Monday 23 February 2015

ஒரு மரணம் சில கேள்விகள் - 6

வணக்கம் நண்பர்களே!

“ஒரு மரணம் சில கேள்விகள்” என்றொரு குறுந்தொடரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்குமென்று நினைக்கிறேன்.

என்னது... மறந்து விட்டீர்களா…?

பரவாயில்லை..!

தொடரை முழுமையாகப் படிக்க விரும்புபவர்களுக்கு அத்தொடரின் இணைப்புகளை இங்கு [1, 2, 3, 4, 5] கொடுத்திருக்கிறேன். அன்று நான் எழுதத் தவறிய, மறந்த விஷயங்களையும், முஹம்மதின் அகால மரணத்தைச் சுற்றி நிகழ்ந்தவைகளையும், அதைத் தொடர்ந்த குழப்பங்களையும் சுருக்கமாக இத் தொடரில் பார்க்கலாம்.

முஹம்மதுவின் மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்...


முஹம்மதுவின் உயிரை கைப்பற்றுவதற்காக தான் குறித்து வைத்திருந்த நேரம் நெருங்குவதை உணர்ந்து கொண்ட அல்லாஹ், முஹம்மதைக் கொண்டு தான் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை விரைந்து முடிக்கத் திட்டமிடுகிறான்.  ஒருவேளை தன்னால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அவனை ஆட்கொண்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை.  நள்ளிரவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த முஹம்மதை நோக்கி அடியாள் ஜிப்ரீலை அனுப்புகிறான்.

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தனது இறக்கைகளை உதறியவாறு ஜிப்ரீலும் அந்த நள்ளிரவில் முஹம்மதை சந்திக்கச் செல்கிறார்.  புழுதி பறக்க தனது இறக்கைகளை அடைத்தவாறு மதினாவில் இறங்குகிறார். ஆள்நடமாட்டம் எதுவுமில்லை; அப்படியே இருந்தாலும் அதைப்பற்றி ஜிப்ரீல் கவலைப்பட மாட்டார். ஏனெனில் அவர் மற்ற மனிதர்களின் கண்களுக்கெல்லாம் தென்படுபவரில்லை; முஹம்மதின் கண்களுக்கு மட்டுமே தென்படுவார்.  ஓட்டமும் நடையுமாக நேராக மஸ்ஜித் அந்நபவியை நோக்கி விரைகிறார் அங்குதான் முஹம்மதின் இல்லம் இருக்கிறது. பள்ளிவாசலின் ஒருபகுதியில் அவரது வீடு.

அன்றைய வீடுகளுக்கு கதவுகள் என்று எதுவும் பெரிதாக வைத்திருக்க மாட்டார்கள். மிகப் பெரும்பாலும் ஒரு கணமான திரைதான் கதவு. வீடுகளுக்கு கதவு அமைக்காமல் இருப்பதுதான் முஹம்மதுவின் சுன்னத் அதாவது வழிமுறை ஆகும். ஏனோ தெரியவில்லை இந்த சுன்னத்தைப்பற்றி முஃமின்கள் ஒருவரும் வாய்திறப்பதே இல்லை.

முஹம்மதின் படுக்கையறைக்குள் நுழைந்த ஜிப்ரீல் அதிர்ச்சியில் நின்றுவிடுகிறார். அவரையும் அறியாமல் அவரது வாய், “மாஷா அல்லாஹ், அல்லாஹ் அக்பர்” என்று எதையெதையோ சம்பந்தமில்லாமல் முனுமுனுக்கத் துவங்கியது. முஹம்மதிற்கு அருகில், ஆடைகளெல்லாம் அவிழ்ந்த நிலையில் அழகும், இளமையும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் பதினெட்டு வயது இளம்பெண் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டால் அதிர்ச்சியடையாமல் வேறென்ன செய்வார்களாம்?

ஜிப்ரீலுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஓரமாக அமர்ந்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருப்பதா? அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றச் செல்வதா என்று அவருக்குள் பெரும் போராட்டம். இந்தப் பெண் எதற்காக இப்படி தொடைகளை விரித்துக் கொண்டு படுத்திருக்கிறாள்? ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் சளித்தொல்லையினால் அவதிப்படுகிறாரோ என்னவோ என்று அவருக்குள் சிந்தனை.

