Thursday, 18 September 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 2

”^*^*^...!” 

என்று யாரோ என்னை அழைப்பதைப் போன்ற ஒலி கேட்டது.‘^*^*^’ எனது பெற்றோர்களால் எனக்கு வைக்கப்பட்ட பெயர் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. சுயவிளம்பரம் செய்வது கொள்வதில் எனக்கு விருப்பமில்லை என்பது மட்டுமே காரணம் (என்னது... நம்ப..மாட்டீங்களா...!?) நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததால் கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பதைப் போன்று தோன்றியது. சிறிது நேரத்தில்...

“த...ஜ்...ஜா...ல்..! எழுந்திரு”

என்று சற்று உரத்த ஒலி!  இம்முறை அருகிலிருப்பதைப் போலத் தோன்றியது.

எனது நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் எனது புனைப்பெயர் தெரியாது. இஸ்லாமை விமர்சிக்கக் கூடியவன் என்பதைத் தவிர, என் மனைவிக்குக்கூட எனது புனைப்பெயரோ அல்லது  நான் செய்து கொண்டிருக்கும் இந்தப் பணியைப் பற்றியோ முழுமையாகத் தெரியாது.

யாராக இருக்கும்...?

தூக்கக் கலக்கம் எங்கு இருக்கிறேன் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல்,

“...ம்ம்...! சொல்லுங்கள்” என்றவாறு பார்வையைக் கூர்மையாக்க..., 

ஏற்கெனவே பார்வைக் கோளாறு இதில் எங்கே பார்வையைக் கூர்மையாக்குவது? சரி... சரி.. இருக்கின்ற பார்வையைக் கூர்மையாக்கினேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருவரையும் காணவில்லை. யாராக இருக்கும்...?

“நா...ன்...தான்... அல்..லா...ஹ்..!” குரலில் வயதின் முதிர்ச்சி தெரிந்தது.

தூக்கம் என்னைவிட்டு விலகுவதாகத் தெரியவில்லை; விழிப்பதும் உறங்குவதுமாக இருந்தேன்.

“அல்லாஹ்வா...!  மன்னிக்கவும்! குரல் ஒலியைத் தவிர வேறெதையும் என்னால் அறியமுடியவில்லை” என்றேன்.

நண்பர்கள் யாராவது மறைந்திருந்து விளையாட்டு காண்பிக்கின்றனரா? மங்கலான வெளிச்சம் என்னால் எதையும் சரிவரக் காண முடியவில்லை.

”நான்தா…ப்பா…அல்லா..ஹ்..!” முதுமையை குரலிலிருக்கும் நடுக்கத்தை கொண்டு நன்றாகவே உணர முடிந்தது.

”நீங்கள் அல்லாஹ் அல்ல..!” என்றேன் நான்.

தூக்கம் கலைந்து சற்று தெளிவான நிலையில் இருந்தேன். அதே குரல் மீண்டும்...

”த…ஜ்…ஜா…ல்..! ”

இனம் தெரியாத இடத்தில் இருப்பதாகத் தோன்றியது. நான் பள்ளிவாசலில் அல்லவா இருந்தேன்? இப்பொழுது எங்கிருக்கிறேன், எங்கிருந்து குரல் எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் தெளிவாக அறிய முடியவில்லை.

நான் சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தினேன்.  எனக்கு அருகில் ஒருவரும்  இருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.  குரல் திறந்தவெளியிருந்து வருவதைப் போன்றிருந்தது. யாராக இருந்தாலென்ன பேசித்தான் பார்ப்போமே!.

“நீங்கள் அல்லாஹ்வா?”

”ஆமாம்ப்…பா…” என்றது குரல் இயல்பான பேச்சு வழக்கில்,

”அசரீரீயாக இல்லாம… நேரடியாக என்னோட பார்வையில் தெரியற மாதிரி வந்தால் பரவாயில்லை!” என்றேன்.

கண்களுக்கு அந்த இருள் பழகிவிட்டதால், தொலைவில் சில உருவங்கள் அசைவது போலத் தெரிந்தது.

