Monday 20 May 2013

ஏழாவது அறிவு      இப்பொழுதெல்லாம் கொஞ்சம் படித்த இசுலாமிய அறிவுஜீவிகளின் வட்டத்தில் இசுலாத்தை உண்மைபடுத்த அதிகமாக பேசப்படுவது ‘பரிணாமம்’ பற்றிய எதிர்ப்புகள் பற்றியதாகத்தான் இருக்கிறது. இணையதளங்களில் ‘பரிணாமம்’ பற்றிய எதிர்ப்பு கட்டுரைகளை பக்கம் பக்கமாக எழுதி தங்களது ஏழாவது அறிவுக்கூர்மையையும் தங்கள் மதத்தையும் தமக்குத்தாமே மெச்சிக்கொண்டு சொரிந்துகொள்வது சற்று கூடுதலாகவே உள்ளது. தனி நபர்களிடம் நாம் பேசும் சந்தர்பங்களில் எல்லாம் “இப்போ ஏன் ஒரு குரங்குகூட மனிதனாக மாறவில்லை” என்று கேட்காதவர்களே இல்லை.
      அறிவியலில் புதிதாக ஒரு கொள்கை மதக்கோட்பாடுகளுக்கு எதிரானக தோன்றும் பொழுது எதிர்ப்புகள் தோன்றுவது ஒன்றும் வியக்கத்தக்கதல்ல. டார்வினால் ‘பரிணாமம்’ நிறுவப்பட்டபோது பல எதிர்ப்புகளும் மறுப்பு கட்டுரைகளும், புத்தகங்களும் உருவாகின. வேறு பிற அறிஞர்கள் பலர் கொடுவாள்களுக்கும் நெருப்புகளுக்கும் பலியாகி மரணத்தை பரிசாகப் பெற்றதை ஒப்பிடும்போது டார்வினுக்கு கிடைத்த பரிசுகள் சொற்பமானதே. இந்த ‘பரிணாமம்’ பற்றிய எதிர்ப்பு கட்டுரைகளைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் இசுலாமியர்கள் தங்களது ஏழாவது அறிவை வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. ஆய்வுக் கல்வியிலும் (PHD) பின்னர் மருத்துவம், பட்டப்படிப்புகளிலும் பாடமாக இருந்த ‘பரிணாமம்’ இப்பொழுது பள்ளிப் படிப்புகளில் பாடமாக பயிற்றுவிக்கப்படும் நிலைக்கு உண்மைப்படுத்தப்பட்டு உயர்ந்து விட்டது.
      எடுத்துக்காட்டாக பத்தாம் வகுப்பில் முதல் பாடமே ‘பாரம்பரியமும் பரிணாமமும்’ (heredity and evolution) என்பதுதான். அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தோற்றவகைகளான ஹோமினிட்டுகள், ஹோமோ எரக்டஸ், நியான்டர்தால், ஹோமோ சபியன்ஸ் என்ற வகைகளைத்தான் கற்பிக்கிறது. இவர்களின் புனித குர்ஆன் சொல்லுவதுபோல மண்ணால் செய்யப்பட்ட மனிதன் மற்றும் விலங்கினங்கள் படைக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அப்படியே உள்ளன என்று பாடங்களும் இல்லை. கற்பிக்கப்படவும் இல்லை. பரிணாமமும், மரபணு பாடமும் இல்லாமல் மருத்துவப் படிப்போ மருத்துவமோ இல்லை என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுவிட்டது. குற்றவியல் புலாயவுத் துறையில் மரபணுத் தொழில் நுட்பம் இன்றியமையாத இடத்தில் உள்ளது. அந்த அளவுக்கு பரிணாமம் மக்களின் கல்லவியாக்கப்பட்டுவிட்ட பிறகும் இந்த ஏழாவது அறிவாளிகளுக்கு பரிணாமம் பற்றி மீண்டும் மீண்டும் விளக்கமளிப்பது வெட்டி வேலையாகும்.
      பரிணாமத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகளைக்கூட இந்த ஏழாவது அறிவுகள் எதிர்மறையில் உள்ளதாக விளங்கிக்கொண்டு புல்லரித்துப்போய் நிற்கின்றனர். எதிர்குரல் என்ற வலைதளத்தில் அனாதை மரபணுக்கள் என்ற கட்டுரையில் ‘அனாதை மரபணுக்கள்’ என்ற ஆங்கிலக்கட்டுரையை எடுத்துக்காட்டாக முன்வைத்து தாய் தொடர்பு ஏதும் அற்ற முற்றிலும் புதிய அனாதை மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் பரிணாமம் கவிழ்துவிட்டதாக எழுதியும் அதன் பின்னே சுவனப்பிரியன்களும் ஆஷிக் அகமதுக்களும் அல்லாஹு அக்கபோரு, அல்ஹம்துலில்லா, ஸஸக்கல்லா, ரஹ்மத்துல்லா, பரகத்துல்லா என்று புல்லரித்துப்போய் நிற்கின்றனர். பரிணாமத்தின் உயிராதாரமே இந்த முற்றிலும் புதிய மரபணுக்கள் உருவாகுவதுதான். அதையே டார்வின் ‘பாய்சல்’ (Mutation) என்கிறார். பரிணாமத்திற்கு நேர்மறையாக உள்ளதையே எதிர்மறை என்று புரிந்துகொள்ள இந்த ஏழாவது அறிவுக் களஞ்சியங்களால்தான் முடியும்.
      சரி, நாமும் பரிணாமம் பொய் என்பதை ஏற்றுக்கொள்பவர்களாக சிறிது நேரம் இருப்போம். அவர்களின் ஆசையை கொஞ்ச நேரமாவது நிறைவேற்றி வைப்போமே. அப்படியானால் அவர்களின் பாடங்கள் எப்படி இருக்கும்? அப்படியே கொஞ்சம் பள்ளிக்கூடத்திற்குள் போவோமா…
      நீண்ட தாடியும் நன்றாக வழவழ என்று மழிக்கப்பட்ட மீசையும் குல்லாவும் போட்டுக்கொண்டுள்ள ஒரு இசுலாமிய அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். அவர் இலக்கியத்திலும் வல்லவராம். அதனால்…
வாத்தியார்  : தஞ்சாவூரு மண்ணெடுத்து
                   தாமிரபரணி தண்ணிய ஊத்தி
                   சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை
                   அது பொம்மை இல்ல பொம்மை இல்ல
                   மனுஷன் தாங்க உண்மை..

