Wednesday, 28 November 2012

முட்டாள் கடவுளின் முரட்டு நபி!


மூஸா, குர்ஆனில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் பெயர். நாம் வெறுப்படைந்து தலைதெறிக்க, பின்னங்கால்கள் பிடறியில் அடிக்க ஓடுமளவிற்கு அல்லாஹ், மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும்கூறுவது மூஸாவின் கதையைத்தான். மூஸாவை, கலீம்உல் அல்லாஹ் (அல்லாஹ்வுடன் உரையாடியவர்) என்கிறார் முஹம்மது.
மூஸா, எகிப்தில் பிறந்து, அரகுடும்பத்தில் வளர்க்கப்பட்டவர். யூதர் ஒருவருக்கு உதவுவதற்காகச் சென்றவர் கைகலப்பில் கொலை செய்துவிட்டு, மரண தண்டனைக்குப் பயந்து தப்பியோடி விடுகிறார். தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டு எகிப்திற்குத் திரும்பும்வழியில், சினாய் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது அல்லாஹ் வலிய அழைத்து, தன்னை கடவுள் என்று அறிமுகம் செய்தவனாக மூஸாவுடன் உரையாடுகிறான். சில தந்திரவித்தைகளையும் கற்றுக் கொடுத்து ஃபிர்அவ்னுடன் சண்டையிட அனுப்பிவைக்கிறான்.
அல்லாஹ்வுடனான உரையாடலின் பொழுது மூஸா,
என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்கவேண்டும்எனக் கூறினார்.
அதற்கு என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும், அந்த மலையைப் பார்ப்பீராக! அது அற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் பின்னர் நீர் என்னைப் பார்க்கலாம்என்று கூறினான்.
மூஸா அல்லாஹ்வைக் காணவேண்டுமென்றுதான் விரும்புகிறார், ஆனால் அல்லாஹ்வோ, மூஸா கல்குவாரி வைக்கவிரும்புவதாக நினைத்துவிட்டான் போலும்.
அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார்.
(குர்ஆன் 7:143)
(மலைகளை உடைத்து ஜல்லிக்கற்களை உருவாக்குவதற்கு மனிதர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள் எனவே அல்லாஹ் ஆங்காங்கே காட்சிதந்தால் ஜல்லிக்கற்களின் விலைகுறைய வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டவர்கள்.)
மூஸா விரும்பியபடி, அல்லாஹ்வால் தன்னை வெளிபடுத்திக்கொள்ள இயலவில்லையா அல்லது விரும்பவில்லையா


