Sunday 26 January 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -33






வேதங்களின் நிலை

குர்ஆன் என்ற புதிய வேதத்தின் தேவை ஏன்? இஸ்லாமிய கொள்கைகளின்  அடிப்படை குர்ஆன். எனவே  இக்கேள்வியை இஸ்லாம் என்ற வழிமுறை புதிய ஏன்? எனவும் கேட்கலாம். இவ்வினாவிற்கு பதில்

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; …
(குர்ஆன் 2:213)

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட  தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜீல் ஆகிய மூன்று வேதங்களும் மனிதர்கள் தங்கள் அற்பத் தேவைகளுக்காக மாற்றிவிட்டனர் என்பதே அல்லாஹ்வின் பொதுவான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் ஆணைகளை மாற்றுவது, அவனது ஆணைகளை ஏற்க மறுப்பதை விட கொடியது, அவனது கட்டளையை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி நம்பிக்கையாளர்களிடையே அதை பரவச் செய்வது, நம்பிக்கையாளர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் ஆகும்.

இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …
(குர்ஆன் 2:79)

எனவே நான்காவது வேதமாக குர்ஆன் முஹம்மது அவர்களின் மூலமாக மனித குலத்திற்கு அருளப் பெற்றது. அல்லாஹ், முஹம்மது அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் முழுமையாக பாதுகாக்கப்பட்ட எழுத்து வடிவமே  குர்ஆன். இதை பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்கிறான்.

நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)

இது அல்லாஹ், மனிதனுக்கு தரும் உறுதிமொழி.    தனது வேதத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்.

அன்றியும், அல்லாஹ்வுடைய வாக்குகளை மாற்றுகிறவர் (எவரும்) இல்லை.
(குர்ஆன் 6:34)

நம்பிக்கையாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில்,

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற(வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் …
(குர்ஆன் 2: 4)

"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(குர்ஆன் 3:84)

தனது முந்தைய வேதங்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்,

நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …
(குர்ஆன் 5:44)
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஹாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
  (குர்ஆன் 21:105)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக  இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு  நேர் வழிகாட்டியாகவும்  நல்லுபதேசமாகவும்  இருந்தது.
 (குர்ஆன் 5:46)

அல்லாஹ், தன்னுடைய வேதங்களைப்பற்றி கூறுவதை சுருக்கமாக  பார்ப்போம் :
·       குர் ஆன், தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம் அல்லாஹ் இறக்கிய                     வேதங்கள்  ஆகும்
·        குர் ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது
·   குர்ஆனுக்கு முன்பாக இறக்கப்பட்டத தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜீல் ஆகிய    மூன்று வேதங்களும் மனிதர்களால் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.
·  முந்தைய வேதங்களாகிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் அதிகாரபூர்வமாக        அல்லாஹ்தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் ஏற்க வேண்டும், குர்ஆன்             பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.
·        அல்லாஹ்வின் வார்த்தைகளை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

இவைகளிலிருந்து நாம் சில முடிவுகளை அடையலாம்

குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி கூறிய அல்லாஹ், மற்ற வேதங்களை  பாதுகாக்காமல் கோட்டை விடுவானா? குர்ஆனின் வசனங்கள் முந்தின வேதங்களை அல்லாஹ் பாதுகாக்க தவறியதை உறுதி  செய்கின்றன. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தை மனிதர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்ததாகவும், இறுதியில் குர்ஆனைப் பாதுகாக்க  உறுதிமேற் கொண்டதாக கூறுவது முட்டாள்தனமாக  தெரியவில்லையா?
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்ற முடிவை நீங்கள் கூறினால், இதன் பொருள், தனது வேதங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனையில்லாமல் இருந்திருக்கிறான் அல்லது தனது வேதத்தைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு  பலவீனமாக இருந்திருக்கிறான் எனலாம்.  தனது முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாஹ்வின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.
அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனா இருக்கலாம் அதனால்தான் அவனால் தன் முந்தைய வேதங்களை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
அல்லாஹ்வின் முந்தைய மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது? பலவீன மனிதர்கள், தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்காமல் வெறுமனே இருந்த அல்லாஹ்பிந்திய வேதமாகிய குர்ஆனை மட்டும் பாதுகாத்தான் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி? ஏனெனில் முந்தைய வேதங்களை பாதுகாக்கவில்லை என்பது அல்லாஹ்வின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது.
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் மற்ற வேதங்களும் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டவைகளே என்று கூறலாம். முந்தின வேதங்களை பாதுகாக்க இயலாதவனென்றால் குர்ஆன் உட்பட எதனையும் அவனால் பாதுகாக்க முடியாது என்றுதான் கூற முடியும்
அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்வேதங்களைக் கறைபடாமல் பாதுகாக்கக் கூடியவனென்றால் நேர்வழியும் பேரொளியும் இருந்த தவ்ராத்தையும், ஜபூரையும் மற்றும் நேர்வழியும் ஒளியும் இருந்த இன்ஜீலையும் பாதுகாக்கத் தவறியது ஏன்?
முதலில் இறக்கப்பட்ட வேதங்கள் மனிதனால் களங்கப்பட்டது அல்லது அல்லாஹ்வினால்  சரிவர பாதுகாக்கப்படாத காரணத்தால் இரண்டாவது வேதம் இறக்கப்பட்டது. இவ்வாறாக நான்காவது வேதம் வரை தொடர்கிறது. சர்வவல்லமை மிக்கதாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கு தன்னுடைய வேதம், மனிதர்களால் மாற்றத்திற்குள்ளாகும் செய்தி முன்பே தெரியாதா?
அல்லாஹ்வுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் அல்லாஹ் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். அல்லாஹ்வும் தன் உரையாடல்களில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையில் மனிதன் அடையும் வெகுமதிகளும் தண்டனைகளும் கூட அவன் நாற்பது நாட்கள் கருவாக இருக்கும் பொழுதே முடிவு செய்யப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். இப்பிரபஞ்சத்தின் படைப்பின் ஆரம்பம் முதல் மறுமையின் முடிவுக்கு பின்னர் நிகழ்வதையும் நிர்ணயம் செய்து விட்டதாக கூறிக் கொள்பவன், வேத வசனங்களை மனிதர்கள் மாற்றி விட்டதாக புலம்புவது ஏன்? இது யாருடைய குற்றம்?
குர்ஆனின் (6:34) வசனம் முரண்பாடுகளுக்கு மேலும் ஒரு உதாரணம்இதன் அடிப்படையில் நாம் மேலும் சிலமுடிவுகளை அடையலாம்.
ü அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற வசனத்தை ஏற்பதென்றால் தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகியவை நிச்சயமாக அல்லாஹ்வின் வேதங்களாக இருக்க முடியாது. தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் ஆகிய வேதங்கள் தான் அருளியதாக அல்லாஹ் கூறவது வடிகட்டிய  பொய்.
ü முந்தின வேதங்கள் மாற்றப்பட்டதை அல்லாஹ்வே ஒப்புக் கொண்டு விட்டதால், தனது வார்த்தைகளை எவரும் மாற்ற முடியாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவது அர்த்தமற்றது. குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டதாக இருக்கலாம். எனவே ஐந்தாவதாக புதிய வேதம் வரலாம்(?)
ü "அல்லாஹ்வின் வார்த்தைகளை எவரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது" என்ற வசனம் குர்ஆனை மட்டுமே குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறினாலும் குழப்பம் தீரவில்லை. அல்லாஹ் ஒரு பலவீனமான இறைவனா இருக்க வேண்டும் அதனால்தான் அவன் முன்பு கூறிய வார்த்தைகளை (வேதங்களை) மனிதர்கள் சுலபமாக மாற்றி விட்டனர். அவைகளை அவனால் பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லாஹ், தனது வலிமையை அதிகமாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்ஆனை எவராலும் மாற்ற முடியாது என்று உறுதி கூறுகிறான் என்று நாம் முடிவு செய்யலாம்.
ü அல்லாஹ் சர்வ வல்லமையுடையவனே. மனிதர்களை சோதனை செய்யவே தனது வேதங்களை மாற்ற அனுமதித்தான் என்று  வாதிட முடியாது. ஏனென்றால் இவ்வாதம் விதியை அடிப்படையாகக் கெண்டது. தனது பாதையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த விளக்கத்தை ஏற்கமுடியும். விதியைப் பற்றி கூறும் வசனங்களை புறக்கணித்தால் குர்ஆனின் பெரும் பகுதி வேடிக்கையாகிவிடும். (விதியின் குழப்பத்தைப்பற்றி நாம் முன்பு பார்த்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்)