”நான் உனக்கு பக்கத்திலதான் இருக்கேன்… கொஞ்சம் பொறுமையா…இரு…!!! என்றவாறு, அரபியில் ஏதோ கட்டளைகளைப் பிறப்பிப்பது போலத் தோன்றியது.

திடீரென்று மிகப் பிரகாசமான வெளிச்சம் எங்கும் பரவ, நான் குரல் வந்து கொண்டிருந்த திசையை நோக்கினேன்.

எனக்கு சற்று தொலைவில், ஒளிவெள்ளத்தின் மத்தியில் ஏதோ ஒன்றை சிலர் சுமந்து கொண்டிருக்க அதில் முதியவரின் தோற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். கண்களைக் கூசச் செய்யும் பிரகாசம் அங்கு மேலும் பலர் இருக்கக் கூடும். அவர்களின் உருவ அமைப்பு மனிதர்களைப் போல இல்லாமல் சற்று பிரம்மாண்டமாக இருப்பதை யூகிக்க முடிந்தது. ஏதோ வித்தியாசம் தெரிகிறது எதையும் சரிவர என்னால் பார்க்க முடியவில்லை

மயக்கத்திலிருந்து எழுந்தவுடன் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வியைச் சற்று தாமதமாகக் கேட்டேன். அதைக் கேட்கவில்லையென்றால் மயக்கத்திற்கு மரியாதையில்லாமல் போய்விடும்.

“நான் எங்கே இருக்கிறேன்?” என்றேன்.

“நீ…என்னோட இடத்திலதான் இருக்கற… தஜ்ஜால்!”

“அரபியில ஏதோ சொன்னீங்களே....?” என்று இழுத்தேன்

“அது.. பவர்  குறைவா இருந்தது அதனால சக்தியை கொஞ்சமாக கூட்டி வைக்க சொன்னேன்”

“இங்கே இருக்கிறவங்களுக்குத் தமிழ் தெரியாதா...?”

“இங்கே எல்லாருக்கும் எல்லா மொழியும் தெரியும். இருந்தாலும் அரபிதான் இங்கே அஃபிஸியல் லாங்வேஜ்!”

“விளையாடுனது போதும் பெரியவரே… நீங்க எல்லாம் யார்?”

“அட… போ…ப்பா… உண்மையச் சொன்னா நம்ப மாடேங்கற..! நான்தானப்பா அல்லாஹ்…!” என்றது குரல் பரிதாபமாக.

ஒப்புக் கொள்ளவில்லையன்றால் அம்முதியவர் அழுதே விடுவார் போலிருந்தது.

”நீங்க அல்லாஹ்தான்னு நான் எப்படி நம்பறது?”
”அல்லாஹ்கிட்டயே ஆதாரத்தை கேட்கிறயே இது உனக்கே நியாயமா இருக்கா?”

நான் சற்று தாழ்ந்த குரலில்,

“ஐயா… பெரியவரே நீங்க அல்லாஹ் இல்லைங்கறது எனக்குத் தெரியும்! ஏன்னா அல்லாஹ்வை மனிதர்களால் பார்க்க முடியாதுன்னு எங்க ஊர்ல முல்லாக்கள் வீதிக்கு வீதி மேடைபோட்டு லவுட்ஸ்பீக்கர் கிழிய கத்திக்கிட்டு இருக்கிறத நானே பல தடவைகள் கேட்டிருக்கேன்…!”

“அவங்க எப்படி என்னோட விருப்பத்தில் தலையிட முடியும்? அவங்க சொன்னா உண்மையாயிருமா? என்னை மனிதர்களால… பார்க்க முடியுமா… இல்லையாங்கிறத நான்தான் சொல்லனும். அவங்க இல்ல…!” என்றார் முதியவர்.

“மூஸாவின் சமூகத்தினர் அல்லாஹ்வை பார்க்க வேணும்னு சொன்னபோது அல்லாஹ் அவங்கள தண்டிச்சதாக (Q 2:55) குர்ஆன் சொல்லுது. அதனால மனிதர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவே முடியாதுன்னு சொல்லறாங்க!”