அல்லாஹ்வின் அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்ததாகக் கூறப்படும் ஒரு தாவர இனத்தை (Burning Bush?) முஸ்லீம்களிடையே மிகப் பிரபலமான “காலடித்தடங்கள்” என்ற (டுபாக்கூர்) ஆவணப்படத்தில் கண்பிக்கின்றனர். அதாவது அதற்குரிய ஆற்றலை குறிப்பிட்ட அந்த தாவர இனத்திற்கு அல்லாஹ் வழங்கியிருந்தானாம். ஆக, இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஒரு பொருள் வலிமையில் மிகுந்திருப்பதற்கும், குன்றியிருப்பதற்கு காரணம் அல்லாஹ்தான். உண்மையிலேயே மூஸாவின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பியிருந்தால், மூஸாவிற்குத் தேவையான ஆற்றலை வழங்கிய பின்னர் காட்சி கொடுத்திருக்கலாம். அல்லது தனது ஆற்றலை மூஸாவின் கண்களுக்கு ஏற்றவாறு வெளிப்படுத்தியிருக்க முடியும். இந்த இரண்டு நிலைகளையும் அவன் மேற்கொள்ளாமல், ஏதேதோ கதையளக்கிறான். சுயதம்பட்டம் என்பார்களே அதுதான்!
உண்மை என்னவெனில் மூஸாவிடம், அல்லாஹ் தன்னை வெளிபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதே! அதை அவரிடமே “மூஸாவே உம்மிடம் என்னை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று கூறியிருக்கலாம், அதைவிடுத்து ”அதற்கு என்னை நீர் பார்க்கவே முடியாது.” என்று  பீலாவிடுகிறான்.
இங்கு,  மூஸாவிடம் அல்லாஹ் பொய் சொல்லவேண்டும்?
அல்லாஹ்விற்கு பொய் சொல்வது புதிதா என்ன?  எனவே அதை விடுங்கள் நாம் மூஸாவின் கதையை மிக சுருக்கமாகப் பார்க்கலாம்.
எகிப்து திரும்பும் மூஸா, ஃபிர்அவ்னிடம் சென்று தந்திர வித்தைகளைக் காண்பித்து மிரட்டுகிறார். எரிச்சலடைந்த ஃபிர்அவ்ன், மூஸாவையும் அவரது கூட்டத்தினரையும் அழிக்க முயற்சிக்கிறான் அல்லாஹ் கடலைப்பிளந்து மூஸாவையும் யூதர்களையும் காப்பாற்றியதுடன், ஃபிர்அவ்னைக் கொன்று அவனது உடலை பதப்படுத்தப்பட்ட மம்மியாக மாற்றி, இன்று நாம் காணுமாறு அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. (ஃபிர்வ்ன் உடலைபற்றிய கதைகளை நாம் முன்பே விவாதித்திருக்கிறோம்)
 இத்தகைய மூஸாவை, தனது விண்வெளிப்பயணத்தின் பொழுது முஹம்மது சந்திக்கிறார்.
புகாரி :  7517 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது:
...அப்போது நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூசா (அலை) அவர்கள், முஹம்மதே! உங்கள் இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான் என்று பதிலளித்தார்கள். மூசா (அலை) அவர்கள், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்கள் இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்கு மாறு கேளுங்கள் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். நீர் விரும்பினால் ஆகட்டும்' என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள்.
ஆகவே, நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் தாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி (ஸல்) அவர்கள், என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி (ஸல்) அவர்களை இறைவனிடம் மூசா (அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.
முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியது. ஐந்துக்கு வந்த போதும் மூசா (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூஇஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால், அவர்கள் (அதைக்கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். ஆகவே, திரும்பச்சென்று உங்களுக்காக (உங்கள் ஐநேரத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள் என்று கூறினார்கள்.
ஒவ்வொரு தடவையும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை.
ஐந்தாவது தடவை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். ஆகவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக! என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன் முஹம்மதே! என்று அழைத்தான். அதற்கு இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ், (ஒருமுறை சொல்லப் பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவ தில்லை; அதை நான் உங்கள் மீது லவ்ஹுல் மஹ்ஃபூல்' எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. ஆகவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும் என்று சொன்னான். பின்னர் நபி (ஸல்) அவர்கள், மூசா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள்.
அப்போது என்ன செய்தீர்? என்று மூசா (அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற் செயலுக்கும் அதைப் போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான் என்று சொன்னார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதைவிடக் குறைவான எண்ணிக்கையையே பனூ இஸ்ராயீல்களுக்கு நான் (இறைவனிடம்) கோரிப்பெற்றேன். அப்படியிருந்தும் அதைக் கூட அவர்கள் கைவிட்டார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் உங்களுக்காகக் குறைக்கும்படி கேளுங்கள் என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூசாவே! அல்லாஹ் வின் மீது சத்தியமாக! திரும்பத் திரும்ப இறைவனிடம் நான் சென்றுவிட்டதனால் (மீண்டும் செல்ல) வெட்கப்படுகிறேன் என்றார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், (நபியே!) அல்லாஹ்வின் திருப் பெயரால் (பூமிக்கு) இறங்குங்கள் என்றார்கள்.
முஹம்மது, மூஸாவைப்பற்றி கூறும் பொழுது அவரால் தெளிவாகப் பேசமுடியாதவர் (திக்குவாய்) என்கிறார். மூஸாவின் வாயில் கோளாறு இருப்பினும் அல்லாஹ்வின் கட்டளையை மறுப்பதற்கு திக்கித் திணறி தயங்கி நிற்கவில்லை. தனது சமுதாயத்தினருக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழுகையைக் கோரிப் பெற்றுத்தந்திருக்கிறார். ஆனால் வழிபாடுவெறியனான அல்லாஹ்வோ முஹம்மதின் சமுதாயத்தினரின் மீது அதிகமான வழிபாட்டு சுமையை ஏற்றியிருக்கிறான். தெளிவாகப் பேசத் தெரிந்த முஹம்மதோ எந்த ’ஆணி’யையும் பிடுங்கவில்லை! ஆனால் எதுவுமே தெரியாமல் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்,
“அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்றுவிடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து “ நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)
ரஹீக் அல் மக்தூம்.
பேரம் பேசிக் குறைத்து இறுதியில் தன்னை வணங்காமல் “அம்போ” என்று விட்டுவிடுவார்களோ என அஞ்சிவிட்டான் போலும்!  தனது அடியார்களுக்கு எது இலகுவானது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல இலகுவான நிலைக்கு கொண்டு சென்றது யார் என்பதைக்கூட அல்லாஹ்வால் அறிந்து கொள்ளமுடியவில்லை. இதற்குமேலும் ஒரு கடவுளை அறிவீனனாகச் சித்தரிப்பது எப்படியென்பதை  முஸ்லீம்களிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.
முஹம்மது உண்மையிலேயே மிகப்பெரும் மடையர்; அல்லாஹ் ஐம்பது நேரத் தொழுகையை மனிதர்கள் மீது விதித்தவுடன் மறுப்பின்றி ஒப்புக் கொண்டுவிட்டார். மூஸாவின் துணிச்சல் முஹம்மதிடம் அறவே இல்லை! இதை நாம் கூறினால் நபிமார்களிடையே பேதம் ஏற்படுத்தும் செயல்; இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி ஒரு குர்ஆன் வசனத்தை முன்வைப்பார்கள். அவர்களுக்கு எதற்கு சிரமம் அதை நானே முன்வைத்து விடுகிறேன்,
அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான்…
(குர் ஆன் 4:152)
இஸ்லாமில் நபிமார்களிடையே பேதமில்லை, பேதம் பார்க்கக்கூடாது என்றெல்லாம் முழம் போடுவார்கள். ஆனால் முஹம்மது மற்ற நபிமார்களைவிட  மட்டுமல்ல அனைத்து படைப்புகளைவிட உயர்ந்தவர் என்பதே இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை.
புகாரி :  7517
...அப்போது மூஸா (அலை) அவர்கள், என் இறைவா! எனக்கு மேலே வேறொருவர் உயர்த்தப்படுவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை என்று கூறினார்கள்...
இது உயரத்தை கூறவில்லை. உண்மையில் இது தகுதியைப்பற்றி மட்டுமே கூறுகிறது. அதாவது பெரும்புள்ளிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அவரவர் தகுதிக்கேற்ப (வேறென்ன பணம்தான்!) இருக்கைகள் ஒதுக்கப்படுவதைப்போல அல்லாஹ்வும் நபிமார்களை அவரவர் தகுதிக்கேற்ப ஒவ்வொரு வானத்திலும் தங்குமிடங்களை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறான். மூஸாவிற்கு ஆறாம் வானத்தில்  இருப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. முஹம்மதோ ஏழாம் வானத்தின் எல்லைக்கும் சென்றுவிடுகிறார் அதாவது  சற்றேறக்குறைய அல்லாஹ்வின் அர்ஷிற்கு அருகில் சென்றுவிடுகிறார். (இங்கு அவர் அல்லாஹ்வை நெருங்கியதாகவும், கண்டதாகவும்கூட சில ஹதீஸ்கள் கூறுகின்றன. உண்மையில் அங்கு  முஹம்மது யாரைக் கண்டார்?) அதனால்தான் மூஸா ஆதங்கப்படுகிறார்.

