Wednesday, 8 February 2017

முஹம்மதியம் கற்பிக்கும் பெண்ணுரிமை!-3

பெண்களுக்கு முஹம்மதியம் வழங்கியுள்ளதாகக் கூறப்படும், விருப்பமான மணமகனைத் தெரிந்தெடுக்கும் உரிமையை, நடைமுறை வாழ்வில் நம்முடைய முஹம்மதுவே பின்பற்றவில்லையென்பதற்கு குர்ஆனே போதுமான ஆதாரமாக இருக்கிறது. முல்லாக்கள் கூறும் குறிப்பிட்ட இவ்வுரிமை, மற்றும் அது தொடர்பான ஹதீஸ்கள் காலபோக்கில் பரிணாமம் பெற்றவைகளாக இருக்கவேண்டும்.

சரி..!

முஹம்மதுவும் அவரது கடவுள் அல்லாஹ்வும் இணைந்து முன்னெடுத்த ஜைத்-ஜைனப் திருமணம் என்னவானது?

குர்ஆன் 33:37
யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக!..

இப்பிரபஞ்சத்தைப் படைத்த(!) இறைவனின் தூதர், ஜைனப்பை மணவிலக்கு செய்யாதே என்கிறார்; “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்” என்று எச்சரிக்கை செய்தும், அல்லாஹ்வைப்பற்றியோ,  சிறிதும் அஞ்சாமல் ஜைத் தனது மனைவி ஜைனப்பை மணவிலக்கு செய்துவிட்டார்.

இப்பொழுது குர்ஆன் 33:36-ம் வசனத்தையும் இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

33:36. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் வேண்டாமென்றும், சுயவிருப்பம் கொள்ள அனுமதியில்லையென எச்சாரித்துத் தடுத்தபிறகும் அதையும் மீறி தனது சுய விருப்பப்படி ஜைனப்பை மணவிலக்குச் செய்த ஜைத், முஹம்மதியத்தின் அடிப்படையில் குற்றவாளி இல்லையா?

முஹம்மதிய வரலாற்றில், ஜைத் முஹம்மதின் வளர்ப்பு மகன் என்ற நிலையைக் கடந்து ஒரு சிறந்த ஸஹாபியாக அறியப்படுபவர். அல்லாஹ்விற்காகவும், அவனது தூதருக்காகவும் தாக்குதல்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டவர், அதற்காகவே தனது இன்னுயிரையும் நீத்தவர். இத்தகைய மனிதர் அல்லாஹ்வும்-அவரது தூதரும் கொடுத்த எச்சரிக்கைகளையும் மீறி முடிவெடுக்கிறார்; பின்னர் ஜைத் எடுத்த முடிவை அல்லாஹ்வும்-அவரது தூதரும் எவ்விதமான மறுப்புமின்றி அங்கீகரிக்கின்றனர் எனில் முதலில் கொடுத்த எச்சரிக்கை அல்லது அறிவுறுத்தல்களின் பொருள் என்ன?

மேலும் இங்கு முஹம்மது-அல்லாஹ் என்ற இருவரும் கூட்டணியாக எடுத்த முடிவு தவறாகிப்போனது. ஜைத்-ஜைனப் மணவாழ்க்கையின் தோல்வி குர்ஆன் முஹம்மதின் கைச்சரக்கு என்பதை மிகத்தெளிவாக நிரூபிக்கிறது.

ஜைத்திற்கு குர்ஆன் வசனங்களின் பின்னனி பற்றிய புரிதல் இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தவில்லை; பொருட்டாகவும் மதிக்கவில்லை என்று சொல்லலாம்.

