Wednesday, 23 May 2012

ஹலாலாகும் ஹராம்கள்...


இந்த நவின உலகில்,உலகத்தையே தன் கையில் அடக்கி கொண்டு முகநூல் மூலமாக பல ஆயிரம் மையில்கள் தொலைவில் உள்ளவனை பத்தே வினாடிகளில் தொடர்பு கொள்ள கூடிய அளவில் விஞ்ஞானம் வளர்ந்து வருக்கின்ற இத்தருனத்தில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு உருப்பெற்ற புனித(?) குரான் தான் மனிதனின் எக்காலத்துக்கும் பொருந்தும் எனவும் அதுவே உலகத்துக்கு வழிக்காட்டும் மறை என ஆட்டம்போடும் இஸ்சுலாமியர்களின் கருத்துக்கள்,இப்பொழுது இஸ்சுலாமியர்களாலே நடைமுறைபடுத்த முடியாமல் தவுடுபொடியாக்கபடுகின்றது. இது தான் இன்று இஸ்சுலாம் இவ்வுலகில் தோற்கடிக்கபடுகின்றது என்பதற்கான ஒரு அத்தாட்சி..

எக்காலத்திற்கும் பொருந்தும் குரான் முஹம்மது இறந்த பின்னே தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பது தான் வரலாறு (காலிபாக்கள்குள் ஏற்ப்பட்ட சண்டை). இருந்தாலும் இந்த காலகட்டத்தில் அது எப்படி எல்லாம் தோற்கடிக்கபடுகின்றது என்பதை சுட்டிக்காட்டவே இந்த இடுக்கையை வாசகர்களுக்கு சமர்ப்பித்துள்ளோம்.
   எந்த ஒரு தத்துவம் அது நடைமுரையில்  பின்பற்றப்படவில்லையோ அல்லது பின்பற்றமுடியவில்லையோ அத்தத்துவம் எல்லாம் தோற்கடிக்கப்படுகின்ற தத்துவங்களே என்று இஸ்மியர்கள் அதிகமாக கூறி கூப்பாடு போடுவதை அறிந்து கொள்ளுங்கள்.இப்பொழுது இடுக்கைகு செல்வோம்.

ஹலால் என்றால் என்ன?
  குரான் அனுமதித்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது செய்தாரோ () செய்ய சொன்னாரோ அவை எல்லாம் ஹலாலாக கருதப்படும்
ஹராம் என்றால் என்ன?
  குரான் தடுத்தது மற்றும் எதை எல்லாம் முஹம்மது  செய்யவில்லையோ () செய்ய சொல்லவில்லையோ அவை எல்லாம் ஹரமாக கருதப்படும்.

முக்கிய குறிப்பு
 எவர் எல்லாம் குரானின் போதனையும் முஹம்மதுவின் நடைமுறையின்படி நடக்கவில்லையோ அவர் எல்லாம் சொர்கம் செல்ல மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் காஃபிர் என கருதப்படுவர்.[ ஹராமான பொருளை சாப்பிடுபவன் சொர்கம் செல்ல மாட்டான். அண்ணன் பி.ஜெ]
முஸ்லிம்களால் மீறப்படும் முக்கிய ஹராம்களை பற்றி  பார்ப்போம்.

