Wednesday, 12 February 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -34

சந்திரனும் பிளந்து விட்டது…!

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி, நபித்துவத்தை  நிருபிக்கும் விதமாக சந்திரனை இரண்டாக பிளந்து அற்புதம் நிகழ்த்தினார். இரண்டாக பிளந்த  சந்திரனின் ஒரு பகுதி மலையின் மேல் பகுதியிலும் மற்றொரு கீழ் இந்த பகுதியிலும் சென்றதை முஹம்மது நபி  அவர்களுடைய தோழர்களும் கண்டனர்புஹாரி ஹதீஸ் :   3637       
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது.
மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாகநபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.

புஹாரி ஹதீஸ் -4864
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று சொன்னார்கள்.

இச் சம்பவத்தை அல்லாஹ்வும் குர்ஆனில் சாட்சி கூறுகிறான்.

(நியாயத் தீர்ப்புக்குரிய அந்த) நாள்  நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்துவிட்டது

எந்த ஓர் அத்தாட்சியை அவர்கள் பார்த்தாலும் (அதனை) புறக்கணித்து விடுகின்றனர் (இது நாள் தோறும்) நடந்துவரும் சூனியம் என்று கூறுகின்றனர்.
(குர்ஆன்   54: 1-2)

இது ஒரு முரண்பாடான செய்தியாகும்முதலாவது இது குர்ஆனுக்கு முரண்படுகிறது. இரண்டாவதாக வானவியலுடன் முரண்படுகிறது

நான் (அவனால்) ரஸூலாக அனுப்பப்பட்ட ஒரு மனிதரே தவிர வேறாக இருக்கிறேனா? என்று கூறுவீராக.
(குர்ஆன் 17: 93)

நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்தாம்;…
(குர்ஆன் 13:7)

புஹாரி ஹதீஸ் :4981  
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.       
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒவ்வோரு இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப் பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான்

மற்ற நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியிருந்தாலும் தன்னுடைய அற்புதமாக குர்ஆனை மட்டுமே உறுதியாக முன்வைத்தார். எனவே முஹம்மது நபி அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறுவது குர்ஆனுக்கு எதிரானது.

இரண்டாது முரண்பாடு வானவியலுடன்,

சந்திரன் இரண்டாக பிளந்து விழுவது மிகப் பெரும் வானியல் அற்புதம், ஆதாரம். அத்தகைய ஒரு நிகழ்ச்சியை மக்காவில் மட்டுமல்லாமல், உலகின் பெரும்பாலான மக்கள் நிச்சயமாக கண்டிருக்க வேண்டும் அல்லது அதன் தாக்கத்தை உணர்ந்திருக்க முடியும். ஏனெனில் பூமியைச் சுற்றிவரும் சந்திரன் இரண்டு பகுதியாக பிளந்தால், அது புவியின் இயக்கத்தில் பெரும் மாறுதலை  ஏற்படுத்திருக்கும். இந்த அற்புத நிகழ்ச்சிக்கு, இவர்களின் வாய்மொழி மட்டுமே சாட்சிநம்பிக்கையான ஒரு சிறு ஆதாரம் கூட உலகின் எந்த பகுதியிலிருந்தும் இல்லை. பல நாடுகளில்  சூரிய, சந்திர கிரகணங்களையும் பற்றி குறிப்புகள் நிறைய காணப்படுகிறது. நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு  பருவகால மாற்றங்களையும், ஜோதிடங்களையும் கூறியவர்கள், சந்திரன் இரண்டாக பிளந்த அற்புதத்தைப் பற்றி எதுவும் ஏன் கூறவில்லை?

