Saturday 26 May 2012

அற்புதக் கதைகள்-2 -மூடநம்பிக்கையில் முன்னணியில் நிற்பது கல்லா? மரமா?

       செப்டம்பர் 21, 1995-ல் விநாயகர் சிலைகள் பால்குடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அன்று குழந்தைகளுக்கு அருந்த பால் கிடைக்காமல் செய்தன. கடந்த 2010-ல் கேரளாவிலுள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த, flex-Print செய்யப்பட்ட, குழந்தை ஏசுவைக் அணத்துக்கொண்டிருக்கும் மேரியின் படத்திலிருந்து கண்களில் நீர்வழிவதாகக் கூறி கிருஸ்துவர்கள் பரபரப்பை ஏற்படுத்தினர். மதநம்பிக்கையாளர்களிடையே தினமும் இதுபோன்று ஏதாவது ஒரு அற்புதக் கதைகள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவைகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகும் பொழுதெல்லாம் மாற்று நம்பிக்கையிலிருப்பவர்கள் மறுப்பதும், எள்ளிநகையாடுவதும் வாடிக்கையானது.
       உண்மையைச் சொல்வதென்றால் குறிப்பிட்ட மதங்களைச் சார்ந்த அனைவருமே இத்தகைய செய்திகளை நம்புவதில்லை. அவர்களில் வெகுசிலர் பகுத்தறிவுடன் இவைகளை அணுகுகின்றனர். இதைப்போன்ற பிறமத நம்பிக்கைகளிலிருந்து வெளியேறியவர்களை இஸ்லாமியர்கள் மிகவும் விரும்புவார்கள் (இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து வெளியேறியவர்களையல்ல) அத்தகையவர்களை காணும்பொழுது அவர்களது மனம் தாவா (Dawa-அழைப்பு) செய்வதற்காகத் தாவிக் குதிக்கும்.
       அழைப்புப் பணி, இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று பீற்றிக்கொள்வதோடு, இதைப் போன்ற மூடக்கதைகளுக்கு இஸ்லாமில் துளியும் இடமில்லை என்று துவங்கும். பொதுவாகச் சொல்வதென்றால், இஸ்லாமியர்களின் ‘தாவா பணி, இத்தகைய பகுத்தறிவு வாதங்களுடன்தான் ஆரம்பமாகின்றன. தாவா செய்பவர்களை தாயீ’(Dayee) என்பார்கள். தாயீக்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளெல்லம் உண்டு. இஸ்லாம் மட்டுமே சரியாதென்று நம்பவைக்கப்பட்ட நானும், என் நண்பர்கள் பலரிடம் ‘தாவாசெய்திருக்கிறேன். ஏர்வாடி, நாகூர் போன்ற கல்லறைகளைச் சுற்றி பின்னப்பட்ட கதைகள் பதிலாகக் கிடைக்கும். அதற்கு, இஸ்லாமிற்கும் தர்காக்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று ஒரே அடி, அவ்வளவுதான் முடிந்ததுகதை. அவர்களுக்குப் பேசுவதற்கு இடமிருக்காது அதன் பிறகு மைதானம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
இஸ்லாமிற்கும் மூடத்தனத்திற்கும் சம்பந்தமில்லையா? இஸ்லாமிய போதனைகள் பகுத்தறிவு நிறைந்தவைகளா?
       கடந்த பகுதியில் நிவைப்பிளந்த கதையைக் கூறிய பிறகும் இப்படியொரு கேள்வி பொருளற்றதுதான். ஆனாலும் அதன் தொடர்ச்சியாக, முஹம்மதின் மூடத்தனமான செயல்கள், போதனைகள் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
       ஓஷோவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அவர் சற்று அல்ல மிகவுமே விநோதமான ஆசாமி. அவர் தன்னைபற்றிக் கூறும்பொழுது, அவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்திலிருந்த பிற ஆசிரியர்களுடன் பழகியதைவிட, அங்கிருந்த ஒரு குல்மோஹர் (Gulmohar) மரத்திடம் பழகியதுதான் அதிகம் என்கிறார். அவர், அதற்கு வணக்கம் சொல்வது, பேசுவது, கட்டித் தழுவுவது என்றிருந்திருக்கிறார். பிறரையும் அவ்வாறு செய்யுமாறு கூறியதால் பைத்தியக்காரப் பட்டம் பெற்றதாகவும் கூறுகிறார். அவரது பிரிவிற்குப் பிறகு அம்மரம் பட்டுப்போனதாக அறிந்தவுடன் மீண்டும் வந்து கட்டித்தழுவிய பொழுது இறந்த அம்மரத்திலிருந்து நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக கூறிக்கொண்டார்.

