Saturday 24 October 2015

குர்ஆனும் விபச்சாரமும்!


குர்ஆனும் விபச்சாரமும்!

எனது தனிப்பட்ட பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக எழுத்துப்பணிகளை நிறுத்தியிருந்தேன். மீண்டும் எழுதுவதற்கான வாய்புக்களை உருவாக்கிக் கொண்டிருந்தபொழுது எனது Data Base-ஐ விட்டு வெகு தொலைவிற்கு பயணிக்க வேண்டிய சூழல்; மேலும் சென்ற இடத்தில் எழுதுவதற்கான  கருவிகளும், தேவையான தகவல்களை திரட்டும் வாய்ப்பின்றிப் போனது. (இறை நாடவில்லையென்று நினைக்கிறேன்!)
ஒரு வழியாக கிடைத்த வாய்ப்புகளையும், என் நினைவிலிருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி எழுதுவதென்று முடிவெடித்து, குர்ஆன் வசனங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல தமிழ் மொழிபெயர்ப்புகள், அந்தந்த மொழிபெயர்ப்பாளர்களின் சொந்த சரக்குகளால் இனிப்பு முலாம் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் புரட்டிய பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சந்தேகம் தோன்றியதால் Google translator-க்குள் கொடுத்துப்பார்த்தேன். அந்த ஆங்கில வாக்கியம் இதுதான்
”…And if one force them, then (unto them), after their compulsion, lo! Allah will be Forgiving, Merciful. (Pickthall)
…But if anyone compels them, yet, after such compulsion, is Allah, Oft-Forgiving, Most Merciful (to them). (Yusuf Ali)
 إِكْرَاهِهِنَّ - ik'rāhihinna
Pickthall மொழிபெயர்ப்பிலிருந்து “after their compulsion” என்ற பகுதியை மட்டும் -ல் கொடுத்தேன். என்ன ஆச்சரியம் அவர்களது கொண்டை வெளியே தெரிந்துவிட்டது. (அல்ஹம்துலில்லாஹ்!) 
 
நீங்களும் அதைப்பாருங்கள். இவர்கள் தங்களது புத்தகத்தை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் என்பதற்கு இது ஒரு எளிய உதாரணம்.
their compulsion- பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட


Yusuf Ali யின் மொழிபெயர்ப்பிலிருந்து “after such compulsion” என்ற பகுதியைக் கொடுத்தபொழுது இப்படிக் காண்பித்தது.



தலைப்பிற்கு வருகிறேன்.

இஸ்லாமிய பரப்புரைகளில் மிகப் பிரதானமாக இடம் பெறுவது அதன் குற்றவியல் தண்டனைகளைப்பற்றி இருக்கும்.

இந்திய போன்ற நாடுகளில் பணநாயகம் குற்றவாளிகளை விடுவிக்கும் பொழுது, இவர்களது பரப்புரை உச்சகட்டத்தை அடையும். குறிப்பாக பாலில்குற்றங்கள் விவாதிக்கப்படும் பொழுது குர்ஆனிய சட்டங்களை ஆதரிக்கும் மாற்று மதநம்பிக்கையாளைகளையும் காணமுடியும்.

குர்ஆன் எவற்றையெல்லாம் பாலியல் குற்றங்களாகக் கருதுகிறது?

1. பெண்கள் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவது.
2. பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது.
கற்பழிப்பு எனப்படும் வன்புணர்ச்சியைப்பற்றி குர்ஆனுக்குத் தெரியாது எனவே அதை விட்டுவிடுவோம்.

சரி... குர்ஆன்  என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
குர்ஆன் 4:15
 உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்!
அதென்ன மானக்கேடான செயல்?
அதை பெண்கள் மட்டும்தான் செய்வார்களா?
உங்களுக்கு பதில் சொல்வதற்கு முன் அடுத்த வசனத்தைக் கூறிவிடுகிறேன்.

