Monday 3 February 2014

காட்டுமிராண்டிகள் யார்?




ஒரு இஸ்லாமிய தளம் (இணைப்பு) இவ்வாறு சொல்கிறது...

சந்திரனே மிகத்துள்ளியமாக உலக மக்களுக்கு அவர்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் நாட்களையும் தேதிகளையும் அறிவிக்கின்றது.
அகில உலக அதிபதி சந்திரனையே உலகம் படைக்கப்பட்ட காலந் தொட்டு நாள்காட்டியாக்கி வைத்துள்ளான்.  இதை குர்ஆனில் அறிவிக்கவும் செய்கிறான்.
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; இறைவன் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
இஸ்லாம் சந்திரனையே நடைமுறை நாள்காட்டியாக்கியது.
குர்ஆனின் இந்த அறிவிப்பையே நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.  அவர்கள் காலத்தில் சூரியன் நேரங்காட்டியாக மட்டுமே இருந்தது.  நாள் – வாரம் – மாதம் – வருடம் இவை அனைத்தும் சந்திரனைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. நபி(ஸல்) காலத்தில் சூரிய நாள்காட்டி என்ற பேச்சே இல்லை.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையிலிருக்கும் கிரிகோரியன் நாட்காட்டியைவிட அல்லாஹ்வும் முஹம்மதுவும் போதித்த சந்திரநாட்காட்டி மட்டுமே சிறந்ததென்பதே இஸ்லாமியர்களின் வாதம். இஸ்லாமிய நாட்காட்டிக்குள் செல்லும்முன் நாட்காட்டிகளைப்பற்றி சுருக்கமாக கவனித்துவிடுவோம்.

நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும்.

இன்று நாம், அறிவியலின் வளர்ச்சியால் நாட்காட்டிகளை, வணிக நிர்வாக நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்துகிறோம். ஆனால் அன்றைய மக்களின் வாழ்க்கைப் போராட்டம் நாட்காட்டிகளை அடிப்படையாகக் கொண்டே இருந்தது. அன்றைய நாகரீகங்கள் மிகப் பெரும்பாலும் விவசாயத்தையே அடிப்படையாக கொண்டிருந்ததால், பருவகால மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு அவர்கள் நாட்காட்டிகளையே சார்ந்திருக்க வேண்டிருந்தது. சூரியன், சந்திரனின் மற்றும் இயற்கை நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப பல்வேறு நாட்காட்டிகள் வழக்கிலிருந்திருக்கிறது.

சந்திரனின் ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாட்காட்டி மட்டுமே மிகத் துள்ளியமாக இருக்கிறதென்பதே இஸ்லாமியர்களின் வாதம்.  இங்கு நமது விவாதம் சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் எது சிறந்தென்பதல்ல. ஏனெனில் இரண்டுநாட்காடிகளிலும் நிறை, குறைகள் இருந்திருக்கிறது; அதை சரிகாணும் முயற்சிகளை நாட்காட்டிகளின் வரலாறு நெடுகிலும் காணலாம்.
சூரிய நாட்காட்டியில், பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவரும் காலத்தை ஒரு ஆண்டு என்றும் ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது. ஆனால்  365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தில் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது. மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளை தவிர்க்க இயலாமல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாக ஃபிப்ரவரியில் 29 என்ற நாளையும் இணைத்து சரிகாணப்படுகிறது. இன்று நம்மிடையே வழக்கிலிருக்கும் சூரியனை அடிப்படையாக கொண்ட கிரிகோரியன் நாட்காட்டி, சந்திரனை அடிப்படையாக கொண்ட  ரோமானிய நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமே.