இதற்கு முஸ்லீம்களின் பதில்,

இந்தியாவை ஆண்ட அரசர் ஒருவர் சந்திரன் இரண்டாக பிளந்த நிகழ்ச்சியைக் கண்டு, அரேபியாவில் புதிதாக ஒரு தூதர் தோன்றி விட்டதாக உணர்ந்து, மக்காவிற்கு தனது மகனை அனுப்பியதாகவும், முஸ்லீமாக மதம் மாறிய அவர் இந்தியாவிற்கு திரும்பும் வழியில் ஏமனில் இறந்ததாக  கூறுகிறார்கள். இதுவும் முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட கதை. முஹம்மது நபி தன் வாழ்நாளில் எந்த ஒரு இந்திய அரசரையும் சந்தித்ததாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மேலும் உலகில் உள்ள மற்ற எவருடைய கண்களுக்கும் தென்படாமல் ஒரே ஒரு இந்திய அரசர் மட்டும் பார்த்ததாக கூறுவது சரியான வேடிக்கை.

மேலும் இந்திய அரசர் பார்த்ததாக வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், அந்த வானவியல் நிகழ்ச்சி, புதிய தூதர் அரேபியாவில் தோன்றியுள்ளார் என்று எவ்வாறு குறிப்பிடும்? இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும், முஸ்லீம்கள் சந்திரன் இரண்டாக பிளந்து மீண்டும் முழுதாக தோன்றியது என்று வாதிடுகின்றனர். சந்திரனைப்பற்றி, நாசா வெளியிட்ட புகைப்படங்களில் காணப்படும் செங்குத்தான வெடிப்புகளை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அவைகளைப் பார்த்தால் எவரும் தயக்கமின்றி, குர்ஆன் கூறுவது சரிதான் என்று ஒப்புக் கொள்வார்கள்.

உண்மையில் அவைகள் Lunar Rilles, பல கிலோமீட்டர்கள் அகலமும் நூற்றுக்கணகான கிலோ மீட்டர்கள் நீளமும் கொண்டவைகள். இவை சந்திரனின் பல இடங்களில் இத்தகைய வெடிப்புகள் காணப்படுகிறது. இதே போன்ற அமைப்புகள்செவ்வாய், வெள்ளி மற்றும் துணை கிரகங்களிலும் காணப்படுகிறது. இது இயற்கையாக ஏற்படும் அமைப்புகள்.

 சந்திரனில் பிளவுகள் இருக்கிறதா என்பதல்ல கேள்வி. முஹம்மது நபி சந்திரனை இருகூறுகளாகப் பிளந்து பின்னர் அதனை இணைத்தாரா? என்பதுதான் கேள்வி.


பிளந்தது சந்திரன் தானா? சந்திரனை பிளந்ததோடு அற்புதம் நிறைவடையவில்லை, அடுத்தது வானிலிருந்து வந்த வானவர்கள் நிகழ்த்திய அற்புதம்.

Facebook Comments

7 கருத்துரைகள்:

உயிரி said...

சின்ன வயசுல இவரோட நெஞ்ச பிளந்தாங்க இந்தாளு நெலாவ பெளக்குறாரு உலகத்துக்கு உருப்படியா ஏதாவது செஞ்சி காமிக்காம பொளக்குறதே பொழப்பா வெச்சிருப்பாய்ங்க போல.

நாசமா போறவங்க இந்த கதைக்குலாம் நாசா
வரைக்கும் போய் அறிவியல அழச்சிட்டு வராய்ங்க இதர கதைய கேட்டா குரான் அறிவியல் புத்தகமல்ல ஹாரி பாட்டர் புத்தகம்னு ஜகா வாங்குறாய்ங்க!

உயிரி said...

சின்ன வயசுல இவரோட நெஞ்ச பிளந்தாங்க இந்தாளு நெலாவ பெளக்குறாரு. உலகத்துக்கு உருப்படியா ஏதாவதுசெஞ்சி காமிக்காம பொளக்குறதே பொழப்பா வெச்சிருப்பாய்ங்க போல.
நாசமா போறவங்க இந்த கதைக்குலாம் நாசா வரைக்கும் போய் அறிவியல அழச்சிட்டு வராய்ங்க இதர கதைய கேட்டா குரான் அறிவியல் புத்தகமல்ல ஹாரி பாட்டர் புத்தகம்னு ஜகா வாங்குறாய்ங்க!

