Dr. ஜாகிர் நாயக் தன்னுடைய உருது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றில், அதை தொகுத்து வழங்குபவர் ஏன் இஸ்லாம் மற்ற எல்லா மதங்களைவிட உயர்வானது என்று உரிமை கோருகிறது என்று கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்கிறார். மற்ற மதங்கள் தவறான கணக்கீடுகளுக்கு வழிகாட்டும் போது, 2+2=4 என்ற சரியான விடையை பெற, இஸ்லாமே நேரான பாதையை அவருக்கு போதிக்கிறது என்று Dr. ஜாகிர் நாயக் வாதிட்டார். இப்படி, தன்னுடைய நிகழ்ச்சிகளில் எதையும் கண்மூடித்தனமாக நம்புகின்ற முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு தமாஷாக அவர் விடையளிக்கின்றார். உண்மையில், அவரும் அவருடைய குரு அஹ்மத் தீதத்தும் இஸ்லாத்துடைய மேலாதிக்க இயல்பை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளும்படியே செய்துள்ளனர். அவர்கள் இதற்க்கு முன்பு, தங்களுடைய மதத்தை பற்றி அறிந்துகொள்வதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமலே இருந்தனர். தீதத்துக்கும் ஜாகிருக்கும் நன்றிகள்!
23 வருடங்களில் 7 குர்ஆன்கள், எல்லாமே அரபியில்.
1 = 7
23 வருடங்கள் என்ற நம்ப முடியாத நீண்ட காலகட்டத்தில், ஏழு வெவ்வேறு விதமான முறைகளில் முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும், எல்லா ஏழு குர் ஆன்களும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகே புத்தக வடிவங்களாக தொகுக்கப்பட்டன என்பதையும் அறிந்துகொள்ளும்போது அது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அது முஸ்லிமல்லாதோர்க்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. அவைகள் தொகுக்கப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, மூன்றாவது கலீபாவான உத்மான், ஏழு பாடபேதங்களில்(versions) இருந்து ஒரே கைப்பிரதியை(codex) உருவாக்கி அதையே அதிகாரப்பூர்வமான குர்ஆனாக அறிவித்து, இஸ்லாமிய பேரரசு எங்கும் உள்ள மற்ற ஆறு பாடபேதங்களையும் (versions) எரித்துவிடும்படி ஆணையிட்டார். எனவே நூற்றுக்கணக்கான குர்ஆன்களின் மற்ற ஆறு பாடபேதங்களும் சடங்கு ஏதுமின்றி தகனம் செய்யப்பட்டன.
இந்த உண்மையை எல்லா முஸ்லிம்களும் அறிவார்களா?
அநேகமாக இன்றைய குர்ஆனை போலவே, புனிதமாகவும் முக்கியத்துவமிக்கதாகவும் உள்ள, மனித இனத்துக்கு வழிகாட்ட வெளிப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் புத்தகங்கள்- ஒன்றல்ல, ஆனால் அவைகளில் ஆறு புத்தகங்கள், அவைகளின் எந்த அறிகுறியும் இல்லாமல் சாம்பலாக எரிக்கப்பட்டுவிட்டன என்பதை அவர்கள் அறிய வரும்போது முஸ்லிம்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்?
7 வெவ்வேறு மூல குர்ஆன்களுக்கு ஆதாரம்
கூறப்படுவதைபோல, ஏழு வெவ்வேறு பாட பேதங்களில் (versions / விருத்தாந்தங்கள்) முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதற்கும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகுகூட அவை புத்தக வடிவத்தில் இல்லை என்பதற்கும் கீழ்க்கண்ட ஹதீதகளே சான்றுகள் :
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 3, புத்தகம் 41, எண் 601 :
உமர் பின் அல் கத்தாப் அறிவித்தார் : '................ அதை ஓதியபோது, அல்லாஹ்வின் தூதர், "அது இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டது" என்று கூறினார் . அதை நான் ஓதியபோது, அது இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டது" என்று அவர் கூறினார், எனவே உங்களுக்கு எளிதான முறையில் அதை ஓதுங்கள்."