மனிதனின் இந்த துரோகச் செயல்களை அல்லாஹ்வினால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை என  ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்,

ஒருமுறை தவறு நிகழ்ந்தவுடன் அதை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறு இறுதிவரை தொடர்கிறது. இறுதியில் பாதுகாப்பாக  வெளியிட்டதாக கூறும் குர் ஆனின் நிலை வேடிக்கையானது. இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி, முழுமையான எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியில், எழுதவும் படிக்கவும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருந்த ஒரு எழுத்தறிவற்றவரின் வாயிலாக வெளியிட்டான். அதையாவது ஒழுங்காக செய்தானா? என்றால் அதுவும் கிடையாது.

மறதியாளன் என தன்னால் வர்ணணை  செய்யப்பட்ட  மனிதனின் இதயத்தில்(?)  வைத்து  அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சென்றதாக கூறுகிறான்.
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை நாம் மறக்கச் செய்தால், அதை விடச் சிறந்ததை அல்லது அதுபோன்றதை நாம் கொண்டு வருவோம் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
(குர்ஆன் 2:106) 
முஹம்மதிற்கு மறதி ஏற்படுத்தப்பட்டால் அதேபோன்ற வசனம் அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். இவ்விடத்தில் மறந்த அந்த வசனத்தை மீண்டும் மிகச்சரியாக நினைவூட்ட முடியும் என்று அல்லாஹ் உறுதியிட்டு கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தான் கூறியதை மிகச்சரியாக மீண்டும்  வெளிப்படுத்தும் தன்மையில்லததால், அதைப்போன்ற அல்லது அதைவிட சிறந்த வசனத்தை கொண்டு ஈடுசெய்வேன் எனக் கூறுகிறான். அவனிடத்தில் இருந்த "மூலப்பதிவேடு" என்ன ஆனது? இத்தகைய நினைவாற்றல் உள்ளவனின் குற்றச்சாட்டை எப்படி ஏற்பது?

எதற்காக மறதி ஏற்படுத்தப்பட வேண்டும்? சிறந்த வசனத்தால் ஈடுசெய்வதற்காகவென்றால் முதலில் கூறியது 'சொதப்பலா'?. அவ்வாறு நீக்கப்பட்ட குர்ஆன் வசனம் பற்றிய ஹதீஸைப் பாருங்கள்,

புகாரி ஹதீஸ் 4095
அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது :
பிஃரு மஊனாவில் தம்தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா,ரிஅல், தக்வான்(பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள்கூறுகிறார்கள், ஆகவே இறைவன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன்வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னர் (இறைவனால் அந்தவசனம்) நீக்கப்பட்டுவிட்டது. (அந்த வசனம்,)
"நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். நங்களும் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம் என்று எங்கள்  சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் ".

நீக்கப்பட்ட இவ்வசனத்தின் தன்மையையும் கருத்தையும் கவனித்துப் பாருங்கள் சரியான உளறல் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

முஹம்மதிற்கு மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். சஹாபாக்களுக்கு மறதி ஏற்பட்டால்ஏனென்றால் நபியின் காலத்தில் குர்ஆன் முழுமையாக தொகுக்கப்படவில்லை.

புகாரி ஹதீஸ் : 4986  
வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது
எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், அல்லாஹ்வின் தூதர (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அபுபக்ர் (ரலி) அவர்கள்., அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான் என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்து) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். …

 நபியின் மரணத்திற்கு பிறகு அரசியல் குழப்பங்கள் எல்லை கடந்திருந்த நிலையில் பல குழப்பங்களுக்கிடையே சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகே தன்னுடைய உரையாடல்களை தொகுக்கச் செய்கிறான். ஆவணங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான சாட்சிகளின் முறையையும் (குர்ஆன் 2:282)  விவரிக்கவும், முஹம்மது அவர்கள், தன் எதிரிகளுக்கு எழுதிய (மிரட்டல்) கடிதங்களில் முத்திரை பதிக்க அறிவுறுத்திக் கூறியவனுக்கு, தன்னுடைய உரையாடல்களை மிகச்சரியான எழுத்து வடிவத்தில்  தன் தூதரின் வாழ்நாளிலேயே முத்திரையிட்டு இறுதிவடிவம் கொடுக்கத் தெரியவில்லை. ஆயிஷாவின் பாதுகாப்பிலிருந்த குர்ஆனின் அத்தியாயங்களின் பிரதிகளை கோழி, ஆடு மற்றும் நெருப்பிற்கும் இறையாக்கிவிட்டான்.