1. உருவபடம் ஒழித்தல்

'உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவனே ஒளியானாவன். எப்படி அவனை நான் காணமுடியும்?' என விடையளித்தார்கள் என்று அபுதர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.இந்த ஹதிஸ் முஸ்லிம்யில் இடம்பெற்றுள்ளது.
                                                                                                                    onlinepj.com/books/
(அண்ணன் பிஜே அல்லாவுக்கு உருவம் உண்டு என்று கூறிவறுவது தனிக்கதை)
ஆகவே இவ்வுலகத்தை படைத்தவன் ஒரே இறைவன். அவனே ஏகஇறைவன் அவனுக்கு உருவமே கிடையாது (ஏன் அவள்(பெண்) படைத்து இருக்க கூடாத என்று எல்லாம் கேட்க கூடாது) என்று ஹதீஸ்கள் கூறுகின்றது. அதனால்தான் முஹம்மதுவும் உருவப்படங்களுக்கு எதிரியாக இருந்தார். முஹம்மது எங்கேயும் குரூப்போட்டோ எடுத்ததாக குரானிலோ ஹதிஸ்சிலோ குறிப்பிடபடவில்லை.அதனால் தான் முஹம்மதுக்கு முன்னாடி வாழ்ந்த இயேசுவின் {ஈசா நபி} உருவபடம் கணிக்கப்பட்டுவிட்டாலும் முஹம்மதுவின் உருவபடம் கணிக்கப்படவில்லை. இதுவே முஸ்லீம்களுக்கு உருவபடம் ஹராம் என்பதற்க்கான ஒரு முக்கிய அத்தாட்சி. சரி உருவபடம் ஹராமனதுக்கு காரணம் என்ன என யோசிகின்றீர்களா?  உருவப்படத்தை முஹம்மது அனுமதித்தால் பிற்காலத்தில் அவை உருவ வழிப்பாடுக்கு வழிவகுக்குமாம், அது அவரின் ஏக இறைக்கொள்கைளுக்கு விரோதமாக அமையுமாம் அதனால் தான் உருவபடத்தை தடை செய்தார் என பல மூஃமீன்கள் சொல்லுகின்றார்கள். எது எப்படியோ போகட்டும் ஆக மொத்தம் உருவப்படம் ஹராம் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஆனால் சுவணத்துக்கு பை-பாஸ் ரோடு போடும் பி.ஜெ அண்ணன், ஜாகிர் நாயக், ஜவாருல்லா காதர் மொய்தீன் இன்னும் என்னற்ற மூஃமீன் தலைவர்களின் உருவபடம் மட்டும் சுவர் எங்கும், இனையதளம் எங்கும் பயனித்து கொண்டு இருக்கின்றதே, இவர்களுக்கு இவை எல்லாம் ஹராமாக தெரியவில்லையா? ஏன் இவர்கள் போடும் 10ரூபாய் சி.டியில் கூட இவர்கள் படம் இல்லாமல் வருவதுயில்லை. இவர்கள் தான் நபி வழியை பின்பற்றுபவர்களா? முஹம்மதுவின் போட்டோவை கார்ட்டூனாக போட்டாலே கோவப்பட்டு பத்வா கொடுக்கும் நம் மூஃமீன்கள் இவர்களை ஏன் கண்டுக்கொள்வதில்லை? ... ஒட்டுமொத்த இசுலாமியர்களுக்கும் இவர்கள் தான் அதாரிட்டியோ ! அதனால் அவர்களை பிறர் கேளவி கேட்க முடியாதுதானே.

புகாரி 7042. (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
சரி இது ஒருபுறம் இருக்கட்டும், ஹராமான உருவப்படத்தை பொதித்த ரூபாய் நோட்டுக்காக நாம் எவ்வளவு சண்டையிடவேண்டியிருக்கின்றது. இதில் அந்த ஹராமான உருவபடத்தை பாக்கெட்டுகுள்ளே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கின்றோமே! அதை என்னவென்று சொல்லுவது? இந்திய போன்ற பல மதங்கள் கொண்ட நாட்டில் ரூபாய் நோட்டில் காந்தியின் உருவப்படம் போட்டு இருக்கின்றதே! காபிர்கள் நாட்டில் வேறு வழியே இல்லை பயன்படுத்திதான் ஆகவேண்டும் என்பதால் நம் மூஃமீன்கள் பயன்படுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கூட சப்புக்கட்டிக்கொள்வோம். ஆனால் இஸ்லாத்தை தூக்கிபிடிக்கும் மற்றும் இஸ்லாம் பிறந்த நாடுகளின் ரூபாய் நோட்டுகளில் கூட உருவப்படம் இல்லாமல் அச்சடிக்கப்படுவதுயில்லை ஏன்?. பீயூர் முஸ்லீம் (pure muslim) என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான்கள் ஆட்சியாண்ட ஆப்கானிஸ்த்தானில் கூட உருவப்பட ரூபாய் நோட்டுக்கள் தான் பயன்படுத்தபடுகின்றது. ஏன் இவர்கள் கூட ஹராமான உருவபடத்தை ஹலாலாக்க முயற்சிக்கின்றார்கள்?. 2.பிரியானி
      இந்த பகுதியை எழுதுவதற்கு பகடு இப்னு சாகிரின், முஸ்லீம்கள் உண்ணும் ஹராமான உணவுகள் என்ற இடுக்கையே மிக உதவியாக இருந்தது. ஆகவே இப்பகுதிக்கு வரும் எல்லாம் புகழும் இப்னு சாகிருக்கே!!!