குர்ஆன் ஒரே புத்தக வடிவில் இருந்ததே இல்லை
முஹம்மது தன்னுடைய வாழ்நாளின்போது குர்ஆனை புத்தக வடிவில் தொகுப்பதை பற்றி அலட்டிகொள்ளவே இல்லை என்பதற்கும், இன்றைய சாதாரண முஸ்லிம்களைபோல மிகப்பெரிய சஹாபாக்காளில் ஒருவர்கூட குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை என்பதற்கும் அடுத்த ஹதீத் சான்றாக உள்ளது. குர்ஆனை புத்தக வடிவத்தில் தொகுத்ததின்மூலம், நேர்வழிபெற்ற கலீபாக்கள் முஹம்மதின் கொள்கையை சட்டப்படி நீக்கிவிட்டனர் (abrogated).
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 509:
ஜைத் பின் தாபித் அறிவித்தார் :
வெவ்வேறு மூலங்களில் இருந்து குர்ஆனை சேகரித்து அதை ஒரு புத்தக வடிவமாக தொகுக்கும்படி அபு பக்கரை உமர் பின் கத்தாப் கேட்டுக்கொண்டார். அப்பொழுது, அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படி செய்ய முடியும்? என்று அபு பக்கர் அவருக்கு பதிலுரைத்தார்.
அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் பொய் உரைக்கிறார்
தான் புத்தக வடிவத்தில் குர் ஆனை முஹம்மதுக்கு வெளிப்படுத்தியதாக தன்னுடைய குர் ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உறுதிபடுத்துகிறார்.
1. வஹியின் மூலம் உமக்கு புத்தகத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டதை ஓதுவீராக, மேலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக (குர்ஆன் 29:45).
2. புத்தகத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளது முன்பே வெளிப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் உண்மை ஆகும் (குர் ஆன் 35:31) .
புனித குர் ஆனின் 6 பாடபேதங்களை (versions ) புனிதமாக எரிப்பது
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 510:
அனஸ் பின் மாலிக் அறிவித்தார் : "... அவர்கள் எதை பிரதி எடுத்தார்களோ அதின் ஒரு ஒரு பிரதியை ஒவ்வொரு முஸ்லிம் மாகாணத்திற்கும் அனுப்பி வைத்து, மற்ற எல்லா குர்ஆன் எழுத்துக்களையும், தனித்தனி கைப்பிரதிகளோ(fragmented manuscripts) அல்லது முழுமையான பிரதிகளோ, அவைகளை எரித்துவிடவேண்டும் என்று உத்மான் உத்தரவு இட்டார்...."
குர்ஆனின் ஏழு பாடபேதங்களை குறித்த அதிகமான ஆதாரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள வாசகர்கள் இந்த ஹதீத்களை படித்து பார்க்கலாம் :
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 4: 442
ஸஹீஹ் முஸ்லிம் 1787
அல் திர்மிதி 2215
ஆகையால், 7 வெவ்வேறு விதங்களில் குர்ஆனை முஹம்மதுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தினார்; எந்த சஹாபாவும் குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை; முஹம்மதின் மரணத்திற்கு பிறகும்கூட குர் ஆன் புத்தக வடிவத்தில் இல்லை; முஹம்மதின் மரணத்திற்கு 20 வருடங்களுக்கு பிறகே, உத்மான் குர் ஆனின் மீதமுள்ள 6 பாடபேதங்களையும் எரித்துவிட்டு தன்னுடைய சொந்த பாடபேதத்தை தொகுத்தார் என்பதை இந்த ஹதீத்கள் உறுதிப்படுத்துகின்றன.
அல்லாஹ்வின் தெளிவாக விளக்கும் அரபி
இதற்கு மாறாக, அல்லாஹ் தன்னுடைய குர் ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :
1 . நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்(12 :2)
2 . மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்(20:113).
3 . தெளிவான அரபி மொழியில்(26:195).
4 . (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்) (39:28).
5 . அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது(41:3).
எனவே, அரபி தெளிவாக விளக்குகின்ற மற்றும் மிக சிறந்த மொழி என்பதால் குர் ஆனை எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்வதற்காக, அதை மனித குலத்துக்கு வழிகாட்டியாக தான் அரபியில் வெளிப்படுத்தியதாக இந்த வசனங்களில் அல்லாஹ் கூறுகிறார்.