புகாரி ஹதீஸ் :   4987  
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்தச் சமுதாயம் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே! என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம் என்று தொவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆனை பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), சயீத் பின் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப் படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே இறங்கிற்று என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்கிடமிருந்த) அநதக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படிடுத்த பிரதிகளில் ஒவ்வான்றையும் ஒவ்வாரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மதின் காலத்திலேயே குழப்பமற்ற முறையில்  இறுதி வடிவம் பெற்றுவிட்டதென்றால், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலீபா உஸ்மான்குர்ஆனை மீண்டும் தொகுக்க  அவசியம் ஏன்? தனது தொகுப்புடன் முரண்படும் மற்ற பிரதிகளை நெருப்பிலிட்டது ஏன்? குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் முஹம்மது அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான். அவரும் ஒரு இறைத்தூதரோ? குர்ஆனை தொகுத்தவரைப்பற்றி முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷாவின் கருத்து,
ஒரு இஸ்லாமிய தளத்திலிருந்து,
Ibn Atheer in ‘Al-Nahayah’, Volume 5 page 80 stated:
حديث "اقتلوا نعثلا قتل الله نعثلا" تعني عثمان . وهذا كان منها لما غاضبته وذهبت إل مكة
The hadith “kill Nathal, may Allah kill Nathal" refers to Uthman. That happened from her when she got angry and went to Makka.
Al-Razi records in Al-Mahsol, Volume 4 page 343:
فكانت عائشة رضي الله عنها تحرض عليه جهدها وطاقتها وتقول أيها الناس هذا قميص رسول الله صلى الله عليه وسلم لم يبل وقد بليت سنته اقتلوا نعثلا قتل الله نعثلا
Aisha (may Allah be pleased with her) did her best to incite people against Uthman, and she used to say: ‘Oh people! This is the cloth of the Messenger of Allah (pbuh) still not ragged, while his Sunnah is ragged, kill Nathal, may Allah kill Nathal.’
(ஆயிஷா, மக்களை உத்மானுக்கு எதிராக நன்றாக தூண்டிவிட்டார், அவர்(ஆயிஷா) கூறுவார், “மக்களே அல்லாஹ்வின் தூதருடைய இந்த துணி கிழியவில்லை. ஆனால் அவரது சுன்னத்துகள் கிழிந்து விட்டது, காஃபிரைக்  கொல்லுங்கள் அல்லாஹ் (அந்த) காஃபிரைக் கொல்லட்டும்" என்பார்.)

ஆயிஷாவின் இந்த கருத்தின்படி குர்ஆனை தொகுத்த கலீஃபா உஸ்மான் ஒரு காஃபிர். இதே உஸ்மான் மரணத்திற்குப்பின் அப்பாவியானதும், புனிதரானதும் அவரது கொலைக்கு பழிவாங்க ஆயிஷா போர்க்கோலம் பூண்டதும் தனிக்கதை. குர்ஆனைத்  தொகுத்தவரின் இறுதிகாலம் மிக கேவலமானது. கொலை செய்யப்பட்ட அவரது உடல் தீண்டுவாரின்றி குப்பைகூழத்துடன் மூன்று நாட்கள் கிடந்தது. இறுதியில் யூதர்களின் திறந்தவெளிக் கழிப்பிடத்தில் அடக்கம் செய்யபட்டது. இது தண்டனையா? இல்லை வெகுமதியா?

பல அனுபவங்களுக்கு பின் மிகுந்த பாதுகாப்புடன் வெளியிடப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இறுதி வேதத்தின் நிலையே இப்படியென்றால், முந்தின வேதங்களின் நிலையைப்பற்றி கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் முந்தின வேதங்கள் மற்றப்பட்டதாக புலம்புவதில் எவ்வித பொருளுமில்லை.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் மட்டுமே முந்தின வேதங்கள் மனிதர்களால் களங்கமடைந்து விட்டதாகவும் அவைகளைப் பின்பற்றக் கூடாது என்ற செய்தி உள்ளது. தவ்ராதிலும், ஜபூரிலும் மனிதர்களின் கைவரிசை இருப்பதாக இதற்கு அடுத்து இறக்கப்பட்ட இன்ஜீலில் அப்படி எந்த செய்தியும் காணவில்லையே. தவ்ராதிலும், ஜபூரிலும்  திருத்தம் செய்து கொண்டதை இன்ஜீலின் காலத்தில் அல்லாஹ்வினால் அறிய முடியவில்லையா?

எந்த காலகட்டத்தில், எவ்வாறு, யாரால் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது என தெளிவாக குறிப்பிடுவதுதானே குற்றம் சாட்டும் முறை. மாற்றிவிட்டார்கள்…! மாற்றிவிட்டார்கள்…! மீண்டும் மீண்டும் ஒப்பரிவைப்பது சின்னபுள்ளத்தனமா’ இருக்கிறது

முன்னுக்குப்பின் முரணாக தெளிவின்றி  பேசும் குர்ஆனின் குற்றச்சாட்டுகளை நம்புவது எப்படி?
சரி…  

அல்லாஹ் தன்னுடைய வேதங்களின் மூலம் மனிதர்கள் நேர்வழி  பெற ஏவுவது எதற்காக?
ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால் அதில் சுகமாக வாழ்பவர்களை (நேர்வழியை பின்பற்றுமாறு) ஏவுவோம். (ஆனால் அவர்கள் நேர்வழியை பின்பற்றாமல்) அதில் பாவம் செய்கிறார்கள்; எனவே (வேதனையைக் கொண்டுள்ள நம்முடைய) சொல் அதன் மீது உண்மையாகி அதனை வேரோடு அழித்து நாசமாக்கி விடுகிறோம்.
(குர்ஆன் 17: 16)
இவ்வசனம் அல்லாஹ்வின் மனநிலையை உணர்த்த போதுமானதுதன்னுடைய சொல்(விதி) எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பற்றிய ஒரு வாக்கு மூலம்சுகமாக வாழும் மனிதர்களைக் காண சகிக்காமல், அவர்களை வேரோடு அழிந்து நாசமாவதைக் காண்பதற்காக நேர்வழியை ஏவுபவன் இறைவனாஇதற்கு ஒரு வேதம் தேவையா?

