Saturday 25 February 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 7


சரி, நபி வெறுப்படைந்ததைப் போன்று ஸவ்தா  தள்ளாத வயதுடைய மூதாட்டியா?
தொடர் 7
                கலீபா முவஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 54 -ம் ஆண்டு இறந்ததாக  இப்ன் ஸாத் தபாக்கத் கூறுகிறது. இறப்பின் பொழுது ஸவ்தா அவர்களுடைய வயதை சரியாக அறிய முடியவில்லை. ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்தார். அதாவது, 3 + 54 = 57 ஆண்டுகள்  முஹம்மது நபியின் மனைவி என்ற தகுதியுடன் ஸவ்தா வாழ்ந்திருக்கிறார். ஸவ்தா 80 வயதில்  இறந்ததாக  கொண்டால்80 - 57 = 23, முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்யும் பொழுது ஸவ்தாவிற்கு 23 வயதாக இருந்திருக்கலாம். இதன் அடிப்படையில்  ஸ்வ்தாவை விட  முஹம்மது நபி 27 வயது முதியவர்.
இந்தகணக்குகளின் அடிப்படையில் நோக்கினால் தன்னுடைய 63-ம் வயதில் முஹம்மது நபி இறக்கும் பொழுது ஸ்தாவிற்கு சுமார் 63 – 27 = 36  வயது  இருக்கலாம்.  36 வயது ஸவ்தா கிழவியென்றால் 63 வயது முஹம்மது நபி இளைஞரா ?

3. ஆயிஷா

  ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896,5133,5134,5156,5158,5160). இவரைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்.

 

          4. ஹப்ஸா

உமர் அவர்களின் மகள். கிபி 607 ல் பிறந்தார். இவரது தந்தை உமரின் கூற்றுப்படி இவர் அழகு குறைந்த பெண்மனியாக அறியப்படுகிறார். உஹது போரில் தன் கணவர் ஹூனைதை இழந்தார். உமர், விதவையான தன் மகளை மறுமணம் செய்து கொள்ள உத்மான் மற்றும் அபூபக்கர் சித்தீக் இருவரிடமும் வேண்டுகோள் வைக்ககிறார் ஆனால் அவர்களோ ஹப்ஸாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விரும்புவதை உணர்ந்து மறுப்பு  தெரிவிக்கின்றனர்.
புஹாரி ஹதீஸ் -4005
ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் இறந்து விட்டதால் (மகள்) ஹப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்) குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ரு போரில் கலந்து கொண்டவருமாயிருந்தார்கள். மேலும் மதீனாவில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், எனவே நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து  (என் மகள்) ஹப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, நீங்கள் விரும்பினால், என் மகள் ஹப்ஸாவை உங்களுக்கத் திருமணம் செய்து வைக்கிறேன். (அதற்குஉஸ்மான்  (ரலி) அவர்கள் (உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னார். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானை சந்தித்த போது) இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள். ஆகவே நான் அபூபக்கர் அவர்களைச் சந்தித்தேன் (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன்அபூபக்கர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான்  அவர்களை விட அபூபக்கர் அவர்கள் மீதே மிகவும் மனவருத்தம் கொண்டவனாக  இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள். எனவே  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு  ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தன். பிறகு (ஒரு நாள்) அபூபக்கர் அவர்கள் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக்  குறித்து சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள். நான் ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்கர் அவர்கள்) நீங்கள் கூறிய போது பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றி பேசியதை நான் அறிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான் உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.

கிபி 625 நபி (ஸல்) அவர்கள் ஐம்பத்தி ஆறாம் வயதில் ஹஃப்ஸாவைத் திருமணம்  செய்து கொண்டார். இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காவே நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் வலிமையான உமரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் நெருங்கிய தோழிகள். தங்களது கருத்துக்களை நபி (ஸல்) அவர்களுடன் விவாதிக்க தயங்காதவர்கள். ஒருமுறை, குடும்ப ரகசியம்(?)வெளியான விவகாரம் தொடர்பாக முஹம்மது நபியுடன் ஹப்ஸா செய்த  விவாதம் காரணமாக அவரை மணவிலக்கு செய்தார். அங்கு இறங்கிய ஜிப்ரீல் அவர்கள் ஹப்ஸாவை மணவிலக்கிலிருந்து  மீட்க கோருகிறார். நபி (ஸல்) அவர்களும் அதை ஏற்று ஹப்ஸாவுடன் இணைந்து வாழ்ந்தார் (இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்).   இவர் எட்டு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தார். இவர் தன்னுடைய அறுபத்தது மூன்றாம் வயதில் காலமானார்.

5. ஜைனப் பின்த் குழைமா

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல் கணவர் பத்ரு போர் களத்தில் இறந்தவர். இவர் தானே முன்வந்து நபி (ஸல்) அவர்களுக்காக தன்னை அர்பணித்ததார். அனாதைகளிடமும் ஏழ்மையானவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவர்திருமணம் நிகழ்ந்து எட்டு மாதங்களில் மரணமடைந்தார்.