அன்றைய வீடுகளுக்குக் கூரைகளென்று பெரிதாக எதுவுமிருக்காது; ஈச்சமர ஓலைகள்தான் அவர்களது வீட்டுக் கூரை. நிலவொளி கூரையின் ஓட்டைகள் வழியாக இளம்பெண்ணின் மீது விழ அங்கங்கள் தங்கம் போல ஜொளித்துக் கொண்டிருந்தது. வயதான காலத்திலும் மனிதர் அனுபவிக்கிறார் என்று மனதில் புகைச்சல் வேறு.  அருகில் சென்று அழைத்தால், ஆடைகள் அவிழ்ந்து நிலையிருக்கும் இளம்பெண்ணை நெருங்கிச் சென்று ஜொள்ளுவிட்டவரென்று நாளைய சமுதாயம் தன்னைப் பழித்து காறி உமிழ்ந்திடுமே என்ற கவலை ஒருபக்கம். நேரம் வேறு மிகக் குறைவாக இருக்கிறது. என்ன செய்வதென்று புரியாமல் பிசைந்து கொண்டிருந்தார். அட.. நீங்க வேற ஜிப்ரீல் தனது கையைத்தான் பிசைந்து கொண்டிருந்தார். அப்பொழுது தற்செயலாகவே உறக்கத்திலிருந்து  முஹம்மது விழிக்கப் போவதை உணர்ந்த கொண்ட ஜிப்ரீல், ஒன்றுமே தெரியாதவனை போல முகபாவனையை மாற்றிக் கொண்டு சற்று விலகி தலையைக் குனிந்தவாறு நின்று கொள்கிறார். முஹம்மது, ஜிப்ரீலைக் கவனித்து விடுகிறார். ஜிப்ரீல்,  முஹம்மதை தன்னருகே வருமாறு செய்கை செய்கிறார்.  பூனை போல சத்தமில்லாமல் எழுந்து சென்ற முஹம்மது ஜிப்ரீலை நோக்கி,

“இந்த நள்ளிரவில் எனது படுக்கை அறைக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தவாறு அந்த இளம்பெண்ணைக் கவனிக்கிறார். அவள் எந்தவித அசைவுமின்றி ஆழ்ந்த உறக்கத்தில் அப்படியே இருக்கிறாள்.

”மன்னிக்க வேண்டும் அல்லாஹ்வின் தூதரே... என்னைப்பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும் நான் அப்படிப்பட்டவனில்லை; நானாகவும் இங்கு வரவில்லை. இந்த அர்த்தராத்திரியில் என்னை இங்கு அனுப்பியது உங்களது இறைவன்தான்” என்றார்.

“என்ன செய்தி... வஹீ... எதையாவதை கொண்டு வந்திருக்கிறீர்களா..?”

“ஆமாம் அதேதான்!”

“சரி... அதை இந்த நடுராத்திரியில்தான் செயல்படுத்த வேண்டுமா... நாளை பகல் வேளைகளில் செய்யக் கூடாதா....ஆ...ஆ?” என்றார் கொட்டாவி விட்டபடி.

“இந்த இரவிலும் உங்களது சொத்தப்பற்கள் நன்றாகவே தெரிகிறது” என்று ஜிப்ரீல் சிரித்தார்.

”இதைச் சொல்வதற்குத்தான் வந்தீரா?” என்றார் எரிச்சலாக.

“கோபப்படவேண்டாம் அல்லாஹ்வின் தூதரே!  அதிஅவசரமாக நிறைவேற்ற வேண்டிய ஒரு பணிப்பற்றி கூறவதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்!”

“அப்படியென்ன பணி...? அருகிலிருந்த யூதர்களையெல்லாம் கொன்றொழித்தாகிவிட்டது. அரேபிய தீபகற்பமே நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. பைசாந்தியர்கள், ரோமானியர்களை தாக்கத் துவங்கியிருக்கிறோம். வேறு யாரைத் தாக்க வேண்டும்? இந்த நேரத்தில் எப்படி படைகளைத் திரட்டுவது?” என்று முஹம்மது புலம்பிக்  கொண்டிருக்கும் பொழுது ஜிப்ரீல் மண்டையச் சொறிந்து கொண்டிருந்தார்.

எரிச்சலுற்ற முஹம்மது,

“நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அசடுவழிய எதற்காக மண்டையைச் சொறிகிறீர்?”

”அல்லாஹ்வின் தூதரே நீங்கள் நினைப்பதைப் போன்ற செய்திகளை நான் கொண்டு வரவில்லை...”

“பிறகு...?”

"உம் இறைவன் உம்மை ’பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிட்டிருக்கிறான்...!”

 ” ’பகீஉ'வாசிகளுக்காகவா... அது பொது மையவாடியாயிற்றே...?”

”ஆம்! அதேதான்; அவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்பைக் கோரவேண்டும் அல்லாஹ் அதையேற்று மன்னிப்பதற்காக தவ்பாவின் வாச்லைத் திறந்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ் தவ்பாவின் வாசலை மூடுவதற்கு முன் நீங்கள் விரைந்து காரியத்தை நிறைவேற்ற வேண்டும்!” என்றார் ஜிப்ரீல்.

இப்பொழுது முஹம்மது மண்டையைச் சொறிந்து கொண்டிருந்தார். ம்ம்.. என்ன செய்வது அல்லாஹ்வின் கட்டளயாயிற்றே...?

“இங்கேயே இருந்து கொண்டு பாவமன்னிப்பு கோரக் கூடாதா...?” இது முஹம்மது.

“’பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிட்டிருக்கிறான்...!” என்றார் ஜிப்ரீல்.

