Thursday, 7 June 2012

அற்புதக்கதைகள் : 3 -மூடநம்பிக்கையின் முன்னோடி பாதபூஜை செய்த தண்ணீரா? எச்சில் துப்பிய தண்ணீரா?ஒரு முறை தருமி அய்யா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, வாய்ப்புகள் இருந்தும், முஹம்மது ஏன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்று தன்னிடம் ஒருவர் கேட்டதாக ஒரு கேள்வியை எழுப்பினார். அப்பொழுது அவருக்கு மிகச் சுருக்கமான முறையில்தான் பதிலைக் கூறினேன். அதைத்தான் இப்பொழுது சற்று விரிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தாவாப் பணி செய்பவர்கள், முஹம்மதுவைப்பற்றி கூறும் பொழுது முதலில் கூறுவது அவரது எளிமையைப் பற்றியதாகத்தான் இருக்கும். அவரும், அவரது குடும்பத்தினரும் மூன்று வேளை உணவைக்கூட சரிவர உண்டதில்லை, பகட்டான ஆடைகள் அணிந்ததில்லை, அரண்மனையில் வாழ்ந்ததில்லை என்பதாக துவங்குவார்கள்.
த.த.ஜ-வின் தலைமைப் பேச்சாளர்களில் ஒருவரான கே.எஸ். அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களின் உரைகளில் மவ்லீது என்ற புகழ்மாலைப் பாடல்களைப் பற்றி உரை மிகப்பிரபலமானது. இசுலாமியனாக இருந்தபொழுது ஒருமுறை குறுந்தகட்டில் பதிவுசெய்யப்பட்ட அவரது அந்த சொற்பொழிவைக் (பயான்) கேட்கிற மும்முரத்தில் தொழுகையைத் தவறவிட்டிருக்கிறேன்.  நமது கவனத்தைக் கட்டிப்போடுமளவிற்கு கிண்டலும் கேலியுமாக பேசக்கூடியவர் அவர்.
குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பில் முஹம்மதின் எளிமையை, வழியும் வியர்வையைத் துடைத்தவராக எச்சில் தெரிக்க ஆவேசமாக பேசினார். என்ன பேசினார்? முஹம்மது அராபிய தீபகத்திற்கே சக்கரவர்த்தியாக இருந்தபோதிலும் தன்னைத் தலைவர் என்று பொருள்படும் செய்யதுஎன்ற அடைமொழியிட்டு அழைப்பதைக்கூட விரும்பாதவராக இருந்தார். தனக்கு தனிப்பட்ட மரியாதைத் தருவதைகூட முஹம்மது அறவே வெறுத்தார் என்பதாக ஹதீஸ்கள் வாயிலாக கூறினார்.
உண்மையென்னவெனில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மற்றொரு பகுதி கே.எஸ். அப்துர் ரஹ்மான் ஃபிர்த்வ்ஸி அவர்களின் சொற்பொழிவிற்கு எதிராக இருப்பதுதான். இதென்ன கலாட்டா என்கிறீர்களா? அதுதான் இஸ்லாம்! அதுதான் எளிய மார்க்கம் !!
முஹம்மது எப்பொழுதுமே மற்றவர்களைவிட தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருந்தார். அது அவரது செயல்களில் வெளிப்பட்டது என்பதுதான் உண்மை.

