Thursday 2 May 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -26


விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!
புஹாரி ஹதீஸ் : 6837          
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.
ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்... (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம். உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?

அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டி. உரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு  அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.
Malik's Muwatta:Book 28, Number 28.15.38:
Yahya related to me from Malik from Ibrahim ibn Abi Abla from Abd al-Malik ibn Marwan that he gave a slave-girl to a friend of his, and later asked him about her. He said, "I intended to give her to my son to do such-and-such with her." Abd al-Malik said, "Marwan was more scrupulous than you. He gave a slave-girl to his son, and then he said, 'Do not go near her, for I have seen her leg uncovered. "
(நண்பருக்கு கொடுத்த அடிமைப் பெண்ணைப் பற்றி கேட்கையில், அவர் அந்த பெண்ணை, ‘கசமுச’ செய்ய தன் மகனுக்கு அளிப்பதற்காக திட்டமிட்டிருப்பதாக கூறும் ஒருசெய்தி)

இவ்வாறாக அடிமைப்பெண்களை விரும்பியவர்களுக்கு வழங்கலாம். முஹம்மது நபிக்கு எகிப்திய ஆட்சியாளர், மரியத்துல் கிப்தியா, ஷிரின் என்று இரண்டு பெண்களை பரிசாக வழங்கியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மனைவிகளோ, அடிமைப் பெண்களோ இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது?

அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி  அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்தது. அல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம். அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும், குற்றமும் இல்லை. அல்முத்ஆ  திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.

போர்காலங்களில் சஹாபக்கள் தங்கள் மனைவியரைப் பிரிந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. சஹாபக்களின் உடல் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டனர். அதைக் கண்ட முஹம்மது நபி அவர்கள் போர் காலங்களில்  அல்முத்ஆ திருமணத்தை அனுமதித்தார். சஹாபக்கள்தங்களும் உடல் தேவைகளை அல்முத்ஆ திருமணம் மற்றும் பெண் போர்க் கைதிகளை அனுபவித்தல் என அல்லாஹ்வின் முழு அனுமதியோடு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

ஆண்கள், மனைவியை விடுத்து பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதை தடுப்பதற்காகவே புர்க்கா – ஃபர்தா/ ஹிஜாப் என்ற உடையை பெண்கள் அணிய வேண்டும் என்று முஹம்மது நபி கூறினார். எனவே  கற்புநெறியை ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது என்று உங்களையும் உலகை ஏமற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சாரா பீரங்கிகளின் வார்த்தைகளில் ஏதாவது பொருளிருப்பதாக தோன்றுகிறதா?

புகாரி ஹதீஸ் -5116
அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அல்முத்ஆ (தவணை முறைத்திருமணம்) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் (பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே! என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 5116,5117,5118,5119)

பின் நாளில் முஹம்மது நபி  அவர்கள் அல்முத்ஆ  திருமணத்தை தடை செய்தார் என்று  ஸுன்னி முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஆனால் ஷியா முஸ்லீம்களிடையே அப்படி எந்த தடையுமில்லை. ஒவ்வொருவரும், வாழ்வில் ஒருமுறையேனும் அல்முத்ஆ (தவணை முறைத் திருமணம்) செய்ய வேண்டும் என வலியுறுத்திக்கூறும் ஹதீஸ்களை ஷியாக்கள் முன்வைக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -5115
முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது
எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், அல்முத்ஆ) தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று சொன்னார்கள்.

அலீ அவர்களின் பெயரால் புனையப்பட்டதாகக் கூறி இந்த ஹதீஸை ஷியாக்கள் அடியோடு மறுக்கின்றனர். கீழே காணும் இந்த ஹதீஸ் மக்கா வெற்றியின் பொழுது நிகழ்ந்தது, முஹம்மது நபியின் அனுமதியோடு அங்கு அல்முத்ஆ திருமணம் நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது. அதாவது மேற்கூறிய கைபர் போருக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சி இது

 ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (சப்ரா பின் மஅபத் -ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் மக்கா வெற்றிப் போரில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்காவில் பதினைந்து நாட்கள் (முப்பது இரவு - பகல்கள்) தங்கியிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நானும் எனது குடும்பத்தைச் சேர்ந்த (என் தந்தையின் சகோரர் புதல்வர்) ஒருவரும் (பெண் தேடிப்) புறப்பட்டோம். நான் அவரைவிட அழகில் சிறந்தவனாக இருந்தேன். அவர் சுமாரான அழகுடையவராகவே இருந்தார்.
எங்களில் ஒவ்வொருவருடனும் ஒரு போர்வை இருந்தது. எனது போர்வை மிகப் பழையதாயிருந் தது. என் தந்தையின் சகோதரர் புதல்வரது போர்வை புதியதாகவும் மிருதுவாகவும் இருந்தது. நாங்கள் மக்காவிற்குக் "கீழ் புறத்தில்' அல்லது "மேற் புறத்தில்' இருந்தபோது, கழுத்து நீண்ட இளம் ஒட்டகத் தைப் போன்ற (அழகான) கன்னிப் பெண் ஒருத்தி எங்களைச் சந்தித்தாள். அவளிடம் நாங்கள், "எங்களில் ஒருவரை "அல்முத்ஆ' (தவணை முறைத் திருமணம்) செய்துகொள்ள இசைவு உண்டா?'' எனக் கேட்டோம். அவள், "நீங்கள் இருவரும் (எனக்காக) என்ன செலவிடுவீர்கள்?'' என்று கேட்டாள். எங்களில் ஒவ்வொருவரும் எங்களிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினோம். அவள் எங்கள் இருவரையும் கூர்ந்து நோக்கலானாள். என்னுடன் வந்திருந்தவர் அவளது ஒரு பக்கத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, "இவரது போர்வை பழையது; எனது போர்வை புதியது; மென்மையானது'' என்று சொன்னார். உடனே அவள், "இவரது போர்வையே பரவாயில்லை (அதுவே போதும்)'' என மூன்று முறை, அல்லது இரு முறை கூறினாள். பிறகு அவளை நான் "அல்முத்ஆ' (தவணை முறைத்) திருமணம் செய்துகொண் டேன். நான் (அங்கிருந்து) புறப்படவில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்திருமணத்திற்குத் தடை விதித்து விட்டார்கள்.
முஸ்லீம் 2729

அல்முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டதாகவும், பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தடை செய்யப்பட்டதாகவும்அனுமதிக்கப்பட்டதாகவும் பல செய்திகள் காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அன்றைய காலத்தில் அல்முத்ஆ  திருமணம் நடை முறையில் இருந்ததென்பதும், தடை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதரங்களில்லை மறுக்க முடியாத உண்மை.

போர் காலங்களில்  சஹாபக்களின் மனைவியர்களும்தான் தனிமையில் இருக்க வேண்டிய நிர்பந்தம். “அல்லாஹ்வின் ரசூலே போர்காலங்களில் எங்களுடைய கணவர்களைப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியுள்ளது எங்களின் உணர்வுகளுக்கு என்ன பதில்?” என்று சஹாபக்களின் மனைவியர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?.

அல்முத்ஆ திருமணம் என்பது (ஹலாலான) விபச்சாரத்தை தவிர வேறு என்ன? இன்று நம்மில் பல ஆண்கள் வயிற்று பிழைப்பிற்காக கடல் கடந்து செல்கிறார்கள். தங்கள் மனைவியர்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழவேண்டிய சூழ்நிலை அந்த ஆண்களும், அவர்களின் மனைவியரும் உணர்ச்சிகளற்ற ஜடமா? அவர்களுக்கும் அல்முத்ஆ திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே அருவருப்பாக தோன்றவில்லையா?

மது அருந்துவது இனி முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று ஓரேஅடியாக தடை செய்தால் மனிதர்கள் "நாங்கள் ஒருபோதும் மது அருந்துவதை கைவிடமாட்டோம்" என்றும், விபச்சாரத்திற்கு தடைவித்தால், "நாங்கள் ஒரு போதும் விபச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டோம்" என்றும் கூறி மறுத்து விடுவார்களாம் எனவேதான் படிப்படியாக தடைவிதிக்கப்பட்டது. என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.

 முதலில் அந்த ஹலாலான விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும்? பின் நாளில் ஏன் தடைசெய்ய வேண்டும்?

அந்தந்த காலகட்டத்தில் தேவைக்கேற்ப புதிய வழிமுறைகள் அல்லாஹ்வினால் வஹியாக இறக்கப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்யாருடைய தேவைக்கு? முஹம்மது நபி  அவர்களின் தேவைகளுக்காகவா அல்லது மனிதர்களின் தேவைகளுக்காகவா?

