Friday 7 September 2012

அறிவியலோ அறிவியல்... ரூபாய்க்கு மூணு குர்ஆன் அறிவியல்..


மனித குலத்தின் விடிவிளக்கு, மறுமைக்கான ஒளிவிளக்கு என்றல்லாம் போற்றப்படும் குரான் இன்று அது உயிர் வாழ மனிதகுலம் கண்டுபிடிச்ச நவின அறிவியலோடு கலக்கப்பட்டு புத்துணர்ச்சி கொடுக்கப்படுகின்றது.

"உலகில் உள்ள அனைத்து பொருட்களும் எதோ ஒரு விசையில் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. அப்படி இயங்க முடியாத ஒரு பொருள் இருக்குமேயானால்  அது அழிவை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பது தான் இயக்கவியல் விதி".

குரானும் முகமதுவும் மேற்கண்ட விதியில் தான் உயிர் வாழ்கின்றார்களே தவிர எல்லாம் வல்ல அல்லாஹ்வால் இல்லை என்பதை நம் மூஃமின்கள் நமக்கு அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். அதனல் தான் ஹிக்போசான் துகள்கள், பிக்பேங்க் தியரி, பால் சுரப்பி, இதயம் சுருங்குதல், விந்து உற்பத்தியாகும் இடம் என அறிவியலை அவர்களின் இஷ்டத்துக்கு வளைத்து நெளித்துக் குரானில் சொருகபார்க்கின்றார்கள்.
ஒரு முறை என் நன்பன் ஒருவனிடம் குரான் சம்மந்தமாக பேசிக்கொண்டு  இருக்கும் போது அவன் சொன்னான் குரானில் இல்லாத அறிவியலே இல்லை. குரானில் இருந்து தான் இதுவரை கண்டுபிடித்த அனைத்து அறிவியலும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.அது ஒரு அறிவியல் புத்தகம் என தனக்குதானே பூரித்துக்கொண்டான்.நான் அவனிடம் கேட்டேன் ஏன் மச்சி அப்ப குரானை முழுமையாக நன்கு விளக்கம் புறிந்துப்படித்த ஒரு ஹாலிம்மாலையும் ஹாபிசாவாலையும்  கூட ஒரு சின்ன அறிவியலை கண்டு பிடிக்கமுடிவில்லை,ஆனால் இந்த பாலாபோன யூதர்களால் மட்டும் இவ்வளவு அறிவியலை கண்டுப்பிடிக்க  முடிக்கின்றது என்று.அதற்கு அவன் அளித்த பதில் என்ன தெரியுமா? சு..சு..சு......ம்ம்ம், நீ காஃபீர் மச்சி அதான் உனக்கு தெரியல என்று.

இப்படி தான் இன்னும் குரானில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமுக அறிவியல் என எல்லாம் இருக்கின்றது என்று மூஃமீன்கள் சொன்னால் 'ஆம்' என்று நீங்கள் பதில் அளித்தால் நீங்கள் மூஃமீன். 'எப்படி' என்று மறுகேள்வி எழுப்பினால் என்னை போல் நீங்களும் காஃபீராகிவிடுவீர்கள். ஆகவே 'ஆம்' என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து படியுங்கள் நாம் குரான் சொல்லும் ஒரு அறிவியலை பற்றி இங்கு விவாதிக்க போகின்றோம்..

இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்குரான் 42:32
                                                                                                                                                                  அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றனகுரான் 42:33
                                                                                                                                                                           
மேற்கண்ட வசனத்தை படிக்கும் போதே தெரிகின்றதா நம் முகமது நபி எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்து இருக்கின்றார் என்று. பாருங்கள் 1400 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டார் காற்றை அவன் (அல்லாஹ்) நிறுத்திவிட்டான் என்றால் கப்பல் ஒரு துளிக்கூட அசையாமல் அதே இடத்தில் கிடக்குமாம். என்னே முகமதுவுடைய ஞானம்! விஞ்ஞானம் ! காற்று இல்லை என்றால் கப்பல் நகராத?
இந்த நவின காலத்தில் 150கிலோ மீட்டர் வேகத்தில் எதிர் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு போர்க்கப்பல்களும், ரேசர் கப்பல்களும் (RACER BOAT) கண்டுபிடிக்கப்பட்டூவிட்டன. இன்னும் சொல்லப்போனால் காற்றே இல்லாதா ஆகாயத்திலும் கடலுக்குள் செல்லும் ஸ்பேஸ் சிப் (SPACE SHIP ) மற்றும் சப்-மறைன்களையே( SUB-MARIN) கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனாலும் இன்னும் நம் மூஃமீன்கள் காற்று இல்லனா கப்பல் போகாது என நம் காதில் பூசுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.

