Thursday, 7 August 2014

பி.ஜெவின் மோடி மஸ்தான் வித்தை!!


நமது இறையில்லா இஸ்லாம் வாசகர்களுக்கு தெரியும் அண்ணன் பீ.ஜெ நல்லா காமடி பண்ணுவாருனு. ஆனா யாருக்கும் தெரியாது, அண்ணன் வித்தையெல்தலாம் காட்டுவாருனு. அதனால் தான் இந்த முறை மூமீன்களுக்கு அவரே முன் வந்து வித்தகாட்ட முடிவு எடுத்துட்டார்.என்ன வித்தைன்னு கேட்கிறிங்களா?இந்த வருடம் ரமலான் மாதம் நோம்பு 15ல் எங்க ஊர் சுவற்றில் எல்லாம் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அண்ணன் பி.ஜெ ஒரு பகிரங்க சவால் விட்டு இருந்தார். யாராவது அண்ணனுக்கு பில்லி சூனியம் வைத்து அண்ணனை மண்ண கவ்வ வைத்தால் அவர்களுக்கு 50 லட்சம் பணம் (ஹவால பணம் இல்லைங்க ஹலாலான பணம். இரண்டும் ஒன்னுதானே என்கிறீர்களா?) பரிசாக தரப்படும் என்று.

இதை பார்த்த உடன் எனக்கு நல்ல கோவம் வந்தது. ஏன் என்றால், எங்கே முஹம்மது நபிக்கு ஒரு யூதபொண்ணு ஆட்டு தொடையில் விசத்தை தடவி கொடுத்து அந்த விசம் அவரோட தொண்டையில் சிக்கி சிக்கல் ஏற்படுத்தியதே அதப் போல் நம்ம தமிழ்நாடு நபி பி.ஜெக்கு யாராவது எதாவது செய்து அதனால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனால் தமிழ்நாடு மூமீன்கள் மானத்தை யாரு காப்பாத்துறது. ஏன் இவருக்கு இந்த வீண் வேலை என்று எல்லாம் கோபபட்டேன் .ஆனால் அப்பொழுது தான் அல்லாவுடைய வசனம் நினைவுக்கு வந்தது…….

’நன்மையை ஏவி தீமையை தடுங்கள்’ என்று இந்த வசனத்துக்காக தான் பீ.ஜெ இந்த வேலையை செய்து இருப்பார் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

01/08/2014 அன்று முகபுத்தகத்தில் உளாவிக்கொண்டு இருக்கும் போது ஒரு நண்பர், பீ.ஜெக்கு சூனியம் வைக்க திருச்சியில் அகோரி மணிக்கண்டன் என்பவர் ஒப்புக்கொண்டார் எனவும் இருவருக்கும் இடையில் ஒரு 20 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் கையொழுத்து ஆகிருக்கின்றது எனவும் அந்த ஒப்பந்த்ததில் நகலை எனக்கு அனுப்பி இருந்தார்.அந்த ஒப்பந்ததில் நான்கு நிபந்தனைகள் இருந்தன.

இந்த ஒப்பந்தம் வெளிவந்ததிலிருந்து முகபுத்தகத்தில் பீ.ஜெவின் விசிலடிச்சான் குஞ்சுகள்,  மூஸா நபிக்கு பிறகு, பீ.ஜெ தான் சூனியம் இல்லை என்று நிரூபிக்க போகிறார் என சகட்டு மேனிக்கு தங்கள் சுவர்களில் கிறுக்கிதள்ளிக் கொண்டு இருக்கின்றார்கள்(ஆமா... சூனியம் இல்லைன்னு மூஸா எப்போ நிரூபிச்சாரு?).  இஸ்லாத்தில் தற்கொலைக்கு அனுமதியுண்டா என்று பீஜேவின் எதிர் கோஷ்டியினர் தெருவில்மட்டும் போஸ்டர் ஒட்டாதா குறையாக முகநூல்நூல் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி, இது பீ.ஜெவின் மடதனமான ஒப்பந்தம் அவர் டப்பா டான்ஸ் ஆடபோகின்றார் எனவும் வாதிடுகின்றனர்.இதில் இருக்கும் முக்கியமான செய்தி என்னவெனில், இது பீ.ஜெ அண்ணனுடைய விளம்பரயுக்தி. முஹம்மது நபியை போல எல்லோரும் பீ.ஜெவை பற்றி பேசிக்கொண்டு இருக்க வேண்டும்; முக்கியமாக தேர்தலின்போது இறங்கிய தனது ரேட்டிங்கை என்ன விலை கொடுத்தாவது தேற்றிட வேண்டுமென்பது அவரோட அவா.

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லுவாங்க, ”கல்யாண வீடுன்னா அவன்தான் மாப்பிள்ளை! எழவு விழுந்தா அவன்தான் பொணம்!”  பீஜே அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது அதுதான் நினைவுக்கு வருது!.