“மூஸாவோட சமுகத்தினர் தப்பு செய்ததால் அவங்களுக்கான நான் கொடுத்த தண்டனைதான் அது..!”

சுற்றிலும் பார்வையைச் செலுத்தினேன் முதியவரிடமிருந்து வெளிப்படும் ஒளி அந்தப் பகுதி முழுவதையும் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தது. இனம் புரியாத இடத்திலிருப்பதை என்னால் உணர முடிந்தது. எங்கும் ஒரே நிசப்தம்!

“உன்னால, என்னை இன்னும் நம்ப முடியல… இல்லையா?” பெரியவரின் குரல் கணீரென்று ஒளித்தது.

“ஆமாம்..!” என்றேன்.

“அல்லாஹ்வை உனக்குத் தெரியுமா… இதற்கு முன்னால வேற எங்கேயாவது… பார்த்திருக்கிறயா...?”

“இல்லை ..!”

“அப்புறம் எப்படி என்னை அல்லாஹ் இல்லைன்னு சொல்லற..?”

”அதுக்காக நீங்க சொல்லறதெல்லாம் நம்ப முடியுமா…?”

“நீ… இந்த ஆலிம்கள் எழுதினத …சொல்லறத… கேட்டதினாலத்தான்… இப்படி யோசிக்கிறேன்னு நினைக்கிறேன்!”

“மூஸாவுடைய தொல்லை தாங்க முடியாம.., அல்லாஹ் தன்னை வெளிப்படுத்தின போது அந்த ஒளிபட்டு மலையே சிதறிப் போனதா குர்ஆன்ல(Q 7:143)  படிச்சிருக்கேன்”

”மூஸாவால என்னைப் பார்க்க முடியாதுன்னு சொன்னதும் நான்தான், மலைய சிதற வைத்ததாகச் சொன்னதும் நான்தான்... இல்லைன்னு சொல்லல.. நான் மூஸாவிற்கு என்னை காண்பிச்ச போது குறிப்பிட்ட அந்த ஒரு மலை மட்டும்தான் சிதறிப்போனது ஒட்டுமொத்த பூமியுமில்ல...!”

“......!?”

முதியவர் தொடர்ந்து கொண்டிருந்தார்...

”மத்தவங்களால எப்பவுமே என்னைப் பார்க்கவே முடியாதுன்னு சொல்லியிருக்கேனா? யாரிடமும் எப்பொழுதுமே என்னைக் காண்பிக்காம இருக்கிறதுனால எனக்கு என்ன லாபம்?”

“அதை நீங்கதான் சொல்லனும்..!”

”அப்ப.. என்னை அல்லாஹ்ன்னு ஏத்துக்க..”

“ஆனால்..., “அல்லாஹ் பல திரைகளுக்கு அப்பால் இருந்தோ, தூதர்களின் வழியாகவோ அல்லது வஹீ அறிவித்தோ தவிர (Q 42:51) மனிதர்களுடன் உரையாடுவதில்லைன்னு முல்லாக்கள் சொல்லிகிட்டு திரியறாங்க!” என்றேன்.

“ஆமாம் நான்தான் அப்படிச் சொன்னேன். நான் நேரடியாக உரையாடுவதில்லைன்னு சொன்னத மட்டும்தான் நீ கவனிச்சிருகே! அதுல இன்னொரு செய்தியும் இருக்குப்பா...!”

“நான் கவனிக்காத செய்தியா...?”

“அதுல பல திரைகளுக்கு அப்பால்ன்னு ஒரு வாசகம் இருக்கு கவனிச்சியா..?”

”ஆமாம் இருக்குது..!”

“அப்படின்னா என்னோட ஆற்றல தடுக்கக் கூடிய பொருட்கள் இருக்குதுன்னுதானே அர்த்தம்..?”

“ஆமாம்..!”

 “நீ தர்க்கரீதியாக விவாதிக்கிறவன் தானே?”