முகமது வாழ்ந்த காலத்தில் இருந்த பாய்மர கப்பல்களுக்கு வேண்டுமேயானால் மேலே சொல்லப்பட்ட வசனம் செட்டாகலாம். ஆனால் நம் காலத்துக்கு செட்டாகாது. மூஃமீன்களே ! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் (சாரி இந்த வசனத்தில் நீங்கள் சிந்திக்க கூடாது பொறுமையாக நன்றி செலுத்த வேண்டும்)

சோ! பி,ஜெவிடம் சொல்லி அவரின் 11வது குரான் தமிழாக்கத்தில் இந்த வசனத்தை திருத்த சொல்லுங்கள். அல்லது இட்டுகட்டுன வசனம் என்று சொல்லி முழுமையாக எடுத்துவிட சொல்லுங்கள். இல்லை என்றால் காஃபீர்கள் முகமதுவின் அறிவியலை  ஊர் முழுக்க சொல்லி அவரின் கைலியை அவிழ்த்துவிட்டு சந்திசிரிக்க வைத்துவிடுவார்கள்.. கெட்ட காஃபீர்கள்.

Facebook Comments

26 கருத்துரைகள்:

RAJA said...

அருமை. ஆதாம் ஏவாள் கதையை எப்பொழுது குரான் ஏற்றுக் கொண்டு விட்டதோ அப்பொழுதே அது அறிவியலுக்கு முரணானது. முஸ்லீம்களும் ஆதாம் நபி, மூசா நபி என்று நம்பிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை. இந்த லிங்க்கை படித்து பாருங்கள். http://islamchristianityhinduism.blogspot.in/2012/08/blog-post_8969.html?utm_source=BP_recent

Anonymous said...

@ராஜா
இந்து மதமும் அறிவியலுக்கு முரணானதுதான்

Unknown said...

அருமை சகோ.
1400 ஆண்டுகளுக்கு முன் சிந்தனை இப்படித்தானே இருந்திருக்க முடியும். ஆனால் இதை ஏற்கத்தான் மூமின்கள் தயாராக இல்லை. தவறை நியாயப்படுத்த முயற்சித்து மேலும் தவறு செய்து வருகிறார்கள். இதுவே குரான் முரண்பட்டது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது,இருந்தாலும் ஒப்புக் கொள்ள அவர்களுக்கு மனம் இல்லை. காற்றை தன் வசப்படுத்தினான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கப்பலை கண்டுபிடித்தவரே நூஹ் நபி என்று ஒத்தக் காலில் நிக்கிறார்கள் இவர்களின் அறியாமையை என்னவென்பது?

இனியவன்...

Unknown said...

வணக்கம் சகோ,

ஜாகிர் நாயக்கின் வாதமே குரானில் உள்ள நூறு சதம் அறிவியலில் 90 சதம் நிரூபிக்கப்பட்டுவிட்டது மீதமுள்ள பத்து சதம் நாளை கண்டுபிடிக்கப்படலாம் இது எப்படி இருக்கு? இப்படி ஒரு முழு பைத்தியக்காரனை யாரும் பார்த்ததுண்டா?

இனியவன்...

Unknown said...

//அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. குரான் 42:33//

ஆக‌ காற்று இருந்தால் தான் க‌ட‌வுளின் க‌ப்ப‌லே முன்னோக்கிச் செல்லும், இல்லையேல் க‌ப்ப‌ல் ந‌க‌ராது. காற்று இல்லையேல் அல்லாவுக்கும் ச‌க்தி அம்பேல்!!!!!!!!!!

இனிய‌வ‌ன்....

ஆர்ய ஆனந்த் said...

சகோ சிவப்பு குதிரை,

நல்ல பதிவு. பாராட்டுகள். குரானும் சுன்னாவும் பகுத்தறிவு, தர்க்க அறிவு, மனித தன்மை, மனித நாகரிகம், நியாய உணர்வு ஆகியவற்றுக்கு முற்றிலும் புறம்பான கற்கால பைத்தியக்கார மனிதனின் உளறல்கள், நடைமுறைகள் என்பது அம்பலமாகி இருக்கிறது.

