Friday 15 June 2012

ஹலாலகும் ஹராம்கள்-2




கணினிக்கும் தடை;

நாம் முன்பே குறிப்பிட்டது போல இந்த நவீன உலகத்துக்கு பழைய ஏற்ப்பாடுலாம் {குரான்} செட்டாகாது என்பதை நிறுப்பிக்க நம் மூஃமீங்களின் நவீன கால ஹராமை சுட்டிக்காட்டினாலே போதும் என நினைக்கின்றேன்.

'உலகமே கணினிமூலம் சுருங்கிவிட்டது' என கொக்கரித்துக் கொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் நாம் பயனப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். மனிதர்களால் தவிற்க்கவே முடியாத ஒன்றாக இப்பொழுது கணினி மாறிக்கொண்டு வருக்கின்றது.ஆனால் இப்படிப்பட்ட கணினியை கூட நாம் முஃமீங்கள் பயன்ப்படுத்துவதில் அல்லாவுத்தாலாவும் நம் முத்திரை நபியும் ஆப்பு சீவி வைத்துவிட்டார்களே என நினைக்கும் போது தான் மனசு மிக வருத்தப்படுக்கின்றது. என்ன செய்வது 'கூத்தாடிக்கு வாக்கப்பட்டால் ,'டங்கு' டங்கு'னு தான் ஆடியாக வேண்டும். பாவம் நம் மூஃமீங்களுக்கும் அப்படித்தான். இப்பொழுது  மையக்கருத்தை பற்றி விவாதிப்பதற்கு முன் எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை கதையை பற்றி சுருக்கமாக சொல்லி முடிக்கின்றேன்.அந்த கதை இந்த இடுக்கையை புறிந்துக்கொள்வதற்கு சுலபமாக இருக்கும்..

எங்கள் ஊரில் ஒரு பெரிய நகரத்தில் ஜாக் & தவ்ஹீத் அமைப்பை சார்ந்த இரண்டு உண்மை மூஃமீங்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் செண்டர் நடத்தி வந்தார்கள்.எல்லா வியாபாரிகள் போல பொய், பழைய பொருளை பொருத்துவது, நல்லா இருக்கின்ற பொருளை பழுதாகிவிட்டது என கூறி ஏமாற்றுவது என அனைத்தையும் செய்து மிக வேகத்தில் மூன்றே ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் சம்பாத்துவிட்டார்கள். (இப்படியல்லாம் மூஃமீங்கள் செய்ய கூடாதே இது ஹராம் இல்லையா?என நாம் கேட்டாள். அதற்கு மூஃமீங்கள் அண்ணன் பி.ஜெ முறையில் பதில் சொல்லுவார்கள், 'வியாபாரமே ஹலாலாகும் அதில் என்ன ஹராம் என்று'. அதனால் நாம் அதை விட்டுவிடுவோம்} கதைக்கு வருவோம்.

திடீர் என்று ஒரு நாள் அந்த கம்ப்யூட்டர் சர்வீஸ்  செண்டரை விற்றுவிட்டார்கள், காரணம் என்ன என்றால் அவர்கள் சர்வீஸ் செய்யும்   அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பைரேட்டட் OS (Pyrated OS) மற்றும் பைரேட்டட் சாஃப்ட்வேர் (Pyrated software) தான் போடுகின்றார்களாம். பைரேட்டட் (Pyrated) என்றால் என்ன என யோசிக்கின்றீர்களாஅதாவது ஒருவரின் பொருளை அவரின் காப்புரிமை இல்லாமல் பயன்ப்படுத்துவது ,புரியும்படி சொல்லனும்னா திருட்டு பொருள். அப்படிப்பட்ட திருட்டு  பொருளில் வியாபாரம் செய்வதால் அவர்கள் சுவனம் செல்லமாட்டார்கள் என்பதால் விற்றுவிட்டார்கள் என கேள்விப்பட்டேன் . அய்யகோ என்னே இது உண்மை மூஸ்லீம்களுக்கு வந்த சோதனை. இந்தியாவில் உள்ள நம் மூஃமீங்கள் அனைவரும் இப்படித்தானே  கணினியை உபயோக செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள். ஏன் நபி கணினியை கூட  விட்டுவைக்காமல் போய்விட்டர். முஸ்லீம்கள்  அறிவை வளர்ப்பதில் அவருக்கு இஷ்டம் இல்லையோ!
 சரி முகமது இப்படிப்பட்ட திருட்டுக்குலாம்  என்ன ஃபைன் விதித்தார் என அறிய ஹதீஸ்களை புரட்டினேன்.


