Saturday 25 February 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 7


சரி, நபி வெறுப்படைந்ததைப் போன்று ஸவ்தா  தள்ளாத வயதுடைய மூதாட்டியா?
தொடர் 7
                கலீபா முவஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 54 -ம் ஆண்டு இறந்ததாக  இப்ன் ஸாத் தபாக்கத் கூறுகிறது. இறப்பின் பொழுது ஸவ்தா அவர்களுடைய வயதை சரியாக அறிய முடியவில்லை. ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்தார். அதாவது, 3 + 54 = 57 ஆண்டுகள்  முஹம்மது நபியின் மனைவி என்ற தகுதியுடன் ஸவ்தா வாழ்ந்திருக்கிறார். ஸவ்தா 80 வயதில்  இறந்ததாக  கொண்டால்80 - 57 = 23, முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்யும் பொழுது ஸவ்தாவிற்கு 23 வயதாக இருந்திருக்கலாம். இதன் அடிப்படையில்  ஸ்வ்தாவை விட  முஹம்மது நபி 27 வயது முதியவர்.
இந்தகணக்குகளின் அடிப்படையில் நோக்கினால் தன்னுடைய 63-ம் வயதில் முஹம்மது நபி இறக்கும் பொழுது ஸ்தாவிற்கு சுமார் 63 – 27 = 36  வயது  இருக்கலாம்.  36 வயது ஸவ்தா கிழவியென்றால் 63 வயது முஹம்மது நபி இளைஞரா ?

3. ஆயிஷா

  ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896,5133,5134,5156,5158,5160). இவரைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்.

 

          4. ஹப்ஸா

உமர் அவர்களின் மகள். கிபி 607 ல் பிறந்தார். இவரது தந்தை உமரின் கூற்றுப்படி இவர் அழகு குறைந்த பெண்மனியாக அறியப்படுகிறார். உஹது போரில் தன் கணவர் ஹூனைதை இழந்தார். உமர், விதவையான தன் மகளை மறுமணம் செய்து கொள்ள உத்மான் மற்றும் அபூபக்கர் சித்தீக் இருவரிடமும் வேண்டுகோள் வைக்ககிறார் ஆனால் அவர்களோ ஹப்ஸாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விரும்புவதை உணர்ந்து மறுப்பு  தெரிவிக்கின்றனர்.
புஹாரி ஹதீஸ் -4005
ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் இறந்து விட்டதால் (மகள்) ஹப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ரு போரில் கலந்து கொண்டவருமாயிருந்தார்கள். மேலும் மதீனாவில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், எனவே நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து  (என் மகள்) ஹப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, நீங்கள் விரும்பினால், என் மகள் ஹப்ஸாவை உங்களுக்கத் திருமணம் செய்து வைக்கிறேன். (அதற்குஉஸ்மான்  (ரலி) அவர்கள் (உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னார். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானை சந்தித்த போது) இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள். ஆகவே நான் அபூபக்கர் அவர்களைச் சந்தித்தேன் (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன்அபூபக்கர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான்  அவர்களை விட அபூபக்கர் அவர்கள் மீதே மிகவும் மனவருத்தம் கொண்டவனாக  இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள். எனவே  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு  ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தன். பிறகு (ஒரு நாள்) அபூபக்கர் அவர்கள் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக்  குறித்து சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான் ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்கர் அவர்கள்) நீங்கள் கூறிய போது பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றி பேசியதை நான் அறிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான் உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.

கிபி 625 நபி (ஸல்) அவர்கள் ஐம்பத்தி ஆறாம் வயதில் ஹஃப்ஸாவைத் திருமணம்  செய்து கொண்டார். இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காவே நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் வலிமையான உமரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் நெருங்கிய தோழிகள். தங்களது கருத்துக்களை நபி (ஸல்) அவர்களுடன் விவாதிக்க தயங்காதவர்கள். ஒருமுறை, குடும்ப ரகசியம்(?)வெளியான விவகாரம் தொடர்பாக முஹம்மது நபியுடன் ஹப்ஸா செய்த  விவாதம் காரணமாக அவரை மணவிலக்கு செய்தார். அங்கு இறங்கிய ஜிப்ரீல் அவர்கள் ஹப்ஸாவை மணவிலக்கிலிருந்து  மீட்க கோருகிறார். நபி (ஸல்) அவர்களும் அதை ஏற்று ஹப்ஸாவுடன் இணைந்து வாழ்ந்தார் (இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்).   இவர் எட்டு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார். இவர் தன்னுடைய அறுபத்தது மூன்றாம் வயதில் காலமானார்.