பசங்கள்     : சா…ர் நல்லா பாடுறீங்க சா…ர்.

வாத்தியார்  : முண்டங்களா… இது சாதாரண பாட்டு இல்லடா. மனிதன்
             படைக்கப்பட்ட சூத்திரம்டா…
             ஏய் பசங்களா! இன்னைக்கு மனிதன் படைக்கப்பட்ட அறிவியலை                  
              பார்க்கப் போகிறோம்.

பசங்கள்     : சரிங்க சா…ர்.

வாத்தியார்  : பசங்களா நல்லா கவனியுங்க. அல்லா என்ற ஏகக்கடவுள் களிமண்ணை 
             எடுத்து தண்ணியை ஊத்தி நல்லா பிசைந்து ஒரு மனுஷன் மாதிரி  
            பொம்மையா செஞ்சு சூளையில் வைச்சு சுட்டான். தட்டினால் ஓசை வரும் 
            அளவுக்கு பதமா சுட்டு ஆறவச்சான். பிறகு அவன்ட இருந்து உசிறுல 
            கொஞ்சம் எடுத்து ப்ஃபூ... னு அந்த பொம்மைல ஊதி உசிற கொடுத்தான்.  
            அவன்தான் முதல் மனிதன் ஆதம்.

சந்நிரன்     : தஞ்சாவூர் மன்னுலயா சா...ர் ?

வாத்தியார்  : அட சும்மா ஒரு பாட்டுக்கு தஞ்சாவூர்னு சொன்னே. தஞ்சாவூர் 
             சைத்தான் இருக்கிற இடம்டா. உலகத்திலே ரொம்ப புனிதமான இடம் எது  
             தெரியுமா? அது மக்காதான். அந்த மண்ண எடுத்துதான் செஞ்சான்.