முஃமின்களால் இதை ஏற்க முடியாது. ஜைனப்-ஜைத் திருமணமும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட மணவிலக்கும் அதைத் தொடர்ந்த முஹம்மது-ஜைனப்பின் திருமணமும் அல்லாஹ்வின் விதியே என்றும் முஃமின்கள் வாதிடலாம். காரணம் வளர்ப்பு மகன் என்ற கருத்தாக்கத்தை தற்தெறிவதுதான் அல்லாஹ்வின் திட்டம்-விதி என்றும் அவர்கள் சொல்லலாம். விதியைப்பற்றி விவாதிப்பதில் எனக்கு எப்பொழுதுமே மிகுந்த ஆர்வம் உண்டு. குறிப்பாக ஜைனப்-ஜைத்-முஹம்மது என இவ்விவகாரத்தை மட்டும் விவாதிக்கலாம். முஃமின்களை வரவேற்கிறேன்.

நாம் முஹம்மதியம் வழங்கும் பெண்ணுரிமைகளைத் தொடர்வோம்.

பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு
…இஸ்லாம் எல்லோருக்கும் அருளாக இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் அது பெண்ணினத்திற்கே பேரருளாக அமைந்தது என்பது ஒரு பெரிய உண்மையாகும். ரஸுலுல்லாஹ்வின் வருகையும் இஸ்லாத்தின் தோற்றமும் நிகழ்ந்த அந்த கால கட்டத்தை சரியாக அறியும் ஒருவர் இவ்வுண்மையை ஏற்கத் தயங்க மாட்டார்.
அன்று பெண் என்பவள்,
   1. ஆணின் அடிமை
   2. அவனின் சிற்றின்பப் பொருள்
   3. ஒருவர் விட்டுச் செல்லும் வாரிசுச் சொத்தின் ஓர் அங்கம்
   4. மனிதப் பிறவியாக கருதப்பட முடியாதவள்
   5. ஒரு தீமை, அத்;தியவசியத் தீமை
   6. குடும்பத்தின் அவமானச் சின்னம்
   7. ஒரு சுமை
   8. எத்தகைய உரிமையையும் பெறத் தகைமையற்றவள் என்றெல்லாம் கருதப்பட்டாள்.
பெண்ணினம் இவ்வாறு மிக இழிவாக நோக்கப்பட்டும் கேவலமாக நடாத்தப்பட்டும் வந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தூது பொதுவாக மனித விடுதலையை இலக்காக கொண்டிருந்தது. குறிப்பாகவும் சிறப்பாகவும் பெண் விடுதலையை அது அடிநாதமாக கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஒரு பெண் விடுதலை மார்க்கம் என வர்ணித்தால் அது மிகையாகாது…

என்று நமக்குத் தலைசுற்றலை ஏற்படுத்துகிறார். இவர் மட்டுமல்ல முஃமினாக்களும்கூட இதே நிலைப்பாட்டுடன் பல கட்டுரைகளை எழுதிக் குவித்திருக்கின்றனர். முஹம்மதியம் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறதென்று போலியாக பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றனர். பெண்களின் உரிமைகள் என்று மட்டுமல்லாமல் பொதுவெளியில் மிக அதிகமாக விமர்சனத்திற்குள்ளாகும் முஹம்மதிய போதனைகளை எதிர்கொள்ள நவீன முல்லாக்கள் கையாளும் தந்திரங்களில் இத்தகைய பரப்புரைகள் தாம் மிக முதன்மையானது.

பொதுவாக இன்றைய நவீன முல்லாகளின் பொதுவெளிகளுக்கான பரப்புரைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது, முஹம்மதின் போதனைகளிலுள்ள மனிதத் தன்மையற்ற செயல்களையும், காட்டுமிராண்டித்தனங்களை அடியோடு மறைக்க முஹம்மதின் காலத்திலிருந்த பாகன் அரேபியர்களை விலங்கினும் கீழாக சித்தரித்து முஹம்மதை உயர்த்திக் காண்பிப்பது. இரண்டாவது முஹம்மதின் போதனைகளில் காணப்படும் அறிவியல் அபத்தங்களை அதாவது குறிப்பிட்ட அந்த செய்திகளையே மாபெரும் அறிவியல் முன்னறிவிப்பாக சித்தரித்து, குர்ஆனில் நவீன அறிவியல் என்ற பரப்புரைகளில் ஈடுபடுவது.