5. ஜைனப் பின்த் குழைமா

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல் கணவர் பத்ரு போர் களத்தில் இறந்தவர். இவர் தானே முன்வந்து நபி (ஸல்) அவர்களுக்காக தன்னை அர்பணித்ததார். அனாதைகளிடமும் ஏழ்மையானவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவர்திருமணம் நிகழ்ந்து எட்டு மாதங்களில் மரணமடைந்தார்.

6. உம்முஸல்மா

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல்கணவர் அப்துல்லா பின் அப்துல் அஸத் உஹது போரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தவர். இத்தா காலத்திற்கு பிறகு அபூபக்கர் சித்தீக் மற்றும் உமர் இவர்களும் உம்முஸல்மாவை மறுமணம் செய்ய நாடுகின்றனர் ஆனால் மறுத்துவிடுகிறார். நபி (ஸல்) அவர்களின் முயற்சி வெற்றியடைகிறதுநபி (ஸல்) அவர்கள்  உம்முஸல்மாவைத் திருமணம் செய்யும் வேளையில் இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை இருந்ததாக காணப்படுகிறது. மிக அழகானவர். அறிவு கூர்மை நிறைந்தவர் என்பதால் சிக்கலான நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் இவரது அறிவுரை நாடுவது வழக்கம். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறந்தார்.

 

          7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்து எட்டாம் வயதில், ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் அவர்களை ஆறாவது மனைவியாக திருமணம் செய்தார்கள். இவரைப் பற்றியும் விரிவாக பின்னர் காண்போம்.

8. ஜுவேரியா

Bukhari vol 3, Book 46, No. 717
Narrated Ibn Aun:            

