Monday 16 June 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -5

உண்மையில் பரித்த ஆவி என்பது என்ன அல்லது யார்?

பரிசுத்த ஆவி என்பது ஜிப்ரீல் என்ற வானவரைக் குறிப்பிடுவதை முன்பே பார்த்தோம். இது நமது கருத்தல்ல; முஸ்லீம்களின் ஏகோபித்த முடிவை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

கிறிஸ்தவத்தில் கடவுளின் மூன்றில் பகுதியாக, தன்மையாக பரிசுத்த ஆவியைக் குறிப்பிடுகின்றனர். இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று இணையாது; வெவ்வேறு; தனித்தும் செயல்படக் கூடியது ஆனால் ஒன்றுதான் (சரிதானா?) இஸ்லாமைப் பொருத்த வரையில் பரிசுத்த ஆவி என்ற சொல்லே அந்நியமானது. உயிரைக் குறிப்பிட ”ரூஹ்” என்ற பதம் இருந்தாலும் ”ரூஹுல் குத்தூஸ்” என்ற பதம் குறிப்பாக ஈஸாவின் உருவாக்கம் பற்றி கூறப்படும் பொழுது மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரூஹ்பற்றி அதாவது உயிர்களின் உருவக்கம்பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறதென்பதை சிறிது கவனித்துவிட்டு ”ரூஹுல் குத்தூஸ்”  எனப்படும் பரிசுத்த உயிரிடம் திரும்பலாம்.

குர்ஆன் 38:72
அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' 

குர்ஆன் 15:29
"அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)

களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின், உடலுக்குள் அல்லாஹ் தனது உயிரை ஊதினானாம்.

அல்லாஹ்வின் உயிர் என்பதைப்பற்றி அண்ணன் பீஜே தரும் விளக்கத்தை “அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!” என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம் அதில் அண்ணன் பீஜே இவ்வாறு கூறுகிறார்.

இறைவனின் உயிர் என்று ஈஸாநபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூறமுடியாது. ஏனெனில் 'இறைவனின் உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்' என்று பொருள் இல்லை.

இதன் பொருள் என்னவென்றால், அல்லாஹ்விடமிருக்கும் நிறைய, எண்ணற்ற உயிர்களிலிருந்து ஆதாமிற்கான உயிரை அல்லாஹ் தனக்குள் வாங்கிக் கொண்டு, களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின் உடலுக்குள் ஊதி செலுத்தினான் என்பதுதான் அண்ணன் பீஜே இங்கு கூறவிழைவது.

இதன் மூலம் படைப்பைத் துவங்குவதற்கு முன்பே மனிதர்கள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, நுண்ணுயிர்கள், கிருமிகள் என அனைத்து உயிர்களும் விதியுடன் தயார் நிலையில் இருந்திருக்கிறது என்பதை இவர்கள் ஏற்கவேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தல்ல. ஃபழிலத்துஷ் ஷெய்கு அஸ்ஸெய்யிது அப்துல் அஸீஸ் மௌலானா குஷ்ஹாலி தவ்வல்லாஹு ஹயாதஹு (இருங்கள்.. சற்று மூச்சு விட்டுக் கொள்கிறேன். இனி என்னால் முடியாது எனவே இவரது பெயரை மௌலானா அஸீஸ் என்று அழைத்துக் கொள்வோம்) என்பவர் எழுதிய  “தப்ஸீர் ஆயத் அந்நூர்” என்ற நூலின் படங்கள் சிலவற்றைத் தருகிறேன்.


