ஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருத்ந்தபோது TNTJTTj வகையராக்கள் ரிஸானா நபீக் என்ற சிறுமிக்கு
மரண தண்டனை வழங்கப்பட்டதைக்குறித்து “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்” (நிச்சயமாக நாம்
அல்லாவுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக அவனிடமே திரும்ப வேண்டியவர்களாக
இருக்கிறோம்) என்ற வாசகத்தை முன்னிருத்தி குற்றம் செய்திருந்தாலும் இந்த
தண்டனை மிக அதிகமானதே; ஒரு வேளை குற்றம் செய்யாது இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால்
அப் பெண்ணிற்கு சொர்க்கம்
கிடைக்கும். அதற்கு பிரார்திப்போம்” என்ற செய்திகள்
உலாவந்தன. ஆனால் அவர்களது அவுலியா இந்த தண்டனையை வரவேற்றும் மனுஷ்யபுத்திரனனை
கேவலமாக விமர்சித்தும் தமது இணையதளத்தில் கட்டுரையை எழுதியதும் சொந்த புத்தி
எல்லாம் அவுலியாவுக்கு அடகு போய் தண்டனையை ஆதரித்தும் மனுஷ்யபுத்திரனனை கடுமையாக
திட்டவும் தொடங்கிவிட்டனர். இந்த செய்திக் குறித்து விபரம் ஏதும் தெரியாத நிலையில்
இருந்தபோது நக்கீரனில் வந்துள்ள மனுஷ்யபுத்திரனின் கட்டுரையை சுட்டிக்காட்டி
தொலைபேசியில் ஒரு தோழர் விபரம் கூறினார். அதனைப் படித்த பிறகு மேலும் செய்திகளை
அறிந்துகொள்ள இணைய இணைப்பில் அமர்ந்தேன். அப்பொழுது இசுலாமியர்கள் நிறைய உள்ள ஒரு பிரபலமான ஊரில் இருந்தேன். அந்த
புரோஸிங் சென்டரும் ஒரு இசுலாமியருடையது. யுடியூப்பில் ரிஸானா நபீக் தலை
வெட்டப்படும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது என் இதயம் கனக்க,
வயிற்றுக்குள் ஒருவர் கையைவிட்டு பிசைவதுபோன்று திணறல் ஏற்பட்டது. அநாகரீக
காலத்திலிருந்து இந்த இசுலாமியர்கள் மாறவே மாட்டார்களா என்ற கேள்விக்குறியுடன்
என்னை இயல்பு நிலைக்கு திருப்ப சற்று எழுந்து நகர்ந்து நின்றேன்.
அருகில் அதனை பார்த்துக்கொண்டிருந்த தாடியும் மீசையும் மழித்து
சிவந்த நிறத்திலிருந்த இசுலாமிய இளைஞர் ஒருவர் “இவனுக காட்டுப் பு.... மவனுக” என்று கூறிவிட்டு
வெளியேறிவிட்டார். இன்னொரு இளைஞர் எதற்கு இந்த தண்டனை என்ற விபரம் அறியாது “இப்படி
எல்லாம் தண்டனை கொடுத்தாலும் தப்பு பண்றவன் தப்பு பண்ணிக்கொண்டுதானே இருக்கான்” என்றார். தண்டனை
பற்றி சிறு விபரம் கூறியதும் மௌனமாகிவிட்டார். மற்றொரு இளைஞர் “என்னங்க ரொம்ப
கொடுமையாக இருக்கிறது என்றார்.
ஒரு 55 வயது முதியவர் ஒருவர்
“சௌதியைப் பொருத்தவரை வேலை செய்யப்போகிறவர்கள் அனைவரையும் அடிமைகள் போல்தான்
நடத்துகிறார்கள். நாம் என்ன சொன்னாலும் அங்கே எடுபடாது. சௌதி என்ன சொல்கிறானோ
அதைத்தான் கேட்பார்கள், மலேசியாவிலும் அப்படித்தான்; மலேசிய முதலாளி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள்.
ஆனால் பங்களாதேசத்தவர்கள் கூறினால் எடுபடும்” என்று கூறினார்.
இவர்களில் முதலாம் நபர் தவிர பிறருக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும் என்பதால்
மேற்கொண்டு கருத்துக்கூறாமல் பேச்சு திசை திரும்பிவிட்டது.
ரிஸானா நபீக்
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் சௌதியிலுள்ள Naif Jiziyan kalaf Al- otaibi என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பாத்திரம்
பண்டங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தையைப் பராமரிப்பது அவளுக்கு
இடப்பட்ட வேலைகள். 2005 மே மாதம் 25 ஆம் நாள் அதாவது ஒருமாத்தில் தனது முதலாளியின்
4 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டார் என்று சிறையிலடைக்கப்பட்டார்.
குழந்தையின் தாய்
வெளிச்சென்றிருக்கும்போது குழந்தைக்கு ரிஸானா நபீக் புட்டிலிருந்து பால் புகட்டியுள்ளார். அப்படி பால்
கொடுத்துக் கொண்டிருக்கும்போது மூக்கு வழியாக பால் வந்ததாகவும், அதனை
துடைத்துவிட்டும் தொண்டையை தடவி விட்டுவிட்டும் குழந்தையை தொட்டியில் படுக்கவைத்ததாகவும்
ரிஸானா நபீக் கூறுகிறார். ஆனால் முதலாளியம்மாள், குழந்தையை கழுத்தை
நெறித்து கொன்றுவிட்டதாக கூறி ரிஸானாவை தனது செருப்பால் கன்னங்களில் மாற்றி மாற்றி அடித்துள்ளார். அதனால் ரிஸானாவின் கன்னத்தில் காயங்களும் மூக்கில் இரத்தமும்
வடிந்துள்ளது. அதே நிலையில் சௌதி போலீசில் புகார் செய்ய ரிஸானா நபீக் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திலும் அடித்து
துன்புறுத்தப்பட்டுள்ளார். போலீஸ் ரிஸானாவை மிரட்டி ‘கழுத்தை நெறித்து கொன்றதாக’ வாக்கு மூலம் பெற்று வழக்குத்
தொடர்ந்தது.
