Sunday, 15 April 2012

வணக்கங்களால் யாருக்கு லாபம் ?


விதண்டாவாதம் என்ற தலைப்பில் வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம் ?                என்ற கேள்விக்கு அறிஞர் P. ஜெயினுல் ஆபிதீன் அளித்துள்ள விளக்கத்திற்கு மறுப்பு.

உலகிலுள்ள பெரும்பாலான மக்களும் ஏதோ ஒரு முறையில் கடவுளை வழிபாடு செய்கிறவர்கள்தான். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது நன்மைக்காகவும் வெகு சிலர் மற்றவர்களின் நன்மைக்காவும் அனுதினமும் கடவுளைத் தொழுது சரணடைகின்றனர். இவர்கள் அனைவருமே கடவுளிடமிருந்து நன்மைகளை அடையமுடியுமா?
இந்த கேள்விக்கு  சராசரிக்கும் குறைவான மத அறிவுடைய இஸ்லாமியர் கூட இதற்கு இல்லையென்ற பதிலை உறுதிபடக் கூறுவார். காரணம், அல்லாஹ்வையும் முஹம்மதையும் ஏற்காத ஒரு வணக்கம், ஏற்புடையதல்ல என்பதுதான். எனவே, நன்மைகளை அடைய(!) இஸ்லாம் கூறும் வணக்கமுறைகளைக் காண்போம்.
தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் என்றொரு பட்டியல் இருந்தாலும், அல்லாஹ்விற்கு இணை வைக்காது, அவனது தூதர் முஹம்மதிற்கும் முற்றிலும் வழிப்படுதலே முதன்மையானது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
குர் ஆன் 4:48
தன்னைத் தவிர வேறு கடவுளர்கள் இல்லை, தான்மட்டுமே ஒரே கடவுள் என்பது அல்லாஹ்விற்குத் தெரியுமல்லவா? மனிதர்கள் அதை உணராமல், தங்களது அறியாமையால் செயல்படுவதால் அவனுக்கு இழப்பு ஏதேனும் நிகழுமோ?
இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏக மனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை.
என்கிறார் அறிஞர் P. ஜெயினுல் ஆபிதீன். ஆனால் இது பீஜே அவர்களின் வெற்று கற்பனையே. இவரது இந்த விளக்கம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு எதிரானது. தான் மட்டுமே ஒரே இறைவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டும், தான் கூறும் முறையில் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதை அறியச்செய்ய அல்லாஹ் காண்பிக்கும் வெறித்தனம் எல்லையில்லாதது.
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
குர் ஆன் 3:85

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே.
குர் ஆன் 9:28

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (அல்லாஹ்வை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை.
குர் ஆன் 3:28
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே.
குர் ஆன் 5:51

இவ்வாறு அல்லாஹ், தனது விருப்பங்களையும், கோரிக்கைகளையும்  தனது தூதர் முஹம்மதின் வாயிலாக விளம்பரமும் செய்தான். ஆனாலும் பெரிதாக எந்தப்பலனும் கிடைக்கவில்லை. தனது கோரிக்கையை ஏற்று, னது அறிவுறுத்தலின்படி தன்னை வணங்க மறுத்தவர்களை, ’வழிக்குக் கொண்டுவர இயலாமல் போனது. அவர்களுக்கெதிராக தன்னால் எதுவும் செய்ய கையாலாகமல், முஹம்மதுவிடம், அவர்கள் மீது போர்தொடுக்க வற்புறுத்துகிறான். வரிவசூல் செய்வேன் என்று மிரட்டலும் விடுகிறான். அப்படியாவது தன்னை வணங்கமாட்டார்களா என்ற நப்பாசைதான்.
நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! ...
குர் ஆன் 8:65
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்.
குர் ஆன் 9:28
அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்!
குர் ஆன் 9:05
தன்னைத் தவிர வேறு இறைவன்கள் ஒருவரும் இல்லை எனும் பொழுது, அல்லாஹ்விற்கு ஏன் இவ்வளவு கவலை? தனது நிலையை நிரூபிக்க மிகுந்த சிரமங்களை மேற்கொள்கிறான். வெறித்தனமான கோபம் கொள்கிறான். தனது கைத்தடிகளை, மாற்று நம்பிக்கை கொண்டவர்கள் மீது போர் செய்யுமாறு ஏவிவிடுகிறான். போர்க்களத்தில் பின்தங்கி விடுவார்களோ அச்சம் மிகைத்தாலோ என்னவோ அவர்களை உற்சாகமூட்டுகிறான். கூடவே தனது வானவர்(!) படைகளையும் அவர்களுக்கு துணையாக இருப்பதாக்கூறி அவர்களுக்க ஆசைகாட்டுகிறான்.
தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.
(குர் ஆன் 9:13)

...உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (அல்லாஹ்வை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள்.
குர் ஆன் 8:65
உங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று  உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)

மற்ற இறைவன்களை நிராகரித்துவிட்டு, தன்னை மட்டுமே ஏற்று வணங்க மறுத்தவர்களை கடுமையாக சித்திரவதை செய்து தண்டிக்க உத்தரவிடுகிறான்.
இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!
குர் ஆன் 9:05
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகிய வையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை.
குர் ஆன் 5:33

அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவுபடுத்துவான்.
குர் ஆன் 9:14


என்னை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்
 குர் ஆன் 8:12

இப்படியெல்லாம் ஒரு கடவுள் கூறுவானா? இதுதான் கடவுளின் இலக்கணமா?

"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
53. போரின் இலக்கணம்  onlinepj.com
(பீஜே அவர்களின் கவனத்திற்கு, ஒவ்வொரு இணைப்பையும் வெட்ட வேண்டுமெனில் (கு 8:12), மனித உடலிலுள்ள 200க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளையும் வெட்ட வேண்டுமா? என்று கசாப்புக்கடையில் உயர்நிலைப் போர்ப்பயிற்சி பெறும் நோக்கத்திலுள்ள ஜிஹாதி ஒருவர் கேட்கிறார்)
                "கொல்லுங்கள்' "வெட்டுங்கள்'  என்ற குர்ஆனின் கட்டளைகளின் உண்மையான காரணத்தை மறைத்து, மழுப்பலாக இவைகள் போர்க்களத்திற்கு மட்டும்தான் பொருந்தும் என்று கூறி, மாற்று மதத்தினருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டதைப் போல ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார் பீஜே. முஹம்மதையும் ஏற்க மறுத்தவர்கள், ‘ஜிஸ்யாவரி செலுத்தி திம்மிகள்என்ற இரண்டாம் தர குடிமக்களாக வேண்டும் அல்லது போரிட்டு மடியவேண்டும் இவைகள்தான் அல்லாஹ் வழங்கிய மாபெரும் வாய்ப்புகள். அதிலும் உருவ வழிபாடு செய்பவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.
ஏப்ரல் 9 , 2002 பதிப்பில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சௌதி அரேபியாவில் இருக்கும் ரத்தப்பணம் என்ற கருத்தைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியாகியிருந்தது. ஒருவர் கொல்லப்பட்டால் கொல்வதற்கு காரணமானவர் கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடாக பின்வருமாறு நிர்ணயிக்கப் பட்ட தொகையை ரத்தப்பணமாக கொடுக்க வேண்டும்.
 கொல்லப்பட்டவர்            ரத்தப்பணத்தொகை (ரியால்கள் )
·         முஸ்லிம் ஆண்                               100,000
·         முஸ்லிம் பெண்                              50,000
·         கிறிஸ்துவ ஆண்             50,000
·         கிறிஸ்துவ பெண்            25,000
·         இந்து ஆண்                       6,666
·         இந்து பெண்                      3,333
                அல்லாஹ்வைப் பொறுத்தவறையில், தான் அறிவுறுத்தியபடி தன்னை வணங்காதவர்களின் மதிப்பு இவ்வளவுதான். வழிபாடுகளில் அல்லாஹ்விற்கு எவ்விதமான பலனுமில்லை என்று பீஜே உளறுவதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