அல்லாஹ்வுடைய குர்ஆனிய அரபி மொழியே உயர்வானது என்றால், பிறகு ஏன் அவர் எபிரேயு, அபிசீனியம், பாரசீகம் , சிரிய, கிரேக்கம் போன்ற மற்றும் பல மொழிகளில் இருந்து சொற்களை தன்னுடைய குர்ஆனுக்காக கடன் வாங்கினார்?
மேலும், அரபி மொழியின் 7 விதங்களில் ஏன் அவர் தன்னுடைய குர் ஆனை அனுப்பினார்?
உலகின் மற்ற பகுதிகளில் வாழும் தன்னுடைய படைப்பின் பெரும் பகுதியினரை பற்றி அல்லாஹ் பொருட்படுத்துபவராக இருந்திருப்பாரானால் , மற்ற 6 பாடபேதங்களையும் அவர்களுடைய மொழிகளிலும் அனுப்பி இருப்பார்.
தன்னுடைய குர்ஆனின் 7 பாடபேதங்களையும் ஒரே மொழியில் அனுப்புகிற அளவுக்கு இப்படிப்பட்ட அறிவீனராக எப்படி அல்லாஹ் இருக்க முடியும்?
அவருடைய குர்ஆனின் எல்லா 7 பாடபேதங்களையும் பின்பற்றும் அளவுக்கு அவரை பின்பற்றுபவர்கள் நிச்சயமாக அறிவீனர்களாக இருக்கவில்லை. ஆகையால், அவர்கள் அதிக அடிப்படை அறிவையும் புத்திசாலி தனத்தையும் காட்டி, தங்களுக்கு ஒரே ஒரு குர்ஆனை தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற 6 பாடபேதங்களையும் எரித்து விட்டார்கள்.
எனவே, Dr. ஜாகிர்! உண்மையாகவே இஸ்லாம் போதிப்பது 7=1 என்றா? நீங்கள் உரிமை கோருகிறபடி, சரியான கணக்கீடுகளை ஒன்றும் இஸ்லாம் போதிக்கவில்லை.
குர்ஆனிய வாரிசுரிமை சட்டம் என்பது அல்லாஹ்வின் இன்னொரு முழுமையான கணக்கு குழப்பம். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வாரிசுரிமை சட்டத்தை ஒரு முஸ்லிம் பின்பற்ற விரும்பினால், அவர் கண்டிப்பாக பைத்தியமாகி விடுவார். எழுத்தறிவில்லாத, குர்ஆனுடைய ஆசிரியரான முஹம்மது, இப்படிப்பட்ட மடத்தனமான வசனங்களை புனைந்து தன்னுடைய அறிவீனத்தை இன்னொரு முறையும் நிரூபித்துள்ளார்.
மூல ஆசிரியர் : மிர்சா காலிப்(Mirza Ghalib) - 19/02/2012
மொழி பெயர்ப்பு : ஆர்ய ஆனந்த்
10 கருத்துரைகள்:
நண்பர் தஜ்ஜால்,
கட்டுரையின் உப தலைப்புகள் வேறொரு நிறத்திலும், ஒவ்வொரு பத்திக்கும் இடையே ஒரு இடைவெளியும் கொடுத்தால் அதை படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
நன்றி.
@ஆர்ய ஆனந்த்
நானும் இதையே நினைத்தேன். கவனத்தில் கொள்கிறேன்.
ஒரு பாதிரியார் ஒரு குரான் புத்தகத்தை எரித்தார் என்பதற்காக ஆப்கானிஸ்தானில் பலரைக் கொன்றனர். மூமின்களே 6 வகையான குரான்களை எரித்துள்ளனரா? ஆச்சரியமான செய்தி.
//வணக்கம் நண்பர் ஆர்ய ஆனந்து,
//1. வஹியின் மூலம் உமக்கு புத்தகத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டதை ஓதுவீராக, மேலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக (குர்ஆன் 29:45).
2. புத்தகத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளது முன்பே வெளிப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் உண்மை ஆகும் (குர் ஆன் 35:31)//
புத்தகத்திலிருந்து என இங்கு குறிப்பிடுவது அல்லா வசமுள்ள தன் மூலபுத்தகத்திலிருந்து முகம்மதுக்கு வஹி அறிவித்ததாக அல்லவா பொருள்பட தமிழ் இமாம்கள் கூறிவருகிறார்கள்? புரியவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா?
