்தைகளுக்கிடையே திருமணமென்பது முஹம்மதின் வழிமுறை. இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் எள்ளி நகையாடுவது  வேடிக்கை. நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமண உறவு வேண்டாமென்பதுதான் மருத்துவ அறிவியல் கூறும் செய்தி.
தாய் மாமனைத் திருமணம் செய்யும் வழக்குடையவர்கள் சிறுவயது முதலே அந்த உறவு முறையைச் சொல்லி வளர்க்கப்படுகின்றனர்; அவர்கள் மனரீதியாக அதற்கு தயாராகவும் ஆகிவிடுகின்றனர்; ஆனால் சிறுவயது முதலே சகோதர உறவைச் சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளை, வளர்ந்தவுடன் திருமண உறவிற்குள் தள்ளிவிடும் முஃமின்களை என்னவென்று சொல்வது?
சரிநாம் முஃமின்களின் கேள்விக்கு வருவோம்.
தங்கையை அனுபவிப்பதற்கு தனிமனிதசுதந்தரத்தில் எந்ததடையும் இல்லையாமே?"
நீ பென்(ண்) உரிமைபற்றி பேசுகின்றாய் மனிதனுக்குள் உறவுமுறை இறைவன் ஏற்படுத்தியது; நாஸ்த்தீவாதிக்கித்தான் எதுவும் இல்லையே! தாயும் சேயும் உங்களுக்கு ஒன்றுதானப்பா; நீ ஏன் பென்னுரிமை (பெண்ணுரிமை) பற்றி யோசிக்கற தம்பி
உண்மையில் இவர்களுக்கு அவர்களது மதத்தைப் பற்றியும் தெரியாது; இறை மறுப்பாளர்களைப் பற்றியும் தெரியாது. மதப் பரப்புரைகளில் முல்லாக்கள் முழம் போடுவதை மட்டுமே உண்மையென நம்பி, நம்மிடம் அதையே அளந்து காண்பிக்கின்றனர். தங்களிடம் இருப்பது போல தீர்க்கதரிசிகளும் வழிகாட்டும் புத்தங்களும் இல்லாமல் எப்படிவாழ முடியுமென்று நினைக்கின்றனர். இறை மறுப்பாளர்கள் என்றால் முஃமின்களது செயல்பாடுகளுக்கு, வழமைகளுக்கு எதிராக அனைத்து விதத்திலும் செயல்படக் கூடியவர்கள் என்ற உளறல்களை உண்மையெனக் கொள்கின்றனர். யூதர்களுக்கு மாறு செய்யுங்கள், கிருஸ்தவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்ற மனநோயாளி முஹம்மதுவின் சிந்தனைகள் பாரம்பரியமாக முல்லாக்களால் கடத்தப்படுவதுதான் இதற்குக் காரணம். அதே கண்ணோட்டத்தில் நம்மையும் காண்கின்றனர்.  நல்ல வாய்ப்பாக முஹம்மது, “யூதர்கள் வாயினால் உணவருந்துகிறார்கள் அதற்கும் நீங்கள் மாறு செய்யுங்களென்று போதிக்கவில்லை; இல்லையெனில் முஃமின்களின் பாடு திண்டாட்டமாகப் போயிருக்கும்.
தன்னைக் கடவுளின் தூதனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மாற்று நம்பிக்கையிலிருந்தவர்கள் மீது திடீர்த் தாக்குதல்கள் நிகழ்த்தி, கொலை, கொள்ளை, சூறையாடல்கள் இன அழிப்பு செய்து, பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றிய ஒரு வெறியனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் கும்பல்களுக்கு மனித நேயத்தை வலியுறுத்தும் இறை மறுப்பாளர்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.