Prophet had suddenly attacked Banu Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day.
பனூ முஸ்தலிக் இனத்தவர்களின் மீது  அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி நபி (ஸல்) அவர்களின் படை எளிதில் வெற்றி பெறுகிறது. இப்போரில் பனூ முஸ்தலிக் இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 600 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களனைவரும் அடிமைகளாக்கப்பட்டனர். சுமார் 2000 ஒட்டகங்களும், 5000 கால்நடைகளும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அக் கைதிகளில் ஜுவேரியா பனூ முஸ்தலிக் இன தலைவரின் மகளும் ஒருவர். பனூ முஸ்தலிக்போரில் இவருடைய கணவர் முஸாஃபி பின் ஸஃப்வான் நபி (ஸல்) அவர்களின் படையினரால் கொல்லப்பட்டு, ஜுவேரியா போர் கைதியாக பிடிக்கப்பட்டார். போரில் கிடைத்த பொருட்களை (கைதிகள் உட்பட) தன்னுடைய படையினருக்கு நபி (ஸல்) அவர்களால் பகிர்ந்தளிக்கப்படுகிறதுஜுவேரியாவை, தாபித் பின் கைஸ் என்ற படைவீரருக்கு அடிமையாக பங்கீடு செய்யப்படுகிறார். தலைவரின் மகள் என்ற உயர்ந்த நிலையில் தன்னை ஒரு சாதாரண போர்வீரனின் அடிமையாக்கப்பட்டதை நினைத்து மிகுந்த வேதனையடைந்தார்.
தன்னுடைய நிலைமையை கூறி, தாபித் பின் கைஸ்க்கு  பணயத்தொகை அளிப்பதன் மூலம் தன்னுடைய விடுதலையை நாடுகிறார். தன்னை பாதுகாப்பாக விடுதலை செய்ய நிறைய பிணைத்தொகை கேட்பார்கள் என அச்சமடைகிறார். தாபித் பின் கைஸும் கோரிக்கையை ஏற்கிறார். போரில் தங்களுடைய செல்வங்கள் முஸ்லீம்களின் வசமானதால், மற்றவர்களின் உதவியால் பணயத்தொகையை திரட்ட நினைக்கிறார்.
போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்களுடன் நபி (ஸல்) அவர்களின் படை மதீனா திரும்புகிறது. இந் நிலையில் ஜுவேரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள நபி (ஸல்) அவர்களை சந்தித்தால் ஏதேனும் எதிர்பாராத உதவி கிடைக்கலாம் என நினைத்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்கிறார். ஜுவேரியா இருபது வயது நிரம்பிய அழகிய பெண். நபி (ஸல்) அவர்களுடன் ஜுவேரியாவை காண்பதை ஆயிஷா விரும்பவில்லை. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிகழ்ந்த பேச்சுவார்தையில், ஜுவேரியா விரும்பினால் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் மட்டும விடுதலை செய்யப்படுகிறார்பிறகு நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். பாரா என்ற அவரது இயற்பெயரை  ஜுவேரியா என்று நபி (ஸல்) மாற்றினார்.
 நபி (ஸல்) அவர்களின் மனைவியின் (ஜுவேரியா) உறவினர்களையும் அவரது ஆட்களையும் அடிமைகளாக வைக்க முடியாமல், வேறு வழியில்லாமல் போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்கள் பனூ முஸ்தலிக் வசம் திருப்பித் தரப்பட்டதாக இஸ்லாமிய அறிஞர்கள்  குறிப்பிடுகின்றனர்ஆனால் பனூ முஸ்தலிக்கின் உடைமைகளை அவர்கள் வசம் திருப்பி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் வரலாற்றில் கணப்படவில்லை. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு நபி தன்னுடைய ஐம்பத்து எட்டாம் வயதில் ஜுவேரியாவைத் திருமணம் செய்து கொண்டார்ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 65 ம் வயதில் ஜுவேரியா காலமானார்.
இத் திருமணம் பனூ முஸ்தலிக் இஸ்லாமை ஏற்க காரணமாக இருந்தது. ஜுவேரியாவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இத் திருமணம் நிகழ்ந்தது எனவே இத்திருமணத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்.
இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தின் படி நபி (ஸல்) - ஜுவேரியா இடையே நிகழ்ந்த உடன்பாடு, ஜுவேரியாவை மட்டுமே விடுதலை செய்தது. அவரது உறவினர்களையும், அவரது நலம் விரும்பிகளையும் செல்வங்களை விடுதலை செய்யவில்லை. தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற, ஜுவேரியா தேர்ந்தெடுத்த வழி; நபி (ஸல்) திருமணம் செய்வது என்ற முடிவு. ஜுவேரியா  தன்னைக் கொடுத்து தன் இனத்தை சேர்ந்த மற்றவர்களை காப்பாற்றினார் என்று முடிவு செய்யலாம். கணவனைக் கொல்வதும் மனைவியயை அபகரிப்பதும்  நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை

Monday 20 February 2012

பாமரனின் விமர்சனத்திலும் மோசடி



     லூத் என்றொரு"லூஸ்" கட்டுரையால் முஸ்லீம்கள் என்மீது ஏகமனக்கடுப்பில் இருக்கின்றனர். மீண்டும் லூத்தின் விஷயத்தை உடனடியாகக்  கிளற வேண்டாம் என்பதால்தான் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காமல்  இருந்தேன்.  ஆனால்,
பின்னுட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பவன்”  என்பவர் கூறுகிறார்...

//தஜ்ஜால் அவர்களுக்கு ரொம்பவும் பொறுமையாக பதில் அளித்து இருக்கிறார் பாமரன். இதன்மூலம் 'இஸ்லாத்தில் பதில் இல்லை' என்ற பொய் பிரச்சாரம் இங்கேயும் சாகிறது.// என்று மெய்சிலிர்த்து கூறுகிறார். மேலும் ##பக்கத்து ஊரான இப்ராஹீம் நபி ஊருக்குத்தானே சென்று இருப்பார்கள்? அங்கே சென்று தன் மகள்களை அந்த ஊரு இளைஞர்களுக்கு திருமணம் செய்து தந்திருக்கலாம். தானும் அங்கே வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம்.## என்று தனது யூகங்களை, கம்யுனிசமும் தெரியாமல். இஸ்லாமும் தெரியாமல், பாட்டி வடை சுட்ட கதையைப் போல கூறியிருக்கிறார்.

எனவே பாமரன் அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம், இந்த “பாட்டிக்கதை சொல்லிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியுமென்று(?) நினைக்கிறேன். நீளம் சற்று அதிகமானதால் தனிப்பதிவாக வெளியாகிறது.