ஜூன் 16, 2007 அன்று தவாமி
நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல்லா அல் ரோஸ்மி, சரியத் சட்டப்படி ரிஸானாவுக்கு மரண தண்டனை வழங்கி மேல் முறையீடு செய்துகொள்ளவும்
அனுமதி அளித்தார். முறையான மொழிபெயர்பு வசதியும், வழக்காட வழக்கறிஞர் வசதியும் ரிஸானா நபீக்குக்கு வழங்கப்படவில்லை என்று சர்வதேச மனித உரிமை
அமைப்புகள் கூறியுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) ரிஸானா நபீக்காக சௌதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
எப்படியும் தண்டனை உறுதி என்னும் நிலையை உணர்ந்த அவர்கள், குற்றம் சாட்டப்பட்டபோது
ரிஸானாவின் உண்மையான வயது பதினேழுதான் என்பதை ரிஸானா நபீக்கின் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் ஆகியவற்றைக்
ஆதாரமாகக்கொண்டு சர்வதேச குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று
கோரியுள்ளனர். வேலை கிடைக்கவேண்டும் என்பதால் வயதை கூடுதலாகச் சொல்லி ஏஜென்ட்
மூலம் கடவுட் சீட்டு பெற்றுள்ளதாகவும் வாதாடினர். உச்சநீதிமன்றமோ
கடவுட்சீட்டிலுள்ள வயதையே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று அவர்களின் கோரிக்கைகளை
நிராகரித்துவிட்டது.
சரியத் சட்டத்திற்கு வயது ஒரு
பொருட்டல்ல. அது குழந்தையாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் நிலை ஒன்றுதான்.
அதுபோக ஒரு பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்துவிட்டாலே அவள் முழு முதிற்சியடைந்த
பெண்தான் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதுபோல ஒரு பையனுக்கு விந்து என்று ஒன்று
வெளிவந்துவிட்டாலே அவன் முதிற்சியடைந்த ஆண் என்பதும் அவர்களின் நிலைப்பாடு.
அதனால்தான் முகம்மதுநபி 6 வயதுடைய ஆயிஷாவை மணந்து 9 வயதில் உறவுகொண்டதை
நியாப்படுத்துகிறார்கள். நியாப்படுத்த முடியாதவர்கள் அது முகம்மதுநபிக்கும்
ஆயிஷாவிற்கும் வழங்கப்பட்ட சிறப்பு சலுகை என்கின்றனர். அது அப்படி அல்ல என்பதை
பின் வரும் செய்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
(Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded
that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still
alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad
b.
‘Abdu’l-Asad al-Makhzumi married her and she bore him Rizq
and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311).
(தவழ்ந்து
கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்". ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார்.
Musnad Ahmad: 25636
Muhammad saw Um Habiba the daughter of Abbas while she
was fatim (age of nursing) and he said, "If she grows up while I am still
alive, I will marry her."
(அப்பாஸ் என்பவரின்
மகள் உம்மு ஹபீபா என்ற குழந்தையைக் கண்ட நபி (ஸல்), "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்". என்று கூறினார்)
ரிஸானா நபீக் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில கேள்விகள்:
1. பிறந்து 4 மாதமேயான பச்சிளங்குழந்தையை
ஒரு சிறுமியிடம் பராமரிக்க கொடுத்துவிட்டு தாய் வெளியில் சென்றது என்னவகை நியாயம்
என்று தெரியவில்லை. அது முதல் தவறு. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த அம்மாவே
பொறுப்பேற்க வேண்டும்.
2. வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் குழந்தையை கொல்லும் அளவுக்கு ஒரு
சிறுமியின் மனதில் குரோதம் ஏற்பட எவ்வித காரணமும் இல்லை. தனியாக நாடுகடந்து நாடு
சென்று வாழும் ஒரு ஏழைச் சிறுமிக்கு ஒரு குறுகிய காலத்தில் மனக்குரோதம் ஏற்படும்
என்று சொல்வோமானல் அவரைப்போல ஒரு அறிவிலி எவரும் இல்லை. இம் மரணம் ஒரு விபத்தாகவே
கருதவேண்டும். ஆனால் நீதிமன்றம் அதனை பரிசீலிக்கவே இல்லை.
3. ஒருவேளை அச்சிறுமி கொலை செய்திருந்தால் இயல்பாக குழந்தையை தொட்டியிலிட்டுவிட்டு
மூக்கில் பால் வடிந்ததாகவெல்லாம் முதலாளியம்மாளிடம் கூறியிருக்க மாட்டாள். பயந்துபோய்
என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்திருக்கவேண்டும். அப்படி ஏதும்
அறியாததுபோல் கூற வேண்டுமானால் கொலைசெய்து அனுபவப்பட்டிருக்க வேண்டும். வயிற்றுப்
பிழைப்புக்காக பெற்றோர்களைப் பிரிந்து வெளிநாடு சென்றுள்ள ஒரு சிறுமியிடம் கொலை
செய்த அனுபவங்கள் உள்ளதுபோல் போலிசும் அநீதிமன்றமும் நடந்துகொண்டது மனித
இனத்திற்கே ஒரு அவமானம்.
4. கழுத்தை நெறித்து குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி கழுத்தை நெறித்து கொலை
செய்திருந்தால் குரல்வலை உடைந்திருக்கும். பிரேத பரிசோதனையில் உண்மை தெளிவாக
தெரிந்திருக்கும். ஆனால் சௌதி போலீசும் அநீதிமன்றமும் இந்த நவீனக்காலத்திலும்
பிரேதப் பரிசோதனை செய்து உண்மையை அறிய அக்கரை காட்டவில்லை. இது ரிஸானா நபீக்கு அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையே காட்டுகிறது.