ராமு       : சா…ர் அப்போ மூளைய எந்த மண்ணுல செஞ்சான் சா…ர்? அது வேற 
             கலரா இருக்குதுல்ல சா…ர்.

சங்கரன்     : சா…ர் இதயத்த  எந்த மண்ணால செஞ்சான் சா…ர்?

ரஹ்மான்  : கிட்னி, குடல், ஈரல், நுரையீரல் எல்லாத்தையும் மண்ணாலதான் 
            செஞ்சானா சா…ர்?

வாத்தியார்  : ஆமாம்…ஆமாம் எல்லாத்தையு மண்ணாலதான் செஞ்சான்.

ராமு       : எல்லாத்தையும் ஒரே மண்ணால செஞ்சானா சா..ர்?

வாத்தியார்  : இல்ல.. ஒவ்வொண்ணையும் வேற வேற மண்ணால கலர் கலரா செஞ்சு 
             ஒடம்புல மாட்டினான். அதனாலதானே எல்லா உறுப்புகளும் வேறு வேறு  
             கலர் கலரா இருக்கு. இது கூட உனக்கு புரியலயா! கொஞ்சமாவது 
             பகுத்தறிவு வேணும்டா.

வனிதா     : சா…ர் அப்போ நரம்ப நூலால செஞ்சானா சா…ர்?

வாத்தியார்  : ம்ம்… நூலு இல்ல. நைலான் நரம்பால செஞ்சான்.

வனிதா     : அந்தக்காலத்திலயே நைலான் நரம்புலான் வந்திருச்சா சா…ர்?

வாத்தியார்  : இந்த உலகத்தில உள்ள அத்தனையும் அல்லா அப்பவே படைச்சுட்டான். 
              ராக்கெட், கம்ப்யூட்டர் எல்லாம் அப்பவே படைச்சு ஆதமுக்கு அதுங்க 
             பேர்கள (பெயர்களை) எல்லாம் சொல்லிக்க கொடுத்திட்டான்.

சாந்தி       : அப்போ அந்தக்காலத்தில கம்ப்யூட்டர் ஏன் சார் இல்ல?

வாத்தியார்  : அதுவா…. அப்ப உள்ள மனுஷனுக்கு அறிவு பத்தாதுன்னு அல்லா ஒளிச்சு 
             வச்சுட்டான். அத புரிந்து கொள்ள, பாதுகாக்கிற அளவுக்கு அறிவு நமக்கு  
             வளர்ததும் வெளிக்காட்டி தந்தான்.
             நமக்கு ஃபிரவுனை பாதுகாக்கிற அறிவு வளர்ததும் வெளிக்காட்டினால்ல 
             அதுபோலத்தான்..

ரோகினி    : சா…ர் நா ஒரு கேள்வி மட்டும் கேட்டுகவா சா…ர்.?

வாத்தியார்  : என்ன? கேளு

ரோகினி    : எலும்பையும் பல்லையும் கல்லால்தான அல்லா படைச்சான் சார்?

வாத்தியார்  : ம்…. இருக்கலாம். ஆனா அதபத்தி பாடத்தில சொல்லலையே. அதனால 
            அது நம்ம அறிவுக்கு எட்டாததுன்னு உட்டுறனும். அல்லா ஒருவனுக்குதான் 
            அந்த அற்புதம் தெரியும்னு பகுத்தறிவோடு ஏத்துக்கனும். சரியா…?

கவிதா       : இரத்த த்தை  எதுல சார் படைச்சான்?

வாத்தியார்  : ஜம் ஜம் கிணத்து தண்ணில படைச்சான். ஏன் தெரியுமா... அது தான் 
             கெட்டே போகாம சாவுற வரைக்கும் இருக்குமாம்..


