நண்பர் ஒருவரின் இம்சை தாங்க
முடியாமல், சில நாட்களுக்கு முன் சொற்பொழிவு கூட்டம் (பயான்) ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.
அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து ஒரு கதையைமட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒரு முறை முஹம்மதிற்கு சிறுநீர்
கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபொழுது, மறைவான இடம் கிடைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக்
கொண்டிருந்தாராம். இதைக்கண்ட முஹம்மதின் தோழர், சற்று தொலைவிருந்த ஒரு மரத்திடம் சென்று,
“ஏய் மரமே, அல்லாஹ்வின் தூதர் சிறுநீர் கழிக்க மறைவான இடம் தேடிக்கொண்டிருக்கிறார்,
உன்னால் அவருக்கு ஒரு மறைவிடம் உருவாக்கித்தர வேண்டும். இதை அல்லாஹ்வின் தூதர் பெயரால்
ஆணையிடுகிறேன்” என்றாரம்.
உடனே, அந்த மரம் வேறுடன் பெயர்ந்து,
நகர்ந்துவந்து, முஹம்மதிற்கு தோதாக, மறைவிடமாக நின்றுகொண்டதாம். முஹம்மது தனது தேவையை
நிறைவேற்றிக் கொண்டதும், அந்த மரம் மீண்டும் நகர்ந்து சென்று தனது பழைய இடத்திலேயே
நின்றுகொண்டதாம்.
சொற்பொழிவாளரோ, மேலும் சில கதைகளையும்
கூறி, சிறிதுகூட வெட்கமில்லாமல் பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று
முடித்தார் நான் எனது நண்பரைப் பார்த்தேன் அவர் முகத்தில் அசடுவழிய சிரித்தார். கல்
பேசுகிறது, மரக்கட்டை அழுகிறது, உயிருள்ள மரம் நடந்துவருகிறது எனும்பொழுது உருவழிபாடு
செய்கிறவர்களின் கல், மரக்கட்டைகளில் உள்ள உருவங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று கூறுவது இவர்களின் மதவெறிக்கு ஒரு சான்று. நாம் இவர்களின் உளறல்களைச் சுட்டிக்காட்டினால்
மதநம்பிக்கை புண்பட்டுவிட்டதாக ஓலமிடுவார்கள்,
பத்தவாக்களை தூக்கிக்கொண்டு வெறிபிடித்து அலைவார்கள். ஆனால் பிறநம்பிக்கைகளை எள்ளிநகையாடுவார்கள்.
மனிதர்களே!
உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி
நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட
படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த
ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும்
பலவீனமாக இருக்கிறார்கள்.
(குர்ஆன் 22:73)
தெய்வங்கள்
என்று கூறப்படும் பிறவைகள் எந்த சக்தியும் அற்ற ஜடங்கள், அவைகள் சைத்தானால்
உருவாக்கப்பட்டவைகள் என்று குர்ஆன் கூறுகிறது. இதுதான் குர்ஆன் மூலம் அல்லாஹ்(முஹம்மது) கற்பிக்கும்,
மதங்களுக்கிடையே ஆன நல்லிணக்கம், அன்பு, அமைதி, சகோதரத்துவம், பகுத்தறிவு(?).
கடந்த பகுதியில் முடி மற்றும்
எச்சிலைப்பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். முஹம்மது தனது எச்சிலைக் காறி உமிழ்ந்தபொழுது
அவரது கைத்தடிகள், அதைக் கையில் பிடித்து முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொண்டதற்கான
காரணம், அது புனிதமானவைகள் மட்டுமல்ல, அற்புதங்களின் பிறப்பிடமாகவும் மருத்துவ குணங்கள்
நிறைந்ததாகவும், அவர் காண்பித்துக் கொண்டதுதான். அவரது எச்சில் செய்த மற்றொரு அற்புதத்தையும்
பார்க்கலாம்.
உணவைப் பெருகச் செய்த அற்புத எச்சில்,
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது
நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன்…..