“ஆமாம்”

”ஆதாமை என்னோட இந்த இரண்டு கைகளால்தான் படைச்சேன்(Q 38:75). என்னோட ஒளிபட்டால் சிதறிவிடும்னா, என்னோட கைகள் பட்டால் என்ன ஆகும்? ஆதாமின் உடல் சிதறி இருக்க வேண்டுமா... இல்லையா?”

“ஆமாம்... சரிதான்  குர்ஆனில் களிமண்ணோ அல்லது ஆதாமோ அல்லது அவரது துணைவியோ சிதறியதாக குர்ஆனில் கூறப்படவில்லை..!” என்றேன்.

முதியவரின் கேள்வி சரியாகவே தோன்றியது. இது ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று?

“களிமண்ணோ அல்லது ஆதாமோ ஏன் சிதறல? என்னுடைய படைப்பில்,  எதை எப்படி செய்ய வேணும்கிறத  நான்தான் முடிவு செய்யனும் முல்லாக்கள் அல்ல!  இவனுக சிந்திக்கவே மாட்டானுக.. சிந்திச்சு.. பாருங்க.. சிந்திச்சு.. பாருங்கன்னு சொன்னா எவன் கேட்கிறான்” என்றார் சலிப்பாக.

“... ...!”

“இன்னைக்கு மனுஷனுங்க எத்தனையோ கருவிகளை உருவாக்கி வச்சிருக்காங்க இல்லையா?”

”ஆமாம்..!” என்றேன்.

”நேரடியாகக் கண்ணுல பார்க்கமுடியாத காட்சிகளையெல்லாம் எப்படி பதிவு செய்யறீங்க...நீயே சொல்லு!” என்றார்

பெரியவர் எடக்கு மடக்காகப் பேசினாலும் அதில் அவரது வாதம் சரியாகவே இருந்தது. என்னுடைய வேலை அவர் செய்து கொண்டிருந்ததால் நான் அமைதியாக இருந்தேன்.

“நான் இவ்வளவு சொல்றேன் ஆன நம்பமாட்டேங்கற.. இதையெல்லாம்... நீயே பாரு...” என்றவாறு அங்குமிங்குமாக சில இடங்களை அந்தப் பெரியவர் சுட்டிக்காட்டிய பொழுதுதான் அவற்றைக் கவனித்தேன்.

“இப்படி இறைந்து கிடக்கிறதே...  இதெல்லாம் என்ன...?” என்றேன்

“அத்தனையும்.. தங்கம்.. வெள்ளி... வைரம் முத்து பவள ஆபரணங்கள்...! என்றார் சலிப்புடன் பெரியவர்.

ஆபரணங்கள் தட்டுமுட்டு சாமான்கள் மலை மலையா குவிந்து கிடந்தன. ஏதோ... வில்லங்கமான இடத்தில் சிக்கிக் கொண்டுவிட்டதாக மனம் எச்சரிக்கத் துவங்கியது.

”பெரியவரே...இத்தனைப் பொருட்களும் கேட்பாரில்லாம ஏன் இருக்குது?

”மனிதர்களுக்காக, சொர்க்கத்தில நான் செய்த தயாரிப்புகள்தான் இத்தனையும் (Q 35:33, 22:23). என்ன பண்ணறது ஒரு  பயகூட இத சீண்டல... இதவச்சு நாங்க என்ன பண்ணறதுன்னு, இதுக்கு ஏதாவது மதிப்பு இருக்கான்னு என்கிட்டயே திருப்பிக் கேட்கிறானுக. வீணாப் போகுதேன்னு மனசு கேட்காம  இங்க கொண்டு வந்திட்டேன் ” என்றார் பெரியவர்.

“என்னங்க.. பெரியவரே! சொர்க்கம் என்பது கொடுக்கல் வாங்கல் எதுவுமில்லாத எந்தத் தேவையுமில்லாத இடம்னு சொல்லறாங்க. அந்த மாதிரியான இடத்தில் இந்த உலோகங்களுக்கு எப்படி மதிப்பு இருக்க முடியும்?”