குர்ஆன் 4:16
அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
அதே செயலா ...?  எந்த செயல்...?

தண்டனை கொடுப்பது இருக்கட்டும். செயல் என்வென்றே தெரியவில்லை. பிறகெப்படி அதைக் குற்றமாகக் கருதி நான்கு பேரை சாட்சிக்கு கொண்டுவர முடியும்? தண்டனை கொடுக்க முடியும்?

சரி.. உங்களில் இருவர் என்றால்....? எந்த இருவர்?
பெண்ணும் பெண்ணுமா...?

ஆணும் ஆணுமா..?

இல்லை ஆணும் பெண்ணுமா?

எந்த இருவர்?

மறுபடியும் முதலிலிருந்து..

மானக்கேடானது என்றால் என்ன?

மானத்தை பாதிக்கக் கூடியது எல்லாமே மானக்கேடானதுதான்

அடுத்த கேள்வி யாருடைய மானத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது?

உதாரணத்திற்கு, ஆடை விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆதிவாசிகளுக்கு ஆடை ஒரு பொருட்டல்ல. இன்றும் ஆடை அணியாத ஆதிவாசிகளை நாம் காணமுடியும்.  நாகரீக மேற்குலகில் ஆடை அவரது விருப்பம். அல்லாஹ்விற்கோ நடமாடும் கூடாரத்துடன் இருக்கவேண்டும்.  அல்லாஹ்வின் பார்வையில் ஆதிவாசியும், நாகரீக மேற்குலகமும் மானக்கேடான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் பிடித்து தண்டிக்கலாமா...?

யார் தண்டிப்பது...?

குர்ஆனை வாசித்தவரெல்லாம் தண்டனை கொடுக்கலாமா...?

தண்டிப்பதற்கான  அதிகாரம் யாரிடம் இருக்கிறது..?

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் தண்டனைகளை செயல்படுத்த வேண்டுன்று முல்லாக்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா...? குர்ஆனின்படி சரியானதா...?
ஒரு ஆட்சியாளர் அல்லது அதிகாரி அல்லது நீதிபதி எப்படி இருக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் ஏதேனும் குர்ஆனில் இருக்கிறதா என்றால் நிச்சயமாகக் கிடையாது. அப்படி ஏதேனும் இருந்திருந்தால் இத்தனை இஸ்லாமியக் குழுக்கள் எப்படி ஏற்படமுடியும்?

எந்த அளவுகோலும் கிடையாது. யார் தண்டிப்பது என்றும் கிடையாது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பார்களே  அதுதான் என்றும் இஸ்லாமில் நிகழ்ந்து கொண்டிருப்பது.

முஹம்மதின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்காக நிகழ்ந்த வன்முறைகள் இன்னுமொரு உதாரணம். நமது தலைப்பிற்கு அது தொடர்பில்லாதால் நாம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டாம்

சரி..... நாம் மேற்கொண்டு நகருவதற்கு வசதியாக, மானக்கேடானது என்று குர்ஆன் கூறுவது விபச்சாரத்தைதான் என்றும் யாரோ ஒரு' X' தான் நீதிபதி; அவர் தண்டனை வழங்குவதாகவும்  வைத்துக் கொள்வோம்.

குர்ஆனின் வேறு பகுதிகளில், விபச்சாரம் தவறென்றும், தண்டனைக்குரிய குற்றம் என்றும், தண்டனை முறையும் காணப்படுகிறது.
குர்ஆன் 17:32
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது.
குர்ஆன் 24:2
விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும்.(IFT)
நாம் முதலில் கவனித்த குர்ஆன் (4:15&4:16) வசனங்களை  மேற்கண்ட இந்த (24:2) வசனம் இரத்து செய்துவிட்டதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். இப்படி வாலும் தலையுமில்லாமல் ஒரு விதிமுறையைக் கூறினால்  நீக்காமல் வேறு என்ன செய்வார்களாம்?

