Monday 3 June 2013

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 5

..அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்'…
புகாரி 4679

என்று அபூபக்கரும், உமரும், ஸைத் இப்னு ஸாபித்திடம் கெஞ்சுகின்றனர். ஸாபித் தொகுக்கவில்லையானால் குர்ஆனின் பெரும் பகுதி போய்விடும் என்பது அபூபக்ர் மற்றும் உமரின் கருத்து. குர்ஆன் தொகுக்கப்பட்ட காலத்தில் அதன் பெரும்பகுதியை எவருமே அறிந்திருக்கவில்லை என்பதே இதன் பொருள். குர்ஆன் முஹம்மதின் தோழர்களின் மனதில் பாதுகாப்பாக இருந்தது என்ற வாதம் பொய்யல்லவா?

முஹம்மதின் பின்னால் ’வால்’பிடித்து நடந்த அபூபக்கருக்கும், உமருக்கும் குர்ஆனைத் தொகுக்கக் கூடிய அறிவு ஏன் இல்லாமல் போனது? உமரின் ஆலோசனைகள் வஹீயாக, அல்லாஹ் மறுஒலிபரப்பு செய்த கதைகளை நீங்கள் அறிவீர்கள். முஹம்மது உமரைப்பற்றி கூறும் பொழுது,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது என்னுடைய இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் இப்னு கத்தாப் அவர்கள் தாம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி 3469

இத்தகையவரின் கல்லெறி தண்டனை பற்றி வசனம் குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதை முன்பே பார்த்தோம். அவரது குர்ஆன் அறிவை மற்றவர்கள் அங்கீகரிக்கவில்லை போலும்!  கல்லெறி தண்டனை குர்ஆனில் இடம் பிடிக்க முடியாமல் போனதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்வோம்.

Ibn ‘l-Daris reports a tradition in the work Fadil l-Quran from Ya`la b. akim from Zaid b. Aslam that `Umar addressed the people and said: “Do not have doubts about the rule of stoning for it is the truth. I was tempted to write it into the Quran and consulted Ubayy b. Ka`b who said: “Did you not come to me when I was still studying it with the Prophet (s). You then hit me on the chest and said: “You study the verse of stoning whilst they cohabit with each other like donkeys do.” Ibn ajr said this was an allusion to the fact that the recitation was removed because of controversy.

(உமர் மக்களிடையே பேசும் பொழுது கூறினார், கல்லெறி தண்டனையைப்பற்றி சந்தேகிக்கவேண்டாம். நான் அதைக் குர்ஆனில் எழுத விருப்பம் கொண்டு உபை பின் கஅப் ஆலோசித்த பொழுது, அவர் கூறினார், ”நான் இதை அல்லாஹ்வின் தூதருடன் இருந்து கற்றுக் கொண்டிருந்த பொழுது நீங்கள் வரவில்லை.  நீங்கள் கல்லெறி தண்டனையைப் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் அதேவேளையில், அவர்கள் அங்கே கழுதைகளைப் போல் ஒருவரையொருவர் புணர்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று என் மார்பில் தாக்கிவிட்டு கூறினீர்கள். கருத்து வேறுபாட்டினால் நீக்கப்பட்ட வசனத்திற்கு இது எடுத்துக்காட்டு என்று இப்ன் ஹஜ்ர் கூறினார்.)

But the statement that `Umar reasoned that this was an ahad tradition is to be rejected because it has been authentically established that he received this directly from the Prophet (s) himself.  l-hakim reports by way of Kathir b. Salt who said: ‘Zaid b. Thabit and Said b. l-As who used to record the Quran, came across this verse, and Zaid said: AI heard the Prophet (s) say:”If a married man or woman fornicates, stone them without hesitation” Umar then said: “When it was revealed I approached the Prophet (s) and said: Must I write this down?” But he seemed to dislike that.

Al-Itqan fi Ulum al-Qur’an  by Jalaluddin Suyuti

ஆயினும், தான் விரும்ய ’ரஜ்கி’ (சாகும்வரை கல்லால் எறிந்து கொல்வது) நடைமுறையில் கொண்டு வந்தார். கருத்து வேறுபாட்டினால் அல்லாஹ்வின் வார்த்தை குர்ஆன் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டுகிறது என்றால் இதற்கு நேரெதிராக சேர்க்கப்பட்ட வசனங்களும் இருக்க வேண்டும்! குர்ஆன் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பு புத்தகம் என்பதற்கு இதைவிட வேறு ஆதரங்கள் தேவையில்லை!