அப்போது நபி (ஸல்)
அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு
தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று
கூறினார்கள்..... பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி
குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்)
உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம்
ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச்
சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப்
பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என்
மனைவியை நோக்கி), ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு)
அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக்
கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு
(வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை
விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு
கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே
இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும்
குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.
(புகாரி)
ஒரு சிலருக்கு மட்டுமே போதுமானதாக
இருக்கும் உணவு, ஆயிரம் நபர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தும், முன்பிருந்ததைப்
போல நிறைவாகவே இருப்பது எப்படி? நம்மைப் போன்ற ஒரு சராசரி மனிதனின் எச்சில் எப்படி
உணவைப் பெருகச் செய்யமுடியும்? அதற்கான வேதிவினை என்னவோ?
நாம்
இன்று உணவுத்தேவையில் தன்னிறைவடைந்துவிட்டதாக பீற்றிக்கொண்டிருந்தாலும் பட்டினிச்சாவு
என்னவோ தொடர்கதையாகத்தான் இருக்கிறது. உணவைப் பெருகச் செய்யும் எச்சில் மூலமாவது பட்டினிசாவைக்
குறைக்கலாமல்லவா? இஸ்லாம் பகுத்தறிவும், அறிவியலும் நிறைந்த பூர்வமான மார்க்கமல்லவா?
எனவே வேதியியல் தெரிந்த ஈமாந்தாரிகள் விளக்க வேண்டும்.
எச்சில் மற்றும் முடியை பொருத்தவரையில்
அவைகள் இருக்குமிடத்தில் இருக்கும்வரைதான் வெளியேற்றப்பட்டுவிட்டால் அது அசுத்தமானதுதான்.
ஆனால் தன்னை ஒரு புனிதப் பிறவியாகத்தான் முஹம்மது எண்ணிக் கொண்டிருந்தார். மருத்துவ குணம் கொண்ட எச்சில்,
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன்…
நபி (ஸல்) அவர்கள், அலீ பின் அபீதாலிப் எங்கே? என்று கேட்டார்கள். மக்கள், அவருக்குக் கண்வலி
அல்லாஹ்வின் தூதரே!
என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், அவருக்கு
ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள்
வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு)
பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி
நீங்கி) குணமடைந்தார்கள்.
(புகாரி)
அடுத்தது
விரல்களிலிருந்து நீர் சுரந்த அற்புதம்
ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபிய்யா
உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்)
அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி (ஸல்) அவர்கள்
உளூ செய்தார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்)
அவர்கள், உங்களுக்கென்ன ஆயிற்று? என்று
கேட்டார்கள். மக்கள், தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர
நாங்கள் உளூ செய்வதற்கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை என்று
பதிலளித்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள் தம் கையைத் தோல்
குவளையினுள் வைத்தார்கள். உடனே, அவர்களுடைய
விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது.
நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தினோம்; மேலும்,
உளூ செய்தோம்.
அறிவிப்பாளர் சாலிம்
பின் அபில் ஜஅத் (ரஹ்) கூறுகிறார்கள்:
நான் ஜாபிர் (ரலி)
அவர்களிடம், நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள், நாங்கள் ஒரு லட்சம்
பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள்
ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம் என்று பதிலளித்தார்கள்.
(புகாரி)
ஒருவர் ஒளுச் செய்ய குறைந்தபட்சம்
ஒரு லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம். அப்படியானால் அன்று முஹம்மது ஆயிரத்து ஐநூறு லிட்டர்கள்
தண்ணீர் சுரந்திருக்கிறார். ஆனால் இந்த கதைகளை அறியாத அல்லாஹ் தண்ணீர் கிடைக்காத நேரத்தில் தயமும் செய்து கொள்ளுங்கள்
என்று அப்பாவியாக கூறுகிறான்.
...தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு
அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக்
கொள்ளுங்கள்!