“நீ சொல்லறது சரிதான்... இந்த மனிதர்கள் உலகத்தில தங்கம்... தங்கம்னு அலையறானுகளே... அத நிறைய கொடுக்கலாம்னு திட்டம் போட்டேன் ஆனா...  இத நான் எதிர்பார்க்கல..! ”

இந்தப் பெரியவர்தான் அல்லாஹ்வா? நம்பவும் முடியவில்லை.  நம்பாமல் இருக்கவும் முடியவில்லை காரணம் முதியவரின் வற்புறுத்தல். 

“ஒரே... குஷ்ட்டமப்பா....!” என்ற கவுண்டரின் டயலாக்தான் நினைவிற்கு வந்தது. வெறும் ஆபரணக் குவியல்களை வைத்து இந்த முதியவரை அல்லாஹ் என்று முடிவு செய்வது சரியா? சரி.. வருவது வரட்டும் அல்லாஹ் என்றே தொடர்வது என்று முடிவு செய்தேன்.

“நீ...தான்....” என்று துவங்கிய வார்த்தை நின்றுவிட்டது.

முஸ்லீம்கள் அல்லாஹ்வை ஒருமையில் அழைப்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்வை ’நீங்கள்’ என்று மரியாதையாக அழைத்தால் அவனது ஏகத்துவம் கெட்டுவிடுமாம். அவன் அதெற்கென்று பிரத்தியேகமாக ஒரு நரகத்தில் போட்டுத் தொலைத்தால் என்ன செய்வது என்ற அச்சத்தினால்தான் அல்லாஹ்வை ’அவன்’ ’இவன்’ ’நீ’ ’வா’ ’போ’ என்றெல்லாம் ஒருமையில் அழைப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில், அரபி இலக்கணத்தில் பன்மைச் சொல் கிடையாது எல்லாம் ஒருமைதான். அதனால் அல்லாஹ்வும் ஒருமையில் அழைக்கப்படுகிறான்.  ஆனால் இந்த முல்லாக்கள் விடுகிற ஏகத்துவ பீலா இருக்கிறதே...! தாங்க முடியலட...சாமி..! என்று அல்லாஹ்வே அலறியடித்து ஓடும் அளவிற்கு சென்றுவிட்டது.

ஆனால் முஹம்மதைப்பற்றி குறிப்பிடும்பொழுது இந்த அரபி இலக்கணம் இலக்கியத்தை எல்லாம் தூர எறிந்துவிட்டு கண்ணுமணி பொண்ணுமணி என்ற  அடைமொழிகளுடன் பன்மையில் மரியாதையாக அழைப்பார்கள். ஒருவேளை ஒன்றிற்கு மேற்பட்ட முஹம்மது இருந்தனரோ என்னவோ!? இந்த குருட்டுச் சூழலில் வளர்ந்ததால் அல்லாஹ்வை நானும் ஒருமையில் அழைத்து, வாழிபாடுகள், பிரார்த்தனைகள் என்றெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் இங்கு வயது முதிர்ந்த ஒருவரை, ஒருமையில் அழைக்க எனது மனம் இடம் தரவில்லை. போதாக்குறைக்கு ’...ங்க’ என்றழைக்கும் ஊர்வழக்கு வேறு.

எனவே திருத்தமாக..,

“நீங்க.. தான் அல்லாஹ்வா...!?” என்றேன்.

“அப்பாடா... இப்பவாவது... என்னை அல்லாஹ்ன்னு ஒப்புக்கொள்ள மனசு வந்ததே!” என்ற பொழுது குரலில் ஒரு நிறைவு தெரிந்தது.

“சரி.. எனக்கு என்ன நடந்ததுன்னு இப்பவாவது சொல்லுங்க..!” என்றேன்.

பெரியவரி(அல்லாஹ்வி)டமிருந்து வெளியாகும் ஒளி சற்று குறைய நான் எனது பார்வையைக் கூர்மையாக்கி, முதியவர் இருக்கும் திசையை நோக்கினேன். இப்பொழுது காட்சி முன்பைவிட சற்று நன்றாகவே தெரிந்தது.