 “சரி... இதோ.. இப்பொழுதே கிளம்பிவிட்டேன். என்ன சொல்லி பாவமன்னிப்பு கோர வேண்டும்?” என்றார்

“அதையும் உமது இறைவன் சொல்லியனுப்பியிருக்கிறான். நீங்கள் அந்த வார்த்தைகளைச் சொல்லி மட்டுமே பாவமன்னிப்புத் தேடவேண்டும்..!”

“ம்ம்.. சரி... அதையும் சொல்லித் தாருங்கள்..”

”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்றார்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங் களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

”சரி இதோ புறப்பட்டுவிட்டேன்” என்றவாறு சத்தமில்லாமல் மெதுவாகத் தமது மேலாடையை தலையணைக்கு அருகில் தேடி அணிந்து கொண்டு, அதேபோல சத்தமில்லாமல் மெதுவாகக் காலணிகளையும் அணிந்து வீட்டிலிருந்து வெளியேறத் தயாரானார்.

திரும்பித் திரும்பி இளம்பெண்ணை பார்த்தவாறே பெருமூச்சு வெளியேற ஜிப்ரீலும் வெளியேற, கதவைத் திறந்து வெளியே சென்று மெதுவாகக் கதவை மூடினார் முஹம்மது.

அதுவரை தூங்குவதைப் போல பாவனை செய்து கொண்டிருந்த இளம்பெண் ஆயிஷா, ’திடுக்’கென எழுந்து உட்கார்ந்தார்.

இவர் யாரிடம் பேசிக் கொண்டிருந்தார்? இந்த நேரத்தில் எங்கே போகிறார்? யாரிடம் போகிறார்? வேறு ஏதாவது புதுச் சக்காளத்தி வந்துவிட்டாளோ? என்று பலவித குழப்பமான கேள்விகள்

வேறுவழியில்லை பின் தொடர்ந்து சென்று விடுவென்று தீர்மானத்துடன், தனது ஆடைகளை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு தனது கிழட்டுக் கணவர் முஹம்மதைப் பின் தொடர்ந்தார் ஆயிஷா.
தொடரும்...


தஜ்ஜால்

Tuesday 10 February 2015

ஹிஜாப் என்றொரு மாயை!


உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும். உலக ஹிஜாப் தினம் என்று அறிவித்து அதன் அருமை பெருமைகளை(!) பெண்களிடையே பரவச் செய்கின்றனர்.
தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு பொய் காலவட்டத்தில் உண்மையாகி விடுவதால், இக்கருத்தை இப்போது ஒரு சில முஸ்லீம் அல்லாதவர்களும் நம்பத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆதாரமாக, இஸ்லாமியமார்க்க 'அறிஞர்கள்', அமெரிக்காவில் நிகழும் பாலியல் வன்முறைகள் பற்றிய புள்ளி விவரங்களை முன்வைப்பதை எங்கும் காண முடிகிறது. அமெரிக்காவுடனோடு முஸ்லீம் நாடுகளில் நடக்கும் பாலியல் வன்நிகழ்வுகளைப் பற்றிய புள்ளி விபரங்களை ஒப்பிட்டு வன்முறைகுறைவாக இருப்பதாகவும், ஆதலால் பர்தாமுறை, உளவியல் பூர்வமாக சிறந்த வழக்கம் என்று வாதிடுகின்றனர். பல இஸ்லாமிய நண்பர்களும் நம்மிடம் சவுதியையும், அமெரிக்காவையும் ஒப்பிட்டு 'தூய' இஸ்லாமிய வழக்கங்களே சிறந்தது என்று வாதிடுவதையும் செவிமடுத்திருக்கிறோம்.

இஸ்லாம் விஷயத்தில் நிறைய அர்பன்லெஜண்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த பர்தாவானது பெண்களுக்கு பாதுகாப்பையும், கண்ணியத்தையும் தருகிறது என்பது. பர்தா உண்மையிலேயே பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் தருகிறதா என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.

பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலவித கோணத்தில், பலவித டிகிரிக்களில் நடந்தாலும் அவற்றை பொதுவாக மூன்று விதமான பெரும் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்:

1.குடும்பத்துள் நிகழும் வன்முறைகள் (கணவனால் அடித்துத் துன்புறுத்தப்படுவது, கொல்லப்படுவது, உறவினர்களின் மூலம் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல்வன் முறைகள், பொருந்தாத் திருமணம், கட்டாயத் திருமணம், கருவழிப்பு, க்ளிட்டோரிஸ் துண்டிப்பு, குடும்ப கெளவரவம் காக்க செய்யப்படும் கொலைகள் போன்றவை).

2. சமுதாயத்தில் நிகழ்வது (கற்பழிப்பு, பலாத்காரம், அங்கமீறல்கள், தாக்குதல்கள், வற்புறுத்தலின் பேரில் பாலியல்தொழில், பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவது, விலை பேசிவிற்பது, வயது குறைவான பெண்களுடன் திருமணம் மற்றும் புணர்தல்போன்றவை).