உம்முடைய ரப்பு உம்மை புகழுக்குரிய இடத்தில் நிலைப்படுத்த போதுமானவன்
(குர்ஆன் 17:79)
அபுஹூரைரா (ரலிஅறிவிப்பதாவது:
"என்னைப் பற்றிக் கூறப்படும் போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையே அவன் நாசமாகட்டும்"   என்று நபி (ஸல்) கூறியுள்ளார்
 (திர்மிதீ)
ஸலவாத் என்பது பிரார்த்தனை அல்லது வாழ்த்துப்பாடல் எனலாம். மற்றவர்கள் தன்மீது அளவற்ற அன்பைப்  பொழிய வேண்டுமென்பதில் குறியாக இருந்தார் அதை கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).
"ஒருவருக்குத் தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மனிதர்கள் அனைவைரையும்விட நான் அன்புக்குரியவனாக ஆகாதவரை 'எந்த அடியாரும்' அல்லது 'எந்த மனிதரும்' இறைநம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லீம்)
 (நபியே) நீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான்
(குர்ஆன் 3:31)
வேறொன்றுமில்லை, அன்பில் துவங்கி அடிபணிதலில் முடித்துவிட்டார் அவ்வளவுதான். வெறும் அதிகாரத்தின் மூலம் பெறப்படும் அடிபணிதல் என்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது என்பதை முஹம்மது நன்றாகவே அறிந்திருந்தார்.

எவர் (அல்லாஹ்வின்) ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இவைகள் முஹம்மது, தன்னைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொண்ட அவரது அரசியல் தந்திரங்கள் என்று விட்டுவிடலாம். மரணத்தருவாயில் அவர் எழுதித்தர  நினைத்த கட்டளைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டதை நாம் அறிவோம் இவைகளின் முடிவு இப்படித்தான் இருக்கும். நாம் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பிற்கு இது சற்றும் பொருந்தவில்லை என்று நீங்கள் கோபப்படுவது தெரிகிறது. சற்று பொறுங்கள். தொடர்பில்லாமல் இல்லை. நாம் அற்புதங்களில் தொடர்ந்து பார்க்கலாம். அவர் தன்னை ஒரு புனிதப்பிறவியாக எண்ணிக்கொண்டு செயல்பட்டதை இந்த மதவாதிகள் வெளிப்படையாக பேசுவதில்லை. ஏனெனில் இவர்கள் முஹம்மதின் மீது சுமத்துகின்ற பிம்பங்களுக்கு அவைகள் எதிரானாவை என்பதுதான் காரணமாக இருக்கவேண்டும்.
நமது ஊரில் அப்பாவாக இருந்தும் அம்மாஎன்றழைக்கப்படும் ஒரு சாமியாரின் காலைக் கழுவி பாதபூஜை செய்வதற்காக பணத்தையும் கொடுத்துவிட்டு வரிசையில் காத்து நிற்கும் மடையர்களை நாம் அறிவோம். இங்கு அதுவே வேறுமுறையில் உங்களில் எவருக்கும் அப்பாவாக இல்லாதவர் ஆனால் உங்களின் அம்மாவின் கணவர்....
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்து வருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக்கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். ..
(முஸ்லீம்)
தனது தோழர்களின் மடத்தனமான இந்த செயலை முஹம்மது தடுக்கவில்லையே ஏன்?
அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
...இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும், நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள். பிறகு (எங்களிடம்), இதிலிருந்து சிறிது அருந்தி விட்டு, உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்; நற் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, (இறை நம்பிக்கையாளர் களான) உங்களின் அன்னை(யான என)க்காக வும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.
(புகாரி)
இது சற்று நீளமான ஹதீஸ் எனவே நமக்கு தேவையான பகுதியை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு - கூறியதாவது:
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடை பெற்ற காலகட்டத்தில்...அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார்...
(புகாரி)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா'வில் கற்களை எறிந்து, தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப் பக்கத்தைக் காட்டி "மழி' என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!'' என்றார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மது, சிரைக்கப்பட்ட தனது முடியும் புனிதமானது என்று அவர் கொண்டிருந்த எண்ணத்தையே இது காட்டுகிறது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்தி ருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக் கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மது தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டவரல்ல, மிக எளிமையானவர் என்ற வார்த்தைகள் பொருளற்றவைகளாகத் தோன்றவில்லையா?
இத்தனை மடத்தனங்களையும் முஹம்மது தடுக்கவில்லை மாறாக முன்னின்று வழிநடத்திச் செல்கிறார். முஹம்மதுவே ஒரு அற்புதம்தான் என்பது முஸ்லீம்களின் நம்ம்பிக்கை. அவரது உடல் வெளியேற்றும் கழிவுகள்கூட அற்புதம்தான்.
மேலும் தொடர்கிறேன்
தஜ்ஜால்

Facebook Comments

28 கருத்துரைகள்:

சிவப்புகுதிரை said...