ஆதம் முதல் ஈஸா வரையிலான கதாபாத்திரங்களை பலவிதமாக விமர்சித்தும், கேலிசெய்தும் புதினங்களும், திரைப்படங்களும் ஏராளமாக வந்துள்ளன அப்பொழுதெல்லாம் வாயை மூடிக்கொண்டிருக்கும் முஹம்மதியர்கள், முஹம்மதைப்பற்றிய ஹதிஸ்களில் கூறப்பட்ட உண்மைகளை வெளியிட்டால் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள், கொலைவெறி ஃபத்வாக்களை அள்ளிவிடுவார்கள். இதுதான் இவர்களது நபிமார்களிடையே பேதம்பார்கக்க்கூடாது என்பதன் பொருள்.

நாம் அல்லாஹ் விதித்த ஐம்பது நேரத் தொழுகையின் யதார்த்த நிலையைப் பார்க்கலாம்,
ஒரு தொழுகைக்கு குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகும். ஒரு மனிதர் காலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரை விழித்திருப்பதாக கொண்டால், பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அவர் தொழுகைக்காக ஓட வேண்டும். (உண்பது, குளிப்பது போன்ற இதர தேவைகள் தனிக்கணக்கு) மனிதகுலத்தின் இயலாமையை மூஸா அறிந்திருந்தார். தனது சமுதாயமான இஸ்ராயீல்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான வழிபாடு விதிக்கப்பட்டு தோல்வியைத் தழுவியது என்கிறார். இவைகளையெல்லாம் அல்லாஹ் அறியவில்லையா?
மனிதர்கள் எடுத்துரைப்பதை கேட்கும் நிலையில்தான் அல்லாஹ் இருக்கிறான் என்பதையே இது உணர்த்துகிறது.
அல்லாஹ்விற்கு மூஸாவிடம் ஏதோ ஒரு இனம்புரியாத அச்சம் இருந்திருக்க வேண்டும்; அதனால்தான் முஹம்மதைத் தூண்டிவிட்டு தொழுகையின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி செய்த மூஸாவை எதுவும் கூறவில்லை. மூஸாவின் துடுக்குத்தனமான செயலை முன்பொரு முறையும் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறான்.
அல்லாஹ், சினாய் மலையில் நாற்பது நாட்கள் மெனக்கெட்டு எழுதிக் கொடுத்த கற்பலகையை, யூதர்கள் காளைக் கன்றை வணங்கிவிட்டனர் என்று தனது சகோதரர் ஹாருனின் மீது கோபம் கொண்டு வீசிஎறிந்ததுடன் அவரையும் தாக்கி வீழ்த்தினார்.

பலகைகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கு விளக்கமாகவும் அது இருந்தது.
 (குர்ஆன் 7:145)
… கவலையும் கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பிய போது “எனக்குப் பின்னர் நீங்கள் செய்த்து மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(தண்டனை)க்கு அவசரப்படுகிறீர்களா?” என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலை(முடி)யைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார்
 (குர்ஆன் 7:150)
பலகைகளைப் போட்டார்என்பது கோபத்தில் வீசி எறிந்தார் என்பதன் மழுப்பல்தான் என்கிறது பழைய ஏற்பாடு.
யாத்திராகமம் 32:19
மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும், ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபம்கொண்டான். அவன் கற்பலகைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின.
தனது கைப்பட எழுதிக்கொடுத்த கற்பலகையை ஒரு பொருட்டாக மதிக்காமல், வீசி எறிந் (து உடைத்)ததைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. (எனது கைப்பட எழுதப்பட்ட வேதத்திற்கு இப்படியொரு நிலையா? என்று தலையிலடித்துக் கொண்டு பேசாமல் இருந்திருப்பான் என்று நினைக்கிறேன். அவன் குர் ஆனைஒலிவடிவில் இறக்கியதற்கும் இதுதான் காரணமோ? )
 யூத நசராக்கள் உருவாக்கிய இயந்திரங்களில் அச்சடிக்கப்பட்ட காகிதக் குர்ஆனை பிறநம்பிக்கைகளிலுள்ளவர்கள் மதிக்கவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்வதை காணும் பொழுது எனக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.
ஹதீஸ்கள், மூஸாவிடம் அல்லாஹ்விற்கு இனம் புரியாத அச்சம் கொண்டிருந்ததை மேலும் உறுதி செய்கின்ற.
அல்லாஹ்வின் முகத்தில் குத்திய மூஸா !
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மலக்குல் மவ்த்' (உயிரை எடுத்துச்செல்ல வரும் வானவர்) மூஸா (அலை) அவர்களிடம் வந்து, உங்கள் இறைவன் (உங்கள் உயிரை எடுத்து வருமாறு உத்த்ரவிட்டுள்ளான் அவனது) உத்தரவுக்குப் பணியுங்கள்என்று கூறினார்.
உடனே மூஸா (அலை) அவர்கள் வானவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பெயர்த்துவிட்டார்கள். அந்த வானவர் இறைவனிடம் திரும்பிச்சென்று, ”மரணத்தை விரும்பாத உன் அடியார் ஒருவரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்! அவர் எனது கண்ணைப் பறித்துவிட்டார்என்று கூறினார்
அவருக்கு மீண்டும் கண்ணை வழங்கிய இறைவன், “நீர் என் அடியாரிடம் திரும்பிச் சென்று, நீங்கள் உயிர்வாழத்தானே விரும்புகிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (இன்னும் நீண்ட நாட்கள்) உயிர்வாழ விரும்பினால், ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் கையை வையுங்கள்; (அதன் முதுகிலுள்ள முடிகளில்) உங்களது கை மறைக்கும் அளவுக்கு ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில்) நீங்கள் வாழலாம் சொல்வீராக என்று கூறினான்
 (முஸ்லீம்)
ஹைடெக்  நபி பீஜே, ஸஹீஹான இந்த ஹதீஸை, தனது  ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?” என்ற நூலில்,  மனிதனின் இயலாமை, மலக்குகளின் வலிமை, அல்லாஹ்விற்கு இயலாமையா? என்றெல்லாம் மறுத்து குர்ஆனுக்கு முரணானது எனக்கூறி புறக்கணிக்கிறார். குர்ஆனின் சில வசனங்களுடன் இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை (தனக்குத்தானே முரண்படுவதில் குர்ஆனை மிஞ்ச வேறு புத்தகம் இருக்கிறதா?) மூஸாவின் காலத்தில் குர்ஆன் எங்கே இருந்தது என்பதுதான் புரியவில்லை.  மூஸாவின் காலத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஒரு செய்தி குர்ஆனுடன் முரண்படுவதில் தவறென்ன?
அல்லாஹ் தனது நிலையை (வேதங்களை) ஒருபொழுதும் மற்றியதே இல்லையென்று பீஜே நினைத்துக் கொண்டிருக்கிறார். முன்னுக்குப்பின் முரணான வசனங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை கொண்டு, பீஜேலாஜிக்பேசுவதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
உதாரணத்திற்கு, குர்ஆன் முஹம்மதை மிகச் சாதரண மனிதர் என்கிறது. ஆனால் ஹதீஸ்களோ முஹம்மதின் அற்புதங்களை அள்ளிவிடுகிறது. மூஸாவின் விஷயத்தில்லாஜிக்கூறும் பீஜே இவைகளைக் கண்டும் காணாததைப்போல கடந்து செல்வதை என்னவென்று கூறலாம்?