3. அரசின் வன்முறை (சிறைப்படுதலின் போது நடக்கும் பாலியல் வன்முறைகள், சட்டரீதியான வன்முறைகள், தண்டனை மற்றும் குற்ற நோக்கில் ஆண்-பெண்பேதம் போன்றவை)

பர்தா முறையானது, இவ் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பை அளித்து, இஸ்லாமியப் பெண்டிருக்கு கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்குகிறதா என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

குடும்பத்துள் நிகழும் வன்முறைகள்:


1.  இஸ்லாமிய சமுதாயத்தில் பெரிய அளவில் குடும்பத்துள் நிகழும் வன்முறைகள் நிகழ்கின்றன. ஐநா அமைப்பின் பாபுலேஷன்ஃபன்ட் தெரிவிப்பது என்னவென்றால், உலகிலேயே பெண்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடுபங்களாதேஷ் என்பதுதான். பங்களாதேஷ் ஒரு இஸ்லாமியநாடு என்பது நாம் அறிந்ததே. அதுமட்டுமல்ல, அங்குகொல்லப்படும் பெண்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தங்களது கணவன்மார்களாலேயே கொல்லப்படுகின்றனர்.


2. கணவன்மார்களால் கொல்லப்படுவது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்லாமிய நாடுகளில், உறவினர்களாலும் குடும்ப கெளரவத்தைக் காப்பதற்காக ஏராளமான (பர்தா அணிந்த) முஸ்லீம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். உதாரணமாக, ஈரானின் அரபு முஸ்லீம்கள் குசேஸ்தான் மாநிலத்தில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட ஓர் கணிப்பின்படி, இரண்டே மாதங்களில் கெளவரவக் கொலைகளால் உயிரழந்த பெண்களின் எண்ணிக்கை 45 (இவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்). இத்தனைக்கும் ஈரானில் கடந்த 24 வருடங்களாக கட்டாயப்படுத்தப்பட்ட பர்தா முறை அமுலில் இருக்கிறது (பர்தா அணியாமல் வெளியேவரும் பெண்களுக்கு 74 சவுக்கடிகள்வரை கொடுக்க சட்டம் உள்ளது). ஜோர்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இத்தகு கெளரவக் கொலைகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் உள்ளது. கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர், அப்பெண்ணைக் குடும்பக் கெளரவத்தைக் காப்பதற்காக கொன்றோம் என்று நிறுவினால், வெறும் ஆறு மாத சிறைத் தண்டனைதான். இது போன்றே பல இஸ்லாமிய நாடுகளிலும் இத்தகைய கெளரவக் கொலைகள் தொடர்கின்றன என்று யூனிசெஃப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

3. எஸ்.கே அவர்களின் 'மெய்தீண்டல்' கட்டுரையை துணைக்கு அழைத்திருக்க தெரியாமலிருக்க வாய்ப்பில்லை, இத்தகு மெய்தீண்டலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் நெருங்கிய உறவு முறையில், அக் குழந்தைகள் நன்கு அறிந்த, அவர்களுடன் அன்றாடம் பழகக்கூடியவர்கள் தாம். இவர்கள், இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்ட மஹராம் உறவுமுறையைச் சேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பதால், இஸ்லாமிய நாடுகளில் 'மெய்தீண்டல்கள் ' நிறையவே நடக்கின்றன. பர்தா முறையினால், இஸ்லாமிய கண்ணோட்டங்களினால், இத்தகைய பாதிக்கப்பட்டோர் வெளியில் இதைச் சொல்லவும் முடிவதில்லை.

4. இதுமட்டுமல்ல, தங்களது மனைவியரை, கணவன் அடிக்கலாம் என்ற இஸ்லாமிய சுன்னாவின் மூளைச் சலவைகாரணமாக, இஸ்லாமியப் பெண்கள் மற்ற சமுதாயப் பெண்டிரைப் போல எதிர்ப்பு காட்டுவதில்லை, புகார் செய்வதில்லை. இஸ்லாமிய நாடுகளில், காவல் நிலையங்களிலும் புகார் பெற மறுத்து விடுகின்றனர். மீறி போலீஸில் புகார் கொடுப்போர் மீதே, நடத்தை கெட்டவள் என்ற புகார் தரப்பட்டு, பாதிக்கப்படுவோரே மேலும் மேலும் இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றனர்.5. பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமியப் பெண்டிருக்கு, இருவகைத் துன்பம். இஸ்லாமிய கோட்பாடுகளின், கலாச்சார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் செய்யப்படும் வன்முறைகள் தவிர மண்வழிக் கலாச்சாரத்தின் பாதிப்புகளும் தொடரத்தான் செய்கின்றன. உதாரணமாக பங்களாதேஷில் நிகழும் வரதட்சினைக் கொடுமை. இதைச் சுட்டிக் காட்டினால், இவ் வரதட்சினைமுறை இஸ்லாத்துக்கு எதிரானது என்றும் இது இந்து மதத்தின் தாக்கம் என்றும் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இப்படி வாங்குபவர்களுக்கு எதிராக பெயரளவில் மட்டுமே கூப்பாடு போட்டுவிட்டு, இஸ்லாத்தின் பெண்கள் நிலை பற்றி எழுதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமே தாக்குதல்கள் நிகழ்த்துகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடனே, இதற்குத் தீர்வு இஸ்லாமியமயமாக்கல் என்றால், இதற்குமாற்றாக இஸ்லாம் பரிந்துரைக்கும் ’மஹ்ர்’ என்னும் பெண்விலையின் விளைவுகளோ இதைவிட பயங்கரமாகவே உள்ளன.