சந்திர நாட்காட்டியில், ஒரு மாதம் என்பது, சராசரியாக 29.5305888531 நாட்களாக வருகிறது. ஆண்டிற்கு 12 மாதங்கள் என்றால் 29.5305888531X12 = 354.3671 நாட்கள் என்றாகிறது. இதையே, ஆண்டிற்கு 13 மாதங்களாக கணக்கிட்டால், 383.8977 நாட்களாகிவிடும். இப்படி பல குழப்பங்கள் இருந்திருக்கிறது.  நாட்களை மாதங்களுக்குள்ளும் மாதங்களை வருடத்திற்குள்ளும் முழுமையாக, சரியாக பெறுத்தவும், புவியின் பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களை நாட்காட்டிகளில் மேற்கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு சீன நாட்காட்டி, 2500 ஆண்டுகளில் 50- 100  திருத்தங்களை சந்தித்திருக்கிறது. சந்திர நாட்காட்டியை  பின்பற்றிய சுமேரியர்கள், அதிலிருக்கும் குழப்பத்தை சரிகாண 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை 62 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை கூடுதலாக  இணைத்திருந்தனர். இவ்வாறாக புவியின் பருவருகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க மனிதகுலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இனி இஸ்லாமிய நாட்காடியை கவனிக்கலாம். இஸ்லாமியர்கள் சந்திர நாட்காடியைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர். உண்மையில் சந்திர நாட்காட்டிக்கும் வழக்கிலிருக்கும் இஸ்லாமிய நாட்காட்டிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. கிபி 638-ல் இரண்டாம் கலீபா உமர் காலத்தில் இஸ்லாமிய ஆண்டுக்கணக்குத் துவங்கியது.
குர்ஆன் 9:36
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்!..
இஸ்லாமிய நாட்காட்டியிலுள்ள குழப்பத்தை அறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அதன் நடைமுறைக் குழப்பங்களை கவனித்தால் போதும்.

ஒரு சந்திர மாதம் என்பது சராசரியாக 29.53 நாட்களைக் கொண்டது என்பதை முன்பே பார்த்தோம். மாதம் என்பது 29 நாட்களாக இருக்கும் அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பது முஹம்மதுவின் கட்டளையும் கூட. அதாவது  குறைந்தபடசம் 29 நாட்களும் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே. சராசரியாக பார்த்தால் 29.5 நாட்களாக இருக்கும். அல்லாஹ்விடமுள்ள பதிவேட்டின்படி, பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது ஒரு ஆண்டு.  பூமி, சூரியனைச் சுற்றத் துவங்கிய இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு வரும் கால அளவை ஆண்டு என்கிறோம். அதற்கு 365.25 நாட்கள் தேவைப்படுகிறது என்பதையும் பார்த்தோம்.

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி ஆண்டு என்பதை இவ்வாறாக வரையறை செய்கிறது.
 29.5 X 12 = 354  

இதைக் கொண்டு பருவகாலங்களை கணித்தால் எப்படி இருக்கும்?

கோடைகாலமாக இருக்கும் ஏப்ரல்-மே மாதங்கள்,  இஸ்லாமிய மாதங்களில் இந்த ஆண்டு, முறையே ஜமாதுல் ஆகிர்-ரஜப் என்றிருக்கிறது.  பத்துவருடங்கள் கடந்தாலும் ஏப்ரல் – மே மாதங்கள் கோடைக்காலம்தான். ஆனால் ஜமாதுல் ஆகிர்-ரஜப் மாதங்கள் குளிர் காலத்தில் இருக்கும். ஜமாதுல் ஆகிர் - ரஜப் மாதங்கள் 33 வருடங்களுக்குப் பின்னரே தனது முந்தை இடத்தை அடையும்.

இவ்விஷயத்தில் இஸ்லாமியர்கள் செய்ததென்ன?

