Sunday, 29 June 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -6

அல்லாஹ்வின் மகன்!(?) -6

கடந்த பதிவில் கலப்பான விந்துத் துளியைப்பற்றி கவனித்துக் கொண்டிருந்தோம். முஹம்மது பெண்களுக்கு விந்து, நீர் வடிவத்தில் வெளியாகும் என்கிறார். அது குழந்தையின் தோற்றத்தை நிர்ணயிப்பதாகவும் கூறுகிறார். பெண்களுக்கு விந்து வெளியாகுமா?  அப்படி ஒன்று இருக்கிறதா?

முஹம்மது, விந்து என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் நானும் கூறிவிடுகிறேன்.  இணை சேருவதற்கு ஏதுவாக, பெண்ணுருப்பிலிருந்து வெளியாகும் நிறமற்ற திரவம். உம்மு ஸலமா முஹம்மதின் தவறை சுட்டிக் காட்டிய பின்பும் முஹம்மது தனது உளறலை நிறுத்தாமல் ”நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?” என்று மேற்கொண்டும் உளறுகிறார்.

 குர்ஆன் 76:02 வசனத்திற்கு அண்ணன் பீஜே தரும் விளக்கத்தைப் பார்போம்

207. இனப்பெருக்கத்தில்பெண்களின்பங்கு
மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத்துளியிலிருந்து படைத்ததாகப் பலவசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். துளி' என நாம் மொழிபெயர்த்திருந்தாலும், விந்துத்துளியில் உள்ள ஒரு உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்புவிந்துத்துளி எனவும் இந்தவசனத்தில் (76:2) இறைவன் கூறுகிறான்.

குர்ஆன் 76:02
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம்...
குர்ஆன் 76:02-ல் விந்துத்துளியிலிருந்து படைத்ததாக மட்டுமே உள்ளது; விந்துத்துளியிலுள்ள உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறுவது அண்ணன் பீஜேவிற்கு வந்த தனிப்பட்ட வஹீயாக இருக்கலாம். நாம் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினைமுட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகுதான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.
மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினைமுட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறி இது இறைவனின் வார்த்தைதான் என்பதை நிரூபிக்கிறது.
onlinepj.com

ஒரு கரு உருவாக பெண்ணின் சினை முட்டையின் பங்களிப்பு தேவையாக இருக்கிறது என்பதை அல்லாஹ்வோ, முஹம்மதுவோ அல்லது முஹம்மதின் காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த எவரேனும் நினைத்தாக ஒரே ஒரு குர்ஆன் வசனம்  அல்லது ஹதீஸ் அல்லது ஏதாவது ஒரு தகவலை இவர்களால் காண்பிக்க முடியுமா?  

எதைச் சொன்னாலும் நம்புதற்கு ஒரு கூட்டம் இருக்கிறதென்ற தைரியத்தில்தான், அல்லாஹ்வும், முஹம்மதுவும் கனவிலும் நினைக்காத செய்திகளை குர்ஆனில் இருப்பதாக  அண்ணன் பீஜே அடித்து விளாசுகிறார்.






பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைப்பற்றி முஹம்மதிடம் கேட்கப்பட்டபொழுது,
குர்ஆன் 2:222
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!...

மாதவிடாய் பற்றி தன்னிடம் கேட்கப்பட்டால் அதைப்பற்றி இங்கு விளக்கியிருக்க வேண்டும். ஆனால் முஹம்மதோ உடலுறவைப்பற்றி பேசுகிறார். இதுதான் முஹம்மதின் அறிவியல்! பெண்ணின் கருமுட்டை என்றொரு பொருள் இருப்பதை இவர்கள் அறியவே இல்லை! அன்றைய அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான். இதற்காக நாம் முஹம்மதைக் குறைகூற முடியாது. அவரென்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்?

இமாம் தபரியின் குர்ஆன் விரிவுரையிலிருந்து...

ஆதமும் அவரது துணைவியாரும் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றவில்லையென்பதை அறிந்த அல்லாஹ் அவர்களை விசாரிக்கும் பொழுது..

... Then Adam became fugitive in the garden, and his Lord called to him: “Adam, are you running away from me?” He said: “No may Lord, but I am ashamed before you.” He said: “Adam, from where wewr you approached? He said: “From Eve, Lord.” So God said: “I shall cause her to bleed once every month, just as you have this tree to bleed. I shall make her foolish, although I created her mild tempered. I shall make her have a painful pregnancy and childbirth, although I made her have an easy pregnancy and childbirth.”
Ibn Zaid said: If it were not for the affliction which befell Eve, the women of this world not menstruate, and they mild tempered, and have easy pregnancies and child births.

மாதவிடாய் என்பதைப்பற்றி அன்றைய மக்களின் அறிவு இந்த அளவிற்குத்தான் இருந்திருக்கிறது.  முஹம்மதுவின் மரணத்திற்குப் பின் சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின் இமாம் தபரியின் தொகுப்புகள் உருவாகிறது. அப்பொழுதும் கூட மாதவிடாயின் காரணத்தை அன்றைய அரேபியர்கள் அறிந்திருக்கவில்லை; அதனால்தான் மாதவிடாயை அல்லாஹ்வின் தண்டனை என்ற கருத்தை பதிந்துள்ளனர்.