 நமது மௌலாலான அஸீஸ் சொல்வது அவரது தனிப்பட்டகருத்தல்ல. இதை அண்ணன் பீஜேவும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?
ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவரைத் தான் அல்லாஹ் வெளியேற்றினான். "அனைவரும் வெளியேறுங்கள்!'' என்று ஏன் திருக் குர்ஆனின் 2:38 வசனத்தில் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.
உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். எனவே அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆதமுடைய மக்களின் முதுகுகளி லிருந்து அவர்களின் சந்ததிகளை இறைவன் வெளியாக்கி, "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' என்று கேட்ட செய்தி திருக்குர்ஆன் 7:172 வசனத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆதம் சுமந்திருந்த அனைவரையும் கருத்தில் கொண்டு அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

நம்முடன் விவாதிக்க இஸ்லாமியர்களுக்கு எவ்விதமான வாய்ப்புகளுமில்லை என்பதற்கு விதியைப் பற்றிய இந்த விளக்கமே போதுமானது. இருப்பினும் குர்ஆனின் இதர உளறல்களை இஸ்லாமியர்களும், மற்றவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே நாம் மற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கிறோம். எனவே விதியைப்பற்றி மேற்கொண்டு நான் இங்கு தொடர விரும்பவில்லை. செத்த பாம்பை எதற்காக அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? நமது கவனத்தை உயிர்களைப்பற்றிய இஸ்லாமின் குழப்பத்திற்கு மீண்டும் செலுத்துவோம்.

குர்ஆன் 17:85
(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!

உயிர்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது என்கிறான் அல்லாஹ். ஆனால் முல்லாக்களோ அடித்து விளாசுகிறார்கள். உயிர்கள் வைக்கப்படும் கூட்டை அதாவது உடலை அல்லாஹ் எவ்வாறு உருவாக்குகிறான் என்பதையும் காணலாம்.

களிமண் தொழில் நுட்பத்தை நீங்கள் அறிவீர்கள் அந்தச் செயல்முறை நிறைய சிக்கல் நிறைந்தது போலும், அதனால் ஆதாமுடன் அந்த தொழில்நுட்பத்தை நிறுத்திய அல்லாஹ், புதிய தொழில் நுட்பத்தை செயல் படுத்துகிறான்.

குர்ஆன் 32:8
பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான்.

குர்ஆன் 32:9
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

குர்ஆன் 75:37
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?

ஆண்-பெண் இணையும் பொழுது, ஆணின் விந்து சத்திலிருந்து ஒரு உயிரற்ற ஜடப் பொருள் அல்லது சதைக்கட்டி மட்டுமே உருவாகிறது. எப்படி உருவாகிறது? அல்லாஹ் உருவாக்குகிறான். அது பெண்ணின் கர்பப்பையில் வைத்து, சீரமைக்கப்படுகிறது; அதன் பிறகு அந்த உடலினுள் உயிர் ஊதப்படுகிறது. இவ்வாறுதான் ஒரு பெண்ணின் கருப்பையில் கரு உருவாகிறது. இதைத் தவிர உயிர்கள் உருவாக்கத்தில் பெண்ணின் பங்கு எதுவுமில்லை என்பதுதான் அல்லாஹ்வின் முடிவு!

புகாரி 318
'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஆனால் குர்ஆனின் இன்னொரு வசனம் வேறொரு செய்தியைக் கூறுகிறது. இது அல்லாஹ்வின் அறிவு அடுத்தகட்ட வளர்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. முன்பு பார்த்த 32:8,9, 75:37 ஆகிய குர்ஆன் வசனங்கள் மெக்கவிலிருந்த பொழுது கூறியவைகள். இது மதீனா வெளியீடு.

குர்ஆன் 76:2
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம்...

அதென்ன கலப்பான விந்துத் துளி?

புகாரி 130
'உம்முஸுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்" என ஸைனப் பின்து உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

இதற்கு மேலும் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆணின் விந்து, பெண்ணின் கர்பப்பையிள் சென்று தங்கிவிடுகிறது; அதன் பிறகு ஒரு வானவர் வந்து அமர்ந்து கொண்டு அல்லாவிற்கு நேரடி ஒலிபரப்பைத் துவங்குகிறார். என்னே அறிவியல்... என்னே அறிவியல்... எனக்கு ஒரே புல்லரிப்பாக இருக்கிறது, கொஞ்சம் பொருத்திருங்கள்.... சாம்பலைத் தேய்த்துவிட்டு வந்துவிடுகிறேன்..!

தொடரும்


தஜ்ஜால்.

