Sunday 30 March 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -38

மறுமை வாழ்கை


இந்த வாழ்கை ஒரு சோதனைக் களம் அல்லாஹ்வை ஏற்று வாழ்ந்தால், மறுமை வெற்றி!.  வெற்றிக்கு பரிசு சொர்க வாழ்க்கை. தங்க, வெள்ளி மற்றும் முத்து மாளிகைகள் அவற்றின் கீழ் நீரருவிகள், பச்சை நிற உயர்ந்தரக பட்டாடைகள், தங்கம், உயர்ந்தரக வைரம், முத்துக்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், தங்கமாளிகைகள், தங்கத் தட்டில் பழங்கள், தங்கக் குவளையில் போதை தராத பழரசம், தேவையானவற்றை  செய்ய சுறுசுறுப்பான சிறுவர்கள்.

நிச்சயமாக ஈமான் நற்செயல்கள் செய்பவர்களை சொர்க்கங்களில் புகச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் தங்கத்தினாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் (ஆபரணங்கள்) அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்.…
(குர் ஆன் 22:23)

தங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும் அவர்களிடம் சுற்றிக் கொண்டுவரப்படும்…
(குர் ஆன் 43:71)
       
தங்கம் இரும்பைப் போன்ற ஒரு உலோகமே. பூமியில், தங்கம் கிடைப்பது அரிதாக இருப்பதன் காரணமாகவே பெரிதாக மதிக்கப்படுகிறது. பொருள்களை பண்டமாற்றம் செய்து வந்த மக்கள், நாளடைவில் அரிதான உலோகமான தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றினர். ஆக, தங்கத்தின் மதிப்பு மனிதர்களின் பிற தேவைகளையே சார்ந்தது. உலக வாழ்வில்  தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களின் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்காகவும், மற்றவர்களை விட தன்னை உயர்ந்தவனாக கண்பிக்கும் மனோபாவாமே மனிதனை பொருளை (தங்கத்தை) தேடி ஓட வைத்தது. எவ்வித தேவைகளும், போட்டி, பொறாமைகளுமற்ற  மறுமை வாழ்வில் தங்கத்திற்கு தனி மரியாதை தேவையில்லையே?   மறுமை வாழ்வில் அல்லாஹ்  தரும் தங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

வீட்டுவாடகை, School fees, collage fees, Ration கடை, பருப்பு, பாமாயில், கரண்ட பில் என்ற எந்த கவலையும் சொர்கத்தில் உங்களுக்கு இருக்காது. பஸ்ஸை பிடிக்க வேண்டும், இரயிலைப் பிடிக்க வேண்டும், கல்யாணத்திற்குப் போக வேண்டும், காது குத்திற்குப் போக வேண்டும் Hospital  போக வேண்டும் என்ற பிடுங்கல்களும் இருக்காதுஅல்லாஹ்வை தொழ வேண்டும், முஹம்மதுவிற்கு பல்லக்கு தூக்க வேண்டும்என்ற எந்த வழிபாடுகளும் கிடையாது. பொறாமை,கோபம், விரோதம் போன்ற  தீய எண்ணங்களும் சொர்க்கவாசிகளின் மனதைவிட்டு அகற்றி விடுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

பிறகு என்னதான் இருக்கிறது?

 இவ்வளவையும் மனிதனைவிட்டு நீக்கிய அல்லாஹ் மிக முக்கியமான ஒன்றை அதிகரிக்கச்செய்கிறான். அதுதான் Sex.  மனிதனின் உடற்பசியை மட்டும் ஒரு காலத்திலும் அவனை விட்டு விலக விடுவதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறான். சொர்கத்தில்  மனிதனுக்கு இருக்கும் ஒரே பணி  தனது பாலியல் தேவைகளை விதவிதமாக தேடித் தேடி நிறைவேற்றிக் கொள்வது மட்டுமே! சொர்க்கத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம்  Sex …  Sex… முடிவில்லாத  சல்லாபங்கள்.



