Thursday 30 May 2013

முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)

"இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை  அடைவதற்காக  ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது  பலவந்தம் அல்லது பயத்தை  ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது"  என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான  விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு  நாம் அகராதியை  ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆனால்  இஸ்லாமிய பயங்கரவாதம் 09/11/2001ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை.  முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.

மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78  க்கு  குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின்  பொதுவான அம்சம் என்னவென்றால்,  அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து  கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு  இல்லாதபோது பிடிக்கப்பட்டார்.  அந்த வகையில், முகம்மதுவால்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.

வரலாற்று ஆசிரியர் அபுல்  ஹுசைன் முஸ்லிம்  நிசாபுரி  எழுதுகிறார் : "இப்னு அஉன்  அறிவித்தார்: போரில்  அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை)  ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்)  எழுதினேன்.  இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது  என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய   கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு  இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு  மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா  பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்." முஸ்லிம் 19:4292

அதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, "அல்லாஹு அக்பர்! கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின்  அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது" என்று கூறினார்.  " முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு  மக்கள்  தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை  கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள்  சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068

" எச்சரிக்கை  செய்யப்பட்டவர்களின்  காலைப்பொழுது மிகவும்  துரதிருஷ்டமானது"  என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம்.   அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம்  என்பது தெரியாமல்   இருந்தது.  தான் தாக்க  விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக  (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான்  இந்த "எச்சரிக்கை" என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள்  அழைப்பு விடுத்துள்ளனர்.  இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. "பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்" என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.  

ஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த'லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).

தொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற "பயம் பற்றிய தொழுகை" (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 - 102)

"நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்"  (4 : 101)

தத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில்  பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள்  இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.

பனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.  ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).

முஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும்  இருந்தனர்,  போரிடுபவர்களாக இருக்கவில்லை.  அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர்.  தரபனி, வ பக்க; சபக்கனி, வ'ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka). 

"அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது  குற்றம் சுமத்தினான்" என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல்,  இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.

ஆசிரியர் : அலி சினா            
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Facebook Comments

14 கருத்துரைகள்:

Ant said...

//எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிருஷ்டமானது// அப்ப முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிகளை இதுபோல் எச்சரித்துவிட்டு முகம்மதை போலவே நடந்து கொண்டால் அதில் தவறென்ன? ஒபாமா எச்சரிக்கை விடுத்து தான் அரபு முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார் இஸ்ரேல் எச்சரித்து விட்டுதான் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. அப்படியானால் எச்சரிக்கை செய்யப்பட்ட முஸ்லிம்களின் (அப்) பொழுது துரதிருஷ்டமானது என்று தான் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வர்களா?

தஜ்ஜால் said...

சிறப்பான பதிவு,

// இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான்.// இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இதைக் காண முடிகிறது.

ஆனந்த் சாகர் said...

Ant,

///அப்ப முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிகளை இதுபோல் எச்சரித்துவிட்டு முகம்மதை போலவே நடந்து கொண்டால் அதில் தவறென்ன?///

முஸ்லிம்களை பொருத்தவரை முஹம்மது செய்ததெல்லாம் சரியானது; அதில் தவறேதும் காணக்கூடாது. அப்படி தவறு காண்பவர்கள் இறைவனை நிராகரிப்பவர்கள். ஆனால் முஹம்மது செய்ததை முஸ்லிம்களுக்கு மற்றவர்கள் செய்தால் அப்பொழுது மட்டும் அது குற்றசெயலாக அவர்களுக்கு தோன்றும். இந்த இரட்டை அளவுகோள் மனப்பாங்கை இஸ்லாமிய வரலாறு நெடுக நாம் காண முடியும்.

முகம்மதுவும் அவரை பின்பற்றும் முஸ்லிம்களும் செய்வது போன்று அப்பாவிகளின் மீது வன்முறையை பிரயோகப்படுத்தும் பயங்கரவாத செயல்களை முஸ்லிமல்லாத மக்கள் செய்ய முனைவதில்லை, செய்யவும் கூடாது.