இன்று இஸ்லாமிய நடைமுறையிலிருக்கும் ’ரஜ்கி’ சட்டநடைமுறை மீது மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் இருக்கின்றனர். ’ரஜ்கி’யைப்பற்றி அடிபணிந்தோர் சங்கம் (Submitters)  கூறுவதைப் பார்க்கலாம்.

ஹதீஸ் & சுன்னத்தும் அல்லாஹ்வுடைய சட்டமும் எதிரெதிரில்
குர்ஆனிய கட்டளையானது, விபச்சாரம் செய்தவர்களை நூறு கசையடி மூலம் தண்டிக்கும்படி நமக்கு கட்டளையிடுகின்றது. விபச்சாரத்திற்கு எதிரான இந்த சட்டம் “மிகத் தெளிவாக” இருக்கின்றது என்று கூறிய பின்னரும்.முஸ்லிம்கள் தங்களைப் படைத்தவரை பின்பற்றவும் மேலும் அவருக்கு கீழ்படியவும் செய்கின்றனரா? இல்லை.

முஸ்லிம் “அறிஞர்கள்” குர்ஆனிய சட்டம் தெளிவானதாக இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தனர்!!! அவர்கள் விபச்சாரம் செய்த திருமணம் ஆனவர்களின் நிலை குறித்து குர்ஆனில் விளக்கப்படவில்லை என்றும், அதனால்தான் குர்ஆனை தெளிவுபடுத்த அவர்களுக்கு ஹதீஸ் அவசியம் என்றும் கோரினர்!!!

وَفَرَضْنَهَا وَأَنزَلْنَا فِيهَا ءايَتٍ بَيِّنَتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

فَاجْلِدُوا كُلَّ وَحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْاءخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ

நாம் இறக்கி அனுப்பிய, மேலும் நாம் சட்டமாக விதித்துள்ள ஒரு சூரா. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, தெளிவான வெளிப்பாடுகளை அதனில் நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.


விபச்சாரம் செய்பவள் மற்றும் விபச்சாரம் செய்பவன் ஆகிய அவர்கள் ஒவ்வொரு வருக்கும் நீங்கள் நூறு சவுக்கடிகள் கொடுக்க வேண்டும். கடவுள் மீதும் மற்றும் இறுதி நாளின் மீதும் நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், கடவுள்-ன் சட்டத்தைச் செயல் படுத்துவதை விட்டும் அனுதாபத்தால் நீங்கள் ஊசலாடாதீர்கள். மேலும் நம்பிக்கையாளர்களின் ஒருகூட்டம் அவர்களுடைய தண்டனையைக் காணட்டும்.*
அல்-குர்ஆன் 24:1-2

பரம்பரை வழக்கங்கள் மற்றும் சைத்தானின் வசீகரிப்பு ஆகியவற்றால் செயலற்றுப்போன “முஸ்லிம்” அறிஞர்கள், திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால், அதற்கு தண்டனையாக “கல்லெறிந்து கொல்லுதலை” ஏற்படுத்திவிட்டனர்!!!
Submitters தளத்திலிருந்து…

அபூபக்ர், உமர், ஸாபித் இவர்களில் எவரும் முழுமையாக அறிந்தவர்களோ மனனம் செய்தவகளோ இல்லை. உமர் தனது குர்ஆன் அறிவைப்பற்றி கூறுவதைக் காண்போம்.

உமர் (ரலி) கூறினார்
எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள் உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார்
புகாரி 5005.

விபச்சார குற்றத்திற்கு கல்லெறிந்து கொல்வது என்ற பைபிள்-புதிய ஏற்பாட்டின் காலத்திற்கும் முந்தைய நடைமுறையை கொண்டுவந்து, முஹம்மதின் கட்டளைகளை காற்றில் பறக்கவிட்டனர்.