      (இடையே ரஹ்மான் சந்திரனிடம் கிசு கிசுத்தான். டேய் உனக்கு தெரியுமா… அல்லா மூளைய மதினாவுல உள்ள மண்ண எடுத்துதான் செஞ்சானாம். எங்க தாதிமா சொல்லிருக்காங்க தெரியுமா… ஏன்னா அங்கதான் எங்க கண்மணி வாழ்ந்தாங்க, இறந்தாங்க. கப்ருகூட அங்கதான் இருக்குதில்ல…

வாத்தியார்  : டேய்…. அங்க என்ன பேச்சி. பேசாம பாடத்த கவனியுங்க. எவ்வளவு 
             முக்கியமான பாடம் நடத்துறேன்…. நீங்க என்டான்னா 
             பேசிக்கிட்டுறிக்கிறீங்க. ஒதை உழும்.

            அடுத்து, … பொம்பளைய எப்படி படைச்சான்னு சொல்றேன். ஆதமுடைய 
             எலும்புல இருந்து முதல் பொம்பளைய  படைச்சான். அந்த  
             பொம்பளைக்கு ஹவ்வான்னு பேரு.

ராமு       : எலும்புல எல்லாம் மனஷன படைக்க முடியுமா சார்?

ரஹ்மான்   : சா…ர் அல்லாவுக்கு அதுலாம் ஈஸிதான சார்!

வாத்தியார்  : ஆமாம்…. நீ உட்காரு
             பொம்பளைய படைச்சி மூளைல கொஞ்சத்த எடுத்துட்டான். அதனால   
             பொம்பளைக்கெல்லாம் ஆம்பிளைங்களவிட கொஞ்சம் அறிவு குறைவு.

ரோகினி    : ஹை…. சார் நாங்கல்ல அதிக மார்க்கு வாங்குறோம்…

வாத்தியார்  : நீங்க அதிக மார்க்கு வாங்குனாலும் அது மக்கப் செஞ்சு வாங்குற  
              மாரக்கு… அது நெசமான அறிவு இல்ல….
             சரி அத உடுங்க நோய்யும் மருத்துவமும் பத்தி பார்ப்போம்.
            
             தொற்றுநோய் என்பதே கிடையாது.

பசங்க
கோரசாக   ; அப்போ பள்ளிக்கூடத்துல ஊசி போட வரமாட்டாங்கள்ல ஹையா… 
              ஜாலிதான்..

வாத்தியார்  : ஏய்…. கத்தாம பாடத்த கவனிங்க. இல்ல அடிதான் உழும்.
             ஈ உடைய ஒரு இறக்கையில விஷமும் இன்னொரு இறக்கையில அந்த  
            விஷத்துக்கு முறிவு மருந்து இருக்கு. அதனால தண்ணி, டீ, கொழம்புல ஈ  
            விழுந்துட்டா உடனே அந்த ஈய அதுவுள்ள நல்லா ஒரு அமுக்கு  
            அமுக்கிவிட்டுட்டு எடுத்துப்போட்டுடனும். அப்புறம் தண்ணிய குடிச்சா  
            விஷம் ஏறாது.

சந்திரன்     : சா..ர் வெளியில விக்கிற போன்டாவுல ஈ மொய்க்குது சார். அத வாங்கி 
             தின்னா ஒரு  இறக்கையில உள்ள விஷத்த மட்டும் போட்டுட்டு போய்டா  
             என்ன சார் பன்னுறது?

ரஹ்மான்   : ஒரு ஈ - யயும் புடிச்சு தின்னுட்டா விஷம் இருக்காதுல சார்.

முருகன்     : சார்.... ஈ ஆய்ல, சளில எல்லாம் உட்கார்ந்திட்டு வருமே சார். அது கால்ல  
              ஒட்டிக்கிட்டு இருக்காத சார்...

வாத்தியார்  : ரொம்ப மெத்தப் படிக்காதீங்கடா.. பீ ஒட்டும்னு புத்தகத்தில இருக்கா?  
           இல்லாததெல்லாம் பேசக்கூடாது. நீ என்ன அல்லாவ விட புத்திசாலியோ…
             புத்தகத்தில இல்லத்தெல்லாம் கேக்கக்கூடாது.

            அடுத்த கவனிங்க. விஷக்காய்சலுக்கு நல்ல மருந்து ஒட்டக மூத்திரம். அத  
            குடிச்சா எப்படிப்பட்ட விஷக்காய்சலா இருந்தாலும் ஒரே நொடியில பறந்து  
            போய்டும்.