அவ்வளவு ஏன், தொழுகையைப்பற்றி குர்ஆனில், ருகூஉ, ஸஜ்தா என்ற இரண்டு சடங்குகளைத் தவிர வேறெதுவும்  கூறப்படவில்லை, தொழுகைக்காக செய்யப்படும் ”ஒளு” என்ற தூய்மைப்படுத்தும் சடங்கை எவ்வாறு செய்வது என்ற குறிப்புகளும் இல்லையென்பதற்காக மற்ற சடங்குகளைப் பின்பற்றாமல் புறக்கணித்து விட்டாரா? எத்தனை முறைகள் ருகூஉ, ஸஜ்தா செய்யவேண்டும் என்பதையாவது காண்பிக்க முடியுமா?
ஹைடெக் நபி பீஜே தான் பிரபலமடையக் காரணமாக இருந்த விரலை ஆட்டும் தொழில்நுட்பத்திற்கு எந்த குர்ஆன் வசனத்திலிருந்து ஆதாரம் காண்பித்தார்?
மூஸா இயற்கையாகவே அதிகம் கோபப்படக் கூடியவராக இருந்தார். கோபத்தில் கொலை செய்ததாகவும் (குர்ஆன் 20:40), கோபத்தில் அல்லாஹ் தனது கைப்பட எழுதிக்கொடுத்த கற்பலகையை ஒரு பொருட்டாக மதிக்காமல் வீசி எறிந்து, தனது சகோதரரின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார் என்றெல்லாம் (குர்ஆன் 7:150) கூறுவதற்கு எதிராக, பீஜே, மூஸாவைப் பொறுமையின் சிகரம் என்கிறார்.
மூஸாவிற்கு கோபம் மட்டும் அதிகமில்லை தற்பெருமையும் அதிகம்தான்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் மூசா (அலை) அவர்கள் (தம் சமுதாய) மக்களுக்கு, (இறைவன் அவர்களுக்கு வழங்கிய அருட் கொடைகளை) நினைவூட்டிக் கண்கள் ததும்ப இதயங்கள் நெகிழ்ந்துருகும் அளவுக்கு உபதேசித்து விட்டுத் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து சேர்ந்து, அல்லாஹ்வுடைய தூதரே! பூமியில் உங்களைவிட அறிந்தவர் எவரேனும் உண்டா? என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, மூசா (அலை) அவர்களை அல்லாஹ் கண்டித்தான்...
(புகாரி 4726)
இதன் பிறகு மூசாவிற்கு,  அவர் அறிந்திராத விதியின் வலிமையைப்பற்றி இடித்துரைத்து புத்தி புகட்ட, கிள்ரு என்ற நபியிடம் (மீன்?) அனுப்பிவைக்கிறான். அவர் அல்லாஹ்வுடைய விதியின் வலிமையை மூஸாவிற்குப் புரியவைக்கிறார். குர்ஆன் 18:60-82 வசனங்களில் மிகத்தெளிவாக இது கூறப்பட்டுள்ளது.
மலக்குல் மவுத்தைத் தாக்கி கலவரம் செய்து ஒருவழியாக இறந்த பிறகு,  மூஸா என்ன செய்தார் தெரியுமா? முதலாம் வானத்திலிருந்த ஆதமுடன் சண்டைக்குச் சென்றுவிடுகிறார்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள்,
 ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்)  எங்களை இழப்புக்குள்ளாக்கிவிட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் என்று சொன்னார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள் மூசாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? என்று கேட்டார்கள்.
(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி 6614)
விதியைப்பற்றி முரடர் மூஸாவிற்கு இடித்துரைத்து கற்பிக்கப்பட்டதாக  அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் விதியைப்பற்றி எதுவும் அறியாதவராக ஆதமுடன் சண்டை செய்ததாகக் கூறி குர்ஆனுக்கு முரண்படுகிறது. இதையும் முஸ்லீம்கள் புறக்கணிப்பார்களா? இப்படியே தொடர்ந்தால் ஒரு ஹதீஸ்கூட மிஞ்சாது!
நபிமார்கள் அல்லாஹ் விதித்த கட்டளையை மீறமாட்டார்கள் என்கிறார் பீஜே. நாம் தொழுகையைக் குறைத்துக் கேட்க, மூஸா, முஹம்மதைக் கிள்ளிவிட்ட கதையை மறந்துவிட்டார் போலும்!
எதைக் கூறினாலும் தலையாட்டும் ஆட்டுமந்தைகூட்டம் இருக்கும் வரையில், மதவியாபாரிகள், தங்களுக்குத் தேவைப்பட்டால் ஹதீஸ்களை ஸஹீஹ் என்றும் மவ்ளுவு என்றும் மத்ரூக் என்றும் ளயீஃப் என்றும் தினமும் உருமாற்றம் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
முரட்டு நபி மூஸா அல்லாஹ்விற்கு கொடுத்த உள்குத்தினால் விளைந்த  நன்மைகளைத் பார்க்கலாம்.
மூஸாவிற்கு இஸ்லாமியர்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அல்லாஹ் விதித்த ஐம்பது நேரத் தொழுகை மற்றும் ஆறு மாதகால நோன்பு என்ற மடத்தனத்திலிருந்து விடுதலைபெற்றுத் தந்த மாவீரன்!  
அல்லாஹ்வும், முஹம்மதும் அறிந்திராத, மனிதவாழ்வின் நெருக்கடியை மூஸா தெளிவாக அறிந்திருந்தார். அதை அல்லாஹ்விற்கு புரியவைக்க முயன்றார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.