      உச்சா,கக்கா போவுரதுக்கு கூட நபி வழி தேடும் நம் மூஃமீன்களில் ஒருவர் அண்ணன் பி.ஜெவிடம் சிறிது அளவு ஆல்காஹல் கலந்த மவுத் வாஷ்சரை பயன்படுத்தலாமா என்று ஒரு கேள்வியை கேட்டு உள்ளார். அதற்கு நம் விஞ்சானி பி.ஜெ அளித்த பதில்,

      'ஆல்காஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தாக் கூடாது. ஆல்காஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்காஹால் சிறிதளவேனும் தங்கிவிடும்.  இது எச்சிலின் வழியாகவோ நாம் உண்ணும் உணவின் வழியாகவோ வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே உண்ணுவதற்கு தடை செய்யப்பட்ட இது போன்ற பொருட்களைக் கொண்டு வாய் கொப்பளிப்பதும் சுவைப்பதும் கூடாது.
                                                13/05/2011 -onlinepj.com
      'அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'. என்று முஹம்மது அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர்(ரலி).
                                                நூர்திர்மதி 1788,நஸபி 5513
ஆக சிறிது அளவு போதை தரும் பொருட்கள் கூட ஹராமாகும்.ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் போதை பொருள் என தடை செய்யப்பட்ட கசகசாவை(ஒப்பியம் செடியின் விதை)கொண்டு தான் இன்று நம் மூஃமீன்கள் ருசிகரமான பிரியானியை சமைத்து கொண்டு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஹராமான பிரியானியை தான் நல்ல நாள் பெருநாளில் கூட நம் மூஃமீன்கள் சாப்பிடவேண்டியிருக்கின்றது. இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் நம் மூஃமீன்கள் நடத்தும் ஓட்டல்களில் 'ஹாலால் பிரியானி' கிடைக்கும் என ஹராமான உணவை போர்டு(board)போட்டு வியாபாரம் செய்வதுதான். இப்படி ஹராமான பிரியாணியை சாப்பிட்டால் எப்படி இவர்கள் சுவனத்துக்கு போவார்கள்?

அதனல் மூஃமீன்கள் முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது பிரியானியா? இல்ல நபி வழியா?

"விசுவாசிகளே! தங்களுக்கு பிரியானியில் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிந்திப்பவருக்கு நிறைய அத்தாட்சியுள்ளது".
                                          அறிவிப்பாளர் சிவப்புகுதிரை

Facebook Comments

35 கருத்துரைகள்:

kasiyaribrahim said...

