பறையோசையின்
தோழர் சாகித் ஒரு வீடியோவை யூடிப்பில் இணைத்துள்ளார். மேலே உள்ள அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு
கீழே உள்ள எனது கட்டுரையை படியுங்கள்.
பிஜே
அவர்கள் இங்கு இரண்டு விதமான தவறுகள் செய்துள்ளார். ஒன்று துல்கர்னைன் என்பவர் பயணம் செய்தது பற்றி அறிவியல் விளக்கம்
என்ற பெயரில் தவறான விளக்கம் தந்துள்ளார். அதனை பறையோசையின் தோழர் சாகித் உடைய வீடியோவின்
மூலம் புரிந்திருப்பீர்கள்.
இரண்டாவது தவறு,
இந்த குர்ஆன் வசனங்களுக்கு தவறான
பொருள் சொல்லியுள்ளார். இவர் கொடுத்துள்ள மொழிபெயர்ப்பும்
சரியானதா என்று பார்ப்போம்.
இவர் இதற்காக
எடுத்துக்கொண்ட குர்ஆன் வசனங்கள் அத்தியாயம் 18ல் 85, 86, 89, 90, 92, 93 ஆகிய வசனங்கள்.
அவரது மொழிபெயர்ப்பிலிருந்தே சரி பார்ப்போம்.
18: 85 – அவர் ஒரு வழியில் சென்றார்.
(ஃபஅத்பஹ ஷபாபன்)
18: 86 – சூரியன் மறையும்மிடத்தை அவர் அடைந்தபோது சேறு நிறைந்த தண்ணீரில் அது
மறைவதைக்கண்டார். அங்கே ஒரு சமுதாயத்தைக் கண்டார்….
18: 89 – பின்னர்
ஒரு வழியில் சென்றார். ( ஃதும்ம அத்பஹ ஷபாபன்)
18: 90 – முடிவில் சூரியன் உதிக்கும்
திசையை அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக்
கண்டார்….
18: 92 – (பிறகு)
ஓரு வழியில் தொடர்ந்து சென்றார். ( ஃதும்ம அத்பஹ ஷபாபன்)
18: 93 – இரண்டு மலைகளுக்கிடையே உள்ள
பகுதியை அடைந்தபோது அதற்கப்பால் எந்த பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக்
கண்டார்.
85, 86 ஆவது வசனத்தின்படி முதலில் பயணத்தை தொடங்கியது மேற்குத் திசை என்றாகிறது. காரணம்
அந்த வசனம்தான் முதலில் வருகிறது. அது மட்டுமல்லாது 85, 86 வசனங்கள் ஃபஅத்பஹ ஷபாபன் ஒரு வழியில் சென்றார் என்றும் 89, 92 ஆவது
வசனங்கள் ஃதும்ம அத்பஹ ஷபாபன் பின்னர் ஒரு வழியில்
சென்றார். என்றுமே வருகிறது.
ஆனால் பிஜே அவர்கள் முதலில் பயணத்தை
கிழக்கில் தொடங்கியதாக திரித்து பொருள் சொல்கிறார். அப்படியே எடுத்துக்கொண்டாலும் எந்த
திசையில் எவர் பயணம் செய்தாலும் பயணம் செய்த திசையிலேயேதான் போய்க் கொண்டிருப்பார்களேயொழிய
அவர்கள் திரும்பாமல் திசை மாறாது. இதனை விளக்கமாக வீடியோவில் பார்த்துவிட்டோம்.
89வது வசனமும் 92வது வசனமும் ஃதும்ம அத்பஹ ஷபாபன் என்றே உள்ளது. ஆனால் 89வது வசனத்திற்கு
பின்னர் ஒரு வழியில் சென்றார் என்றும், 92வது வசனத்திற்கு ஒரு வழியில்
தொடர்ந்து சென்றார் என்றும் தமக்கு வசதியாக மொழி பெயர்த்துள்ளார்.