வயோதிகர்களைப் போன்ற தோன்றம் கொண்ட சிலர் பெருமூச்சு விட்டபடி சற்றேறக்குறைய தட்டை வடிவத்தில்  பாறை போன்ற ஒன்றை சுமந்து கொண்டிருந்தனர். பெரியவர் அதன் மீது ’குத்தவைத்து’ அமர்ந்திருந்தார். சந்தேகம் எதற்கு பேசமல் எண்ணிப் பார்த்துவிடுவதென்று முடிவு செய்தேன்.

சரியாக எட்டு பேர்!  (Q 40:7, 69:17 )

இல்லை எட்டு கிழவர்கள்! இல்லை எட்டு கிழவிகள்!

ச்சே ...என்ன குழப்பம் இது!

இவர்கள் கிழவர்களா இல்லை கிழவிகளா ஒன்றுமே விளங்கவில்லை.

“அய்யா... இவங்க எல்லாம் யார்? இது என்ன இடம்?”  என்றேன்.

தொடரும்...


தஜ்ஜால்

Facebook Comments

22 கருத்துரைகள்:

Anonymous said...


போதாக்குறைக்கு ’...ங்க’ என்றழைக்கும் ஊர்வழக்கு வேறு.//
Are you from coimbatore or kongu region?

தஜ்ஜால் said...

//Are you from coimbatore or kongu region?// கோயமுத்தூர்தானுங்(க)!

SAGODHARAN said...

SUPER THODARUNGA IDHATHAAN EDHIRPAATHEN!

Anonymous said...

ALLAAH than kaalai kattuvannu solli irukkane.appadi ethavathu kattinaana

Anonymous said...

SUPER bro nalla nadai aavalaga ullathu aduththa part padikka.seekiram eluthunga

Ibn Lahab said...

Konjam bore adikkuthu....but pls continue........

Unknown said...

முட்டாள்கள் வாழ்ந்த காலத்தில் நம்பினார்கள் சரி...இன்னுமா இந்த உலகம் அல்லாவை நம்புது....

தஜ்ஜால் said...

வாங்க சகோதரன்,

//SUPER THODARUNGA IDHATHAAN EDHIRPAATHEN!// அப்படியே செய்கிறேன்.

நன்றி!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous 1,

//ALLAAH than kaalai kattuvannu solli irukkane.appadi ethavathu kattinaana// அங்கி மூடியிருந்ததால் தெரியவில்லை. கெண்டைக் காலை மட்டுமல்ல எல்லாவற்றையும்(!) எனக்குக் மட்டும் காண்பித்தான். ஆனா நீங்க நம்பணும்...

தஜ்ஜால் said...

வாங்க Anonymous2,

//SUPER bro nalla nadai aavalaga ullathu aduththa part padikka.seekiram eluthunga//

நன்றி!
முதன் முறையாக இந்த முறையில் எழுதுகிறேன். குறைகள இருக்கும் சரி செய்து விடுகிறேன்.
இதுதான் சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

//அங்கி மூடியிருந்ததால் தெரியவில்லை. கெண்டைக் காலை மட்டுமல்ல எல்லாவற்றையும்(!) எனக்குக் மட்டும் காண்பித்தான். ஆனா நீங்க நம்பணும்...//

இதை நம்பாதவர்கள் காஃபிர்கள்(இறை மறுப்பாளர்கள்). அவர்கள் அநீதி இழைக்கிறார்கள், இறைவனுக்கு(?!) எதிராக போர் தொடுக்கிறார்கள். எனவே அவர்களுடைய தலைகள் துண்டிக்கப்படும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே! முஸ்லிம்களின் கண்மணி, பொன்னுமணி நபிகளுக்கு எல்லாம் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்(சல்லு புல்லு என்று படிக்கவும்) அவர்கள் இதைத்தானே குரான் முழுக்க சொல்லிவிட்டு போயிருக்கிறார். நீங்கள் எப்போதுதான் அவரைப்போல ஆவீர்களோ தெரியவில்லை!!!

தஜ்ஜால் said...