முஹம்மதின் காலத்தில் அவருக்கு எழுத்தர்களாக நாற்பதிற்க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். அலீ இப்ன் அபூதாலிப், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் அப்துல்லா இப்ன் மஸ்வூத் போன்ற பல எழுத்தர்களில் ஒருவர்தான் ஸைத் இப்னு ஸாபித்.

இவர்களில் முஹம்மதை சிறுவயது முதல் பின் தொடர்ந்து வரும் அலீ இப்ன் அபூதாலிபை மிக எளிமையாக புறம்தள்ளிவிட்டனர். அவரும் முஹம்மதின் எழுத்தர்களில் ஒருவராக இருந்தவர். குர்ஆனை, முஹம்மதிற்கு வஹீ(!) வந்த வரிசைப்படியே அதன் காரணத்தையும் சேர்த்து தப்ஸீர் வடிவில் தொகுத்திருந்தார். அவரை விட்டுவிட்டு சிறுபிள்ளையான ஸைத் இப்னு ஸாபித்தை தேர்தெடுத்தது ஏன்? என்றும், அலீயின் தொகுப்பை உமர் புறக்கணித்து விட்டதாகவும்  பங்காளிகள் ஷியா பிரிவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அலீயின் குர்ஆன் அறிவை பற்றிய சில அறிவிப்புகள்:

…Much has been transmitted from  Ali, for as Ma`mar reports, from Wahb b. `Abd Allah that  Abu al -Tufail said: "I was present when `Ali said in a sermon, "By God, ask me, for I am certainly able to answer all your questions. Ask me about the Book of God for I am most knowledgeable about every single verse therein. I know when it was revealed, at night or during the day, and where, on the mountains or the plains.”…

அலீ இப்ன் அபூதாலிப் கூறினார், நான் குர் ஆனிலுள்ள ஒவ்வொரு வசனத்தைப்பற்றியும் அதிகம் அறிந்தவன். எப்பொழுது அருளப்பட்டது என்பதை அறிவேன் இரவிலா அல்லது பகலிலா மேலும் மலையிம் மீது அல்லது சமதளத்திலா…

…Abu Nu`aim in his work al-H ulya quotes Ibn Mas`ãd as saying: "The Quran was revealed in seven dialects each of which has an exoteric as well as an esoteric meaning, and `Ali ibn  Abu Talib had full knowledge of both. …
இப்ன் மஸ்வூத் கூறினார், குர்ஆன் ஏழு மொழிவழக்குகளில் அருளப்பட்டது அது எளிமையானதாகவும் மறைபொருளைக் கொண்டதாகவும் இருந்தது, அலீ இப்ன் அபூதாலிப் இரண்டிலும் நிறைவான அறிவைப் பெற்றிருந்தார்

…Another report is from Abu Bakr b. `Ayyash from Nusair b. Sulaiman al-A¡masi from his father, who heard `Ali say: "I know full well the time and the circumstances around which every single verse was revealed. My Lord has indeed, granted me an intelligent mind, and an inquiring tongue."…

அலீ கூறினார், ஒவ்வொரு வசனம் அருளப்பட்ட நேரமும் சூழ்நிலையையும் மிக நன்றாக அறிவேன். நிறைவான அறிவையும், புரிந்துகொள்ளும் திறனையும் இறைவன் எனக்கு வழங்கியிருந்தான்..
Al-Itqan fi Ulum al-Qur’an  by Jalaluddin Suyuti

அபூபக்கர் குர்ஆனைத் தொகுப்பதை அறிந்ததும் அலீ தன்னிடமிருந்த தப்ஸீர் வடிவிலான குர்ஆனை வழங்கியதாகவும், அபூபக்கர் அதை நிராகரித்து விட்டதாகவும், அபூபக்கருக்குப்பின் உமரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தவைகளைப்பற்றி ஷியா தளம் கூறுவதைப் பார்க்கலாம்.