6. அரபுநாடுகளில் நிகழ்வில் இருக்கும் இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'பெண்விலை' எனப்படும் மஹ்ர் கட்டணத்தின் எதிர்விளைவாக, அங்கிருக்கும் கிழவர்கள் எல்லாம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருக்கும் ஏழைப் பெண்களை விலைக்கு வாங்கி (இஸ்லாத்தின் அனுமதியோடு எந்தவிதக் குற்றஉணர்வும் இல்லாமல்) அனுபவித்துவிட்டு, போகும்போது விபச்சார விடுதிகளில் (முத்தலாக் சொல்லிய பிறகு) விற்று செலவழித்த பணத்தில் கொஞ்சத்தை திருப்பி எடுத்துப் போவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்படி நடந்து கொள்பவர்களில் பலர், 'தூய' இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் சவுதிப் பெரியவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், முஹம்மதுவின் வழிமுறைகளான ’சுன்னா’ காட்டிய எடுத்துக்காட்டின் அடிப்படையில், அறுபது வயதுக் கிழவர்கள் ஆறு வயது சிறுமிகளையும், முறையாகத் திருமணம் செய்து கொள்ளமுடிகிறது. ஈரானில் ஒன்பது வயதுப் பெண்ணை(சிறுமி) சட்டரீதியாகவே திருமணம் செய்து கொள்ளலாம். இத்தகைய பொருந்தாத் திருமணங்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏராளமாக நிகழ்கின்றன. இப்படி சின்னஞ் சிறுமிகளை 'நிக்காஹ்' புரிவதும் கற்பழிப்புக்கு நிகரானது என்பதை முஹம்மது நபியின் வழிமுறைகளான ‘சுன்னா’ அவர்களது கண்களை கட்டி விடுவதால் எந்தமார்க்க 'அறிஞரும் ' தீவிரமாக கண்டிப்பதில்லை.7. இது தவிர பெண்களின் கிளிட்டோரிஸை துண்டித்து அவர்களின் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயலும் வழக்கமும் இஸ்லாமிய சமுதாயத்தின் சில குழுக்களிடையே இருக்கின்றன. இஸ்லாமிய நாடான சோமாலியாவில், 90 சதவிகிதம் பெண்களுக்கு இந்தகிளிட்டோரிஸ் துண்டிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய பெண்களுக்கான சுன்னத்தின் விளைவாக செக்ஸ் என்றாலே அவர்கள் அலற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆண்களுக்கு மட்டும்தான் இன்பம், அனுபவிக்கப்படும் பெண்களுக்கு கனவுகளில்கூட அச்சமூட்டும் துன்பமே மிஞ்சுகிறது.

8. பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில், பஞ்சாயத்தாரே இஸ்லாமிய சட்ட திட்டங்களின் படி கொடூரமான தண்டனை வழங்குவதும் நடக்கிறது. உதாரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், உயர் ஜாதிப் பெண்ணை காதலித்த ஒரு முஸ்லீம் இளைஞனின் சகோதரி, பஞ்சாயத்தார் உத்தரவின் பேரில் கூட்டுக் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டாள். பின் அவளை அனைவர் முன்னாலும் நிர்வாணமாக நடக்கச் செய்தனர். கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல் என்ற இஸ்லாமிய சட்டக் கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டது.


சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள் :


1. இஸ்லாமிஸ்ட்டுகளின் பிரச்சாரங்களில் அமெரிக்காவின் கற்பழிப்புக் குற்ற எண்ணிக்கைகளை சுட்டிக்காட்டியே பெரும்பாலும் பிரச்சாரம் நடைபெறுகிறது. பொதுவாகவே இஸ்லாமிய நாடுகளில் பர்தாமுறையின் காரணமாக வெளிவந்து புகார் அளிப்பதே மிகஅரிதாக இருக்கிறது.

2. கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத்சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப்பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண்சாட்சிகளை ஒரு பெண்சுட்டிக்காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவுவைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமியஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புபற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.

3. இது மட்டுமல்லாது, ஷரியத் சட்டங்கள் அமலில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலும், மண்வழி மற்றும் மதவழிக்கலாச்சாரத் தாக்கத்தாலும், மதரீதியாக செய்யப்படும் மூளைச் சலவையினாலும் பெண்கள் முன்வந்து கற்பழிக்கப்பட்டதாக அறிவிப்பது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் அரிதாகவே இருக்கிறது. உதாரணமாக, இஸ்லாமிய நாடுகளில் ஓரளவிற்கு முன்னேறிய நாடாக விளங்கும் துருக்கியிலேயே, 90 சதவிகித கற்பழிப்புகள் போலீசாருக்கு புகார் செய்யப்படாமலே போகின்றன என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது.