வாங்க இப்ன் லஹ்ப்,

நன்றி

//Konjam bore adikkuthu....but pls continue........ // அடுத்த பகுதிகளில் மசாலா தூவிவிடுகிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க இனியவன்,

பார்த்து ரொம்ப நாளாச்சு!
//இன்னுமா இந்த உலகம் அல்லாவை நம்புது....// வேற வழி? நம்மைப் போல துணிச்சல் அவர்களுக்கு இல்லை. மூடத்தனம், முட்டாள்த்தனம் என்று தெரிந்தும் வெளியே வரயோசிக்கிறாங்க...

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,

//நீங்கள் எப்போதுதான் அவரைப்போல ஆவீர்களோ தெரியவில்லை!!! // இந்த மிஹ்ராஜ்(!) பயணத்திற்குப் பிறகு நானும் அதைபற்றிதான் தீவிரமாக யோசிக்கிறேன். முதலில் அல்லக்கைகள் அபூபக்கர், உமர், அலீ பணியிடங்களுக்கு முதலில் ஆள் எடுக்கலாம் என்றிருக்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

//முஸ்லீம்கள் அல்லாஹ்வை ஒருமையில் அழைப்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்வை ’நீங்கள்’ என்று மரியாதையாக அழைத்தால் அவனது ஏகத்துவம் கெட்டுவிடுமாம். அவன் அதெற்கென்று பிரத்தியேகமாக ஒரு நரகத்தில் போட்டுத் தொலைத்தால் என்ன செய்வது என்ற அச்சத்தினால்தான் அல்லாஹ்வை ’அவன்’ ’இவன்’ ’நீ’ ’வா’ ’போ’ என்றெல்லாம் ஒருமையில் அழைப்பதாகக் கூறுகின்றனர். //

//ஆனால் முஹம்மதைப்பற்றி குறிப்பிடும்பொழுது இந்த அரபி இலக்கணம் இலக்கியத்தை எல்லாம் தூர எறிந்துவிட்டு கண்ணுமணி பொண்ணுமணி என்ற அடைமொழிகளுடன் பன்மையில் மரியாதையாக அழைப்பார்கள். ஒருவேளை ஒன்றிற்கு மேற்பட்ட முஹம்மது இருந்தனரோ என்னவோ!?//

முஸ்லிம்கள் தாங்கள் இறைவன் என்று நம்பும் அல்லாஹ்வை அவன்,இவன் என்று ஏக வசனத்தில் மிகவும் பயபக்தியாக, மரியாதையாக(?!) குறிப்பிடுவதையும் அதேசமயம் முஹம்மதுவை அவர்கள், இவர்கள் என்று பன்மையில் குறிப்பிடுவதையும் நாம் பார்க்கிறோம். தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தற்போதைய ட்ரெண்டாக காதலிக்கும் பெண் தன் காதலனை காதலிக்கும்போதும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி அவனை நீ, வா, போ, அவன்,இவன், வாடா, போடா என்று குறிப்பிடுவதையும் அதை எந்த சொரணையும் இல்லாமல் அவனும் கேட்டுக்கொண்டு பல்லிளித்துக்கொண்டு இருப்பதையும் காட்டுகிறார்களே. ஒருவேளை அப்படித்தான் முஸ்லிம்களும் அல்லாஹ்வை குறிப்பிடுகிறார்களோ?

முஹம்மதுவை அவன்,இவன் என்று சொன்னால் முஸ்லிம்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து பொது சொத்துக்களை சூறையாடுவார்கள், பல பேரை கொலை செய்வார்கள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இதன்பிறகும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும் மேலாக முஹம்மதை வைத்து பூஜிக்கவில்லை என்பதை முஸ்லிமல்லாதோர் நம்ப வேண்டுமாம்!

சிவப்புகுதிரை said...

மீண்டும் ஒரு கலக்கல் கட்டுரை .சீக்கிரம் அடுத்த பதிவுக்கு செல்லுங்கள் படிக்க காத்துக்கொண்டு இருக்கின்றென்.அப்பறம் எங்க முகமது நபிய(CREATOR OF ALLAH) பாதிங்களா எப்படி இருக்காரு சொர்க்கத்துல.அவர பாத்தா கதிஜா அம்மையாரையும் ஆயிசா அம்மையாரையும் சிவப்புகுதிரை விசாரிச்சதா சொல்ல சொல்லுங்க..

