Monday, 4 August 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -8

நம்முடைய முஹம்மதிற்கு இருந்த வேறொரு பிரச்சினை, ஈஸாவை முன்னிலைப்படுத்துவதை விரும்பவில்லை; அதனால் அவருக்கு எந்தப் பலனுமில்லை. எனவே, ஈஸா மட்டுமல்ல, அல்லாஹ்விற்கு மகனாக எவருமில்லை என்றார். வாரிசுகளால் அரசியலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குழப்பங்களை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

இதுமட்டும் போதாதே?

ஈஸாவை மட்டுமல்ல பைபிளின் தீர்க்கதரிகள் அனைவரையும் பின்னுக்குத்தள்ள என்ன வழி?

அதற்குத்தானே அல்லாஹ் இருக்கிறான், உடனே ஒரு வஹியை இறக்குவதைத் தவிர அவனுக்கு வேறு என்ன வேலை?

குர்ஆன் 3:81
"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்ட போது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

இவ்வசனத்ற்கு அண்ணன் பீஜே தரும் விளக்கத்திலிருந்து சில பகுதிகளைமட்டும் பார்ப்போம். (முழுவதையும் படிக்க.)

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி
'நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும்' என்பதுதான் இங்கே (திருக்குர்ஆன் 3:81) கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.
ஆனால் இவ்வசனத்தைக் கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப்பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லை என்பதே உண்மையாகும். ....
நாம் அண்ணன் பீஜே தரும் விளக்கத்தை விரிவாக ஆய்வு செய்யத் தேவையில்லை. அண்ணனின் விளக்கத்திலுள்ள முரண்பாடுகளை அறிய, குர்ஆன் 3:81-ற்குப் பின்னர் அடுத்தடுத்துவரும் வசனங்களைக் கவனித்தால் போதுமானது.

3:82  இதன் பிறகு புறக்கணிப்போரே குற்றம் புரிந்தவர்கள்.
3:83 அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.96
3:84 "அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், மற்றும் (அவர்களின்) சந்ததிகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா, மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுவீராக!
3:85 இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
3:86 தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால்,

முன்சென்ற அல்லாஹ்வின் தூதர்களே அடுத்துவரும், வரயிருக்கும் தூதரின் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொண்டு, உதவுவதாக வாக்களித்துள்ளனர். முன்சென்ற தூதர்களைப் பின்பற்றுவதாகக் கூறும் யூத, கிறிஸ்தவர்களே தற்பொழுது வந்திருக்கும் இத்தூதரைக் கேள்விகள் கேட்டு தொல்லை கொடுக்காமல் நம்பித் தொலையுங்கள் என்பதுதான்.  முஹம்மதின் வருகையைப்பற்றி ஈஸா செய்த முன்னறிவிப்பு செய்தாராம்!

குர்ஆன் 61:6
"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர்.

குர்ஆன் 3:81-ன் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் முஹம்மதின் காலத்திற்கு முன்பே, அவர் உட்பட அனைத்து நபிமார்களின் முன்னிலை எடுக்கப்பட்ட ஒப்பந்தம். அனைத்து நபிமார்களும் எந்தக்காலத்தில் ஒன்றினைந்து ஒரேகாலத்தில் இருந்தனர்?

இத்தொடரின் ஆறாவது பகுதியில் மௌலானா அஸீஸ் அவர்கள் எழுதிய ”தப்ஸீர் ஆயத் அந்நூர்” என்ற நூலிலிருந்து சில பகுதிகளை கொடுத்திருந்தேன்; அதிலிருந்து மீண்டும்...இயேசுவின் உருவாக்கத்தில் மரியாளின் பங்கு எதுமில்லை என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை முன்னமே குறிப்பிட்டிருந்தேன். நாங்கள், அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களல்ல என்கின்றனர் இஸ்லாமியர்கள்
தன்னை மிக உயர்ந்த பிறவியாக முஹம்மது கற்பனை செய்து கொண்டார். இவ்வாறாக முஹம்மது தன்னை முன்னிலைபடுத்தி, தனது தற்காதல் கோளாறு மனநிலைக்குத் தேவையானவற்றை அல்லாஹ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மற்றவர்களிடமிருந்து வலிந்துபெற்றுக் கொண்டார். முன்னுக்குப் பின் முரணாக ஏதையாவது உளறி தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்து கொண்டார்.