இஸ்லாமியர்கள் தங்களது மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவது உலகறிந்த குழப்பம். அதையும் சற்று கவனிக்கலாம்.
புகாரி 1900
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இந்த ஒரு ஹதீஸைக் கொண்டு இவர்கள் செய்யும் அழிம்பு தாங்க முடிவதில்லை. இவர்கள், தங்களை தாங்களே குழப்பி, அடுத்தவர்களையும் குழப்பி அரசாங்கத்தையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பிறை விஷயத்தில் நபிவழியை பின்பற்றுங்கள்
...மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்படுகின்ற அனைத்தும் வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே ரமலான் மற்றும் துர்ஹஜ் மாத துவக்கத்தை தீர்மானிக்க நபிவழி முறையை விட்டு விட்டு, கணிப்பை நம்பி செயல்படுவது குர்ஆன், நபிவழிக்கு எதிரானதும், வணக்க விஷயத்தில் புதிதாகப் புகுத்துவதுமாகும். அது நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் அப்படிப்பட்ட வழியில் செல்லுகின்றவர்கள் சிந்தித்து அதிலிருந்து மீண்டு சரியான தெளிவான நபிவழியை பின்பற்ற முன்வரவேண்டும்.
islampaathai.com
அதாவது முன்கூட்டியே சந்திரனின் இயக்கத்தை கணித்து மாதத்தின் முதல் நாளைக் கணக்கிடக் கூடாது. பிறை சந்திரனைக் கண்களால் கண்டபிறகே மாதத்தை துவங்க வேண்டுமாம்.

இது இன்னொரு கூட்டம்,
பிறை பார்த்தல்!
...சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்துத்தான் தொழுகை நேரத்தை அறிந்து தொழ வேண்டும் என்று முன்னர் அடம் பிடித்தது,
சந்திரனைப் புறக்கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று இப்போது அடம் பிடிப்பது,
இத்தியாதி, இத்தியாதி பொருள்களில் அதாவது மார்க்கத்திற்கு உட்படாத பொருள்களில் அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயம் மார்க்கத்திற்கு உட்பட்டவை -அவற்றில் அணுவளவும் மாற்றத்திற்கு இடமே இல்லை என்று திட்டமாக அல்குர்ஆன் கூறுபவற்றில், மனம் போன  போக்கில் மாற்றத்தை உண்டாக்குவதில் புரோகிதர்கள் முன்னணியில் இருக்கின்றனர்.
.....
அதேபோல் அன்று மாதம் பிறந்ததை முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று கணினி கணக்கீட்டின் மூலம் எதிர்வரும் நூறு ஆண்டுகளின் 12 மாதங்களின் தலைப் பிறையை  இன்றே மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும் அளவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், இன்று பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் காத்திருக்கத் தேவையே இல்லை.
ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள், தங்களின் தொழிலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பின்போதும் அதை மறுத்து அலறுவது வாடிக்கை. காலப்போக்கில் வேறு வழியின்றி அவர்களும் அந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
readislam.net
அடுத்தது அண்ணனின்  கூட்டம்,
பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்
....
அதாவது, நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி பிறை வானில் இருந்தால் கூட, அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகிறான். அதற்குரிய முயற்சியில் நாம் இறங்க வேண்டும். ஒரு வேளை பிறை (மேகமூட்டம் காரணமாக) தெரியாமல்  இருந்தால், மாதம் பிறக்கவில்லை, முந்தைய மாதமே நீடிக்கிறது என்று  முடிவு செய்து கொள்ளலாம். ஆக, எந்த நிலையிலும் நம் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிவு செய்து கொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.
www.onlinepj.com
ஹிஜ்ரா கமிட்டி என்றொரு கூட்டம், பிறை பார்ப்பது என்றால் என்னவென்று அண்ணனுக்கே அரபி சொல்லிக் கொடுத்தது. இங்கு  ஹிஜ்ராகமிட்டிக்காரர்கள், அண்ணனுக்கு கொடுத்த நெற்றியடிகளையும்,  இங்கு அண்ணன் ஹிஜ்ரா கமிட்டிக்கு கொடுத்த மரண(!) அடி, சவுக்கடி, செருப்படிகளையும் காணலாம். நேரமும், விருப்பமும் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்க அறியவாய்ப்பு.