சந்திரன்     : சார் இங்க ஒட்டகமே இல்லய சார். நாம என்ன செய்றது சார்?

சதீஷ்       : சார் எங்க தாத்தா மாட்டு மூத்திரத்தை குடிப்பார் சார்.  அத குடிச்சா 
             காய்சல் போகுமா சார்?

வாத்தியார்  : ம்ஹூம்…. அத குடிக்க கூடாது. மாட்டு மூத்திரம் சைத்தானுடைய 
             மூத்திரம். ஒட்டக மூத்திரம் அல்லாவுடைய மூத்திரம். ஒட்டகத்தின் சிறப்ப  
             பத்தி உனக்கு தெரியுமா? அதுல நிறைய பேரு PHD பட்டமெல்லாம் 
           வாங்கிருக்காங்க தெரியுமா? மாட்டு மூத்திரத்தை குடிக்கிறது மூட நம்பிக்கை.  
           ஒட்டக மூத்திரம்தான் அறிவு பூர்வமா சரியானதுன்னு டாக்டர் முல்லா 
           சாகிபு நிருபிச்சு நோபல் பரிசு வாங்கிருக்குறாரு தெரியுமா

சந்திரன்     : சார் இன்னிக்கு காலைல பிரேயர்ல செய்தி படிச்சப்போ பிரதமர் 15 
             ஆயிரம் டன் ஒட்டக மூத்திரம் வாங்க அனுமதி கொடுத்தார்னு 
             சொன்னாங்க சார். இதுக்குதானா சார்.

வாத்தியார்  : ஆமான்டா

மணியடிக்கு சத்தம் கேட்டதும் அவர் எழுந்து போய்விட்டார். கொஞ்சம் நேரத்தில் வரலாறு புவியல் ஆசிரியர் வந்தார். பசங்களெல்லாம் எழுந்து வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு அஸ்சலாமு அலைக்கும் என்று சொல்லிட்டு “இன்னிக்கு பூமி படைக்கப்பட்ட விதம் பத்தி சொல்லப்போறேன்”  என்று பாடம் நடத்த ஆரம்பித்தார். பசங்க இருவர் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

வாத்தியார்  :  ரஹ்மான் அங்க என்ன கிசுகிசுன்னு பேசுற… முருகா என்னடா 
              சொன்னா?

முருகன்     : ஒண்ணுமில்ல சார்…

வாத்தியார்  : என்ன ஒண்ணுமில்ல… சொல்லுடா… சொல்லாட்டி நீயும் அடிவாங்குவே.

முருகன்     : இல்ல சார்… அவனுக்கு பூமி படைச்சதபத்தி தெரியும்னு சொன்னான் 
              சார். அவங்க அப்பா சொல்லி இருக்காங்கலாம் சார்.

வாத்தியார்  : ரஹ்மான் பாடம் நடத்தறப்போ பேசக்கூடாது. இல்ல யாரா இருந்தாலும் 
             அடிதான் உழும்.
             சரி கவனியுங்க
             வானத்தில உட்கார்ந்திருந்த அல்லா குன்னுன்னு சொன்னதும் பூமி 
              உண்டாச்சு.  அத ஒழுங்குபடுத்தி அது ஆடாம இருக்க மலைகள நட்டு, 
             மரங்களெல்லாம் முளைக்க வச்சு பூமிக்கு மேல தட்டு தட்டா ஏழு 
           வானத்தையும் படைச்சான். அப்புறம் ஒவ்வொருவானத்துலயும் ஒரு கடலயும் 
             படைச்சிட்டு ஏழாவது வானத்து கடல்ல இருந்த நாற்காலில  
             உட்கார்ந்துகிட்டான். இப்படி செய்றதுக்கு அவனுக்கு 6 நாளாச்சு. இதுல 
              யாருக்காவது சந்தேகமிருக்கா?

சந்திரன்     : சார். பூமி படைச்சப்புறம்தான் வானத்தை படைச்சான்னு சொன்னீங்க. 
             ஆனா அல்லா வானத்தில இருந்துகிட்டு பூமியை படைச்சான்னு  
             சொல்லறீங்க. எப்படி சார்… வானம் முதல்ல படைக்கப்பட்டதா? பூமி 
             படைக்கப்பட்டதா சார்?