கிறிஸ்தவத்திற்கும் முஹம்மதிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு, முஹம்மதின் மனைவி கதீஜா தனது கணவருக்கு ஹீரா குகையில் ஏற்பட்ட வினோத அனுபவத்திற்கு விளக்கம் அறிந்து கொள்ள நாடியது ஒரு கிறிஸ்தவரைத்தான். ஹீரா குகையில் முஹம்மதிடம் தகாதமுறையில் நடந்து கொண்டது ஜிப்ரீல்தான் என்று பார்வையற்ற கிறிஸ்தவர் கூறியதை முஹம்மதுவும் கதீஜாவும் அப்படியே நம்பியிருக்கின்றார் என்பதே இதற்கு மிகப்பெரும் ஆதாரம்.

நாம் முன்பே பலமுறை பார்த்த ஹதீஸ்தான் இருந்தாலும், நமது முஃமின்கள் ஆதாரம் இருக்கிறதா? என்று அலறுவார்கள். அதற்காக..

புகாரி ஹதீஸ் : 0003
ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறியதாவது.
...பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள். -வரக்கா அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ்  நாடிய அளவிற்கு ஹீப்ரு  மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, (நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார்....

கட்டிப்பிடி அனுபவத்திற்கு, வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா விளக்கம் கொடுக்கும்வரை, முஹம்மது மற்றும் கதீஜா குடும்பத்தினர் கிறிஸ்தவத்தை சரியான பாதையாக நினைத்திருக் வேண்டும். அதன் பின்னர் கிறிஸ்தவம் திரிக்கப்பட்ட மார்க்கமாக அறியப்பட்டிருக்கலாம். எனவே, கிறிஸ்தவம் என்றால், கிலோ என்ன விலையென்று கேட்கும் நிலையில் நம்முடைய முஹம்மது இருந்ததில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

”ரூஹுல் குத்தூஸ்” எங்கிருந்து வந்தது?

யூத, கிறிஸ்தவ நம்பிக்கைகளில் கூறப்படுக் கதைகளை, கருத்துக்களை அரைகுறையாக அறிந்து கொண்ட முஹம்மது, என்ன சொல்கிறோம் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் அப்படியே கூறியுள்ளார். அவரது அறியாமையினால் ”ரூஹுல் குத்தூஸ்” நுழைந்துவிட்டது. முஹம்மதின் உளறலில் இருந்த இந்தக் குழப்பத்தை, யூதர்கள் மிகச் சரியாக இனம் கண்டனர். கிறிஸ்தவத்தில் உள்ளதைப் போன்ற ‘பரிசுத்த ஆவி’ என்ற நம்பிக்கை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். யூதர்கள் தங்களது கடவுள் யாவே-வை பரிசுத்த ஆவி என்று பொருள்படும் “Ruaḥ ha-Ḳodesh” என்று அழைப்பர். ஆனால் முஹம்மதின் போதனைகளைப் பொறுத்தவரையில் ”ரூஹுல் குத்தூஸ் - பரிசுத்த ஆவி’ என்பது நிச்சயமாக அல்லாஹ் அல்ல! குழம்பிய யூதர்கள் முஹம்மதிடம் தங்களது சந்தேகத்தை முன் வைத்தனர்.

குர்ஆன் 17:85
(முஹம்மதே!) உயிரைப்(l-rūḥi) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!

புகாரி7456
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண்மை பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்) கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) 'இவரிடம் 'உயிர்' (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!' என்றார். இன்னொருவர், 'இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)' என்றார்.
பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் 'ரூஹ்' பற்றிக் கேட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், '(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்; உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது' எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் 'அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!' என்றார்கள்.

எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ ’களிமண் தியரியை’ கூறுவதில் ஆப்பிரஹாமிய மதங்கள் ஒன்றிணைந்து விடுகின்றன. முஹம்மதுவும் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாகக் கூறவில்லை. எனவே யூதர்கள் மனித உடலில் இருக்கும் ‘உயிரை’ப்பற்றி முஹம்மதிடம் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. அப்படியானல் யூதர்கள் குறிப்பிட்டது சந்தேகத்திற்கு இடமின்றி ’ரூஹுல் குத்தூஸை’த்தான்! முஹம்மது, யூத-கிறிஸ்த நம்பிக்கைகளுக்கிடையே தானும் குழம்பி அவரது அடிபொடிகளையும் குழப்பிவிட்டார். யூதர்களின் மீது முஹம்மது கொண்ட வெறித்தனமான கோபத்திற்கு இதைப் போன்ற கேள்விகளும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். குழப்பம் அத்துடன் நிற்காமல் முல்லாக்களை வந்தடைந்தது. அவர்கள் தங்களது பங்கிற்கு, யூதர்களின் நியாயமான இந்தக் கேள்வியை மிகத்திறமையாகத் திரித்து, ஜிப்ரீலுக்கு ‘ரூஹுல் குத்தூஸ்’ என்ற கூடுதல் பொறுப்பையும் வழங்கிவிட்டனர்.  அண்ணன் பீஜே இங்கு குறிப்பிடப்படும் ’ரூஹ்’ என்பதை வானவர் என்பதாக விளக்கமளிக்கிறார். இதனால் விளையும் குழப்பங்களை சுருக்கமாகக் கவனித்து விடுவோம்.

