அய்யா,
ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் குர்ஆன் தவறாதத்தன்மை உடையதாக
உள்ளது என்று நம்புகிறது. என்னுடைய முஸ்லிம்
நண்பன் ஒருவன் என்னை இஸ்லாமிற்கு அறிமுகப்படுத்தியபோது, குர் ஆனின் தெய்வீக மூலத்திற்கு ஆதாரமாக இதை முன்வைக்கும் அளவுக்கு,
இந்த நம்பிக்கை அவர்களின் மனநிலையில் வேரூன்றி இருக்கிறது. மற்ற புனித நூல்களைபோல் அல்லாமல், குர் ஆன் மாற்றம் செய்யப்படவில்லை
என்பதால், அது கடவுளிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று அவன்
வாதிட்டான்.
குர் ஆன் சீர்கெட்டு போய்விட்டதா, இல்லையா என்பதை குறித்து பதில் அளிக்கவும்.
குர் ஆன் தவறாத தன்மை உள்ளதா அல்லது அது சீர்கெட்டு
போய்விட்டதா, இல்லையா என்பவை
இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.
முதல் கேள்வியை பொறுத்தவரை குர் ஆன் தவறாத தன்மை உடையது
அல்ல என்பதே பதில். அதில் ஆயிரக்கணக்கான
தவறுகளும், மடத்தனங்களும், முரண்பாடுகளும்,
பிழைகளும், சுத்த அறிவீனமும் அடங்கி உள்ளன.
அது தர்க்க அறிவோடும், வரலாற்றோடும், அறிவியலோடும், தனக்கு தானோடும் கூட முரண்படுகிறது.
அதனுடைய ஆசிரியர் ஒரு எழுத படிக்க தெரியாத மனிதன் என்பதை காட்டும் இலக்கண
பிழைகளும் கூட அதில் அடங்கியுள்ளன. இந்த புத்தகத்தைபோல ஒரு மடத்தனமான
புத்தகத்தை நீங்கள் அரிதாகவே காணமுடியும். அதை இலக்கிய படைப்பு என்று நான் அழைக்க முடியாத அளவுக்கு அது மோசமாக
எழுதப்பட்டுள்ளது.
மற்ற கேள்வியை பொறுத்தவரை, நமக்கு தெரியாது. நம்மிடம் உள்ள குர் ஆன் உத்மானால் தொகுக்கப்பட்ட ஒன்றே. முஸ்லிம்களுக்கிடையே இசையாமை என்பது இல்லாமல் இருப்பதற்காக குர் ஆனின் மற்ற
எல்லா பிரதிகளையும் (பாடபேதங்கள்/விருத்தாந்தங்கள்) அவர் எரித்துவிட்டார். அவரால் தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்ட
ஒன்றிலிருந்து மற்ற பிரதிகள் வேறுபட்டு இருக்க வேண்டும் என்பது தெளிவு. மற்றபடி அவர் அவைகளை எரித்து இருக்கமாட்டார். மற்ற பிரதிகள்
அல்லாமல், தன்னுடைய பிரதியே சரியான ஒன்று என்று அவர் எப்படி நிர்ணயித்தார்?
உறுதியாக அறிந்துகொள்ள அவருக்கு எந்த வழியுமே இல்லை. அவர் பொறுக்கி எடுத்துக்கொண்டது சரியானதல்ல என்பது சாத்தியமானதே. எப்படியாயினும், மற்ற எல்லா பிரதிகளும் அழிக்கப்பட்டுவிட்டதால்,
நம்மிடம் உள்ளது நிஜமான ஒன்றுதானா என்று கூறுவது சாத்தியமில்லை.
ஹதீத்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை பாருங்களேன். ஒரே கதையை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு
வழிகளில் அறிவித்துள்ளார்கள். விளக்கமான தகவல்களில் அவர்கள் மாறுபடுகிறார்கள். குர் ஆனின் வசனங்கள், அவைகள் மனப்பாடம் செய்யப்பட்டதால், ஒருவேளை அந்த அளவிற்கு இல்லையென்றாலும், இதைபோன்ற கதியையே அடைந்திருக்க கூடும்.
