Saturday, 18 August 2012

ஒரு மரணம் சில கேள்விகள்-5


கிருஸ்துவர்களுடனான விவாதத்தில், தொழுகைமுறை, ஜக்காத்து போன்ற அடிப்படையான இஸ்லாமியக் கடமைகள்பற்றிய விளக்கம்கூட குர் ஆனில் இல்லை என்றார் ஜெர்ரி. அதற்கு பீஜே பதிலளிக்கையில், Instruction, manual, technician என்று ஏதேதோ உளறி குர்ஆனின் சொல்லப்படாத வஹீ ஹதீதுகளில் உண்டு என்றார். அந்த ஹதீதுகளில் உள்ளவைகளைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இவர்களது கோமளித்தனங்களை விளக்க இன்னொரு ஹதீஸை கவனிப்போம்
                Narrated Ali ibn AbuTalib:
Ibn Abbas said: A lunatic woman who had committed adultery was brought to Umar. He consulted the people and ordered that she should be stoned. Ali ibn AbuTalib passed by and said: What is the matter with this (woman)?
They said: This is a lunatic woman belonging to a certain family. She has committed adultery. Umar has given orders that she should be stoned.
He said: Take her back. He then came to him and said: Commander of the Faithful, do you not know that there are three people whose actions are not recorded: a lunatic till he is restored to reason, a sleeper till he awakes, and a boy till he reaches puberty?  He said: Yes. He then asked: Why is it that this woman is being stoned? He said: There is nothing. He then said: Let her go. He (Umar) let her go and began to utter: Allah is most great.
(Abu Dawud 4385)
            (இப்ன் அப்பாஸ் கூறினார்: மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் விபச்சாரக் குற்றம் புரிந்ததாகக் கூறி உமரிடம் கொண்டுவரப்பட்டார். அவர் மக்களுடன் கலந்தாலோசித்த பிறகு கல்லெறிந்து கொல்லுமாறு உத்தரவிட்டார். அவ்வழியாக கடந்து சென்ற அலீ பின் அபூதாலிப், (இப்பெண்ணின்) விஷயம் என்ன? என்று கேட்டார்
அவர்கள் கூறினார்கள், மனநிலை பாதிக்கப்பட்ட இந்தப் பெண் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். இவள் விபச்சாரம் புரிந்துள்ளாள். இவள் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று உமர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினர்.
(தண்டனையிலிருந்து) அவளை அழைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் (அலீ) கூறினார். பிறகு அவரிடம் வந்தார் நம்பிக்கையாளர்களின் தலைவரே, மனநிலை பாதிக்கப்பட்டவர் மீண்டு வரும்வரை, உறக்கத்திலிருப்பவன் எழுந்திருக்கும் வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை இந்த மூவர்களது செயல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதைப்பற்றி அறிவீர்களா? என்றார். அவர் (உமர்) ஆமாம் என்றார். இந்தப் பெண் எதற்காக கல்லெறிந்து தண்டிக்கப்பட வேண்டும்? என்றார். (அப்படி தண்டிக்க) இதில் ஒன்றுமில்லை என்றார். அவளை போக அனுமதியுங்கள் என்றார் (அலீ). பிறகு, அவள் போகலாம் என்று கூறிய உமர் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறத் துவங்கினார்.