குர்ஆன் 19:17
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
குர்ஆன் 66:12
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை(رُوحِنَا-rūḥinā) ஊதினோம்...

 ‘நமது ரூஹ்’ என்பது ஜிப்ரீலைக் குறிப்பிடும் என்றால், களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின் உடலில் (15:29) ‘..எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது..’ (38:72)...எனது உயிரை அவரிடம் நான் ஊதும்... என்று திரும்பத் திரும்பக் கூறி அல்லாஹ் ஊதியதும், இன்று ஒவ்வொரு கருவிலும் (32:9) ‘...தனது உயிரை அவனிடம் ஊதினான்’ என்று கூறுவதும் ஜிப்ரீல் என்ற வானவரைத்தான் ஊதினான் என்று பொருள் கொள்ளலாம்.

குர்ஆனுக்கு நீங்கள் எப்படி விளக்கமளித்தாலும் மறுபடியும் மறுபடியும் அது பல்லை இளித்துக்கொண்டு தலையை சொறிந்து கொண்டு அசடுவழிந்தவாறே நிற்கும். அதன் தனித்துவமே அதுதான்!

எனவே,
4:171. வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையாவார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! மூவர் எனக் கூறாதீர்கள்!..

அல்லாஹ், ஈஸாவை மட்டுமே தனது உயிரென்று வர்ணனை செய்கிறான். ஆனால் ஆதாமையோ அல்லது அல்லாஹ் உயிரை(ஜிப்ரீலை?) ஊதுவதாகக் கூறும் ஒவ்வொரு கருப்பையினுள் இருக்கும் சதைக்கட்டியையோ, அது தனது உயிராக இருப்பதாக அழைத்து வர்ணனை செய்ததில்லை. இதுதான் ஈஸாவிற்கும் மற்றவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு. தனது உயிரை((ஜிப்ரீலை?)  ஊதினான் என்பதற்கும், தனது உயிராக இருக்கிறார் என்று பிரகனப்படுத்துவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. இதன் அடிப்படையில் நோக்கினாலும் ஈஸா அல்லாஹ்வின் மகனே!

பொதுவாகவே மனிதர்களுக்குத் தெய்வீகச் சாயம் பூவதென்பது உலகம் முழுக்க தொன்றுதொட்டு இருக்கும் வழக்கம்தான். தங்களுக்குப் பிடித்தமானவர்களை/கதாபாத்திரங்களை தெய்வநிலைக்கு உயர்த்தும் செயல்களை இன்றும் நாம் காணலாம்.  கிராமத்து காவல் தெய்வங்கள், பக்கத்து மாநிலத்திலிருக்கும் ஐயப்பன், இராமாயண, மகாபாரத புனைவுகள் என்று கிரேக்க புராணக்கதைகள்வரை நிறைய உதாரணங்களைக் கூறமுடியும். ஈஸாவின் கதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்!


தஜ்ஜால்

Facebook Comments

3 கருத்துரைகள்:

சிவப்புகுதிரை said...

//குர்ஆனுக்கு நீங்கள் எப்படி விளக்கமளித்தாலும் மறுபடியும் மறுபடியும் அது பல்லை இளித்துக்கொண்டு தலையை சொறிந்து கொண்டு அசடுவழிந்தவாறே நிற்கும். அதன் தனித்துவமே அதுதான்!//

ஏன்க இத படிக்கும் போது சிரிக்காம இருக்க முடியலங்க...வைய்ரு வழிக்குது....

Ant said...

//3:86 தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.// யார் பாதை மாறி செல்கின்றனறோ அவர்களுக்குத்தான் வழிகாட்டுதல் தேவை இங்கு அவ்வாறு தவறிழைத்தவர்களுக்கு நேர்வழி காட்டப்படாது என்கிறாரே படைத்தவர் அப்படியானால் நேர்வழி என்றால் என்ன பொருள்? ஏற்கனவே மார்கத்தை பின்பற்றுவர்கள் நேர்வழியில் செல்வதில்லை‌யா?

Mohamed Rabeek said...

வணக்கததிற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறுயாருமில்லை இதுவே நேர்வழி