விருந்தாக, கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி, மான்விழி ஹூர் எனும் பேரழகிகள். மறுமையின் வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வெகுமதிகளாக 80,000 பணியாட்களும், உலகில் அவர்களுடன் வாழ்ந்து மறுமையிலும் வெற்றி பெற்ற  அவர்களது மனைவியர்களுடன், எழுபதிற்கும் மேற்பட்ட ஹூருலீன்களும்  வழங்கப்படுவார்கள்.

நீங்களும் உங்களுடைய மனைவியரும் மகிழ்ச்சிக்குரியவர்களாக இருக்கும் நிலையில் சொர்க்கத்தினுள் புகுங்கள்…
(குர் ஆன் 43.70)
அவற்றில் அழகுமிக்க நற்குணமுள்ள கன்னியர்கள் இருப்பர்
(குர் ஆன் 55.70)
இவ்வாறே;   இன்னும் அவர்களுக்கு  ஹூருல்ஈன்  (என்னும் சுவர்கத்துக் கன்னியர்)களைத் துணைவியராக்கி வைப்போம்.
(குர்ஆன் 44: 54)
அவற்றில் பார்வை கீழ் நோக்கிய பெண்கள் இருக்கின்றனர் அவர்களை எந்த மனிதனும் எந்த ஜின்னும் (சொர்க்வாசிகளாகிய) இவர்களுக்கு முன் தீண்டியதே இல்லை.
      (குர்ஆன் 55: 56)
அவர்களை கன்னியர்களாகவும் ஆக்கினோம்.
(குர்ஆன் 55: 36)
மார்பகங்கள் உயர்ந்த சம வயதுள்ள கன்னிப் பெண்களும்.
(குர்ஆன் 78: 33)


சரி, மனைவியர்கள் இருக்கையில், எதற்காக இவ்வளவு ஹூருலீன்கள் தங்களது கணவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளாத (கள்ளத்தொடர்பு) காரணத்தால் நரகத்தில் பெண்களே மிகுதியாக இருக்கக் கண்டதாக முஹம்மது நபி கூறுகிறார்

புகாரி ஹதீஸ் எண் : 3241
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் (மிஅராஜ்- விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களை கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஹம்மது நபி, பெண்கள் என்றாலே பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு கொள்பவர்கள் என்று முடிவு செய்துவிட்டாதாகவே தோன்றுகிறது. அவரது தனிப்பட்ட அனுபவம் அப்படி இருந்திருக்கிறது என்றுதான் நாம் சொல்ல முடியும்! முஹம்மதை மிஃராஜ் பயணத்திற்கு அழைத்துச் சென்ற அல்லாஹ், குறிப்பாக சில காட்சிகளைக் காண்பித்திருக்கிறான் அதில்  இதுவும் இடம்பெறுகிறது.

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

முஹம்மது நபியின் சந்தேக குணத்தை பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைத்தது உமர் கத்தாப் அவர்களின் பணியாகும். இன்று முஸ்லீம் பெண்களின் முகங்கள் கருப்புத் திரைகளால் மூடப்பட்டிருப்பதற்கு  இவர்களது இந்த குணம் மட்டுமே காரணம்.

எனவே, பெரும்பாலான பெண்கள் கள்ளத் தொடர்பு குற்றத்திற்காக நரகத்திற்குள் வீசப்பட இருப்பதால், ஆண்களின் இச்சையை  சரிகட்டவே ஒவ்வொருவருக்கும் 72 ஹூருலீன்கள் வழங்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஹூருலீன்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஹதீஸ்களிலிருந்து சில செய்திகள்.

புகாரி ஹதீஸ் எண்: 3327
அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள் பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள். எச்சில் துப்பவும் மாட்டார்கள், மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவருடைய சீப்புக்கள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.

புகாரி ஹதீஸ்:3246 ,
அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது, எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வெருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வெருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளது பளிங்குமேனியின் பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களுடைய பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களுடைய தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களுடைய வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும்.