பெண்ணுரிமை என்ற விவாதங்களில் முதலாவது தந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவேதான் ”அன்று பெண் என்பவள்” என்று நீட்டி முழக்கிக் கொண்டு பட்டியலிடுகின்றனர். இன்னும் சில முல்லாக்கள்,

இஸ்லாத்தில் பெண்கள் நிலை
கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. …
ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள்…
சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்…
பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள்…
கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறுத்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார்…
readislam.net

என்று முழங்கிக் கொண்டு துவங்குவார்கள். அன்றைய காலத்தில் வாழ்ந்த இதர சமூகங்கள் எவ்வாறிருந்தது என்ற விஷயத்திற்குள் நமது கவனத்தை திசை திருப்பிவிடுவதன் மூலம் என்ன விமர்சனத்தை முன்வைத்தோம் என்பதையே மறக்கச் செய்துவிடுவார்கள்.

அன்றைய கிரேக்கர்களும், ரோமானியர்களும், சீனர்களும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் மட்டுமல்ல முஹம்மதின் காலத்தில் வாழ்ந்த அரேபியர்களும் கூட எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் முஹம்மதியம் என்ன சொல்கிறதென்பதான் நமது விவாதம்.  இதற்கான பதில்களை நாம் முன்பே கவனித்துவிட்டோம்; இருப்பினும் சுருக்கமாக ஒரு “recap”!

நம்முடைய சமகாலத்தில் முஹம்மதின் வழிகாட்டல்கள் மிகச் சரியாக செயல்படுத்த முயற்சிக்கப்பட்டது, தாலிபான்களின் ஆட்சியிலிருந்த ஆஃப்கானிஸ்தானத்தில் மட்டும்தான்தான். பெண்களின் மீது அவர்கள் செயல்படுத்தி விதிமுறைகளை இங்கே காணலாம்.

1. மனைவியை அடிப்பதற்கு ஒருவருக்கு காரணம் அவசியமில்லை:

Sunan Abi Dawud 2147; Book 11, Hadith 2142
Narrated Umar ibn al-Khattab:
The Prophet said: A man will not be asked as to why he beat his wife.


2. மனைவி என்பவள் அடிமைகள் மற்றும் கால்நடைகளுக்குச் சமமானவள்
Sunan Ibn Majah; Vol. 3, Book 9, Hadith 1918
Narrated from 'Abdullah bin 'Amr:
that the Prophet said: “When anyone of you gets a new wife, a servant, or an animal, let him take hold of the forelock and say: Allahumma inni as`aluka min khayriha wa khayri ma jubilat 'alaihi, wa 'audhu bika min sharriha wa sharri ma jubilat `alaih (O Allah, I ask You for the goodness within her and the goodness that she is inclined towards, and I seek refuge with you from the evil to which she is inclined).' ”

Al-Tabari vol.9 p.113
Treat women well, for they are [like] domestic animals (`awanin) with you and do not possess anything for themselves.

மனைவி என்ற பெண் முஹம்மதியத்தைப் பொறுத்தவரையில் கணவன் என்ற ஆணின் பாலியல் அடிமை. முஹம்மதிய ஆண்கள் ’மஹ்ர்’ என்ற பொருளைக் கொடுத்து பெண்ணுறுப்பை அடைவதால் அதை விரும்பும்பொழுதெல்லாம் பயன்படுத்தும் முழுவுரிமையையும் அவர்கள் பெறுகின்றனர்.

குர்ஆன் 2:223
 உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

புகாரி 3237
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

3. கணவனின் இச்சையை தீர்க்கும் ஒரு உயிருள்ள பண்டம். தனது தேவைகளுக்காக கணவன் அழைத்தால், அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அப்படியே விட்டுவிட்டுச் செல்லவேண்டும்

Jami` at-Tirmidhi 1160; Vol. 1, Book 7, Hadith 1160
“When a man calls his wife to fulfill his need, then let her come, even if she is at the oven.”