4. கூட்டுக் கற்பழிப்புகளும் இஸ்லாமிய நாடுகளில் பெரிய அளவில் நடக்கின்றன. பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் தேடமுடியாமல் இஸ்லாத்தால் தடுக்கப்படும் இளைஞர்கள், தீவிர இஸ்லாத்தைப் பின்பற்றும் மதக்குழுக்களில் சேர்ந்து, சில இஸ்லாமிய குழுக்களை காஃபிர்கள் என்று அறிவித்து அவர்களின் பெண்களை கூட்டமாக கற்பழிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது (காஃபிர்களின் பெண்டிரைக் கற்பழிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒன்றாகும்). ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லீம்களை காஃபிர்கள் என்று அறிவித்த பின் இத்தகைய கூட்டுக் கற்பழிப்புகளில் முஜாஹித்தீன் (அல்லாஹ்வின்வீரர்கள்) குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன. அது போன்று, ஒரு முஜாஹித்தீன் குழுவின் கை ஓங்கும் போது, அப் பகுதியில் வசிக்கும் வேற்று இன முஸ்லீம்களின் பெண்களை இத்தகைய அல்லாஹ்வின் வீரர்கள் கற்பழிப்பது, அடிமைகளாக்கிக் கொள்வது போன்றவையும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பக்கத்தில் உள்ள ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, இஸ்லாமிய கோட்பாடுகளை தீவிரமாக அமல் செய்ய ஏற்பட்ட சூடானின் அரசும் கூட அங்குள்ள அரபி அல்லாத முஸ்லீம் பெண்களை கூட்டம் கூட்டமாகக் கற்பழித்ததை ஐநாவின் பல்வேறு அமைப்புகள் பதிவுசெய்து பதிப்பித்துள்ளன.

5. பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுவதும் பல முஸ்லீம் நாடுகளில் நிகழ்வில் உள்ளது. சமீபத்தில் கொலும்பில் நடந்த யூனிசெஃப் கருத்தரங்கில், பங்களாதேஷிலிருந்து ஐந்து லட்சம் பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பங்களாதேஷ் பெண்கள் (ஏறத்தாழ அனைவருமே முஸ்லீம்கள்தாம்) பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தானுக்கு இரண்டு லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். பங்களாதேஷில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை நிலவுவதாகவும் (ஆசிட் எறிதல், கற்பழிப்புகள், தற்கொலைக்கு தூண்டப்படுதல்), 72 சதவிகிதம் பெண்கள் குடும்பத்தில் வன்முறைக்கு உள்ளாவதாகவும் யூனிசெஃப் தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் குழந்தைத் திருமணத்தின் சதவிகிதம் 70%! இதுவும் யூனிசெஃப் குறிப்பிடுவதுதான்.

6. இது தவிர, தீவிர இஸ்லாம் அமலில் இருக்கும் சவுதிஅரேபியா போன்ற நாடுகளால், ஏனைய நாடுகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் அதிகரிக்கவே செய்கின்றன. வளம் படைத்த சவுதியின் ஷேக்குகள் மேற்கின் விபச்சார விடுதிகளிலெல்லாம் விழுந்து கிடக்கின்றார்கள்(இது குறித்து நைபால் கிண்டலடித்தது நினைவிலிருக்கும்), வசதி குறைந்தவர்கள் பஹ்ரைனுக்கும், துபயிக்கும் வார இறுதிகளில் சென்று ஈடுபடுகின்றனர். ஏழை சவுதிக்களோ, மதராஸாக்களிலிருந்து மற்ற நாடுகளுக்கு முஜாஹிதீன்களாக ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு போய் கற்பழிப்புகளிலும் ஏனைய வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர். ஈரானில் விபச்சாரத்திற்கு மரணதண்டனை வழங்கினால், பாகிஸ்தானுக்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட் displaced sexual violenceஐத்தா ன்சவுதிஅரேபியா, ஈரான் போன்ற தீவிர முஸ்லீம்நாடுகள் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.

அரசால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் :


1. இதில் முதலிடம் வகிப்பது, பெண்களுக்கு எதிராக இஸ்லாத்தின் பெயரில் இயற்றப்பட்டு, செயல்படுத்தப்படும் அல்லாஹ்வின் சட்டங்கள்தாம். ஷரியத் என்று அரபியில் அழைக்கப்படும் இந்த அல்லாஹ்வின் சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், எதோ ஒருவகையில் அனைத்து இஸ்லாமிய நாடுகளுமே இந்த ஷரியத்தின் கூறுகளை தம்மிடையே கொண்டுள்ளன. மென்மையான சட்டங்கள் கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளில், ஹூதூது எனும் கடுமையான, கொடூரமான இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை கொண்டு வரவேண்டும், அதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கூக்குரலிட்டு வருகின்றனர்.