… நபியவர்களின் வபாத்திற்குப்பின் பல ஏடுகளாக காணப்பட்ட அல்குர்ஆனை ஒன்றாக மாற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டிய தேவை உணரப்பட்டது. அப்போது சஹாபிகளான உபை பின் கஅப், செய்து பின் தாபித் முதலானோர் தங்களால் ஒன்றுதிரட்டப்பட்ட குர்ஆனை கொண்டுவந்தார்கள். ஹஸரத் அலி அவர்களும், தான் ஒன்று சேர்த்த குர்ஆனைக் கொண்டு வந்து காண்பித்து, இதனை உலக முஸ்லிம்களுக்குரிய குர்ஆனாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டினார்கள். ஏனெனில் நபியவர்கள் போதித்த பிரகாரம் வியாக்கியானங்களும் விளக்கங்களும் அதில் அடங்கி இருந்தன. சாதாரணமாக ஒருவரின் உடலில் மற்றொருவரினால் ஏற்படுத்தப்படும் சிறிய கீறல் ஒன்றுக்கு அபராதம் என்ன? என்பதுபோன்ற மிக நுணுக்கமான, மிகச் சிறிய விடயங்களுங்கூட அதில் இருக்கின்றன என அவர்களால் உணர்த்தப்பட்டது. ஆனால் அன்றைய கிலாபத் பதவியிலிருந்தோர், அக்குர்ஆனின் விளக்கங்கள் தமக்குச் சாதகமாக அமைந்திருக்க வில்லை எனும் காரணத்தால் அதனை ஏற்க மறுத்து விட்டனர். ஹஸரத் அலி(அலை) அவர்கள் பலதடவைகள் அதனை வலியுறுத்திக் கூறினார்கள். அப்படிக் கூறியும் மறுத்து நின்ற அத்தோழர்களைப் பார்த்து 'ஆம், என்மீதிருந்த இப்பொறுப்பைச் செய்து விட்டேன். இதனால் மறுமையில் என்மீது பழிவந்து விடக்கூடாது என நான் அஞ்சினேன். எனவே இதனை மறுப்பதுதான் உங்களின் நிலைப்பாடு என்றால் இதன் பிறகு இக்குர்ஆனை நீங்கள் காணமாட்டீர்கள்;' எனக் கூறினார்கள்…


..When 'Umar ibn al-Khattab became the caliph of the Muslims, he asked Imam Ali (A.S.) to hand over the Holy Quran which he had compiled so that it could be altered according to the compilation of caliph's Quran. He said, "O Abul-Hasan! The Quran which you have compiled and you had brought it to Abu Bakr, bring it again so that we come to mutual agreement between us regarding it". Imam (A.S.) rejected this proposal and said, "This will never happen! I had brought that Quran to Abu Bakr to discharge my duty upon you and so that, you do not claim on the day of Judgement that you were unaware of that Quran or say (to me): O Ali! You never brought that Quran to us. Now the Quran I have shall be passed to the successors from my progeny". 'Umar asked, "Has any time been appointed for this Quran to become apparent (on the people)?" Imam (A.S.) said, "Of course, when al-Qaim from my progeny will make his appearance, he will enjoin people to that Quran". (Quran-o-'Itrat)…

மட்டுமல்லாது, அலீயின் தலைமையை வலியுறுத்தும் அந்நூரைன் மற்றும் அல்-விலைய்யா என்று இரண்டு அத்தியாயங்களை முன்வைத்தனர். அதற்கு பெரும்பாண்மையான ஷியாக்களிடையே பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்ற போதிலும் ஷியாக்களில் சில பிரிவினர் ஆதரித்தனர். இந்தியாவில், முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட Dabistan-i Madhahib ” என்ற மதச்சட்டபுத்தகத்தில் இவ்விரண்டு அத்தியாயங்களும் இடம் பெற்றுள்ளது.  பன்கிப்பூர் குர்ஆன் கையெழுத்துப் பிரதியில் காணப்படும் அல்விலைய்யா மற்றும் நுரைன் அத்தியாயங்களின் படம்.
இது அலீ ஆதரவு ஷியக்களாலேயே நிராகரிக்கப்பட்டது இதை விவாதிப்பதில் என்ன பயன் என்று தோன்றலாம். இடைச்சொருகல்களில் நமக்குத் தெரிந்த நிகழ்வு இது.

அறியாதவைகள் எத்தனையோ?

அலீயின் முக்கியத்துவத்தை உணர்த்த ஷியாக்கள், தற்பொழுதை குர்ஆனில் சில வசனங்களையும் முன்வைக்கின்றனர்.  