(குர்ஆன் 5:06)
எந்த ஒரு மனிதனையும் கசக்கிப்
பிழிந்தாலும் இத்தனை திரவம் சுரக்க வழியே இல்லை. நாமறிந்த வரையில் தாய்ப்பால், இரத்தம்,
எச்சில், வியர்வை, சிறுநீர், விந்து போன்றவைகள் மனித உடலிலிருந்து நீர்ம வடிவில் வெளியேறுவதைக் காண்கிறோம். முஹம்மதிற்கு
பீறிட்டு சுரந்து, அவரது கைத்தடிகள் ஒளு செய்யப் பயன்படுத்தியது இவற்றில் எதுவோ?
ஒருவேளை முஹம்மதிற்கு நீர் சுரப்பதை
அல்லாஹ் முன்பே அறிந்திருந்தால் இப்படி ஒரு வசனத்தை இறக்கியிருக்கக் கூடும்.
தண்ணீர்
கிடைக்காத போது முஹம்மதின் ’உறுப்பு’களிலிருந்து
நாம் தண்ணீரை சுரக்கச்செய்வோம் அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்!
முஹம்மதின்
உடலிலிருந்து சுரக்கும் நீரின் பயன்பாடு ஒளுவுடன் நிற்கவில்லை
Imam Jalal al-Din Suyuti reports from Abu Ya’la, Hakim, Dar Qutni,
Tabarani, Abu Nu’aym from Umm Ayman (also known as Barakah)
May Allah be pleased with her, who said, ‘the Prophet got up one
night and urinated in a bowl. During that night, I rose in the state of thirst
so I drank whatever was in the bowl. In the morning I told Him what I done and
He smiled and said, ‘surely you will never have pain in your stomach’’. Abu
Ya’ala’s wordings are as follows, ‘you will never feel stomach pain as of
today’
Tabarani said: Hussain bin Is’haq al-Tustari informed us, who was
informed by Uthman bin Abi Shaybah, who was informed by Shababah bin Sawwar,
who was informed by Abu Malik al-Nakha’i who narrated from Aswad bin Qays, who
narrated from Nubayh al-Anazi, who narrated from Umm Ayman, who said: ‘‘One
night the Prophet got up and went to a side to urinate in the bowl. During the
night, I rose and was thirsty so I drank whatever was in it and I did not even
realize what it was. In the morning, He said, ‘Oh Umm Ayman! Throw away
whatever is in the bowl’. I replied, ‘I drank what was in the bowl’. He
thereafter smiled as such that His teeth appeared and said, ‘Beware! You will
never have stomach pain’’.
(உம்மு அய்மன் கூறுகிறார், ஒரு நாள் இரவில் எழுந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு கிண்ணத்தில் சிறுநீர் கழித்திருந்தார். தாகத்தின் காரணமாக இரவில் எழுந்த நான் கிண்ணத்திலிருந்ததைக் குடித்துவிட்டேன். அதிலிருந்தது என்னவென்றும் என்னால் அறியமுடியவில்லை. காலையில், ”ஓ உம்மு அய்மன், கிண்ணத்திலிருப்பதை தூரமாக எறிந்துவிடு என்று அவர் கூறினார். “கிண்ணத்திலிருப்பதை நான் குடித்துவிட்டேன்” என்றேன். உனக்கு ஒருபொழுதும் வயிற்றுவலியே வராது என்று அவர் பற்கள் தெரிய சிரித்தவாறு கூறினார்.)
(உம்மு அய்மன் கூறுகிறார், ஒரு நாள் இரவில் எழுந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு கிண்ணத்தில் சிறுநீர் கழித்திருந்தார். தாகத்தின் காரணமாக இரவில் எழுந்த நான் கிண்ணத்திலிருந்ததைக் குடித்துவிட்டேன். அதிலிருந்தது என்னவென்றும் என்னால் அறியமுடியவில்லை. காலையில், ”ஓ உம்மு அய்மன், கிண்ணத்திலிருப்பதை தூரமாக எறிந்துவிடு என்று அவர் கூறினார். “கிண்ணத்திலிருப்பதை நான் குடித்துவிட்டேன்” என்றேன். உனக்கு ஒருபொழுதும் வயிற்றுவலியே வராது என்று அவர் பற்கள் தெரிய சிரித்தவாறு கூறினார்.)
