Wednesday 19 December 2012

துப்பாக்கி


பாகிஸ்தானிலுள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த சஜ்ஜத் ஹுசைன் முகம்மது நபியை விமர்சனம் செய்தார் என்று பிப்ரவரி 2011-ல் பாகிஸ்தான் அரசு வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தது. ஏறக்குறைய 1½ ஆண்டுகள் சிறையில் துன்பப்பட்ட இவரை பாகிஸ்தான் நீதிமன்றம் தகுந்த ஆதாரமில்லை என்று அக்டோபர் 19, 2012 ல் விடுதலை செய்தது.

          பாகிஸ்தான் தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொண்டாலும் இசுலாமிய அடிப்படைவாதச் சட்டங்களைக் கொண்ட ஒரு இசுலாமிய நாடாகத்தான் உள்ளது. பாகிஸ்தானின் நீதிமன்றமும் இசுலாமிய அடிப்படைவாதக் கருத்துக்களை மீறி எந்தத் தீர்ப்பும் வழங்குவதில்லை. பாகிஸ்தான் பீனல்கோட் பிரிவு 295-C ன்படி ஏராளமானோர் மதவிரோத குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நீதிமன்றமே குற்றம் நிறுபிக்கப்படவில்லை என்று சஜ்ஜத் ஹுசைனை விடுதலை செய்துவிட்டது. பிறகென்ன நல்லதுதானே என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்

          தாங்கள் குற்றம்சுமத்தி வழக்கு தொடர்ந்துவிட்டால் மறுபேச்செல்லாம் பேசாமல் தண்டனை வழங்கவேண்டியதே நீதிமன்றத்தின் வேலை என்பதுதான் இசுலாமியர்களின் கொள்கை. அப்படியிருக்க நீதிமன்றம் குற்றம் நிறுபிக்கப்படவில்லை என்று வடுதலை செய்யலாமா? நேரடியாக முடியாவிட்டாலும் நயவஞ்சகமாகவாவது கொலை செய்வதுதானே ஜிகாத்தின் மரபு. விடுவார்களா அண்டைவீட்டார்கள்? வெறியடைந்த பக்கத்து வீட்டு இளைஞர்கள் ஷேக் ஸீசன், உவைஸ் அகமது என்ற இருவரும் சஜ்ஜத் ஹுசைன் கடைத்தெருவில் தேனீர் அருந்திக் கொண்டிருக்குப்போது சுட்டுக்க கொன்றனர். கொலை செய்த இருவரும் தலைமறைவாக தப்பி ஓடிடவில்லை. அல்லாஹு அக்பர் ! நாரே தக்பீர்!! என்று முழக்கத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

 


           
மலாலா யூசுப்சாய் என்ற பாகிஸ்தானின் 14 வயது சிறுமி இசுலாமியப் பெண்கள் கல்வி உரிமைக்கான போராளியாக பிரச்சாரம் செய்ததால் இசுலாமிய தீவிரவாத அமைப்பினரால் சுடப்பட்டார். கழுத்தில் குண்டுபாய்து குற்றுயிராக இருந்த இந்தச் சிறுமியை இங்கிலாந்து அரசு தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு மருத்துவம் செய்ததால் பிழைத்துக்கொண்டார்.
          இசுலாத்தை விமர்சிப்பவர்களை வெட்டுவதும் கொலை செய்வதும் ஒரு புதிய செய்தியில்லை. 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மதுவால் துவக்கிவைக்கப்பட்ட இந்த கொலைவேறி இசுலாம் இருக்கும்வரை தொடரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இக்கொலையில் சில குறிப்பான விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசிமாகிறது.