எப்பொழூதும் போல இப்பொழூதும் கலக்கிட்டிங்க தஜ்ஜால்......அருமை..எல்லாம் சாமியார்களை போல தான் நம் முத்திரை நபியும் செயல்பட்டு இருந்து இருக்கின்றார்.இதில் என்ன ஏகத்துவம். ஒரு வேளை அவரை மட்டும் முன் நிறுத்து தான் ஏகத்துவமே.....

Anonymous said...

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற நவீன இந்து சாமியார்களுக்கெல்லாம் முன்னோடி முகமதுதான்.

Iniyavaniniyavan Iniyavan said...

இந்த ஹதீதுகள் எல்லாம் பலமா பலஹீனமா?? அதன் எண்களைக் குறிப்பிட்டால் மார்க்க சகோக்கள் சரிபார்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா? இருப்பினும் உங்க‌ளுக்கு ஒரு ஓ.. போட‌வேண்டும் சூப்பர் த‌ஜ்ஜால்.

சிவப்புகுதிரை said...

தஜ்ஜாலின் இடுக்கைக்கு உண்மை மூஃமீங்கள் யாராலும் பின்னூட்டம் அனுப்பமுடியவில்லையா... என்னய்யா இது கொடுமை ....அல்லாவுத்தாலாவையும் நம்ம முத்திரை நபியும் காப்பாத்த ஒரு மூஃமீன் கூடமா இல்லாமல் போய்விட்டார்கள்?

Tamilan said...

@தஜ்ஜால்,

நண்பரே, நல்ல பதிவு. அனாலும்....
நமது பாரம்பரியப்படி பாதபூஜையை விட்டு கொடுக்க மனம் இல்லை.
இந்திய கலாச்சாரப்படி தாய்,தந்தை, குரு.. கடைசியில் தெய்வம். இவர்கள் அனைவரும் வணகுவதற்கு உரியவர்கள்.
அவர்களுக்கு பாதபூஜை செய்வது என்பது நாம் அவர்களுக்கு காட்டும் மரியாதை அவ்வளவுதான் தான். அதற்காக காலை கழுவி அந்த நீரை அருந்துவது என்பது (யாராக இருந்தாலும்) மூடத்தனம். நான் இந்த ஆளுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்காதிர்கள். அவர் செய்வது பிசினஸ் அவ்வளவு தான். (யார் இந்த ஆள்) , நான் இந்த மாதிரி ஆட்களை பார்த்தது கூட கிடையாது.
ஆனால் இந்த மாதிரி ஆட்களிடம் போய் மாட்டும் மனிதர்களை சொல்லவேண்டும். பாவம் எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று அலைபவர்கள். எப்படியாவது, யார் மூலமாகவாவது தனது கஷ்டம் தீராதா என்ற வெத்து நம்பிக்கை தான்.

Anonymous said...

well.another good piece....that is why so many hindus don't go so deep into religious texts...u wil end up finding BULL SHIT at the end.i wonder no tamil christian has come forward to do the job wat u r doing abt islam.but in many cases, people make fun of religion don't compromise with caste identity.thank u.gud job!

S.Ibrahim said...