சரி...! முஹம்மதிற்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம்; அறியாமையில் தவறாகப் பேசலாம்; நுண்ணறிவாளன் என்று தன்னைத்தானே பீற்றிக் கொள்ளும் அல்லாஹ் அறியவில்லையா? தனது செல்லக்குட்டி தூதர் உளறிக் கொட்டியதை அல்லாஹ் சரி செய்திருக்கலாமே? சிந்திக்க மாட்டீர்களா...?  சிந்திக்க மாட்டார்களா...? என்றொல்லாம் அல்லாஹ் கெஞ்சுவதைப்பற்றி முஹம்மதின் காலத்து மனிதர்களில் எவரேனும் சிறிதேனும் சிந்தித்திருந்தால் இப்படி அல்லாஹ்வின் டவுசர் இப்படிக் கிழிந்து தொங்கி இருக்காது.

குர்ஆன் 96:2
அவன் மனிதனை (عَلَقٍ -alaqin) கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.

’அலக்’ என்பதற்கு கருவுற்ற சினை முட்டை என்று அண்ணன் பீஜே விடும் பீலா’வை அவரது விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர மற்ற முஸ்லீம்கள் ஏற்கவில்லை.

இருப்பினும் ’அலக்’ என்ற சொல்லிற்கு, மற்றவர்களின் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, இல்லாத ஒரு பொருளை, அண்ணன் பீஜே திணிப்பதற்கான காரணம் என்னவென்பதை நாம் கவனிக்க வேண்டும்!

365. கருவுற்ற சினை முட்டை
இவ்வசனங்களில் மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும் போது 'அலக்' 'அலக்கத்' என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு.
இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக் கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும் போது அது ஒரு பொருளாகத் தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதப் படைப்பு பற்றி இறைவன் வரிசைப்படுத்திக் கூறும் போது, முதலாவதாக 'நுத்ஃபா' என்ற நிலையைக் குறிப்பிடுகிறான். இரண்டாவதாக 'அலக்கத்' என்ற நிலையைக் குறிப்பிடுகிறான். 'நுத்ஃபா' என்பது ஆணுடைய விந்திலுள்ள உயிரணுக்களாகும். மனிதன் உருவாவதற்கு ஆணுடைய நுத்ஃபா எனும் உயிரணு மட்டும் போதாது. பெண்ணுடைய சினை முட்டையுடன் ஆணின் உயிரணு சேரும் போது தான் கரு உருவாகும். ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் இணைந்த இந்த நிலை தான் உயிரியல் அடிப்படையில் இரண்டாவது நிலையாகும்.
இதன்படி நுத்ஃபாவுக்கு அடுத்த நிலையாகக் குர்ஆனில் கூறப்பட்ட 'அலக்' என்பது இந்த நிலையைத் தான் குறிக்கும் என்பதை எளிதாக விளங்க முடியும். மேலும் அலக் என்ற சொல், பல அர்த்தங்களைக் கொண்டதாக இருந்தாலும் 'ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வது' என்ற பொருளில் தான் மிக அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்னது.
ஆணுடைய உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் இந்த நிலையைக் குறிப்பிட இதை விடப் பொருத்தமான வேறு சொல் இருக்க முடியாது.
இதனால் தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினை முட்டை.
Onlinepj.com

’عَلَقٍ –alaqin-அலக்’ என்றால் இரத்தக்கட்டி அல்லது அட்டைப் பூச்சி, பற்றித் தொங்குகிற நிலை என்பதுதான் நேரடிப் பொருள். குர்ஆன் தவறான தகவலைக் கூறுகிறதென்பதை அவர் மனப்பூர்வமாக உணந்திருக்கிறார் என்பதை அண்ணன் பீஜே கொடுத்திருக்கும் மேற்கண்ட விளக்கம் வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது. தான் உயிராக மதிக்கும் கொள்கை மற்றவர்களால் எள்ளி நகையாடப்படக் கூடாது என்ற எண்ணத்தில், பிற்காலாத்தைய கண்டுபிடிப்பான சினைமுட்டையை, அண்ணன் பீஜே குர்ஆனில் லாகவமாக நுழைத்து, கிழிந்து போன அல்லாஹ்வின் ‘டவுசருக்கு’ ஒட்டுபோட முயற்சிக்கிறார். எனவே அண்ணன் பீஜேவின் குறிப்பிட்ட இந்த மொழிபெயர்ப்பு ஏமாற்றுவேலையை இனி நாம் அதிகமாக விமர்சிக்கத் தேவையில்லை.
 