Facebook Comments

15 கருத்துரைகள்:

தஜ்ஜால் said...

வணக்கம் நண்பர்களே!

அலுவலகப் வேலைப் பளுவின் காரணமாக உடனடியாக தொடரை எழுத முடியவில்லை. இதன் அடுத்தடுத்த பகுதிகளை விரைவில் எழுதிவெளிட முயற்சிக்கிறேன்.

நாட்டு வேங்கை said...

##அது பெண்ணின் கர்பப்பையில் வைத்து, சீரமைக்கப்படுகிறது; அதன் பிறகு அந்த உடலினுள் உயிர் ஊதப்படுகிறது. இவ்வாறுதான் ஒரு பெண்ணின் கருப்பையில் கரு உருவாகிறது. ##

இதிலிருந்து விந்தணுக்கு உயிரில்லை என்ற அல்லாவின் அறிவியலையும் புரிந்துகொள்ளலாம்.

சுப்ஹானல்லா... அல்ஹம்துலில்லா... அல்லாஹூ அக்கபோர்....

நாட்டு வேங்கை said...

பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்"

ஆஹா...
அடுத்து பெண்ணிற்கும் விந்து வெளியேறுகிறது என்ற அறிவீயலையும் முகம்மது அறிவித்து இந்த உலக மக்களை அறிவுடையவர்களாக்கியதற்கும்

சுப்ஹானல்லா... அல்ஹம்துலில்லா... அல்லாஹூ அக்கபோர்....

சிந்திக்கமாட்டார்களா said...

அருமை
இஸ்லாத்தில் உள்ள அறிவியல் ??உண்மைகளை மூமின்களுக்கு உணர்த்தியதற்கு
இனியென்ன இஸ்லாம் இன்னும் வேகமாக
பரவும்

Ant said...

//குர்ஆன் 32:8
பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான்.
குர்ஆன் 32:9
பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். ..// அப்ப அனைவருமே அல்லாவின் வாரிசுகள் தான்! வேடிக்ககை என்னவென்றால், ஈஸாவை அல்லா ஏஜென்டுதான் ஊதி உருவாக்கினார் அல்லா அல்ல!

ஆனந்த் சாகர் said...

//இதிலிருந்து விந்தணுக்கு உயிரில்லை என்ற அல்லாவின் அறிவியலையும் புரிந்துகொள்ளலாம்.//

ஆணின் விந்துவில் உயிரணுக்கள் இருக்கின்றன எனபது முகம்மதுவுக்கு தெரியாது. எனவே விந்து திரவத்திற்கு உயிரில்லை என்று அவர் நினைத்தார். அதுவே குரான் வசனமாக வெளி வந்தது. அதே அவர் காலத்தில் நுண்ணோக்கி இருந்து அதன் மூலம் விந்து திரவத்தில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கின்றன என்பது மனிதர்களுக்கு தெரிந்து இருந்தால், முகம்மதுவும் அதற்கேற்றமாதிரி ஒரு வசனத்தை இறக்கிவிட்டு போயிருப்பார். அவர் என்ன வெச்சுகிட்டா ஓரவஞ்சனை செய்தார்?

இது இப்படி இருக்க, விந்து ஒரு ஜடப்பொருள். அதற்கு உய்ரில்லை என்பதை அறிவியலும் கூறுகிறது என்று முஸ்லிம்கள் குரான் அறிவியல் பேசமாட்டார்களா என்ன? இந்த குரான் அறிவியலைத்தானே அவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். குரான் அறிவியலை கரைத்து குடித்த சுவனப்பிரியன் போன்றவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.

Ngama Rgazi said...

புனித புத்தகங்களில் வரும் செய்திகளும் உரையாடல்களும் ஒரே 'SEXY' ஆக இருக்கிறதே! இக்காலத்தில் பொது இடங்களில் இவையெல்லாம் பேசத்தயங்குவோம். இங்கே புனிதமானவர்கள் எல்லாம் பாலியல் நுணுக்கங்களை எவ்வித கூச்சமும் இன்றி அலசி ஆராய்கிறார்கள். அப்படியானால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அராபியச் சமுதாயத்தின் கலாச்சாரமும் இவ்வாறுதான் இருந்திருக்குமோ? இதைத்தான் நாமெல்லாம் தெய்வீகமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

Ngama Rgazi said...