/// ஒபாமா எச்சரிக்கை விடுத்து தான் அரபு முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார் இஸ்ரேல் எச்சரித்து விட்டுதான் பாலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. அப்படியானால் எச்சரிக்கை செய்யப்பட்ட முஸ்லிம்களின் (அப்) பொழுது துரதிருஷ்டமானது என்று தான் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வர்களா?///

முஹம்மது செய்தது பயங்கரவாத தாக்குதல்(terrorist attack). அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்வது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீதான தற்காப்பு போர். இவை இரண்டையும் ஒப்பிட முடியாது.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

///சிறப்பான பதிவு,/// நன்றி.

/// // இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான்.// இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இதைக் காண முடிகிறது. ////

உண்மைதான்.

பல்சுவை தகவல் களஞ்சியம் said...

கிருஸ்தவ பெண்களே உங்களில் யார் பைபளில் சொல்வதை பின்பற்றுகின்றீர்கள்...??

தங்களது தலையை மூட வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கும் போது தலை எப்படி போனாலும் தன் உடம்பையாவது மூடுகின்றர்களா..? தன்னை கிருஸ்தவன் என்றும் கிருஸ்தவ நாடுகள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏன் இதை சிந்திப்பதில்லை...!!!! பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பைபளின் போதனையை புறக்கணிப்பதை இன்று எம்மால் காண முடிகின்றது...

எனவே உங்கள் இறைவனது கட்டளைகள் வெறுமனே புத்தகத்தில் மட்டும் தானா..?

I கொரிந்தியர்-11 அதிகாரம்6.

ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered.

இன்று உலகில் யார் இதை பின்பற்றுகின்றார்கள்...????

பல்சுவை தகவல் களஞ்சியம் said...

கிருஸ்த்தவ தோழர்களின் சிந்தனைக்கு..!!!!! இந்த பதிவின் கடைசி வரை வாசிக்குமாறு அன்பாக கேட்டு கொள்கின்றோம்.!!!!! இதை இந்த உலகிற்கு சொல்லுங்கள்..!!!!!!

உலகில் உள்ள எந்த மனிதனும்/எப்படி பட்ட கொடுன்கோல் ஆட்சி ஆலனும் தனக்கு கீழ் வேலை புரியும் சேவகனின் தந்தை இறந்தால் உடனே அவனுக்கு விடுமுறை 10 நாள் கொடுத்து சென்று அனைத்தையும் நல்ல படியா கவனித்து எல்லாம் முடித்து விட்டு வா என்று சொல்வார்கள் அதுவே நியதி/மனிதவிமானம்.
கீழே பைபளில் இருந்து நாம் சுட்டி காட்டும் சம்பவம் ஒரு மா பெரும் கொடுமையை இயேசு சிதுள்ளதாக பைபிள் சொல்கின்றது (நாம் சொல்லவில்லை) இந்த ஒரு சம்பவம் போதும் இயேசு ஒரு மத வெறி பிடித்தவர் என்பதை நிருபிக்க...!!!!!!

மத்தேய-8 அதிகாரம்

21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
And another of his disciples said unto him, Lord, suffer me first to go and bury my father.

22. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
But Jesus said unto him, Follow me; and let the dead bury their dead.

23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
And when he was entered into a ship, his disciples followed him
----------------------------------------------------------------
சில கேள்விகள்..!!!!!!
1. ஏன் இயேசு அனுமதிக்க வில்லை அவனுக்கு போஹ...?
2. ஏன் இயேசு விற்கு மனிதனை விட மதம் முக்கியாமா போனது..?
3. ஏன் இயேசு வுக்கு தன் சீடரின் உணர்வு புரியாமல் போனது.?
4. இறந்தவர்கள் இறந்தவர்களை எப்படி அடக்கம் பண்ணுவது..?

கிருஸ்தவதோலர்களுக்கு 2 ஒப்சன் தருகின்றோம் இந்த சம்பவத்தில் இருந்து சொல்லுங்கள் இயேசு இப்படி செய்து இருப்பாரா...? இல்லை என்றால் ஏற்ருக்கொள்ளுங்கள் இது கர்த்தர் வார்த்தை அல்ல எவனோ யேசுவின் பெயரில் விட்டு அடித்தது என்று...!!!!!!
----------------------------------------------------------------

இப்ப உங்கள் படிப்பினைக்கு முஹம்மத் நபியின் போதனைகளின் சில வற்றை தருகின்றோம் பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுங்கள்...!!!! இப்படி ஒரு அன்புள்ள துதரா முஹம்மத் நபி என்று ...!!!!!!!!!!! எமக்கு ஒருவர் மரணித்தல் என்ன சைய வேண்டும் என்று மட்டும் பெரும் சட்டமே இருக்கு தோழர்களே...!!!!!!!!
----------------------------------------------------------------
புஹாரி 8- அத்தியாயம் 73- ஹதீஸ் இலக்கம் 3.

