லூத் என்றொரு"லூஸ்" கட்டுரையால் முஸ்லீம்கள் என்மீது ஏகமனக்கடுப்பில் இருக்கின்றனர். மீண்டும் லூத்தின் விஷயத்தை உடனடியாகக் கிளற வேண்டாம் என்பதால்தான் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காமல் இருந்தேன். ஆனால்,
பின்னுட்டத்தில் ”குற்றவாளிகளை பிடிப்பவன்” என்பவர் கூறுகிறார்...
//தஜ்ஜால் அவர்களுக்கு ரொம்பவும் பொறுமையாக பதில் அளித்து இருக்கிறார் பாமரன். இதன்மூலம் 'இஸ்லாத்தில் பதில் இல்லை' என்ற பொய் பிரச்சாரம் இங்கேயும் சாகிறது.// என்று மெய்சிலிர்த்து கூறுகிறார். மேலும் ##பக்கத்து ஊரான இப்ராஹீம் நபி ஊருக்குத்தானே சென்று இருப்பார்கள்? அங்கே சென்று தன் மகள்களை அந்த ஊரு இளைஞர்களுக்கு திருமணம் செய்து தந்திருக்கலாம். தானும் அங்கே வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம்.## என்று தனது யூகங்களை, கம்யுனிசமும் தெரியாமல். இஸ்லாமும் தெரியாமல், பாட்டி வடை சுட்ட கதையைப் போல கூறியிருக்கிறார்.
எனவே பாமரன் அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம், இந்த “பாட்டிக்கதை சொல்லி”களுக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியுமென்று(?) நினைக்கிறேன். நீளம் சற்று அதிகமானதால் தனிப்பதிவாக வெளியாகிறது.
பாமரன் என்பவரின் பின்னோட்டம் ///பைபிளின் லூத் நபியின் கடைசி காட்சியை (மகள்களுடனான உறவு) காட்டியவர், ஆரம்பத்தை (வசதிக்காக) விட்டுவிட்டார்போலும்! அவற்றைப்பாருங்கள்:
Genesis 18:22-33
Genesis 18:22-33
English Standard Version (ESV)
கடவுள் ஆபிரகாமை நோக்கி, ;’ஆபிரகாம், சோதோம் , கொமோரா நகரங்களில் மக்கள் என்னுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் தீய சிந்தனைகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தீய சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் வாழ்வதைத் தவிர அழிவதே நல்லது. எனவே அவர்களை நான் அழிக்கப் போகிறேன்’ என்றார்.
கடவுளின் திட்டத்தைப் பற்றி அறிந்த ஆபிரகாம் திடுக்கிட்டார். அங்கே தான் அவருடைய அண்ணன் மகன் லோத்து, குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
அவர் கடவுளை நோக்கி,’ஆண்டவரே… தீயவர்களை அழிக்கும் உமது செயல் நல்லது தான். ஆனால் அங்கே நீதிமான்களும் இருக்கக் கூடும் அல்லவா? தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ ? ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா ?’ என்றார்.
அவர் கடவுளை நோக்கி,’ஆண்டவரே… தீயவர்களை அழிக்கும் உமது செயல் நல்லது தான். ஆனால் அங்கே நீதிமான்களும் இருக்கக் கூடும் அல்லவா? தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ ? ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா ?’ என்றார்.
அதற்கு ஆண்டவர், ‘ஐம்பது நீதிமான்கள் அங்கே இருந்தால் அவர்களுக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்’ என்றார்.
‘ஆண்டவரே, நான் உமது முன்னிலையில் ஒரு தூசிக்குச் சமமானவன், ஆனாலும் கேட்கிறேன் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இல்லாமல் நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால் என்ன செய்வீர் ? ‘
‘ஐந்து நீதிமான்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காக நான் அந்த நகரை அழிக்காமல் விட்டு விடுவேன்’
‘கடவுளே.. நான் உம்மிடம் பேசத் துணிந்து விட்டேன். எனவே பேசுவேன். ஒருவேளை அங்கே நாற்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் நகரை அழிப்பீரோ ?’
