Thursday, 13 September 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் - தொடர் 13பலதாரமணம்  ஏன்?

நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தால் பல கன்னியர் அவர் காலடியில் இருந்திருப்பார்கள். அவர் திருமணம் செய்ததில் ஆயிஷா அவர்களைத் தவிர யாரும் கன்னியரில்லை. நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் அனைத்தும் இச்சையின காரணமாக செய்யப்பட்டதல்ல. அனைத்தும் ஆதரவற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் பலவாறாக பிளவுபட்ட அரபு சமுதாயங்களை இணைக்கவே இத்தனை பெண்களுடன் வாழ்ந்தார் என மார்க்க அறிஞர்கள்   வாதிடுகின்றனர்நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய திருமணங்களுக்கு இப்படியொரு விளக்கத்தை எங்கும், எப்பொழும் தரவில்லை. ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க உலகில் இதைவிட வேறு வழிகளே இல்லையா?. 

நமது  நாட்டில் இன்றும் பலவிதமான தீவிரவாத அமைப்புக்களும், பிரிவினைவாத குழுக்களும் உள்ளது. இவர்களால் எப்பொழுதும் நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தீவரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அடக்கியாளபிரதமரோ அல்லது உள்த்துறை அமைச்சரோ  தீவிரவாதிகளுடன் திருமண ஒப்பந்தங்களை, செய்து  கொண்டதாக கூறினால் அவர்களை எள்ளிநகையாட மாட்டீர்களா?

சமுதாயங்களின் தலைவர்கள் தங்களைச் சார்ந்த ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வளிக்க, திருமணம் செய்யத் துவங்கினால் என்ன ஆகும்? உதாரணத்திற்கு நமது பிரதமர், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். பிரதமரின் மனைவியர்களின் சிறிய தேவைகளை நிர்வகிக்கவே தனி அமைச்சரவை தேவைப்படும். மனைவியர்கள் தங்குவதற்கு அந்தப்புரங்கள் கோடிக்கணக்கில் அமைக்க பெரியதொரு தனி மாநிலமே உருவாக்க வேண்டும். இஸ்லாமிய அறிஞர்களின் இவ்விளக்கம் முட்டாள்த்தனமாகத்  தெரியவில்லையா?
இன்றும் உலகில் ஆதரவற்ற நடுத்தர வயது பெண்கள் மூதாட்டிகள் என பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வாறு வாழ்கின்றனர்? பிளவுபட்ட சமுதாயத்தை அல்லாஹ்வினாலும் அவன் கொள்கைகளாலும் இணைக்க முடியவில்லையா?.
முஹம்மது நபி  அவர்கள் மட்டுமல்ல அவருடைய அன்பு (சகோதரன்) மருமகன்  அலீ அவர்களின் மனைவியரின் எண்ணிக்கை எவ்வளவு என வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது என ஒரு ஏழு பெண்களைக் குறிப்பிடுகின்றனர். இங்கும்  அடிமைப் பெண்களும், வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் கணக்கு தனி. இவரும் பெண்களைப்பறறிய ஆராய்ச்சியில் இருந்தவர்தானா?.
அலீ  அவர்களும் தனது மனைவியரின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டார். ஆனால், அதை முஹம்மது நபி விரும்பவில்லை. தனது அன்பு மகள் பாத்திமா    இருக்கும் பொழுது வேறு எந்த பெண்ணையும்  திருமணம்  செய்யக்கூடாது என தடைவிதித்தார். காரணம், பாத்திமா   விரும்பவில்லை எனவே முஹம்மது நபியும் அதை விரும்பவில்லை.
புகாரி ஹதீஸ் -5230
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டுஅவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு அனுமதி வழங்க மாட்டேன்.) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.

 பலதாரமணம் அல்லாஹ் அனுமதித்த வழிமுறை. பொதுவாக, திருமணத்திற்கு  மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் பொறுப்பாளரின் (தந்தைசம்மதம் மட்டுமே போதுமானது. பலதாரமணத்தை விரும்புபவர்கள் மற்ற மனைவியரின் ஒப்புதலையோ அல்லது அவர்களுடைய பொறுப்பாளர்களின்(மாமனார்) ஒப்புதலையோ பெற வேண்டுமென்று அல்லாஹ்வும் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதிக்கு எதிராக முஹம்மது நபி  ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்?