புனித புத்தகங்களில் வரும் செய்திகளும் உரையாடல்களும் ஒரே 'SEXY' ஆக இருக்கிறதே! இக்காலத்தில் பொது இடங்களில் இவையெல்லாம் பேசத்தயங்குவோம். இங்கே புனிதமானவர்கள் எல்லாம் பாலியல் நுணுக்கங்களை எவ்வித கூச்சமும் இன்றி அலசி ஆராய்கிறார்கள். அப்படியானால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அராபியச் சமுதாயத்தின் கலாச்சாரமும் இவ்வாறுதான் இருந்திருக்குமோ? இதைத்தான் நாமெல்லாம் தெய்வீகமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

தஜ்ஜால் said...

வாருங்கள் நாட்டு வேங்கை,

//அடுத்து பெண்ணிற்கும் விந்து வெளியேறுகிறது என்ற அறிவீயலையும் முகம்மது அறிவித்து இந்த உலக மக்களை அறிவுடையவர்களாக்கியதற்கும்//

இதுபோன்று குர்ஆன மற்றும் ஹதீஸ்களிலுள்ள மடத்தனம் வெளிப்படையாக தெரியுமிடங்களில் வேண்டுமென்றே அறிவியலைப் புகுத்தி மக்களஒ ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

தஜ்ஜால் said...

வாருங்கள் mohamed sadiq,

//இஸ்லாத்தில் உள்ள அறிவியல் ??உண்மைகளை மூமின்களுக்கு உணர்த்தியதற்கு
இனியென்ன இஸ்லாம் இன்னும் வேகமாக
பரவும்// ஆமாம்... அதற்குத்தானே நாம்மைப் போன்றவர்கள் இருக்கின்றனர்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

//அப்ப அனைவருமே அல்லாவின் வாரிசுகள் தான்! வேடிக்ககை என்னவென்றால், ஈஸாவை அல்லா ஏஜென்டுதான் ஊதி உருவாக்கினார் அல்லா அல்ல!//

இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி, அல்லாஹ்விடமிருந்துதான் அனைத்துமே உருவாகியிருக்கிறது. நாயும் பன்றியும் கூட அல்லாஹ்வின் வாரிசு என்ற உரிமையைக் கோருவதற்குத் தகுதி படைத்தவைகளதாம்!

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

//ஆணின் விந்துவில் உயிரணுக்கள் இருக்கின்றன எனபது முகம்மதுவுக்கு தெரியாது. எனவே விந்து திரவத்திற்கு உயிரில்லை என்று அவர் நினைத்தார்...// முஹம்மது என்ன நினைப்பாரோ அதைமட்டுமே அல்லாஹ்வும் நினைப்பான்; பாவம் அவனால் அதற்குமேல் வேறொன்றும் செய்ய முடியாது.

//இது இப்படி இருக்க, விந்து ஒரு ஜடப்பொருள். அதற்கு உய்ரில்லை என்பதை அறிவியலும் கூறுகிறது என்று முஸ்லிம்கள் குரான் அறிவியல் பேசமாட்டார்களா என்ன? // நிச்சயமாகப் அவர்கள் அப்படித்தான் பேசவேண்டும். அது முஹம்மது நபியின் வழிமுறையாகும். முஹம்மது முந்தின வேதங்கள் திருத்தப்பட்டது, தவறு என்று தனது மனம் போன போக்கில் உளறிக் கொண்டிருந்தார். இவர்கள் அறிவியலைத் திரித்து மக்களை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தஜ்ஜால் said...


வாருங்கள் Ngama Rgazi,

//...அப்படியானால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அராபியச் சமுதாயத்தின் கலாச்சாரமும் இவ்வாறுதான் இருந்திருக்குமோ? இதைத்தான் நாமெல்லாம் தெய்வீகமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா?//

நிச்சயமாக இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் முஹம்மது செய்தவைகள் அனைத்தும் தெய்வீகமே!