இனியவன்...
வணக்கம் நண்பர் இனியவன்,
//புத்தகத்திலிருந்து என இங்கு குறிப்பிடுவது அல்லா வசமுள்ள தன் மூலபுத்தகத்திலிருந்து முகம்மதுக்கு வஹி அறிவித்ததாக அல்லவா பொருள்பட தமிழ் இமாம்கள் கூறிவருகிறார்கள்? புரியவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா?//
அல்லாஹ்(முஹம்மதின் மனசாட்சி) விண்ணுலகில்(?) தன்னிடம் இருக்கும் லவ்பூல் மக்பூல் என்ற தாய் புத்தகத்தில், குர்ஆன் உட்பட அனைத்து விஷயங்களும், அவை நடை பெறுவதற்கு முன்பே பதியப்பட்டுள்ளன என்றும் குர் ஆன் இந்த தாய் புத்தகத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக முஹம்மதுக்கு வஹி மூலம் இறக்கப்பட்டதாக சில வசனங்களில் கூறுகிறார். (தன்னை அல்லாஹ்வின் உடன்படிக்கை தூதர் என்று 1988 ல் அறிவித்த ரஷாத் கலீபா என்பவர், ரமலான் மாதத்தில் லைலத்துல் கதிர் என்ற இரவில் முழு குர் ஆனும் ஒரே புத்தகமாக முஹம்மதின் இதயத்தில் வஹி மூலம் இறக்கப்பட்டதாகவும் முஹம்மதுக்கு அது கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு கொண்டு வரப்பட்டது என்றும் புதிய விளக்கம் கொடுத்தார். இது வேறு கதை)
அதே சமயம், மற்ற சில வசனங்களில் குர் ஆனை புத்தகம்(கிதாப்) என்று அல்லாஹ் கூறுகிறார். எப்படி பார்த்தாலும், குர் ஆன் என்பது அல்லாஹ்விடமுள்ள தாய் புத்தகத்தில் இருந்து ஒரு மிக சிறிய பகுதியாக இறக்கப்பட்ட புத்தகம் என்றாகிறது.
நல்ல செய்தி.சரியான நேரத்தில் முறையான முறையில் மொழிபெயற்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்க்ள் அதற்கு .இன்னும் இது போல் முக்கியமான செய்திகள் ஆங்கீல மொழியில் வந்து இருக்கின்றது அதையல்லாம் கொஞ்சம் மொழிபெயற்த்தீர்கள் என்றால் சிறப்பாக அமையும்...
7 குரானும் ஒரே மொழியில் வந்ததுக்கான காரணம் அது அரபு மொழியுடையவர்களுக்கு மட்டும் என்பதற்க்காக தான்.இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது எதுவேனின் குரான் ஒரு குருகிய வட்டத்துக்கு மட்டும் தான் பொருந்த முகமது உருவாக்கினார்.ஏன் என்றால் முகமதுக்கு அரபு நாடுகளை தவிர வேர நாடுகள் சம்மந்தமாக பெரியாளவுக்கு எதும் தெரியாது..
மது அருந்துதல், விபச்சாரம் போன்றவைகளுக்கு முன்னுக்குப்பின் முரணான சட்டங்களை தனது தொகுப்பில் சேர்த்துக்கொண்ட உத்மான், மற்ற குர்ஆன்கள் முரண்படுவதாகக் கூறி எரித்தாராம். வேடிக்கையாக இருக்கிறது
@ சிவப்பு குதிரை,
நன்றி. இப்படிப்பட்ட சிறப்பான கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மொழி பெயர்க்கலாம் என்று இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றியும் அதை தோற்றுவித்த முகம்மதை பற்றியும் முஸ்லிம் அறிஞர்களால் மறைக்கப்படும் உண்மையான, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு, குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு தெரிய வரும்.
தோழர் ஆர்ய ஆனந்த் வாழ்த்துக்கள்!!
இதை போன்ற நிறைய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆக்கங்களை தர வேண்டுகிறேன்
தோழர் சகோதரன்,
என்னால் எத்தனை முடியுமோ அத்தனை ஆங்கில கட்டுரைகளை மொழி பெயர்ப்பேன்.
Post a Comment