பாமரன் என்பவரின் பின்னோட்டம்  ///பைபிளின் லூத் நபியின் கடைசி காட்சியை (மகள்களுடனான உறவு) காட்டியவர், ஆரம்பத்தை (வசதிக்காக) விட்டுவிட்டார்போலும்! அவற்றைப்பாருங்கள்:
Genesis 18:22-33
English Standard Version (ESV)
கடவுள் ஆபிரகாமை நோக்கி, ;’ஆபிரகாம், சோதோம் , கொமோரா நகரங்களில் மக்கள் என்னுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் தீய சிந்தனைகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தீய சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் வாழ்வதைத் தவிர அழிவதே நல்லது. எனவே அவர்களை நான் அழிக்கப் போகிறேன்’ என்றார்.

கடவுளின் திட்டத்தைப் பற்றி அறிந்த ஆபிரகாம் திடுக்கிட்டார். அங்கே தான் அவருடைய அண்ணன் மகன் லோத்து, குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
அவர் கடவுளை நோக்கி,’ஆண்டவரே… தீயவர்களை அழிக்கும் உமது செயல் நல்லது தான். ஆனால் அங்கே நீதிமான்களும் இருக்கக் கூடும் அல்லவா? தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ ? ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா ?’ என்றார்.

அதற்கு ஆண்டவர், ‘ஐம்பது நீதிமான்கள் அங்கே இருந்தால் அவர்களுக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்’ என்றார்.

‘ஆண்டவரே, நான் உமது முன்னிலையில் ஒரு தூசிக்குச் சமமானவன், ஆனாலும் கேட்கிறேன் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இல்லாமல் நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால் என்ன செய்வீர் ? ‘

‘ஐந்து நீதிமான்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காக நான் அந்த நகரை அழிக்காமல் விட்டு விடுவேன்’

‘கடவுளே.. நான் உம்மிடம் பேசத் துணிந்து விட்டேன். எனவே பேசுவேன். ஒருவேளை அங்கே நாற்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் நகரை அழிப்பீரோ ?’
‘நாற்பது நீதிமான்கள் இருந்தால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு அந்த நகர் அழிக்கப் படமாட்டாது’

ஆபிரகாம் தொடர்ந்தார்,’ கடவுளே கோபம் வேண்டாம். ஒரு வேளை முப்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் ‘

‘ஆபிரகாம்… அந்த நகரில் முப்பது நீதிமான்கள் இருந்தால் கூட அவர்களுக்காக அந்த நகரை நான் அழிக்க மாட்டேன்’

‘ஆண்டவரே.. நான் உமது அடியேன். ஒருவேளை இருபது பேர் மட்டுமே அந்த நகரில் இருந்தால் என்ன செய்வீர் ?’

‘இருபது நீதிமான்கள் இருந்தாலும் அந்த இருபது பேருக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்…’
ஆபிரகாம் மீண்டும் கடவுளிடம்,’ ஆண்டவரே… இன்னும் ஒரே ஒரு முறை கேட்பேன். கோபம் வேண்டாம். ஒருவேளை பத்து நீதிமான்கள் மட்டும் காணப்பட்டால் சோதோம் நகரை அழித்து விடுவீரோ ?’ என்று கேட்க.

‘ஆபிரகாம், உன்னுடைய விண்ணப்பத்தைக் கேட்கிறேன். அந்த நகரில் பத்து நீதிமான்கள் இருந்தால் போதும். அவர்களுக்காக அந்த நகர் காப்பாற்றப் படும்’ என்று சொல்லி விட்டு கடவுள் விலகினார்.
ஆபிரகாம் தம் இல்லத்துக்குத் திரும்பிச் சென்றார்..
இதிலிருந்து அந்த ஊரில் பத்து நல்லவர்கள் கூட தேறமாட்டார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா?///