புஹாரியின் ஹதீஸ், முஸ்லீம்கள் தங்களது அரசாட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகே, முத்ஆ திருமணங்கள் கியாமத் நாள்வரையிலும் தடைசெய்யப்பட்டதாக கூறுகிறது. இதை கவனித்தால் இதில் மறைந்துள்ள சூழ்சியை நீங்களே அறியலாம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்,
முத்ஆ திருமணங்கள் முதலில் ஏன் அனுமதிக்கப்பட்டது?

          முஹம்மது நபி தனது படையினர் போரில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க எல்லா வழிகளிலும் உற்சாகப்படுத்தினார். பலதாரமணம், அளவில்லா அடிமைப் பெண்களுடன் கூடி மகிழ அனுமதி, எதிரிகளின் பெண்களையும், செல்வங்களையும்  சூறையாடுதல், சொர்க்கம், ஹூருலீன் கன்னியர்களுடன் சல்லாபம், நரகம் என்று  நியாய அநியாயங்களையும் ஒழுக்க முறைகளையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெற்றியை வெறித்தனமாக அடைவதற்கு பல வழிகளிலும் உற்சாகப்படுத்தினார் அவற்றில் ஒரு வழிமுறையே இந்த முத்ஆ திருமணங்கள்தனது தேவை முடிவடைந்ததும் தடைசெய்து விட்டார்.

          வஹீ எனப்படும் முறையில் வெளியான குர்ஆன் வசனங்களையும் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பொழுது, இவைகள் சர்வ வல்லமையுடையவன் என்று போற்றப்படும் இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது எனத் தோன்றியது. ஏகத்துவ செய்தியை மக்களிடையே கூறுவதற்கு, இனப்படுகொலைகளும்கொள்ளையடித்தலும், கற்பழிப்பதலும், விபச்சாரம் செய்ய அனுமதித்தலும், வாக்குறுதிகளை மீறி பொய் சொல்லி ஏமாற்றுதலுக்கும் (தக்கியா-புனிதமோசடி) அவசியம் என்ன? இவைகளை முன்னின்று செய்வதற்கும் இறைத்தூதர் என்றொருவர் தேவையா?  இவர் கூறும் அக்கிரமங்களை வேதவாக்கு என்று நம்ப வேண்டும். மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்?
 நல்ல வேடிக்கை இது !

முஹம்மது தனது மிகக் கீழ்த்தரமான எண்ணங்களையும் விருப்பங்களையும் அல்லாஹ்வின் வேதவாக்கு எனக் கூறி நிறைவேற்றிக் கொண்டார்

குர்ஆன் முழுவதுமே இறைவனின் வார்த்தைகளல்ல என்ற முடிவை அடைந்தேன். ஒருவேளை இறைவனின் வார்த்தைகளுடன் முஹம்மது நபியின் சொந்த சரக்குகள் சிலவற்றை குர்ஆனுக்குள் நுழைத்து விட்டிருப்பாரோ என்றும் தோன்றியது. முழு குர்ஆனிலுமிருந்து முஹம்மது நபியின் கைச்சரக்குகளையும் அல்லாஹ்வின் வாக்குகளையும் பிரித்தறிவது எப்படி?

  குர்ஆன் எவ்விதமான முரண்பாடுகளுமற்றது மிகத் தெளிவானது முன்னறிவிப்புகள் நிறைந்தது இதுவே குர்ஆன் இறைவனின் சொல் என்பதற்கான நிரூபனம் என்று, இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் நினைவிற்கு வந்ததுஎனவே குர்ஆனின் மேலும் சில பகுதிகளையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன்

தஜ்ஜால்

பின் குறிப்பு :
கூடுதல் விளக்கம் தேவை எனில் “முத்துக் குளிக்க வாரீகளா... முத்ஆ செய்ய வாரீகளா...!!!” பார்க்கவும்

Facebook Comments

19 கருத்துரைகள்:

சிவப்புகுதிரை said...

//அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்தது. அல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம். அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும், குற்றமும் இல்லை. அல்முத்ஆ திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.//


இந்த இழவு செயலுக்கு எந்த தடையும் இன்று வரை அக்மார்க் மூந்மின்களிடம் (சவுதிகாரர்கள்)இல்லை .இன்றும் இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது என்ற தகவல் கிடைக்கின்றது..