பொதுவாக நாம் எந்த இஸ்லாமியரிடம் பேசினாலும், அவர்கள் முதலில் முன்வைக்கும் வாதம் குர்ஆனில் அறிவியல் பற்றிய முன்னறிவிப்புகள் இருக்கிறது என்பதுதான். அதிலும் கருவளர்ச்சியைப்பற்றி குர்ஆன் கூறுகிறதென்ற வாதம் மிக முதன்மையானது. இது பலராலும் பலவிதமாக மறுக்கப்பட்டிருந்தாலும் இஸ்லாமியர்கள் மீண்டும் மீண்டும் இதே உளறலைக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தப் பதிவில் அவர்களுக்கு மறுப்பெழுதுவது நமது நோக்கமல்ல இருப்பினும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

1.    ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது. கரு உருவக்கத்தில் பெண்ணின் பங்களிப்பைப்பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அறியவே இல்லை. மாறாக பெண்ணிற்கு விந்து வெளியாகும் என்று உளறுகிறது.

2.    Ovary எனப்படும் சூலகத்தின் பங்களிப்பைப்பற்றி குர்ஆனுக்கு எதுவுமே தெரியவில்லை. அதனால் மாதவிடாய்பற்றி சரியான பதிலை அதனால் கூற முடியவில்லை.

3.   விந்து மட்டுமே சதைக்கட்டியாக மாறுவதாகக் கூறுவது, குர்ஆனின் அறியாமையைக் காண்பிக்கிறது.

4. கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் (FALLOPIAN TUBE) ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளருகின்றது. ஆனால், ஹதீஸ் கருப்பையிலிருக்கும் விந்து கருவாக மாறுவதாகக் கூறுகிறது.

5.    ஆக கரு உருவாகும் முறை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்து அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது. மேற்கொண்டு குர்ஆன் கூறும்(!) கருவளர்ச்சி பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது.

ஒருமுறை வெளியேறும் 2-4மிலி விந்து நீரில் சுமார் 100 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும். ஆணின் உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும் என்கிறது அறிவியல்.




கருக்கட்டலில் வெற்றிபெற்ற ஒரு விந்தணுவைத்தவிர மற்ற 100-300 மில்லியன்கள் விந்தணுக்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது? இவைகள் ஆன்மா அல்லது ஆத்மாக்கள் இல்லையா?

குர்ஆன் 32:8
பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான்.
32:9 பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான்.
அதென்ன நீரின் சத்து? விந்துவில், கால்சியம், குளோரைட், சிட்ரேட், குளுக்கோஸ், லேக்டிக் அமிலம், மெக்னிஸியம், பொட்டாசியம், சோடியம், யூரியா என்று நிறைய சத்துப் பொருட்கள் இருக்கிறது இதில் எந்த சத்துவிலிருந்து படைத்தான்? சத்து என்பதற்கும் உயிரணு என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

கருக்கட்டல் நிகழ்ந்து கருவளரத் துவங்கினாலும் அது உயிரற்ற ஜடப்பொருள்தான். கருவை அல்லாஹ் விரும்பியவாறு சீரமைத்த பின்னர் அதனுள் தனது உயிரை ஊதுவானாம். அப்படியானால் அல்லாஹ் அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கியதை உயிரென்று அழைக்க முடியாது.

குர்ஆன் 4:1
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து(نَفْسٍ-nafsin) படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்...
பீஜே மொழிபெயர்ப்பு

இதுவரை நாம் பார்த்த விளக்கத்தின்படி, படைத்தான்... படைத்தான்.. என்று அல்லாஹ் கூறிக் கொண்டிருப்பது உடல்களைத்தான் உயிர்களை அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். அதாவது ஆதாம் என்ற உடலிலிருந்து மட்டுமே எண்ணற்ற மனித உடல்கள் உருவானதாக பொருள் கொள்ளலாம்.

குர்ஆன் 4:1
மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்கனுக்குப் பயந்து(நடந்து) கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால், உங்கள் (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து(نَفْسٍ-nafsin) படைத்தான் அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான்...
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு

ஒருவர் نَفْس- நஃப்ஸ் என்பதை தனிமனிதன்(Self) என்பதாகவும் மற்றொருவர் ஆத்மா என்றும் மொழிபெயர்க்கின்றனர். நடைமுறையில் நஃப்ஸ் என்பதை ஒருவரது ஆளுமை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. நஃப்ஸ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Soul என்று மொழிபெயர்க்கின்றனர். Soul என்பதை Immortal part of Human being எனப்பொருள் கொண்டால் ஆன்மா அல்லது ஆத்மா என்ற பொருளுக்கு நெருக்கமாக வரும். நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள், அண்ணன் பீஜே என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்.

குர் ஆன் 3:185
ஒவ்வோர் உயிரும் (نَفْسٍ-nafsin) மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில்தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும்.
பீஜே மொழிபெயர்ப்பு

இப்பொழுது நமது கேள்வி نَفْس- நஃப்ஸ் என்றால் என்ன? எத்தகையது?