இன்னும் கொஞ்ச நாளில் இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சிலருக்கு கிறுக்கு பிடித்து தெருவோடு உளற ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
பன்றிக்கறி சாப்பிடுவது ஹராம் .ஆனால் ஒருவனுக்கு உணவு எதுவும் கிடைக்காது இறந்து போகும் நிலையில் பன்றிக்கறி கிடைத்தால் சாப்பிட்டு உயிர்பிளைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாம் மனித வாழ்வுக்கு தெளிவான் வழி காட்டுகிறது .இதை அறிவுடையோர் புரிவர்.
அடுத்து நான் இதுவரை பிரியானிக்கு கசகசா வை உபயோகம் பண்ணியதை கேள்வி பட்டதில்லை .ஆக இப்போது இ.இ.இ.ஒரு லூசு ஆகிவிட்டது.
கசகசா செடியில் இருந்து அபின் கிடைப்பதால் சவூதிஅரசு அதை போதை பொருளாகஅறிவித்துள்ளது. மற்றபடி கசகசா முன்பு இறைச்சி மசாலாவுக்கு தமிழகத்தில் உபயோகப்படுத்தப் பட்டது .கசகசா செடியிலிருந்து அபின் தயாரிக்கபடுவதால் மத்திய அரசின் அனுமதியின்றி பயிரிட தடை செய்யப்பட்டது .அதனால் அதன் விளச்சல் குறைந்து விலை மிகவும் உயர்ந்துவிட்டது.அதனால் முன்பு கசகசா உபயோகித்தவர்கள் கூட அதற்கு மாற்றாக இப்போது முந்திரி குருணையை உபயோகிக்கிறார்கள் ..
மற்றபடி முன்னர் தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு கசகசாவை அரைத்து பால் எடுத்து ஊட்டுவது உண்டு .கசகசா மிக சத்து பொருள் .

தஜ்ஜால் said...

@ சிவப்புக்குதிரை
முதல் பந்திலேயே விளாசி, கலக்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள். உருவப்படம் குறித்து ஈமாந்தாரிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

தஜ்ஜால் said...

@ சிவப்புக்குதிரை
முதல் பந்திலேயே விளாசி, கலக்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள். உருவப்படம் குறித்து ஈமாந்தாரிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

Anonymous said...

//இன்னும் கொஞ்ச நாளில் இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சிலருக்கு கிறுக்கு பிடித்து தெருவோடு உளற ஆரம்பித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.//
தமிழக வஹாபிகள் ஏற்கனவே பைத்தியங்கள்போலத்தான் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

கசகசாவைப் பற்றிச் சொன்ன காசிக்குப்போன இப்ராஹிம் ரூபாய் நோட்டுகளில் உள்ள உருவப்படங்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே!

S.Ibrahim said...

பன்றிகறி எப்படி ஹலாலாகும் ஹராமோ அதுபோலவே உருவப்படங்களும் .ஆனால் கரன்சியில் உள்ள்ளது தேவையற்றது

சிவப்புகுதிரை said...

@காசிஇப்புராஹிம்..

நீங்க லூச இல்ல நாங்க லூசானு விவாதம் இங்க நடக்கவில்லை.கசகச மூஃமீங்களுக்கு ஹராம ஹலால இது தான் கேள்வி...தைரியம் இருந்தால் கசகசாவில் சிறிது அளவு கூட போதை தரக்கூடிய பொருட்கள் இல்லை என்று நிருபிங்கள் பாக்கலாம் ..

//பன்றிக்கறி சாப்பிடுவது ஹராம் .ஆனால் ஒருவனுக்கு உணவு எதுவும் கிடைக்காது இறந்து போகும் நிலையில் பன்றிக்கறி கிடைத்தால் சாப்பிட்டு உயிர்பிளைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாம் மனித வாழ்வுக்கு தெளிவான் வழி காட்டுகிறது// ஆமா அப்படியே உயிர்பிழைக்க தான் நம் மூஃமீங்கள் பிரியானி சாப்பிடுரார்களா? மைத்து வீட்டிலியே பிரியானி சாப்பிடுர ஆளு மூஃமீங்கள் .இதுலாம் சொல்லவவேனும்.