‘நாற்பது நீதிமான்கள் இருந்தால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு அந்த நகர் அழிக்கப் படமாட்டாது’
ஆபிரகாம் தொடர்ந்தார்,’ கடவுளே கோபம் வேண்டாம். ஒரு வேளை முப்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் ‘
‘ஆபிரகாம்… அந்த நகரில் முப்பது நீதிமான்கள் இருந்தால் கூட அவர்களுக்காக அந்த நகரை நான் அழிக்க மாட்டேன்’
‘ஆண்டவரே.. நான் உமது அடியேன். ஒருவேளை இருபது பேர் மட்டுமே அந்த நகரில் இருந்தால் என்ன செய்வீர் ?’
‘இருபது நீதிமான்கள் இருந்தாலும் அந்த இருபது பேருக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்…’
ஆபிரகாம் மீண்டும் கடவுளிடம்,’ ஆண்டவரே… இன்னும் ஒரே ஒரு முறை கேட்பேன். கோபம் வேண்டாம். ஒருவேளை பத்து நீதிமான்கள் மட்டும் காணப்பட்டால் சோதோம் நகரை அழித்து விடுவீரோ ?’ என்று கேட்க.
‘ஆபிரகாம், உன்னுடைய விண்ணப்பத்தைக் கேட்கிறேன். அந்த நகரில் பத்து நீதிமான்கள் இருந்தால் போதும். அவர்களுக்காக அந்த நகர் காப்பாற்றப் படும்’ என்று சொல்லி விட்டு கடவுள் விலகினார்.
ஆபிரகாம் தம் இல்லத்துக்குத் திரும்பிச் சென்றார்..
இதிலிருந்து அந்த ஊரில் பத்து நல்லவர்கள் கூட தேறமாட்டார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா?///
(இவரின் பின்னோட்டம் முழுவதையும் லூத் ஒரு லூசு தலைப்பின் கீழ் படிக்கவும்.
ஆதியாகமம் 18:20
மேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் பாவிகள் என்று பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நான் சோதோமின் உண்மை நிலை என்னவென்று போய்ப் பார்ப்பேன்” என்றார்.
ஆக அதுவரை உங்கள் கடவுளுக்கும் சோதோம் மற்றும் கொமோராவின் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை. பலமுறை கேள்விப்பட்டாராம்! போய்ப் பார்ப்பாராம்! ஆரம்பத்தை வசதிக்காக விட்டது நானல்ல!
ஆதியாகமம் 18:23-33 பாமரன் மேற்கோள் காட்டியவற்றைப் பார்ப்போம்.
சோதோமையும், கொமோராவையும் கர்த்தர்(அல்லாஹ்) அழிக்க இருந்ததை ஆப்ரஹாம் தடுக்க நினைத்து அல்லாஹ்வுடன்(கர்த்தர்) பேரம் பேசுகிறார். இதை குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.
இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்த போது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.
குர் ஆன் 11:74
முடிவில் பத்து நல்லவர்கள் இருந்தால்கூட அழிக்கக்கூடாது என்பதாக பேரம் முடிகிறது. அதுவரை அல்லாஹ்விற்கு(கர்த்தர்) அங்கு எத்தனை நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதுகூடத் தெரியவில்லை. அற்பமனித இனத்திற்கு இருக்கும் இரக்க உணர்வுகூட கடவுளுக்கு இல்லை என்பதுதான் மேற்கண்ட வசனங்களின் மறைபொருள்.
///பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது? பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!/// என்று கூறும் பாமரன், தனது பதிலில் மொழிபெயர்ப்பில் பிழையெனும் புராதன தொழில்நுட்பத்தை, வாதத்தை முன்வைக்கிறார். .//[சரியான மொழிபெயர்ப்பை கீழே காண்க : “தேவை” என்ற சொல்லுக்கு பதில் “பாத்தியதை” என இருப்பதே சரி/// என்று பாமரன் அவர்கள் கூறிவிட்டதால், பாமரனுக்கு அவரது மொழிபெயர்ப்பிலிருந்தே பதில் கூறுவதுதான் சரி. “பாத்தியதை” எளிமையாகக் கூறினால் “உரிமை”.