2. இந்த அல்லாஹ்வின் சட்டங்கள், பெண்களுக்கு எதிராக மிகவும் பாரபட்சமான முறையில் உள்ளன. மேலே குறிப்பிட்டிருந்தார் போல, இந்த அல்லாஹ்வின் சட்டங்களின் காரணமாக கற்பழிக்கப்பட்ட பெண், அதை உறுதிப்படுத்தும் நான்கு ஆண்சாட்சிகள் இல்லாமல் வெளியே வந்து புகார் தரமுடியாது. பாகிஸ்தானில் சிறையில் உள்ள பெண் கைதிகளில் 80 சதவிகிதத்தினர், இந்த ஹூதூது சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டவர்களே. இவர்கள் மீது நடத்தை கெட்டவர்கள் என்ற மதக் குற்றச்சாட்டு இருப்பதால், சிறையிலும் இவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகிறார்கள். 1980 லிருந்து 1987 வரை பாகிஸ்தானின் ஃபெடரல் ஷரியத் கோர்ட்டில் மட்டும், 3349 குற்றச்சாட்டுகள் பதிவாயின. இது ஒரு சிறுதுளியே என்கிறார் அஸ்மாஜ ஹாங்கீர்!. இச்சட்டத்தின் எதிரொலியாக, கற்பழிக்கப்பட்ட பெண்கள் மீது ஜினா எனும் நடத்தை கெட்டவள் என்ற குற்றம்சாட்டப்பட்டு, அவர்களுக்கே தண்டனை தரப்படுகிறது. உதாரணமாக, 2002ல் ஜஃப்ரான் பீவி என்ற முஸ்லீம் பெண், அவளது கணவனின் சகோதரனால் கற்பழிக்கப்பட்டாள். கற்பழித்தவனுக்கு தண்டனை தருவதற்கு பதிலாக, அங்குள்ள  ஷரியத்கோர்ட்டு, அவளைக் கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு தீர்ப்பளித்தது. தொடர்ந்து உலக நாடுகள் எல்லாம் இத்தீர்ப்பைக் கண்டிக்கவே, ஜஃப்ரான் பீவிக்கு விடுதலை கிடைத்தது.

3. இது மட்டுமல்லாது, இஸ்லாமிய நாடுகளில், அரசின் வன்முறைக்கும் நேரடியாக பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை மேற்கு நாடுகளைவிட மிகவும் அதிகமாகவே இருக்கின்றது. கல்வியிலும், வசதியிலும் முன்னேறிய இஸ்லாமிய நாடான துருக்கியில், குர்து இனப் பெண்கள், அலெவி பிரிவுபெண்கள் (இவர்களெல்லாம் முஸ்லீம்கள்தாம்), எதிராகக் கடுமையான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் டாகுமென்ட் செய்துள்ளன. ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் தீவிர இஸ்லாமியப் பிடிப்புள்ளவர்கள் நடத்தும் அரசே பல சமயங்களில் கூட்டுக் கற்பழிப்புகளுக்கும், ஏனைய பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் உடந்தையாக இருந்திருக்கின்றன.

மேலே நான் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களைப் பார்க்கும் வாசகர்கள், இந்தியாவில் மட்டும் என்ன வாழுது? என்று கேட்கக்கூடும். உண்மைதான், நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், நான் இங்கு சொல்ல வருவது என்னவென்றால், இஸ்லாமிய கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்னவோ முஸ்லீம் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பையும், கண்ணியத்தையும் தருவது போலவும், மேற்கத்திய நாடுகளில் பன்மடங்கு வன்முறை நிகழ்வது போலவும் செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படை முரண்களையே இங்கு முன்வைத்துள்ளேன்.

மற்ற சமுதாயங்களில் இம் மாதிரியான விஷயங்கள் இருக்கிறது என்றால், அப்புறம் பர்தா மட்டும் எப்படி பாதுகாப்பை வழங்குகிறது என்று இஸ்லாமிஸ்ட்டுகள் வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. இஸ்லாமிய சமுதாயங்களைவிட அமெரிக்காவில் பெண்களுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் இருக்கிறது. கராச்சியைவிட, முஸ்லீம் பெண்களுக்கு மும்பையில் அதிகபாதுகாப்பு இருக்கிறது. பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் மீது இஸ்லாமிய நாடுகளில் நடத்தப்படும் வன்முறைகளைவிட, பர்தா அணியாத முஸ்லீம் பெண்களுக்கு மேற்கத்திய நாடுகளில் மிகவும் குறைவாகவே வன்முறைகள் நடக்கின்றன. இது மேற்கில்வசிக்கும், வசித்த அனைவரும் அறிந்த ஒன்றே! இந்நிலையில், வெளிப்படையாக பதிவு செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து, மேற்கில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பையும், மரியாதையையும் வழங்குகிறது என்று எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறார்கள் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பது புரியவில்லை.