தன் அன்பு மகளுக்கு ஒரு சக்களத்தி வருவதை விரும்பாதவர், தன்னுடைய மனைவியர்களின் விஷயத்திலும் இதே நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லையே?. அலீ பின் அபீதாலிப் அவர்களின் இரண்டாவது திருமணம் தன் மகளை வெறுப்படையச் செய்து விடும் என்று வேதனைப்பட்டவர் தன்னுடைய மற்ற மனைவியர்களும் இதேபோல அடைந்த மனவேதனையை குறித்து எந்த கவலையும் அடையவில்லையே? இந்தசம்பவம் முஹம்மது நபியின் இரட்டை வேடத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா? எப்படி இருக்கிறது இவர்களது நியாயம்? 
முதல் மனைவி ஃபாத்திமா உயிருடன் இருந்தவரை அலீ   வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அடிமைபெண்களின் கணக்கு தனி. அலீ  அவர்களின் செயல்களில் அதிருப்தி அடைந்த அவருடைய மகன்கள் ஒரு காலகட்டத்தில் அலீ  அவர்களை விட்டு ஒதுங்கி இருந்தனர்.
ஷரீயத்தின்படி ஒரு ஆண் நான்கு மனைவிகளுடன் ஒரே நேரத்தில் வாழ்கை நடத்தலாம். ஆனால் ஷரீயத்தை உருவாக்கியவர் நாற்பது மனைவிகளுடன் வாழ்கை நடத்தலாம்இது நடுநிலையற்றது என வாதிடும் சமஉரிமை விரும்பிகளுக்கு அல்லாஹ்வின்  பதில்,

(ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் (அடிமைகள்) தவிர (இவர்களிடம் உறவு கொள்வதில்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்
(குர்ஆன் 23:6, 70:30)
சமஉரிமை விரும்பிகள், வைப்பாட்டிகளை தங்கள் விரும்பும் எண்ணிக்கையில் வைத்துக்கொள்வதற்கான அனுமதி.
குடும்ப வாழ்க்கையை, பலதார மணவாழ்கையை, பெண்களின் குணங்களையும் செயல்பாடுகளைப் பற்றி தன் கருத்துக்களை அல்லது அறிவுரைகளை தெரிவிக்க பல மனைவிகளுடன் வாழ்ந்து சுயஅனுபவம் பெற்று விளக்கமளித்தார் என்பதும் உலமாக்களின் இன்னொரு பதில்.
பொய், திருட்டு, மது அருந்துதல், விபச்சாரம், கொலை, கற்பழிப்பு பற்றி ஒருவர் தன்னுடைய கருத்தை தெரிவிக்க மேற்கண்ட செயல்களில் சுயஅனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று  வாதிட்டால் உங்களால் ஏற்க முடியுமா?.

Facebook Comments

8 கருத்துரைகள்:

சிவப்புகுதிரை said...

தோழர் தஜ்ஜால் அவர்களே ,
சரியான நேரத்தில் சரியான இடுக்கையை தந்துயுள்ளீர்கள்..முகமது ஒரு காம கொடுரன் என்று விமர்சிக்கும் ஒரு அமெரிக்கா படத்தின் டிரைலரை பார்த்தே கொளை வெறிபிடித்துக்கொண்டு படத்தை எதிர்த்து இறங்கிவிட்டார்கள்...இவர்கள் தான் பொறுமையாலர்கலா,,,

Anonymous said...

Watch the tom hollond documentary at

http://www.liveleak.com/view?i=578_1347455615

Channel 4 cancels controversial screening of Islam: The Untold Story documentary after presenter Tom Holland is threatened
Channel 4 has cancelled a repeat screening of a controversial documentary on the history of Islam after its presenter was threatened.

Islam: The Untold Story received around 1,200 complaints when it was first broadcast at the end of August, with presenter Tom Holland receiving numerous furious messages on Twitter.

RAJA said...

பிஜே கூட தாங்கள் கூறியபடி முகமது காமத்தினால் 12 பெண்டாட்டிகளை மணக்கவில்லை என்று அருமையாக விளக்கியுள்ளார். அடிமைப் பெண் மரியாவுடன் உறவு கொண்டதில் கூட ஏதாவது ஒரு தத்துவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆர்ய ஆனந்த் said...

விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கவே முஹம்மது பல பெண்களை மணந்தார் என்ற முஸ்லிம் அறிஞர்களின் கூற்று வடிகட்டிய பொய் என்பது மட்டுமல்ல, அது அடி முட்டாள்தனமான வாதமும் ஆகும்.

அதிரடி தாக்குதல்மூலம்(Gazwa/Raid) அப்பெண்களின் கணவர்களை கொன்று அவர்களை விதவைகலாக்கியதே முஹம்மது தான். முஹம்மது அப்பெண்களை விதவைகளாக்கிவிட்டு, பிறகு அவரே அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பாராம். இது தான் கைம்பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் லட்சணமா? முஹம்மது விதவைகளுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பி இருந்தால், அவர்களை மற்ற மணமாகாத ஆண்களுக்கு மணமுடித்து வைத்திருக்கலாம். அல்லது பண உதவி, வேலை வாய்ப்பு போன்ற மற்ற ஏற்பாடுகளை செய்திருக்கலாம். இருபது வயதுக்கு குறைவான, மிக அழகான இளம் பெண்களாக பார்த்து தேர்வு செய்து, அவர்களுடைய கணவர்களை கொன்ற அதேநாளில் ஒரு சடங்கை நடத்திவிட்டு அவர்களோடு உடலுறவு கொள்வதுதான் முஹம்மது விதவைகளுக்கு வாழ்வு தரும் லட்சணம். இது முஹம்மதின் வக்கிர பெண்பித்து அல்லாமல் வேறு என்ன? இதை நாகரீக மனிதன் எவனாவது ஏற்று கொள்வானா?

Unknown said...

வணக்கம் சகோ,

நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் ஒரு பதிவு. பல தாரமணம் என்பது பெண் மோகம்,மற்றும் விலை மாதர்களின் சகவாசம் தடுக்கப்படும் என்று பி.ஜே.அல்லது வேறு யாரோ கூறியதாக படித்த நினைவு. விலை மாதர்களுக்கும் வீட்டு மாதர்களுக்கும் என்ன வேறுபாடு? அன்றைய விலைக்கு ஏற்ப பணம் கொடுத்து சுகம் அனுபவிப்பதற்கும், அன்றைய நிலைக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி சுகம் அனுபவிப்பதற்கும் உள்ள வேறுபாடுதானே சகோ? ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல‌ ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே நியாயாயமானது? எனவே பணத்தை முன்னிருத்தி மணமுடிப்பது எனும் இம்முறையை இருதரப்பினரும் தவிர்ப்பது நல்லது. அறியாமையால் நடந்த இம்முறையை இளைய சமுதாயம் மாற்றியமைக்க வேண்டும் என்பதே என் அவா!!!!

இனியவன்....

மட்டை ஊறுகாய் said...

தோழர்கள் எல்லாம்...
இதையும் கொஞ்சம் கவனியுங்களேன்..
1979 ல நவம்பர் இருபது முதல் டிசம்பர் நன்கு வரை..
புனித இடம் என்று சொல்லப்படும் காபா வை பதினான்கு நாட்கள் சுஹைமான் என்பவர் பிடித்து வைத்து இருந்தார்..
அப்போ அல்லா தூங்கி கொண்டு இருந்தாரா?
1979 in saudi...
who gave the right to attack holy mosque...???
allah va??

மட்டை ஊறுகாய் said...

why nobody is talking about that...
the grand seizure of holy mosque...in Mecca...
that means allah didnt protect the holy mosque which they claim in quran...
so everything is obsolete...according to their belief,,,

தஜ்ஜால் said...

வாருங்கள் சிவப்புக்குதிரை, Anonymous, ராஜா, ஆர்ய ஆனந்த், இனியவன், மட்டை ஊறுகாய். வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள். முஹம்மது காமம் காரணமாகத்தான் தனது அந்தப்புரத்தில் பெண்களை சேகரித்துக் கொண்டிருந்தார் என்பதை முன்னமே நாம் பார்த்தோம். இஸ்லாமிய அறிஞர்களின் சப்பைகட்டுகளுக்கும் தர்க்கரீதியான பதிலளிப்பது நம்மைப் போன்றவர்களின் கடமையாக உள்ளது அந்த வகையில்தான் இப்பதிவெளியிடப்பட்டது. இனியும் நிறைய பதிவுகளை பார்க்க இருக்கிறோம்