Wednesday 15 January 2014

அல்லாஹ் Vs முல்லா(ஸ்)

அறிவியல் எதைச் செய்தாலும் எப்படிச் செய்தாலும் முல்லாக்கள் அதைக் கண்டு எள்ளிநகையாடமல் இருந்ததில்லை. காரணம், வியக்க வைக்கும் எத்தகைய அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும் சரி அதைப்பற்றிய ஒரு முன்னறிவிப்பை  குர்ஆனிலிருந்து உங்களுக்கு காண்பித்து விடுவார்கள்.

பொதுவாக, குர்ஆன் ஒரு குழப்பக் குவியலாக இருந்தாலும், அதில் சில கருத்துக்கள் தெளிவாகவே இருக்கிறது; அதிலொன்று வானம். ஆனால் குர்ஆன் குறிப்பிடும் வானம் என்ற பதத்திற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று புகுந்த இஸ்லாமிய அறிஞர்களாலும், இஸ்லாமிய வானியல் வல்லுனர்களாலும்(!) குழம்பிப் போய் வானத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும் நிலைக்கு ஆளாகிவிட்டேன்.

குர்ஆன் 21:30
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்...

இப்படித்தான் வானங்கள் உருவானதாம்.  “அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்” என்பது பெருவெடிப்புக் கொள்கையைக் கூறுகிறதென்பார்கள். குர்ஆன் பெருவெடிப்புக் கொள்கையைப்பற்றி கூறுகிறதா? என்பதைப்பற்றி நாம் முன்பே பார்த்துவிட்டதால், எனவே வானத்தை மட்டும் தொடர்வோம்.

அதென்ன வானங்கள்?

குர்ஆன் 2:29
...பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

படைப்பின் துவக்கத்தில் பெயரளவில் ஒரு வானத்தைப் படைத்த பிறகு, அல்லாஹ்வின் கவனம் பூமியின் மீது திரும்புகிறது; அதை மலைகள் செடிகொடிகள், உணவு வகைகள் என்று நிறைவு செய்த பிறகு,  வானத்தை ஏழாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கியுள்ளான்.

குர்ஆன் கூறும் வானங்கள் எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?

வானம், பூமியைவிட உயரத்திலிருக்கிறது.
குர்ஆன் 88:18
வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?

குர்ஆன் 71:15
"ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?''

குர்ஆன் 65:12 .... நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான்...

ஏழு வானங்களும் அடுக்கடுக்காக இருப்பது மனிதர்கள் காணக்கூடிய வகையில்தான் இருக்கிறதாம்! நாம் அறிந்தவரையில் ஏழு வானங்களும் தெரிவதாக கூறுகின்ற எவரையும் பார்த்ததில்லை. ஒருவேளை முஸ்லீம்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறதோ என்னவோ?

ஏழு வானங்களாக உயர்த்தும்வரை அல்லாஹ் எங்கே இருந்தான்? வானத்திற்குக் கீழாகவா அல்லது வானத்திற்கு மேலாகவா?  வானங்களை உயர்த்தியதும் மேலே சென்று அர்ஷின் மீது அமர்ந்து கொண்டிருக்கலாம்! இதை அன்றைய இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள் படம் வரைந்துள்ளனர்.

 


ஆனால் இன்றைய இஸ்லாமிய அறிவியல் வல்லுநர்கள் இந்தப் பழங்கதைகளை ஏற்பதாக இல்லை. அவர்கள தங்களது பங்கிற்கு அல்லாஹ் கூறும் ஏழு வானங்களைப்பற்றி படம் வரைந்து பாகங்களைக் குறித்துள்ளனர்.




ஏழுவானம் என்பது முஹம்மதின் கண்டுபிடிப்பு அல்ல! யூதர்களிடமும், கிருஸ்தவர்களிடமும் பாகன் அரேபியர்களிடம் முன்பே இருந்த நம்பிக்கையை மறுபிரதி எடுத்துக் கொண்டார்.

2 கொரிந்தியர்
2. கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் நன்கு அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தான என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும்.

குர்ஆன் கூறும் ஏழு என்ற எண்ணிக்கைக்கூட யூத, கிருஸ்தவ நம்பிக்கைகளிடமிருந்து இரவல் பெற்றதுதான். ஏழு வானங்களைப்பற்றி இறுதியில் விவாதிக்கலாம். வானங்களைப்பற்றி குர்ஆன் கூறும் மற்ற செய்திகளையும் கவனித்துவிடுவோம். 

வானம் என்பது தனிப் படைப்பு; அதைப் உருவாக்குவது மிகக் கடினனமான பணி.

குர்ஆன் 79:27
படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா அதை அவன் நிறுவினான்.

குர்ஆன் 40:57
வானங்களையும், பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

இத்தகைய வானம் அல்லது வானங்கள் எதற்காக?
குர்ஆன் 2:22
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்...

குர்ஆனைப் பொறுத்தவரையில் வானம் அல்லது வானங்கள் என்பது பூமிக்கு மேலே அடுக்குகளாக இருக்கும் உறுதியான மேற்கூரை. அது மனிதர்களின் மேல் விழக்கூடியது என்பதே அல்லாஹ்வின் முடிவு.

குர்ஆன் 22:65
...தான் கட்டளையிட்டால் தவிர பூமியின் மேல் வானம் விழாதவாறு தடுத்து வைத்துள்ளான்.

குர்ஆன் 34:9
...அல்லது அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு பகுதியை விழச் செய்திருப்போம். திருந்துகிற ஒவ்வொரு அடியானுக்கும் இதில் சான்று உள்ளது.

குர்ஆன் 52:44
வானிலிருந்து ஒரு பகுதி விழுவதை அவர்கள் கண்டால் "அது அடர்ந்த மேகம்'' என்று கூறுவார்கள்.

ஒரு எளிமையான கூடாரம் அமைக்க வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் ஒரு கழியாவது வேண்டும். மனிதர்களின் மீது விழக்கூடிய திடப் பொருளான வானத்தை, எப்படி மேலே நிலை நிறுத்த முடியும்? தூண்கள் வேண்டாமா? என்று அன்றைய அரபிகள் முஹம்மதைக் கேட்டிருக்க வேண்டும். இந்தக் கேள்விக்கும் குர்ஆன் பதிலளிக்கிறது.

குர்ஆன் 13:2
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.

குர்ஆன் 31:10
நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்...