அதாவது, சோதோமின் ஆண்கள் லூத்தின் வீட்டின் முன் பெருந்திரளாக குவிந்தபொழுது, அவர்களிடம் தனது மகள்களை வழங்க முன்வருகிறார். ,
அப்பொழுது அந்த ஆண்கள்.... ///11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்;../// என்றனர். லூத், தானே முன்வந்து (இதுவரை எந்த ஆணையும் அறியாத) தனது மகள்களை வழங்கிய பிறகும், அவர்கள் உரிமையைப்பற்றி ஏன் கூறவேண்டும்? இங்கு உரிமையென்பது திருமண ஒப்பந்தத்தையே குறிக்கிறது.
ஆதியாகமம் 19:12-14
12. அந்த இருவரும் லோத்திடம், உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மருமகன்களோ, மகன்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் உடனே இந்நகரத்தை விட்டு விலகச் சொல்லவேண்டும்.
13. நாங்கள் இந்நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றனர்.
14. ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மண்ந்து கொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேருங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்” என்றான். அவர்ளோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணினார்கள்.
லூத்தின் வீட்டிற்கு முன் குழுமிய ஆண்கள் உரிமையைப் பற்றி பேசியதன் காரணம் லூத்தின் மகள்கள் வேறு ஆண்களுடன் திருமணத்திகாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்களைப் புணர்வது முறையல்ல என்பதுதான் முதன்மைப்பொருள். வேறு சிலருடன் திமணத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, மற்ற பலருக்கு தாரை வார்ப்பதுதான் நபித்துவமோ? இங்கு முதலில் ஒழுக்கக்கேட்டை நிகழ்த்துவது யார்? //தஜ்ஜாலின் வார்த்தைப்பாட்டின்படி, அவர்களுக்கு பெண்ணுறவு தேவையில்லை என்பதை லூத் நபி நன்றாகவே அறிந்திருந்தார் என்பதில் ஏதும்ஐயமுண்டோ?// ஐயமேதுமில்லை பாமரன் அவர்களே!
ஆனால், அவர்கள் தேடி வந்தது ஆணின் உடலையே எனும்பொழுது லூத் தன்னையல்லவா வழங்கியிருக்க வேண்டும்? அறிவுடைய எந்த ஒரு தந்தையும் தனது மகள்களை ஓநாய்களுக்கு விருந்துபடைக்க முன்வரமாட்டான். லூத்தின் செயலுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கும் பாமரன் அவர்களே! இதைப்போன்ற சூழ்நிலையில் உங்களது சகோதரியையோ மகளையோ அல்லது பேத்தியையோ திரும்பத் திரும்ப கற்பழிக்க வழங்கமாட்டீர்கள் என்பதில் எனக்கு எவ்விதமான சந்தேகமுமில்லை. அடிமைப்பெண்களுடன் திருமணபந்தமின்றி கூடுவதை குர்ஆன் பழிப்பிற்குரிய செயல் அல்ல என்று கூறி ஊக்குவித்தாலும் அதை முஸ்லீம்கள் காதில் வாங்கிக் கொள்வதுமில்லை. முஸ்லீம்கள் மேற்கொள்ளும் இந்த அறநெறிகள் எங்கிருந்து வந்தது?
///லூத் நபி தன் பெண் மக்களை யாருக்காக, எதற்காக கொடுக்க முன்வந்திருப்பார் என சிறிதாவது சிந்தனை செய்துக்கலாமே தஜ்ஜால் அவர்களே? இரண்டு நல்ல ஆண்களாவது அவர்களில் இருந்திருக்கலாம் என்ற நப்பாசை லூத் நபிக்கு இருந்திருக்கலாம்தானே? // என்ற பாமரன் அவர்களின் வாதத்தில் எந்த பொருளுமில்லை! லூத்தின் மகள்கள் திருமணத்திற்கான ஒப்பந்தத்தில் இருக்கும் பொழுது, ஓநாய்களின் கூட்டத்திற்கு மத்தியில் மறுபடியும் வரன் தேடிக் கொண்டிருந்தார் என்பது மடத்தனமாக இல்லையா?