الزِّنَا (alzina) விபச்சாரம் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 
இதற்கு குர்ஆனில் பதில் இல்லை. நாம் சமுதாயத்திலிருந்துதான் தேட வேண்டும் சட்டத்திலிருந்து அல்ல!

ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து பாலியல் தொடர்பு கொள்வதை சட்டம் தவறாகப் பார்க்கவில்லை. ஆனால் சமுதாயம் தவறாகப் பார்க்கிறது. அதாவது திருமண பந்தத்திற்கு அப்பால் பொருளுக்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ நடைபெறும் பாலியல் தொடர்புகளை விபச்சாரம் என்று கூறுவதாக வைத்துக் கொள்ளலாமா?

குர்ஆனின் சட்டங்களை விவாதிப்பதென்றால் முஹம்மதின் கால நடைமுறைக்கு அதாவது குர்ஆனிய காலாச்சாரத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். குர்ஆன் அனுமதிக்கும் பாலியல் துணைகள் :

குர்ஆன் 4:24
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்
PJ மொழிபெயர்ப்பு

4:24. கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் (திருமணக் கட்டணமாகிய "மஹரைக்" கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரோடு வீடு கூடிவிட்டீர்களோ அவருக்கு குறிப்பிட்ட "மஹரை" அவரிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்து விடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதனைக் குறைக்கவோ கூட்டவோ) இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது யாதொரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்.

4:24. மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
(IFT) தமிழாக்கம்
மூன்று மொழிபெயர்ப்புகளும் ஒன்றையொன்று மிகைக்கும் விதத்தில் இனிப்புமுலாம் தடவப்பட்டிருக்கிறது. யாருக்கும் முதலிடம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

மேற்கண்ட 4:24 வசனத்தின் துவக்கத்தில் வரும் وَالْمُحْصَنَاتُ (வல்முஹ்ஸனாத்) என்ற பதம் இங்கு பிறரது மனைவியர், கணவனுள்ள பெண், திருமணம் என்றெல்லாம் படாதபாடு படுகிறது. உண்மையில் இதன் பொருள் “மேலும் கற்புள்ள பெண்- And chaste women” என்பது மட்டுமே. நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் அரபியில் இருக்கும் பதத்தை tranalator-ல் கொடுத்துப்பாருங்கள். தாங்கள் விரும்பும் பொருளில் மொழிபெயர்ப்பு அமையவேண்டுமென்பதற்காக இந்த முல்லாக்கள் இடத்திற்கேற்ப அதை மாற்றிவிடுகின்றனர். இதைப்பற்றி அண்ணன் பிஜே எழுதியிருப்பதை பாருங்கள்

wal-muḥ'ṣanātu என்பதை கற்புள்ள பெண்கள் என்று மொழிபெயர்த்தால் என்னவாகும்?

"மேலும் கற்புள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது". என்று நகைச்சுவையாக மாறிவிடும். மூளை கொண்டு சிந்திப்பவர்களுக்கு உண்மை புரிந்துவிடும் அதனால்தான் அல்லாஹ், இதயத்தைக் கொண்டு சிந்திக்குமாறு கெஞ்சுகிறான்.

இந்த மொழிபெயர்ப்பாளர்கள் வல்முஹ்ஸனாத் என்ற பதத்திற்கு எப்படி கணவனுள்ள அல்லது திருமணமான பெண்கள் என்று பொருள் கொண்டார்கள்?

திருமணமாகாத அல்லது கணவனில்லாத பெண்களுக்கு கற்பு இருக்கதென்று முடிவு செய்துவிட்டார்களா?

மேலும் குறிப்பிட்ட இந்த வசனத்தில் எங்குமே திருமணம், திருமணக்கொடை, மஹ்ர், என்ற பொருள்படும் எந்தப் பதங்களும் கிடையாது. ஆனால் ujūrahunna என்ற பதத்தைக் கொண்டுதான் நமது முல்லாக்கள் "திருமணம்”, “கணவன்” “மனைவி” மஹ்ர்." என்றெல்லாம் நீட்டி முழக்கியிருக்கிறார்கள்.