இது பரவாயில்லை பின்வரும் ஹதீஸைப்பாருங்கள்,
அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, மரம் பேசுவதோடுமட்டுமல்லாமல், ஜின்களைப்பற்றி முஹம்மதிடம் உளவுப் பணியையும் செய்திருக்கின்றன. ஜின்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கே பதிலில்லை. இந்த லட்சணத்தில் ஜின்களைப் பார்த்து உளவு சொன்ன மரத்தைப்பற்றி கேட்டால் என்ன சொல்வது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

தனது பிரிவினால் பட்டுப்போனதாக ஓஷோ கூறியது உயிருள்ள மரத்தைதான். இங்கு பாருங்கள், முஹம்மதின் பிரிவைத் தாங்கமுடியாமல் வெட்டப்பட்ட பேரிச்சமரத்தின் அடிமரக்கட்டை அழுகிறது. அது ஓலமிட்டதை அவர்களது தோழர்களும் கேட்டிருக்கின்றனர்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உரையாற்றும் போது) நின்றுகொள்வதற்காக (ஆரம்பத்தில்) பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்றிருந்தது. நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து வைக்கப்பட்ட போது அந்தக் கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியேற்றோம். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (மிம்பரிலிருந்து) இறங்கி (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தமது கையை வைத்தார்கள். (அதுவரையில் அந்தச் சப்தம் வந்து கொண்டேயிருந்தது.)
(புகாரி)
முஹம்மது வந்து கைவைத்து சமாதானம் செய்யும்வரை ஓலமிட்டுள்ளது. ஓஷோ செய்தது பைத்தியக்காரத்தனமா? இதைத்தான் அல்லாஹ், சிந்திக்கமாட்டீர்களா, சிந்திக்கமாட்டீர்களா  என்று பலமுறை கெஞ்சாதகுறையாக கேட்கிறான். இது இந்த மடையர்களுக்கு எங்கே புரியப்போகிறது?
நம்ம ஓஷோ, தான் விரும்பிய உயிருள்ள மரத்திற்கு வணக்கம் சொன்னதாகக் கூறினார். ஆனால், உயிரற்ற ஒரு கல் முஹம்மதிற்கு “அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)என்று கூறி வந்துள்ளது. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
(முஸ்லீம்)

                என்ன அறிவுகெட்டத்தனமாக இருக்கிறது கல் எங்காவது பேசுமா? என்று நினைத்தாலே உங்களது ஈமாந்தாரித்தனம் கோவிந்தாதான். இஸ்லாம் மதமல்ல மார்க்கம். இது பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம்.  (என்ன?   உங்களுக்கு ஹூருலீன்கள் வேண்டுமா? வேண்டாமா? கண்ணை மூடிக்கொண்டு நம்பினால்தான் ஹூருலீன்கள் என்ற அழகிய கன்னிகைகள் கிடைக்கும்.)
                நாளை மறுமையில்(?) கஅபாவிலுள்ள அஸ்வத் கல், பார்ப்பதற்கு இரண்டு கண்களுடனும், சாட்சி கூறி பேசுவதற்கு ஒரு நாவுடனும் வரும் என்கிறது இப்ன் மாஜாவிலுள்ள ஹதீஸ். ஆனால் இந்த முட்டாள் உமருக்கு இது புரியாமல், அஸ்வத்தை வெறும் கல் என்று உளறினாலும், போனால் போகிறதென்று ஒரு முத்தமிட்டு சமாளித்து, முஹம்மதின் மரபைக் காப்பாறிவிட்டார். இன்றும் இந்த மரபு தொடர்கிறது. அது வெறும் கல்தான் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், எங்களுக்கா பகுத்தறிவில்லை? என்று கேட்டவாறு, கல்லை முத்தமிடுகின்றேன் என்று பாய்கின்ற பேர்வழிகளெல்லாம் மூக்கு, உதடு கிழிந்து தொங்கியவாறு வெளியில் வருகின்றனர். முத்தப் போராட்டத்தில் மரணங்களும் நிகழ்ந்துவிடுகிறது. ஆனாலும் விடுவதாகயில்லை. நெரிசலில் சிக்கி, பிதுங்கி மரணத்தருவாயிலும், கல்லை வணங்குகிறான், கட்டையை வணங்குகிறான் என்று மற்றவர்களை ஏளனம் செய்வதை மட்டும் கைவிடுவதாகயில்லை. ஏனெனில் இது மதமல்ல மார்க்கம்!
                மரம் பேசுகிறது, அழுகிறது, கல் முகமன் கூறுகிறது இவைகளெல்லாம் அறிவியல் பூர்வமானாதாகவும், பகுத்தறிவிற்கு ஏற்புடையதாகவும் இருக்கும் பொழுது, விநாயகர் பால் மட்டுமல்ல, பட்டை சாராயம் குடித்ததாகக் கூறினாலும், மேரி கண்ணில் நீர் வழிந்ததாகவோ, பீர் வழிந்ததாகவோ கூறனாலும் நம்பித்தொலைத்து விடுங்கள்!
நினைவில் கொள்ளுங்கள் இஸ்லாம் மதமல்ல மார்க்கம்!