Tirmidhi and others report from `Amr b. Abu Salama, as do Ibn Jarir, and others, also from Umm Salama, that when the verse: iinnama  yurid Allah li yudhhiba `ankum l-rijsa ahl l-bait wa yutahhirakum tathiran (33:33) the Prophet (s) summoned Fatima, `Ali, Hasan, and Hussain.
Al-Itqan fi Ulum al-Qur’an  by Jalaluddin Suyuti
இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.” (33:33) என்று தூதர் குறிப்பிடுவது ஃபாத்திமா, அலீ, ஹசன் மற்றும் ஹுஸைனையே.
மேலும் குர்ஆனின் சரியான தொகுப்பை அதாவது அலீயின் தொகுப்பை இமாம் மஹ்தி எதிர்காலத்தில் கொண்டுவர இருக்கிறார் என்பதும் ஷியாக்களில் சில பிரிவினர்களின் நம்பிக்கை. சரி, அலீயிடம் இருந்த குர்ஆன் தொகுப்பு எங்கே போனது?

இப்ன் மஸ்வூத் மிக நீண்ட காலமாக முஹம்மதுடன் இணைந்து அவருக்கு பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார் என்றும், முஹம்மதை ஏற்றுக்கொண்டவர்களில் ஆறாவது நபராக இருந்தார் என்கிறது இஸ்லாமிய ஆதாரங்கள்.
இப்ன் மஸ்வூதின் குர்ஆன் அறிவைப்பற்றிய சில ஹதீஸ்கள்.

  மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்துக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: அவர் நான் நேசித்துக கொண்டேயிருக்கும் ஒருவர். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களையே முதலில் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி 3806, 3808, 4999

ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்
எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். …
ஸஹீஹ் புகாரி 5000
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், குர்ஆனைத் தொகுத்த ஸைத் இப்னு ஸாபித்துடன் முரண்படுகிறார். காரணம் அவர்கள் குர்ஆனில் செய்த மாற்றங்களை விரும்பவில்லை. இவர் அபூபக்ர் மற்றும் உமர் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்ட பொழுது எவ்விதமான எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Ibn Abu  Dawud reports that Nakha  disliked: inserting the word `ushr, and the opening markers into the Quran, reducing its size, and inserting the names of the chapters. Once, on being presented with a copy of the Quran with its chapter names inserted he said: "Erase it, for Ibn Mas`ãd disliked this. ‘It is also reported that Abu l-`Aliya disliked inserting additional sentences into the Quran, and inserting chapter names, and opening and closing markers.

…குர்ஆனின் அத்தியாயங்களுக்கு தலைப்புகள் இடுவதையும்,  துவக்கம் மற்றும் முடிவிற்கான குறியீடுகளை,   குர்ஆன் வழங்கப்பட்ட பிறகும் இணைப்பதை இப்ன் மஸ்வூத் விரும்பவில்லை. புதிதாக வார்த்தைகளை இணைப்ப்பதையும் துவக்கம் மற்றும் முடிவிற்காக குறியீடுகள், அத்தியாயங்களுக்கு தலைப்புகளைச் சேர்ப்பதை அபூ அலீயா விரும்பவில்லை..

குர்ஆனில் எந்த விதமான மாற்றங்களையும் செய்யக் கூடதென்பதுதான் இப்ன் மஸ்வூதின் நிலைப்பாடு. இத்தகையவரது தொகுப்பில் குர்ஆனின் தோற்றுவாயாக உள்ள அல் ஃபத்திஹா, அல் நாஸ் மற்றும் அல் ஃபலக் ஆகிய அத்தியாயங்கள் இடம் பெறவில்லை. இத்தகவல் முஸ்னத் அஹ்மத், தபரானீ போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

குர்ஆனை முஹம்மதிடமிருந்து நேரடியாகவே கேட்டறிந்த அவரது தோழர்கள் அலீ, இப்ன் மஸ்வூத், இப்ன் அப்பாஸ் … போன்ற பலர் குர்ஆனைத் தொகுத்திருக்க,  இவர்களை, குர்ஆனை மறுசீரமைக்கும் குழுவில் ஏன் இணைத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.
இப்ன் மஸ்வூதிற்கும் உஸ்மானுக்கும் சுமூகமான உறவு இருக்கவில்லை.  உத்மானின் செயலை அவர் விரும்பவில்லை.
"Uthman burned the rest of the copies which were in the hands of the people because they disagreed on the (correct) reading and they fought among themselves. When they came to take ibn Mas’ud’s copy to bum it, he told them, ‘I know more than Zayd ibn Thabit (whom ’Uthman ordered to collect the copies of the Qur’an).’ ’Uthman wrote to ibn Mas’ud asking him to submit his copy for burning."
Al-Itqan fi Ulum al-Qur’an  by Jalaluddin Suyuti


....அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்....