எனவே இஸ்லாமை தூக்கி பிடிக்க முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரே வழி, குரான் அறிவியல் பூர்வமானது என்று காட்டுவது தான். இதற்காக காபிர்கள் கண்டுபிடித்த அறிவியலை எல்லாம் குரானுக்குள் நுழைக்க முஸ்லிம்கள் படாத பாடு படுகிறார்கள். இது அவர்களுடைய பரிதாப நிலையை மேலும் அம்பலபடுத்தி அவர்களை நகைக்கத்தக்க பொருளாக(laughing stock)ஆக்குகிறது.

DEVAPRIYA said...

இம்புட்டு அறிவியல் இருக்குதா.

பாவம் முசல்மானுங்க, இல்லாததை இருக்கிறதாச் சொல்றவங்க - மோசேயின் யாத்திரை பொய்.
http://devapriyaji.wordpress.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/
யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post.html
உள்ள வரலாறு தவறு- அதை விளக்கட்டும்

Anonymous said...

Our THIRUKKURAL contains full of good and sane things!
But it is 2000 years old.
How does it become possible ?!
We are so lucky to have such a sane book even before 2000 years.

சிவப்புகுதிரை said...

பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

@இனியவன்
//1400 ஆண்டுகளுக்கு முன் சிந்தனை இப்படித்தானே இருந்திருக்க முடியும். ஆனால் இதை ஏற்கத்தான் மூமின்கள் தயாராக இல்லை. தவறை நியாயப்படுத்த முயற்சித்து மேலும் தவறு செய்து வருகிறார்கள். இதுவே குரான் முரண்பட்டது என்பதை வெளிப்படுத்திவிடுகிறது,இருந்தாலும் ஒப்புக் கொள்ள அவர்களுக்கு மனம் இல்லை. காற்றை தன் வசப்படுத்தினான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கப்பலை கண்டுபிடித்தவரே நூஹ் நபி என்று ஒத்தக் காலில் நிக்கிறார்கள் இவர்களின் அறியாமையை என்னவென்பது//? முழுக்க முழுக்க உண்மை,என் நன்பண் இந்த கேள்விக்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை மழுப்பிக்கொண்டு இருக்கின்றான்..

சிவப்புகுதிரை said...

நன்றி @ஆரிய ஆனந்த்

பகுத்தறிவுக்கும் இஸ்சுலாமுக்கும் துளிக்கூட சம்மந்தம் கிடையாது.முகமது சொன்னது மட்டும் தான் அவர்களுக்கு பகுத்தறிவாக தெரியும்

@ Devapriya Solomon.....

//இம்புட்டு அறிவியல் இருக்குதா//

இன்னும் இது போல் டசன் கணகில் அறிவியல் இருக்கின்றது குரானில்,கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வருகின்றாம்.....

நந்தன் said...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நூற்றுக்கணக்கான அடிமைகளைக்கொட்டு கப்பல்களை இயக்கியுள்ளனர். இது கூட தெரியாத அல்லது அறிந்திராத முகம்மது கடவுளின் தூதர் என்று சொல்லுவதுபோல் வேறு மடமை இல்லை

Unknown said...

எங்கள் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று சொல்லிக் கொள்வதால் சொல்கிறேன்,நேற்று எங்கள் அறையில் நடந்த சம்பவம் ஒன்று. வரவிருக்கும் ஹஜ் பண்டிகையில் குர்பான் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுதே சிலருக்கு சந்தேகம் கிளம்பி விட்டது. அதாவது குர்பான் கொடுப்பதற்கு சில தினங்களுக்கு முன் கூட்டியே முகச்சவரம்,நகம் வெட்டுதல் கூடுமா கூடாதா? என்பதுபற்றி எழ நண்பர்கள் வட்டாரத்தில் சலசலப்பு ஆரம்பமாகி,குரான் ஹதீஸ் என துருவித்துருவிப் பார்த்துவிட்டு ஒரு வழியாக கூடாது என்ற முடிவுக்கு வந்தாகிவிட்டார்கள். இதில் வேடிக்கை நண்பர்களில் ஒருவர் டிப்ளமா இஞ்சினியர் மற்றவர் அய்.டி.படித்தவர்கள். உயர் படிப்பு படித்துவிட்டு முகத்தில் முடி இருப்பது வேண்டுமா வேண்டாமா? என்பதை நிர்ணயிக்க 1400 ஆண்டுகளுக்குப் பிந்திய புத்தகத்தைப் பார்க்க இவ்வளவு படிப்பு எதற்கு? என்று தான் புரியவில்லை.!!!!!!!!!!!