புஹாரி 6789 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் (பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி 6799 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்; அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸில் இருந்து நபி நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன? கால் தினார், தலை கவசம், கேவலம் கயிற்றை திருடினால் கூட மூஃமீங்களின் கையை வெட்ட வேண்டும் என அறிவுறித்திருக்கிறார். அப்போ இவ்வளவு திருட்டை செய்யும் நம் மூஃமீங்களுக்கு எதை வெட்ட வேண்டும்? மேலும் இவ்வளவு பெரிய திருட்டு நம் பி.ஜெ அண்ணனுக்கு தெரியாமலையா இருக்கும் என onlinepj யில் நுழைந்தேன். நம் மூஃமீங்களில் ஒருவர் ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி செய்து பயன்ப்படுத்துலாமா? என்று கேட்டுவிட்டார். அதற்கு அண்ணன் பி.ஜெ நபியைவிட எப்படி காட்டுத்தனமாக உளறுகின்றார்கள் என்று பாருங்களேன்.


//நாம் ஒரு சாப்ட்வேரை வாங்கினால் அது நமக்குச் சொந்தமாகி விடுகிறது.நமக்கு சொந்தமான ஒரு பொருளை மற்றவர்க்களுக்கு கொடுக்கும் உரிமையைத் தடுத்தால் அது நம் உரிமையை பறிக்கின்றது//

//இந்த அளவுக்குக் கொள்ளை அடிப்பதால் தான் காப்பி எடுக்கின்றார்கள் என்று உணர்ந்து குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முன் வர வேண்டும்//

மேற்க்கண்ட உளறலிருந்து நம் தமிழ்நாடு நபி என்ன சொல்ல வருகின்றார் என்றால் ஒருவன் தான் காசு கொடுத்து ஒரு பொருளை வாங்கிவிட்டாள் அந்த பொருளை அவன் விருப்பம் போல் என்ன வேணும்னாலும் செய்துக் கொள்ளலாம், விற்றவருக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்லை என கூறுகின்றார். சாப்ட்வேர்/OS போன்றவற்றை பற்றி அரியாத ஆசாமி காய்கரி, மளிகை சாமான் வாங்குவதை போல் சகடுமேனிக்கு உளறியிருக்கின்றார்.
மேலும் ஒரு நிறுவனம் வெளியிடும் ஒரிஜினல் சாப்ட்வேர்/OS ஒரே ஒரு கம்ப்யூட்டருக்கு தான் பொருந்தும் வகையில் விற்கப்படுக்கின்றது என்பதை அதில் இருக்கும் Terms&Conditions முழுமையாக படித்து பார்த்தாள் தெரியும்.என்ன தான் ஒரு நபர் எவ்வளவு காசு கொடுத்து ஒரு OS/சாப்ட்வேரை வாங்கியிருந்தாலும் அவர் ஒரு கணினியில் பயன்ப்படுத்தினால் தான் அது ஒரிஜினல்(Genuine) OS/சாப்ட்வேர் என கருதப்படும். அவரே வேற கணினியில் பயன்படுத்தினால் அது பைரேட்டட் OS/சாப்ட்வேர் என்ற வகையில் தான் வரும். இது புறியாமல் கண்டமேனிக்கு உளறுகின்றார் நம் அண்ணன் பி.ஜெ. தெரியாததை தெரியாது என்று சொன்னால் என்னவாம்.அவர் சொன்னதில் முக்கியமான உளறல் என்னவேனில் அதிக விலைக்கு நிறுவனம் விற்ப்பதனால் தான் சாப்ட்வேரை காப்பி போடுகின்றார்களாம். அப்படி என்றால் அதிகமான விலையில் ஒரு பொருள் விற்றால் அதை திருடலாம? அது மட்டும் திருட்டாகாத? உணவுகே வழியில்லாமல் இருப்பவன் தான் கால் தினார் திருடுவான், அவனின் கையை மட்டும் ஏன் நபி வெட்டினார். ஒரு வேளை நவீன முறையில் திருடினால் ஹராமாகாமல் ஹலாலாகுமோ?