//அடுத்து நான் இதுவரை பிரியானிக்கு கசகசா வை உபயோகம் பண்ணியதை கேள்வி பட்டதில்லை .ஆக இப்போது இ.இ.இ.ஒரு லூசு ஆகிவிட்டது// அட என்னடா இது கொடுமை நீங்கள் கேள்விபடவில்லை என்றால் நாங்கள் லூச? மூஃமீன்களால் மட்டுமே இப்படி எல்லாம் லூசு மாதிரி பேசமுடியும்.நீங்க கேள்வி படலனா நல்ல பண்டேரி கிட்ட கேட்டு தெரிஞ்சுங்குங்க.

//கசகசா செடியில் இருந்து அபின் கிடைப்பதால் சவூதிஅரசு அதை போதை பொருளாகஅறிவித்துள்ளது//.
&
//.கசகசா மிக சத்து பொருள்//. எப்படி பாய் இப்படி ஒரு ஹராமான போதை(அபின்) பொருளை சத்து பொருள் என்று உங்களால் சொல்லமுடிக்கின்றது...ஹராமான பொருள் சத்து என்றால் அது ஹலாலகுமா?
கசகசாக்கு வக்காலத்துவாங்க போய் சுவனத்துக்கு போற பஸ் விட்டுடிங்களே.....வட போச்சே


http://en.wikipedia.org/wiki/Opium_poppy

சிவப்புகுதிரை said...

நன்றி தஜ்ஜால். தொடர்ந்து மூஃமீங்களுக்கு தாவா செய்ய எனக்கு தாங்கள் உதவும் படிக்கேட்டுக் கொள்கிறேன்.எங்கையாவது பிழை இருந்தால் தவராமல் சுட்டிக்காட்டவும்.

சிவப்புகுதிரை said...

@ S.Ibrahim
கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா?

S.Ibrahim said...

சிவப்பு குதிரை ////அட என்னடா இது கொடுமை நீங்கள் கேள்விபடவில்லை என்றால் நாங்கள் லூச? மூஃமீன்களால் மட்டுமே இப்படி எல்லாம் லூசு மாதிரி பேசமுடியும்.நீங்க கேள்வி படலனா நல்ல பண்டேரி கிட்ட கேட்டு தெரிஞ்சுங்குங்க./////
http://siragu.com/?p=829 இது போன்று ஏராளமான இணைப்புகள் உள்ளன ,அங்கு சென்று தேவையான பொருட்களில் கசகசா இருக்கிறதா என்ற பார்த்துக் கொள்ளலாம் .பண்டாரி எதற்கு ?பன்னாஸ் காலத்தில் இருந்து கொண்டு இணைய தளத்தில் இஸ்லாத்தை விமர்சிக்க வந்திட்டிராக்கும் .இதற்கு முழு லூசு தச்சாளின் புகழாரம் வேறு .முதலில் எழுதியது லூசுத்தனமானது என்றால் அதற்கப்புரமாவது திருததிக் கொண்டிருக்கலாம் .கடையநல்லூர் போன்ற பகுதிகளில் கறி குழம்புக்கு கசகசா சேர்த்துக் கொள்வார்கள் .தூத்துக்குடி மாவட்டத்தில் கறி குழம்புக்கு கசகசா உபயோகிப்பதில்லை .

S.Ibrahim said...

சிவப்பு குதிரை ///ஆமா அப்படியே உயிர்பிழைக்க தான் நம் மூஃமீங்கள் பிரியானி சாப்பிடுரார்களா? மைத்து வீட்டிலியே பிரியானி சாப்பிடுர ஆளு மூஃமீங்கள் .இதுலாம் சொல்லவவேனும்.///
சிவப்பு குதிரை ஒரு லூசு என்பதால் அவர் உளறுவார் என்று தெரிந்தே பன்றிக்கறி விசயத்தை பொதுவில் போட்டிருந்தேன் .பன்றிக்கறி விஷயம் உருவபடத்தை இப்போது பயன்படுத்துவது பற்றி புரிதலுக்காகவே சொல்லியிருந்தேன்.பன்றிகரிக்கு உதாரணத்திற்கும் பிரியாணி கசகசாவிற்கும் எந்த தொடர்பிலும் சொல்லப்படவில்லை

S.Ibrahim said...