தஜ்ஜால்

Facebook Comments

5 கருத்துரைகள்:

yasir said...

நீங்கள் எழுதிய ஹதீது ரொம்ப பலகீனமானது அதனால பலமானதாக்க அதன் பக்கம்,அத்தியாயம்,எண் போன்ற குறிப்புகளுடன் பதிவிட்டால் உடனே பார்த்து சரிசெய்து கொள்வோம்....நன்றிங்கோ...

சிவப்புகுதிரை said...

அருமை தஜ்ஜால் அவர்களே
நானும் ஒருவருடத்துக்கு முன்பெல்லாம் கல்லை வணங்குகின்றீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா என்று எல்லாம் என் இந்து நன்பர்களிடம் சண்டையிட்டுள்ளேன்.அவன்களாச்சும் பரவாாயில்லை கல்லை வேடிக்க பார்க்கின்றார்கள். நம் மூஃமீன்கள் கல்லுக்கு மு்த்தம் கொடு்த்துக் கொண்ட இஇருக்கின்றனர்.இதில் என் இசுலாமிய நன்பன் ஒருவன் அந்த கல் அழுக்கு படிந்து
கருப்பாய்க் கொண்டே போகின்றது என்று கவலைப்படுகின்்றான் ..இவர்கள் தான் பகுத்தறிவோடு பிறந்தவர்கள் என்று பீத்திக்கொள்வது.

Khader Mohideen said...

great!!!

Unknown said...

மக்காவில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்? என்ற கேள்விக்கு நம்ம பீலாவுதீன் அண்ணன் விட்ட கதை ஒன்று அவர் எழுதிய புத்தகக்திலேயே உள்ளதையும் பாருங்கள்.
அந்த கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்,நமது பிரார்த்தனையை நிறைவேற்றும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை. என்று கூவி விட்டு அதன் கீழேயே ஒரு ஹதீஸ் இப்படி...
நபிகள் நாயகத்தின் உற்ற தோழர் உமர் (ரலி)அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டுவிட்டு அதை நோக்கி "நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்று கூறினார்கள். (புகாரி;1597,1605)
என்று அந்த கல்லைப் பார்த்து சொன்னாராம் இந்தக் கல்லுக்கு மட்டும் கேட்கும் சக்தி உண்டோ???

இனியவன்...

தஜ்ஜால் said...

ஹஜருல் அஸ்வத் கல் பேசாது, கேட்காது, என்று கூறுவோம் ஆனால் அதனுடன் பேசுவோம், தொட்டுமுத்தமிட்டு வழிபாட்டையும் செய்வோம். இதையேதான் சிலைவழிபாடு செய்கிறவர்களும் செய்கின்றனர். முஸ்லீம்களைவிட அவர்களே தேவலாம் செர்க்கத்திலிருந்து வந்தாதாக கதையளப்பதில்லை.
ஹஜருல் அஸ்வத் கல் வெறும் கல்தான் அதற்கு எந்தவிதமான ஆற்றலுமில்லை என்பவர்கள், அதை அவமரியாதை செய்யத் தயாரா?