ஆனாலும், வித்தியாசத்தை தவிர்ப்பதற்கு, மற்ற பிரதிகளை உத்மான் எரிக்க வேண்டியிருந்ததால், இந்த
புத்தகம் மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று கொஞ்சம் பகுத்தறிவு சிந்தனையைக்கொண்டு நாம் அனுமானிக்கலாம்.
மேலும், தற்போதைய குர் ஆனின் பல வசனங்கள் முஹம்மது
சொன்னது அல்ல என்பதும் சாத்தியமானதே. எரிக்கப்பட்டவைகள் மூல வசனங்களாக
இருக்கலாம். பல வசனங்கள் என்றென்றைக்குமாக இழக்கப்பட்டிருக்கலாம்.
மூலத்தில் முகம்மதால் சொல்லப்படாத சில வசனங்களும் குர் ஆனில் சேர்க்கப்பட்டுள்ளன
என்பதும் சாத்தியமானதே.
மூல ஆசிரியர் : அலி சினா
(நவம்பர் 20 , 2011)
மொழி பெயர்ப்பு : ஆர்ய ஆனந்த்
13 கருத்துரைகள்:
வணக்கம் சகோ ஆர்ய ஆனந்த்,
/. நம்மிடம் உள்ள குர் ஆன் உத்மானால் தொகுக்கப்பட்ட ஒன்றே. முஸ்லிம்களுக்கிடையே இசையாமை என்பது இல்லாமல் இருப்பதற்காக குர் ஆனின் மற்ற எல்லா பிரதிகளையும் (பாடபேதங்கள்/விருத்தாந்தங்கள்) அவர் எரித்துவிட்டார்.//
இது இஸ்லமியர்கள் குரான் பற்றி சொல்லும் வரலாறு.இதற்கு சான்றுகள் இல்லை.ஒருவேளை உத்மான்(ஆட்சி பொ.ஆ 644 ___656)தொகுத்து இருந்தால் குரான் 6ஆம் நூற்றாண்டு பிரதி இருக்க வேண்டும்.ஆனால் இப்போதைய பழைய குரான் The Topkapi manuscript is an early manuscript of the Quran dated to the 8th century. This manuscript is currently kept in the Topkapi Palace Museum, Istanbul, Turkey.[1]
http://www.islamic-awareness.org/Quran/Text/Mss/topkapi.html
//
சனா குரான் மட்டுமே 7 ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். குரானை வடிவமைத்த்வர் டூம் ஆஃப் ராக் ஜெருசலேம் கட்டிய உம்மையாது அரசன் அப்துல் மாலிக்[685–705]
என்றே இராபர்ட் ஸ்பென்சர் த்னது முகமது வரலாற்றீல் இருந்தாரா புத்த்கத்தில் குறிப்பிடுகிறார்.
http://answering-islam.org/authors/roark/muhammad_exist.html
எனவே இஸ்லாமியர்களின் கதைக்கு மாற்று விளக்கங்களும் உண்டு!!!
நன்றி
நல்ல துவக்கம்!வாழ்த்துக்கள் ஆர்ய ஆனந்த்,
தன்னுடை தொகுப்பு சரியானது, நேர்மையானது எனில், உஸ்மான் மூலப்பிரதிகளை எரித்து அழிக்க வேண்டிய தேவையில்லையே?? இவர்கள் மூலப்பிரதிகள் என்று கூறிக்கொள்பவைகள்கூட தங்களுக்குள் முரண்பட்டிருந்தன என்பதையே உஸ்மானின் செயல் தெளிவாக்குகிறது
வாழ்த்துக்கள் ஆர்ய ஆனந்த்,
ஏற்கனவே முஸ்லிம்களே முஸ்லிம்களின் லேபிள்களை கிழித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் பங்கிற்கு கிழிப்பது பாராட்டத்தகுந்தது நன்றி தொடருங்கள்.
இனியவன்....
ஆ..ஊ..ன்னா மூலப்பதிவு ரஷ்யாவிலும்,துருக்கியிலும் இருக்கிறது என்கிறார்களே,மூலத்தை அவர்களிடம் விட்டுவிட்டு இவர்கள் எதை வைத்திருக்கிறார்கள்? அந்த மூலப்பதிவும் முழு குரானுமா அல்லது சில பக்கங்களா?விபரம்.