முஹம்மதிய நம்பிக்கைப்படி, இவ்வுலகில் மட்டுமல்ல சொர்க்கத்திலும் முஃமினான ஆண்களின் இச்சைக்கு விருந்தாக ஹூர்லீன்கள் என்ற காமப்பதுமைகளை அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கிறான்.

ஒரு ஜோடி செருப்பை, மஹ்ர் என்ற மணக்கொடையைக் கொடுத்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யலாம்!

”மஹ்ர்” என்ற சொல் குர்ஆனிலேயே கிடையாது. நமது முல்லாக்கள் இந்த பதத்தை இவர்கள் எங்கிருந்து பிடித்து குர்ஆனின் மொழிபெயர்ப்பிற்குள் நுழைத்தார்களோ தெரியவில்லை. (அல்லாஹ்வே அறிவான்!)

Sunan Ibn Majah; Vol. 3, Book 9, Hadith 1887
A man among Banu Fazarah got married for a pair of sandals, and the Prophet permitted his marriage.

4. பெண்கள் அறிவற்றவர்கள் அறிவில் குறைபாடு உள்ளவர்கள்; முட்டாள்கள்
புகாரி 2658
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
"பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?' என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (பாதியளவு தான்)" என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதுதான் அவளுடைய அறிவின் குறை பாடாகும்" என்று கூறினார்கள்.



5. பெண் என்பவள், முஹம்மதால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நாய்களுக்குச் சமமானவள்
Sunan Ibn Majah; Vol. 1, Book 5, Hadith 949
“The prayer is severed by a black dog and a woman who has reached the age of menstruation.”

முஸ்லீம் 883
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையைப் பெண், கழுதை, நாய் ஆகியவை முறித்து விடும். வாகனத்தின்சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.

6. பெண் என்பவள், ஒரு பெரும் தீமை

Sunan Ibn Majah 3998; Vol. 5, Book 36, Hadith 3998
“I am not leaving behind me any tribulation that is more harmful to men than women.”

பெண்களை அறிவுத் திறம் நிரம்பியவர்களாகவோ, தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக அல்லது மதிக்கத்தக்கவர்களாகவோ முஹம்மதுவும் அவரது அல்லாஹ்வும் ஒருபொழுதும் கருதியதில்லை. மேற்கண்ட முஹம்மதிய ஆதார நூல்கள் கூறும் செய்திகளிலிருந்து ஆண்-பெண் சமத்துவத்தையோ பெண்களுக்குள்ள ஏதேனும் உரிமைகளையோ நம்மால் யூகிக்கக்கூட முடியாது. மாறாக அவைகள் எதிர்மறையைத்தான் உறுதி செய்கிறது. முஹம்மதியத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்கான உரிமையென்பது கானல் நீர்தான்.


தஜ்ஜால்

Facebook Comments

3 கருத்துரைகள்:

Ant said...

//33:36. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை./
இப்பவும் அல்லா முகமதை ஆலோசித்து விட்டுதான் முடிவுகள் செய்கிறாரா?

தஜ்ஜால் said...

வாங்க ANT,

//இப்பவும் அல்லா முகமதை ஆலோசித்து விட்டுதான் முடிவுகள் செய்கிறாரா?//

குர் ஆனோட வசனம் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது, பொருந்தி இருக்க வேண்டுமென்பது முஃமின்களின் நம்பிக்கை. அப்படியானால் இன்று அல்லாஹ், முஹம்மவிடம் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறான் என்பதுதான் பொருள்!


Ant said...

//அப்படியானால் இன்று அல்லாஹ், முஹம்மவிடம் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறான் என்பதுதான் பொருள்!// அல்லாவிற்கே ஆலோசனை சொல்லும் அளவிற்கு அவன் படைப்பான முகமது ஆற்றல் மிக்கவரா? மனிதன்-கம்யூட்டர்?