(மொழிபெயர்ப்பு என்னுடையது). இந்த ஹதீஸ், அலீ அங்கு வரவில்லையெனில் மனநிலைபாதிக்கப்பட்ட அந்தப்பெண் கொல்லப்பட்டிருப்பார் என்கிறது. ஹதீஸ்களில் எத்தனை விதமான மடத்தனங்கள், மலிந்துள்ளது என்பதற்கு இந்த ஹதீஸும் ஒரு உதாரணம். உமருக்கும், அவர் ஆலோசனை செய்த மற்றவர்களுக்கும் முஹம்மதின் போதனை தெரியவில்லை, அலீ கேட்கும்பொழுது, விதிவிலக்குகளை மறந்துவிட்டேன் என்றுகூட வருத்தப்படாமல் ஆமாம் என்று ஆமோதிப்பவர் முன்னமே அதைப்பற்றி சிந்திக்கவில்லையா?
சொர்க்கத்திற்கு செல்லக் கூடியவர்கள் என்று முஹம்மதால் அறிவிப்பு செய்யப்பட்ட பத்து நபர்களில் அபூபக்கரும், உமரும் முதன்மையானவர்கள் (அபூதாவூத் 4632) என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். முஹம்மதின் போதனைகளை அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் கைத்தடிகள்கூட பின்பற்றவில்லை என்பதே ஹதீஸ்கள் நமக்கு கூறும் செய்திகள்.
ஃபாத்திமா வாரிசுரிமை கேட்டு போர்க்கொடி தூக்கினார். அபூபக்கரின் பதிலால் எரிச்சலுற்று அவருடன் பேசுவதைக்கூட கைவிட்டார் என்பதைப் பார்த்தோம். ஃபாத்திமாவை தனது ஈரலின் ஒருபகுதி என்று வர்ணனை செய்து, எவர் ஃபாத்திமாவை கோபப்படுத்துகிறாரோ அவர் என்னை கோபப்படுத்துவதை போன்றதாகும் என்றும் முஹம்மது கூறியுள்ளார். அபூபக்கரும், உமரும் இதை அறிவார்களா? முஹம்மதின் ஈரல் துண்டான ஃபாத்திமா தனது 27-28 வயதில், அவரது தந்தை இறந்த ஆறாவது மாதத்தில் மரணடைந்தார். அவர் அபூபக்கருடன் மோதலை ஏன் துவக்கினார்? இப்படி திடீரென மரணத்தை தழுவுவதற்காகவா?
முஹம்மதின் குடும்பத்தினர், அபூபக்கரையும், உமரையும் பொய்யர்களாகவும் பாவியாகளாகவும் நாணயமற்ற மோசடிக்காரர்களாகவுமே கருதிவந்துள்ளனர்.
அபூபக்கர் ஆட்சியில் அமர்ந்ததும் மற்றவர்களின் ஆதரவை வம்படியாகக் கேட்டுப்பெற்றனர். அலீ தனது ஒப்புதலை அளிக்கவில்லை. இந்நிலையில் ஊரறிந்த முரடரான உமரை, அலீ-ஃபாத்திமாவின் இல்லத்திற்கு அனுப்புகிறார்; அங்கு கோபமாக செல்லும் உமர்,  கதவை உதைத்து திறந்ததாகவும், அப்பொழுது கர்பிணியாக இருந்த ஃபாத்திமா நிலைகுலைந்து கிழே விழுந்தார், அதன் பாதிப்பினால்தான் ஃபாத்திமாவின் மரணம் நிகழ்ந்ததாக ஷியாக்கள் கூறுகின்றனர். ஃபாத்திமாவின் மரணமும் இயற்கையாக நிகழவில்லை என்பதைக் குறிப்பிட விரும்பியே இதைக்கூறுகிறேன். இந்த கொலை வழக்கை வேறொரு வாய்ப்பில் விவாதிக்கலாம். முஹம்மது துவக்கிவைத்த இரத்தவெறி அவரையும் அவரது குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை.
3 - 4 ஆண்டுகளுக்குமுன் உட்கொண்டார இல்லையா என்று உறுதி செய்ய முடியாத உணவிலிருந்த விஷத்திற்கு உயிர் வருகிறது, முஹம்மதின் வாரிசு என்று அறியப்படும் மரியத்துல் கிப்தியாவிற்கு பிறந்த ஆண் குழந்தை திடீரென இறந்து போகிறது, முஹம்மதின் இறுதி விருப்பம் முடக்கப்படுகிறது, ஃபாத்திமா திடீரென இறந்து போகிறார், அலீ ஒதுக்கப் படுகிறார், வாரிசுரிமை கேட்ட முஹம்மதின் விதவை மனைவியர்களும் ஏமாற்றத்திற்குள்ளாகின்றனர். அல்லக்கைகளுக்குள் பதவிக்காக போர் வெடிக்கிறது.
உலக ஆதாயங்களுகாக, அபூபக்கர்-உமர்-உஸ்மான்-அலீ பின் அபூதாலிப்-உஸ்மான்ஆயிஷா-முஆவியா-யஜீத்இன்னும்பலர்.. வகையறாக்கள் நிகழ்த்திய இரத்தவெறியாட்டத்தை என்னவென்று சொல்வது. ஃபதக்கின் வாரிசுரிமையில் வெளிப்பட்ட கோபம், சுயநலம், பதவிமோகம் வெறி கொண்டு ஒருவரையொருவர் கொன்று வஞ்சம் தீர்க்க போர்களத்திற்கு அழைத்து வந்தது. விதவிதமாக வஞ்சம் தீர்த்தது. இத்தகைய ஈனப்பிறவிகள், அதிகாரத்திற்காக ஒரு கிழவரை கொல்லத் துணியவில்லை என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது?