இக்கேள்விகளை முன்வைத்தால், அதற்கு இஸ்லாமிஸ்ட்டுகளின் பதில்வாதமாக, இத்த குகுற்றங்களுக்கு காரணம், அல்லாஹ்வின் கட்டளைகளை 'சரிவர' அமல்படுத்தப்படுவதில்லை, அல்லாஹ்வின் சட்டங்களை ஷரியத் நீதிபதிகள் சரிவர ஆய்ந்து தீர்ப்பளிப்பதில்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், இஸ்லாமிய மயமாக்கலுக்கும், பெண்களின் மீதான வன்முறைகளுக்கும் ஓர் நேரடி வளர்தொடர்பு இருப்பது என்பதுதான். ஹம்சா ஆலவி குறிப்பிடுகின்றார், 'பாகிஸ்தானில் இஸ்லாமிய மயமாக்கலைத் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன, மத அங்கீகாரம் அவற்றுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய மயமாக்கல் என்ற கூப்பாடு, பெண்களுக்கெதிரான வன்முறையை அதிகரித்தது. இதை முன்னின்று நிகழ்த்தியவர்கள் முல்லாக்கள்'. பாகிஸ்தானிய முஸ்லீம் (பெண்) ஆய்வாளர் ஜாஸ்மின் மிர்ஜா குறிப்பிடுகின்றார், 'Women were the primary target of Zia 's decade of Islamization'. மேலும், இஸ்லாமிய நாடுகளில் செயல்படும் அநேகமாக அனைத்து பெண்கள் இயக்கங்களும், இந்த சம்பந்தத்தை உணர்ந்து அதன் காரணமாக இஸ்லாமியமயமாக்களை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், இத்த குகுற்றங்களுக்கு, குற்றவாளிகளுக்கு மத அங்கீகாரம் வழங்கப்படுவது, அக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறவும், குற்றவாளிகள் எவ்வித தண்டனையும் பெறாமல், சமூக அந்தஸ்துடன் உலவவும் வழிவகை செய்துவிடுகிறது.

இதெல்லாம் பல முஸ்லீம் பெண் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. பல முஸ்லீம்களும் இவற்றைக் கண்டித்து, சமுதாயத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து கொண்டுதான் இருக்கின்றனர். மதம் கண்ணை மறைக்காத அனைவருக்கும் இத்தகைய உண்மைகள் கண்ணில்படுகின்றன. பேசாப் பொருளைப் பேசி ஃபத்வா வாங்க துணிபவர்கள் குறைவு என்பதால், இதெல்லாம் ஸீனா-ப-ஸீனாவாகவே(இதயத்திலிருந்து இதயத்துக்கு) போய்விடுகிறது. அல்லது இஸ்லாமிய மெளன வெளியில் ஆழ்த்தப்பட்டு, அடக்கம் செய்யப்படுகின்றது.

நிதர்சனங்களை மறுதளிப்பதும், வரலாற்றையும் நிகழ்வுகளையும் திரிப்பதும், தமது மதநம்பிக்கைகள் கண்ணை மறைக்க, அவற்றை அறிவியல் பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் சரியென நிறுவ முன்பின் முரணானவாதங்களை முன்வைப்பதுமே இஸ்லாமிஸ்ட்டுகளின் வழக்கமாக இருக்கிறது. இந் நிலையில், முஹம்மதிஸ்ட்டுகளின் வாதங்களில் தென்படும் இடைவெளிகள், முரண்பாடுகளைக் காட்டவே இக்கட்டுரைதொகுப்பு : குரங்கின் தூதுவன்

Tuesday 3 February 2015

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !
நன்றி: புதிய கலாச்சாரம்

கடவுள் பிடிபட்டார்

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை ‘வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் ‘கடவுளை’ அப்புறப்படுத்த முடியவில்லை.
எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. “நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!” “என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?” ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.
புறவய உலகத்தின் ‘தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் ‘உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் ‘கண்டு’, பிறகு அதனை ‘விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
•••
முதலில் ‘படைப்பு ரகசியம்’ பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hadron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.

“இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்” என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், “உலகம் அழியுமா, அழியாதா?” என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் ‘அழியாது’ என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big Bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (Mass and Weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.
புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் ‘ஹிக்ஸ் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (Mass) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை ‘கடவுள் துகள்’ (God Particle) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.

களிமண்ணை உருட்டினால் கடவுள்!
கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!

‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை தோற்றுவிட்டால்? “40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!” என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.
“எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்” என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், ‘அவிசுவாசிகள்’ உருவாக்கிய கணினியின் வழியே, ‘தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி’யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?

வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.
“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும்.
“இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. “கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர்களை ‘சமாதானப்படுத்தினார்’ ராமச்சந்திரன். அப்படியொரு ‘ஆன்மீக ஆன்டனா’வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், ‘அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர்இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
ஏசு இறங்கினாரா?
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.
பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, “ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.


இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து ‘கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் ‘சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை.
உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.
எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், ‘கல்விச் சுதந்திரம்’ என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.

‘டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்’ என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).
விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். “குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?” என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.

“அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

மருதையன்
புதிய கலாச்சாரம், அக்’08 இதழிலிருந்து