இப்படி மாறிமாறி செருப்படிகளைப் பரிமாறிக் கொண்டதைத்தவிர இவ்விஷயத்தில் இன்றுவரை இஸ்லாமியர்கள் எதுவும் செய்யவில்லை. ஆண்டிற்கு 355 நாட்கள் என்றுதான் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் முஹம்மதைக் கடந்து சிந்திக்க முடியாது, கூடாது.

உதாரணத்திற்கு, பீஜே குழுவினரும், ஹிஜ்ரா கமிட்டிக்காரர்களும் பக்கப் பக்கமாக எழுதித் தள்ளியவைகளில் சடங்குகளையும் வழிபாடுகளையும் மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றனர். அதைக் கடந்து அவர்களால் சிந்திக்க முடியவில்லை. வழிபாடுகளை அட்டவணைப்படுத்துவதற்காக மட்டும்தான் நாட்காட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் போலிருக்கிறது! 

நாட்காட்டிகளின் மிக முக்கிய பணி என்னவாக இருந்தது?

சுருக்கமாகச் சொல்லவதென்றால், சமூகத்தின் தேவைகளை காலாளவிற்குள் பூர்த்தி செய்ய முன்கூட்டியே வரைசெய்ய உதவும் ஒரு கருவி. விவசாயம், வேட்டையாடுதல், புலம்பெயர்தல் போன்ற அன்றைய மக்களின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட நாட்காட்டிகள் பெரும் பங்கு வகித்தது. இன்றும் கூட அப்படித்தான்.

சரி..!  மனிதர்களின் இந்தத் தேவைகளை அல்லாஹ்வும் முஹம்மது அறியவில்லையா? அவர்கள் விவசாயத்தை அவர்கள் எள்ளளவும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.  உண்மை என்னவென்றால் முஹம்மதிற்கு விவசாயத்தைப்பற்றி எதுவும் தெரியாது அதனால் அல்லாஹ்வும் அதைப்பற்றி வாய்திறக்கவில்லை.

முஹம்மதுவின் சொல் செயல் அனைத்துமே அல்லாஹ்வின் கட்டளைப்படி இருந்தது, அவர் தனது உடலிலிருந்து காற்றைப்பிரிப்பது கூட அல்லாஹ்வின் அறிவுறுத்தலின் காரணமாகவே நிகழ்ந்தது எனவே ஹதீஸ்களை, குர்ஆனில் இல்லாத வஹீ என்றெல்லாம் கதையளப்பதை அறிவீர்கள்.

முஸ்லீம் 4711
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார் கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டா தீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்'' என்று சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள், அறியாமைக் காலம் காட்டுமிராண்டிக்காலம் ஜஹிலியாகாலம் என்றெல்லாம் வர்ணனை செய்யும் காலத்தில் வாழ்ந்த ஒரு சாதரண அரபி விவசாயிக்குத் தெரிந்த சொற்ப அறிவியல் கூட முஹம்மதிற்குத் தெரியவில்லை என்பதுதான். எப்படி யாரை வழிப்பறி செய்வது, பெண் கைதிகள், அடிமைகளின் குறிக்குள் விந்தை எப்படி செலுத்துவது, முஹம்மதின் மனைவியர்களைப்பற்றி, அவரிடமே கோள் சொல்வது என்று அல்லாஹ்வின் காலம் முடிந்துவிட்டது. இதில் விவசாயாத்தைப்பற்றி பேசவேண்டுமாம் நல்ல வேடிக்கை!