//பாமரன் பதில்: பெண்ணுறவை வெறுப்பவர்களுக்கு எங்கிருந்தையா குடும்பம் வந்தது? பெண்களின் ஓரினச்சேர்கையைப் (லெஸ்பியன்) பற்றிய அறிவற்றவரா தாங்கள்!///
பதினான்கு நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான அரபி அறிஞர்கள் கண்களில்படாத பேருண்மையே பாமரன் அவர்களின் இந்த பதில்! லூத்தின் மகள்கள் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தனர் எனும் பொழுது சோதோமில் குடும்ப உறவுகள் இருந்தது என்பது புலனாகிறது. //29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? // என்று நீங்கள் (பாமரன்) மேற்கோள்காட்டிய குர்ஆன் வசனமே, சோதோமின் பெண்களும் ஓரினச்சேர்கையில் இருந்தனர் என்ற உங்களது வாதத்தை மறுக்கிறது.
//பாமரன் பதில்: நாம்தெரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் இன்ஜீலின் (பைபிள்) முதல் வெளிப்பாட்டை நம்புபவர்கள்; ஆயினும் பிற்காலத்திய திரிபுகளை அல்-குரான் மூலமாக அறிந்தவர்கள்.// இங்கு எடுத்தளப்படுவது இன்ஜீல் அல்ல என்பதை பாமரன் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வழக்கம் போல லூத்தின் பிற்பகுதிக்கதையை அல்லது தாங்களுக்கு உடன்பாடில்லாத பழைய ஏற்பாட்டின் பகுதிகளை, முஸ்லீம்கள் ஏற்கமாட்டார்கள். இவர்களது மறுப்பிற்கு குர் ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமுமில்லை. குர்ஆனின் ஒரு மறுப்பை (ஈசா நபி கொல்லப்பட்டார் என பைபிளும் அப்படியில்லையென அல்குரானும் கூறுகின்றன) பாமரன் அவர்களே மேற்கோள்காட்டியிருப்பதை உதாரணமாகக் கொண்டு லூத்தின் பிற்பகுதி கதைக்கு உரிய குரான் ஆதாரத்தை முன்வைக்குமாறு பாமரன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இறுதியாக அவர் கூறிய குற்றச்சாட்டு//அவர் தன் பகுத்தறிவை யாருக்காகவோ எதற்கோ விலைபேசிவிட்டார்.// ஆம் இது உண்மைதான் நான் எனது பகுத்தறிவை Enlightenment-டிற்கு விலைபேசி விற்றுவிட்டேன்!
நண்பர் பாமரன் அவர்களே...! லூத் என்றொரு ”லூஸ்” இடுகையின் மையத்தில் ”சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்?” என்றொரு கேள்வியையும், அதற்கான பதிலையும் வைத்திருந்தேன் joslflwmfhyqபடித்தீர்களா? சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்? மீண்டும் அதனை கீழே தருகிறேன். படியுங்கள்.
##இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும். அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து
81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...
ஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா? இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு ’லூஸ்’தானே?##
லூத் லூஸானது அங்குதான்!
தஜ்ஜால்
3 கருத்துரைகள்:
லூத் லூசும் ஆகவில்லை. ஒன்றும் ஆகவில்லை.
லுத் கதை யூதர்கள் அருகாமையிலிருந்த யூதரல்லாத மகக்ளை இழிவு படுத்த யூதர்களால் எழுதப்பட்டது.
அதனை உண்மை என்று நம்பி உளறுவது குரான். குரான் உளறுவதை சப்பை கட்டு கட்டுவது மூமின் கூட்டம்
//லுத் கதை யூதர்கள் அருகாமையிலிருந்த யூதரல்லாத மகக்ளை இழிவு படுத்த யூதர்களால் எழுதப்பட்டது.// ஆதாரம்?
நித்யானந்தாவையும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவையும் ஒப்பீடு செய்து தாவா செய்து ஒரு கட்டுரை
pagadu.blog.com
Post a Comment