5. கொலைக்கு சாட்சிகள் எதுவும் இல்லை. குழந்தையின் பெற்றோர்கள் தவிர பிற
சாட்சிகள் கிடையாது. அப்படி இருக்கும்போது பிரேத பரிசோதனை செய்யாமல், ரிஸானா நபீக்கிற்காக வாதாட வழக்கறிஞர்களுக்கு அநீதி மன்றம் ஏற்பாடும்
செய்யாமல் பெற்றோர்களின் குற்றச்சாட்டை மட்டுமே கொண்டு மரண தண்டனை வழங்கியது
கொடுமையிலும் கொடுமை.
6.
கொலைக்கான காரணம் எதுவும் எவரும் கூறவில்லை. கொலைக்கான காரணம்
என்று ஒன்று இருந்தே தீரவேண்டும். அதன் தன்மையைப் பொறுத்தே தண்டனைகள் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக் ஒருவர் தொடர்ந்து ஒருவரால் துன்பப்
படுத்தப் படுவதால் கெலை செய்தார் என்று எடுத்துக்கொண்டால் கொலை செய்தவருக்கு மரணதண்டனை
வழங்குவது நியாயமாகாது.
சூழ்நிலையும் மறுக்கப்பட்ட அறிவியல் ஆய்வும் குற்றமற்றவள் என்பதை உணர்த்தும்பொழுது
குறைந்தபட்ச சிறு தண்டனையை (அதுவே தவறு என்ற போதிலும்) வழங்கப்பட்டிருக்க
வேண்டும். அதுவே மனசாட்சியும் அறிவும் உடையவர்களின் செயலாகும். ஆனால்
கொடுமையான தலையை வெட்டி எரியும் தண்டனை ஏன்?
ஒரு சௌதியின் நலனுக்காக சரியத் சட்ட முகமூடி அவர்களுக்கு முக்கியம். இப்படி தண்டனைகள் வழங்குவதன் மூலம் பிற தொழிலாளர்களையும்
மிரட்டிவைக்கலாம் அல்லவா! கடுமையான தண்டனைகள் வழங்கினால்தான்
குற்றம் செய்பவர்கள் பயப்படுவார்கள் என்று ஊளையிடுபவர்கள் இங்கே சற்று யோசியுங்கள்.
அக்குழந்தை 4,5 வயது சிறு குழந்தை
என்றும் அவ்வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கார சிறுமி
விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் தவறி அல்லது வேலைக்காரப் பெண் கால் தடுக்கி குழந்தை
கீழே விழுந்து மண்டை உடைந்து இறந்துவிடுவதாக வைத்துக் கொள்ளவோம். அப்பொழுதும் குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்காரப் பெண் கொலை செய்துவிட்டாள் என்று
குற்றம் சுமத்த முடியும். இங்கேயும் சாட்சிகள் இல்லை. அப்படியானால் குற்றம் சுமத்தப்பட்ட வேலைக்காரப் பெண் தான் செய்யவில்லை என்று சொல்லுவதை
ஏற்று கொலைக்கான காரணச் சூழ்நிலைகள், பிரேதபரிசோதனைகள் செய்தும்
அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தீர்ப்பு செய்யவேண்டுமா அல்லது பெற்றோர்கள்களின் குற்றச்சாட்டைக்கொண்டே
தீர்ப்புச் சொல்வதா? ஒரு வேளை கொலையை நிருபிக்கவோ மறுக்கவோ முடியாத நிலை ஏற்படுமானால்
குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்வதே நியாயம். இங்கே குற்றம்சாட்டப்பட்ட வேலைக்காரப் பெண்ணின் வாக்கு மூலத்தை சௌதியின் அடியாள்
பிஜே சொல்வதுபோல் ஏற்றகக் கூடாது என்றால் அது நீதியா? மனசாட்சியற்ற மதவெறியா?
ரிசானாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான சரியத் சட்டம் பின்வருமாறு:
குரான் 2: 178 இறைநம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் பழிவாங்குதல் உங்கள்மீது விதியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும், அடிமைக்குப் பதிலாக அடிமையும், பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்படும்) எனினும் (கொலைசெய்யப்பட்ட) அவனுடைய சகோதர ர் மூலம் (கொலை செய்த) இவனுக்கு ஏதேனும் மன்னிப்பளிக்கப்பட்டால் அப்போது (கொலையாளி) நல்ல வழக்கமுறையைப் பின்பற்றி (அதற்கான ஈட்டுத்தொகை முதியவற்றை) நன்றியறிதலுடன் (கொலை செய்யப்பட்ட) அவ(னுடைய பாத்தியஸதரி)ன் பால் நிறைவேற்றுதல்
வேண்டும். இது உங்களுடைய இறைவனிடமிருந்து (உங்களுக்கு கிடைத்து)ள்ள சலுகையும் கிருபையைமாகும். ஆகவே இதற்குப் பிறகு எவரேனும் வரம்புமீறினால் அப்பொழுது அவருக்கு நோவினை அளிக்கும்
வேதனை உண்டு.
குரான் 2:179 நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழிதீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. நீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம்.
குரான் 5:45 மேலும் அ(வ்வேதத்)தில் நிச்சயமாக
உயிருக்குப் பகரமாக உயிரையும், கண்ணுக்குப் பகரமாக கண்ணையும், மூக்குக்குப் பகரமாக மூக்கையும், காதுக்குப் பகரமாக காதையும், பல்லுக்குப்பகரமாக பல்லையும் (பழிக்கப் பழிவாங்க வேண்டுமென்றும்) காயங்களுக்குப் பழிக்குப்பழி உண்டு என்றும் அவர்கள் மீது நாம் விதித்திருந்தோம். எனினும் எவரேனும் இதனை தர்ம மாக விட்டுவிட்டால் அது அவரு(டைய பாவத்துக்கு) பகரமாகிவிடுர். எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர்
அவர்கள்தாம் அநியாயக்கார ர்கள்.
(குர்ஆன் வசனங்களுக்கிடையில்
வரும் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களையும் தொடரந்தார்போல் சேர்த்தே படியுங்கள்.)