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு onlinepj.com

இப்ன் மஸ்வூத் உஸ்மானின் அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்பட்டார் என்பதுதான் உண்மை.  இப்ன் மஸ்வூதிற்கும் உஸ்மானிற்கு இடையே நிகழ்ந்த உரையாடலை கவனியுங்கள்.

Abdullah Ibn Masood lived to the time of Caliph Uthman. It was during this era that he retired from his post and returned to Madinah. When he was sick and on his death-bed, Uthman came to visit him and said, ‘What is your ailment?’ ‘My sins.’ ‘And what do you desire?’ ‘The mercy of my Lord.’ ‘Shall I not give you your stipend which you have refused to take for years now?’ ‘I have no need of it.’ ‘Let it be for your daughters after you.’ ‘Do you fear poverty for my children? I have commanded them to read Surah al-Waqiah every night for I have heard the Prophet   saying, “Whoever reads Al-Waqiah every night shall not be afflicted by poverty ever.” 
Inter-islam.org

உஸ்மானின் அரசாங்கம் வழங்கிய உதவித் தொகையை நிராகரித்ததுடன், இப்ன் மஸ்வூத், மரணப்படுக்கையில் இருக்கும் வேளையில், உஸ்மான் வலியவந்து உதவித் தொகையை மீண்டும் வழங்க முற்படும் பொழுதும், அதை ஏற்க மறுக்குமளவிற்கு, கோபம் கொள்ள என்ன காரணம் இருக்க முடியும்?

இப்ன் மஸ்வூத், உபா பின் கய், லீ இப்ன் அபூதாலிப், இப்ன் அப்பாஸ், அபூ மூஸா அல் அஷ்ரி, அல் மக்தத் இப்ன் அல் அஸ்வத், அபூ ஹுதைஃபா, ஆயிஷா, … போன்றவர்களின் பதினைந்து முதன்மைப் பிரதிகளும், அதுவல்லாமல் எண்ணற்ற இரண்டாம் நிலைப் பிரதிகள் இருந்துள்ளது. பெரும் குழப்பமான சூழலில், உத்மான், தனது தொகுப்பைக் அதிகாரபூர்வமானதாக அறிவித்து, மற்றவைகளை எரிக்க உத்தரவிடுகிறார். ஏற்கெனவே உள்ளவைகளுடன் உத்மானின் தொகுப்பு இணங்கியிருந்தால் அவைகள் புழக்கத்தில் இருந்திருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தப் பகுதியில் நான் கூறியவைகளை அறிஞர் பீஜே தொகுத்து வழங்குகிறார்.
ஹப்ஸாவிடமிருக்கும் குர்ஆனை பிரதி எடுப்பதாகக் கூறிய உத்மான், குறைஷிகளின் மொழிவழக்கில் பதிவு செய்ய உத்தரவிட்டார் என்பதை முன்பே பார்த்தோம். அதிலிலுள்ள ஒரு எழுத்தை மாற்றுவதுகூட குர்ஆன் திருத்தப்பட்டது என்ற பொருளைத் தந்துவிடும். குர்ஆன் எவ்வாறு இருக்க வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டியது யார்? அல்லாஹ்வா? உஸ்மானா?

குர்ஆன் மனிதர்களால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு புத்தகம் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் வேண்டுமா?  குர்ஆன் கடவுளிடமிருந்தே, அது அவ்வாறே பாதுகாக்கப் படுகிறது என்பதுவும் ஒரு நம்பிக்கை மட்டுமே!


தொடரும்….

Facebook Comments

16 கருத்துரைகள்:

Ant said...