இனியவன்...

தஜ்ஜால் said...

@ சிவப்புக்குதிரை,
நல்ல பதிவு.
அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன். என்கிறது குர் ஆன் 67:19.
இன்று மனிதர்கள் வானில் மறக்கவிடும் விமானங்களையும், விண்ணில் நிலைநிறுத்தியிருக்கும் செயற்கைக்கோள்களையும் அல்லாஹ்தான் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறானோ?

Anonymous said...

@RAJA
சிவனுடைய சாமானம் இப்ப யாருக்கிட்ட இருக்கு?. பார்வதிக்கிட்ட இருக்கா இல்ல சிவனுக்கிட்டேதான் இருக்கா?

Unknown said...

சகோ சிவப்புக்குதிரை

பேசாம "குரானில் போலி அறிவியல்" என்று தலைப்பை மாற்றி விடுங்கள்!!!!

இனியவன்...

Anonymous said...

http://icschennai.com/Tamil%20Appendix/Appendix1.html

சிவப்புகுதிரை said...

யாம்பா அனானிமஸ்....கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்கையொ கூட்டிட்டு போறிங்களே...இப்ப என்ன சொல்லவறிங்க குரான்ல கணிதம் இருக்குன்னா..வாசகர்களே நான் அப்பவே சொன்னாமாதிரி கணிததை கண்டு பிடித்துவிட்டார்கள் மூஃமீங்கள்.இன்னும் தமிழ் ஆங்கீலம் சமுக அறிவியல் மட்டும் தான் மீதியுள்ளது....

Nanjil said...

அனானி! இந்த குரான் கணிதத்த வச்சி என்னவெல்லாம் செய்ய முடியும்?

ஆர்ய ஆனந்த் said...

குர் ஆனில் கணக்கும் இல்லை, ஒரு புண்ணாக்கும் இல்லை. ரஷாத் கலிபா என்ற பொய்யர் குர் ஆனில் 19 எண் அடிப்படையில் அதன் வசனங்கள் கட்டமைக்க பட்டுள்ளன என்றும் அது மாபெரும் அற்புதம் என்றும் அண்ட புளுகு ஆகாச புளுகு என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட மாபெரும் பொய்யை சொல்லி ஏமாந்த சோணகிரிகளை நன்றாக ஏமாற்றினார். இந்த ஏமாந்த சோணகிரிகள் கூட்டமாக சேர்ந்துகொண்டு மற்றவர்களையும் ஏய்க்க பார்க்கின்றனர். அவர்களின் தமிழ் இணைய முகவரியை கொடுத்துள்ள அனானிமஸ் இந்த ஏமாளி/ஏமாற்றும் கூட்டத்தை சேர்ந்தவர்.

Anonymous said...

//காற்றை அவன் (அல்லாஹ்) நிறுத்திவிட்டான் என்றால் கப்பல் ஒரு துளிக்கூட அசையாமல் அதே இடத்தில் கிடக்குமாம்.//

அன்பார்ந்த சகோதரே!
இங்கு இறைவன் தன் இறை மறையில் காற்றை நிறுத்தினால் கப்பல் நகர முடியாது என்று கூறுகிறான்.
// அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. குரான் 42:33 //
உள்ளமையாக காற்றை நிறுத்தினால் கப்பலோ எந்தப் பொருளுமோ நகர முடியாது என்பது தான் உள்ளமை. பொறுமையாக வாசியுங்கள்.

அடுத்து நீங்கள் கூறிய விமர்சனத்தையும் நோக்க வேண்டி இருக்கிறது.
அதாவது " // காற்றே இல்லாதா ஆகாயத்திலும் கடலுக்குள் செல்லும் ஸ்பேஸ் சிப் (SPACE SHIP ) மற்றும் சப்-மறைன்களையே( SUB-MARIN) கண்டுபிடித்துவிட்டார்கள்.//"
இந்த விஞ்ஞான உலகில் காற்று இல்லாத வெற்றிடத்திலும் செல்லலாம், மற்றும் காற்றே கிழித்துக்கொண்டு செல்லும் கப்பல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே காற்றை நிறுத்தினால் நகர முடியாது என்றது அந்தக் காலத்துக்கு வேணுமென்றால் சொட்டாகலாம், ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் சொட்டாகாது என்றும் கூறுகிறீர்கள்.
//பாய்மர கப்பல்களுக்கு வேண்டுமேயானால் மேலே சொல்லப்பட்ட வசனம் செட்டாகலாம்.ஆனால் நம் காலத்துக்கு செட்டாகாது.//