ஒரே ஆத்மாவிலிருந்தே மனிதர்கள் அனைவரும் படைக்கப்பட்டனர் என்றால் ஆத்மா பல்கிப் பெரும் தன்மையுடையது என்றாகிறது. ஆதாமின் முதுகுகளிலிருந்தது (குர்ஆன் 7:172-அண்ணன் பீஜே விளக்க எண் 189)  அல்லாஹ் வெளிப்படுத்தியது ஆன்மாக்களையா அல்லது ஆன்மாக்கள் இருப்புவைக்கப்பட இருக்கும் கூடுகளையா? ஆன்மா பாலூட்டி வகையைச் சார்ந்ததா? அல்லது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையைச் சார்ந்ததா? நான் சொல்லவில்லையென்றாலும், குர்ஆன் தெளிவானது விளக்கமானது என்பதையும் அவ்வப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். காதியாணிகள் அல்லது ரஷாது கலீபாவின் அஹ்லே குர்ஆனியவாதிகளின் மொழிபெயர்ப்பை தீண்டத் தயங்கும் முஸ்லீம்கள், தகிடுதத்தம் நிறைந்த அண்ணன் பீஜே செய்த மொழிபெயர்ப்பைஎவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பது புரியவில்லை.

முதலில் படைக்கப்பட்ட அந்த ஆத்மா எது?




இதென்ன புதுக்குழப்பம் என்கிறீர்களா?  இதுதான் முஹம்மதின் உண்மை முகம். தற்காதல் கோளாறு எப்படியெல்லம் வேலை செய்கிறது என்பதை காண்பிக்கவே நமது மௌலாலான அஸீஸ் அவர்களின் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கு பதிந்திருக்கிறேன். முஹம்மதின்(குர்ஆனின்) அனைத்து உளறல்களுக்கும் தற்காதல் கோளாறும் அவரது அறியமையையும்தான் காரணம். இதைப்பற்றி பிறகு பேசலாம். நாம் ஈஸாவின் விஷயத்தை கவனிக்க வேண்டும்; பாவம் அவர் வேறு நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

Oh.. Jesus forgive me...


தொடரும்...

Monday, 16 June 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -5

உண்மையில் பரித்த ஆவி என்பது என்ன அல்லது யார்?

பரிசுத்த ஆவி என்பது ஜிப்ரீல் என்ற வானவரைக் குறிப்பிடுவதை முன்பே பார்த்தோம். இது நமது கருத்தல்ல; முஸ்லீம்களின் ஏகோபித்த முடிவை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

கிறிஸ்தவத்தில் கடவுளின் மூன்றில் பகுதியாக, தன்மையாக பரிசுத்த ஆவியைக் குறிப்பிடுகின்றனர். இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று இணையாது; வெவ்வேறு; தனித்தும் செயல்படக் கூடியது ஆனால் ஒன்றுதான் (சரிதானா?) இஸ்லாமைப் பொருத்த வரையில் பரிசுத்த ஆவி என்ற சொல்லே அந்நியமானது. உயிரைக் குறிப்பிட ”ரூஹ்” என்ற பதம் இருந்தாலும் ”ரூஹுல் குத்தூஸ்” என்ற பதம் குறிப்பாக ஈஸாவின் உருவாக்கம் பற்றி கூறப்படும் பொழுது மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூஹ்பற்றி அதாவது உயிர்களின் உருவக்கம்பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறதென்பதை சிறிது கவனித்துவிட்டு ”ரூஹுல் குத்தூஸ்”  எனப்படும் பரிசுத்த உயிரிடம் திரும்பலாம்.

குர்ஆன் 38:72
அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' 

குர்ஆன் 15:29
"அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)

களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின், உடலுக்குள் அல்லாஹ் தனது உயிரை ஊதினானாம்.

அல்லாஹ்வின் உயிர் என்பதைப்பற்றி அண்ணன் பீஜே தரும் விளக்கத்தை “அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!” என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம் அதில் அண்ணன் பீஜே இவ்வாறு கூறுகிறார்.

இறைவனின் உயிர் என்று ஈஸாநபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூறமுடியாது. ஏனெனில் 'இறைவனின் உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்' என்று பொருள் இல்லை.

இதன் பொருள் என்னவென்றால், அல்லாஹ்விடமிருக்கும் நிறைய, எண்ணற்ற உயிர்களிலிருந்து ஆதாமிற்கான உயிரை அல்லாஹ் தனக்குள் வாங்கிக் கொண்டு, களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின் உடலுக்குள் ஊதி செலுத்தினான் என்பதுதான் அண்ணன் பீஜே இங்கு கூறவிழைவது.

இதன் மூலம் படைப்பைத் துவங்குவதற்கு முன்பே மனிதர்கள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, நுண்ணுயிர்கள், கிருமிகள் என அனைத்து உயிர்களும் விதியுடன் தயார் நிலையில் இருந்திருக்கிறது என்பதை இவர்கள் ஏற்கவேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தல்ல. ஃபழிலத்துஷ் ஷெய்கு அஸ்ஸெய்யிது அப்துல் அஸீஸ் மௌலானா குஷ்ஹாலி தவ்வல்லாஹு ஹயாதஹு (இருங்கள்.. சற்று மூச்சு விட்டுக் கொள்கிறேன். இனி என்னால் முடியாது எனவே இவரது பெயரை மௌலானா அஸீஸ் என்று அழைத்துக் கொள்வோம்) என்பவர் எழுதிய  “தப்ஸீர் ஆயத் அந்நூர்” என்ற நூலின் படங்கள் சிலவற்றைத் தருகிறேன்.