இந்த செய்தி தொடர்பாக வரும் மற்றொரு
ஹதீஸ், “உனது வயிற்றை நரக நெருப்பு தீண்டாது” என்றும் முஹம்மது கூறினார் என்று போகிறது.
முஹம்மது சிறுநீர் கழித்ததும்,
உம்மு அய்மன் என்னவென்று அறியாமல் அதைக் குடித்ததும் தற்செயலான நிகழ்வுகளே. ஆனால் அதற்கு
முஹம்மது கூறும் மருத்துவ விளக்கம் சகிக்க முடியாதவைகளாக உள்ளன. ஜூலை 13, 2007-ம் ஆண்டு
எகிப்திலுள்ள The Middle East Media Research Institute என்ற நிறுவனம் முஹம்மதின் உடலிலிருந்து
வெளியேறும் கழிவுகள் அனைத்துமே புனிதமானவைகளே என்றொரு ஃபத்வாவை வழங்கி, பெயர்தாங்கி
முஸ்லீம்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டு. சாதரண கால்நடையான
ஒட்டகத்தின் சிறுநீருக்கே மருத்துவகுணம் இருப்பதாகக் கூறுவதை ஏற்பவர்களுக்கு, இப்பிரபஞ்சத்தின்
அதிமுக்கியத்துவம் வாய்ந்த படைப்பான முஹம்மதின் சிறுநீரின் மீது சந்தேகம் தோன்றலாமா?
நிச்சயமாகத் தோன்றியிருக்கக் கூடாது!
உண்மை என்னவெனில், முஹம்மது தனக்கு
வஹீ மூலம் வழங்கப்பட்ட குர்ஆனை மட்டுமே தனது அற்புதமாகக் கூறுகிறார். அதனால்தான் குர்ஆனைப்போல
ஒரு அத்தியாயம் கொண்டுவரமுடியுமா? பத்து அத்தியாயம் கொண்டுவரமுடியுமா? என்று பீற்றிக்கொண்டிருந்தார்.
முஹம்மதின் இந்த உளறல்களை மக்காவாசிகள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் முஹம்மதிடம், நீர்
அல்லாவின் தூதரே என்பதற்கு சாட்சியாக,
"இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச்
செய்ய வேண்டும், பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம்
இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய
வேண்டும், அல்லாஹ்வையும், வானவர்களையும்
நேரில் நீர் கொண்டு வர வேண்டும், தங்கத்தால் உமக்கு ஒரு
வீடு இருக்க வேண்டும், வானத்தில் நீர் ஏற வேண்டும்.
நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்க வேண்டும். அல்லது
நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச்
செய்ய வேண்டும்,
(குர்ஆன் 17:90 – 93)
என்று
ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது காண்பிக்கவேண்டும் என்றனர். என்ன பதிலைக் கூறுவதென்று தெரியாமல்
கையைப் பிசைந்துகொண்டு முஹம்மதின் கைத்தடி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
.."என் இறைவன் தூயவன். நான்
மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(குர்ஆன் 17:93)
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்)
உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது...
(குர்ஆன் 18:110)
குர்ஆனின்
கூற்றுபடி முஹம்மது நம்மைப்போன்ற உண்ணுகின்ற, உறங்குகின்ற, கடைத்தெருவில் நடமாடுகிற,
ஒரு சராசரி மனிதரே. அவரால் ஆனால் ஹதீஸ்களோ அற்புதங்களை அள்ளிவிடுகிறது. இவற்றில் எதை
ஏற்பது?
இந்த
அற்புதக்கதைகளில் இவர்கள் எதைக்கூற முயற்சிக்கின்றனர்? பகுத்தறிவையா?