The great Islamic scholar, Ibn Kathir, comments on 78:33:
(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said, (Kawa`ib) "This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah…
(சம வயதுடையவர்கள் ஹூரூலீன்களுக்கு வட்டவடிவமான நிமிர்ந்த்த மார்புகள்  உடையவர்கள்)

Comment on 56:36 from Maariful Tafsir

The word "abkaran, being the plural of bikr, means ‘virgins’. The sense is the creation of the maidens of Paradise will be of such a nature that, even after every sexual intercourse, they will remain like virgins  (Page: 290)
(ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர்கள் (ஹூரூலீன்கள்) கன்னியர்களாகவே இருப்பார்கள்)

Comment on 44:54 from Maariful Tafsir
… Although the inmates of Paradise will not be legally obligated to observe the precepts of Shariah the purpose of marriage will be to honour them. Therefore, this should not raise any objection IF the word is taken in the first sense, houris having big dark eyes will be given as life partners to the men of Paradise. The houris in this case will be granted to them as a gift. There will be no need for a contract of marriage as is done in this world. (Page 762).
(மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு, ஹூரூலீன்கள் பரிசாக வழங்கப்படுவார்கள். உலகில் இருப்பதைப் போல அங்கு எவ்வித திருமண ஒப்பந்தங்களும் தேவையில்லை)

இத்தனை ஹூருலீன்களையும் வைத்துக் கொண்டு சராசரி பாலியல் பலம் கொண்ட மனிதன் தன் இச்சையை எப்படி தீர்க்கமுடியும்? என்ற உங்களது அச்சம் நியாயமானதே. இதற்கும் சரியான தீர்வு முஹம்மது நபி அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.

Sunan al-Tirmidhi #2459
A man will have intercourse in Paradise with his wives from among al-hoor al-‘iyn and his wives from among the people of this world, if they enter Paradise with him. A man will be given the strength of a hundred men to eat, drink, feel desire and have sexual intercourse. It was narrated from Anas that the Prophet said: "The eliever in Paradise will be given such and such strength for sexual intercourse." He was asked, "O Messenger of Allaah, will he really be able to do that?" He said, "He will be given the strength of one hundred (men)." 
(ஹூருலீன்களுடன் இணைவதற்கும் முடிவில்லா சுகம் பெறுவதற்கும் நூறு பேருடைய ஆற்றல் சொர்க்வாசி ஆண்களுக்கு வழங்கப்படும். அறிவிப்பவர் அனஸ் (ரலி) திர்மிதீ.)


ஜிப்ரீல் முஹம்மது நபிக்கு ஆண்மைபலம் பெருக லேகியம் (பக்குவமாக சமைக்கப்பட்ட இறைச்சி) கொடுத்ததை முன்பே உங்களிடம் கூறியிருக்கிறேன். அதைவிட பல மடங்கு சக்த்திவாய்ந்த லேகியம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறதே பிறகு என்ன கவலை? ஆற்றல் குறைபாடு உள்ளவர்கள், அல்லஹ்விடம் முறையிடலாம். ஜிப்ரீலைத் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து சற்று கூடுதல் சக்தியுடைய லேகியம் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.  இதில் வயாக்ரா என்ற நவீன மருத்துவக் கண்டுபிடிப்பின் முன்னறிவிப்பை நாம் காணலாம். வயாக்ரா பற்றி முன்னறிப்பை எழுதுவதற்கு முஃமின்களுக்கு  கூச்சமாக இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை , ஒருவரும் வாய்திறந்து பேசமாட்டேன்  என்கின்றனர்!


ஒரு நாளைக்கு நூறுமுறை என்றால்மறுமை வெற்றியாளர்கள்  சுமார் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை RECHARGE செய்யப்பட்டு ஹூருலீன்களை  ‘வெற்றி கொள்ள களத்திற்கு’ அனுப்பப்படுவார்கள்

சாதாரண ஆண்மை பலத்திற்கே முஃமின்களில் பலருக்கு பலதாரங்கள் தேவைப்படுகிறது. இதில் நூறு பேருடைய ஆற்றல் வழங்கப்பட்டால் மென்மையான ஹூருலீன்களின் நிலை என்னாவது? என்று கவலைப்பட வேண்டாம்.உங்களது அந்த கவலையையும் அல்லாஹ் கவனத்தில் கொண்டுள்ளான். அல்லாஹ்வைப்பற்றி நீங்கள் அத்தனை லேசாக எடைபோடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.