இச்சட்டம் ஒரு ஆடவனை நோக்கி கூறுகிறது. சுதந்திரமான உன்னை ஒருவன் கொன்றுவிட்டால் கொலைகாரனை உன் உறவினர்கள் கொலை செய்யலாம். உன்னுடைய அடிமையை ஒருவன் (சுதந்திரமானவன்) கொலை செய்துவிட்டால் அவனுடைய அடிமையை நீ கொலை செய்துக் கொள்ளலாம். உன் (சுதந்திரமானவன்) வீட்டுப் பெண்ணை ஒருவன் கொலை
செய்துவிட்டால் கொலை செய்தவனுடைய வீட்டுப் பெண்ணை நீ கொலை செய்யலாம் என்று கூறுகிறது. பாதிக்கப்பட்டவன் (சுதந்திரமானவன்) விரும்பினால் இழப்பீடுகள் (இரத்தப பணம்) பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னிக்கலாம். மன்னிக்க விருப்பம் இல்லை என்றால் பழிக்குப்பழியே விதியாகிவிடும்.
சுதந்திரமானவாக உள்ள ஒருவன் அதாவது அடிமையாக இல்லாத எஜமான் இன்னொரு
சுதந்திரமானவனின் சொத்துக்களான அவன் வீட்டுப்பெண்களையோ அல்லது அடிமைகளையோ கொன்றுவிடுவதனால்
ஏற்படும் இழப்பிற்கு, இழப்பை ஏற்படுத்தியவனின் வீட்டுப் பெண்களையோ அடிமைகளையோ இழந்தவன்
கொலை செய்து இழப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது மட்டுமே இச்சட்டத்தின் குறிக்கோள். கொலை செய்தவனை கொல் என்று இச்சட்டம் கூறவில்லை
மனித உயிர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதான மனிதாபிமானச் சட்டம் அல்ல இது. அதனாலேயே இழப்பை இரத்தப்பணம் என்கிறது. பெண்கள்கூட ஒரு சொத்து என்பதையும் கூடுதலாக இச்சட்டம் நமக்கு புரியவைக்கிறது.
இச்சட்டம் சரிதானா என்று சிந்தித்துப்பாருங்கள். கொலை செய்தவன் ஒரு சுதந்திரமானவனாக அதாவது இன்றையக் காலத்தில் முதலாளியாக இருந்தால்
அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த ஒருவரை கொலை செய்தால் அவன் வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள
இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச் சொல்லுகிறது. எஜமானர்களுக்கு சேவை செய்யும் சட்டம். இது ஒரு சீரிய சட்டம் என்றும், காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்.
கூடுதலாக குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்களில் அதி சிறந்தவர்
என்று போற்றப்படும் இப்னு கஸிர் என்பவரின் விளக்கத்தையும் படித்துக்கொள்ளுங்கள்.
The Command and the Wisdom behind the Law of Equality
Allah says;
O you who believe!
Al-Qisas (the Law of equality) is prescribed for you in case of murder: the
free for the
free, the slave for the
slave, and the female for the female. Allah states: O believers! The Law of equality has been
ordained on you (for cases of murder), the free for the free, the slave for the
slave and the female for the female. Therefore, do not transgress the set limits,
as others before you transgressed them, and thus changed what Allah has
ordained for them.
The reason behind this statement is that (the Jewish tribe
of) Banu An-Nadir invaded Qurayzah (another Jewish tribe) during the time of
Jahiliyyah (before Islam) and defeated them. Hence, (they made it a law that)
when a person from Nadir kills a person from Quraizah, he is not killed in
retaliation, but only pays a hundred Wasq of dates. However, when a person from
Quraizah kills a Nadir man, he would be killed for him. If Nadir wanted (to
forfeit the execution of the murderer and instead require him) to pay a ransom,
the Quraizah man pays two hundred Wasq of dates (double the amount Nadir pays
in Diyah (blood money)). So Allah commanded that justice be observed regarding
the penal code, and that the path of the misguided and mischievous persons be
avoided, who in disbelief and transgression, defy and alter what Allah has
commanded them. Allah said:
Al-Qisas (the Law of equality in punishment) is prescribed
for you in case of murder: the free for the free, the slave for the slave, and
the female for the female. Allah's statement:
(the free for the free, the slave for the slave, and the female for the
female) was abrogated by the statement life for life (5:45).
However, the majority of scholars agree that the Muslim is
not killed for a disbeliever whom he kills. Al-Bukhari reported that Ali
narrated that Allah's
Messenger said:
The Muslim is not killed
for the disbeliever (whom he kills). No opinion that opposes this ruling could
stand correct, nor is there an authentic Hadith to contradict it. However, Abu Hanifah thought that the Muslim could be killed
for a disbeliever, following the general meaning of the Ayah (5:45) in Surah
Al-Ma'idah.
The Four Imams (Abu Hanifah, Malik, Shafii and Ahmad) and
the majority of scholars stated that; the group is killed for one person whom
they murder. Umar said, about a boy who was killed by seven men, "If all
the residents of San`a' (capital of Yemen today) collaborated on killing him, I
would kill them all.'' No opposing opinion was known by the Companions during
that time which constitutes a near Ijma (consensus).
There is an opinion attributed to Imam Ahmad that;
a group of people is not killed for one person whom they
kill, and that only one person is killed for one person. Ibn Al-Mundhir also
attributed this opinion to Mu`adh, Ibn Az-Zubayr, Abdul-Malik bin Marwan, Az-Zuhri,
Ibn Sirin and Habib bin Abu Thabit.
Allah's statement:
But if the killer is forgiven by the brother (or the relatives)
of the killed (against blood money), then it should be sought in a good manner,
and paid to him respectfully. refers to accepting blood money (by the relatives
of the victim in return for pardoning the killer) in cases of intentional
murder. This opinion is attributed to Abu Al-Aliyah, Abu Sha`tha', Mujahid,
Sa`id bin Jubayr, Ata Al- Hasan, Qatadah and Muqatil bin Hayyan. Ad-Dahhak said
that Ibn Abbas said: (But if the killer is forgiven by the brother (or the relatives)
of the killed (against blood money), means, "the killer is pardoned by his
brother (i.e., the relative of the victim) and accepting the Diyah after
capital punishment becomes due (against the killer), this is the `Afw (pardon
mentioned in the Ayah).''