92வது வசனத்தில் பின்னர் என்றச் சொல்லை எடுத்துவிட்டு தொடர்ந்து என்றச் சொல்லை தமது அறிவியல் கண்டுபிடிப்புக்கு
வசதியாக சேர்த்துக்கொண்டார்.
ஃதும்ம அத்பஹ ஷபாபன் என்றால் என்ன?
.கோவை திருக்குர்ஆன் அறக்கட்டளை ஆராய்ச்சி
மற்றும் பகுப்பாய்வு வெளியீடு. மொழி பெயர்ப்பாளர்கள் M. அப்துல் வஹ்ஹாப், கே.ஏ. நிஜாமுதீன்
மன்பயீ, ஆர்.கே. அப்துல் காதிர் ஆகியோர்
89 மற்றும் 92க்கு பிறகு ஒருவழியைப் பின்பற்றிச் சென்றார் என்றும்
இசுலாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் வெளியீடு.
மொழி பெயர்ப்பாளர்கள் ஏ. குத்புதீன் பாகவி, ஆர் அப்துர் ரவுஃப் பாகவி
89 மீண்டும்
அவர் புறப்பட்டார்
92 பிறகு
அவர் புறப்பட்டார் என்றும்
ஹாஜி முகம்ம்மது ஜான் லிட்டரரி
& சாரிட்டபிள் டிரஸ்ட் வெளியீடு. மொழி பெயர்ப்பாளர் டாக்டர் எஸ் முகம்மது ஜான்
89. பின்னர்
அவர் (மற்றும்) ஒருவழியைப் பின்பற்றிச் சென்றார்.
92. பின்னர்
அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.
---- என்றும் மொழிபெயர்த்துள்ளனர். ஒருவழியில்
சென்றார்; பிறகு ஒருவழியில் சென்றார் என்றும் வருவதைக்கொண்டு துல்கர்ணைன் ஒருபாதையில்
திரும்பாமல் செல்லவில்லை என்று பொருளாகிறது. ஆக குர்ஆனுக்கு தவறாக மொழிபெயர்தத்தும்
மட்டுமல்லாது அறிவியல் என்ற தவறான விளக்கத்தையும் கூறி பூமியின் வடிவம் உருண்டை என்று
குர்ஆன் கூறுவதாக பொய் சொல்லகறார்.
இந்த
வசனங்கள் மூலம், துல்கர்ணைன் மேற்கில் சென்று ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்றபிறகு அதாவது
தரைவழி முடிந்து கடல் ஆரம்பித்ததும் பயணத்தை நிறுத்திவிட்டு சூரியன் சேறுகலந்த கடலில்
மறைந்துவிடுகிறது என்று முடிவு செய்துவிடுகிறார். அவர் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து
பயணம் செய்திருந்தால் தரையில் சூரியன் மறைவதையும் கடலில் மறைவதையும் மாற்றி மாற்றி
பார்ந்துக்கொண்டே சென்றிருக்கவேண்டும். சேறு கலந்த நீரில் சூரியன் மறைவதாக ஒரு முடிவுக்கு
வந்திருக்க முடியாது. கீழுள்ள நபிமொழியைப் படியுங்கள்.
புகாரி: 3199
அபுதர்
அவர்கள் கூறியதாவது: நபி அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் “அது (சூரியன்)
எங்கு செல்கிறது என்று தெரியுமா?” என்று கேட்டார்கள்.நான் “அல்லாஹ்வும் அவனது தூதருமே
அறிவார்கள்” என்று கூறினேன். நபி அவர்கள், “அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு )
கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்ய செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாவதற்கு இறைவனிடம்)
அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒருநாள் ) அது சஜ்தா
செய்ய, அந்த சஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது கிழக்கிலிருந்து உதயமாவதற்கு
அனுமதி கேட்கும். அதற்கு அனுமதியளிக்கப்படாது. “வந்த வழியே திரும்பி விடு” என்று உத்திரவிடப்படும்.