நிச்சயமாக நாம் (ஹூருல்ஈன்களான) அவர்களை பிரத்தியேகமாக உண்டாக்கினோம்.
(குர் ஆன் 55.35)

ஹூருலீன்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். எவ்வளவு முறை உறவு கொள்ளப்பட்டாலும் சலிப்படையவோ வேதனையடையவோ மாட்டார்கள். அவர்களுக்கு மாதவிலக்கு கிடையாது என்றுமே கன்னித்தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவை பற்றிய ஹதீஸ்கள் கூறும் வர்ணணைகளின் சுருக்கமான தகவல்கள்.

எகிப்திய அறிஞரின் குர்ஆன் விரிவுரையிலிருந்து

Imam Al-Suyuti :
“Each time we sleep with a houri we find her virgin. Besides, the penis of the Ejected never softens. The erection is eternal; the sensation that you feel each time you make love is utterly delicious and out of this world and were you to experience it in this world you would faint. Each chosen one [ie Muslim] will marry seventy  houris, besides the women he married on earth, and all will have appetizing vaginas.”

(ஹூரியுடன் உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவளை கன்னியாகவே நாம் காண்போம். அன்றியும், ஆணுறுப்பு ஒருபொழுதும் தளர்ந்து விடாது. அதன் விறைப்புத்தன்மை நிலையானது; உங்கள் காதலால் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணரும் முழு இன்பம் உலகில் இல்லாதது. அதை(இன்பங்களை) இவ்வுலகில் நீங்கள் அனுபவித்தால் மயங்கி விடுவீர்கள்.  தேந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் 70 ஹூரூலீன்களை திருமணம் செய்வார்கள். அன்றியும், அவரது இவ்வுலக மனைவியர்கள் (இச்சையைத்) தூண்டும்படியான பெண்ணுறுப்புகளைப் பெற்றிருப்பார்கள்)


ஆண்களுக்கு ஹூருல்ஈன்கள். Ok   பெண்களுக்கு என்ன…?

பெண்களுக்கு எந்த சுகங்களும் இல்லையா? வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க கட்டிலில் என்றும் இளமை மாற நீழ்விழி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் கிடையாதா? பெண்களுக்கு சம உரிமையில்லையா? என்ற போர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கிதும் இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களையும் வரலாறுகளையும் புரட்டி தேடிப் பார்த்தனர். ஹதீஸ்கள் ஹூருலின்களை  பெண்கள் என குறிப்பிட்டு பல விதமாக அவர்களின் அழகை வர்ணணை செய்கிறது. ஹூருலின்களில் ஆண்களும்  உண்டு  என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களில் எவ்விதமான ஆதரமில்லை. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, ஹூருல் என்பது பன்மைச் சொல் ஆண், பெண் என இருபாலரையும் குறிப்பிடும். மறுமையில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் போலவே பெண்களுக்கும் வழங்கப்படும் நிச்சயமாக, ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் உண்டு என்றனர். இதை Dr. ஜாகீர் நாயக் அவர்களும் தன்னுடைய பதிலில் குறிப்பிடுகிறார்.,

     மேற்படி அருள்மறை குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவெனில் 'ஹூர்' என்ற அரபி வார்த்தை குறிப்பாக எந்த பாலை (ஆண்பால் அல்லது பெண்பால்) குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப் படவில்லை என்பதுதான். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த முஹம்மத் அஸாத் 'ஹூர்' என்ற அரபி வார்த்தைக்கு Spouse (கணவருக்கு மனைவியும் - மனைவிக்கு கணவரும்) என்று மொழியாக்கம் செய்துள்ளார். அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி 'ஹூர்' என்கிற அரபி வார்த்தைக்கு Companions  (இணை அல்லது துணை) என்று மொழியாக்கம் செய்துள்ளார். இன்னும் பல மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி - சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு அழகிய கண்களை உடைய பெண்ணும், ஒரு பெண்ணுக்கு அழகிய கண்களை உடைய ஒரு ஆணும் இணையாக அல்லது துணையாக அல்லது ஜோடியாக கிடைப்பார்கள்.