 நமது மௌலாலான அஸீஸ் சொல்வது அவரது தனிப்பட்டகருத்தல்ல. இதை அண்ணன் பீஜேவும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?
ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவரைத் தான் அல்லாஹ் வெளியேற்றினான். "அனைவரும் வெளியேறுங்கள்!'' என்று ஏன் திருக் குர்ஆனின் 2:38 வசனத்தில் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.
உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். எனவே அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆதமுடைய மக்களின் முதுகுகளி லிருந்து அவர்களின் சந்ததிகளை இறைவன் வெளியாக்கி, "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' என்று கேட்ட செய்தி திருக்குர்ஆன் 7:172 வசனத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆதம் சுமந்திருந்த அனைவரையும் கருத்தில் கொண்டு அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

நம்முடன் விவாதிக்க இஸ்லாமியர்களுக்கு எவ்விதமான வாய்ப்புகளுமில்லை என்பதற்கு விதியைப் பற்றிய இந்த விளக்கமே போதுமானது. இருப்பினும் குர்ஆனின் இதர உளறல்களை இஸ்லாமியர்களும், மற்றவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே நாம் மற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறோம். எனவே விதியைப்பற்றி மேற்கொண்டு நான் இங்கு தொடர விரும்பவில்லை. செத்த பாம்பை எதற்காக அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? நமது கவனத்தை உயிர்களைப்பற்றிய இஸ்லாமின் குழப்பத்திற்கு மீண்டும் செலுத்துவோம்.

குர்ஆன் 17:85
(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!

உயிர்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது என்கிறான் அல்லாஹ். ஆனால் முல்லாக்களோ அடித்து விளாசுகிறார்கள். உயிர்கள் வைக்கப்படும் கூட்டை அதாவது உடலை அல்லாஹ் எவ்வாறு உருவாக்குகிறான் என்பதையும் காணலாம்.

களிமண் தொழில் நுட்பத்தை நீங்கள் அறிவீர்கள் அந்தச் செயல்முறை நிறைய சிக்கல் நிறைந்தது போலும், அதனால் ஆதாமுடன் அந்த தொழில்நுட்பத்தை நிறுத்திய அல்லாஹ், புதிய தொழில் நுட்பத்தை செயல் படுத்துகிறான்.

குர்ஆன் 32:8
பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான்.

குர்ஆன் 32:9
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

குர்ஆன் 75:37
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?

ஆண்-பெண் இணையும் பொழுது, ஆணின் விந்து சத்திலிருந்து ஒரு உயிரற்ற ஜடப் பொருள் அல்லது சதைக்கட்டி மட்டுமே உருவாகிறது. எப்படி உருவாகிறது? அல்லாஹ் உருவாக்குகிறான். அது பெண்ணின் கர்பப்பையில் வைத்து, சீரமைக்கப்படுகிறது; அதன் பிறகு அந்த உடலினுள் உயிர் ஊதப்படுகிறது. இவ்வாறுதான் ஒரு பெண்ணின் கருப்பையில் கரு உருவாகிறது. இதைத் தவிர உயிர்கள் உருவாக்கத்தில் பெண்ணின் பங்கு எதுவுமில்லை என்பதுதான் அல்லாஹ்வின் முடிவு!

புகாரி 318
'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஆனால் குர்ஆனின் இன்னொரு வசனம் வேறொரு செய்தியைக் கூறுகிறது. இது அல்லாஹ்வின் அறிவு அடுத்தகட்ட வளர்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. முன்பு பார்த்த 32:8,9, 75:37 ஆகிய குர்ஆன் வசனங்கள் மெக்கவிலிருந்த பொழுது கூறியவைகள். இது மதீனா வெளியீடு.

குர்ஆன் 76:2
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம்...

அதென்ன கலப்பான விந்துத் துளி?

புகாரி 130
'உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

இதற்கு மேலும் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆணின் விந்து, பெண்ணின் கர்பப்பையிள் சென்று தங்கிவிடுகிறது; அதன் பிறகு ஒரு வானவர் வந்து அமர்ந்து கொண்டு அல்லாவிற்கு நேரடி ஒலிபரப்பைத் துவங்குகிறார். என்னே அறிவியல்... என்னே அறிவியல்... எனக்கு ஒரே புல்லரிப்பாக இருக்கிறது, கொஞ்சம் பொருத்திருங்கள்.... சாம்பலைத் தேய்த்துவிட்டு வந்துவிடுகிறேன்..!

தொடரும்


தஜ்ஜால்.

Saturday, 24 May 2014

அல்லாஹ்வின் மகன்!(?) - 4

நமது நண்பர் ANT, 
“அப்ப குர்ஆன் 6:101 ..அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அல்லாவின் சொல் என்ன ஆவது?”

என்றொரு கேள்வியை கேட்டிருந்தார்.  அதற்கான பதிலை குர்ஆனிலிருந்தே பார்போம்!




குர்ஆன் 21:91
 தனது கற்பைக் (فَرْجَهَا-farjahā) காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்....
குர்ஆன் 66:12
... அவர் தமது கற்பைக்(فَرْجَهَا-farjahā) காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். ...

குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலுள்ள தில்லாலங்கடி வேலைகளைப்பற்றி முன்பே பார்த்தோம். குர்ஆன் 21:91, 66:12  ’Farjahā’ - fā rā jīm (ف ر ج) என்ற சொல் எப்படி உருமாறுகிறது என்பதை  இப்பொழுது கவனிக்கலாம்.
’Farjahā’ என்ற சொல் இடம்பெறும் இன்னொரு குர்ஆன் வசனத்தையும் அதற்கான வெவ்வேறு மொழிபெயர்ப்புகளையும் கவனித்தால் இதிலுள்ள ஏமாற்றுவேலை எளிதாகப் புரியும்.

குர்ஆன் 24:31
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப்(furūjahunna) பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!...
பீஜே மொழிபெயர்ப்பு

இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக : அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்(furūjahunna) பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்...
தர்ஜுமா.காம் வெளியீடு

மேலும் (நபியே) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவேண்டும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் (furūjahunna) பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்...
சவுதி வெளியீடு

فَرْجَهَا-  farjahā  فُرُوجَهُنَّ- furūjahunna என்பதன் நேரடிப் பொருள் என்னவென்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள்  farjahā  என்றால்  ’Private part’  இலைமறைவுக்காயாக வெட்கத்தலம் என்றோ மர்மஸ்தானங்கள் என்றோ கூறிக்கொள்ளலாம்.  இங்கு மர்யம் பெண் என்பதால் பெண்ணின் மர்மஸ்தானம் என்று பொருள் கூறலாம். (மன்னிக்கவும்!) சற்று கீழிறங்கிக் கூறினால் ‘சாமானம்’ என்று சொல்லலாம். ஆனால் கற்பு என்று மொழிபெயர்ப்பது அல்லாஹ்விற்கு அரபி சொல்லிக் கொடுப்பதைப் போன்றதே!.

குர்ஆன் 21:91
தனது கற்பைக் (farjahā) காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்....

கற்பு என்பதைக் குறிப்பிட அரபியில் வேறு சொற்கள் இருக்கையில் எதற்காக அல்லாஹ் உடலுறுப்பைக் குறிப்பிடவேண்டும்? இருபாலினமும் உடலால் இணைந்து உருவாகும் வாரிசுகளை மட்டுமே முறையான வாரிசுவாகக் கருதவேண்டும். இங்கு மர்யம் தனது உறுப்பைப் பாதுகாத்துக் கொண்டவர்; உடலால் இணைப்பு ஏற்படவில்லை. எனவே ஈஸா தனது வாரிசு இல்லையென்பதே  அல்லாஹ்வின் லாஜிக்! அதனால் தான் இங்கு அல்லாஹ் உறுப்பைப்பற்றி பேசுகிறான்.

மர்யமின் கர்பத்திற்குக் அல்லாஹ்வின் ’விவகாரமான ஊதலே’ காரணம் இதைக் குர்ஆனும் ஒப்புக் கொள்கிறது. எனவே மர்யமின் மகனை அதாவது ஈஸாவை அல்லாஹ்வின் மகனென்று கூறுவதுதானே முறையான செயலாக இருக்க முடியும்? இது கிறிஸ்தவர்களின் வாதம்!

அண்ணன் பீஜே இதை எவ்வாறு மறுக்கிறார் என்பதைக் காண்போம்.

90. அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!
ஈஸாநபியை அல்லாஹ்வின் வார்த்தை என்று 3:39, 3:45, 4:171 ஆகிய வசனங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது. 4:171, 21:91, 66:12 வசனங்களில் அவனது உயிர் எனவும் ஈஸா நபியைப்பற்றிக் குர்ஆன் கூறுகிறது.

இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸாநபி இறைவனின் குமாரர் என்று கிறித்தவ நண்பர்கள் கூறுகின்றனர். குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஈஸாநபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இல்லை என்று ஏராளமான இடங்களில் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81)

பொதுவாக மனிதர்கள் உருவாக, பெண்ணின் சினைமுட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸாநபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால்தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு' எனும் கட்டளை மூலம்தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது.

இறைவனின் உயிர் என்று ஈஸாநபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூறமுடியாது. ஏனெனில் 'இறைவனின் உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்' என்று பொருள் இல்லை.

அல்லாஹ் தேவையற்றவன் என்று முழங்குவார்கள். ஆனால் அவனுக்கொன்று உடமைகளும் இருக்குமாம். இதைவிட கோமாளித்தனமான விளக்கம் இருக்க முடியாது.  அல்லாஹ்விடம் உடமைகளாக உயிர்களை மட்டும்தான் வைத்திருக்கிறானா அல்லது வேறு ஏதேனும் விவகாரமாக வைத்திருக்கிறானோ என்னவோ? Mullahs knows the best!(?)

திருக்குர்ஆனின் 15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களையும், அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவ நண்பர்கள் கூறுவதில்லை.

ஆதம் (அலை) பற்றிக் கூறப்படும் போது எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் ஈஸாநபி பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம் அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்! இல்லையென்றால் முஹம்மதால் தன்னை எப்படி முன்னிருத்தமுடியும்?