இனியவன்...
சகோ சார்வாகன்,
வணக்கம்,
// இது இஸ்லமியர்கள் குரான் பற்றி சொல்லும் வரலாறு.இதற்கு சான்றுகள் இல்லை.ஒருவேளை உத்மான்(ஆட்சி பொ.ஆ 644 ___656)தொகுத்து இருந்தால் குரான் 6ஆம் நூற்றாண்டு பிரதி இருக்க வேண்டும்.ஆனால் இப்போதைய பழைய குரான் The Topkapi manuscript is an early manuscript of the Quran dated to the 8th century. This manuscript is currently kept in the Topkapi Palace Museum, Istanbul, Turkey.[1]
http://www.islamic-awareness.org/Quran/Text/Mss/topkapi.html
//
ஏமன் நாட்டு தலைநகர் சன்ஆவில் உள்ள மசூதி ஒன்றில் மராமத்து வேலைகளை செய்ய பூமியை தோண்டும்போது கிடைத்த குர் ஆனின் கைப்பிரதிகளே தற்போதுள்ள மற்ற எல்லா குர் ஆன் பிரதிகளைவிட பழமையானது என்றும் அவை அதிகபட்சம் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் கார்பன் டேட்டிங் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட உண்மை ஒருபுறம் இருந்தாலும், முஸ்லிம்கள் கூறிக்கொள்வது போல உத்மான் தொகுத்த குர் ஆன் பிரதி இன்றும் தாஷ்கண்டிலும் எகிப்திலும் உள்ள அருங்காட்சியத்தில் இருந்தாலும், அவையும் கூட முஹம்மது கூறிய குர் ஆனின் மூலத்தின் பிரதியாக இருக்க வாய்ப்பில்லை என்பதை காட்டவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சகோ தஜ்ஜால்,
நன்றி.
// தன்னுடை தொகுப்பு சரியானது, நேர்மையானது எனில், உஸ்மான் மூலப்பிரதிகளை எரித்து அழிக்க வேண்டிய தேவையில்லையே?? இவர்கள் மூலப்பிரதிகள் என்று கூறிக்கொள்பவைகள்கூட தங்களுக்குள் முரண்பட்டிருந்தன என்பதையே உஸ்மானின் செயல் தெளிவாக்குகிறது //
பகுத்தறிவை பயன்படுத்தும் எந்த நபரும் இந்த உண்மையை புரிந்துகொள்வார். ஆனால் முஸ்லிம்கள்தான் எதையும் சிந்தித்து பார்க்க மறுக்கிறார்களே. குர் ஆனில் சிந்தித்து பார்க்கும்படி அல்லாஹ் அடிக்கடி கெஞ்சிக்கொண்டே இருக்கிறார். ஆனால் முஸ்லிம்கள் காபிர்களாக இருந்து அல்லாஹ்வின் கெஞ்சல்களை சட்டை செய்யாமல் இருக்கிறார்கள்.
சகோ இனியவன்,
// வாழ்த்துக்கள் ஆர்ய ஆனந்த்,
ஏற்கனவே முஸ்லிம்களே முஸ்லிம்களின் லேபிள்களை கிழித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் பங்கிற்கு கிழிப்பது பாராட்டத்தகுந்தது நன்றி தொடருங்கள்.//
நன்றி. கற்பனை கதையில், இலங்கைக்கு பாலம் கட்டுவதில் ராமருக்கு அணில் உதவியதைபோல, என்னால் முடிந்த அளவுக்கு இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை உலகுக்கு அம்பலப்படுத்த முயற்சிக்கிறேன்.
பழைய பிரதிகளை எரிப்பது மரபு என்பது இவர்கள் கூறும் மற்றொரு பதில்.