வாத்தியார்  : அத பத்தி சிந்திக்க நமக்கு அறிவு பத்தாது. அல்லா என்ன  
            சொல்லிருக்கானோ அத அப்படியே கேட்டுக்கனும். உனக்குன்னு எதுக்கு 
            அல்லா அறிவு கொடுத்திருக்கான். பகுத்தறிவோடு சிந்திக்கனும். சிந்தியுங்கள்  
            சிந்தியுங்கள் என்று எதுக்கு அல்லா புத்தகத்தில அடிக்கடி சொல்றான். 
            சிந்திக்கனும்டா. சிந்தித்து புத்தகம் சொல்றதை ஏத்துக்கனும். சந்தேகம் 
            எல்லாம் வரக்கூடாது.
முருகன்     : குன்னுன்னு சொன்னா உண்டாகிடும்னு சொன்னீங்க. அப்படின்னா 
              எதுக்கு சார் 6 நாளாச்சு?

வாத்தியார்  : அதிகப்பிரசங்கிதனமா சந்தேகம் கேட்கட்கூடாது. 6 நாளாச்சுன்னு 
            சொன்னா 6 நாளச்சுன்னு படிச்சிக்கனும். அல்லாவுக்கு 1 நாள்னா நமக்கு 
             1000 வருஷம்னு அர்த்தம். தெரியுமா உனக்கு!

முருகன்     : அப்போ பரிட்சையில 6நாள்னு எழுதரதா? 6000 வருஷம்னு எழுதரதா 
              சார்?

வாத்தியார்  : எளவுல.. இது என்ன கோர்ட்டா. குறுக்கு கேள்விலாம் கேட்கக் கூடாது. 6 
             நாள்னு யார் சொல்றாங்களோ அவுங்கள்ட 6 நாள்னு சொல்லனும். 6000  
            ஆண்டுன்னு யார் சொல்றாங்களோ அவுங்கள்ட 6000 ஆண்டுன்னு 
            செல்லனும். புத்திசாலித்தனமா யோசிச்சு அவங்க அவங்க என்ன 
            சொல்றாங்களோ அத அப்படியே சொல்லனும். அப்பத்தான் நீ புத்திசாலி. 
            இத 6 கட்டமாகன்னு கூட ஒரு அவுலியா சொல்லிருக்காங்க தெரியுமா!

முருகன்     : சார் பரீட்சையில எத சார் எழுதுறது?

வாத்தியார்  : அதான் சொன்னேன்ல யார் என்ன சொல்றாங்களோ அவுங்கள்ட 
             அப்படியே சொல்லனும்.

(பையன் திருதிருன்னு முழிச்சதை பரக்கும்போது நமக்கு பாவமாக தோன்றியது.)

வாத்தியார்  : அடுத்து கவனிங்க.
             சூரியன் மறைஞ்சதும் எங்கே போவுதுன்னு தெரியுமா? அது அல்லா 
             இருக்கிற நாற்காலிக்கு கீழே போய் உட்கார்ந்துகிட்டு அல்லாவை 
             வணங்கும். அப்புறம் அடுத்த நாள் காலையில கிழக்கு திசையில உள்ள 
             சைத்தானுடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில உதிக்கும்.

ராமு       : அப்போ அமெரிக்காகாரங்களுக்கு சூரியனே வராதா சார்?

வாத்தியார்  : அதான் அடுத்த நாள் காலையில வருதில்லே.

ராமு       ; அப்போ நமக்கு எப்போ சார் மறுபடியும் உதிக்கும்.?

வாத்தியார்  : (கொஞ்சம் கடுப்புடன்) அடுத்த நாள் காலைல உதிக்கும்னு சொன்றேன்ல…
             ஏய் அடுத்து கவனிங்க
              பூமி உரூண்டைன்னு நிருபிக்கிற சூத்திரத்தை சொல்றேன்.  
              துல்கர்னைன்னு     ஒருத்தர்….