இந்தியாவில் பயன்ப்படுத்தும் 100ரில் 90 கம்ப்யூட்டர்களின் பைரேட்டட் OS/சாப்ட்வேர் தான் பயன்படுத்துப்படுகின்றதாம் என்று நான் சொல்லவில்லை மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சர்வே சொல்லுகின்றது..
என்ன மூஃமீங்களே! புறிக்கின்றதா முகமதுவின் ஏற்ப்பாடுலாம் இப்பொ செட்டாகாது என்று? இப்பொதாச்சும் யோசியிங்கள்...

செங்குதிரை
  

Facebook Comments

4 கருத்துரைகள்:

Unknown said...

ஒலி பெரிக்கியில் பாங்கு சொல்வது ஹராமா ஹலாலா? ஏன்னா முகம்மதுக்கு மின்சாரத்தை கண்டுபிடிக்கச் சொல்லி உருப்படியான வஹி வரவில்லை. அதனால மேடை ஏறி காற்றில் பாங்கு சொல்வதுதான் நபி வழி என்றிருக்கும் போது இப்ப ஏன் அதை கடைபிடிப்பதில்லை? புணித பூமியில் பாங்கு சொல்வதை கூட பூந்தமல்லியில் இருக்கும் மூமின்களும் கேட்கலாம் இன்றைய நவீன உலகில். இந்த முறை நபிகள் காலத்தில் இல்லாத ஒன்று இது ஹராமா ஹலாலா? இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் மூமின்கள் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள், இதற்கு வேலை மெனக்கெட்டு பதிலும் சொல்லிக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். சுயசிந்தனையற்ற சோம்பேரிகள் இருக்கும் வரையில் இது தொடரத்தான் செய்யும். நல்ல பதிவு நண்பா நீங்கள் தொடருங்கள்..

ibn lahab said...

செங்குதிரை , என்ன நீங்கள் இஸ்லாமிய அறிவு இல்லாமல் பேசுகிறீர்கள்.
ஒரு முஸ்லீமல்லாத காபிரிடம் திருவது ஹலால்.
இது நான் சொன்னதல்ல நம்ம கண்ணுமணி பொன்னுமணி முஹம்மது சொன்னது.
எனவே பில் கேட்ஸ் போன்ற காபிர்களிடம் திருடலாம்.

கீழே உள்ள ஸஹிஹ் புகாரி ஹதீஸை படிங்கோ .......!!!



Bukhari (44:668) - "We were in the company of the Prophet at Dhul-Hulaifa. The people felt hungry and captured some camels and sheep (as booty)..." Muhammad said that Allah would always provide sustenance for those who believe in him. Stealing from non-Muslims was a legitimate means of fulfilling Allah's promise.

தஜ்ஜால் said...

வாழ்த்துக்கள் சிவப்புக் குதிரை!
//முஸ்லீமல்லாத காபிரிடம் திருவது ஹலால்// இபின் லஹப் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். காஃபிகள் ,மீது முஹம்மது நிகழ்த்திய அனைத்து தாக்குதல்களுமே சூறையாடலை மையமாகக் கொண்டவைகளே. எனவே முஸ்லீம்கள் உருவாக்கும் மென்பொருள்களை pirate செய்தால் மட்டுமே குற்றம்.

சிவப்புகுதிரை said...

இனியவன் @
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி..உங்கள் கோரிக்கையை கூடிய விரைவில் பரிசீலிப்போம்.

இப்னு லஹாப்@
காபீர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்தால் அது ஹலால். சரி, அதே வேளையில் அவர்களின் வியாபார பொருட்களை திருடினாலும் ஹலால.எங்கையொ லாஜிக் இடிக்குதே. இப்படி தான் நம் கண்ணுமணி பொண்ணுமணி உளறியிருக்கின்றார்...

@தஜ்ஜால்
பின்னூட்டத்துக்கு நன்றி ..இசுலாம் தான் சமாதானத்துக்கு ஒரே வழி என்று கூறுவது காஃபீர்களை போட்டுத்தள்ளுவதில் தான் இருக்கின்றது என நினைக்கின்றேன்.