காற்றை நிறுத்தினால் கப்பலோ எந்தப் பொருளுமோ நகர முடியாது என்பது தான் உள்ளமை என்று சொன்னேன் அல்லவா? ஆம் இந்த இறை வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது "காற்று" அதை நிறுத்தினால் நகர முடியாதாம். ஆனால் நீங்கள் குறிப்பிடுவதோ... காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் கப்பல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று. நன்றாக சிந்தித்து பாருங்கள், காற்றை கிழித்துக் கொண்டு செல்லும்போது கூட காற்று (வாயுத் துணிக்கைகள்) நகர்ந்து இடமளிக்கிறது. அதனால் தான் நம்மால் நகர முடிகிறது.

எனவே இறைவன் இங்கு "காற்று" என்று சொல்வது இன்றைய விஞ்ஞான உலகில் விஞ்ஞான ரீதியாக சொல்லப் போனால் வாயு (துணிக்கைகள்) என்று சொல்லலாம். கப்பலோ எந்தப் பொருளோ முன் நோக்கி செல்ல வேண்டுமென்றால் கண்டிப்பாக அதற்கு முன்னால் இன்னொரு துணிக்கை தடையாக இருக்கக் கூடாது வெற்றிடம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நகர முடியாது. எனவே நாம் பாதையில் செல்லும் போது கூட காற்றுத் துணிக்கைகள் விலகி இடம் அளிக்கிறது, அதனால் தான் எம்மால் நகர முடியுமாக உள்ளது.

அந்தக் காற்று நகராமல், நகர முடியாமல் இருந்தால், இன்னொரு துணிக்கையால் முன்னே செல்ல முடியாது. இதற்கு தொகுதி அடைக்கப்பட்ட Pistonஐ உதாரணமாக சொல்லலாம்.
எனவே இங்கு இறைவன் காற்றை நிறுத்தினால் என்று குறிப்பிடுவது விஞ்ஞான ரீதியில் சொல்லப் போனால் துணிக்கைகளே. எனவே ஊடகமாக தொழிற்படும் (திண்ம, திரவ, வாயு) துணிக்கைகளை நிறுத்தினால் அவ்வழியாக எதற்கும் நகர முடியாது, அது SUB-MARINஆக இருந்தாலும், சரியே.
SPACE SHIP செல்வது வெற்றிடத்தில் குறுக்கே தடையாக எதுவும் இல்லை அதனால் செல்லலாம். துணிக்கை அங்கு தடையாக இல்லை.
அடுத்து காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் வாகனம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம். அந்தக் காற்று (துணிக்கை) விலகி இடம் கொடுக்கா விட்டால் (இறைவன் காற்றை நிறுத்தினால்) நிச்சயமாக நகர முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்ட வசனத்தில் எந்தப் பிழையும் இல்லை. அவ்வசனம் //அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும் // எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வசனமே. நீங்கள் காற்று என்றால் காற்று தான் என்று பொருள் கொண்டது தான் தவறாக விளங்கினதுக்கு காரணம். ஆனால் இறை வசனத்தில் "நீர்" என்று சொல்வது குடிக்கும் நீரை மாத்திரமின்றி பொதுவாக திரவத்தியும் குறிக்கும், அதே போல் காற்று என்பது வாயுவையும் குறிக்கும். அவை அந்தந்த இடத்துக்கு தகுந்த மாதிரி பொருள் கொள்ள வேணும், இலக்கணத்தில் எல்லா இடத்திலும் ஒரே அர்த்தம் தான் எடுக்க வேண்டும் என்று விதி இல்லை. அது முரணானதும் கூட. அதற்கு உதாரணமாக தமிழ் உதாரணமே சொல்லலாம். தமிழில்,
அரவம் என்றால் சர்ப்பம், பாம்பு, சப்தம் என்றெல்லாம் அர்த்தம் உள்ளது.
"அரவம் வரும் அரவம் கேட்டது" என்றொரு வசனம் இருந்தால் அதற்கு அர்த்தம் வரும் விதத்தில் "பாம்பு வரும் சப்தம் கேட்டது" என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இறைவன் ஏன் தன் திரு மறையில் காற்று என்று சொன்னான் என்றால் அந்தக் கால மக்களுக்கும் விளங்கும் விதமாக சொல்ல வேண்டும் என்பதே. ஒருவர் அறியாத ஒன்றை விளக்குவதற்கு அறிந்த ஒன்றைக் கொண்டு (உதாரணமாக சொல்லி) விளங்கப் படுத்துவது இலக்கணத்தில் உள்ள முக்கிய ஒன்றாகும்.