                ’தன்னால் நிராகரிப்பவர்களாக மாற்றப்பட்ட படைப்பினங்களை சமாளிக்க வழிதெரியாமல் சூழ்ச்சிகளையும் செய்தான். இறைவன் சூழ்ச்சி செய்வானா? சூழ்ச்சி செய்வது இறைத்தன்மையா? என்ற கேள்விகள் இஸ்லாமிய அறிஞர்களை மிகவும் இம்சித்துவிட்டது. வேறு வழி தெரியாமல்,  
"அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான்', "அல்லாஹ் கேலி செய்கிறான்', "அல்லாஹ் ஏமாற்றுகிறான்' என்பன போன்ற வாக்கியங்கள் திருக்குர்ஆனில் பரவலாகக் காணப்படுகின்றன.
ஏமாற்றுதல், கேலி செய்தல் போன்றவை கையாலாகாத பலவீனர்களின் செயல்களாகும். "ஆகு' என்று கூறி ஆக்கும் வலிமை பெற்றவன், திட்டமிட்டு சூழ்ச்சி ஏதும் செய்யத் தேவை இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.
ஆனால் பெரும்பாலான மொழிகளில் இத்தகைய சொற்பிரயோகங்களை அதற்குரிய நேரடிப் பொருளைத் தவிர்த்து வேறு பொருளில் பயன்படுத்துவதைக் காணலாம்.
உதாரணமாக, "நீ வரம்பு மீறினால் நான் வரம்பு மீறுவேன்'' என்று நாம் கூறும் போது, முதலில் உள்ள வரம்பு மீறுதல் தான் அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாகக் கூறப்பட்ட வரம்பு மீறுதல், பதிலடி என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் நமக்கெதிராக வரம்பு மீறிய பின் அதற்குப் பதிலடி தருவது வரம்பு மீறலாக ஆகாது.
"அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்'' என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்'' என்ற கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்'' என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்'' என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"நீ செய்தால் நான் செய்வேன்'' என்ற தோரணையில் அமைந்த இறைத் தன்மையைப் பாதிக்கும் வகையிலான அனைத்துச் சொற்களையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும். கண்டிக்கும் வகையில் இல்லாமல் பாராட்டும் வகையிலும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"என்னை நீ நினைவு கூர்ந்தால் நானும் உன்னை நினைவு கூர்வேன்'' "நீ நன்றி செலுத்தினால் நானும் நன்றி செலுத்துவேன்'' என்று இறைவன் கூறுவான். இறைவன் நம்மை நினைவு கூரத் தேவையில்லை. நன்றி செலுத்தவும் தேவையில்லை. எனவே அதற்கான பலனைத் தருவான் என்றே இது போன்ற சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டும். "இறைவன் சபிக்கிறான்' என்றால் "தண்டிக்கிறான்' என்று புரிந்து கொள்ள வேண்டும்
6. அல்லாஹ் இயலாதவனா?  onlinepj.com
        இப்படியும் விளக்கம் கூறமுடியுமா? என்று கேட்வர்கள் தலையிலடித்துக் கொள்ளும் விதமாக சமாளித்து வைத்தனர். சூழ்ச்சியை, சூழ்ச்சி என்றுதான் விளங்கமுடியும். ஏனெனில் அல்லாஹ்வே தனது செற்களை ஒளியும், தெளிவும் நிறைந்தது (கு 5:15) விளங்குவதற்கு எளிதானது (கு 5:22) என்கிறான்.  சூழ்ச்சி செய்வேன், சூழ்ச்சி செய்பவர்களில் சிறந்தவன் என்றெல்லாம் உளறிக்கொட்டுவது இறைத்தன்மைக்கு இழுக்கானதென்று பீஜே போன்ற அறிஞர்களுக்கு இருந்த கவலைகூட, அல்லாஹ்விற்கு இல்லாமல் போய்விட்டது என்கிறது இவர்களின் விளக்கம். தான் பயன்படுத்தும் சொற்கள் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பது அல்லாஹ்விற்குத் தெரியாதா?