தஜ்ஜல் said...

வாங்க ஆனந்த்,

//முஹம்மதுவை அவன்,இவன் என்று சொன்னால் முஸ்லிம்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து பொது சொத்துக்களை சூறையாடுவார்கள், பல பேரை கொலை செய்வார்கள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இதன்பிறகும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும் மேலாக முஹம்மதை வைத்து பூஜிக்கவில்லை என்பதை முஸ்லிமல்லாதோர் நம்ப வேண்டுமாம்! //

அல்லாஹ், முஹம்மதின் அடிமைகளில் ஒருவன் தானே. அவனுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கிறது? என்று நினைக்கின்றனரோ...

தஜ்ஜால் said...

வாங்க சிவப்புக்குதிரை,

நன்றி!

//முகமது நபிய(CREATOR OF ALLAH) பாதிங்களா எப்படி இருக்காரு சொர்க்கத்துல.அவர பாத்தா கதிஜா அம்மையாரையும் ஆயிசா அம்மையாரையும் சிவப்புகுதிரை விசாரிச்சதா சொல்ல சொல்லுங்க..// முஹம்மதையும் அவரோட கில்மாக்களையும் இன்னும் பார்க்கவில்லை. நம்ம குழுவை அல்லாஹ் ரொம்பவே விசாரித்தார்(!).

Anonymous said...

//Are you from coimbatore or kongu region?// கோயமுத்தூர்தானுங்(க)!// இதத்தான் பாம்பின் கால் பாம்பறியும்னு சொல்றாங்க எப்படி சரியா கண்டுபிடிச்சேன் பாத்தீ"ங்களா"? என்ன இருந்தாலும் நம்ம ஊருக்கே உரிய லொள்ளு அப்படியே இருக்குது..அது என்னமோ தெரியலே கொங்கு மண்டலத்துல இருந்து நெறையா நாத்திகர்கள் கிளம்புறாங்க பெரியார் ல தொடங்கி இங்கிருந்து போன சினிமா நடிகர்கள்ல சிவகுமாரைத் தவிர்த்துப் பாத்தா எல்லாரும் நாத்திகம் பேசுபவர்கள் தான்.. கலக்குங்க.. கலக்குங்க.. --செந்தில்

Anonymous said...

மேலும் தமிழ் முஸ்லிம்கள் /உருது முஸ்லிம்கள் வேறுபாடுகளையும் கொஞ்சம் எழுதுங்க ஏன்னா கோவையில் கல்லூரியில படிச்ச காலத்துல இரண்டு தரப்பு நபர்களும் படிச்சாங்க தமிழ் முஸ்லிம் அவ்வளவு இறுக்கமா சடங்குகளை follow பண்ணி நான் பாத்ததே இல்ல ஆனா உருது ஆட்கள் படு தீவிரமாக செய்தார்கள். மேலும் தமிழ் முஸ்லிம் நண்பர் ஒருவர் உங்களைப் போல பெரியாரால் ஈர்க்கப் பட்டு நாத்திகம் பேசிக்கொண்டிருக்கிறார் ஆனால் வீட்டில் வெளிக்காட்டிக் கொள்வதில்லை --செந்தில்

தஜ்ஜால் said...

நன்றி செந்தில்,

//அது என்னமோ தெரியலே கொங்கு மண்டலத்துல இருந்து நெறையா நாத்திகர்கள் கிளம்புறாங்க // இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். எனக்குத் தெரிந்து கொங்கு மண்டலத்தில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியுடன் நிறைய நாத்தீகர்கள் இருக்காங்க. என்ன கஷ்டம்னா வெளிப்படையா காண்பிச்சுக்கறதில்ல.

தஜ்ஜால் said...

//உருது முஸ்லிம்கள் வேறுபாடுகளையும் கொஞ்சம் எழுதுங்க // இது சுலபம்தான் எழுதுகிறேன்.