     பெண்கள் இவ்வுலகில் கிடைக்கப்பெறாத ஒன்றை, சொர்க்கத்தில் கிடைக்கப் பெறுவார்கள். அருள்மறை குர்ஆனில் 'ஹூர்' என்கிற அரபி வார்த்தை பெண்பாலை குறிப்பிடத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சில மார்க்க அறிஞர்கள் ஆணித்தரமாக நம்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஹதீஸ் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் - சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது - சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத - மனித காதுகள் எதுவும் கேட்டிராத - மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேற்படி பதில் சொர்க்கத்தில் பெண்கள் - மிகவும் சிறப்பான ஒன்றினைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆனால் அல்லாஹ்வோ மார்பகங்கள் உயர்ந்த சமவயது ஹூரிகளை வழங்குவதாக குர்ஆனில் 78:33-ல் குறிப்பிடுகிறான், ஒரு வேளை சொர்க்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கும்,  மார்பகங்கள் உயர்ந்த அதே வகையான ஹூரிகளை வழங்கிவிடுவானோ?  குழப்பமாக இருக்கிறது ஒருவேளை... கதை அப்படிப் போகிறதோ?  அல்லாஹ் ஒரு Ultra modern பேர்வழியாக இருக்கலாம்!

ஹூருலீன்கள் என்பவர்கள் பெண்களே என்றால்,

குழந்தைகளை பராமரிப்பது, உணவு சமைப்பது, துணிகளை துவைப்பது வீட்டைப் பராமரிப்பது என்ற எவ்விதமான சேவைகளும் அங்கு பெண்களுக்கு கிடையாதுசுவைமிகுந்த உணவுகளும், பழங்களும், பானங்களும், உடைகளும், ஆபரணங்களும் அளவின்றி வழங்கப்படும்எதிர்கால தேவை, வாரிசுகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற கடமைகளும் இருக்காது. இருக்கும் ஒரே வேலை, தங்களது கணவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஏனென்றால் ஒவ்வொரு மனைவியரையும் ஒரே மாதிரியாக நீதத்துடன் நடத்த வேண்டும் அவர்களுக்கிடையே வேற்றுமை காணக் கூடாது. ஒவ்வொரு மனைவியருடனும் சமஅளவில் நேரத்தை செலவிட வேண்டும் என்பதும்  முஹம்மது நபி உலக வாழ்வில் செயல் முறையில் நமக்கு கற்றுத் தந்த படிப்பினைகளாகும்.

ஒரு சொர்க்கவாசிதன் மனைவியிடம் சென்று தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், 72 ஹூருலீன்கள் X 15 நிமிடங்கள் = 1080 நிமிடங்கள். அதாவது, அவர்களது கணவர்கள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல்படுவதாக இருந்தாலும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் வரையிலும், ஹூருலீன்கள் உட்பட ஒவ்வொரு மனைவியரும் தங்களது முறை வருவதற்காக காத்திருக்க வேண்டும். உணவு உறக்கம் போன்ற தேவைகளுக்கான நேரம் தனிக்கணக்கு.

மனைவியர்கள் விரும்பினால் தங்களது கணவர்கள் ஹூருலீன்களுடன் நிகழ்த்தும் வீர விளையாட்டுக்களை கண்டு பரவசமடையலாம். அல்லது தங்களது கணவர்கள் 72 ஹூருலீன்களுடனும் சாகசங்கள் பல புரிந்து வரும்வரை ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டும் (வேறு வழியில்லை…!)