...எந்த புத்தகத்திற்கும் அதன் தெளிவான அர்த்தத்தைத் தவிர மற்ற விளக்கங்கள் கொடுக்கக் கூடாது. குறிப்பாக அந்த புத்தகம் தான் ஒரு வழிகாட்டி என்று கூறிக்கொண்டால் அப்படிச் செய்யவே கூடாது. ஒரு வழிகாட்டும் நூல் தெளிவாகவும் வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்காததாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அது ஒரு வழிகாட்டும் புத்தகமே அல்ல.
...அதே சமயம் அவர்களால் இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. அதனால், அவர்கள் குர்ஆனுக்கு மறைமுக அர்த்தம் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். கடவுளிடமிருந்து வந்த நன்னெறிப் புத்தகத்தை வேறுவிதத்தில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு எண்ணமே ஒரு தவறான தர்க்கம். குர்ஆனுக்கு எப்படி விளக்கம் கொடுத்தாலும், சரியாக வராது. சில சமயங்களில் பச்சை முட்டாள்தனமாக இருக்கும் என்கிறார் Dr.அலிசினா.
தன்னை நிராகரித்தவர்கள் மீதிருந்த கோபம், அல்லாஹ்வை நிதானமிழந்து உளறச் செய்துவிட்டது. அவன் இதைப்பற்றியெல்லாம்  சிறிதும் கவலைபட்டதாகத் தெரியவில்லை.
                அல்லாஹ்வின் கவனம் முழுவதும் எப்படியாவது அவர்களை வெற்றி கொள்ளவேண்டும் என்பதிலேயே இருந்தது. எதிரிகளின் படைபலத்தைக் கண்டு, தனது ஆதரவாளர்கள் புறமுதுகிட்டு ஓடித் தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை மேலிட்டதால்,  தந்திரங்களை கையாண்டான், எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டுமென்ற வெறி, தனது ஆதரவாளர்களையும் சூழ்ச்சி செய்து ஏமாற்றத் தூண்டியது.
உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள்….
குர் ஆன் 8:43
                இந்த அற்பத்தனமான கிரஃபிக்ஸ்வேலை செய்வதைவிட தனது கைத்தடிகளுக்கு வீரத்தை வழங்கியிருக்கலாம். இப்படியும் ஒரு இறைவனா? ஆனால் நாம் ஒரு உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எத்தனை செப்படிவித்தைகளைச் செய்து ஏமாற்றியிருந்தாலும் அதை இறுதியில் ஒப்புக்கொண்ட பாங்கை நாம் பாராட்டியே தீரவேண்டும். அல்லாஹ்வின் இந்த துணிச்சல் இஸ்லாமிய அறிஞர்களிடம் இல்லை. இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குர் ஆனில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் அனைத்துமே, புதைத்து, அழுகிப்போன பிணத்தைத் மீண்டும் தோண்டி எடுத்து பிரேதப்பரிசோதனை செய்வதைப் போலிருப்பது ஏன்?
                முஸ்லீமல்லாதோரின் மீதான அல்லாஹ்வின் கொடூரம் சகிக்கமுடியாதது. உலகில் அவர்களை தண்டித்து, கொத்துக்கறி செய்வதற்கு உற்சாகமூட்டினான், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விரட்டியடித்தல் என்று பலவாறாக இழிபடுத்தியும் அவனது ஆத்திரம் தணியவில்லை.  அவர்களை மரணத்திற்குப் பின்னும் விடுவதாக இல்லை. அல்லாஹ்விடம் பெரிய அடுப்பு ஒன்று உள்ளது. அதில் மனிதர்களை வறுத்து எடுப்பான். மனிதர்களின் கருகிய உடல்களிலிருந்து வெளியாகும் வாசனையின் மீது அல்லாஹ்விற்கு அலாதியான இன்பம் உண்டு.
இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.
குர் ஆன் 5:34