நிலவு பிளந்து மீண்டும் இணைகிறது
மரக்கட்டை ஓலமிட்டு அழுகிறது
கல் முகமன் கூறுகிறது
தொண்டையைச் செருமி காறி உமிழ்ந்த எச்சிலை
முகத்தில் தேய்த்துகொள்கின்றனர்
எச்சில் நீருக்காக முண்டியடித்துக் கொள்கின்றனர்
சிரைக்கப்பட்ட தலைமுடி விநியோகம் செய்யப்படுகிறது
வியர்வை சேகரிக்கப்படுகிறது
நீரில் மூழ்கிய தலைமுடி நோய்க்கு மருந்தாக
பயன்படுகிறது
மரம் நடந்து செல்கிறது
எச்சில் கண்வலியை குணமாக்குகிறது, உணவைப்
பெருகச் செய்கிறது
விரல்களிடையே இருந்து அளவற்ற நீர்சுரக்கிறது
சிறுநீர் வயிற்று வலியைப் போக்குகிறது
எலும்புமுறிவை சரி செய்தது, கிணற்றில் நீரைப்
பெருகச் செய்தது, இரவில் வழிகாட்ட ஒளியை அனுப்பிவைத்தது இவற்றிகெல்லாம் முதன்மையான
விண்வெளிப்பயணம் என்று பட்டியல் நீளுகிறது. வேடிக்கை என்னவென்றால் உஹுது களத்தில் உத்பா
அபீ இப்ன் வாக்கஸ், அப்துல்லாஹ் இப்ன் ஷிஹாப் ஜூஹ் ஆகியோரிடம் அடிவாங்கி நொந்துபோன
முஹம்மதிற்கு அவரது எச்சில் ஏனோ உதவவில்லை.
இஸ்லாமின் இண்டுஇடுக்குகளிலிருந்தெல்லாம்
அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் இஸ்லாமிய விஞ்ஞானிகள், மேற்கண்டவைகளுக்கும் அறிவியல் விளக்கம்
கொடுப்பார்களா?
முஹம்மதின் மீது இஸ்லாமியர்கள் சுமத்தியுள்ள பிம்பத்தைக் கிழித்தெறிய,
இவர்களின் மூலநூல்களே போதுமானது நாம் எதையும் மிகைப்படுத்திக் கூறவேண்டியதில்லை
தஜ்ஜால்
6 கருத்துரைகள்:
தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக்கொள்ளுங்கள்....(குரான்)
தூய்மையான மண்ணுக்கு எங்கே போவது? எது தூய்மையான மண் எது தூய்மை இல்லாத மண் என்று வஹீ மூலம் ஏதும் செய்தி உண்டா தஜ்ஜால்? இதற்கு விளக்கம் தந்த அண்ணன் பீலாவுதீன் அவர்கள்,நாளை தூய்மையான மண் கண்டுபிடிக்கப்படலாமாம். இது எப்படி இருக்கு? கண்டுபுடிச்சி கொடுத்தா இத எங்க அல்லா ஏற்கனவே கூவிவிட்டான் என மார்தட்டிக் கொள்வார்கள். ஒரு காபிர் சொல்லித்தான் தூய்மையான மண்ணை அறிய முடிகிறதென்றால்,குரானுக்கு விளக்கம் சொல்ல வந்த தூதர் எதற்கு? ஹதீஸ் எதற்கு?
http://www.ethirkkural.com/2012/06/blog-post.html
@ இப்ராஹீம்,
இந்த இடுகைக்கும், நீங்க கொடுத்துள்ள எதிர்குரல் இணைப்பிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
@ இனியவன்,
தூய்மையான மண் எது என்பதற்கான எந்த வரையறையும் குர் ஆனில் இல்லை. ஆனால் குர் ஆன் விளக்கமான புத்தகம் என்று தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும்.
இந்த மூமின்களுக்கு என்ன வந்தது? நீங்கள் கூறும் ஹதீதுகள் ரொம்ப பலஹீனமானது,பாதாம் பிஸ்தா கலந்த பலமான ஹதீதுகளை எடுத்துக் காட்டுங்கள் என வரிந்து கட்டிக்கொண்டு வருவார்களே இன்னும் யாரும் வரவில்லையே என்ன ஆச்சு இவர்களுக்கு?
நல்ல பதிவு சகோ. கூகிள் நண்பர் பட்டியை இணைக்கலாமே !
Post a Comment