தஜ்ஜால்

Facebook Comments

13 கருத்துரைகள்:

Unknown said...

வணக்கம் சகோ.

அருமை....முஸ்லிம்களின் முட்டாள்தனத்தை எடுத்துக் காட்டும் ஒர்ர் அரிய பதிவு கொடுத்திருக்கிறீர்கள்.

//ஹைடெக் நபி பீஜே தான் பிரபலமடையக் காரணமாக இருந்த விரலை ஆட்டும் தொழில்நுட்பத்திற்கு எந்த குர்ஆன் வசனத்திலிருந்து ஆதாரம் காண்பித்தார்?//

அவனவன் கீ போர்டிலும்,மவுசிலும் விரலால் வித்தைகள் செய்து சாதித்துக் கொண்டிருக்கும் போது,வெறுமனே மண்டி போட்டுக் கொண்டு விரலை மட்டும் தனியா ஒக்காந்து கொண்டு ஆட்டி என்னத்த சாதித்தார்களோ? ஒரு பயனுமற்ற உதவாக்கறை டுபாக்கூர் செயலுக்கு இவ்வளவு பில்டப்பா???விரலை ஆட்டியும் அல்லது ஆட்டாமலும் இவர்கள் சாதித்தது என்ன? ஒரு சுயநல செயலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று கூடவா இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை????சிந்திக்க மாட்டீர்களா?!!!!!!!!!!!!

SAGODHARAN said...

சகோ
குரான்ல மூஸாவ மட்டுமா திரும்ப திரும்ப சொல்றான் அல்லா ?
//மூஸாவிற்கு இஸ்லாமியர்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அல்லாஹ் விதித்த ஐம்பது நேரத் தொழுகை மற்றும் ஆறு மாதகால நோன்பு என்ற மடத்தனத்திலிருந்து விடுதலைபெற்றுத் தந்த மாவீரன்! //
யாரு இத சொன்னா கேக்குறாங்க?
முஹம்மதுக்கு இந்தாளுதான்ய ரெகமென்ட் பண்ண ஆளுன்னு சொன்னா அடிக்கவரானுங்க மூல கெட்ட முண்டங்க!

இப்ன் லஹப் said...