Ujūrahunna என்றால் கூலி, ஊதியம், வெகுமதி என்று பொருள் கொள்ளலாம். நாமாக வலிந்து திணித்தாலொழிய மஹ்ர் என்பதாக பொருள் கொள்ள முடியாது.மஹ்ர்’ என்றால் என்னவென்பது உங்களுக்கே தெரியும்.
“…மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வத்தின் மூலம் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது…” என்ற இந்த அனுமதியைத்தான், ஷியாக்கள் முத்ஆவிற்கான அனுமதியாக கருதுகின்றனர். அவர்கள் கூறும் பொருளில்தான் இந்த வசனம் இருக்கிறதென்பதை சற்று கவனித்தால் உங்களுக்கே புரியும்.

அடிமைபெண்களைத் தவிர மற்றவர்களுக்கு கட்டாயமாக கூலி அல்லது ஊதியத்தை ஒப்பந்தப்படி கொடுத்துவிடவேண்டும். இவர்கள் சுந்திரமான பெண்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடிமைப்பெண்களுக்கு விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் அவர்களுடன் கூடி வாழ்வதற்கு எந்த  வரைமுறையுமில்லை

திருமணபந்தமோ அல்லது எவ்வித வரைமுமுறைகளுமோ இல்லாமல் அடிமைப்பெண்களுடன் கூடுவது விபச்சாரம்தானே என்ற கேள்வி நம்மைப் போலவே அவர்களுக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் பெயரால் அதை பழிப்புக்குரியதல்ல என்று சரிகண்டுவிட்டனர்.

அதே போல முத்ஆவை விபச்சாரம் என்று சொல்வதற்கு தயக்கமாக இருந்ததினால் திருமணம் என்று சொல்லிக் கொண்டனர். அதாவது வழிப்பறிக் கொள்ளைப் பொருட்களை கனீமத் என்று சொல்லிக் கொண்டதைப் போல!

ஆக குர்ஆன் அனுமதிக்கும் பாலியல் துணைகள்,
1. மனைவி
2. அடிமைப் பெண்கள்
3. முத்ஆ மூலம் அடைந்த பெண்கள்

நான் முன்பே சொன்னதுபோல பெரும்பாலான விபச்சாரம் மற்றும் கள்ளத்தொடர்பு பற்றிய குர்ஆன் வசனங்கள் பெண்களை மையப்படுத்தி மட்டுமே பேசுகிறது. இது அல்லாஹ் அல்லது முஹம்மதின் கோணல் புத்தியின் வெளிப்பாடு அல்லது அன்றைய முஹம்மதின் காலப்பெண்கள் விபச்சாரத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சில வசனங்களைப் பார்க்கலாம்
குர்ஆன் 4:15
உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள்.
குர்ஆன் 4:25
….அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும்…
குர்ஆன் 60:12
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ,……

விபச்சாரம் பற்றி குர்ஆன் மேலும் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்
17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், தீய வழியாகவும் இருக்கின்றது.

முத்ஆ, அடிமைப்பெண்கள் என்றெல்லாம் என்று கடையத் திறந்துவிட்டு விபச்சாரத்தைப்பற்றி அல்லாஹ் எதற்காக வருத்தப்படுகிறான் என்பது தெரியவில்லை. பின்வரும் குர்ஆன் வசனத்தை சற்று கவனியுங்கள்.

குர்ஆன் 24:33
…மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருப்பது இந்தக் குர்ஆன் வசனத்தைதான். இவ் வசனத்தின்(24:33) குறிப்பிட்ட இந்தப் பகுதி பொருள் பேதம் தரக் கூடியது. காரணம் அல்லாஹ்வின் தரமற்ற மொழிநடைதான்.