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு குரானை காட்டிதான் தங்கள் அதிகாரத்தை மக்கள் மீது நிலைநாட்ட முடியும் என்ற வலுவான எண்ணம் இருந்தது தெளிவாகிறது. தங்கள் அதிகாரத்திற்கே ஆப்பு வைக்கும் சட்டங்கள் குரானில் விட்டு வைக்க முடியுமா? அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரோ அவர்கள் சொல்வது தானே சட்டம்! முகமது சொன்னதுதானே சட்டமானது அவருக்கு பின் அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை கையில் எழுத்துக் கொண்டனர். வித்தியாசம் முகமது தனக்கு சாதகமான சட்டத்தை அல்லாவின் பெயரில் உருவாக்கினார் பின்வந்தவர்கள் அந்த சட்டத்தில் தங்களுக்கு சாதகமானவற்றை வைத்துக் கொண்டு மற்றவற்றை செல்லதாக்கி நீக்கி (rebel) விட்டனர் ஏனெனில் புதிய சட்டங்கள் அல்லாசாமி வஹியாக முகமது வழியாக மட்டுமே இறக்குவார் என்ற சட்ட பிரிவு புதிய சட்ட பிரிவை அக்கீகரிக்க வைப்பதில் சிக்கல்களை தோற்றுவித்ததால் சட்டப்பிரிவை மாற்றியும் நீக்கியும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டனர். வல்லான் வகுத்ததே சட்டம்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

// முகமது தனக்கு சாதகமான சட்டத்தை அல்லாவின் பெயரில் உருவாக்கினார் பின்வந்தவர்கள் அந்த சட்டத்தில் தங்களுக்கு சாதகமானவற்றை வைத்துக் கொண்டு மற்றவற்றை செல்லதாக்கி நீக்கி (rebel) விட்டனர் // குர்ஆனிலுள்ள முன்னுக்குப்பின் முரணான சட்டங்களும் அனுமதிகளுமே இதற்கு உதாராணம்.

பல்சுவை தகவல் களஞ்சியம் said...

கிருஸ்தவ ஆண்களுக்கு பைபிளின் எச்சரிக்கை...!!!

தான் தாடி வளர்க்க வேண்டும் பைபளில் சொல்லி இருப்பது கூட தெரியாமலோ தெரிந்தும் காணாமலோ கிருஸ்தவர்கள் ஒரு முஸ்லிம் தாடி வாளர்ப்பதை சகிக்க முடியாமல் அவதி படுவதை காணலாம். ஒரு சாதாரண கிருஸ்தவன் எப்படி போனாலும் அதை போதிக்கும் மத போதகர்களே இந்த பைபளின் வார்த்தைகளை பின்பற்றுவதில்லை..!!! என்பதே கவலைக்குரிய விடயம் எப்படி போனாலும் முஸ்லிம்களின் தடியை விமர்சிக்கும் கிருஸ்தவர்கள் இனி யோசிக்க வேண்டும்...!!!!

லேவியராகமம்-21 அதிகாரம்5.

அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
They shall not make baldness upon their head, neither shall they shave off the corner of their beard, nor make any cuttings in their flesh.

இன்று உலகில் யார் இதை பின்பற்றுகின்றார்கள்...????

பல்சுவை தகவல் களஞ்சியம் said...

கிருஸ்தவ பெண்களே உங்களில் யார் பைபளில் சொல்வதை பின்பற்றுகின்றீர்கள்...??

தங்களது தலையை மூட வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கும் போது தலை எப்படி போனாலும் தன் உடம்பையாவது மூடுகின்றர்களா..? தன்னை கிருஸ்தவன் என்றும் கிருஸ்தவ நாடுகள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் ஏன் இதை சிந்திப்பதில்லை...!!!! பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு பைபளின் போதனையை புறக்கணிப்பதை இன்று எம்மால் காண முடிகின்றது...

எனவே உங்கள் இறைவனது கட்டளைகள் வெறுமனே புத்தகத்தில் மட்டும் தானா..?

I கொரிந்தியர்-11 அதிகாரம்6.

ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered.

இன்று உலகில் யார் இதை பின்பற்றுகின்றார்கள்...????

சிவப்புகுதிரை said...

நன்பர் சை. பைஜுர் ரஹ்மாண் பாய்..உங்களின் கேள்வி நியாயமானது ஆனால் இதை நீங்க கிருத்துவர்களிடம் கேட்க வேண்டியது தவருதலாக இங்க கேட்கின்றீர்கள்...கட்டுரைக்கு விமர்சனம் இருந்தால் சொல்லவும்.....