ஆனந்த் சாகர் said...

//சின்ன வயசுல இவரோட நெஞ்ச பிளந்தாங்க இந்தாளு நெலாவ பெளக்குறாரு. உலகத்துக்கு உருப்படியா ஏதாவதுசெஞ்சி காமிக்காம பொளக்குறதே பொழப்பா வெச்சிருப்பாய்ங்க போல.//

முஹம்மதுவுக்கு இந்த ஜட உலக(material world) அறிவியலும் தெரியவில்லை. ஆன்மீக அறிவியலும்(spiritual science) தெரியவில்லை. ஆனால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என பாவ்லா காட்டிக்கொண்டு அவர் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டு இருந்தார். அவர் கண்டபடி உளறியதை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு 150 கோடி முஸ்லிம்கள் மோசம் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

Ant said...

//(நியாயத் தீர்ப்புக்குரிய அந்த) நாள் நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்துவிட்டது// அவனே அனைத்தும் அறிந்தவன் ஆதலால் இந்த வார்த்தையை பொருள் தெரியாமல் அல்லா தேரந்தெடுத்திருக்க முடியாது. காரணம் மாதம் வருடமெல்லாம் அறிந்தவன் நியாயத் தீர்ப்புக்குரிய ”நாள்” நெருங்கி விட்டது சந்திரன் பிள்ந்துவிட்டதே அதற்கு அத்தாட்சி என்கிறார். ஆனால் நியாத்தீர்ப்பு நாள் இன்றுவரை வந்து சென்றுவிட்டதா என்பது தான் தெரியவில்லை. இல்லையென்றால் நியாத்தீர்ப்புக்றிய ஆண்டு நெருங்கிவிட்டது என்று கூறியிருப்பார். ஆனால் 1400 ஆண்டுகளாகியும் ”அந்த நாள்” வந்ததாக தெரியவில்லை. அல்லது ”நாள் நெருங்கிவிட்டது” என்பதற்க்கு ”சில ஆயிரம் ஆண்டுகள்” என்று அல்லா தெரிந்தேதான் ”தெளிவாக” கூறியுள்ளார் என்று பொருளை மாற்றி விட வேண்டியது தான்.

தஜ்ஜால் said...

வாருங்கள் உயிரி,

சிறு வயதிலிருந்தே முஹம்மது எதையாவது பிளந்து கொண்டுதான் இருந்தார். தன்னை கடவுளின் தூதரென்று கூறிக்கொண்டு, குடும்பங்களையு, சமுதாயத்தையும் பிளந்தார். தன்னை ஏற்க மறுத்தவர்களின் மண்டையைப் பிளந்தார். சந்திரனையும் பிளந்தார். வேறு சில விஷயங்களையும் பிளந்திருக்கிறார் அதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,
//அவர் கண்டபடி உளறியதை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு 150 கோடி முஸ்லிம்கள் மோசம் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.// உண்மைதான். கடந்த வாரம் கூட முகநூலில் சந்திரன் பிளந்த கதையையும், பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்ன் உடல் என்ற கதையையும் சில இஸ்லாமியர்கள் தொடர்ந்து பதிந்து கொண்டிருந்தனர். அவர்கள் எந்த அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு இதுவே உதாரணம்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,
// ”நாள் நெருங்கிவிட்டது” என்பதற்க்கு ”சில ஆயிரம் ஆண்டுகள்” என்று அல்லா தெரிந்தேதான் ”தெளிவாக” கூறியுள்ளார் என்று பொருளை மாற்றி விட வேண்டியது தான்.// இப்படி வாய்க்கு வந்தபடி பொருளை மாற்றி மாற்றிக் கூறிதான் இஸ்லாமை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இல்லையென்றால் என்றோ சிதறி சின்னா பின்னமாகியிருக்கும்.