///நன்றி தஜ்ஜால். தொடர்ந்து மூஃமீங்களுக்கு தாவா செய்ய எனக்கு தாங்கள் உதவும் படிக்கேட்டுக் கொள்கிறேன்.எங்கையாவது பிழை இருந்தால் தவராமல் சுட்டிக்காட்டவும்.//
பிரியாணிக்கு என்னதேவை என்பதை இணையதளத்தில் தேடி பார்க்க தெரியாத அரை லூசு எழுதுவதை முழு லூசு தச்சால் பிழை பொருக்க போகிறாராம் .

Anonymous said...

//பன்றிகறி எப்படி ஹலாலாகும் ஹராமோ அதுபோலவே உருவப்படங்களும் .ஆனால் கரன்சியில் உள்ள்ளது தேவையற்றது// தேவையற்றதா? நபிக்கூற்றுப்படி தவறா? இந்த கரன்சி நோட்டுகளை பயன்படுத்துவதில் பிரச்சினை வராதா?

சிவப்புகுதிரை said...

@ s.ibrahim //கடையநல்லூர் போன்ற பகுதிகளில் கறி குழம்புக்கு கசகசா சேர்த்துக் கொள்வார்கள் .தூத்துக்குடி மாவட்டத்தில் கறி குழம்புக்கு கசகசா உபயோகிப்பதில்லை// எங்கு கசகச சேர்த்தாலும் அது ஹராம் தான ...ஊருக்கு ஊரு உணவு வகைகள் மாறுபடும்.எங்க ஊர் பக்கம்லாம் கசகச இல்லாமல் பிரியானி என்ற பேச்சிக்கே இடம்யில்லை..எங்க ஊர் உண்மை முஸ்லீம்கள்(பி.ஜெ குரூப்) கூட இந்த பிரியானியை தான் சாப்பிடுகின்றார்கள். ஆகமொத்தம் கசகச ஹராம் அதுல சத்து இருந்தால் என்ன இல்லனா என்ன..

சிவப்புகுதிரை said...

@Anonymous

//பன்றிகறி எப்படி ஹலாலாகும் ஹராமோ அதுபோலவே உருவப்படங்களும் .ஆனால் கரன்சியில் உள்ள்ளது தேவையற்றது// தேவையற்றதா? நபிக்கூற்றுப்படி தவறா? இந்த கரன்சி நோட்டுகளை பயன்படுத்துவதில் பிரச்சினை வராதா?//
அவர்களுக்கு பிரச்சனைனு வரும் போது கசகச ஹலாகும் உருவபடம் ஹலாலகும்.ஏன் ஆல்காஹால் கூட ஹலாகும் சகா.இதுக்கு பெயர் தான் flexibility னு சொல்லுவாங்க. தேவையான நேரத்து வளஞ்சுக்குரது.அது மூஃமீங்களிடம் நிறைய பாக்கலாம்.

தஜ்ஜால் said...

@இப்ராஹீம்,
தவிர்க்க முடியாத நேரங்களில் பன்றிக்கறி உண்பதும், CD/DVDகளின் முகப்பில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த மாதிரி திட்டமிட்டு தனது படங்களை அச்சடிப்பதும், கரன்சி தாள்களில் உருவப்படம் பதித்து தன்னை/தனக்கு பிடித்தவருக்கு விளம்பரம் செய்வதும் ஒன்றா? மேலும் அசைகின்ற சித்திரங்களாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதும் ஒன்றா?

kasiyaribrahim said...