அவர்கள் விஷயத்தில் கடுமை காட்டுவீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட புகலிடம்.
குர் ஆன் 66:09

தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏக இறைவனை) மறுத் தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.  அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்!
குர் ஆன் 22:19-22

அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில் சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.
குர் ஆன் 22:09
        முஸ்லீமல்லதோரையும் அல்லாஹ்தானே படைத்தான்? அவன் எல்லொருக்கும்தானே இறைவன்? தனது செந்தப்படைப்புகளின் மீதே அவனுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? குர் ஆனில் அவன் கூறியுள்ள செய்தி, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மட்டுமே நம்ப வேண்டும். அத்தகையவர்களுக்கு எல்லைகளற்ற உடலுறவு இன்பம்! நம்பாதவர்கள், பெரும் நெருப்பிலிட்டு கரிக்கப்படுவார்கள் என்ற அச்சுருத்தல்கள்.
        தனக்கு எவ்வித பயனுமில்லாத வணக்கங்களையும், சடங்கு, சம்பிரதாயங்களின் செயல்முறைகளை போதித்து, இத்தனை வற்புறுத்தல்களையும், அச்சுருத்தல்களையும் கூறி காலில் விழுந்து கெஞ்சிக் கேட்காத குறையாக கேட்டுப் பெறவேண்டிய தேவையென்ன? தன்னை வழிபடுமாறு அல்லாஹ் கூறியது, மனிதர்களின் நன்மைக்கே என்ற P. ஜெயினுல் ஆபிதீன் அவர்களின் விளக்கம் உண்மையல்ல. பிறகு ஏன் இப்படி கூறவேண்டும்?
        பீஜே., தனது விளக்கத்தில், சூறையாடவும், ஊனப்படுத்தவும், கற்பழிக்கவும் கொலை செய்யவும் காரணமாக இருக்கும் ஒருவனை, நல்லாசிரியர்களுடனும், நலம் விரும்பிகளுடனும் ஒப்பிட்டு உளறுகிறார். ஆசிரியர்களும், நலம்விரும்பிகளும் நன்மையை ஏவுவதும், எச்சரிப்பதும், சமுதாய வாழ்வில் தாங்கள் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான். அல்லாஹ்வின் நிலையும் அப்படித்தானா? படைப்பதும், இறுதி நிலைவரை விதியைத் தீர்மானிப்பதும் நானே, ஒவ்வொரு செயலும் அதன் முடிவும் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்று கொக்கரிப்பவனுக்கு வணக்க வழிபாடுகளை கெஞ்சிக் கேட்டுப் பெறவேண்டிய தேவையென்ன?
        உதாரணத்திற்கு, என்னுடைய கற்பனைப் புதினத்தில் உள்ள, நான் கற்பனையாக உருவாக்கிய கதாபாத்திரங்கள் என்னைப் போற்றிப் புகழவில்லையே என்று கடும்கோபம் கொண்டு வழக்காடும்வகையில் எழுதினால் என்னை ஒரு முற்றிய பைத்தியக்காரன் என்று சொல்லமாட்டீர்களா? அத்தகைய ஒரு உலக மகா மூடனை நீங்கள் குர் ஆனில் காணலாம். இத்தனை முரண்பாடான இறைவனும், அவனுக்கொரு வழிபாடும்  எதற்கு? இதர முறைகளில் அமைந்த வழிபாடுகள் ஏன் பயனளிப்பதில்லை?
விடை, வழிபாடுகளை போதிப்பவர்களிடம் மறைந்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் வணக்க வழிபாடுகள் இறைவனுக்குத் தேவையில்லை எனினும் நாம் அவனை வணங்க வேண்டும், இல்லையெனில் அவன் கடும் கோபம் கொண்டு தண்டித்திடுவான் என்று ஒப்பாரி வைப்பது உங்களது நன்மைக்காக அல்ல.