முஹம்மதின் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும்?
முஹம்மது, தன்னுடைய இறுதி நாட்களில் அங்கு நடந்த குழப்பங்களை நன்கு அறிந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான தலைவலியும், காய்ச்சலும் இயற்கையாக ஏற்பட்டதா? என்பதுதான் கேள்வி. ஒரு கூட்டம் திரும்பத்திரும்ப தலைவலியும் காய்ச்சலும் மூன்று ஆண்டுகளுக்குமுன் கொடுக்கப்பட்ட விஷத்தினால்தான் என்று வலிந்து கூறுவது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்ட ஏதோ ஒரு கூட்டணி விஷத்தை கொடுத்துவிட்டு பழைய கதையை ஜோடித்துள்ளதாக கருத நிறைய வாய்ப்புள்ளது.
முஹம்மது இறந்துபோகவே மாட்டார் என்பதுபோல் “முஹம்மது இற்துவிட்டதாக எவரேனும் கூறினால் வெட்டிவடுவேன்” என்று உமர் ஆடிய நாடகமும், குர்ஆன் இருக்க முஹம்மதுவின் பிற ஒரு கருத்து எழுதிட வேண்டிய அவசியமில்லை என்று தடுத்ததும் அவரை குற்றவாளியாக்குகிறது.
ஆயிஷா-அபூபக்கர் கூட்டணி, அலீயின் வாரிசுரிமை திட்டங்களை அறிந்திருந்தவர்கள். அலீக்கு எதிராக சதிகளை தொடங்கி முஹம்மதுவின் மரணத்தினை விரைவுபடுத்திட விரும்பி விஷம் வைத்ததாகவும் கருதலாம். ஏனெனில் முஹம்மதிற்கு மரண வேதனையைக் கொண்டுவந்த தலைவலி துவங்கிய உடனே அபூபக்கரை கலீஃபாவாக நியமிக்க விரும்பினார் (புகாரி 7217) என்று ஆயிஷா கூறிக்கொண்டு, மரணத்திற்குபின் ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்டதால் இக்கூட்டணி விஷம் வைத்ததாக நினைக்க இடமளிக்கிறது.
எப்பொழுதுமே முஹம்மது ஆயிஷாவின் பக்கமே இருந்ததால் எரிச்சலுற்ற அலி கூட்டணி வாரிசுரிமையை பெற்றவிடலாம் என்று விஷம் வைத்ததாகவும், ஆட்சி அதிகாரத்தில் எவ்வித உரிமையையும் முஹம்மது வழங்காது ஏமாற்றியதால் முஹம்மதை முதன்முதலில் ஆதரித்து காப்பாற்றிய அன்சாரிகள் கோபம் கொண்டுவிஷம் வைத்ததாகவும் கருத இடமுண்டு. யார் விஷம் கொடுத்தது?
முஹம்மதுமேல் அற்புதங்களையும், புனிதங்களையும் ஏற்றி பிழைத்துவரும் அவர்கள் இப் பிரபஞ்சத்திற்கே அற்புதமாக அருளப்பட்ட “கடவுளின் தூதர் கொல்லப்பட்டார்” என்று கூறினால் புனிதத்திற்கு மாசு ஏற்படும் என்று அவரின் மரணத்தை அல்லாவின் விதி என்று பூசிமெழுகுகின்றனர். ஆவனங்களை ஆய்வு செய்வோமானால் விடைகிடைத்துவிடும். ஆனால் வாய்வழியாக தொகுக்கப்பட்ட குர்ஆனையும் ஹதீதுகளையும் தவிர வேறு எதனையும் விட்டுவைக்காது அவர்கள் அழித்துவிட்ட நிலையில் ஆதாரங்கள் கிடைப்பது அரிதுதான். ஆனாலும் எந்த ஒரு குற்றவாளியும் தடயங்களை விட்டுவைக்காது இருந்ததில்லை. முயற்சி செய்வோம். விடை தேடுவோம்.
தஜ்ஜால்