ஆதரம் கேட்பர்களுக்கு இந்த செய்தீயே சாட்சி
http://www.vinavu.com/2013/04/29/contract-islamic-marriages/

ஆனந்த் சாகர் said...

குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முத்ஆ என்ற தற்காலிக திருமணத்தை செய்யலாம் என்று ஷியா முல்லா ஒருவர் எழுதியதை படித்ததாக நினைவு.

Ant said...

//“அல்லாஹ்வின் ரசூலே போர்காலங்களில் எங்களுடைய கணவர்களைப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியுள்ளது எங்களின் உணர்வுகளுக்கு என்ன பதில்?” என்று சஹாபக்களின் மனைவியர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?.// சிந்திக்க தெரியாதவர்கள் சிந்தித்தால் நலம். //ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்... (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது// விபசாரத்தில் துாதரை பின்பற்றுபவர்கள்தானே செல்கின்றனர் அவர்களுக்கு அல்லாசாமி கூறிய அல்லது அவரி ரசூல் கூறிய தண்டனை என்ன? பலகடவுகள் கொள்கையை பின்பறுபவர்களிடம் மற்ற சாமிகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டு ஆனால் ஏக இறைவன் கொள்கையை கொண்டவர்கள் தான் தங்கள் சாமிதான் உண்மையானது என்று மற்வர்களை பழிப்பதும் கண்கூடு. உதாரணம் பாகிஸதான் வங்காளத்தில் இந்துகள் எண்ணிக்கை இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை ஒப்பிட்டால் தெரியும். அட நம்ம ஊர் சாமியாடிகள் அருள்வாக்கு அரபு சாமியரை விட நாகரீகமானவர்கள் என்ற முடிவுக்கு வரலாம்.

தஜ்ஜால் said...

வாருங்கள் சிவப்புக் குதிரை,

முத்ஆ திருமணத்திற்கு முஹம்மது தடை விதித்ததாகவும் மீண்டும் அத்தடையை நீக்கியதாகவும் முரண்பட்ட செய்திகள் ஹதீஸ்களில் உண்டு.

உண்மையை அல்லாஹ் மட்டுமே அறிவான் (?!)

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

ஷியாக்களிடையே முத்ஆ திருமணத்திற்கு தடையேதுமில்லை. ஒரு மணி நேரத்திற்கு மட்டுமல்ல ஐந்து நிமிடங்களுக்கு முத்ஆ திருமணம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

விபச்சாரம் செய்வதென்று முடிவு செய்தபின் மூன்று நாளென்ன மூன்று நிமிடம் என்ன எல்லாம் ஒன்றுதான்!!

தஜ்ஜால் said...

வாருங்கள்

///பலகடவுகள் கொள்கையை பின்பறுபவர்களிடம் மற்ற சாமிகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டு // உண்மைதான் முஹம்மதிற்கு முன் அங்கு,கடவுளின் பெயரால் அரபுகள் அடித்துக் கொண்டதில்லை. 360 கடவுளர்களின் சிலைகள் கஅபாவில் இருந்ததே இதற்கு சாட்சி.

Unknown said...

மனைவி தனக்கு மட்டுமே சொந்தம்,ஆனால் அடிமைப் பெண் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தம்.ஆஹா...என்ன ஒரு சுயநலமான கொள்கை. இம்முறையில் தன் மனைவிகளுக்கு அடிமை ஆண்களை திருமணமுடிக்க திருமறையில் அல்லா கூறியிருந்தால் நியாயமானது.

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,

// மனைவிகளுக்கு அடிமை ஆண்களை திருமணமுடிக்க திருமறையில் அல்லா கூறியிருந்தால் நியாயமானது.// இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும். அடைப்புக்குறி, ஆச்சரியக்குறி என்று எதையாவது போட்டு குர்ஆனைத் திருத்தினால் (மொழிபெயர்த்தால்) வழி ஏற்படலாம்!

ஆனந்த் சாகர் said...