முஹம்மது எவ்வாறு முகம், கைகள், கால்களைக் கழுவிக் கொண்டார், எவ்வாறு தொழுகை நடத்தினார், எவ்வாறு பல் துலக்கினார், மூக்கு, காதுகளை எப்படி குடைந்து சுத்தம் செய்தார் என்றும், அவர் ஆடை அணிந்த விதம், ஆடையின் வடிவம், நிறம், தைக்க உபயேகித்த நூல் எது? என்றும், அவர் எந்தெந்த உணவுகளை சப்பிட்டார், எந்தெந்த விரல்களை சப்புகொட்டி உறிஞ்சி நக்கினார், அவருக்குப்பிடித்த உணவு எது? எவ்வாறு தூங்கினார், எந்தப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தார், அவர் தலைமுடி, தாடி மற்றும் மீசையின் அளவுகள் என்ன? அவர் தன் நகங்களை எந்தமுறையில் நறுக்கிக் கொண்டார்? எந்த விரல் நகத்தை முதலில் நறுக்கினார்? எப்படி சொறிந்து கொண்டார்? எத்தனைமுறை சொறிந்து கொண்டார்?

அவர் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செய்த செயல் முறைகள் யாவை? அதை எவ்வாறு செய்தார்? கழிப்பறையில் எந்த காலை முதலில் வைத்தார்? சிறுநீர் எவ்வாறு கழித்தார்? நின்று கொண்டா அல்லது அமர்ந்து கொண்டா கழித்தார்? எந்த கையால் உறுப்பைப் பிடித்து சிறுநீர் பீச்சினார்? மலம் கழிக்கையில்அவர் முகம் எந்த திசையை நோக்கியிருந்தது? அவ்வாறு மலம் கழிக்கையில் எந்த காலின் மீது தன் முழுஉடல் பாரத்தை வைத்திருந்தார்? எந்த கையால் தன் பிட்டத்தை எப்படி கழுவிக் கொண்டார்?

இவையனைத்துமே முஸ்லீம்களுக்குப் புனிதமானவைகள் மறுமையின் வெற்றிக்கும் உரியவைகள். இவைகள் தங்களின் இயல்புக்குப் பொருந்தவில்லையென்றாலும், இவைகளை உயிராக கருதி பின்பற்றியே வாழ்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர்.

yasir said...

அல்லாவின்(முகம்மது)அறிவியல் புல்லரிக்க வைக்கிறது....

Anonymous said...

Ngama Rgazi அவர்களே-
//.புனித புத்தகங்களில் வரும் செய்திகளும் உரையாடல்களும் ஒரே 'SEXY' ஆக இருக்கிறதே! இக்காலத்தில் பொது இடங்களில் இவையெல்லாம் பேசத்தயங்குவோம். இங்கே புனிதமானவர்கள் எல்லாம் பாலியல் நுணுக்கங்களை எவ்வித கூச்சமும் இன்றி அலசி ஆராய்கிறார்கள். அப்படியானால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அராபியச் சமுதாயத்தின் கலாச்சாரமும் இவ்வாறுதான் இருந்திருக்குமோ? //.
1400 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமல்ல அதற்குப்பின்னரும் அப்படித்தான் இருந்துள்ளது என்பதற்கு சரியான சான்று 1001 இரவுகள் சொல்லிய அரபுக் கதைகளாகும். இலக்கியங்களே காலத்தின் கண்ணாடிகள் ஆதலால் இதனை இங்கே கூறவேண்டியுன்னது. நமது தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகள் பூசிமெழுகப்பட்டவை. அவைகளைப் பார்க்க வேண்டாம். அரபு மூலத்திலோ அல்லது பர்ட்டன் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையோ படித்துப்பாருங்கள். இது பத்து தொகுதிகளுடன், இணைப்புத் தொகுதிகள் ஆறும் கொண்ட 16 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. அவைகளைப் படித்தாலே போதும். அன்றைய அரேபிய - இஸ்லாமிய கலாச்சார வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்.
- லூசிஃபர்