அப்துல்லா பின் அமர் (ரலி) அறிவிக்கிறார்...
ஒருவர் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ் வின் தூதரே நான் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரியணும் என்றவுடன் நபி கேட்கிறார் உங்கள் பொறுப்பில் உங்களது பெற்றோர்கள் இருக்கின்றார்களா என்று.அவர் ஆம் என்றதும் நீங்கள் போய் அவர்களை நல்ல முறையில் கவனியுங்கள் அதுவே மிக சிறந்த ஜிஹாத் என்றார்கள்.
----------------------------------------------------------------

பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1247

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நோயுற்றிருந்த ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் ‘இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன?’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை தொழுகை நடத்தி
பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1244 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். எனது தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை
பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1240
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்


பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1245
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்

Robin said...

சை. பைஜுர் ரஹ்மான்,

முதலில் விபச்சாரத்தில் ஈடுபடும்இஸ்லாமியப் பெண்களை நல்வழிக்கு கொண்டுவரப் பாருங்கள். கிறிஸ்தவ பெண்களைப் பற்றி அப்புறம் பேசலாம்.

முகமதுவைப் பின்பற்றும் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவை விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்தத் தளம் முன்னாள் இஸ்லாமியர்களால் நடத்தப்படுகிறது. கிறிஸ்தவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இங்கு இஸ்லாத்தை பற்றி வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். மற்றவர்களை வம்புக்கு இழுக்காதீர்கள்.

ஆனந்த் சாகர் said...

பைஜூர் ரஹ்மான்,

உங்களுடைய புகார் கிறிஸ்தவர்களை பற்றியது. அனேக கிறிஸ்தவ இணைய தளங்கள் உள்ளன. அங்கு சென்று உங்களுடைய புகாரை தெரிவியுங்கள்(You settle your beef with Christians).

இது முஹம்மதையும் இஸ்லாத்தையும் அம்பலப்படுத்தும் தளம்(Our beef is with Muhammad and Islam). இங்கு வந்து சம்பந்தமில்லாமல் மற்ற மதங்களை பற்றி புகார் கூறுவது எந்த பிரயோஜனமும் அற்றது.

முஹம்மது சில நல்ல விஷயங்களையும் கூறி இருக்கிறார். அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டுமே. ஆனால் ஆயிரம் வெறும் வார்த்தைகளை விட ஒரு நல்ல செயல் மேலானது.
முஸ்லிமல்லாதோர்களை பற்றிய அவருடைய போதனைகள் எப்படிப்பட்டவை? புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று அவர் சொல்லவில்லையா? காபிர்களின் விரல் நுனிகளை துண்டியுங்கள் என்று அவர் கூறவில்லையா? அவரை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள் மீது அவர் 78 எதிர்பாராத திடீர் பயங்கரவாத தாக்குதல்களை(கஸ்வா) நடத்தி அவர்களின் ஆண்களை படுகொலை செய்துவிட்டு அவர்களுடைய பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளவில்லையா? அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக்கி அவர்களை அடிமைத்தளையில் தள்ளவில்லையா? அவர்களுடைய செல்வங்களை கொள்ளை அடித்து தன்னை செல்வந்தராக்கி கொள்ளவில்லையா? அவர் மக்கா வாசிகளின் வியாபார கூட்டங்களை கொள்ளை அடிக்கவில்லையா? தன்னுடைய மருமகள்மீதே தகாத காம இச்சை கொண்டு அவளை மணந்து கொள்ளவில்லையா? இந்த கேடுகெட்ட செயலை செய்வதற்காக தத்து எடுக்கும் புனித செயலையே அவர் கேவலப்படுத்தவில்லையா? யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் கூறவில்லையா? இணைவைப்பவர்கள்/நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதிகள் என்று அவர் சொல்லவில்லையா? இவற்றில் எதை முஹம்மது செய்யவில்லை என்று எங்களுக்கு இஸ்லாமிய மூல நூல்களைக்கொண்டு நிரூபணம் செய்யுங்கள்.