இந்த வசனம் அடிமைப்பெண்களை பலவந்தப்படுத்தி பாலியல்தொழில் செய்யவேண்டம் என்றுதான் சொல்கிறது. இதன் மறுபுறம் எவ்விதமான பலவந்தமுமில்லை எனில் அடிமைப்பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் செய்யலாம் என்றாகிறது. ஆனால் எவ்விதத்திலும் அடிமைப்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யக்கூடாது என்று தடுக்கவில்லை. இந்த வசனத்தைக் கொண்டு அப்படியொரு தடையைக் கூறமுடியாது. குர் ஆனின் தவறான மொழிநடைக்கு இது ஒரு உதாரணம்.

மேலும் அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால்..?
…min(after) ba’di (after)ik'rāhihinna(their compulsion) ghafūrun(Oft-Forgiving,) raḥīmun(Merciful)
பின்பும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
”…And if one force them, then (unto them), after their compulsion, lo! Allah will be Forgiving, Merciful. (Pickthall)
…But if anyone compels them, yet, after such compulsion, is Allah, Oft-Forgiving, Most Merciful (to them). (Yusuf Ali)

அவர்களை வற்புறுத்தினால் மன்னிப்பான், கருணை செய்வான் எனில், விபச்சாரத்திற்காக வற்புத்தலாமா?

இங்கு அல்லாஹ் என்ன சொல்ல வருகிறான்?

ஒரு விதிமுறையைச் சொல்லும் பொழுது அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான் சொல்ல முடியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொன்னால் முஹம்மதின் 'கைலி' கழன்றுவிடும். இதை அறியாதவரா முஹம்மது?

தன்னிடமும் அடிமைகள் இருக்கிறார்கள், புனிதப் போர்கள் வேறு அடிமைகளை வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது. அடிமைவியாபாரம் சொல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கும் பொழுது அதையெல்லாம் எவனாவது விதிமுறைகள் என்றபெயரில் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்வானா?

இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்!

அப்படியானால்...?

அது அப்படித்தான்!


தஜ்ஜால்


Facebook Comments

29 கருத்துரைகள்:

ஆதி மனிதன் said...

வலக்கரம் சொந்தம், போரில் உரிமை, அடிமை சொந்தம் அவர்களிடம் அத்து மீறலாம் என்றெல்லாம் போதித்த பின்பு கற்பழிப்புக்கு தண்டனை பற்றி தேடினால் எப்படி கிடைக்கும். கடலுக்குள்ள ஊசிய போட்டுட்டு தேடுற மாதிரி இல்ல இருக்கு. அப்படியே தண்டனை இருக்குன்னு வாதிட்டாலும்.. சகாக்கள் யாரேனும் தண்டிக்கப்பட்டிருந்தால் அதற்க்கான ஆதாரம் இருந்தா ஒத்துக்கலாம். அப்போ இல்லாத ஒன்னுக்கு தண்டனை கொடுத்தா இவர்கள் போதனைகளை மீறிவிட்டார்கள் அல்லது புறக்கணித்து விட்டார்கள் என்று தானே அர்த்தம்.

அப்போவே நான்கில் ஒன்றை தேர்ந்தெடு என்ற ஆப்ஷனல் கேள்வித்தாளை கண்டுபிடித்தவர்கள் - அதாவது..

௧) போரில் பிடிப்பட்ட அழகிய பெண்களிடம் மருவாதையா எங்களுக்கு வலக்கரமா ஆய்டுங்க அப்போ தான் உங்களுக்கு சுதந்திரம் (??)