அதன் படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று சொன்னார்கள். இதைத்தான் ‘சூரியன் தான்
நிலை கொள்ளும் ஓர் இடத்தைநோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளன் வல்லமை மிக்க
இறைவனின் நிர்ணயமாகும்’ என்னும் இறைவசனம் (36: 38) குறிக்கிறது” என்று சொன்னார்கள்.
அல்லாவின்
சிம்மாசனம் ஏழாவது வானத்தில் உள்ளது. சூரியன் கடலில் மறைந்தபிறகு ஏழாவது வானத்திற்கு
சென்றுவிடுகிறது என்றால், பூமி தட்டையாக இருக்கிறது என்றுதான் முகம்மது கருதினார் என்பது
தெளிவாகிறது. அதனால் தான் துல்கர்ணைன் பயணத்தை ‘சூரியன் மறையும் இடத்திற்கு சென்றார்
; சூரியன் உதிக்கும் இடத்திற்கு சென்றார்’ என்று முகம்மது கூறியுள்ளார். பிஜே அவர்களோ,
இதனை புத்திசாலித்தனமாக விளக்குகிறோம் என்று அபத்தமான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளர்.
இவர்
காற்றுபற்றியும், குளோனிங் பற்றியும், இரு மலைகளுக்கிடையே உலோகங்கள் கொண்டு அடைத்தது
பற்றியும், பிர்அவுன் உடல் பற்றியும் இன்னும் நிறைய அறிவியல் விஷயங்கள்பற்றி உளறி உள்ளார்.
இவைகள் பற்றியும் விரைவில் பார்ப்போம்.
உலகின் இரண்டாவது
பெரிய மதத்தின் வேதமாகிய, உலகில் நான்கில் ஒரு பகுதி மக்களின் புனித நூலாகிய குர்ஆன்
இந்த உலகின் வடிவம் தட்டை என்றே கூறுகிறது. பிஜே போன்றவர்கள் இந்த உண்மையை மறைத்து
தவறான கருத்துக்களை மக்களின் மனதில் புத்திசாலித்தனமாக திணிக்கிறார்கள். இந்த விளக்கப்படம்
அவர்களின் தவறான கருத்துக்களைத் தகர்த்தெறியும் என்று நம்புகிறோம்.
இன்றைய நமது
சுகமான வாழ்விற்கு அன்றைய அறிவியல் அறிஞர்களே அடிப்படைக் காரணம். ஆனால் அவர்கள் எல்லோரும்
தங்களது அறிவியல் கருத்துக்களை வெளியிட்டதற்காக அன்றைய பழமைவாதிகளாலும் பிற்போக்குவாதிகளாலும்
எரித்துச் சாம்பலாக்கப்பட்டார்கள். அதை மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். காரணம், போப்பும்,
பைபிளும் அறிவியலுக்கு எதிராக இருக்கமுடியாது என அவர்கள் நம்பினார்கள். பைபிளை கடவுளின்
வேதம் என்றும் போப்பை கடவுளின் பிரதிநிதி என்றும் அவர்கள் நம்பினார்கள். இன்று பிஜேயின்
பொய்களை இலட்சக்கணக்கான மக்கள் அறிவியல் சிந்தனையே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறார்கள்.
குர்ஆன் கடவுளின் வேதம் என்றும் பிஜே அந்த வேதத்தை விளக்கும் ஆற்றல் மிக்க அறிவாளி
என்றும் நம்புகிறார்கள். மக்களின் இந்த அறியாமைதான் பிஜே போன்றவர்களின் பலம். இந்த
அறியாமை இருளை அறிவியல் ஒளியைக்கொண்டு விரட்டி அடிக்காதவரையில் பொய்களும் தவறுகளுமே
அதிகாரம் செலுத்தும்.