இதை எல்லாம் முஹம்மது செய்தார் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். முஹம்மதுவுடைய செயல்கள் எவ்வளவு தீமையானவை என்பதை இஸ்லாமிய மூல நூல்களைக்கொண்டு நாங்கள் நிரூபிக்கிறோம். அதற்கு நேரடி பதிலை கொடுங்கள். அதைவிட்டுவிட்டு இவன் இப்படி, அவன் அப்படி என்கிற பாணியில் எதையாவதை உளறாதீர்கள்.

தஜ்ஜால் said...

பைஜூர் ரஹ்மான்,

இஸ்லாமை விமர்சித்தால் கிருஸ்தவராகவே இந்துவாக இருக்க வேண்டுமென்று எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்?

இது முன்னாள் இஸ்லாமியர்களின் தளம். வாருங்கள் இஸ்லாமைப்பற்றி விவாதிப்போம்.

a said...

Ayya neengal silai vangkigal thane napiyai pattri avathuraga eluthu kirirgal onrai purinthu gollungal nabi avaral thannai vanangumaru sonnargala illaiye avargal iraivanin thutharagave irunthargal athai vida thannudaiya uruvam kooda pinal varum santhathiyeraruku theriya vendum entru avargal virumpavillai

ASHAK SJ said...

ஆனந்த சாகர் என்ற மூடனுக்கு # எந்த விருந்தாளிக்கு பொறந்தவன் என்ன எழுதினாலும் அதை தமிழ்படுத்துவது இருக்கட்டும், அதற்க்கு முன்னாள் உன் கேவலமான ஹிந்து மதத்தை பற்றி தெரிந்து கொள் , நீ கடவுள் என்று சொல்லும் கேவலமான பிறவி கிருஷ்ணன் செட்டு ஆட்டத்தில் தோற்றுப்போனதற்கு 30 லட்சம் உயிர்களை கொன்றான் , பெண்கள் குளித்து கொண்டிருக்கும் பொது அவர்களில் துணிகளை எடுத்துகொண்டு கையை தூக்கிக்கொண்டு தண்ணீரில் இருந் வெளியே வாருங்க என்று சொன்னான் (அப்பத்தான் முலை நன்கு தெரியும்) , பல கோபியர்களின் கர்ப்பை சூறை ஆடியவன், அடுத்து சிவலிங்கம் , சிவனின் ஆணுறுப்பு இந்த கதையில் சிவன் அடுத்தவன் பொண்டாட்டியை ரிஷியின் வேடத்தில் ## செய்துவிட்டு வரும் பொது சிவனால் ஆணுறுப்பு அறுந்து விழுந்ததை பிடிக்க பார்வதி மல்லாக்க படுத்த கதை, ஆகையால் நான் சொல்ல வருவது என்னவென்றால் ஹிந்து மதம் என்பது ஒரு ஆபாச குப்பை, பார்ப்பன அடிமைத்தனம், மூடர்களின் கூடம் , ஆகையால் இந்து மதத்தை விட்டு வெளியே வா பிறகு மற்ற மதத்தை பற்றி விவாதி

A.Anburaj Anantha said..."The old" is being cast off and the new is admitted-this is the fate of human

life.Hindu society depends on no single book/ rituals/ personality etc.It is open to

new additions. so if anything old/supersitious exists it can be removed .so you need

not quote anything from Hinduism.

This web aims to expose the rotten/evil/satanic aspect of Mohammed, which are unrefuttable.

A.Anburaj Anantha said...


Mr.Ashak why are you silent.

write your comments.

Mohammmed is too poor to be taken as a role model.He is full of evils.

That is the point.

A.Anburaj Anantha said...

Mr.Ashik you are debating with Mr.Dr.Anburaj in suvanapriyan.But always crooked in your arguments.I am reading suvanapriyan also. Love India.
Love Indian Leaders.
Love Indian Kings.
Love Indian social reformers
.Love great achivements of our forefathers.
Hindus are your forefathers and neighbours as well.
Indian /Hindu culture is more than 10000 yrs old.Thirukkural tholkappiam thanjavur temple tharasuram temple etc are our pride.
Our forefathers arre great scientists,doctors,Engineers, philosophers, soldiers,Generals,.Always feel happy to speak about theirachievement

CEASE TO AN ARAB SLAVE.THAT IS MY ADVICE TO YOU.