அல்லாஹ்விற்கும் முஹம்மதிற்கும் விவசாயத்தைப்பற்றி தெரியவில்லை என்பது மட்டுமல்ல அதை ஒரு கேவலமான தொழிலாகக் கருதினர் என்பதுதான் இங்கு வேதனையான விஷயம்.
புகாரி 2321
 முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார்.
அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
விவசாயத்தை இழிவாகக் கருதியது மட்டுமல்லால். அதற்கு செலுத்தப்பட்ட உழைப்பை முஹம்மது மதிக்கவுமில்லை.
புகாரி 4031
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை  எரித்துவிட்டார்கள். இன்னும்  வெட்டிவிட்டார்கள். அது 'புவைரா' என்னும் இடமாகும். எனவேதான் 'நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படிவிட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே" என்னும் (குர்ஆன் 59:05) இறைவசனம் அருளப்பட்டது.
வறண்ட பாலைவனத்தில் ஒரு சின்னஞ்சிறிய செடி துளிர்க்க வைப்பது மிகப்பெரிய பணி. வளர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் பேரிச்சம் மரங்களை எரிப்பதும், வெட்டிச் சாய்ப்பது அறிவுடைய மனிதனின் செயலாக இருக்குமா? காட்டுமிராண்டிகள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1996-ல் தலிபான்கள் காபூலில் இருந்த வானிலை ஆய்வு மையத்தை தகர்த்தனர். 100 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் அழிக்கப்பட்டது. மூடர்களின் செயலால் விவசாயிகள் துன்பத்திற்குள்ளாயினர். எதிர்பாராத வானிலையால் 1998-ல் ஆப்கனிய விமானம் விபத்திற்குள்ளானதில் 45 உயிர்கள் பலியானது. விமானமாவது, விவசாயமாவது எங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகள் மட்டுமே முதன்மையானது.
ஏன் இப்படி?



இஸ்லாமைப் பொருத்தவரையில், பருவ காலங்கள் மற்றும் வானிலையக் கணிப்பது ஜோதிடத்திற்கு நிகரானது; செய்வினை, பில்லி, சூனியம் போன்றது எனவே அது ஹராம். வானிலை முன்னறிவிப்புகளை தாலிபான்களும் மாந்திரீக செயலாகக் கருதினர். பருவ காலங்களை அல்லாஹ் மட்டுமே அறிய முடியும் அது அவனது விதியின் கீழ்வருகிறது. அதை முன்கூட்டியே கணிப்பது அல்லாஹ்வின் ஆளுமையில் குறுக்கீடு செய்வதைப் போன்றது. அவ்வாறு முன்னீடு செய்பவர்களை அழிப்பது அல்லாஹ்விற்கு செய்யும் தொண்டாகும். இதற்கென்று கூடுதல் ஹூரிகள் வழங்கப்படலாம். 

2003 –ல் ஃபிரான்ஸ் அரசு உதவியுடன் ஆப்கானிஸ்தானில் மீண்டும் வானிலை மையம் நிறுவப்பட்டிருக்கிறது. அது எத்தனை காலம் இருக்குமோ? (அல்லாஹ்வே அறிவான்!?)

சந்திர நாட்காட்டிக்கும் இஸ்லாமிய நாட்காட்டிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இஸ்லாமிய நாட்காட்டியென்பது அல்லாவிற்காக வெற்று சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் நிறைவேற்ற வேண்டிய நேரத்தை மட்டும் குறிப்பிடும் கால அட்டவனையன்றி வேறில்லை.



தஜ்ஜால்

Facebook Comments

12 கருத்துரைகள்:

குட்டிபிசாசு said...

I learned some new things about nabbi from your essay

Unknown said...

//ஆண்டிற்கு 355நாள்கள் என்று தான் கணக்கிட்டு வருகின்றனர் //அது மார்க்க (வியாபார )த்திற்கான ,நடைமுறையில் ஃபோன் /மின்சாரம் /வங்கி கணக்கு .....ஆகியவற்றுக்கு ?பித் அத் தை தான் பின் பற்றி வருகின்றனர் (நன்றி சகோ அருமை )

Unknown said...

//ஆண்டிற்கு 355நாள்கள் என்று தான் கணக்கிட்டு வருகின்றனர் //அது மார்க்க (வியாபார )த்திற்கான ,நடைமுறையில் ஃபோன் /மின்சாரம் /வங்கி கணக்கு .....ஆகியவற்றுக்கு ?பித் அத் தை தான் பின் பற்றி வருகின்றனர் (நன்றி சகோ அருமை )

உறங்கா விழிகள் said...