டெல்லியில் 9 வயதே நிரம்பிய சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், இலங்கை ஏறாவூரில் 13 வயது சிறுவனிடம் இந்திரிய ஆராய்ச்சி செய்து அவனது குறிகளை வீங்கிப் போகச் செய்ததும், தாருன் நுஸ்ரா மதரஸாவில் 18 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டதும் மதக் கல்வியைப் போதிக்கும் மதரஸா ஆசிரியர்களால்தான். இவர்களின் கதை இப்படியென்றால் கிருஸ்தவ மதபோதகர்களின் ஒழுக்கம், போப் பகிரங்க மன்னிப்பு கேட்குமளவிற்கு உலகப் புகழ்பெற்றது.
ஆசிஃபாவை கொடுஞ் சித்திரவதை செய்து
வன்புணர்வு கொண்டு கொலை செய்த
மதவெறியர்களுக்கு   ஆதரவாக
தேசியக் கொடியேந்தி செல்லும்
ஊர்வலம்.
நாங்களும் சளைத்தவர்களல்ல என்கின்றனர் இத்துதுவ மதவெறியர்கள். கடந்த ஜனவரி 10 தேதி குதிரை மேய்க்கச் சென்ற எட்டு வயது கூட நிறைவடையாத ஆஸிஃபா என்ற சிறுமியைக் கடத்தி, கோவில் கருவறையில் வைத்து 8 நாட்களுக்கு கூட்டு வன்புணர்வு செய்து கொல்வதும்,  அக்கொலைக்கு இந்து மதப்பற்றை காரணமாகக்கூறி, நியாயப்படுத்தி, ஊர்வலமாகச் சென்ற மிருகங்களையும் மனிதாபிமானமற்ற இக்கொடூரச் செயலை மதத்தின் பெயரால், சார்ந்திருக்கும் இயக்கத்தின் பெயரால் ஆதரிக்கும் மதவெறியர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை .சிறுமி ஆஸிஃபாவின் விவகாரத்தில் மட்டுமல்ல, அரியலூர் நந்தினியை தனது நண்பர்களுடன் கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற மணிகண்டனும் சநாதன தர்மத்தை நிலை நிறுத்த போரடிய/ போராடிக் கொண்டிருக்கும் ஒரு இந்துத்துவ போராளிதான்.
நடைமுறை வாழ்வில் மதம் மற்றும் மதவாதிகள் கற்பிக்கும்ஒழுக்கத்திற்கு, சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும், மண்ணடி மகா சந்நிதானம், நித்தியானந்தம் போன்ற மதகுருமார்களின் 18+ ஆடியோ-விடியோக்கள் மேலும் சில ஆதரங்கள். இத்தகைய ஒழுக்க சீலர்களுக்கு இறை மறுப்பாளர்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்றும் எளிதாக இப்பதிவை முடித்துக் கொள்ளலாம் ஆனால் விவாதமுறையில் இது “Quoque fallacy” என்றாகிவிடும். எனவே நாம் விவாதத்தைத் தொடருவோம்.
ஆறுவயது பெண் குழந்தையைக்கூட இச்சையுடன் கண்ட ஒருமன நோயாளியின் தலைமையில், பெண்களைக் கழுதையாக, கால்நடையாக, விளை நிலமாகவும், அடிமையாக மொத்தத்தில் உயிருள்ள ஒரு உடைமையாக மட்டுமே காண்பதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்து வருபவர்களால் இப்படித்தான் சிந்திக்கமுடியும். நோய்வாய்ப்பட்ட தங்களது சிந்தனையைக் கொண்டு இறை மறுப்பாளர்களைக் காண்பதுடன், நம்மை மடக்குவதாக நினைத்து இப்படியொரு கேள்வியை முன்வைக்கின்றனர்.