Facebook Comments

12 கருத்துரைகள்:

ஆர்ய ஆனந்த் said...

//..அபூபக்கர் ஆட்சியில் அமர்ந்ததும் மற்றவர்களின் ஆதரவை வம்படியாகக் கேட்டுப்பெற்றனர். அலீ தனது ஒப்புதலை அளிக்கவில்லை. இந்நிலையில் ஊரறிந்த முரடரான உமரை, அலீ-ஃபாத்திமாவின் இல்லத்திற்கு அனுப்புகிறார்; அங்கு கோபமாக செல்லும் உமர், கதவை உதைத்து திறந்ததாகவும், அப்பொழுது கர்பிணியாக இருந்த ஃபாத்திமா நிலைகுலைந்து கிழே விழுந்தார், அதன் பாதிப்பினால்தான் ஃபாத்திமாவின் மரணம் நிகழ்ந்ததாக ஷியாக்கள் கூறுகின்றனர்...//

உமரும் அவருடன் சென்றவர்களும் அலி-பாத்திமா வீட்டுக்கு சென்றபோது அலி குடும்பத்தினரோடு காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்து அவர்கள் சில குத்துக்களை(blows) பரிமாறிக்கொண்டனர் என்று ஷியாக்களின் தொகுப்புகளில் கூறப்படுகிறது.

குட்டிபிசாசு said...

வரலாற்று சம்பவங்களின் மேல் தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகள், ஏதோ துப்பறியும் நாவல் படிப்பது போல உள்ளது. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி.

சிவப்புகுதிரை said...

பங்காளி சண்டைகளைவிட கேவலமான சண்டையாக தானே இருக்கின்றது..முகமது சொன்ன சுவனவாசிகளுக்குள்ளே எவ்வளவு முரன்ப்படுகள்...

Unknown said...

சகோ.தஜ்ஜால்,

குரானுக்கு ஹதீஸ் முரண்படுவதால்தான் தேடிதேடி கண்டுபிடித்து பலஹீனமான ஹதீஸ் என்ற பித்தலாட்டத்தை அரங்கேற்றிவருகிறார்கள். குரானும் ஹதீஸும் ஒன்றுதான் என்றும் எல்லாம் செய்திதான் என்றும் கூறிக் கொள்வார்களாம்,ஹதீஸும் இன்னொரு வஹீ என்றும் சொல்லுவார்களாம்,முரண்பட்டவைகள் எல்லாம் பலஹீனமானது என்றும் சொல்லிக் கொள்வார்களாம். இப்படி லூசுத்தனமாக உளறிக் கொண்டும்,குரானில் அறிவியலைக் குழப்பி பிசைந்தும் கேட்பவர்களை கேனயன் என நினைத்து குரானை வியாபாரமாக்கிவிட்டார்கள்!!!!!!!!!!!!!

இனியவன்.....