௨) இல்லைன்னா நீங்க விபச்சாரி ஆய்டுவீங்க... அதேப்படின்ன்னு கேட்ககூடாது ஆயடுவீங்கன்னா ஆய்டுவீங்க.. (அப்போ மரண தண்டனை - ஏன்னா உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சி - ஆகலையா அப்படின்னா 100 சவுக்கடி இதுவும் கிட்டத்தட்ட ரசிச்சி கொல்றது தான்)

௩) ரெண்டுத்துக்கும் ஒத்துக்கலைன்னா கற்பழிக்கப்படுவீங்க

௪) மூனுத்துக்கும் ஒத்துக்கலைன்னா மரணம் நிச்சயம்..

இப்போ ஒரு பெண் எதை தேர்ந்தெடுப்பாள் ??

Unknown said...

Tajjal super article. Allah yenbavar yaar avarai muhammad epdi uruvakinar ...itha pathi yelithuna padika interesta irkum

Anonymous said...

I wonder why Janab Swanapriyan is not demolishing your arguments here?

Unknown said...

//உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள்.//

எவனாவது மானக்கேடான செயலைச் செய்யும் போது சாட்சி வச்சிகிட்டா செய்வான்....?? அல்லா என்ன லூசா....???சரி சாட்சியே இல்லாத மானக்கேடான செயலுக்கு எப்படி தண்டனை கொடுப்பது..??சாட்சி இல்லாமல் செஞ்சா குற்றமில்லையா....??? இப்பெல்லாம் சாட்சியே இல்லாம செஞ்சிடுவானுங்கல்ல...

தஜ்ஜால் said...

வாங்க ஆதி மனிதன்,

இஸ்லாமில் பெண் என்பவள், கால்நடைகளுக்கு ஒப்பானவள். இங்கு அவள் தனது விருப்பத்தைச் சொல்ல இடமேயில்லை

தஜ்ஜால் said...

வாங்க ஜாவித்,

அல்லாஹ்வைப்பற்றி கட்டுரைகளில் ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும் அவற்றைத் தொகுத்து வெளியிடலாம்.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous ,

சுவனப்பிரியன் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. நாம் அங்கு சென்றால் நம்மை Edit செய்து விடுவார். பொதுவாக அனைத்து முஃமின்களும் அவர்களது தளத்தில் எதிர்கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

தஜ்ஜால் said...

வாங்க இனியவன்,

உங்கள் கேள்விகளுடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
விபச்சாரம், கள்ளத்தொடர்பு மற்றும் வன்புணர்ச்சி போன்றவற்றில்,

வன்புணர்ச்சி பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்கலாம். மற்ற இரண்டிற்கு புகார் கொடுப்பவர் யார்? எந்த முறையில் அந்தக் குற்றம் அளவிடப்படுகிறது? சாட்சியம் கூறுபவர் எதைக் கண்டதாக கூறினால் குற்றம் நிரூபிக்கப்படும்?

sadiqsamad said...

சகோ ஏன் உங்களின் முக நூல் சுவர் கிடைக்கவில்லை?

sadiqsamad said...

சகோ ஏன் உங்களின் முக நூல் சுவர் கிடைக்கவில்லை?

sadiqsamad said...

சகோ உங்களின் முகநூல் முடக்கப்பட்டுள்ளதா?

தஜ்ஜால் said...

வாங்க சாதிக்,

ஆமாம். முடக்கியிருக்கிறார்கள். என்னால் அதைத் திறக்க முடியவில்லை. அனேகமாக நான் கண்காணிப்பின் கீழ் இருப்பாதாக தோன்றுகிறது.

sadiqsamad said...

சரி வாட்ஸப்பில் இருக்கிறீர்களா ஒரு தகவல் சொல்ல வேண்டும்

sadiqsamad said...

சரி வாட்ஸப்பில் இருக்கிறீர்களா ஒரு தகவல் சொல்ல வேண்டும்

sadiqsamad said...

சரி வாட்ஸப்பில் இருக்கிறீர்களா ஒரு தகவல் சொல்ல வேண்டும்

sadiqsamad said...

சரி வாட்ஸப்பில் இருக்கிறீர்களா ஒரு தகவல் சொல்ல வேண்டும்

sadiqsamad said...