ஆனால் அவர்களையும் அறியாமல், இரண்டு கேள்விகளிலும் இறை மறுப்பாளர்கள் தனிமனித சுதந்திரத்தையும், பெண்ணுரிமையைப் பேணுகிறவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆம்! இறை மறுப்பாளர்களாகிய நாங்கள் தனிமனித சுதந்திரத்தையும் பெண்ணுரிமை மட்டுமல்ல பகுத்தறிவையும், அறிவியல் சிந்தனையையும் ஆதரிப்பவர்கள்; அதைக் கொள்கையாகக் கொண்டவர்கள் .மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவுகொள்வதைக் கூட வன்புணர்ச்சியாகக் கருதுவதுதான் தனிமனித சுதந்திரத்தின் நிலை. கணவன் படுக்கைக்கு அழைத்தால் விருப்பமே இல்லையெனினும், சமைப்பதைக்கூட அடுப்பில் அப்படி விட்டுவிட்டு ஓடோடிச் சென்று அவனது இச்சையைத் தீர்த்து வைப்பதே மனைவின் கடமையென்று போதிக்கும் மதவாதிகளால் தனிமனித சுதந்திரத்தை புரிந்து கொள்ள முடியாது!
இன்னொரு விவாதத்தில் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளை ஏன் உங்கள்அறிவியலால் தடுக்க முடியவில்லை?” என்று ஒரு முஃமின் நம்மை நோக்கி கொதிக்கிறார். இதில் வேடிக்கை என்ன வென்றால், இந்த மூடர்கள் அறிவியலின் பலன்களை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக்கொண்டு அறிவியலை எதிர்த்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதுதான். இப்பிரபஞ்சத்தில் மதப் புத்தங்கள் மட்டுமே முழுமையானது அதை மறுதலிக்கும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் எந்த ஒன்றையும் இவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத இவர்களைப் பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா எனத் தெரியவில்லை.
அறிவியல் என்பது, மதப் புத்தகங்களைப்போல ஏழாம் வானத்திலிருந்து குதித்து வந்த ஒன்றல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கான காரணங்களை, பகுத்தறிந்து உண்மைகளைக் கண்டறியும் தேடலுக்கான ஒருகருவி.  அனுபவங்களை சோதனைகள், தரவுகள் மூலம் காரணங்களை சரிபார்க்கும் ஒரு முறைமை. இவ்வாறு காரணங்கள் தெளிவாகுமிடங்களில் கடவுளை மறைத்து வைப்பதாற்கான இடமில்லாது போவதால் மதவாதிகள் அறிவியல் மீது பாய்கின்றனர்; சபிக்கின்றனர். அறிவியல் சிந்தனையைஆதரிப்பதால், வேறு வக்கற்றுப்போய் இறை மறுப்பாளர்களை உணர்வுகளற்ற இயந்திரங்களாக, ஒழுக்க நெறிகளைப் பின்பற்றாதவர்களாக பொது வெளியில் சித்தரித்து வெறுப்பை பொழிகின்றனர்.  நான் முன்பே கூறியதுபோல அவர்களது விவாதம் முட்டுச்சந்துக்குள் சிக்கிக்கொள்ளும் பொழுது வேறு வழி தெரியாததால் புளுகு மூட்ட்டை அறநெறிகளுக்குள் கடவுளை மறைத்து வைக்கின்றனர். ஒருவேளை புனித புத்தகங்களின் வழிகாட்டுதல்(?) மட்டும் இல்லையெனில், மதவாதிகளுக்கு தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு காணத் தெரியாமல் போயிருக்குமோ?
பதிவின் துவக்கதில் கண்ட கேள்விகள் மூலம் எங்களைப் போன்ற இறை மறுப்பாளர்களை எள்ளி நகையாடி சுயஇன்பம் அடைந்து கொள்ளும் நோக்கில் கேட்கப்பட்டிருந்தாலும் உண்மையில் இக்கேள்விகளில் நான் காண்பது, மதப் புத்தகங்கள் எது சரியெனச் சொல்கிறதோ அதைத் தெரிந்தால் மட்டுமே தவறை இனப் பிரித்துக் காணமுடியும்; கடவுள் என்பது நல்லவைகளுக்கான ஒரு முழுமையான ஒப்பீட்டு சட்டகம் (Reference frame); எனவே கடவுள் இருக்கிறது என்ற வாதத்தையே மதவாதிகள் நிலைநிறுத்த விரும்புகின்றனர் என்பதைத்தான்.