3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானதுதான் என திருக்குர்ஆன் தெளிவாகப்பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
onlinepj.com

’குன்’ என்ற வெற்றுச் சொல்லால்  ஈஸா மட்டுமல்ல எதையுமே அல்லாஹ் உருவாக்கவில்லை என்பதை நாம் முன்னமே பார்த்தோம். மேலும் ஆதமிற்கும் ஈஸாவிற்கும் உருவாக்கத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறதென்பதற்குக் குர்ஆனே போதுமானதாக இருக்கிறது. எனவே ’3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானதுதான் என திருக்குர்ஆன் தெளிவாகப்பிரகடனம் செய்கிறது’ என்ற வார்த்தைகள் அர்த்தமற்றது.  கிறிஸ்தவர்கள் முன்வைக்கும் இறைவனின் புதல்வன் என்ற கோரிக்கையையை அவசரகதியில் மறுப்பதைப் போன்றது.

பெண்களை ஏமாற்றி கர்பமாக்கிய பிறகு, அக் கர்பத்திற்குக் தான் காரணமல்ல என்று கூறி நழுவும் வில்லன்களை திரைக்கதைகளில் நிறையவே பார்த்திருக்கிறோம். எண்ணற்ற திரைக்கதைகளில் இதுவே மையக்கருவாக இருந்தது. குர்ஆன் 6:102-ம் வசனத்தில் அல்லாஹ் கூறுவதும் அதைபோன்றதொரு நழுவல்தான். அன்றாட வாழ்விலும் இதுபோன்ற வழக்குகளைக் காணமுடியும். உதாரணத்திற்கு, என்.டி.திவாரி என்ற கிழவரும் இப்படித்தான் கூறிக் கொண்டிருந்தார். நல்ல வாய்ப்பாக அறிவியலின் வளர்ச்சி இதற்கொரு முற்றுப் புள்ளியை வைத்துவிட்டது. வேறுவழியின்றி என்.டி.திவாரி தனது திரைமறைவு வேலையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவரை அறிவியல் தள்ளிவிட்டது. ஆனால் கெட்ட வாய்ப்பாக நம்மிடம் அல்லாஹ் மற்றும் ஈஸாவின் மரபணுக்கள் நம்மிடமில்லை. முஹம்மது, மற்றும் அவரது அடிபொடிகளின் உளறல்களை வைத்துதான் இதற்கொரு தீர்வை கண்டிபிடிக்க வேண்டியிருக்கிறது.

அவசரகதியில் வெளியான அல்லாஹ்வின்(!) மறுப்பை சற்று நாகரீகமாகவே கூறுகிறேன்,

”மர்யமிடம் என் விரல் நகம் கூடப் படவில்லை, அவருடன் உடலுறவு கொள்ளவில்லை எனவே ஈஸா எனது மகனில்லை! ஆனால் மர்யம் கர்பமடைய நான் மட்டும்தான் காரணம்” என்பதே அல்லாஹ்வின் வாதம்!

சரி,  மர்யம் எவ்வாறுதான் கர்பமடைந்தார்?

பரிசுத்த ஆவி ஊதியதால் மர்யம் கர்பமடைந்தார்!

யார் இந்த பரிசுத்த ஆவி?

ஒரு நபர் சென்று  ஊதவேண்டிய அவசியமென்ன?

பரிசுத்த ஆவி எவ்விடத்தில் ஊதியது?



குர்ஆன் கூறும், மர்யமின் கர்பமடைந்த காட்சியை (குர்ஆன் 66:12) தஃப்ஸீர் அல்-ஜலாலைன் இவ்வாறு கூறுகிறது,

And Mary (wa-Maryama is a supplement to imra’ata Fir‘awna) daughter of ‘Imrān, who preserved [the chastity of] her womb, so We breathed into it of Our Spirit, namely, Gabriel — when he breathed into the opening of her shirt, by God’s creation of this action of his which reached her womb, thus conceiving Jesus — and she confirmed the words of her Lord, His prescriptions, and His, revealed, Scriptures and she was of the obedient, [one] of the obedient folk.

குர்ஆன் 66:12 வசனத்திற்கு இப்ன் கதீர் தரும் விளக்கம் :

And Maryam, the daughter of `Imran who guarded her chastity (private part). meaning, who protected and purified her honor, by being chaste and f ree of immorality,

 (And We breathed into it (private part ) through Our Ruh, ) meaning, through the angel Jibril. Allah sent the angel Jibril to Maryam, and he came to her in the shape of a man in every respect. Allah commanded him to blow into a gap of her garment and that breath went into her womb through her private part; this is how ` Isa was conceived.

And we breathed into it through Our Ruh, and she testified to the truth of her Lords Kalimat, and His Kutub,) meaning His decree and His legislation.

அல்லாஹ்வின் ஆவி அதாவது பரிசுத்த ஆவி அதாவது ஜிப்ரீல் என்ற வானவர், மர்யம் அணிந்திருந்த ஆடையின் இடைவெளி வழியாக ரூஹ்ஹை(உயிரை) ஊதினாராம் அது அவரது உறுப்பின் வழியே சென்று கருப்பையை அடைந்ததாம்.