      ஆசிரியர் பாடத்தை தொடர நம்முடன் வந்த நீங்கள் தலை சுற்றுகிறது  என்று சொன்னதாலும்  நமக்கு நேரமின்மையாலும் வெளியே வந்துவிட்டோம்.

     அறிவுநாணயமும், நேர்மையும் இருந்தால் எல்லா இசுலாமியர்களும், இசுலாமிய அமைப்புகளும் கல்வியில் பரிணாமத்தை நடத்தக்கூடாது என்றும், குர்ஆன் எப்படி சொல்கிறதோ அப்படிதான் பாடங்கள் இருக்கவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டோம் என்றும் போராட வேண்டும். அதுபோல இசுலாமிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தாங்கள் பரிணாமத்தின் பாடங்களை நடத்த மாட்டோம் என்று போராட வேண்டும். அரசு மாற்றாவிட்டால்  குர்ஆனுக்கு எதிராக பாடம்  சொல்லிக் கொடுப்பதும் அதில் வரும் வருமானம் ஹராம் என்றும்  தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். 

செய்வார்களா இவர்கள்?

சோற்றை தின்பவர்களாக இருந்தால் செய்யவேண்டும்.

இது எல்லா மதவாதிகளுக்கும்கூட பொருந்தும்.

Facebook Comments

13 கருத்துரைகள்:

SAGODHARAN said...

றிவுநாணயமும், நேர்மையும் இருந்தால் எல்லா இசுலாமியர்களும், இசுலாமிய அமைப்புகளும் கல்வியில் பரிணாமத்தை நடத்தக்கூடாது என்றும், குர்ஆன் எப்படி சொல்கிறதோ அப்படிதான் பாடங்கள் இருக்கவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டோம் என்றும் போராட வேண்டும். அதுபோல இசுலாமிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தாங்கள் பரிணாமத்தின் பாடங்களை நடத்த மாட்டோம் என்று போராட வேண்டும். அரசு மாற்றாவிட்டால் குர்ஆனுக்கு எதிராக பாடம் சொல்லிக் கொடுப்பதும் அதில் வரும் வருமானம் ஹராம் என்றும் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும்.

செய்வார்களா இவர்கள்?

சோற்றை தின்பவர்களாக இருந்தால் செய்யவேண்டும்.

இது எல்லா மதவாதிகளுக்கும்கூட பொருந்தும்.

SAGODHARAN said...

///அறிவும் நாணயமும், நேர்மையும் இருந்தால் எல்லா இசுலாமியர்களும், இசுலாமிய அமைப்புகளும் கல்வியில் பரிணாமத்தை நடத்தக்கூடாது என்றும், குர்ஆன் எப்படி சொல்கிறதோ அப்படிதான் பாடங்கள் இருக்கவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டோம் என்றும் போராட வேண்டும். அதுபோல இசுலாமிய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தாங்கள் பரிணாமத்தின் பாடங்களை நடத்த மாட்டோம் என்று போராட வேண்டும். அரசு மாற்றாவிட்டால் குர்ஆனுக்கு எதிராக பாடம் சொல்லிக் கொடுப்பதும் அதில் வரும் வருமானம் ஹராம் என்றும் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும்.
செய்வார்களா இவர்கள்?
சோற்றை தின்பவர்களாக இருந்தால் செய்யவேண்டும்.
இது எல்லா மதவாதிகளுக்கும்கூட பொருந்தும்.//
அருமையான கேள்வி!! சூடு சொரணை இருந்தால் உடனே இதை மதவாதிகள் கையில் எடுத்து போராட வேண்டும்!

dove said...

super!

Ant said...

(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம். குர்ஆன் 42:07

அல்லாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு உலகில் மற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை மக்காவாசிகள் தான் தவறான வழியில் சென்று கொண்டிருந்தனர்.

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம். குர்ஆன் 12:02. அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம். குர்ஆன் 44:48.

அல்லா இந்த குரானை பேசிக், போர்ட்ரான், கோபால், சி, சி++, ஜாவா அல்லது பாஸ்கல் போன்ற உயர் மொழியிலோ அல்லது அசம்பிளி மொழி இது தெரியலன்னா(?) இயந்திர மொழியிலாவது படைத்திருக்கலாம் இன்று உலகம் முழுவதும் கம்யுட்டர் டமூலமா எந்த மொழிபெயர்ப்பு சிக்கலும் அல்லது அடைப்புகுறிகளும் இல்லாமல் அணைவரும் தெரிஞ்சிருக்கலாம் அல்லா ஏன் படைக்கவில்லை?