இசுலாம் விவசாயத்திற்க்கு எதிரானது என்பதை இப்பதிவின் மூலம்தான் தெரிந்துகொண்டேன். அருமையான விளக்கங்கள். தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.

தஜ்ஜால் said...

வாருங்கள் குட்டிபிசாசு,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

தஜ்ஜால் said...

வாருங்கள் சாதிக்,

//பித் அத் தை தான் பின் பற்றி வருகின்றனர்// உண்மைதான். அதுமட்டுமல்ல இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. நாளின் துவக்ம் எது என்பதிலும் இதே குழறுபடிதான்.

தஜ்ஜால் said...

வாருங்கள் உறங்கா விழிகள்,

முஹம்மது தன்னை வியாபாரி என்று கூறிக் கொண்டார். வியாபாரத்தில்தான் வளர்ச்சி இருக்கும்; அல்லாஹ்வின் அருள் இருக்கும் என்றார். விவசாயத் தொழிலின் மேன்மை அவருக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுள்(!?) அல்லாஹ்விற்கும் தெரிவில்லை என்பதுதான் கொடுமை.

Ant said...

காட்டுமிராண்டி தன்மை விட்டுவிலகாத ஆதிவாசி குழுவில் கூட பலியிடுகையில் நல்ல மழை பெய்ய வேண்டும், கால்நடைகள் செழிக்க வேண்டும், விவசாயம் பெருக வேண்டும் என்று வேண்டிதான் விலங்குகள் முதல் மனிதன் வரை பலியிடுகின்றனர். ஆனால் கடவுளோ அவர் பெயரை சொல்லி கொலை செய்யவும் அவ்வாறு செய்தால் நிறைய கொள்ளை பொருள் தருவேன் என்று கூறுவது அவர் கடவுளா கொள்ளை கூட்ட தலைவனா? என்ற கேள்வி எழுகிறது. ஆதிவாசிகளை ஒட்டியே இன்றை கிராமத்து சாமியாடிகள் கூட அருவாக்கு கூறுவது கவணிக்க தக்கது. மொத்தத்தில் அந்த புத்தகம் நாகரீக சமுதாயத்திற்க்கு பொருந்தாது.

ஆனந்த் சாகர் said...

//ஆனால் கடவுளோ அவர் பெயரை சொல்லி கொலை செய்யவும் அவ்வாறு செய்தால் நிறைய கொள்ளை பொருள் தருவேன் என்று கூறுவது அவர் கடவுளா கொள்ளை கூட்ட தலைவனா? என்ற கேள்வி எழுகிறது.//

இஸ்லாம் என்பது மாஃபியா. அதன் நிறுவன தலைவர் முஹம்மது ஒரு மாஃபியா தலைவர். 6ஆம் நூற்றாண்டில் முளைத்த இந்த மாஃபியா இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

குர்ஆன் முழுக்க முழுக்க அன்றைய சூழலுக்கானதே. நமது இஸ்லாமிய அதை இன்றைய நாகரீகத்துடன் பொருத்த முயற்சிக்கின்றனர். குர்ஆனின் முரண்பாட்டை விளக்கினால், நம்மை முறைக்கின்றனர்.

Anonymous said...

வாருங்கள் ஆனந்த்,

நீங்கள் சொல்வது சரிதான். மதங்களனைத்துமே மாஃபியா கும்ம்பல்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்பாவிகளைச் சுரண்டுகிறது.

Unknown said...

ஐந்தறிவு பறவைகள் கூட பருவகாலங்களை கணித்து ஆண்டுதோறும் அழகாக இடம்பெயர்ந்து தனது வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்கிறது.பருவங்களை கணித்து ஆண்டு என்பதை வரையரை செய்யத் தெரியாதவர்கள் பிறரை (காபிர்களை)அறிவிலிகள் என்று கூறவதுதான் வேடிக்கையாக உள்ளது.