அப்பறம் என்ன பாய் நீங்க சுன்னத்த கடைபுடிக்காம இருக்கிங்க தாடி வைக்கல போட்டோல....

Anonymous said...

http://www.youtube.com/user/icschennai

Raja said...

Mrசை. பைஜுர் ரஹ்மான். christiand and other religions are not fools like muslims. They are using theire sixth sense . That's why they never followed unwanted rules

ஆனந்த் சாகர் said...

Raja,

You have rightly said. Except for Muslims all other religious people use their brain and do not like to follow barbaric teachings in their religious texts. All religions but Islam are evolving with passage of time. That is the reason Muslims are less evolved humans than rest of the humanity.


பாபு said...

இந்த தளத்தின் பதிவுகளை இரண்டு மாதமாக முயற்சித்து படித்துவிட்டேன். மதங்களுக்கு எதிர்காலமில்லை. தஜ்ஜால் என்பவருக்கு எனது வாழ்த்துகள். மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். இதன் ஆசிரியர் யார்? சந்திக்க இயலுமா? எனக்குள் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும். நேரில் சந்தித்து உரையாடலாமா? அல்லது இத்தளத்திலேயே செய்யலாமா?
நன்றி

நந்தன் said...

பாபு அவர்களே உங்கள் மின்னஞ்சலை கீழுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

iraiyillaislam@gmail.com

Ant said...

//அறிஞர் பீஜே தொகுத்து வழங்கிய வீடியோ பதிவுபடி குரானில் 112 அத்தியாம் என்று கூறியது அதை தொகுத்தவற்றில் ஒருவர்தாம்(என்று கூறுகிறார்). மட்டுமல்லாது இப்பொழுது உள்ள குரானில் இருக்கும் அத்தியாயம் என்பது அது இறங்கிய வரிசைப்படி அல்ல என்றும் அத்தியாயம் மாறுபட்ட வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அறிஞர் பீ ஜே ஒத்துக் கொள்வதை ‌காணொலியில் அறிய முடிகிறது இதில் குரான் பாதுகாக்க பட்டதாம் அதுவும் ஹூபல் அல்லாவால். நம்மூர் அய்யனார் சுடலைமாடசாமிகளே பரவாயில்லை.

தஜ்ஜால் said...

வாருங்கள் பாபு,

நன்றிகள். நந்தன் அவர்கள் கூறுவதுபோல இறையில்லா இஸ்லாமைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

அறிஞர் பீஜே தொகுத்து வழங்கிய வீடியோவில் அவரது விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதையும் பாருங்கள்.

பாபு said...

நன்றி! நந்தன் மற்றும் தஜ்ஜால் அவர்களுக்கு. நான் இஸ்லாத்தின் சிலவற்றில் முரண்படுவது போல உங்களுடனும் முரண்படுகின்றேன். நான் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிவதினால் எனக்கு வேலைப் பளு அதிகம். இருந்தாலும் மிக விரைவில் எனது மின்னஞ்சலுடன் உங்களைத் தொடர்புகொள்கிறேன்

Unknown said...

தஜ்ஜால்
//குர்ஆன் கடவுளிடமிருந்தே, அது அவ்வாறே பாதுகாக்கப் படுகிறது என்பதுவும் ஒரு நம்பிக்கை மட்டுமே! //

இந்த வெற்று நம்பிக்கையினால்தான் இன்று கலவரங்களும் கொலைகளும் மதவெறித்தனமும் நடந்த வண்ணமாக‌ இருக்கின்றன. கற்பனைக்கே இந்த வெறித்தனம் என்றால்....? மூடத்தனங்களை ஒழிக்க இன்னும் நாம் பாடுபடவேண்டும்..

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,

//இந்த வெற்று நம்பிக்கையினால்தான் இன்று கலவரங்களும் கொலைகளும் மதவெறித்தனமும் நடந்த வண்ணமாக‌ இருக்கின்றன.// உண்மைதான்.

நமது இணையதள பிரச்சாரம் போதுமானதாகத் தெரியவில்லை. நம்மைப் போன்றவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.