சரி வாட்ஸப்பில் இருக்கிறீர்களா ஒரு தகவல் சொல்ல வேண்டும்

ஆனந்த் சாகர் said...

//அனேகமாக நான் கண்காணிப்பின் கீழ் இருப்பாதாக தோன்றுகிறது.//

இஸ்லாத்தை பற்றி உண்மையைத்தானே கூறி வருகிறீர்கள். அதற்கு ஏன் அரசாங்கம் உங்களை கண்காணிக்க வேண்டும்? நீங்கள் ஒன்றும் இல்லாததை கூறி வெறுப்பை தூண்டவில்லையே. இந்தியா போன்ற ரெண்டாங்கெட்ட ஜனநாயக நாடுகள் இப்படிப்பட்ட கோழைத்தனத்தையே செய்கின்றன. வெறுப்பையும் பயங்கரவாதத்தையும் தூண்டுகிறவர்கள், வெளிப்படையாகவும் இலைமறை காயாகவும் அதற்கு வக்காலத்து வாங்குகிறவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் இந்த ஜனநாயக நாடுகள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். ஆனால் அவை முஸ்லிம்களின் வெறுப்புணர்வுக்கு எதிராக பேசுவர்களை ஒடுக்க வழி தேடும். இது என்ன ஜனநாயகமோ!

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,

//இஸ்லாத்தை பற்றி உண்மையைத்தானே கூறி வருகிறீர்கள்.// உண்மையை, நேர்மையாக எதிர்கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டுமே? அது இல்லை அவர்களிடம்!

இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே said...

மீண்டும் வருவீர்கள் என்று எதிர்பார்கவில்லை... நல்ல முயற்சி தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

தஜ்ஜால் said...

வாங்க அல்தாஃப்,

இன்னுமொரு இடைவெளி இருக்கிறது. அதன் பிறகு நமது 'தாவா' பணிகள் வழக்கம்போல நடைபெறும். இன்ஷா அல்லா!

Dr.Anburaj said...

முகம்மது இறந்த பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி எழுத வேண்டுகின்றென். அயிசா போன்ற மனைவியா்கள் குறித்த தகவல்களையும் இறப்ப வரை எழுத வேண்டுகின்றேன். முகம்மது நபியின் மகள் இறப்பு மருமகன் இறப்பு பேரன்கள் - பேரன் திருமணமம் செய்த இந்திய வம்சாவளி பெண் ஆகிய சம்பவங்களை முழுமையாக வெளியிட வேண்டுகின்றேன்.
சுவனப்பாியனிடம் மோத வேண்டியுள்ளது. பாரதமாதா தேவடியா முண்டை என் எழுதுகின்றான்.

ஆனந்த் சாகர் said...

//சுவனப்பாியனிடம் மோத வேண்டியுள்ளது. பாரதமாதா தேவடியா முண்டை என் எழுதுகின்றான்.//

சுவனப்பிரியனும் முஹம்மது அலி ஜின்னாவும் ஒரே நபரா?

Anonymous said...


Swine(Means Pig) Priyan - might have thought about his own mom while writing it.Let that pig never reach India again.

பிசாசு குட்டி said...

ஆனந்த சாகர் அவர்களே, ஆமாம் இருவரும் ஒரே நபர் தான். சுவனன் போதனைகள் படி (அழகிய) நபி வழி என்றால் அதற்க்கு நேர்மாறான வெறிபிடித்த கருத்துக்களை எழுதும் ஜின்னா பெயர் வைத்து எழுதுகிறார். ரொம்ப நல்லவனா நடிச்சாலும் தன்னோட வெறியை தணிக்க புனைபெயர் கொண்டு வசவுகளை பதிந்து வருகிறார். (கருத்துக்களை தவிர்க்கதெரியாதவரா அவர்) எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்.