அங்கங்கு உள்ள நாடுகளுக்கு இஸ்லாம் பரவ ஆரம்பித்தவுடன் தப்பும்தவறுமாக குரானை ஓத ஆரம்பித்து விளக்கம் தவறாக கொடுத்து வந்ததனால் குரானை ஒன்று படுத்தி தொகுக்கும் பொறுப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது! இதற்கு எந்தவிதமான வஹியோ,கட்டளையோ யாரிடமிருந்தும் வரவில்லை! இவர்களாகவே அன்னாருக்கு செய்யும் தொண்டாக நினைத்து உருவாக்கியதுதான் இந்த குரான், இதன் ஆசிரியர் உதுமான் மட்டுமல்ல நிறையபேர் என்பதும் நாம் அறிந்த ஒன்று!
இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது இதுதான்!
குரானை தொகுக்கவே பதினைந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் கிறுக்கு மார்க்கவாதிகள் பதினைந்து வருடம் என்பதை மிகக்குறைந்த கால அளவாக நினைத்து பைபிள் தொகுக்க ஆகிய கால அளவை வைத்துகொண்டுசிலாகிக்கிறார்கள். தப்பும் தவறுமாக ஓதி,விளங்கி பின்பற்றிய மக்கள் பதினைந்து வருடங்களில் எத்தனையோ!II இடைப்பட்ட 15 வருடத்தில் வேதம் கொடுக்கப்பட்ட அரபுலக மக்களுக்கு,சரியாக சென்றடையாத அஜமிகளுக்கு அல்லா எதை வைத்து தீர்ப்பளிப்பான்?
அதுவரை குரானை பின்பற்றாத விளங்காத (இன்றும் அப்படித்தானே) மக்களுக்கு என்ன தீர்ப்பு என்பதை அல்லாவே அறிவான் என்றும் கூறி மழுப்புவார்கள்!
காட்டுவாசிகளுக்கும் ,குரான் என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கும் ஓரிறை கொள்கையை எத்தி வைக்க இயலாத இறைவன் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க,இறைவனின் சொந்த மண்ணிலேயே (!) அவனுடைய நாவலை எடுத்துகூற இதனை வருடங்களா? என்பதை நினைக்கும்போது இறைவனின் முடக்குவாததை நினைத்து பரிதாபப்படவேண்டும்!
@ சகோதரன்,
// பழைய பிரதிகளை எரிப்பது மரபு என்பது இவர்கள் கூறும் மற்றொரு பதில்.//
இது முஸ்லிம்களின் சொத்தை வாதம். பழைய பிரதிகளை எரிப்பதென்றால் எத்தனை காலத்திற்கு ஒருமுறை எரிப்பார்களாம். அதற்கு ஏதாவது கால நிர்ணயம் செய்துள்ளார்களா? அதற்கான அதிகாரத்தை முஸ்லிம்களுக்கு யார் கொடுத்தது? முஹம்மதா அல்லது முஹம்மதின் மனசாட்சியான அல்லாஹ் அதற்கும் வஹி இறக்கினாரா?
பழைய பிரதிகளை எரிப்பது ஒருபுறம் இருக்கட்டும். முஹம்மது வஹி பெற்று, அதை ஓதி காண்பித்து, எழுதி சரிபார்த்த மூல குர் ஆனை, அதை பின்வரும் சந்ததிகள் அறியாவண்ணம் ஏன் எரித்து அழித்துவிட்டார்கள் என்பதுதான் நம்முடைய கேள்வியே. அதற்கு பகுத்தறிவின்படி ஒரே பதில் தான் இருக்க முடியும். அது, முஹம்மதின் மூல குர் ஆனும் உத்மான் தொகுத்ததாக கூறப்படும் இன்றைய குர் ஆனும் ஒன்றுக்கொன்று பல விஷயங்களில் மாறுபடுபவை என்பதே.
வாழ்த்துக்கள் ஆர்ய ஆனந்த்.. தொடருங்கள் உங்கள் பணியை..
நன்றி, சகோ சிவப்பு குதிரை அவர்களே.
Yenakku ori doubt tajjal bible sathan na kurikka 666 n dra no use pandranga kuran motham 6666 vasanagala kondu irukku itu eppidi mulim gal therinche itha pannagala illa alla kuduthathe 6666 vasanangal thana appidina alla cheistiyanuku saathana vilakkam venum plse
டேய் நாய்ய மொதல்ல எங்கே குரைகள் கண்ட அதை மொதல்ல கருத்து சோல்லுடா
Post a Comment