வானத்திற்கு தூண்கள் இருக்கிறது ஆனால் ஜின்கள், மலக்குகள் போல அதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியாது. ஆனால் தூண்கள் இருப்பதாக நீங்கள் நம்பவேண்டும். வானங்களை தூண்களின்றி உயர்த்தியதுடன், பூமியும் வானங்களும் ஒன்றையொன்று விட்டு விலகாதவாறு அதை இணைத்திருக்கிறான்.

குர்ஆன் 35:41
வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான்...

குர்ஆனின் இத்தகைய மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல்(!?) செய்திகளைக் கேட்டு ஏழாம் நூற்றாண்டு அரேபியர்கள் வேண்டுமானால் வியந்திருக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் குர்ஆனின் இத்தகைய அறிவியல்(!) செய்திகளை கூறினால், அன்றைய மக்களின் அறியாமை என்று புறந்தள்ளிவிடுவார்கள்; இதை முல்லாக்கள் அறியாமலிருப்பார்களா? குர்ஆனின் உளறலை எப்படி சரிகாணுவது?

இப்படித்தான்!

240. வானத்திற்கும் தூண்கள் உண்டு
இவ் வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும்,  பூமியையும் படைத்தான் எனக்கூறப்படுகிறது. 'வானங்களுக்கும்,  பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப்பார்க்க முடியாது' என்று இவ்வசனங்கள்கூறுகின்றன.
பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில்  நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப்பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பதுதான் காரணம்.
உதாரணமாக நாம் வாழ்கின்ற பூமி, மணிக்கு 1670  கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது. அதேசமயம் சூரியனை, மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகின்றது.
இவ்வளவு வேகமாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் பூமிசுற்றும் பொழுது அதை ஈர்த்துப் பிடிக்கக்கூடிய ஒரு சக்தி இல்லாவிட்டால் தனது நீள்வட்டப் பாதையிலிருந்து இப்பூமிதூக்கி வீசப்பட்டுவிடும்.
பூமியின் எடை (நிறை) 6,000,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் (6ஊ+24 ந்ண்ப்ர்ஞ்ழ்ஹம்ள்) ஆகும்.
இந்த வேகத்தில் சுற்றுகின்ற, இவ்வளவு பாரமான ஒரு பொருளை அதன்பாதையை விட்டுவிலகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ஐந்து மீட்டர் குறுக்களவு கொண்ட ஒரு லட்சம் கோடி உருக்குக் கம்பிகளாலான தூண்களைக் கொண்டு பூமியிலிருந்து சூரியனை இணைக்க வேண்டும். அந்தத் தூண்கள் இல்லாமலேயே பூமி, தனது பாதையிலிருந்து விலகாமல் இருப்பதற்கு ஈர்ப்புவிசை என்ற கண்ணுக்குத் தெரியாத தூண்களே காரணம்.
இந்த அறிவியல் உண்மையைத்தான், நீங்கள்பார்க்கின்ற தூண்களின்றி' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த ஈர்ப்புவிசையின் காரணமாகத்தான் ஒவ்வொருகோளும் அந்தரத்தில் எவ்விதப்பிடிமானமும் இன்றிதொங்கும் காட்சியைப் பார்க்கின்றோம்.
எனவே 17வது நூற்றாண்டில் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை, ஆயிரத்துநூறு (1,100) ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் பார்க்கின்ற தூண்களின்றி' என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்கமுடியாது.
இந்த வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்றவார்த்தையாக இருப்பதால்தான் பார்க்கின்ற தூண்களின்றி' என்றசொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.
திருக்குர்ஆன்,  முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத்தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.
onlinepj.com
ஏக இறைவன்(!),  வானம் என்ற திடமான மேற்பரப்பை மனிதர்களால் காணமுடியாத தூண்களால் நிறுத்தியிருப்பதாகக் கூறினால், முல்லாக்கள் சூரியன் மற்றும் இதர கோள்களுக்கிடையே இருக்கும் ஈர்ப்பு விசையைப்பற்றி அளந்துவிடுகின்றனர்.

இப்பிரபஞ்சத்தில் ஈர்ப்புவிசை நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. அது சூரியன் மற்றும் கோள்களுக்கிடையே மட்டுமல்லாமல் கேலக்ஸி எனும் விண்மீன் திரள்களுக்கு இடையேயும் நிலவுவதால் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளவும் செய்கின்றன. இங்கு கண்களுக்குத் தெரியாத தூண்கள் எங்கே போனது?



ஏக இறைவன்(!) சூரியனையும் பூமியையும் “நீங்கள் பார்க்கக் கூடிய தூண்” இன்றி இணைத்திருப்பதாக  கூறியிருப்பதை போன்று திரித்து ’அறிவியல்(!) அல்வா’ கொடுக்கின்றனர்!

முல்லாக்கள் எப்படி மாற்றிக் கூறினாலும் சரி, அல்லாஹ் தனது நிலையை விட்டுக் கொடுப்பதாக இல்லை! அவனைப் பொருத்தவரையில் வானம் என்பது உறுதியான மேல்தளம்தான். அதை தூண்கள் இன்றி உயர்த்திருப்பதாகக் கூறி பெருமைபட்டுக் கொள்கிறான். இந்த ஆலீம்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

குர்ஆன் 40:64
அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்...

குர்ஆன் 2:22
...அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்.



குர்ஆனில் இல்லாத மற்றொரு வஹீயான ஹதீஸைப் பார்ப்போம். அல்லாஹ், முஹம்மதை விண்வெளிக்கு அழைத்து வரச்செய்த நிகழ்ச்சியைப்பற்றி முஹம்மது கூறியவைகளிலிருந்து...

முஸ்லீம் ஹதீஸ் 264
 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் சமூகத்தைச் சேர்ந்த மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
...பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். பின்னர் நாங்கள் (புறப்பட்டு) முதல் வானத்திற்குச் சென்றோம். அதன் கதவைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது "யார் அது?'' என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், "ஜிப்ரீல்' என்று பதிலளித்தார்கள். "உம்முடன் (வந்திருப்பவர்) யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "முஹம்மத் (ஸல்)' என்று பதிலளித்தார்கள். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்' என்றார்கள். அப்போது (அந்த வானத்தின் காவலர்) எங்களுக்காகக் கதவைத் திறந்து "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துக்) கூறினார்....

வானத்தின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பை நேரில் கண்டதாகக் கூறும் ஜின்களின் வாக்குமூலம்.

குர்ஆன் 72:08
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.