மிஸ்டர் அன்பு ராஜ் எனக்கு பகடு, பறையோசை, தமிழ் ஹிந்து,இஇஇ, செங்கொடி போன்ற வேறு சில தளங்களையும் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். எங்கயோ சண்ட போடுறீங்க.,. ஆனா எங்கன்னு தான் தெரியல

Dr.Anburaj said...

மிஸ்டர் அன்பு ராஜ் எனக்கு பகடு, பறையோசை, தமிழ் ஹிந்து,இஇஇ, செங்கொடி போன்ற வேறு சில தளங்களையும் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். எங்கயோ சண்ட போடுறீங்க.,. ஆனா எங்கன்னு தான் தெரியல
ahlulbaithtamil@gmail.com - அஹ்லுல்பைத் என்ற வலைதளத்தில் குரான் அனுமதிக்கும் விபச்சாரம் என்ற கட்டுரை துவங்கி னேன். தற்சமயம் அந்த வலைதளம் எழுதுவாறின்றி தனியாக உள்ளது. அரேபிய மதம் இவ்வளவு கேவலமாகதாக இருக்கும்என்று நான் நினைக்கவில்லை. சுவனப்பாியனில் எனது பல கடிதங்களை வெளியிட மாட்டாா. இருப்பினும் பேனா போரை தொடர வேண்டும். தங்களின் உதவிக்கு நன்றி. பகடும் படிக்கின்றேன்.புதிய கட்டுரைகள் வரவில்லையே.

Ant said...

நீண்ட காலத்திற்கு பின் வந்த கட்டுரைக்கு உடனடியாக பின்னூட்டம் இயலாதற்கு வருந்துகிறேன்.

விபச்சாரம் என்றால் என்ன?

//அடிமைப்பெண்களை பலவந்தப்படுத்தி பாலியல்தொழில் செய்யவேண்டம் என்றுதான் சொல்கிறது.//
அப்ப அடிமைப் பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் செய்தால் அதற்கு என்ன பெயர்? முஸ்லிமாக்களை அவ்வாறு பலவந்தப்படுத்த இயலுமா?

//மேலும் அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால்..? ... அவர்களை வற்புறுத்தினால் மன்னிப்பான், கருணை செய்வான் எனில்,//
பாலியல் தொழிலில் பலவந்தப்படுத்தி ஈடுபடுத்துபவர் குற்றமற்றவரா? அவர்களுக்கு அல்லாவின் அருளும் அடிமைப் பெண்னின் வாழ்வில் இருளுமா?

நல்ல ஆய்வு, குறிப்பாக மொழி பெயர்பின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது கட்டுரை. பாராட்டகள்!

Ant said...

கருத்துகளை மட்டும் புரிந்து கொள்ளவும், தட்டச்சு பிழைகளை பொறுத்தருள்க ...

ஆனந்த் சாகர் said...

//ஆனந்த சாகர் அவர்களே, ஆமாம் இருவரும் ஒரே நபர் தான். சுவனன் போதனைகள் படி (அழகிய) நபி வழி என்றால் அதற்க்கு நேர்மாறான வெறிபிடித்த கருத்துக்களை எழுதும் ஜின்னா பெயர் வைத்து எழுதுகிறார். ரொம்ப நல்லவனா நடிச்சாலும் தன்னோட வெறியை தணிக்க புனைபெயர் கொண்டு வசவுகளை பதிந்து வருகிறார். (கருத்துக்களை தவிர்க்கதெரியாதவரா அவர்) எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். //

ரொம்ப நல்லவரா நடித்து அவர் எழுதும் கட்டுரைகளும் அவரை நயவஞ்சகராக, கோமாளியாக, அடிப்படை அறிவில் பலவீனராக, பொய்யராக, சவூதி அரபு அடிமையாக, இஸ்லாமிய வெறியை பரப்ப கூலிக்கு வேலை செய்பவராக, பிரிவினை ஏற்படுத்துபவராக தெளிவாக காட்டுகின்றன.