6. உம்முஸல்மா

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய முதல்கணவர் அப்துல்லா பின் அப்துல் அஸத் உஹது போரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தவர். இத்தா காலத்திற்கு பிறகு அபூபக்கர் சித்தீக் மற்றும் உமர் இவர்களும் உம்முஸல்மாவை மறுமணம் செய்ய நாடுகின்றனர் ஆனால் மறுத்துவிடுகிறார். நபி (ஸல்) அவர்களின் முயற்சி வெற்றியடைகிறதுநபி (ஸல்) அவர்கள்  உம்முஸல்மாவைத் திருமணம் செய்யும் வேளையில் இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை இருந்ததாக காணப்படுகிறது. மிக அழகானவர். அறிவு கூர்மை நிறைந்தவர் என்பதால் சிக்கலான நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் இவரது அறிவுரை நாடுவது வழக்கம். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறந்தார்.

 

          7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்து எட்டாம் வயதில், ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் அவர்களை ஆறாவது மனைவியாக திருமணம் செய்தார்கள். இவரைப் பற்றியும் விரிவாக பின்னர் காண்போம்.

8. ஜுவேரியா

Bukhari vol 3, Book 46, No. 717
Narrated Ibn Aun:            

Prophet had suddenly attacked Banu Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day.
பனூ முஸ்தலிக் இனத்தவர்களின் மீது  அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி நபி (ஸல்) அவர்களின் படை எளிதில் வெற்றி பெறுகிறது. இப்போரில் பனூ முஸ்தலிக் இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 600 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்களனைவரும் அடிமைகளாக்கப்பட்டனர். சுமார் 2000 ஒட்டகங்களும், 5000 கால்நடைகளும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அக் கைதிகளில் ஜுவேரியா பனூ முஸ்தலிக் இன தலைவரின் மகளும் ஒருவர். பனூ முஸ்தலிக்போரில் இவருடைய கணவர் முஸாஃபி பின் ஸஃப்வான் நபி (ஸல்) அவர்களின் படையினரால் கொல்லப்பட்டு, ஜுவேரியா போர் கைதியாக பிடிக்கப்பட்டார். போரில் கிடைத்த பொருட்களை (கைதிகள் உட்பட) தன்னுடைய படையினருக்கு நபி (ஸல்) அவர்களால் பகிர்ந்தளிக்கப்படுகிறதுஜுவேரியாவை, தாபித் பின் கைஸ் என்ற படைவீரருக்கு அடிமையாக பங்கீடு செய்யப்படுகிறார். தலைவரின் மகள் என்ற உயர்ந்த நிலையில் தன்னை ஒரு சாதாரண போர்வீரனின் அடிமையாக்கப்பட்டதை நினைத்து மிகுந்த வேதனையடைந்தார்.
தன்னுடைய நிலைமையை கூறி, தாபித் பின் கைஸ்க்கு  பணயத்தொகை அளிப்பதன் மூலம் தன்னுடைய விடுதலையை நாடுகிறார். தன்னை பாதுகாப்பாக விடுதலை செய்ய நிறைய பிணைத்தொகை கேட்பார்கள் என அச்சமடைகிறார். தாபித் பின் கைஸும் கோரிக்கையை ஏற்கிறார். போரில் தங்களுடைய செல்வங்கள் முஸ்லீம்களின் வசமானதால், மற்றவர்களின் உதவியால் பணயத்தொகையை திரட்ட நினைக்கிறார்.
போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்களுடன் நபி (ஸல்) அவர்களின் படை மதீனா திரும்புகிறது. இந் நிலையில் ஜுவேரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள நபி (ஸல்) அவர்களை சந்தித்தால் ஏதேனும் எதிர்பாராத உதவி கிடைக்கலாம் என நினைத்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்கிறார். ஜுவேரியா இருபது வயது நிரம்பிய அழகிய பெண். நபி (ஸல்) அவர்களுடன் ஜுவேரியாவை காண்பதை ஆயிஷா விரும்பவில்லை. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிகழ்ந்த பேச்சுவார்தையில், ஜுவேரியா விரும்பினால் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் மட்டும விடுதலை செய்யப்படுகிறார்பிறகு நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். பாரா என்ற அவரது இயற்பெயரை  ஜுவேரியா என்று நபி (ஸல்) மாற்றினார்.
 நபி (ஸல்) அவர்களின் மனைவியின் (ஜுவேரியா) உறவினர்களையும் அவரது ஆட்களையும் அடிமைகளாக வைக்க முடியாமல், வேறு வழியில்லாமல் போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்கள் பனூ முஸ்தலிக் வசம் திருப்பித் தரப்பட்டதாக இஸ்லாமிய அறிஞர்கள்  குறிப்பிடுகின்றனர்ஆனால் பனூ முஸ்தலிக்கின் உடைமைகளை அவர்கள் வசம் திருப்பி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் வரலாற்றில் கணப்படவில்லை. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு நபி தன்னுடைய ஐம்பத்து எட்டாம் வயதில் ஜுவேரியாவைத் திருமணம் செய்து கொண்டார்ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 65 ம் வயதில் ஜுவேரியா காலமானார்.
இத் திருமணம் பனூ முஸ்தலிக் இஸ்லாமை ஏற்க காரணமாக இருந்தது. ஜுவேரியாவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இத் திருமணம் நிகழ்ந்தது எனவே இத்திருமணத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்.
இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தின் படி நபி (ஸல்) - ஜுவேரியா இடையே நிகழ்ந்த உடன்பாடு, ஜுவேரியாவை மட்டுமே விடுதலை செய்தது. அவரது உறவினர்களையும், அவரது நலம் விரும்பிகளையும் செல்வங்களை விடுதலை செய்யவில்லை. தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற, ஜுவேரியா தேர்ந்தெடுத்த வழி; நபி (ஸல்) திருமணம் செய்வது என்ற முடிவு. ஜுவேரியா  தன்னைக் கொடுத்து தன் இனத்தை சேர்ந்த மற்றவர்களை காப்பாற்றினார் என்று முடிவு செய்யலாம். கணவனைக் கொல்வதும் மனைவியயை அபகரிப்பதும்  நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை

Facebook Comments

10 கருத்துரைகள்:

RAJA said...

பெண் பித்தர் முகமது மொத்தம் எத்தனை திருமணங்கள் செய்தார்? என்று தெரிவியுங்கள் தஜ்ஜால். இன்டர்நெட்டில் கிடைத்த தகவல்கள் குழப்புகிறது. முன்னாள் முஸ்லீம் என்ற முறையில் தாங்கள் அறிந்ததை கூறுங்கள்.

Anonymous said...

//கணவனைக் கொல்வதும் மனைவியை அபகரிப்பதும் நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை// :)

சிரிப்புசிங்காரம் said...

இவ்வளவு கேவலமான ஒரு மனிதனால் துவக்கப்பட்டதா இஸ்லாம்

warning for you said...

என் உயிரிலும் மேலான இஸ்லாத்தையும் என் தலைவர் கண்மணியையும் கேவலப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் அழிவு நெருங்கி விட்டது...நீங்கள் இந்த தளத்தை cancel பண்ணி உங்கள் தவறுகளை உணரவில்லை எனின் நிச்சயம் உங்களுக்கு அதி விரைவில் அழிவு உண்டு...நிச்சயம் அழிவை விரைவில் காண்பீர்கள்!!!

kanbro said...

அய்யா "warning for you said..." எச்சரிக்கை செய்வதெல்லாம் இருக்கட்டும் முதலில் உன் பெயர் விலாசத்தை ஆம்பளையா இருந்தா இங்க தா.

RAJA said...

வார்னிங் ஃபார் யு.
முகமது மாதிரியே நீங்களும் உளறுகிறீர்கள். பிறந்த அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். நீங்கள் என்னமோ இந்த உலகத்தை விட்டு போகாமல் இருக்கப்போவதைப் போல் அடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம் என்று சாபம் இட்டுக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் உங்களுக்கு அழிவு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

fareeth said...

இவர்கள் முன்னாள் முஸ்லிம்கள் லாம் கிடையாது ஹிதுதுவ வாதிகளின் மாறு வேடம் இது , இவர்களுக்கு பதில் சொல்லவோ
எச்சரிக்கை செய்யவோ வேண்டாம் இவர்கள் போடும் காமடியை ரசித்தால் போதும் , புத்தி கெட்டவர்கள்

Anonymous said...

அனைத்து இஸ்லாமிய பதிவர்களும் சுகாதார வாரம் கொண்டாடுகிறோம்.
அதனை முன்னிட்டு, இந்த வாரம்

காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா சொல்லித்தந்த சுகாதாரம்

என்ற கட்டுரையை எழுதி நபிஹள் நாய்ஹம் அவர்களது புகழையும் அவர் சொல்லித்தந்த சுகாதாரத்தையும் பரப்புகிறேன்.

Anonymous said...

fareeth said...
இவர்கள் முன்னாள் முஸ்லிம்கள் லாம் கிடையாது ஹிதுதுவ வாதிகளின் மாறு வேடம் இது , இவர்களுக்கு பதில் சொல்லவோ
எச்சரிக்கை செய்யவோ வேண்டாம் இவர்கள் போடும் காமடியை ரசித்தால் போதும் , புத்தி கெட்டவர்கள்,//////

இதை வேதமாக சொன்னவர்கள் புத்தி கெட்டவர்களா? விவாதிப்பவர்கள் புத்தி கெட்டவர்களா?

RAJA said...

பரீத்
உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை நம்ப மறுக்கிறீர்கள். இஸ்லாத்தின் உண்மையை அம்பலப்படுத்தினால் காமெடியாக இருக்கிறது. புத்தியுள்ளவர்கள் விவாதிப்பார்கள். வாருங்கள் விவாதிப்போம்.