இவ்வாறாக முஹம்மதை ஒவ்வொரு வானங்களின் கதவுகளையும் அதன் காவலாளிகளையும் கடந்து ஏழாவது வானம்வரை அழைத்துச் சென்றதை, அவரைக் கொண்டே விவரித்துக் கூறவும் செய்திருக்கிறான். வானத்திற்கு வாயில்களையும், அதைப் பாதுகாக்க காவலாளிகளையும் நியமித்திருப்பதை எத்தனை அழகாக, விரிவாக கூறியிருக்கிறான் என்பதை மேற்கண்ட ஹதீஸை முழுமையாக வாசித்தவர்களுக்குப் புரியும்!

தனது மிகக் கடினமான படைப்பான வானத்தைப்பற்றி அல்லாஹ் கூறும் மேலும் சில செய்திகள்.

வானம் பிளக்கப்படும் (77:9), வானம் பிளந்து விடும். அன்று அது உறுதியற்றதாக இருக்கும் (69:16),  வானம் பிளக்கும் போது எண்ணையைப் போல் சிவந்ததாக ஆகும்(57:39), வானம் உருக்கிய செம்பு போல் ஆகும்(70:8), வானம்  அகற்றப்படும் (81:11), மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு (25:25), வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும்(44:10)  வானம் சுற்றிச் சுழலும் (52:9).

இத்தகைய வானத்தை மேலும் விரிவாக்குகிறானாம்.

குர்ஆன் 51:47
(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.

அல்லாஹ், வானத்தைப்பற்றி கூறினால் இந்த முல்லாக்கள் பிரபஞ்சத்துடன் இணைக்கின்றனர்.  பிரபஞ்சத்தைப்பற்றி அல்லாஹ் அறியவில்லை போலும்!

421. விரிவடையும் பிரபஞ்சம்
இவ்வசனத்தில் (51:47) வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக்கூறப்பட்டுள்ளது.
நாம் வாழ்கின்ற பிரபஞ்சம் அது தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உதாரணமாக,  சூரியன் சுழல்வதுடன் மணிக்கு ஒன்பதுலட்சம்கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது.  நாளொன்றுக்கு இரண்டுகோடிகி.மீ. தூரத்தைக் கடந்து ஓடுகின்றது. அதற்கேற்ப இப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. அதுபடைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரைதினமும் 2 கோடிகி.மீ. தொலைவுக்கு ஓடுவதிலிருந்து இப்பிரபஞ்சம் ஒவ்வொரு வினாடியும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை விளங்கலாம். இனியும் இதுபோல் விரிவடைந்து கொண்டே இருக்கும் என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லி, தன்னைத்தானே இறைவேதம் என திருக்குர்ஆன் நிரூபிக்கின்றது.
onlinepj.com
நாம் இதைப்பற்றி பார்ப்பதற்குமுன் மற்றொரு குர்ஆன் வசனத்தையும் அதற்கு முல்லாக்கள் தரும் விளக்கத்தையும் கவனித்துவிடுவோம்.

குர்ஆன் 21:32
வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம்..

288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு
வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடு' என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5)  கூறுகின்றன. கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும் கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
நமக்குமேல் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?' என்று சிலர் எண்ணலாம்.
நவீன ஆய்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் திருக்குர்ஆன் கூறுவது போல் வானம், பூமிக்குக் கூரையாக அமைந்துள்ள அதிசயத்தை அறிந்து கொள்ளலாம்.
சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 டிகிரி சென்டி கிரேடாக உள்ளது. சந்திரனுக்கு அருகிலுள்ள பூமியிலும் ஏறத்தாழ இதே அளவு வெப்பம்தான் இருக்க வேண்டும்.  ஆனால் சராசரியாக 40 டிகிரி அளவுக்குத்தான் பூமியில் வெப்பம்உள்ளது. இதற்குக் காரணம், நமக்குமேலே உள்ளகாற்றுக் கூரைதான்.
தரையிலிருந்து 16 கி.மீ. உயரம்வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது. இது சூரியனிலிருந்து வரும்வெப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து, சூரியனின் வெப்பம் முழுமையாக பூமியைத்தாக்காமல் காக்கின்றது.
இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் இதுகூரைபோல் செயல்படுகிறது.
பூமியிலிருந்து 16. கி.மீ. முதல் 50 கி.மீ. வரை அடர்த்தி குறைவான, விமானம் பறப்பதற்கு ஏற்ற காற்று உள்ளது. இந்த இரண்டாம் அடுக்கில் பூமியிலிருந்து 20 முதல் 35 கி.மீ. வரை ஓசோன்படலம் உள்ளது. சூரியனிலிருந்து ஏழுவண்ணங்களில் கதிர்கள் வெளிப்படுகின்றன. அதில் புறஊதாக்கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்த உயிர்க்கொல்லியாகும். உயிரினங்களிலுள்ள அணுக்களை இக்கதிர் அழித்துவிடும்.
தண்ணீரிலுள்ள கிருமிகளை அழிப்பதற்கு இந்தப் புறஊதாக்கதிர்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இந்தக்கதிர்கள், தண்ணீரிலுள்ள அனைத்துக் கிருமிகளையும் முற்றிலுமாக அழிக்கும் அளவுக்குச் சக்திவாய்ந்ததாக இருக்கின்றது.
இத்தகையசக்தி வாய்ந்த புறஊதாக்கதிர்கள், உயிரினங்கள் மீது பட்டு உயிரினங்கள் அழிந்து விடாதவகையில் ஓசோன்படலத்தால் இந்தக்கதிர் தடுக்கப்படுகின்றது.
இந்தவகையிலும் வானம் கூரையாக அமைந்துள்ளது. பூமியிலிருந்து 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை நடுஅடுக்கு உள்ளது. விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் மணிக்கு 43,000 முதல் 57,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன.
இதில் சிலகற்கள் 96,000 ச.மீ. பரப்பளவு கொண்டதாகும். இவ்வளவு பெரிய விண்கற்கள் சுமார் 50,000 கி.மீ. வேகத்தில் வந்து பூமியைத் தாக்கினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் சேதம் பூமியில் ஏற்படும். ஆனால் அப்படி நடக்காமல் சீறிவரும் விண்கற்களை இந்த நடுஅடுக்கு எரித்து, சாம்பலாக்கி விடுகின்றது.
தப்பித்தவறி சிதறுண்டு விழும் விண்கற்களின் வேகமும் மட்டுப்படுத்தப்படுகிறது. இந்தவகையிலும் வானம் கூரையாகச் செயல்படுகின்றது.
பூமியிலிருந்து 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரைவெப்ப அடுக்கு உள்ளது. ஹீலியம், ஹைட்ரஜன் போன்றவாயுக்கள் இங்கே அதிகம் உள்ளதால் இந்த அடுக்கு வெப்பப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒலி, ஒளி அலைகள் இங்கே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
இந்த வகையில் பூமியைவிட்டு ஒலி, ஒளி அலைகள் வெளியேறாமல் தடுக்கும் கூரையாகவும் இதுஅ மைந்துள்ளது. வானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான தடுப்புகளை ஏற்படுத்திவிட்டுத்தான் வானத்தைக் கூரை என்று இறைவன் கூறுகிறான்.
திருக்குர்ஆன் இறைவனின் கூற்று என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாக உள்ளன.
onlinepj.com
இந்த விளக்கம் ஆன்லைன்பீஜேவின் தனிப்பட்ட கருத்து அல்ல. பல்வேறு இஸ்லாமிய இணையதளங்களில் காணலாம். அல்லாவிற்கும் முல்லாக்களுக்கும் இடையே நடைபெறும் இந்த போராட்டத்தை விட்டு சற்று வெளியேவந்து வானம் என்றால் என்னவென்பதைப் பார்ப்போம்.