ஒரு கொலை குற்றவாளி அல்லாஹ்வினால் தூதராக தெரிவு செய்யபடுகிறார்.
அல்ஹம்துலில்லாஹ் !!!
ஒரு கோபக்காரன் அல்லாஹ்வினால் தூதராக தெரிவு செய்ய படுகிறார்.
சுபஹானல்லாஹ் !!
ஒரு திக்குவாயன் பிரசார பீரங்கி ஆகிறான் .
அல்லாஹு அக்பர் !!!

ஆனந்த் சாகர் said...

நண்பர் தஜ்ஜால்,

வணக்கம். முஸ்லிம்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து பார்க்க வைக்கிற கட்டுரையை எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள். முஸ்லிம்கள் சிந்தித்து நடப்பார்களா?

மனிதர்களின் கஷ்டங்களை அறியாமல், புரியாமல் (!?) வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கண்ட மேனிக்கு தான்தோன்றித்தனமாக அல்லாஹ் சட்டங்களை விதிப்பவன் என்பதை ஒரு தொடராகவே வெளியிடலாம். அந்த அளவுக்கு ஏகப்பட்ட அறிவுக்கு புறம்பான பிதற்றல்கள், சொதப்பல்களே இஸ்லாமிய சட்டங்கள். அதில் ஒன்று தான் அல்லாஹ் முதலில் விதித்த தினசரி 50 வேளை கடமையான தொழுகை என்பது.

SAGODHARAN said...

சகோ
எனக்கு தெளிவு ஏற்படவைத்த பெரும்பங்கு சகோதரர் தாஜ்ஜாலையே சாரும் !
உண்மையில் மார்க்க மேதைகள் பண்ணாத தாவா பணியை இவரே செய்கிறார்,நான் பார்த்ததில்லை தஜ்ஜாலை இருந்தாலும் நன்றி சொல்வது தமிழனின் கடமையல்லவா அதனால் தாஜ்ஜாளுக்கு கோடி நன்றிகள் !!

sagodharan said...

முஸ்லிம்கள் சிந்தித்து நடப்பார்களா?
சகோ
//முஸ்லிம்கள் சிந்தித்து நடப்பார்களா?//
இவ்வளவு விளக்கமாக குரானின் தகிடு தத்தங்களை,தனக்கு தானே முரண்படுவதை விளக்கியும் இப்ராகிம் போன்ற நல்லவர்கள் இன்னும் முரண்டு பிடிப்பதற்கு காரணம் குரானோ, ஹதீதோ முரண்படவில்லை என்ற சுயவிளக்கம் அளிக்கும் கிறுக்கர்கள் இருப்பதால்தான்!
pj,ஜாகிர் போன்ற ஒருபக்க நல்லவர்கள் ஹதீதில் உள்ள நல்ல விஷயங்களை தேர்வு செய்து பார்த்தீர்களா, நமது நாயகம் எவ்வளவு எளிமை,நேர்மையாக வாழ்துள்ளார்கள் என்று புல்லரிக்க வைத்து முரண்படும் விஷயங்களுக்கு பலஹீனம், வியாதி என்றும் ,அப்படியே அது பலமானதாக இருந்தாலும் நேரடியாக மோதுகின்றது, என்று மழுப்பி சிந்தனை என்ற ஒன்றை வட்டி,திருட்டு,விபச்சாரம் இவைகளுக்கு எதிராக திருப்பி நல்ல வழியில் கொண்டு செல்கிறோம் என்ற நோக்கில் மார்க்கத்தை வளர்த்து புண்ணியம் தேடிக்கொள்கின்றார்கள்!
உலகம் முழுதும் இப்படித்தான் மார்க்கம் பரவலாக்கப்படுகின்றது ! நிச்சயமாக இதைதவிர ஒரு காரணமும் மெய்யாகாது! இவர்கள் ஹிதாயத்,அல்லாஹ்வின் நாட்டம் என்பதெல்லாம் காலம் காலமாக இவர்கள் கூறி வரும் மண்ணாங்கட்டி விளக்கம்! சில மர மண்டைகளுக்கு இப்படி சொன்னால்தான் பயம் வரும் என்று சொல்லி வைத்த குருட்டு அரபியின் தந்திரம்!கூட்டம் சேர்க்க சொல்லப்பட்ட மந்திரம்!
சந்தோஷம்! நல்லவழியில் சென்றால் அதற்க்கு என்றும் எங்களைபோன்ற முன்னாள் முஸ்லிம்கள் எதிரியல்லவே,அதை விடுத்து ஏதோ நங்கள் இல்லாததை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் வெறுப்பை காட்டும்போதுதான் நாம் இருந்தது,இப்ராகிம் போன்ற முரட்டு நல்லவர்கள் அல்லது கிறுக்கர்கள் இருப்பது மதமல்ல உண்மையில் மதம் என்ற பெயரில் உலகின் அமைதியை கெடுத்து குட்டிச்சுவராக்கும் தீய வதம் என்பது புலப்படுகின்றது.