          ஷேக் ஸீசன், உவைஸ் அகமது இருவரும் காவல் துறையினரிடம் சரண்டைந்ததிலிருந்து அவர்கள் தீவிரவாத அமைப்புகளில் செயல்படுபவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ளலாம். சாதாரண மக்களாக வாழ்பவர்கள்தான். கடையல்லூரில் துராப்ஷா என்பவர் தான் செய்யாத குற்றத்திற்காக தாக்கப்பட்டதையும் நாம் அறிவோம். அங்கு திரண்டு தாக்கிய நூற்றுக்கணக்கானோரில் சில பத்து பேர்கள் வெறிகொண்ட அமைப்பில் உள்ளவர்கள் போக மீதமுள்ளவர்கள் சாதாரண மக்கள்தான். அமெரிக்காவிலுள்ள சாம் பாசில் என்பவர் வெளியிட்ட வீடியோவை தடைசெய்ய போராடிய மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களில் பல இலட்சம் பேர்களும் சாதாரண மக்கள்தான். நடந்தது என்னவென்று கொஞ்சமும் அறியாது, இசுலாத்தை இழிவுபடுத்திவிட்உடார்கள் என்ற ஒற்றைவரியில் தீவிரவாதிகளால் வெறியூட்டப்பட்டு வீதிக்கு வந்து வன்முறையில் ஈடுபட்ட பலர் சாதாரமக்கள்தான். ஆனால் இவர்களால் பாதிக்கப்படுவது கருத்துச் சுதந்திரமும் அப்பாவிகளும்தான். இது எப்படி சாத்தியமாகிறது?

          இந்த உலகவாழ்வு கொஞ்ச நாளைக்கே உரிய அற்ப வாழ்வு; இறந்த பிறகான சொர்க்கமே நிரந்தரமான அழிவில்லாத வாழ்வு; இசுலாத்திற்காக உயிரைக்கொடுப்பவர்கள் (ஜிகாத் போராளிகள்) எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு நேரே சொர்க்கம் செல்வார்கள். சிறுவயதிலிருந்தே இப்படி சொர்க்க வெறியூட்டப்பட்டு வளரும் இவர்கள் இசுலாத்தை இழிவுபடுத்திவிட்டார்கள்என்ற ஒற்றைவரிக்கு மதிகெட்டு அடிமையாகி கொலையையும் எளிதாக செய்கின்றனர். அதனால்தான் ஷேக் ஸீசன், உவைஸ் இருவரும் தாம் தூக்கில் போடப்படுவோம் அல்லது ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவோம் என்று நன்றாக புரிந்திருந்தும் கொலை செய்துவிட்டு காவல்துறையினரிடம் சரண்டைந்துள்ளனர். சொர்க்க வாழ்வு நிரந்தரமானதல்லவா!
     
 மலாலா யூசுப்சாய் இவர்கள் போட்டுவைத்துள்ள ஹிஜாப், நிஹாப் என்ற எல்லாத்தையும் போட்டு தன்னை மூடிக்கொண்டுதான் கல்வி உரிமைக்காக பிரச்சாரம் செய்தார். இசுலாம் பெண்களுக்கான கல்வி உரிமையை வாரிவழங்குகிறது என்று இவர்கள் வாய்கிழிய கத்துகின்றனர். ஆனால் கல்வி உரிமையைக் கேட்ட சிறுமியை சுட்டுக்கொள்ள முயற்சித்துள்ளனர். இதிலிருந்து இசுலாம் வழங்கும் பெண்களுக்கான கல்வி உரிமையின் இலட்சனம் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. தாங்கள் வைத்துள்ள அளவுகோலுக்கு மேலாக எந்தப் பெண்ணாவது உரிமை அது இதுன்னு பேசினால் துப்பாக்கிதான் பேசும் என்கின்றனர். பிற மதத்து பெண்கள் இப்படி ஏதாவது கூறினால் இசுலாத்தைப்பற்றி புரிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்று தடலடியா மறுத்துவிடலாம். ஆனால் இசுலாமியப் பெண்ணே பேசினால் சுட்டுத்தள்ளுவதைத் தவிர வேறு மார்க்கம் மார்கத்தில் இல்லை.