(இவரின் பின்னோட்டம் முழுவதையும் லூத் ஒரு லூசு தலைப்பின் கீழ் படிக்கவும்.
ஆதியாகமம் 18:20
மேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் பாவிகள் என்று பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்என்றார்.
ஆக அதுவரை உங்கள் கடவுளுக்கும் சோதோம் மற்றும் கொமோராவின் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை. பலமுறை கேள்விப்பட்டாராம்! போய்ப் பார்ப்பாராம்! ஆரம்பத்தை வசதிக்காக விட்டது நானல்ல!
ஆதியாகமம் 18:23-33 பாமரன் மேற்கோள் காட்டியவற்றைப் பார்ப்போம்.
சோதோமையும், கொமோராவையும் கர்த்தர்(அல்லாஹ்) அழிக்க இருந்ததை ஆப்ரஹாம் தடுக்க நினைத்து அல்லாஹ்வுடன்(கர்த்தர்) பேரம் பேசுகிறார். இதை குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.
இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்த போது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.
குர் ஆன் 11:74
முடிவில் பத்து நல்லவர்கள் இருந்தால்கூட அழிக்கக்கூடாது என்பதாக பேரம் முடிகிறது. அதுவரை அல்லாஹ்விற்கு(கர்த்தர்) அங்கு எத்தனை நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதுகூடத் தெரியவில்லை. அற்பமனித இனத்திற்கு இருக்கும் இரக்க உணர்வுகூட கடவுளுக்கு இல்லை என்பதுதான் மேற்கண்ட வசனங்களின் மறைபொருள்.
///பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது? பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!/// என்று கூறும் பாமரன், தனது பதிலில் மொழிபெயர்ப்பில் பிழையெனும் புராதன  தொழில்நுட்பத்தை, வாதத்தை முன்வைக்கிறார்.//[சரியான மொழிபெயர்ப்பை கீழே காண்க : தேவைஎன்ற சொல்லுக்கு பதில் பாத்தியதைஎன இருப்பதே சரி/// என்று பாமரன் அவர்கள் கூறிவிட்டதால், பாமரனுக்கு அவரது மொழிபெயர்ப்பிலிருந்தே பதில் கூறுவதுதான் சரி. பாத்தியதை எளிமையாகக் கூறினால் “உரிமை”.
அதாவது, சோதோமின் ஆண்கள் லூத்தின் வீட்டின் முன் பெருந்திரளாக குவிந்தபொழுது, அவர்களிடம் தனது மகள்களை வழங்க முன்வருகிறார். ,

அப்பொழுது அந்த ஆண்கள்.... ///11:79. (அதற்கு) அவர்கள் உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்;../// என்றனர். லூத், தானே முன்வந்து (இதுவரை எந்த ஆணையும் அறியாத) தனது மகள்களை வழங்கிய பிறகும், அவர்கள் உரிமையைப்பற்றி ஏன் கூறவேண்டும்? இங்கு உரிமையென்பது திருமண ஒப்பந்தத்தையே குறிக்கிறது.
ஆதியாகமம் 19:12-14
12. அந்த இருவரும் லோத்திடம், உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, மகன்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் உடனே இந்நகரத்தை விட்டு விலகச் சொல்லவேண்டும்.
13. நாங்கள் இந்நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்என்றனர்.
14. ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மண்ந்து கொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேருங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்என்றான். அவர்ளோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணினார்கள்.
       லூத்தின் வீட்டிற்கு முன் குழுமிய ஆண்கள் உரிமையைப் பற்றி பேசியதன் காரணம் லூத்தின் மகள்கள் வேறு ஆண்களுடன் திருமணத்திகாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்களைப் புணர்வது முறையல்ல என்பதுதான் முதன்மைப்பொருள். வேறு சிலருடன் திமணத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, மற்ற பலருக்கு தாரை வார்ப்பதுதான் நபித்துவமோ? இங்கு முதலில் ஒழுக்கக்கேட்டை நிகழ்த்துவது யார்? //தஜ்ஜாலின் வார்த்தைப்பாட்டின்படி, அவர்களுக்கு பெண்ணுறவு தேவையில்லை என்பதை லூத் நபி நன்றாகவே அறிந்திருந்தார் என்பதில் ஏதும்ஐயமுண்டோ?// ஐயமேதுமில்லை பாமரன் அவர்களே!