தஜ்ஜால் said...

நன்றி இனியவன்,
முஸ்லீம்களின் அடிப்படை கடமைகள் செய்வதற்குக்கூட குர்ஆன் உதவாது. இந்த லட்சணத்தில் குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் புறக்கணிகிறார்களாம். இபொழுது பீஜே, தனது கருத்திற்கு/முடிவிற்கு முரண்படுபவைகளையும் புறக்கணிக்கத் துவங்கியிருக்கிறார். குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் தவறுள்ளதென்று சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அதுவும் செல்லுபடியாகாது. விரைவில் குர்ஆனில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நம்பலாம்.

தஜ்ஜால் said...

நன்றி சகோதரன்
/குரான்ல மூஸாவ மட்டுமா திரும்ப திரும்ப சொல்றான் அல்லா ?/ மிக அதிகமாக கூறப்படும் செய்திகளில் மூஸாவின் செய்தியும் ஒன்று. ///எனக்கு தெளிவு ஏற்படவைத்த பெரும்பங்கு சகோதரர் தாஜ்ஜாலையே சாரும் !/// நன்றி சகோதரன்! உண்மை என்னவெனில் நான் புதிதாக எதையும் கூறிவிடவில்லை இஸ்லாமைப்பற்றி முன்னோர்கள் கூறியுள்ள விமர்சனங்களையே, எனது பாணியில் நான் வழிமொழிந்து கொண்டிருக்கிறேன். இஸ்லாமியர்களுக்குத் உண்மையைக் கூறிவிடவேண்டும் என்ற நோக்கிலேயே எழுதுகிறேன்/எழுதுகிறோம். பாமர முஸ்லீம்களை நமது செய்திகள் சென்றடையவேண்டும்.

தஜ்ஜால் said...

நண்பர் ஆனந்த்,

மிக்க நன்றி, //மனிதர்களின் கஷ்டங்களை அறியாமல், புரியாமல் (!?) வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கண்ட மேனிக்கு தான்தோன்றித்தனமாக அல்லாஹ் சட்டங்களை விதிப்பவன் என்பதை ஒரு தொடராகவே வெளியிடலாம்..// நிறைய இருக்கிறது ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறியுள்ளேன். முஸ்லீம்கள் உணர்வார்களா?

தஜ்ஜால் said...

நன்றி இப்ன் லஹ்ப்
மூஸா செய்த கொலை என்ன ஆனது என்பது பெரிய மர்மமாக உள்ளது! அவர் தண்டனையை எதிர்கொண்டிருக்க வேண்டும் அல்லது கொலையுண்டவரின் குடும்பத்தால் மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை. மூஸா செய்த கொலை என்ன ஆனது?
அல்லாஹ்வே அறிவான்!(?)

முகமது இப்னு அப்துல்லா said...

இந்த மாதிரியான வேலைகளில் இந்த மாதிரியான மனிதர்களை கவனிக்க உமர் இல்லாமல் போய்விட்டாரே

C.Sugumar said...

இந்த மாதிரியான வேலைகளில் இந்த மாதிரியான மனிதர்களை கவனிக்க உமர் இல்லாமல் போய்விட்டாரே

என்னத்தை கிழித்து விடுவான் அந்த அவசரக்குடுக்கை.பாத்திமாவின் 7 வயது சிறுமியை திருணமம செய் சண்டாளன். பாத்திமாவின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியவன்.கதவின் இடுக்கில் கர்ப்பிணியான பாத்திமா -முகம்மதுவின் மகளை நைத்து காயப்படுத்தி சாவுக்கு காரணமானவன். ஆத்திரக்காரன் அறிவ ெட்டவன்.முட்டாள்.மடையன்.மூர்க்கன்.

அதற்கு மேலான ஆண்களின் மலத்துவாரத்தில் புணரும் இழிகுணம் படைத்தவன் என்றும் புகார் உள்ளது. சீ சீ. விடுங்கள் ஐயா.

Anonymous said...

ஏண்டா கட்டுரையை எழுதிய கிறிஸ்தவ சங்க முட்டா கூ….. இஸ்லாத்தை பற்றி ஒரு மயிறும் தெரியாம என்னடா உளறி இருக்க. நன்றாக தெரிகிறது உன்னுடைய காழ்ப்புணர்ச்சி.