          இந்தியாவிலுள்ள இசுலாமிய அமைப்புகள் எங்களுக்கும் இதுபோன்ற வன்முறைக்கும் தொடர்பில்லை என்று சாதிக்கின்றனர். தமிழகத்தில் நடந்த சில கொலைகளிலும், கோவை மும்பை, குண்டுவெடிப்பிலும் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் சாதிக்கின்றனர். கடையநல்லூர் துராப்ஷா  தாக்கியவர்கள் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தை சேர்ந்தவர்கள்தான் என்பதையும், ததஜ விலிருந்தபோது வெளிநாடுகளில் பணம் வசூலித்து சுருட்டிக்கொண்டு ஓடிய  சைபுல்லா ஹாஜா  துராப்ஷா மீதான தாக்குதலுக்கு தலைமை ஏற்றதும் நாம் நன்கு அறிவோம். மதவெறி தலைக்கு ஏறினால் எல்லா திருட்டுகளையும் மறைத்துவிட்டு தங்களுக்குள் கூட்டுச்சேர்ந்து கொள்வதிலும் இவர்கள் சளைத்தவர்களில்லை. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான மூவர் பி.ஜைனுலாபிதீனின் பேச்சுகளால் வெறியூட்டப்பட்ட இளைஞர்களால்தான் அச்சம்பவம் நடந்தது என்று நக்கீரன் வார இதழில் வாக்குமூலம் கொடுத்ததையும் நாம் அறிவோம். இவர்களுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்றால் இவர்கள் இவைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? போராட்டம் வேண்டாம். தங்களின் பத்திரிக்கைகளில் செய்தியாகவேணும் தந்து கண்டித்திருக்கலாமே.
 
துப்பாக்கி என்ற தமிழ் திரைப்படத்தில் இசுலாமியன் என்றாலே தீவிரவாதிதான் என்பதுபோல் கதை உள்ளதாக கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் சாம் பாசில் வெளியிட்ட வீடியோவிற்காக வெடிகுண்டுகள் வைத்து அப்பாவிகள் பலியானதை செய்திகளாக வெளியிட்டு பெருமையாக அகமகிழ்ந்து போனார்கள். அதுபோல கோவை குண்டுவெடிப்புகளில் பலியானது உங்கள் எதிரிகளா அல்லது அப்பாவி மக்களா? இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இப்படிப்பட்ட குண்டுவெடிப்புகளில் அருகிலிருக்கும் இசுலாமியர்களும்தானே பலியாவார்கள் என்று ஒரு தீவிர இசுலாமியனிடம் கேட்டதற்கு, அப்படி இறப்பவர்களும் இசுலாத்திற்காக உயிர் துறந்த தியாகிகளாக உடன் சொர்க்கம் செல்வார்கள் என்று பதில் கூறினார்இதில் தெரிகிறது உங்களின் மதவெறி. சாதாரண மக்கள் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு வக்கிரமாக மதவெறியை புகுத்துகின்றனர் என்பது புரிந்துகொள்ள முடியாதது அல்ல. நாமோ சாதாரணமக்களா தீவிரவாதிகளா என்று பிரித்தரிய முடியாது இசுலாமியர்களைக் கண்டாலே பயங்கொள்ள வேண்டியதாகிறது.

 நீங்கள் ஒரு சாதாரண இசுலாமியன்தான் என்றால் நான் அவனில்லை என்று ஒற்றைவரியில் சொல்லிவிடமுடியாது. அமைப்புகளில் திரட்டப்பட்ட சொத்துகளுக்கும், விரலை ஆட்டுவதா வேண்டாமா என்பதற்கும் அடித்துக்கொண்டு நாறும் இவர்கள் பின்னே அணி திரளக்கூடாது. அனைத்து மத மக்களுடனும் இணைந்து சாதாரணமாக வாழும் வாழ்க்கையிலிருந்து உங்களை திசை திருப்பி உங்களையும் நரபலி கொடுத்துவிடுவார்கள். இசுலாமியர்கள் அழிவது இசுலாமியர்களால்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

          இத் தளத்தில் வரும் அனைத்து கட்டுரைகளும் உங்களின் நூல்களில் உள்ளதைக்கொண்டு மிகவும் ஆதாரபூர்வமாக எழுதப்படுபவைகள். கருத்துகளை கருத்துகளால் வெல்ல முயற்சியுங்கள். முடியாவிட்டால் நாங்கள் நம்புகிறோம் என்று வணக்கவழிபாடுகளுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.

நந்தன்


Facebook Comments

11 கருத்துரைகள்:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
நல்ல பதிவு.மதம் கண்ணை மறைப்பதில் இஸ்லாமே முதல் இடம் என்பதால், நடு நிலை சிந்த்னையாளர்கள் இஸ்லாமை விமர்சிக்காமல் இருக்க முடியாது.இந்த இணையத்தில் இஸ்லாமிய கருத்து திணிப்பு அனைவரையும் எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.