சி.கு ///எங்க ஊர் பக்கம்லாம் கசகச இல்லாமல் பிரியானி என்ற பேச்சிக்கே இடம்யில்லை///
எத ஊர் பிரியானில் கசகசா சேர்க்கிறார்கள் என்பது புரியவில்லை.
பிரியாணியின் ஆரம்பங்கள் ஹைதராபாத் ,ஆம்பூர், மொகல் .இந்தபிரியாநிகளில் கசகசா சேர்க்கவில்லை
தேங்காய்,கசகசா போன்றவற்றை பிரியாணியில் சேர்க்கவே செய்யமாட்டார்கள்.
அப்புறம் கசகசா செடியில் அபின் தயாரிக்கப்படுவதால் அந்த செடியில் இருந்து வரும் பொருட்கள் அனைத்தும் போதை பொருட்களாக சவூதி அரசு அறிவித்ததுள்ளது.இந்த செடி இந்தியா பாக்கிஸ்தான் மட்டிலுமே விளைகிறது .அதனால் அது பற்றி அவர்கள் அறியாமல் இருந்திருக்கலாம். பனை மரத்திலிருந்து கள் இறக்கப் படுகிறது என்பதற்காக பனை பொருட்களான பனங்கிழங்கு ,கருப்புக்கட்டி ,நுங்கு போன்ற அனைத்தும் போதை பொருட்கள் அல்ல.கசகசா செடிவிளைந்து பால் வைக்கும் பருவத்தில் அதில் பக்குவத்தை மாற்றி அபின் தயாரிக்கிரறாக்கள்.பனை மரத்திலிருந்து வரும் பாலே கள் .ஆனால் அதில சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் .இதில் எவ்வித போதையும் இல்லை .சிறு குழந்தைகள் கூட வயிறு நிறைய அருந்தினாலும் போதை வராது.கசகசாவை சமைக்காமல் அப்படியே அதிகமாக் சாப்பிட்டாலும் போதை ஏறாது .ஆகவே லூசுத்தனமாக உளறியமைக்கு வருத்தம் தெரிவிப்பதே சிறந்தது

kasiyaribrahim said...

///திட்டமிட்டு தனது படங்களை அச்சடிப்பதும், கரன்சி தாள்களில் உருவப்படம் பதித்து தன்னை/தனக்கு பிடித்தவருக்கு விளம்பரம் செய்வதும் ஒன்றா? மேலும் அசைகின்ற சித்திரங்களாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதும் ஒன்றா?////

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/uruvapatathuku_anumathi_உண்ட

சிவப்புகுதிரை said...

@ தஜ்ஜால், எல்லாம் மதத்துக்கும் உள்ள சிறப்பு இஸ்சுலாத்துக்கு மட்டும் இல்லாமலையா போகும்.. தங்களுக்கு தேவையான நேரத்தில் வளைந்துக்குவேண்டியது தான்.flexibility

சிவப்புகுதிரை said...

@kasiyaribrahim

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/uruvapatathuku_anumathi_உண்ட

உங்கள் லிங்கில் ஒன்னுமே இல்ல.....requested content could not be found என்று சொல்லுக்கின்றது...

Anonymous said...

//உங்கள் லிங்கில் ஒன்னுமே இல்ல.....requested content could not be found என்று சொல்லுக்கின்றது...// அதாகப்பட்டது பி.ஜே.வுக்கு பதில் தெரியாது, அதனால இப்ராஹிமுக்கும் பதில் தெரியாது.

தஜ்ஜால் said...

தனது வீட்டில் உருவங்கள் உள்ள திரையைக் கண்டு முஹம்மது எரிச்சலடைந்ததாகவும், அதை நீக்கிய பின்னரே அவர் அமைதியடைந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. இவர்களோ தங்களது உருவங்களைப் திட்டமிட்டு அச்சடித்து விளம்பரம் தேடுவதுடன், அதற்கு நியாயம் கூறி அப்பாவி முஸ்லீம்களை ஏமாற்றுகின்றனர். முஸ்லீம்கள் எதை/யாரைப் பின்பற்றுகிறார்கள்?

S.Ibrahim said...

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/uruvapatathuku_anumathi_unda/

yasir said...