எனவே மேலே சொன்ன இறை வசனத்தில் எந்தப் பிழையோ தவறோ இல்லை என்பது தான் உள்ளமை சத்தியம்.

ஆனந்த் சாகர் said...

@Anonymous,

நீங்கள் மூமின் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! எந்த மடதனத்திலும் அறிவியலை காணும் திறமை மூமிங்களுக்கே உரியது. அதை நீங்கள் செவ்வனே செய்கிறீர்கள். இதற்காக நாங்கள் உங்களை பாராட்ட முடியாது. ஏனெனில் அறிவை சரியாக பயன்படுத்தும் காபிர்கள் உங்களை போன்ற மூமின்களின் அறிவியல் தமாஷ்களை கண்டு சிரிக்கிறார்கள்.
www.tamil.alisina.org

Unknown said...

அநாமத்தையா வணக்கம்,


காலம் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் அடைப்புக் குறியில் பொருள் மாற்றி, நவீனமாக வேதத்தையே மாற்றி எழுதும் உரிமை மூமின்களுக்கு உண்டு. அதனால் தான் அது கற்பனைக் கடவுள் தந்த‌ வேதம் அல்ல முகம்மது என்பவரால் உருவாக்கப்பட்டது என்று கூறிவருகிறோம்.

//இறைவன் ஏன் தன் திரு மறையில் காற்று என்று சொன்னான் என்றால் அந்தக் கால மக்களுக்கும் விளங்கும் விதமாக சொல்ல வேண்டும் என்பதே.//

அந்தக்கால மக்களுக்கு சரி,இந்தக் கால மக்களுக்கு யார் விளக்கம் கொடுத்தார்கள்? குரானுக்கு விளக்கம் கொடுக்க முகம்மது அல்லது கடவுள் இருவருமே பரலோகத்தில் இருக்க நீங்கள் சொல்வது சரி என எப்படி நம்புவது? அப்ப நீங்களும் நபியா? ஏற்கனவே பி.ஜெ. என்பவரும் நவீன நபி!!!இறுதி ந‌பின்னு சொல்லிகிட்டே எத்த‌ன‌ பேர் கிள‌ம்பிட்டீங்க‌ இப்ப‌டி??? இப்ப‌டியே போனா கைகொட்டி சிரிப்பார்க‌ள்...ஊரார் சிரிப்பார்க‌ள்.. விளையாட்டுக் குர் ஆன் என்று கைகொட்டி சிரிப்பார்க‌ள்.....

இனிய‌வ‌ன்....

Anonymous said...

@ ஆனந்த் சாகர் அவர்களே! ஒரு துணிக்கையாயினும் (முன் நோக்கி) நகர வேண்டும் என்றால், அதற்கு முன்னால் இன்னொரு துணிக்கை தடையாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னால் உள்ள துணிக்கையால் முன்னே செல்ல முடியாது. இப்போ இந்தக் காற்று (அதாவது வாயுத் துணிக்கைகள்) fixஆக அசையாமல் இருந்தால் நிச்சயமாக கப்பலால் முன் நோக்கி செல்ல முடியாது. இதை தான் இறைவன் சொன்னான். இறைவன் நாடினால் நீங்கள் நடுக்கடலில் யாருமே உதவிக்கு இல்லாதிருக்க காற்றை நிறுத்தி உங்களை ஸ்தம்பிக்க செய்திடுவான். அப்போது உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக இருங்கள் என்று சொல்கிறான்.

அடுத்து வேதத்துக்கு பொருள் சொல்லும் போது அடைப்புக்குறிக்குள் பொருள் மாற்றி போடுவது அல்ல. வேதத்தில் உள்ள சொல்லுக்கு பொருள் சொல்லும் போது அதன் வரைவிலக்கணத்தை கொண்டு தான் விளங்கனும் அது தான் திருத்தமான அர்த்தம். உதாரணமாக "வாகனம்" என்று சொன்னால் அந்தக் காலத்துக்கு மிருகங்கள் என்பது பொருத்தமானதாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்துக்கு விமானங்களையும் குறிக்கும். இடம் காலத்துக்கு ஏற்ப பொருள் வேறுபடலாம். நிச்சயமாக சொர்க்கத்திலும் மரங்கள், நதிகள் இருக்கிறதாகத் தான் வேதமும் சொல்லுது, ஆனால் நாம் நினைக்கின்ற (இவ்வுலகத்தில் உள்ள மரங்கள், நதிகள்) மாதிரி தான் இருக்க வேண்டும் என்றது அவசியமில்லை. ஆனால் நிச்சயமாக வரைவிலக்கணத்துக்கு ஒரு போதும் மாற்றமாக இருக்காது.

உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். வேதத்தில் "ஆடை" என்று வேதத்தில் குறிப்பிடுபவை, நீங்கள் நினைக்கிற மாதிரி வீட்டு அறையில் அலுமாரியில் பத்திரப்படுத்தி உள்ள ஆடையை குறிப்பதல்ல.
அதாவது இரவை ஆடையாக்கினோம், என்றும் தொழுகையில் இருக்கும் போது உங்களை ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள், எனினும் பயபக்தி எனும் ஆடையே சிறந்தது என்று கூறுகிறான். எனவே "ஆடை" என்பதற்கு "குறித்த ஒன்றை மூடவும், விலத்தவும் கூடிய ஒன்று (திரை)" என்று சொல்லலாம். இதே போல தான் மற்ற சொற்களுக்கும் வரைவிலக்கணம் கொண்டு பொருள் அறியணும். அறிவுள்ளவர்களுக்கு, அறிய ஆசையுள்ளவர்களுக்குத் தான் இதெல்லாம் புரியும்.

நந்தன் said...

கடலில் மிதக்கும் கப்பலைத்தான், செங்குதிரை சொல்வதுபோல் பாய்மரக்கப்பலைத்தான் குரான் கூறுகிறது. விண்வெளியில் உள்ள கப்பலைப்பற்றி கூறவில்லை. காற்றை நிறுத்திவிட்டால் கப்பல் அசையாமல் நிற்கிறது என்று தனது சக்தியை தப்பட்டம் அடித்து அல்லா கூறுகிறான். அல்லா இங்கு குறிப்பிடும் காற்று “வீசும் காற்று”. அதாவது வீசிக்கொண்டிருப்பது மட்டுமே காற்று என்ற அறிவுடைய அல்லா, காற்று வீசுவது நின்றுவிட்டால் கப்பல் நின்றுவிடுகிறது என்று கூறுகிறான். காற்று வீசாவிட்டால் அங்கு காற்று இல்லை என்று பொருளாகுமா? காற்று எங்கும் நிறைந்துள்ளது.
இது யாருக்குச் சொல்லப்பட்ட வசனம்? தன்னை பின்பற்றுபவர்களுக்கும் குறைசிகளுக்கும் அல்லாவின் அற்புதத்தை எடுத்துச் சொல்வதற்காக முகம்மதுநபி சொன்ன வசனம். அது அவர்களுக்கு புரியாத ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள நமக்கு புரியக்கூடிய வசனம் என்று கூறினால் அம்மக்களிடம் சொல்பவன் முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது கேட்பவன் கேணயனாக இருக்கவேண்டும்.

##நாம் பாதையில் செல்லும் போது கூட காற்றுத் துணிக்கைகள் விலகி இடம் அளிக்கிறது, அதனால் தான் எம்மால் நகர முடியுமாக உள்ளது.

அந்தக் காற்று நகராமல், நகர முடியாமல் இருந்தால், இன்னொரு துணிக்கையால் முன்னே செல்ல முடியாது. நாம் பாதையில் செல்லும் போது கூட காற்றுத் துணிக்கைகள் விலகி இடம் அளிக்கிறது, அதனால் தான் எம்மால் நகர முடியுமாக உள்ளது.