இன்று நாம் காணும், ஒருவேளை உணவிற்காக குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரன் முதல் பெரும் செல்வத்தில் புரளும்  சாமியார்கள், மதபோதகர்கள் வரை வண்க்க வழிபாடுகளைக் கூறித்தான் பொருளீட்டுகிறார்கள். அவர்கள் புதிதாக எதையும் போதிப்பதில்லை. வழக்கிலுள்ளவைகளையே சற்று கூட்டியும் குறைத்தும் இட்டுக்கட்டி நம்பவைக்கின்றனர்.
ஃபாத்திஹா, மவ்லீது, ராத்தீபு என்ற புகழ்மாலைப் பாடல்களுடன், தர்ஹா வழிபாடு, தொழுகை நோன்பு என்று இஸ்லாமியர்களின் காலம் கடந்து கொண்டிருந்தபொழுது, என்பதுகளிலிருந்து நாமும் இதைபோன்ற ஒன்றைச் சந்திக்கத் துவங்கினோம்.
தமிழகத்தில், திடீரென்று ஒருவர், முஹம்மதை துணைக்கு அழைத்துக் கொண்டு, முஸ்லீம்களின் இரத்தத்தில் இரண்டற கலந்திருந்த தர்ஹா வழிபாட்டை எதிர்க்கத் துவங்கினார். வெகுமக்கள் அதிகமாக அறிந்திராத ஹதீஸ்களை முவைத்து தொழுகையில் விரலை ஆட்டவேண்டும், காலை அகட்டி நெஞ்சின்மீது கையைக் கட்டி வணங்கவேண்டும், இவ்வாறல்லாத வணக்கத்தை அல்லாஹ் ஏற்கமாட்டான் என்றார். நாகூர் ஹனிஃபாவின் பக்திப்பாடல்களையே வழிபாடு நம்பியிருந்த மக்களுக்கு விழிபிதுங்கியது.
ஃபாத்திஹா, மவ்லீது, ராத்தீபு என்ற புகழ்மாலைப் பாடல்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிரானது என்று கடுமையாகச்சாடி, ஐந்திற்கும், பத்திற்கும் ஃபாத்திஹா, மவ்லீது, ராத்தீபு ஓதி வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் பிழைப்பில் மண்ணை எறிந்தார். அவர்களை முஸ்லீம்களே அல்ல என்று கூறி அத்தகையவர்களுடனான உறவைத் துண்டிக்க தனது ஆதரவாளர்களைத் தூண்டினார்.
மசூதிகளுக்குள்ளும், பல குடும்பங்களுக்குள்ளும் விரோதம் நுழைந்தது. குழம்பியகுட்டையில் வலைவீசினார், திமிங்கிலங்களும் அவரது தூண்டிலில் சிக்கியது. இன்று லேப்டாப் சகிதமாக ஹைடெக் ஆலீமாக வலம் வருகிறார். பெரும் பெரும் அரசியல்வாதிகளே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துமளவிற்கு ஆள்பலத்தைக் காண்பிக்கிறார். இது எப்படி சாத்தியமானது? வழக்கிலிருந்த அதே வணக்கவழிபாடுகளை புதிய சாயம் பூசி விற்பனை செய்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.
இதையேதான் அன்று முஹம்மதுவும் செய்தார். அரேபியர்களுக்கு நன்கு அறிமுகமாயிருந்த அல்லாஹ்வுடன் தன்னை இணைத்தார். அவர்களது வழக்கிலிருந்த சிலை வழிபாட்டையும், உப தெய்வங்களையும், குட்டித் தெய்வங்களையும் எதிர்த்தார். தான் அரைகுறையாக தெரிந்து வைத்திருந்த, அப்பகுதியில் நிலவிய நாடோடிக்கதைகளை ‘ரீமிக்ஸ்செய்து அல்லாஹ் கூறியதாக உளறிக்கொட்டினார். அல்லாஹ் தர இருப்பதாக, சொர்க்கலோக சல்லாபக் கதைகளைக் கூறி நெருங்கிய உறவுகளையே போர்க்களத்தில் எதிரெதிராக நிறுத்தி, தனது இரத்தவெறியைத்தீர்த்துக் கொண்டார். அவரது பித்தலாட்ட வேலைகளை இனம் கண்டவர்களை அல்லாஹ்வின் விரோதி என்று கூறி கூண்டோடு அழித்தொழித்தார். எதிர்க்கேள்வி கேட்க ஆளில்லாமல்  ஒட்டுமொத்த அரேபியாவும் முஹம்மதின் காலடியில் வீழ்ந்தது.
வணக்கங்களால் லாபமடைந்தது அதை போதித்தவர்கள் மட்டுமே!


தஜ்ஜல்


Facebook Comments

1 கருத்துரைகள்:

Paul said...

ம்....வணக்கங்களால் லாபமடைதது...அதை போதித்தவர்கள் மட்டுமே.....சிறபான வார்த்தை