வானம் என்றால் என்ன?
நீலநிறத்தில் நாம் காண்கிற வானம் என்பது காட்சிப் பிழை என்கிறது அறிவியல். பூமியைச் சூழ்ந்துள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வெளியேரும் அலை நீளம் குறைவான நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நமக்கு பகலில் நீல நிறமாகத் தெரிகிறது. இதில் ஒளிஅலைநீளமும், பார்வைக் கோணமும், நமது விழியின் கிரகிக்கும் தன்மையும் கூடுதல் காரணிகளாக அமைகிறது. இதை நாம் துவக்கப்பள்ளி அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம்.
வானம் நமக்கு நீல நிறமாகத் தெரியும் அதேவேளையில் புவியின் வேறுபகுதிகளில் செந்நிறமாக உதயத்திலும், அந்திவேளையிலும், இரவாக இருளுளிலும் இருக்கிறது.

அல்லாஹ் கூறும் வானம் அல்லது வானங்களுக்கும், முல்லாக்களின் விரிவுரைகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே நாம், அல்லாஹ்வை சற்று நேரம் ஒதுங்கியிருக்க கூறிவிட்டு,  முல்லாக்கள் கூறும் விரிவுரைகளிலுள்ள முரண்பாடுகளைக் காண்போம்.

நாம் இதுவரை கண்ட அனைத்து குர்ஆன் வசனங்களிலும் வானத்தைக் குறிப்பிட “ஸமா” என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பிரபஞ்சமாகவும், வளிமண்டலமாகவும், சூரியனாகவும் திரிக்கப்படுகிறது.

வானம் என்பதை சூரியனுடன் இணைத்ததை விட முட்டாள்த்தனம் வேறிருக்க முடியாது. வானம் என்பது பூமியைத் தவிர்த்த வெளி அல்லது விரிவடையும் பிரபஞ்சமே என்றால்,  ”வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான்(35:41) என்ற குர்ஆன் வசனம் தவறாகிவிடுகிறது.  ஏனெனில் பூமி உட்பட பிரபஞ்சத்திலிருக்கும் ஒவ்வொரு பருப்பொருளும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. இதை, ”விரிவடையும் பிரபஞ்சம்” என்ற விளக்கத்தையும் கூறி அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

மேலும் அல்லாஹ்வின் கட்டளை காரணமாகத்தான் வானம் பூமியின் மீது விழாதிருப்பதாக குர்ஆன் 22:65 கூறுகிறது. குர்ஆன் குறிப்பிடும் ’sama’ என்ற பதம் பிரபஞ்சத்தையே குறிப்பிடுகிறது என்றால், பிரபஞ்சம் எப்படி பூமியின் மீது விழும் என்பதை இஸ்லாமிய அறிவியல்(!) வல்லுநர்களான முல்லாக்கள்  விளக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

”வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?”  என்ற குர்ஆன் 88:18  கேள்வியை எப்படி எடுத்துக் கொள்வது? இக்கேள்வியின் பொருள், நாம் வாழும் பூமி இப்பிரபஞ்சத்தில் இல்லை. பிரபஞ்சத்துடன் இணைந்திருந்த பூமியை பிரித்து, பூமிக்கு மேற்புறத்தில், பூமியைவிட உயரத்தில் பிரபஞ்சத்தை, அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்பதை, ”வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்” என்ற  குர்ஆனின் 21:30-ம் வசனம் மேலும் உறுதிசெய்கிறது.

வானம் என்பது பிரபஞ்சதையே குறிப்பிடுகிறதென்றால், குர்ஆன் 65:12-ம் வசனத்தை எப்படி பொருள் கொள்வது?

குர்ஆன் 65:12 .... நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான்...

எண்ணிக்கையில் மட்டுமல்ல, அமைப்பிலும் பூமியும் பிரபஞ்சமும் ஒரே போன்றுதான் இருக்கிறது என்றுதான் பொருள் விளங்க முடியும்.

எப்படி?

உதாரணத்திற்கு, ‘A’ என்பவருக்கும் 72 ஹூரிலீன்களையும்  ‘B’ என்பவருக்கு அதைப் போன்றதையும் அல்லாஹ் கொடுப்பான் என்றொரு குர்ஆன் வசனம் இருப்பதாக வைத்துக் கொண்டால், எப்படி பொருள் கொள்வீர்கள்?

‘A’ என்பவருக்கு 72 ஹூரிலீன்களும், ‘B’ என்பவருக்கு 72 பன்றிகளையும் கொடுப்பான் என்றா பொருள் கொள்வீர்கள்? நிச்சயமாக இல்லை! ‘A’ என்பவருக்கு எப்படி வழங்கப்பட்டதோ அதே போன்று அதே தரமுடைய 72 ’ஐட்டங்களையே’ வழங்கப்பெறுவார் என்றுதான் பொருள் கொள்வோம்.  எனவே எண்ணிக்கையில் மட்டுமல்ல, அமைப்பிலும் பூமியும் பிரபஞ்சமும் ஒரே போன்றுதான் இருக்கிறது.

இப்படி பொருள் கூறினால் மனநிலை பாதிப்படைந்தவன் கூட குர்ஆனை எள்ளிநகையாடுவானே? 