பன்றி இறைச்சி ஹராம் பன்றி ஹராம் அல்ல அதனால்தான் படைத்தானோ? இல்லையேல் பன்றியே ஹராம் என்றல்லவா வஹி வந்திருக்க வேண்டும்? இது போன்று பொருள்தரும்படி அண்ணண் பி.ஜே சொன்னதாகக் கேள்வி. எப்படியோ ஹலாலான பன்றியை படைத்துவிட்டு பின் அதன் இறைச்சி மட்டும் ஹராம் என போதிக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன். ஹராமான ஒன்றை படைக்காமல் இருந்தால்தான் என்ன? அல்லது ஹராமான படைப்பை ஏன் நிறுத்த முடியவில்லை?

சிவப்புகுதிரை said...

நன்றி யாசீர்.
பகுத்தறிவை பயன்படுத்துனால் இதற்கு பதில் கிடைக்கும்.

சிவப்புகுதிரை said...

நன்றி யாசீர்.
பகுத்தறிவை பயன்படுத்துனால் இதற்கு பதில் கிடைக்கும்.

S.Ibrahim said...

யாசிறு இறைவன் சைத்தானை படைக்கவில்லையா?உங்களை படைக்கவில்லையா? அது போலவே பன்னியையும் படைத்துள்ளான்..பிறகு உங்களை போன்றவர்களை நாங்கள் யாருடன் ஒப்பிட முட்டியும்?

S.Ibrahim said...

பகுத்தறிவை பயன்படுத்து கசகசா உளறல்களுக்கு வருத்தம் தெரிவிக்க முடியுமா?

தஜ்ஜால் said...

@இப்ராஹீம்
நீங்கள் கொடுத்த onlinepj-வின் இணைப்பு இப்படி முடிகிறது
//…எனவே பொழுதுபோக்கிற்காக உயிருள்ளவர்களின் உருவப்படங்களை நீங்கள் வரைவதும் இந்த அடிப்படையில் தடை செய்யப்பட்டதாகும். உருவம் வரைபவர்கள் நரகில் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் இதை நீங்கள் கைவிட வேண்டும். அடுத்தவர்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்குவதும் கூடாது.//
என்ன நண்பரே உபதேசம் ஊருக்குத்தானா?

சிவப்புகுதிரை said...

@இப்புராஹிம்

வருத்தம் தெரிவிக்க வேண்டியது யார் நான்னா இல்ல உங்க நபியா. கசகசாவை எங்க ஊர் பக்கம்லாம் பயன்ப்படுகின்றார்கள் என்று சொல்லி இருந்தேனே.நீங்கள் கூட கறி குழபில் பயன்படுத்துவார்கள் என்று சொன்னிங்களே என்ன மறந்துடிங்களா.கண்ட மேனிக்கு உளறியுள்ள உங்கள் நபிக்காக நீங்கள் தான் முதலில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

yasir said...

எங்களை ஒப்பிடுவதற்கு நாங்கள் ஒன்றும் கற்பனைக் கடவுள் படைப்பல்லவே.கற்பனையாக உருவாக்கப்பட்ட கடவுளும் சைத்தானும் உங்களோடு ஒப்பிட்டுக் கொள்வதே பொருத்தமாகும்.

இப்னு லஹப் said...

great,sema sema sema !!! vaalga valarga !!!

S.Ibrahim said...

யா ,,சிறு ,/////எங்களை ஒப்பிடுவதற்கு நாங்கள் ஒன்றும் கற்பனைக் கடவுள் படைப்பல்லவே.///
நீங்கள் இறைவன் படைப்பு அல்ல என்பது உங்களது கற்பனை .

TAMILAN said...

S.IBRAHIM

NEENGA BOOKS PADIKKUM PAZHAKKATHAI VALARTHUKKOLLUNGAL!

UNGALUKKU PIDIKKADHA BOOKSAGA IRUNDHAALUM SARI!

KURIPPAGA HADHEEESGALAI!

yasir said...

இபுராஹிம்,//நீங்கள் இறைவன் படைப்பு அல்ல என்பது உங்களது கற்பனை//

அதுபோல் அல்லா என்பதும் முகம்மதுவின் கற்பனை.

saivam said...

கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
evr in nokkam enna ?