ஹூருலீன்களில் ஆண்களும் உண்டு என்றால்,
மறுமையில் வெற்றி பெற்றவர்கள் தம்பதிகளாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று முன்பே பார்த்தோம். பெண்களில் மிகப் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்களே. வெகு சிலரே  திருமண வாழ்க்கையின்றி இருப்பவர்கள்.  இவர்களைத் தவிர மீதம் இருப்பவர்கள் கணவன் நரகத்திற்கு சென்று விட்டதால்  தனிமையில் சொர்கத்திற்கு வரும் பெண்கள் இவர்களுக்கும்  ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள்.



அல்லது அனைத்து பெண்களுக்கும் பாகுபடின்றி ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் பரிசாக வழங்கப்படலாம். எப்படி இருந்தாலும், அறிஞர்களால் தரப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் கூறுவதென்றால், ஆண்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே பெண்களுக்கும் சிறப்பு ஆற்றல்களும், 72 ஹூர் எனும் கட்டழகு காளையர்கள் வழங்கப்படுவார்கள் என்று உறுதியாகக் கூறமுடியும்.

           “…...…..........”
           “.....................”
(இவ்விடத்தில் ஆண்களுக்கு விவரித்த சொர்க்கலோக சல்லாபக் காட்சிகளை பெண்களுக்கும் கற்பனை செய்து கொள்ளவும்.)

ஆக,சொர்க்கவாசியாகத் தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் 72 கட்டழகு கன்னியர்களும், காளையர்கள் இணையக் காத்திருக்கின்றனர் (ஒருவேளை இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது ?!)

ஒருவேளை, சொர்க்கவாசிகள் தங்களுக்கு அல்லாஹ்வால்  வழங்கப்பட்ட ஹூருலீன்கள் போதவில்லை என்று நினைத்தால், அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, "There is in Paradise a market wherein there will be no buying or selling, but will consist of men and women. When a man desires a beauty, he will have intercourse with them."
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் கூறினார், சொர்க்கத்தில்  உள்ள கடைத்தெருவில் ஆண்களையும் பெண்களையும் தவிர வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றும் இருக்காதுஒரு ஆண் விரும்பும் பொழுது (அங்குள்ள) அழகிய பெண்ணுடன் கலவியில் ஈடுபடலாம்.

Sunan al-Tirmidhi 1495
In paradise, there is a market of rich, beautiful and ever-young women; they will be pleased whoever buys them…
சொர்கத்தில்  செல்வந்தர்களின் கடைத்தெரு உள்ளது, (அங்குமிக அழகான என்றும் இளமையாக உள்ள கன்னியர் (ஹூருலீன்கள்) உள்ளனர். யார் அவர்களை  வாங்கினாலும் அவர்கள் (ஹூருலீன்கள்) அகமகிழ்வார்கள்.

உங்களது விருப்பம் போல பெற்றுக் கொள்ளலாம்.

முஹம்மது நபியால் வர்ணனை செய்து கூறப்பட்ட சொர்க வாழ்க்கையின் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். கேடுகெட்ட காட்சிகள்தான் கண்முன்னே தோன்றும்.

சிற்றின்பக் கேளிக்கை விடுதியை அடைவதற்காகவா இந்த உலகத்தில் பலவிதமான கொடுமைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்?. அல்லாஹ், இது போன்ற காட்சிகளைக் காண மிகுந்த சிரமம் எடுக்கத் தேவையில்லை. மிக மட்டரகமான நீலப்பட காட்சிகள் இணைய தளங்களிலும், குறுந்தகடுகளாக கடைத்தெருக்களிலும் எளிதாக கிடைக்கின்றது.


ஆக, சொர்கம் என்பது சிற்றின்ப  வெறியர்கள் நிறைந்த பரத்தையர் இல்லத்தைப் போன்றது என்றும் கூறலாம். ஹூருலீன்களை காமப்பதுமைகள் (Sexdolls) என்று கூறுவதே பொருத்தமானது. இதிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிந்தனையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.