425. பூமியின் அடுக்குகள்
இந்த வசனத்தில் (65:12) ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்ததாக இறைவன் கூறுகின்றான்.
நாம் வாழ்கின்ற இந்தப்பூமியைப் போல் பிரபஞ்சத்தில் இன்னும் ஆறு பூமிகள் உள்ளனஎன்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
நாம் வாழ்கின்ற பூமி, ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது என்றே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்வதற்கு இந்த வசனமே வழிகாட்டுகிறது.
ஏழு வானங்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.  ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் உள்ளதைச் சொல்லிவிட்டு,  பூமியில் அது போன்றதை என்று கூறினால் இதுவும் அடுக்குகளைத்தான் குறிக்கும்.
மனிதன் பூமியில் வாழ்ந்தாலும் அவன் ஆகாயத்தைப்பற்றி அறிந்த அளவுக்குப் பூமியைப்பற்றி அறியவில்லை.
ஆகாயத்தை அறிவதற்காக செயற்கைக்கோள்களை அனுப்பிபல் வேறு ஆராய்ச்சிகளை நடத்துவது போன்ற வசதிகள் அவன் வாழ்கின்ற பூமிக்கு உள்ளே ஆய்வு செய்வதற்கு இல்லை. பூமி முழுவதும் ஒரே திடப்பொருளால் ஆனது என்று கருதி வந்த மனிதன் இப்போதுதான் அதில் அடுக்குகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளான்.
பூமியின் அடுக்குகளில் இன்னர்கோர்,  அவுட்டர்கோர், மேன்டில், க்ரஸ்ட் ஆகிய நான்கு அடுக்குகள் முக்கியமானவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்னும் சில அடுக்குகள் இருப்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டாலும் அதை பிரித்தறியவில்லை.
எனவே பூமியில் ஏழு அடுக்குகள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுவது நிரூபணமாகின்றது.
onlinepj.com

இப்படித்தான் நாம் அல்லாஹ் கனவிலும்கூட நினைத்துப் பார்க்காத ஒன்றை குர்ஆன் கூறுவதாகப் பொருள்விளங்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குர்ஆன் ’காமெடி’ புத்தகமாகிவிடாதா? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்! நான் கூற விரும்புவதை முழுவதுமாக கூறி முடித்துவிடுகிறேன். அதன் பிறகு நீங்கள் நிதானமாக சிந்தித்துக் கொள்ளவும்.


அடுத்தது பாதுகாக்கப்பட்ட முகடாக இருக்கும் வானம்!



பாதுகாக்கப்பட்ட முகடாக உள்ள வானம் என்பது, புவியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தையே குறிப்பிடுகிறது என்று முல்லாக்கள் அடம்பிடிக்கின்றனர். ஹாருன் யஹ்யா என்ற அறிவியல்(!)முல்லா, ஒசோ படலத்தைப்பற்றி  குர்ஆன் முன்னறிவிப்பு செய்திருப்பதாகக் கூறுகிறார். புல்லரித்துக்கொள்ள விரும்புவர்கள்  இங்கே சென்று நிறைய புல்லரித்துக்  கொள்ளலாம்.

குர்ஆனில் அறிவியல் இருக்கிறதென்று முல்லாக்கள் இப்படியே அடம்பிடித்துக் கொண்டிருப்பது அவர்களது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறது.  அல்லாஹ் நட்சத்திரங்களால் அலங்கரித்துள்ள முதல் வானம் பூமியிலிருந்து  சுமார் 15 கிலோமீட்டர் உயரத்திலிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் பாதுகாகப்பட்ட முகடு என்ற இவர்களது விளக்கமும் பொய்யாகிவிடுகிறது.

குர்ஆன் 50:6
அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை.

ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது காண்பிக்கும் படம், ஆலீம்களிம் விளக்கத்திலுள்ள ஓட்டைகளை விளக்கும்.



ஒசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கும் கணினி வரைபடம்.



இவர்களது பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இரண்டாம் வானமாக உள்ள, சுமார் 20-50 கிலோமீட்டர் தடிமன் கொண்ட stratosphere-ல்  ஓசோன்(O3)  அடுக்கு உள்ளது. இது சாதரணமாக 300 to 500 DU (8 inch) அளவில் இருப்பதாக ஓசோன்படலம் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

மிக மெலிதாக இருக்கும் இந்த ஒசோன் படலம் அண்டார்டிக பகுதிகளில் மிகவும் பாதிப்படைந்து வெறுமையாகி விட்டதாக 1980களில் கண்டறியப்பட்டது. இது மனிதர்களை மிகக்கடுமையாக பாதிக்கும் என்றும்,  தோல் புற்று நோய், கண்புரை நோய் போன்றவைகளும், UV-B கதிர்களின் தாக்கத்தால் பயிர்களின் வளர்ச்சி பாதிப்பு, கடலில் மிதக்கும் நுண்ணுயிர்கள் அழிவு என்று இன்னும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கண்டறியப்பட்டது.

இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் ஓட்டை இல்லாத வானம், பாதுகாக்கப்பட்ட முகடு என்ற வாதம் பொருளற்றதாகத் தெரியவில்லையா?

இவர்கள் குர்ஆனைப்பற்றி இப்படியெல்லாம் சிந்திக்கத் தேவையில்லை. குர்ஆன் மட்டுமல்ல எந்த புத்தகமாயினும் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் எப்படி பொருள் கொண்டார்களோ அப்படி விளங்குவதுதான் நேர்மையான முறை. அதை விடுத்து காலத்திற்கேற்ப குர்ஆனை திரித்தும், புரட்டியும் இல்லத செய்திகளை திணித்தும் பொருள் கூறுவது அப்பாவி நம்பிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரமின்றி வேறில்லை.



கோபர் நிக்கஸிற்கு முன்பு, பூமியை மையமாகக் கொண்டே சூரியன் உட்பட இதர கோள்களும் இயங்குவதாக கருதிக் கொண்டிருந்தது. அதாவது தட்டையான பூமியை, சந்திரன், புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை சுழன்று வருவதாக நினைத்தனர். இவை என்னவென்பதை புரிந்துகொள்ள சிறிதும் முயற்சிக்காமல், வானங்களாக குர்ஆன் உருவகப்படுத்திவிட்டது.

குர்ஆனில் நவீன அறிவியல்பற்றி முன்னறிவிப்புகள் இருக்கிறன்ற முல்லாக்களின் வாதம் அபத்தமானது மட்டுமல்ல வடிகட்டிய அயோக்கியத்தனமானது.


தஜ்ஜால்