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆர்ய ஆனந்த்,
///உமரும் அவருடன் சென்றவர்களும் அலி-பாத்திமா வீட்டுக்கு சென்றபோது அலி குடும்பத்தினரோடு காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்து அவர்கள் சில குத்துக்களை(blows) பரிமாறிக்கொண்டனர் என்று ஷியாக்களின் தொகுப்புகளில் கூறப்படுகிறது./// ஃபாத்திமாவின் மரணம் தொடர்பான செய்திகளையும், வழக்கம்போல, இது ஷியாக்களின் ஹதீஸ் பலகீனமானது பொய், இட்டுக்கட்டப்பட்டது என்று கூறி புறக்கணிக்கின்றனர். ஷியாக்கள் சுன்னத் ஜமாத்தினரை பொய்யர்கள் இட்டுக்கட்டுபவர்கள் என்கின்றனர்.

தஜ்ஜால் said...

வாருங்கள் குட்டிபிசாசு,
//ஏதோ துப்பறியும் நாவல் படிப்பது போல உள்ளது.// துப்பறியும் நாவல் மட்டுமல்ல, அதிரடி சண்டைக் காட்சிகளும், மிரள வைக்கும் நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம், கொலை, கொள்ளை, கற்பழிப்புக்காட்சிகளையும் திகட்ட திகட்ட வாரிவழங்கும் வரலாறு.

தஜ்ஜால் said...

வாருங்கள் சிவப்புக்குத்ரை
//பங்காளி சண்டைகளைவிட கேவலமான சண்டையாக தானே இருக்கின்றது.// பதவி, அதிகாரத்திற்காக நயவஞ்சகமாக ஒருவரையொருவர் கொன்று குவித்துள்ளனர். ஆனால் அவர்கள் சொர்க்கவாசிகளாம். நாற்றமெடுக்கும் இந்த உண்மைகளை விவாதிக்கும் நாம் நரகவாசிகளாம்.

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,
//குரானும் ஹதீஸும் ஒன்றுதான் என்றும் எல்லாம் செய்திதான் என்றும் கூறிக் கொள்வார்களாம்// ஆமாம் அவர்களுக்கு தேவைப்படும் பொழுது குர்ஆனும் ஹதீஸும் ஒன்றாகிவிடும். இல்லையெனில் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாக மாறிவிடும். என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக் கேட்க ஆட்டுமந்தைகூட்டம் தயாராக இருக்கிறதே! இஸ்லாமின் உண்மைமுகத்தை அறிய பெரிய கல்வியறிவு தேவையில்லை. மிக சாதாரணமான கேள்விகளுக்கே இஸ்லாம் தாக்குப்பிடிக்காது. இந்த லட்சணத்தில் இவர்களுக்கு அறிவியல் ஒரு கேடு!

மணி said...

பாராட்டுக்கள் தஜ்ஜால்,

இஸ்லாத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து வினா தொடுத்திருக்கிறீர்கள். பார்க்கலாம் பதில் வருகிறதா என்று.

ஒரு வேண்டுகோள்: கட்டுரைக்குத் தகுந்த படங்களை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தஜ்ஜால் said...

வாருங்கள் மணி,
பதில் வருவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஏனெனில் இந்த விவகாரத்தில் அபூபக்கர்-உமர் வகையறா, அல்லது அலீ வகையறா இவர்களில் எவரை ஆதரித்தாலும் விவகாரமகிவிடும். எனது நண்பரான இஸ்லாமிய மத அறிஞர் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபொழுது, அலீயை திட்டமிட்டு ஓரங்கட்டியது உண்மைதான் என்றார். ஆனால் மற்றவர்களோ, “அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்” என்று நழுவிவிடுவார்கள். இனிவரும் பதிவுகளில் படங்களை இணைக்க முயற்சி செய்கிறேன்

ibn lahab said...

dajjal you r a genius...!!!!

Unknown said...

அருமையான தொடர் சார் .அதிகம் யோசிக்க வைத்தீங்க.வாழ்த்துக்கள்