இஸ்லாத்தையும் முகம்மதுவையும் அம்பலப்படுத்தும் நம்மை போன்றவர்களின் கட்டுரைகளுக்கு பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்டு இஸ்லாமிய இணைய பேரவையை துவக்கி முட்டாள்தனமாகவும் உண்மைகளை இருட்டடிப்பு செய்தும் சில முஸ்லிம்கள் உளறி இருக்கிறார்கள். அவர்களின் இணைய முகவரி :

http://www.iiponline.org/Articles/Whoisliar/PART1.htm

நாம் இவர்களுக்கு சத்தியத்தைக்கொண்டு தக்க பதில் அளிப்போம்.

dove said...

ஆனந்த் சாகர் and your groups ! i read bellow article "http://www.iiponline.org/Articles/Whoisliar/PART1.htm"" . welldone ஆனந்த் சாகர் and your groups. almost muslims accept theire weakness.

தஜ்ஜால் said...

ஆனந்த்,

//http://www.iiponline.org/Articles/Whoisliar/PART1.htm// இது எப்பொழுதிலிருந்து?

நான் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்த்து விடுகிறேன்.

SAGODHARAN said...

முத் ஆ திருமண பந்தம் ஒன்றே போதும் அரபுக்கழுசடைகள் பெண்களை எவ்வளவு கேவலமான போகப்பொருளாக நடத்தி வந்திருக்கிறார்கள் என்பது புரியும் ! இதில் முகம்மதுவும் ஒருவர் என்பதை மறந்துவிடவேண்டாம்! செய்வதெல்லாம் செய்துவிட்டு பின்னர் தடை உத்தரவு வந்ததென பீற்றிக்கொள்கிறார்கள்! அப்படியானால் தவறுதானே ?ஏனப்பா செய்தார்கள் என்று கேட்டால் தெரியாம செய்துவிட்டார்களாம் அதனால் அறியாமைகாலமாம்! மானங்கெட்ட நாய்களுக்கு இதைசொல்லித்தான் தெரியவேண்டுமா ?
முதலில் இஸ்லாம் மலர்ந்த நாளில் இருந்து வளர்ந்து வரும் இந்நாள் வரை பெண்கள்,குழைந்தைகளை கொன்று குவித்துகொண்டிருக்கும் ஒரே மார்க்கத்தை சேர்ந்த சகோதர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டு முஹம்மது பொய்யனா,மெய்யனா என்று வாதம் பண்ணட்டும்!

இதுக்கு விளக்கம் வேறு! முஹம்மது பொய்யன் இல்லை என்று நிரூபிக்க தனியாக தளம் வேறு!! தூ ........

Ant said...

// http://iraiyillaislam.blogspot.in/2012/12/blog-post_27.html (முத்துக்குளிக்க வாரீகளா…! முத்ஆ செய்ய வாரீகளா..!)// கட்டுரையில் போர்வை என்றுள்ளது ஆனால் // இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -26// இந்த கட்டுரையில் மேலாடை என்றுள்ளது சரியான பொருள் என்ன?

iraimai said...

islam patriya kooraivu vaverkiren aanal mathathai kadandu manitham valarkka varungal surungi vitta ulagil manitham onrey nirantharam iraimai nilaiyai (state) adaintha manithargalai pol anaivarum adhai adaiyalam.inert state andha naal seekiram varum endra nambikkiyodu

iraimai said...

thajjal
adam evalil ulagam arambithaley enna artham adutha santhathi eppadi vandhorukkum muraiyartta punarchiyilthane ankeyaye dourath thortu vidukiradhu piragenna adhil veen araichi origin of the world patri explain pannavumthen i will explain about it come out of circle let us create a new world without diversity mamitham mattumay nilaikkattum

iraimai said...

dear members let us discuss how to break through old pathetic concepts how to built a new world

iraimai said...

manithan oru samooga vilangu antha nilaiyai thandivara pudiya kolkaikalai uruvakkuvom adu ennalum nilaikkattum simple theory of origin of living beings just a chemical tractipn beyween Co2+H20 with a cayalyst may be thinder or lightning necause all the organic meyerials when burnt gave Co2+H2O just atrversible process living beings survived acc to abailability of resources this would yake millions of years
not in one weak.moodargalin mugathirai kilinthalthan nam karuthu valuperum iraima vanangakkoodiya porulalla adhu balviyalodu pinaindhu varum porul

iraimai said...

i am new one to your blog i will share my practical exp about merging with elemental forces by creating our thoughts in to waves and connect with universe.

ஆனந்த் சாகர் said...

இறைமை,

நீங்கள் கூறியுள்ள உங்கள் அனுபவத்தை விவரிக்க முடியுமா?