அந்தக் காற்று நகராமல், நகர முடியாமல் இருந்தால், இன்னொரு துணிக்கையால் முன்னே செல்ல முடியாது.
எனவே இங்கு இறைவன் காற்றை நிறுத்தினால் என்று குறிப்பிடுவது விஞ்ஞான ரீதியில் சொல்லப் போனால் துணிக்கைகளே. எனவே ஊடகமாக தொழிற்படும் (திண்ம, திரவ, வாயு) துணிக்கைகளை நிறுத்தினால் அவ்வழியாக எதற்கும் நகர முடியாது,## என்று அனானிமஸ் அறிவியல் புரியாத தம்கற்பனையை விரிக்கிறார்.
. அனானிமஸின் அற்புத அறிவு கண்டுபிடித்தது போல பூமியின் மேற்பரப்பிலுள்ள காற்றை அதாவது வீசும் காற்று அல்லது வீசாத நிலையாக உள்ள காற்றை கப்பல் நகரவிடாமல் அதாவது கப்பலைத் தடுத்து வழிகொடுக்காமல் (இடப்பெயர்சி செய்யமுடியாமல் ) நிறுத்திவிட்டான் என்று பொருள்கொள்ள இந்த வசனத்தில் இடமில்லை. காரணம் காற்றை நிறுத்திவிட்டால் கப்பல் அசையாமல் நின்றுவிடுகிறது என்று அம்மக்களிடம் கூறும்போது பூமியின் மேற்பரப்பில் உள்ள வீசும் காற்று மற்றும் வீசாத நிலையாக உள்ள காற்றை அசைவிடாமல் நிறுத்தியதால் கப்பல் நகரமுடியாமல் இருப்பதை எடுத்துக்காட்டாக கூறினான் என்று பொருள் கொள்வோமானால், அப்படி காற்று நிறுத்தப்பட்டால் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் சுவாசிக்க முடியாமல் சில நிமிடங்களில் இறந்துவிடும். பிறகு இந்த வசனத்திற்குகூட வேலையில்லாமல் போய்விடும். எல்லாம் இறந்தபிறகு எதற்கு இந்த வசனம்.. பூமியின் மேற்பரப்பிலுள்ள காற்று எப்பொழுதாவது எப்பொருளையும் அசையவிடாமல் நிறுத்தப்பட்டுள்ளதா? இல்லையே! பிறகு அல்லா எப்படி இந்த நிறுத்தப்பட்ட காற்றை எடுத்துக்காட்டாக கூறமுடியும்? அதனால் வீசும் காற்றைத்தான் குர்ஆன் இங்கு குறிப்பிடுகிறது.
வீசும் காற்றை அல்லா நிறுத்திவிட்டாலும் மனிதன் கப்பலை அதிவிரைவாக ஓட்டிச்செல்கிறான் என்பதால் இந்த வசனம் முட்டாள்தனமானது. கப்பல் செல்ல வீசும் காற்று தேவையில்லை என்ற அடிப்படையான அறிவுகூட அல்லாவிற்கு இல்லை என்பதே இவ்வசனம் குறிக்கிறது.
ஒருவேலை இதுவரை நடக்காத அற்புதமாக பூமியின் மேற்பரப்பிலுள்ள காற்று முழுவதையும் நிறுத்திவிட்டாலும் (இசுலாமிய விஞ்ஞானிகளின் அற்புத அறிவியல் கற்பனைபோல்) மனிதன் அதனையும் உடைத்து, புவிஈர்ப்புவிசையை எதிர்த்து விண்வெளிக்கப்பலை ஓட்டியது போல கடலிலும் கப்பலை ஓட்டுவான்

சிவப்புகுதிரை said...

பின்னுட்டம் அனுப்பும் Anonymous போன்றவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுக்கோள் ...

தாங்கள் தங்களுடைய சொந்த பெயரிலையே இங்கு பின்னுட்டம் அனுப்பலாம் அதற்க்கு இங்கு எந்த தடையும் இல்லை .உங்கள் கருத்துக்கு இந்த தளத்தில் முழு சுதந்திரம் இருக்கும். Anonymous ஆகா நிறைய நபர்கள் வருவதால் குறிப்பிட்ட நபருக்கு பின்னுட்டம் அளிப்பதில் வாசகர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கின்றது .ஆகவே வாசகர்கள் அனைவரும் தங்கள் பெயரிலியே பின்னுட்டம் அளிக்க வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

//தாங்கள் தங்களுடைய சொந்த பெயரிலையே இங்கு பின்னுட்டம் அனுப்பலாம் அதற்க்கு இங்கு எந்த தடையும் இல்லை .உங்கள் கருத்துக்கு இந்த தளத்தில் முழு சுதந்திரம் இருக்கும்.// சொந்தப் பெயரில் வந்தால் இப்னு லஹாப் என்பவர் குரைக்கிறாரே. இந்த தளத்தின் பங்குதாரர் என்று வேறு சொல்லிகொள்கிறார். நாத்திகர்கள் மட்டுமே இங்கு பின்னூட்டம் இடலாம் என்றால் அதையும் தெளிவாக சொல்லிவிடுங்கள்.