Unknown said...

தோழர் நந்தன் சும்மா நச்சுன்னு கேட்டுள்ளீர்கள்.....!!நல்ல நகைச்சுவையான பதிவு.

// “இப்போ ஏன் ஒரு குரங்குகூட மனிதனாக மாறவில்லை”// இப்படிப்பட்ட நகைச்சுவைக் கேள்விக்கு பதில் நகைச்சுவைக் கேள்வி ஒன்றை நாமும் கேட்போம்."இப்போ ஏன் ஒரு மனிதனைக் கூட உயிர்ச்சத்தற்ற வெறும் களிமண்ணிலிருந்து அல்லாவால் படைக்க முடியவில்லை"..??

நந்தன் said...

பாடத்திட்டத்தில் மாற்றவேண்டியது நிறைய உள்ளது. அணைத்தையும் எழுதினால் பக்கங்கள் போதாது என்பதால் விட்டு விட்டேன். எடித்துக்காட்டாக மனித கருவின் நிலை, நைல் ந்தி சொர்கத்திலிருந்து பாய்கிறது என்று ஏராளமான அறிவியல் இவர்களடம் உள்ளது. அதனை எல்லாம் பாடமாக வைக்கும்படி இவர்கள் போராடினால் மிஞ்சுவது அறியாமை மட்டுமே.

Unknown said...

இவ்வளவு ஏன் உன் புண்ணிய புண்ணாக்கு பூமியில் உள்ள இறையாலயத்தை(?) அது எப்படி இருக்கும் என்றாவது மாணவர்களுக்கு பாடம் நடத்த இயலுமா..?படம் போட்டு பாகங்களைக் குறிக்கவாவது யோக்கியதை இருக்கா.?

இனியவன்...

தஜ்ஜால் said...

நகைச் சுவையான நல்ல பதிவு,

ஆதமின் மனைவியை எலும்பிலிருந்து ஏன் உருவாக்க வேண்டும்?

அதற்குள் களிமண் தீர்ந்து போய்விட்டதா

Anonymous said...

உண்மையான நம்பிக்கையாளர்கள் அவர்களுடைய தாய்மொழி ஒரு பொருட்டல்லாது குர்ஆனை அணுகிவிட இயலும், என்பதை 41:44ல் இருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம். மாறாக, நம்ப மறுப்பவர்கள், அவர்கள் அரபி மொழியில் பேராசிரியர்களாக இருந்த போதிலும் கூட, குர்ஆனை அடைந்திட அனுமதிக்கப்பட மாட்டார்கள் (17:45, 18:57, 41:44, & 56:79).

Anonymous said...

மொழி ஒரு பொருட்டல்ல...


[12:2] நீங்கள் புரிந்து கொள்வதற்காக, இதனை ஓர் அரபிமொழியிலானதொரு குர்ஆனாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.

[41:44] அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள். அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, “நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் மேலும் நிவாரணமும் ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவிலிருந்து சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர் களாகவும் இருப்பார்கள்” என்று கூறுவீராக.

Ant said...

மொழி ஒரு பொருட்டே ....

[ஏழாவது அறிவு] நீங்கள் புரிந்து கொள்வதற்காக, இதனை ஓர் அரபிமொழியல்லாததானவெரு
கட்டுரையாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.

[ 10 கருத்துரைகள்] அரபி மொழி கட்டுரையாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள். அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, “நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் மேலும் நிவாரணமும் ஆகும்.

நம்பிக்கை கொண்டவர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவிலிருந்து சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர் களாகவும் இருப்பார்கள்” என்று கூறுவீராக.

univerbuddy said...

Dear Dajjal,

This is to introduce planetwumma.blogspot.com to you and your regular readers.

Come and have some fun.

-Univerbuddy.

Unknown said...

Parinamathin irudhi nilai irai nilai