---நந்தன்
4 கருத்துரைகள்:
வணக்கம் சகோ.நந்தன்,
துல்கர்னைன் (ஒரு வேளை கர்ணன் பரம்பரையோ)அந்தப் பக்கம் போனார்,இந்தப்பக்கம் போனார் அதனால் உலகம் உருண்டை என்ற அண்ணன் பி.ஜே.உருட்டிவிட்ட கட்டுக் கதை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.அவரின் எண்ணம் எப்படியாவது குரானை அறிவியலுக்கு நிகரானது என்று மக்களுக்கு காட்டிவிட வேண்டும் என்பதே. அனைத்தும் அரிந்த அல்லாவுக்கு இவ்வளவு சுற்றி சுற்றி உலம் உருண்டை என நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? வழக்கம் போல் உலகத்த உருண்டையா நாந்தான் படைச்சேன் என்று அடித்துவிட்டிருக்கலாமே!! சரி அதுதான் போகட்டும்,ஏதோ விண்வெளிப் பயணம் போக ஒரு நாள் இரவு (பகலில் என்றால் புட்டு வெளிப்பட்டுவிடுமே)அல்லாஹ் அழைத்துக் கொண்டதாக ஒரு கதை உண்டு.அதில் போய்ட்டு வந்தபிறகாவது,நான் போகும் போதும் வரும் போதும் பூமியை அதன் வடிவத்தை உருண்டையாகப் பார்த்தேன் என்றாவது தூதர் சொல்லியிருக்கலாம் அல்லவா? நம்ம விண்வெளி வீராங்கணை கல்பணா கூட பூமியைப் பற்றியும் சூரியன் 16 முறை (என்று நினைக்கிறேன்) தோன்றி மறைவதை பார்த்ததாக சொல்லியுள்ளாரே!!!! இதைக்கூட அல்லாஹ் தன் தூதருக்கு உணர்த்தாதது ஏனோ?
சகோ.நந்தன்,
//இவர் காற்றுபற்றியும், குளோனிங் பற்றியும், இரு மலைகளுக்கிடையே உலோகங்கள் கொண்டு அடைத்தது பற்றியும், பிர்அவுன் உடல் பற்றியும் இன்னும் நிறைய அறிவியல் விஷயங்கள்பற்றி உளறி உள்ளார். இவைகள் பற்றியும் விரைவில் பார்ப்போம்.//
நானும் இவரின் நவீன அ(றி)வியல் உளறல்களை படித்திருக்கிறேன்.இவரின் அவியலை மூமின்கள் எப்படி ஏற்கிறார்கள் என்று தான் விளங்கவில்லை.ஏனெனில் குரானுக்கு விளக்கம் அளிப்பதற்காகத்தான் தூதரை அல்லா நியமித்ததாக இவர்களே கூறிக் கொள்கிறார்கள். அதன் பின் யார் (பி.ஜே உட்பட) விளக்கம் புதிதாக கொடுத்தாலும் அதையும் ஏற்கிறார்கள்!!!குரானுக்கு விளக்கவுரையான ஹதீத் என்ன கூறுகிறதோ அதையே நம்பவேண்டும் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஹதீதில் உலகம் உருண்டையைப் பற்றி பி.ஜே சொன்ன விளக்கம் போல், முகம்மது சொன்னதாக எங்காவது உண்டா? எந்த அறிவியல் விளக்கமும் முகம்மது சொல்லாத போது பி.ஜே.வின் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தகாத ஹதீதுக்கு முரணான விளக்கமாகும்.
பிஜேவின் விளக்கங்கள் அவரது தொண்டரடிப்பொடிகளால் புது ஸஹீஹ் ஹதீதுகளாக அடுத்த சில வருடங்களில் தொகுக்கப்பட்டு பிற ஹதீதுகள் பிராடு என்று அறிவிக்கப்படும்.
குர்ஆனில் அறிவியலும் இல்லை ஆன்மீகமூம் இல்லை. உளறல்கள் மட்டுமே உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அற்புதமான பதிவு!
Post a Comment