       ஆனால், அவர்கள் தேடி வந்தது ஆணின் உடலையே எனும்பொழுது லூத் தன்னையல்லவா வழங்கியிருக்க வேண்டும்? அறிவுடைய எந்த ஒரு தந்தையும் தனது மகள்களை ஓநாய்களுக்கு விருந்துபடைக்க முன்வரமாட்டான். லூத்தின் செயலுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கும் பாமரன் அவர்களே! இதைப்போன்ற சூழ்நிலையில் உங்களது சகோதரியையோ மகளையோ அல்லது பேத்தியையோ திரும்பத் திரும்ப கற்பழிக்க வழங்கமாட்டீர்கள் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமுமில்லை. அடிமைப்பெண்களுடன் திருமணபந்தமின்றி கூடுவதை குர்ஆன் பழிப்பிற்குரிய செயல் அல்ல என்று கூறி ஊக்குவித்தாலும் அதை முஸ்லீம்கள் காதில் வாங்கிக் கொள்வதுமில்லை. முஸ்லீம்கள் மேற்கொள்ளும் இந்த அறநெறிகள் எங்கிருந்து வந்தது?

///லூத் நபி தன் பெண் மக்களை யாருக்காக, எதற்காக கொடுக்க முன்வந்திருப்பார் என சிறிதாவது சிந்தனை செய்துக்கலாமே தஜ்ஜால் அவர்களே? இரண்டு நல்ல ஆண்களாவது அவர்களில் இருந்திருக்கலாம் என்ற நப்பாசை லூத் நபிக்கு இருந்திருக்கலாம்தானே? // என்ற பாமரன் அவர்களின் வாதத்தில் எந்த பொருளுமில்லை! லூத்தின் மகள்கள் திருமணத்திற்கான ஒப்பந்தத்தில் இருக்கும் பொழுது, ஓநாய்களின் கூட்டத்திற்கு மத்தியில் மறுபடியும் வரன் தேடிக் கொண்டிருந்தார் என்பது மடத்தனமாக இல்லையா?

//பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது? பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!///
       பதினான்கு நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரபி அறிஞர்கள் கண்களில்படாத பேருண்மையே பாமரன் அவர்களின் இந்த பதில்! லூத்தின் மகள்கள் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தனர் எனும் பொழுது சோதோமில் குடும்ப உறவுகள் இருந்தது என்பது புலனாகிறது. //29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? // என்று நீங்கள் (பாமரன்) மேற்கோள்காட்டிய குர்ஆன் வசனமே, சோதோமின் பெண்களும் ஓரினச்சேர்கையில் இருந்தனர் என்ற உங்களது வாதத்தை மறுக்கிறது.

//பாமரன் பதில்: நாம்தெரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் இன்ஜீலின் (பைபிள்) முதல் வெளிப்பாட்டை நம்புபவர்கள்; ஆயினும் பிற்காலத்திய திரிபுகளை அல்-குரான் மூலமாக அறிந்தவர்கள்.// இங்கு எடுத்தளப்படுவது இன்ஜீல் அல்ல என்பதை பாமரன் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வழக்கம் போல லூத்தின் பிற்பகுதிக்கதையை அல்லது தாங்களுக்கு உடன்பாடில்லாத பழைய ஏற்பாட்டின் பகுதிகளை, முஸ்லீம்கள் ஏற்கமாட்டார்கள். இவர்களது மறுப்பிற்கு  குர் ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமுமில்லை. குர்ஆனின் ஒரு மறுப்பை (ஈசா நபி கொல்லப்பட்டார் என பைபிளும் அப்படியில்லையென அல்குரானும் கூறுகின்றன) பாமரன் அவர்களே மேற்கோள்காட்டியிருப்பதை உதாரணமாகக் கொண்டு லூத்தின் பிற்பகுதி கதைக்கு உரிய குரான் ஆதாரத்தை முன்வைக்குமாறு பாமரன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக அவர் கூறிய குற்றச்சாட்டு//அவர் தன் பகுத்தறிவை யாருக்காகவோ எதற்கோ விலைபேசிவிட்டார்.// ஆம் இது உண்மைதான் நான் எனது பகுத்தறிவை Enlightenment-டிற்கு விலைபேசி விற்றுவிட்டேன்!

நண்பர் பாமரன் அவர்களே...! லூத் என்றொரு லூஸ் இடுகையின் மையத்தில் சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்?என்றொரு கேள்வியையும், அதற்கான பதிலையும் வைத்திருந்தேன் joslflwmfhyqபடித்தீர்களா? சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்? மீண்டும் அதனை கீழே தருகிறேன். படியுங்கள்.

##இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.  அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து

81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...

       ஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா? இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு லூஸ்தானே?##
 லூத் லூஸானது அங்குதான்!
தஜ்ஜால்