Allah's statement:
...then it should be sought in a good manner, means, when
the relative agrees to take the blood money, he should collect his rightful
dues with kindness: and paid to him respectfully. means, the killer should
accept the terms of settlement without causing further harm or resisting the
payment.
Allah's statement:
This is an alleviation and a mercy from your Lord. means
the legislation that allows you to accept the blood money for intentional
murder is an alleviation and a mercy from your Lord. It lightens what was
required from those who were before you, either applying capital punishment or forgiving.
Sa`id bin Mansur reported that Ibn Abbas said, "The Children of Israel
were required to apply the Law of equality in murder cases and were not allowed
to offer pardons (in return for blood money).
Allah said to this Ummah (the Muslim nation):
The Law of equality in punishment is prescribed for you
in case of murder: the free for the free, the servant for the servant, and the
female for the female. But if the killer is forgiven by the brother (or the
relatives) of the killed (against blood money). Hence, `pardoning' or
`forgiving' means accepting blood money in intentional murder cases.'' Ibn
Hibban also recorded this in his Sahih.
Qatadah said: (This is an alleviation from your Lord), Allah
had mercy on this Ummah by giving them the Diyah which was not allowed for any
nation before it. The People of the Torah (Jews) were allowed to either apply
the penal code (for murder, i.e., execution) or to pardon the killer, but they
were not allowed to take blood money.
The People of the Injil (the Gospel – the Christians)
were required to pardon (the killer, but no Diyah was legislated).
This Ummah (Muslims) is allowed to apply the penal code
(execution) or to pardon and accept the blood money.'' Similar was reported
from Sa`id bin Jubayr, Muqatil bin Hayyan and Ar-Rabi bin Anas.
Allah's statement:
So after this whoever transgresses the limits, he shall have
a painful torment. means, those who kill in retaliation after taking the Diyah
or accepting it, they will suffer a painful and severe torment from Allah. The
same was reported from Ibn Abbas, Mujahid, Ata Ikrimah, Al-Hasan, Qatadah,
Ar-Rabi bin Anas, As-Suddi and Muqatil bin Hayyan. The Benefits and Wisdom of
the Law of Equality
Allah's statement:
And there is life for you in Al-Qisas, legislating the
Law of equality, i.e., killing the murderer, carries great benefits for you.
This way, the sanctity of life will be preserved because the killer will refrain
from killing, as he will be certain that if he kills, he would be killed. Hence
life will be preserved.
In previous Books, there is a statement that killing
stops further killing! This meaning came in much clearer and eloquent terms in
the Qur'an: (And there is (a saving of) life for you in Al-Qisas (the Law of
equality in punishment).
Abu Al-Aliyah said,
"Allah made the Law of equality a `life'. Hence, how
many a man who thought about killing, but
this Law prevented him from killing for fear that he will
be killed in turn.'' Similar statements were reported from Mujahid, Sa`id bin
Jubayr, Abu Malik, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas and Muqatil bin Hayyan.
Allah's statement:
O men of understanding, that you may acquire Taqwa. means,
`O you who have sound minds, comprehension and understanding! Perhaps by this
you will be compelled to refrain from transgressing the prohibitions of Allah
and what He considers sinful.' Taqwa (mentioned in the Ayah) is a word that means
doing all acts of obedience and refraining from all prohibitions.
ஒரு முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்யப்பட்டால் அதற்காக ஒரு முஸ்லீமைக் கொல்லக்கூடாது என்று இசுலாமிய பெருமக்கள் கருதுவதாகவும் இப்னு கஸிர் கூறுவதையும் கவனியுங்கள்.
இச்சட்டப்படி...
1. சாட்சிகள் தேவையில்லை.
2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும், காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. முதலாளி முறையிட்டாலே போதும்.
3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம். யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. இச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லை. சாட்சிகள் இல்லை. சாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள், தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. எஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில்
தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா?
சமீபத்தில் நடந்த இன்னொரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். முஸ்லீம் நாடான ரியாத்திலுள்ள ஃபையான்
காம்தி என்ற மதகுரு தனது
பெண் குழந்தை
"லாமியா காம்தி"
யை கற்பழித்து கொலை செய்துள்ளான். மருத்துவ அறிக்கை அந்த
பெண்னின்
எல்லா உறுப்புகளிலும் சித்திரவதை
நிகழ்த்த
பட்டுள்ளதும்
அவளின் முதுகெலும்பு
உடைக்கபட்டதாகவும்,
மலவாயும் சிதைக்கப்பட்டு தீயினால் சுடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறது.
கற்பழிப்புகளிலிருந்து உலகப் பெண்களைப் பாதுகாக்க
வேண்டும் என்றால் புர்கா அணியவேண்டும் என்று கூப்பாடுபோடும் மதவெறியர்களே. பெற்ற தந்தையே
தன் குழந்தையை கற்பழிக்கும்போது புர்கா எவ்வாறு தடுக்கும்? அந்த குழத்தைக்கும்
புர்கா போடவேண்டுமோ? அல்லது தந்தைக்கு முன்பாகவும் ஒரு மகளும் வரக்கூடாது என்று
சட்டம் போடனுமோ? இசுலாமிய அறிவிலிகளே யோசிங்கள். இந்த காமக்கொடூரனுக்கு சரியத்
சட்டப்படி இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை அளித்துள்ளது அநீதிமன்றம். இதற்கு
இன்னொரு காரணமும் சொல்லி நியாப்படுத்துகறார்கள். அதாவது இந்தக் கொலைக்கு காரணம்
ஏதும் இல்லையாம். ரிசானாவுக்கு “காரணம்” ஆராயப்பட மறுத்தவர்கள் முல்லாவுக்கு “காரணம்
இல்லை” என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.
1. சரியத்சட்டப்படி குழந்தைகள் தந்தைக்கு
உடமையானவர்கள். அப்படியானால் இரத்தப்பணம் கற்பழித்த அந்த காமுகனுக்குத்தான் அதாவது
தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் குழந்தையின் அம்மாவிற்கு
கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சரியத்து எங்கே போனது?