தச்ச ஆளே மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு - கூறியதாவது:
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடை பெற்ற காலகட்டத்தில்...அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார்...
எச்சிலை தடவும் இந்த ஹதித் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த ஹதித் முழுமையானது அன்று.இதன் தொடர் முஸ்னது இப்னு அப்துர் ரசாக் என்னும் நூலில் இந்த ஹதிதின் தொடர் தெளிவாக உள்ளது புகாரியில் கூறப்பட்ட அந்த செய்திக்கு பின்னர் தோழர்களின் இந்த செயலை கண்டு எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள்? என்று நபி[ஸல்] அவர்கள் கேட்டார்கள்.அதற்கு தோழர்கள் இறைவனின் திருப்தியை நாடி இவ்வாறு செய்கிறோம் என்றார்கள். இதிலெல்லாம் இறைவனின் திருப்தி இல்லை என்றும் ,என்னுடைய சொற்களை உங்களது நடைமுறைகளில் உண்மைபடுத்துவதிலும் ,அமானிதங்களை முறையாக ஒப்படைத்ததிலும் ,அண்டை வீட்டாருக்கு உதவுவதிலும் ஆகிய செயல்களின் மூலமே இறைவனின் திருப்தியை பெற முடியும் என்று கூறினார்கள்.
தச்ச ஆளே சளி என்று அரபி மூலத்தில் எங்கே உள்ளது? மேலும் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் சில செய்திகள் துண்டு துண்டாக பதிவு செய்யப்பட்டதை தூக்கிக் கொண்டு உமது அடாவடிக்கு ஆதாரம் கிடைத்துவிட்டது என்று தலை தெறிக்க வேண்டாம்.

தஜ்ஜால் said...

@ இப்ராஹீம்
ஒரு மனிதன் தொண்டையைச் செருமி காறி உமிழ்ந்தால், சளிவராமல் சந்தனமா வரும்? முஹம்மதின் எச்சில் செய்த திருவிளையாடல்களை இன்னும் நான் முடிக்கவில்லை.

தஜ்ஜால் said...

@ தமிழன்,
நண்பரே, இங்கு குறிப்பிடப்படுவது மேல்மருவத்தூரில் குடியிருக்கும் பங்காரு அடிகளையே. சில ஆண்டுகளுக்குமுன் எனது நண்பர் பணத்தையும் கொடுத்து அம்மாவின் கால்களுக்கு பாதபூஜை செய்ததாகக் கூறினார். தாய் தந்தையரின் காலில் விழுந்து மரியாதை செய்வதை அல்ல.எவருடைய கால்களிலும் விழுவதிலும் எனக்கு உடன்பாடில்லை

S.Ibrahim said...

தச்ச ஆள் ,தொண்டை யை செருமி என்பது ஹதிதில் இல்லாத ஒன்று .உம்மைப் போன்று டிபிக்காரர்களுக்குத்தான் துப்பினாலும் சளி வரும் .சளி இல்லாதவர்களுக்கு தொண்டையை செருமினாலும் உருமினாலும் சளி வராது

தஜ்ஜால் said...

@ இப்ராஹீம்
முஹம்மது காறித் துப்பிய பொழுது, அவரது கைத்தடிகளின் கைகளில் விழுந்து, அதை முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொண்டது என்னவோ? இதே முஹம்மது, பள்ளிவாசல் சுற்றில் காறல் எச்சிலைக் கண்டபொழுது என்ன கூறினார்? ஆனால் இங்கு செய்தது என்ன? ஒரு அவையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கவேண்டிக்க ஒழுக்கமுறைகளைக்கூட அவர் பின்பற்றவில்லை என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. முஹம்மது, கிரிக்கெட் விளையாட்டில் பந்தை எறிவது போல துப்பினார், அவரது கைத்தடிகள் “லபக்” என்று பிடித்து முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொண்டனர்.

pk edison said...

haa haaa haaa

pk edison said...

இபுறாஹீம் என்ன?

pk edison said...

???????

pk edison said...

கடவுள் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் மதங்கள் கூறும் கடவுள் இல்லை

நந்தன் said...