இந்தியாவில் "நான் யோக்கியன்" என்பவர்கள் மூமின் பெரும்பானமை நாடுகளில் காஃபிர்கள் இரண்டாம தர குடிமக்களாய் நடத்துவதைக் கண்டுகொள்ள‌ மாட்டார்கள். யூதர்கள் மேல் இனவெறி பல பதிவுகளில் அதிர்ச்சி தருகிறது. ஹிட்லரையும் போற்றுகின்றார்.
அன்பு&அமைதி
அக்கால பாலியல் அடிமைகள்இரத்தப்பணம்,ஜிஸ்யாவை ஒரு சகோ நியாயப் படுத்தியதுமே இஸ்லாம் ஒரு தேவையற்ற விடயம் என புரிந்து விட்டது!!.செய்வது என்ன என தெரிந்தே செய்கிறார்!!!


தமிழ்நாட்டில் இந்த கருத்து திணிப்பு மிக அதிகம்.இதில் திரு பி.ஜேவின் பங்கு மிக அதிகம்!!!

எதையும் மதம் கொண்டே பார்ப்போம் என்பது நிச்சயம் நல்ல விளைவை ஏற்படுத்தாது!!

இதில் கசாப் பற்றி ஒரு புரளி!!!

இஸ்லாமிய கருத்து திணிப்பு இந்துத்வம் வளரவே உதவுகிறது ம்ம்ம்ம்ம்ம்

நன்றி!!!

தஜ்ஜால் said...

வணக்கம் நண்பர்.
ீஇஸ்லாமியர்களின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தும் அற்புதமான பதிவு.
நண்பர் சார்வாகனின் கருத்தை வழிமொழிகிறேண்.

தஜ்ஜால் said...

வணக்கம் நண்பர்.
ீஇஸ்லாமியர்களின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தும் அற்புதமான பதிவு.
நண்பர் சார்வாகனின் கருத்தை வழிமொழிகிறேண்.

தஜ்ஜால் said...

வணக்கம் நண்பர்.
ீஇஸ்லாமியர்களின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தும் அற்புதமான பதிவு.
நண்பர் சார்வாகனின் கருத்தை வழிமொழிகிறேண்.

Unknown said...

நண்பர் நந்தன்

நல்ல பதிவு.இஸ்லாமியர்கள் மத்தியில் பி.ஜே.ன் கருத்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.அது உண்மை என்றாலும் கூட அதன் ஆபத்தை உணராத அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் உண்மையே...

நந்தன் said...

பிஜேவின் கருத்துக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. தாலிபான்கள் வழி மதவெறியை ஊட்டி வருகிறது. தமிழகத்தில் இசுலாமியர்களை ஒழித்துக்கட்ட இந்த விரலை ஆட்டும் கும்பல் ஒன்றே போதுமானது

நந்தன் said...

சார்வாகன் அவர்களே இந்த இணையத்தில் என்று நீங்கள் குறிப்பிடுவது எதை?

கசாப் பற்றிய புரளி என்ன என்று சொன்னால் நலம்.

Anonymous said...

வணக்கம், குழந்தைகளுக்கு பொலியொ மருந்து கொடுத்தாலும் கொல்பவர்களை என்ன என்று சொல்வது?

Anonymous said...

குழந்தைகளுக்கு பொலியொ மருந்து கொடுத்தாலும் கொல்பவர்களை என்ன என்று சொல்வது?./////

குழந்தைகள் ஊனமுற்று போனாலும் பரவாயில்லை, மதம் ஊனமுற்று போகக்கூடாது என்று நினைக்கும் வெறியர்கள்.

நந்தன் said...

## குழந்தைகளுக்கு பொலியொ மருந்து கொடுத்தாலும் கொல்பவர்களை என்ன என்று சொல்வது?##

புரியவில்ல. விபரம் என்ன?

Anonymous said...

## குழந்தைகளுக்கு பொலியொ மருந்து கொடுத்தாலும் கொல்பவர்களை என்ன என்று சொல்வது?##

புரியவில்ல. விபரம் என்ன?##

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களை தாலிபன்கள். கொன்றார்கள் . இத்தகைய போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களாலேயே பின்லேடன் இருப்பிடம் கண்டு பிடிக்க பட்டதால்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=609764&Print=1