2. இந்த காமக்கொடூரனுக்கு
இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதேன்? குழந்தையின் அம்மா மன்னித்ததால்
இரத்தப்பணம் கொடுக்கப்பட்டது என்று அறிவுகெட்டத்தனமாக உளரவேண்டாம். காரணம்
குழந்தைக்கு பாத்தியப்பட்டவன் அந்த தகப்பனே. அது மட்டுமில்லாது தனது கணவன் என்ற
நிலையில் அந்த அம்மா அவனுக்கு மன்னிப்பு வழங்குவது இயல்பானது. இதை அனுமதித்தால் இரத்தப்பணம்
கொடுக்கக் கூடிய பணக்காரன் எவனும் தனது மகள்களை கற்பழிக்கலாம் என்பதை சரியத்
சட்டம் கூறுகிறது என்று பொருளாகும். சௌதிகாரனுக்கென்றால் சரியத் பல்டி அடிக்குமோ?
கடுமையாக தண்டித்தால்தான் குற்றங்கள் நடக்காது என்று ரிசானாவின்
படுகொலைக்கு கூக்குரலிட்ட பிஜே வகையரா
மதவெறியர்களே, இதற்கு மௌனம் காப்பது ஏன்?
ஆனால் பல நாடுகளும், நாட்டின் மக்களும், மனித உரிமை அமைப்புகளும், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் போன்ற
சில காட்டுமிராண்டி அமைப்புகள் தவிர பிற இசுலாமியர்களும் 7 வருடங்களாக போராடியும், வேண்டிக்கொண்டபோதும் மயிரளவுக்குக்கூட
செவி சாய்க்காமல் ரிசானாவின் தலை சீவப்பட்டுவிட்டது. சௌதி சிறைச்சாலைகளில் இன்னும் 'புத்தர் சிலையை வைத்திருந்தார், பைபிள் வைத்திருந்தார், மந்திரம்ஓதி மணிக்கட்டில் கட்டும்
கயிறு கட்டியிருந்தார்' என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
மரதண்டனை வழங்கப்பட்டு தலைசீவப்பட காத்திருக்கிறார்களர். சௌதி, துபாய் போன்ற நாடுகளில் தொழிலாளர்களாக சென்றுள்ளவர்கள்
தங்கள் தங்குமிடங்களில் தங்கள் தெய்வங்களை வணங்குவதைக்க தடுக்கும் அரசின் நடவடிக்கை
குறித்து "அங்கேயும் போய் அநாச்சாரங்களை புகுத்த நினைத்தால் அரசாங்கம்
கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கையா பார்க்கும்" என்று இசுலாமியர்கள் தங்கள் மதவெறியைக் கக்குகின்றனர். ஆனால் பிற நாடுகளில் தங்களுக்கு மதவழிபாட்டு உரிமை வேண்டும் என்று கேட்கின்றனர். ஜனநாயகம் பேசுகின்றனர்.
ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினத்தன்று சந்தித்த மௌலவி
ஏ.ஜே.எம்.மக்கதூம்
ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் சிலவரிகள் பின்வருமாறு:
'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வது" என்று கேட்டார்' என்றும், "என்னை மன்னித்து
விட்டுவிடச் சொல்லுங்கள் நானா" என்று கெஞ்சிய
குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது" என்றும் எழுதியுள்ளார். இந்த இரண்டு வரிகளை என்னால்
தட்டச்சு செய்ய முடியாமல் பல மணிநேரம் கழிந்தது
போதுமான மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள் ஏற்படுத்தித்
தராததால், கடைசி நிமிடங்கள் வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால் மன்னிப்பு
கிடைத்துவிடும் என்று அல்லாவின் கருணைமீது நம்பிக்கையுடன் 7 வருட காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச் சிறுமி. ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள. இந்த 7 வருட சிறைதண்டனையே இதற்கு அதிகம். ஆனால் மரணதண்டனை…….
எனது காதில் "ஊருக்கு நான் எப்பொழுது
செல்வது" என்ற ரிசானா நபீக்கின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே
இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதா? கேட்டால் இந்த காட்டுமிராண்டிகால
சரியத் சட்டத்தையும், மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக வாழுங்கள்.
ஒன்றை மறந்துவிடாதீர்கள்! ரிசானா நபீக்கின் சீவப்பட்ட
தலை புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அரபு தேசங்களின் தொழிலாளர்கள் இதற்கு பழிவாங்குவார்கள்.
ஏழை ரிசானாவின் குடில் |
நன்றி : நக்கீரன், ஆனந்தவிகடன்
19 கருத்துரைகள்:
Rizana nafeek adaravukku nandri. gurarath la 200 marpattha pennagali karpalitum eritum kondra pothu enna seithirkal. oru pennuku jalra podum nengal rss ku adaruv tharinkal ean.
நண்பர் முபாரக், குஜராத் சம்பவமும் இதுவும் வேறு வேறு. இது இந்து பயங்கரவாதத்தின் கோரமுகம். இது சரியத் சட்டத்தின் கோரமுகம். அது ஒரு அமைப்பாகத்திரண்டு நடத்திய வன்முறை. இது சட்டம் என்ற பெயரில் நடந்த வன்முறை.
நாங்கள் எப்பொழுதும் குஜராத் பயங்கரவாத த்தை ஆதரித்த்தில்லை. ஆனால் எங்களது இந்த பிளாக் குஜராத் கலவரத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டது. அதனால் அது பற்றிய கட்டுரை எதுவும் இல்லை. பொதுவாக இங்கு இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தவது என்ற நோக்கம் மட்டுமே.
கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கும் எமது நன்றி.