அறநெறிகளும் சமுதாய ஒழுக்கங்களும், தன்னைப் போல பிறரையும், அவர்களின் உணர்வுகளை தன்னுடையதாக கருதுவதுவதிலிருந்தும் உருவாகிறது; இவ்வுணர்வு அனைத்து உயிரினங்களிலும் இயல்பாகவே இருப்பதுதான். தனிமனிதர்களின்  இரக்க குணமும் பச்சாதாப உணர்வுகளும் சமுதாய ஒழுங்காக பரிணமிக்கிறது.
இதை முஃமின்களால் ஏற்க முடியாது என்றும், அந்த இயல்பை நமக்குள் விதைத்தது கடவுள்தான் என்றும் வாதிடுவார்கள். “அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதி மிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன(புகாரி 6000, 6469) என்பார்கள். அன்பிற்கான ஒப்பீட்டுச் சட்டகம் அல்லாஹ் என்பதே இந்த ஹதீஸ் கூறும் செய்தி.
இவர்கள் முன்வைக்கும்  கதைகளின் அடிப்படையில் நோக்கினால் அன்பு மட்டுமல்ல, அனைத்துமே இவர்களின் கடவுளிலிருந்து மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. சரிஅன்றிலிருந்தே இருப்பிலிருக்கின்ற ஒழுக்கக்கேடுகளும், தீமைகளும் எங்கிருந்து வந்தது?

காபீலின் விவகாரத்தில் தனது அழகிய சகோதரியை அடைவதற்காக அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை ஏற்கமறுத்த குற்றத்துடன் திட்டமிட்டுக் கொலைக்  குற்றமும் புரிந்திருக்கிறான். அவன் இவ்வாறு செயல்படக் காரணம் யார்? அவனது மனதில் இத்தகைய இச்சையை உருவானது எப்படி? ஷைத்தான் காரணமாக இல்லையென்பதை குர்ஆன் 5:30 சொல்கிறது. இவ்விடத்தில் சர்ப்பம் எதுவும் வந்ததாக பைபிளும் சொல்லவில்லை.
சாத்தானிடமிருந்து அல்லது சர்ப்பத்திடமிருந்து அல்லது தடுக்கப்பட்ட அந்தப் பழத்திலிருந்து இக்குணங்கள் கடத்தப்பட்டதா?
ஆதாமின் விவகாரத்தைப் பற்றிக் கூறும் பொழுது, குர்ஆன் 7:27 சைத்தான் சதி செய்து ஆதாம் மற்றும் அவரது துணைவியருக்கும் வெட்கத் தலங்களை வெளியாக்கினான்; வெளியேற்றினான் என்று சொல்கிறது. குர்ஆனைப் பொறுத்தவரையில், எந்த ஒரு இடத்திலும் ஆதாமின் வீழ்ச்சிக்கு,  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அவர்களை வெளியேற்றுவது அல்லாஹ்வின் திட்டத்திலேயே இல்லையா? இப்படி துவங்கினால் இது விதி பற்றிய விவாதத்தில்தான் போய் முடியும் எனது நோக்கம் அதுவல்ல.
சரி…! வாதத்திற்காக, அது கடவுளின் திட்டம் இல்லையென்றும், ஆதாமிற்கு பகுத்தறிந்து செயல்படும் அறிவை வழங்கியிருந்தாகவும்  ஆதாம் தவறான வாய்ப்பைத் தேர்தெடுத்து வீழ்ச்சியடைந்தாரென்றே வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்-சைத்தான் உரையாடலில் சைத்தானிடம் காணப்பட்டகர்வம்” “இறுமாப்பு”, “பொறாமை”, “அடிபணியாமைபோன்றவைகளும் ஆதாம்-சைத்தான் விவகாரத்தில் காணப்படும், “பொய்யுரைத்தல்”, “சதி செய்து ஏமாற்றுதல்போன்ற ஒழுக்கக் கேடுகளும் சைத்தானுக்குள் வந்தது எப்படி?