இந்த விளம்பரத்தின் உச்சப்பட்ச நிகழ்வு எதுவாக இருக்கும் என்றால், 48 நாட்கள் கழித்தும் அண்ணன் பி.ஜெ தற்கொலை செய்துக்கொள்ளாமல் உயிரோடு இருப்பார்; அகோரி மணிக்கண்டனுடைய சூனியம் பலிக்காமல் போகும். அகோரி மணிகண்டண் இஸ்லாத்தை தழுவுவார்; அதன் மூலம் ஒரு சூனியகாரணையே இஸ்லாத்தை ஏற்க வைத்த பி.ஜெ! என்று தெருக்கள் தோறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மண்ணடி மகா சன்னிதானத்தின் கல்லா நிரப்படும்.

இந்த வித்தையை பீ.ஜெ செய்ய என்ன காரணம் இருக்கும் என வினா எழும்பும். பெரியார்தாசனை அப்துல்லாவாக்கியவர்களுக்கும் தன்னை டக்கால்டி என்று சொல்பவர்களுக்கு கொடுக்கின்ற பதில், அகோரி மணிகண்டனை  பிலாலாக மாற வைப்பது. இது மலிவான விளம்பரயுத்தியே தவிர வேற ஒரு வெங்காயமும் இல்லை. இந்த ஒப்பந்ததால் வரும் அனைத்து புகழும் மண்ணடி மகா சன்னிதானம் அண்ணன் பீ.ஜெவுக்கே!!!சிவப்புக்குதிரைபின்குறிப்பு:

இப்படி அசால்டா... 50 லட்ச ரூபாயை பந்தையம் கட்றாருன்னா அண்ணன் பீஜேகிட்ட இன்னும் எவ்வளவு பணம் இருக்கும்?

ஒருவேள.. தன்னோட மதவியாபரத்தை காண்பிச்சு, பேங்கில லோன் ஏதாவது வாங்கியிருப்பாரோ?

இதுக்குக்கூட லோன் கிடைக்குமா?

உண்மையச் சொல்லனும்னா பீஜெ அண்ணன் விட்ட சவால் அகோரி மனிகண்டன்கிட்ட இல்ல.. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு அல்லாஹ்மட்டுமே அறிவான்னு சொல்லற முஃமிகளுக்கு மத்தியில 48 நாள் தனக்கு எதுவும் நடக்காதுன்னு சவால்விட்டுச் சொல்லியிருக்கார்.  பீஜெ அண்ணன் நடத்தற போராட்டம் சூனியத்திற்கு எதிரானததில்ல அல்லாஹ்விற்கும் எதிராது!

என்னமோ போட... மாதவா...!

எல்லாம் அந்த அல்லாஹ்வுக்கே வெளிச்சம்!

Facebook Comments

6 கருத்துரைகள்:

Anonymous said...

முகமது நபிக்கு யூதப்பெண் விஷம் வைத்த கதையை எழுதவும்.

ஆனந்த் சாகர் said...

ஹாருத், மாருத் என்ற வானவர்களை(மலக்குகள்) பாபிலோனுக்கு அனுப்பி அங்குள்ள மக்களுக்கு சூனியத்தை கற்றுக்கொடுக்கும்படி அவர்களுக்கு தான் கட்டளை இட்டதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறானே. அல்லாஹ்வே சூனியத்தை கற்றுக்கொடுக்கும்படி சொல்லும்போது சூனியம் இல்லை என்று இஸ்லாம் கூறுவதாக பி.ஜே எப்படி கூறுகிறார்?

ஆனந்த் சாகர் said...

குரான் வசனம் 2 : 102 சூனியம் உள்ளது என்று கூறுகிறது.

டாக்டர் முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு(குரான் 2:102.) :

"அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?"

சூனியம் இல்லை என்று இஸ்லாம் கூறுவதாக பி.ஜே எப்படி கூறுகிறார்?

தஜ்ஜால் said...

குர்ஆனும் ஹதீஸ்களும் தெளிவாகவே சூனியம் இருப்பதாகத்தான் கூறுகிறது. அதை பீஜெ ஒப்புக் கொள்ள வேண்டுமே? பாவம் அல்லாஹ்! பீஜெவிடம் சிக்கிக்கொண்டு முழிக்கிறான்.

நாட்டு வேங்கை said...

குர்ஆன் மொழிபெயர்ப்பிலேயே பிஜே அல்லாவை சிக்கவைத்துவிட்டாருங்கோ. அடுத்து உங்களுக்கு ஒரு வேலை வருகிறது. மணிகண்டன் விவகாரம்தான். உணர்வு இதழை பாருங்கள்.

சிவப்புகுதிரை said...

பின்னூட்டம்யிட்ட தோழர்களுக்கு நன்றி.

இந்த விசையத்தில் பகிரங்க சவால் என்று பி.ஜெ சொல்ல போய் பகிரங்கமாக மாட்டிக்கிகொண்டார் .எதிர் தரப்பு சக்க அடி அடித்ததாள் வசமாக மாட்டிக்கொண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் இப்ப எங்க ஊரில் போனர்களை மாற்றிவிட்டார்கள்.பி.ஜெ க்கு என்று இருந்ததை தவ்வித் ஜாமாத் என்று மாற்றிவிட்டார்கள்...
ஆனா என்ன அடித்தாலும் அண்ணன் தாங்குராரு..அல்லா கண்டிப்பாக இவருக்கு 144(72*2) கண்ணிகளை கொடுத்து சிறப்பு செய்ய வேண்டும் என்று துவா செய்வோம்..
எல்லாரும் ஆமீன் சொல்லுங்க.