மனித பிறவிகள் இல்லை
மனித பிறவிகள் இல்லை
இந்த வீடியோவையும் புகைப்படத்தையும் இணையத்தில் பாரத்தேன் ஆனால் அது யார் என்றே தெரியாது. அது ரிசானா என்று இந்த கட்டுரை வாயிலாக அறிய வந்தபோது மனம் மிகவும் கணத்துவிட்டது. இது குறித்து திரு.சார்வாகன் என்பவர் கட்டுரை ஒன்றை வெளிவிட்டிருந்தார் அதில் அவர் கேட்ட ஆதாரத்தை ஒரு முமீனும் வழங்கவில்லை. ரிசானா குற்றமற்வர் என்பதற்க்கு எனது தரப்பு வாதம். 1) ரிசானா அங்கு சென்று ஒரு மாதம் கூட நிறைந்திருக்கவில்லை. 2) சிறுகுழந்தையை அவர் கொலை செய்வதற்க்கு எந்த காரணமும் இருக்க வில்லை. 3) குழந்தை இறந்தபோது தாய் தந்தை இருவரும் வீட்டில் இல்லை. 4) ரிசானாவை குற்றவாளயாக்கியவர்கள் கடைசிவைரை அவர் மரண தண்டனை அடைவதையே விரும்பியுள்ளனர், ஏன்? குழந்தையின் மரணத்திற்க்கு இந்த இருவரில் ஒருவர் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது அதை அப்பாவி வேலைக்கார சிறுமி மீது சுமத்தி சட்டத்திக் பிடியிலிருந்து தப்பிக்க கடைசிவரை மரண தண்டனை நிறைவேற்றுவதை (பின்னாளில் உண்மை வெளிவராமல் இருக்க) வலியுறுத்தியிருக்க வாய்ப்புள்ளது. இறுதியாக வேலை தேடி செலவோர் அணைவரும் ஒருவகையில் அங்கு அடிமைகள் போல்தான் எனவே அரபிகளிடம் கோபம் என்பது நினைத்து பார்க்கவே இயலாது. இஸ்லாம் அழிவின் விழிம்பில் என்பதால்தான் அதன் மீது அதிக விமர்சனங்கள் எழத்துவங்கியுள்ளது. ரிசானாவுக்கு மதங்களை தாண்டி மனிதனாக ஆதரவு. இனியொரு ரிசானா உருவாக வேண்டாம். நிச்சாயமாக சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சியுள்ளது.
மனதை ரணமாக்கும் பதிவு.
http://speedraheem.blogspot.in/2013/01/blog-post_2258.html
இந்த வலை பக்கத்தில் உள்ள விடியோவை பார்க்கவும் இப்படியும் பெண்கள் பொறுமை இல்லாததால் நடந்து கொல்கிறார்கள்
http://speedraheem.blogspot.in/2013/01/blog-post_2258.html
இந்த வலை பக்கத்தில் உள்ள விடியோவை பார்க்கவும் இப்படியும் வேலைக்கார பெண்கள் பொறுமை இல்லாமல் குழந்தையிடம் கோபப்படுகிறார்கள் கோபம் கொலையும் செய்யும் விடியோவை பார்த்துவிட்டு பேசவும்
4 மாத குழந்தையை கொண்றதற்க்காக ஆதரமில்லாமல் மரண தண்டனையை வழங்கிய சரியத சட்டத்தை ஆதரிக்கும் பி.ஜெ .6 வயது குழந்தையை சொந்த அப்பனே பாலியல் வல்லுனர்வு கொண்டு கொலை செய்து, குருதி பணத்தை கொடுத்து தப்பித்தை ஆதரிக்காமல போய்விடுவார்...
சோ இதுக்கு அப்பறம் குருதி பணம் கொடுக்க முடிந்தவ்ர்கள் அட்வான்ஸ் புக்கிங்கில் யாரைவேனுமானாலும் பாலியல் வல்லுனர்வு செய்து கொல்லலாம் என சரியத் பாதுகாவலர்கள் சொன்னாலும் ஆட்சிரியபட தேவையில்லை..வாழ்க எக்காலதுக்கும் பொருந்தும் சரியத் சட்டம் தூ..
//சுவைஇன்பம் டார்ட் காம் //
// வேலைக்கார பெண்கள் பொறுமை இல்லாமல் குழந்தையிடம் கோபப்படுகிறார்கள் கோபம் கொலையும் செய்யும் விடியோவை பார்த்துவிட்டு பேசவும்//
அரபு நாடுகளில் இன்று பணிபெண்கள் படும் கொடுமைகள் ஏராளம் நன்பரே,அவை யாவும் விடியோவாக பதிவு செய்யபடுவதுயில்லை..சொந்த நாட்டில் புலைக்க வழியில்லாமல் அன்னிய நாட்டு செல்கின்றார்கள் ஆனால் அங்கு கொடுரமான முறையில் அடிமைகலாக்கப்படுகின்றார்கள்..தினம் தினம் ஆயிரம் பாலியல் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இதில் குழந்தையை பாத்துக்கொள்ள வேண்டும் எஜமானிக்கு பனிவிடை செய்யவேண்டும் என பல கடமைகள் அவள் தலையில் குவிக்கப்படுகின்றன ..எந்த பணிபெண்ணும் வேளைக்கு சென்ற முதல் நாளே குழந்தைகளோடு கொடுரமான முறையை கையாலுவதுயில்லை அவள் இருக்கும் சூல்நிலைதான் அவ்வாறு நடந்துக்க வைக்கின்றது..இன்று சவுதியில் 100க்கு 95 குழந்தைகள் பனிபெண்கலால் தான் வளர்க்கப்படுகின்றார்கள்..ஏன் சேக்கின் மனைவிகள் சரியத் சட்டம் சொல்லுவது போல் 2 வருடம் தாய்பால் கொடுத்து அவர்களே வளர்க்காமல் ஏன் பணிபெண்களிடம் குழந்தையை ஒப்படைக்கின்றார்கள்.சரியத் சட்டப்படி 4 மாத குழந்தைக்கு தாய்பால் கொடுக்காமல் புட்டி பால் கொடுக்க சொன்னமைக்கு அந்த குழந்தையின் தாய்க்கு தானே தண்டனை கொடுத்து இருக்கவேடுமே ஒழிய ரிசானாவுக்குயில்லை...