சரி… !
ஆதாம்-ஹவ்வா மற்றும் அவரது சந்ததிகளுக்கும் ஏற்பட்ட காம இச்சையையும், காமத்தினால் காபீலுக்குள் ஏற்பட்ட பொறாமையும், வெறுப்பும், அதைத் தொடர்ந்த கொலை செய்யும் எண்ணங்களையும் படைத்தது யார்? “எப்பொழுதிருந்துஇவர்களுக்குள் இம்மாற்றங்கள் ஏற்பட்டதென்பதைடன்கணக்கில் எழுதிக் குவித்து வைத்திருக்கும் மூட மத அறிஞர்களின் கூட்டம் இதற்கு என்ன பதிலை வைத்திருக்கிறது?
இக்குணங்களை அல்லது தன்மைகளை சைத்தான் உருவாக்கினான்  அல்லது ஆதாம் குழுவினர் தங்களுக்குள் அவர்களே உருவாக்கிக் கொண்டனர் என்று சொல்லுவார்களா? நிச்சயமாக முடியாது! இவற்றை அவரவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர் எனில், இவர்கள் கூறும் கடவுள் மட்டுமே படைப்பாளன் என்ற வாதம் செயலிழந்து போகும்! இதை மதவாதிகளால் ஒருகாலும் ஏற்க முடியாது. இவர்களின் வாதப்படி, ஆதியில் தேவனைத் தவிர எதுவுமில்லை; அவனால் - அவனிருந்து மட்டுமே அனைத்தும் உருவானது என்பதே அவர்களின் முடிவாக இருக்கும் பொழுது, அறநெறிகளுக்கு மட்டும் கடவுளை முன்னிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.
எனவே காபீலுக்கு தனது சகோதரி மீது ஏற்பட்ட ஈர்ப்பும், அதனால் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகள் அனைத்திற்கும் கர்த்தர்/அல்லாஹ்வை மட்டுமே குற்றம்சாட்ட முடியும். அன்பில் 99 பங்கை தன்வசம் வைத்திருப்பதைப் போல, மற்ற ஒழுக்கக்கேடுகளின்  99 பங்கை தன்வசமே கடவுள் வைத்திருக்கவேண்டும். இத்தகைய கேடுகெட்ட ஒன்று எப்படிப் புனிதமானதாக, போற்றுதலுக்குரியதாக, வணக்கத்திற்குரியதாக இருக்க முடியும்?
நம்மிடையே நிலவிலிருக்கும் அன்பு, கருணை, இரக்கம், சமுதாய ஒழுங்குகள்போன்ற தன்மைகளுக்கு காரணம் கடவுள் அல்ல அவை பரிணாமத்தின் பரிசு. இதை உணர்ந்து கொள்ள பெரிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை நம்மிடையே இருக்கும் வளர்ப்புப் பிராணிகளையும் கால்நடைகளைக் கவனித்தால் போதுமானது. உதாரணத்திற்கு, தனது குஞ்சுகளை அபகரிக்க வரும் பருந்தை தாக்கும் தாய் கோழியின் செயலில் இருப்பதுவும், தனது குட்டிகளை பாதுகாக்கும் நாயின் செயலில் இருப்பதும், கன்றைப் பராமரிக்கும் கால்நடைகளின் செயலில் இருப்பதும் இதுவே!  மனிதர்களாகிய நாம் மற்ற விலங்குகளைவிட சற்று மேம்பட்ட சமுதாய விலங்கு. நமது வசதிகளுக்கேற்ப விதிமுறைகளை வகுக்கச் செய்வதற்கும் இந்த உணர்வுகளே காரணம்.
சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக  இதில் பல  அத்தாட்சிகள் இருக்கிறது. (குர் ஆன் 13:3).
தஜ்ஜால்