அதாவது அல்லாஹ்வின் பரிசுத்த ஆவி, மர்யமிடம் சென்று நெற்றியிலோ அல்லது முகத்திலோ அல்லது வயிற்றிலோ ஊதவில்லை; ஊதவேண்டிய இடத்தில்தான் ஊதியிருக்கிறது. இதற்கென்று ஒரு நபரை, அதுவும் ஆணின் வடிவத்தில் அனுப்பி, இடம் பார்த்து, இலக்கை நோக்கிச் சரியாக ஊதவேண்டுமென்றால், அந்த ஊதலில் தேவையானதை வைத்திருக்கிறார்கள் என்பதுதானே பொருள்!

அல்லாஹ்வின் ரூஹ்  ஒரு ஆணின் வடிவத்தில் செல்ல வேண்டும்?  பெண்ணின் வடிவத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு உயினத்தின் வடிவத்தில் சென்றிருக்கலாமே? (இதற்கான பதில் உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்!)

ஆணின் உருவத்தில் வந்தது அல்லாஹ் அனுப்பிய பரிசுத்த ஆவியென்ற வைத்துக் கொண்டு நாம் குர்ஆனின் கதையைத் தொடர்வோம்.

குர்ஆன் 19:18-22
18."நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

19."நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.

20."எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்.

21."அப்படித் தான்'' என்று (இறைவன்) கூறினான். "இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்'' (என்று ஜிப்ரீல் கூறினார்.)

22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.

தனது அறையில் தனிமையிலிருக்கும் ஒரு பெண்ணின் முன்னே திடீரென அறிமுகமே இல்லாத ஒரு ஆண் தென்பெட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்? தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த ஊதல் வேலையை தனிமையிலிருக்கும் பெண்ணிடத்தில்தான் செய்ய வேண்டுமா? ”இது எனக்கு எளிதானது”, இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை” என்றெல்லாம் பீற்றுவதை  ஊரறிய எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாகக் கூறி ஊதுவதில், அல்லாஹ்விற்கு என்ன தயக்கம்?

குர் ஆன் 3:37
அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் உணவை மர்யமிற்கு வழங்குவதற்கு அல்லாஹ்விற்கு வெட்கம் போலிருக்கிறது. அதனால் இரகசியமாக உணவைக் கொடுத்து சரி செய்திருக்கிறான். (நாங்கள் ஃபிகர்களை KFC க்கு அழைத்துச் செல்வதும், அவர்களது செல் போனுக்கு ரீசார்ஜ் செய்வதும் எப்படித் தவறாகுமென்று ஒரு அப்பாவிக்(!) காதல் மன்னர் கேட்கிறார்) மர்யமின் மீது அல்லாஹ்விற்கு ஒரு ’இது’ இருந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

உணவைக் கொடுத்து ’உஷார்’ படுத்தியிருப்பதாக நினைக்க வேண்டாம். என்ன இருந்தாலும் தனது வாரிசை சுமக்கப் போகிறவர் என்ற கரிசனமாக இருந்திருக்கலாம்.

இந்துமதத்தினர், மகாபாரதக் கதைகளில் வரும் கர்ணன் மற்றும் பாண்டவர்களின் பிறப்பிற்குக் கூறிக்கொள்ளும் காரணங்களுக்கும் ஈஸாவின் பிறப்பிற்குக் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூறிக்கொள்ளும் காரணத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை.

இன்றைய சூழலில் ஒரு பெண், இதுபோன்று தன்னைக் கர்பமாக்கிய கயவன் கடவுள் தானென்று கூறினால் இந்த மதவாதிகள் என்ன செய்வார்கள்? அறிவியலைத் தஞ்சமடைய மாட்டார்களா?

பேய் மற்றும் வேற்று கிரகவாசிகளைச் சந்தித்ததாகக் கூறுபவர்களை கவனித்தால் பொதுவான ஒரு உண்மை புலப்படும். அதாவது அந்த அனுபங்கள் மிகப் பெரும்பாலும் அவர்கள் மட்டும் தனிமையிலிருந்த பொழுது சந்தித்தாகக் கூறுவர். இந்தப் பேய்களும் வேற்று கிரகவாசிகளும் பொதுவெளியில் வருவதற்கு  வெட்கம் வெட்கம் கொள்வதைப்போல அல்லாஹ்விற்கும் அவனது ஆற்றலுக்கும் வெட்கம் போலிருக்கிறது.

நாம் பரிசுத்த ஆவி ஊதிய காற்றைத் தொடர்வோம்

சாதரணமாகக் காற்றை ஊதினால் கருத்தரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ’அவ்விடத்தில்’ காற்று புகுந்தால் கர்பமாகிவிடுவார்கள் என்றிருந்தால் பெண்களின் நிலைமை அவ்வளவுதான்! பெண்கள் ’அதை’  காற்றுப் புகாதவாறு மூடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைவந்திருக்கும்.

பரிசுத்த ஆவியின் விவகாரமான ஊதலில் என்ன இருந்தது? மர்யமிடம் வந்தது பரிசுத்த ஆவிதானா?


தொடரும்...

தஜ்ஜால்