நாம் பிற ஹதீது தொகுப்பாளர்களின் ஹதீதுகளை சொன்னால் அதிகாரபூர்வமானது புகாரி, முஸ்லீம், திர்மிதி மட்டும்தான் என்று சாமியாடுகிறார்கள். அதுவே புகாரி, முஸ்லீம், திர்மிதியிலிருந்து எடுத்துவைத்தால் காலம் கடந்து அந்த ஹதீதுகளை ஜீரணிக்க முடியாது முஸ்னது இப்னு அப்துர் ரசாக் போன்றோர்களின் எழுத்துக்களை எடுத்துவைக்கின்றனர். அதுசரி, புகாரி என்ன அரைகுறையான அறிவாளி என்கிறாரா இபுராகிம்? துண்டு துண்டான ஹதீதுகளை பதிவு செய்துள்ளதாக கூறுகிறாரே. அப்ப அரைகிறுக்குகள் எழுதியவைகள்தான் இவர்களுக்கு வழிகாட்டியோ?

kasiyaribrahim said...

நந்தன் /////அப்ப அரைகிறுக்குகள் எழுதியவைகள்தான் இவர்களுக்கு வழிகாட்டியோ?////
அரைகிறுக்கு யாருக்கு என்பதை புரிய வைக்கிறேன் .
புதுகோட்டையில் அதிமுக அமோக வெற்றி .எதிர் கட்சிகள் டெபாசிட் இழப்பு என்று வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வைத்துக் கொண்டு தச்சால் போன்ற ஒருவர் ,புது கோட்டையில் திமுக டெபாசிட் இழந்துவிட்டது ,இனிதிமுக ஆட்சிக்கு வர இயலாது என்று கதை அளக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் .ஆனால் ஹிந்துவை படித்த ஒருவர் கூறுகிறார் ,அங்கு திமுக போட்டியிடவில்லை என்று .
இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

நந்தன் said...

காசியாரே, அப்படின்னா புகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்று அரைகுறை, முஸ்னது இப்னு அப்துர் ரசாக் இந்து போன்று முழுநிறையாக்கும். அதைத்தானே நானும் சொல்லியுள்ளேன்.

'புகாரி அரைகிறுக்கு'

சிவப்புகுதிரை said...

புகாரியே அரைகிறுக்குனா ,,,,அப்ப முஸ்லீம் தீர்மிதிலாம் முழு கிறுக்கா. இது வரைக்கும் சுன்னத் ஜமாத்,தமுமுக ஜாக் போன்றவர்களை தான் கிறுக்குனு தவ்ஹீத்கார்ர்கள் சொல்லிட்டு இருந்தாங்க .இப்ப புஹாரி கூட கிறுக்கர் லிஸ்ட்ல வந்துட்டாரா...போவ போவ முஹமது நபியே அந்த லிஸ்ட்ல வந்துடுவாருனு நினைக்கிறேன்...அண்ணன் பி.ஜெ தவிர அனைவரும் அவர்களுக்கு கிறுக்கர்கள் தான்

Iniyavaniniyavan Iniyavan said...

ஹதீது எதுவானாலும் யார் எழுதியிருந்தாலும் குரானுக்கு எது ஒத்துப் போகுதோ அது பலமான ஹதீது, ஒத்துவராத ஹதீதுகள் ஓரங்கட்டப்பட்ட பலஹீனமான ஹதீது. இது எழுதப்படாத சட்டம் சிந்தியுங்கள் தோழர்களே...

நந்தன் said...

குர்ஆனில் இல்லாதவைகள்தான் ஹதீதுகள். எச்சில் கதையையோ, ஆறுவயதில் ஆயிசாவை திருமணம் செய்ததையோ குர்ஆனில் தேட முடியாது.

IBN LAHAB said...

(தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார்...


disgusting piece of shit fellows.....

தஜ்ஜால் said...

நண்பர் இனியவன்,
ஹதீஸ் எண்களைக் கொடுப்பதில் சிரமம் ஏதுமில்லை. தேவையெனில் அல்லாஹ்வின் அதிகாரப் பூர்வ இணையதளமான “onlinepj” வில் உள்ள ஹதீஸ் எண்களையே கொடுத்துவிடுவோம்.