சிந்தியுங்கள் மூளையை மங்கவைக்க வேண்டாம்...
//சுவைஇன்பம் டார்ட் காம் //
உங்களின் கருத்தை மறுப்பதற்கில்லை. அதனால் தீர விசாரனை வேண்டும் என்றும், தடவியல் சோதனைகள், சாட்சிகள் தேவை என்றும், காரணங்கள் வேண்டும் என்றும் கோருகிறோம். இவைகளை புரக்கணித்துவிட்டு குற்றம் சுமத்தியர் (சௌதியாக இருந்தால் மட்டும்) சொன்னால் மட்டும் போதும் என்று மரணதண்டனை வழங்குவது சரியல்லவே.
குரானை படிக்காத மகனை கொன்ற தாய்க்கு ஆயுள்:
http://tamil.webdunia.com/newsworld/news/international/1301/08/1130108007_1.htm
எமது கேள்வி பெற்றோரில் இருவரம இல்லை யாராவது ஒருவர் கொன்று விட்டு தண்டனைக்கு பயந்து அதை அப்பாவி சிறுமி மீது ஏன் சுமத்தியிருக்க முடியாது?. காரணம் இறுதி வரை அவர்கள் தண்டனை நிறைவேற்றுவதைதான் விரும்பியுள்ளனர் ஆனால் ரிசானாவுக்கு (கொலை செய்ய) காரணம் எதுவும் இருகக்வில்லை.
இஸ்லாம் என்பது முஹம்மது என்ற ஒரு ஏழாம் நூற்றாண்டு காட்டுமிராண்டி அரபி தன் இஷ்டத்துக்கு உளறி கொட்டிய காட்டுமிராண்டி சட்டங்களை கொண்ட, முஹம்மது என்ற தனி நபரை வழிபடும் அரசியல் இயக்கம் என்பதற்கு ரிசானாவின் மரண தண்டனை ஒரு சின்ன நேரடி சாட்சி.
இஸ்லாத் மக்களை நன்னெறிப்படுத்த முன்னிலை படுத்தும் வார்த்தை - இறைஅச்சம். அச்சம் எவ்வாறு அன்பை விதைத்திட முடியும். நான் இந்த மாதிரியான சில அடிப்படை சந்தேகங்களை சில வருடங்களுக்கு முன் இஸ்லாத்தின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு முகம்மது நபிகளிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் திரு. அப்துல்லா பெரியார்தாசன் அவர்களிடம் கேட்க அவா. நான் இந்து அடிப்படைவாத தத்துவங்கள் மீது வெறுப்புற்று இஸ்லாத்தின் சில வாழ்வியல் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவனே. இருந்தாலும் இந்த உயிர்க்கொலை புரிதலை மதச்சட்டங்கள் சற்றும் ஆதரிக்கக்கூடாது, மற்ற மாற்று சிந்தனைகளை மதிக்கவும் மற்றும் சகித்துக்கொள்ளவும் வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இறைவன் தன் வழிகாட்டுதலை இரத்தத்தில் எழுதாமல் அன்புக்கொண்டு எழுதட்டுமே.
// இங்கு இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தை அம்பலப்படுத்தவது என்ற நோக்கம் மட்டுமே.//
நல்லது. சரி, நீங்கள் எந்த தத்துவத்தை அல்லது எந்த வழிமுறையை பொருளாதாரத்திலோ அல்லது வாழ்வியலிலோ முன்னுதாரணமாக அல்லது புதியதாகவோ குறிப்பிட விழைகிறீர்கள்.
குற்ற உணர்வும் நாடுகளை தாண்டிய கண்டனங்களும் தண்டனை நிறைவேற்றம் ஒரு கொடிய காட்டுமிராண்டி செயல் மனதை பாதிக்க கூடிய அதிர்ச்சியூட்டும் காட்சி என்று நீக்கியுள்ளது. பத்திரப்படுத்தி வைத்திருப்பவர்கள் கவணத்திற்க்கு. இது இஸ்லாமின் காட்டுமிராண்டி தனத்திற்க்கு ஆதாரமாக பாதுகாக்க வேண்டிய படமாக எதிர்காலத்தில் இருக்கும்.
குற்ற உணர்வும் நாடுகளை தாண்டிய கண்டனங்களாலும், யூடியுப் தண்டனை நிறைவேற்றம் ஒரு கொடிய காட்டுமிராண்டி செயல் மனதை பாதிக்க கூடிய அதிர்ச்சியூட்டும் காட்சி என்று நீக்கியுள்ளது. பத்திரப்படுத்தி வைத்திருப்பவர்கள் கவணத்திற்க்கு. இது இஸ்லாமின் காட்டுமிராண்டி தனத்திற்க்கு ஆதாரமாக பாதுகாக்க வேண்டிய படமாக எதிர்காலத்தில் இருக்கும்.
Ayyo paavam chinna ponnu thalai ya vetta eppidithan manasu vanthatho islam pannikalin maarkam pannithan pee thilnga chinna pillaiya kooda mutti keela thallum athu pola ivanigalum matham dra pee kaga yara nalum kolluvanuga
14 வயதுச்சிறிமி அவள்.அரபு மொழி அறவே தெரியாதவள். பலாத்காரம் பயன்படுத்தி பெறப்பட்ட வாக்குமூலம்,கேரளா மொழி பேசுகின்ற ஆடுமேய்க்கும் சிறுவனின் மொழிபெயர்ப்பு, என்பனவே அன்று அவளை கொலைக்குற்றவாளியென தீர்ப்பளிக்க பயன்படுத்தப்பட்ட ஆதாரம்களாகும்.14 வயது சிறிமி சார்பாக ஒரு சட்டத்தரணியை நிறுத்தாமையும், இந்தக்கொலை நடந்தபொழுது 18 வயத்தைக்கூட அவள் அடையாததினால், இந்த்தத்தண்தண்டணை எந்த சரீயாவின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதுதான் எமது ஆதங்கமாகும். இந்த சரீயாக்காரர்களின் சரியா சரிதானா என்பதுதான் எமது அடுத்த கேள்வியாகும்.
Post a Comment