Limras Fakrudheen said...

Say (O Prophet): :If you really love Allah, then follow me, and Allah shall love you and forgive you your sins. Allah is Most-Forgiving, Very-Merciful.

کہہ دیجئے! اگر تم اللہ سے محبت رکھتے ہو تو میری تابعداری کرو (١) خود اللہ تعالیٰ تم سے محبت کرے گا اور تمہارے گناہ معاف فرما دے گا (٢) اور اللہ تعالیٰ بڑا بخشنے والا مہربان ہے۔

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ۭوَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ 31؀

Al Quran
3 : 31
dai ungalala mudincha ithamathiri oru atharatha 1400 varusham back la poga vendam nalaikku enna nadakumnu nee sollu da ithayum nee purinchkalan un vidhi avlothan.

kasiyaribrahim said...

நொந்தன்////காசியாரே, அப்படின்னா புகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்று அரைகுறை, முஸ்னது இப்னு அப்துர் ரசாக் இந்து போன்று முழுநிறையாக்கும். அதைத்தானே நானும் சொல்லியுள்ளேன்.
'புகாரி அரைகிறுக்கு'///
அரை கிறுக்கு உமக்கும் ,உமது தச்ச ஆளுக்குமே !
இந்தியன் எக்ஸ்பிரஸ் அரைகுறை அல்ல ,ஹிந்துவும் அரைகுறை அல்ல .இந்தியன் எக்ஸ்பிரசை படித்தவரே அரைகுறை என்று சொன்னேன் .அதைப் போலவே புகாரியும் அரைகுறை அல்ல ,முஸ்னது இப்னு அப்துரசாக் கும் அரைகுறை அல்ல .புகாரியை படித்த தச்ச ஆளே ,அரைகிறுக்கு என்று முழு மதியாளர்கள் புரியும் வண்ணமாக பதிந்துள்ளேன்

நந்தன் said...

காசியாரே, எச்சில் கதையை புகாரி சொன்னது முழுப்பொய் என்று கூறுகிறீரோ. சரிதான். புகாரி முழுப் பொய்யராக்கும். ஆமாம் அதுதான் உண்மை என்று புரிகிறது.

Iniyavaniniyavan Iniyavan said...

மிஹ்ராஜ் என்கிற கட்டுக் கதை இன்று கொண்டாடப்படுகிறது இதையும் அற்புதக் கதை பகுதியில் தாங்கள் கட்டுரை வெளியிட்டு கருத்து பரிமாற வேண்டும்.

.அ.ஹ.நஜீர் அகமது-நீடூர்-நெய்வாசல் said...

அறிவு கெட்ட ஜென்மங்கள் முஹம்மது என்ற மா மனிதரை பற்றி இன்று அவரின்
மீது சொல்லும் இழிவு அவர் வாழ்ந்த காலத்தில் மூடர்கள் இவ்வாறு உளறி கொண்டு
இருந்தனர் அன்றே இறைவன் முஹம்மது இறை தூதர் என்று தனது ஆதாரங்களை
கொண்டும் வானவர்களை கொண்டும் நிரூபித்தான் .....................

இன்று சில மூட பிராணிகள் காலங்கள் கடந்தன இனி இஸ்லாமியர்கள் நாம் சொல் வதை
நம்பி குழப்பத்தை ஏற்படுத்தி விடலாம் என பகல் கனவு காணும் பைத்தியங்கள் .........

இஸ்லாம் எங்கள் வலி பாடு .............

எம்பெருமானார் எமது இறுதி நபி ...............

நபி வழியை முழுமையாக பயன் படுத்தினால் நான் இஸ்லாமியன் .............

அரைகுறையாக இஸ்லாமிய நெறிகளை பின் பற்றினால் உன்னை போன்ற
காபீர் ஆகிவிடுவேன் ....................

அல்லா நம்மை காக்கட்டும் .