Thursday, 15 December 2011

குர்ஆன் ஒளியில் அணுஉலையும் பிஜேவும்

      குர்ஆன் எக்காலத்திற்கும் பொருத்தமானது என்று சொன்னால் பலரும் மறுக்கின்ன்றனர். அணு உலைப்பற்றி எல்லாம் குர்ஆன் என்ன சொலும் என்றும் விதன்டாவாத கேள்விகள் கேட்கின்றனர். குரான் சொல்லும் பதிலை பிஜே சொல்லுவதை படியுங்கள்.


உணர்வு பத்திரிகையின் குரல் : 13-ல் (நவ 29-டிச 01. 2011 ) பதில்கள் பகுதியில் "அண்ணன்” பி. ஜெயினுல் ஆபிதீன் "கடந்த கால அணு உலை விபத்துக்களின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, இஸ்லாத்தின் பார்வையில். இன்றைய சூழ்நிலையில் அணு உலைகள் அவசியமா?” என்ற கேள்விக்கு "அவசியம்’ என்று பதில் அளித்துள்ளார்.


“நன்மைகளும் தீமைகளும் கலந்துள்ள எந்த ஒரு காரியத்திலும் தீkrமைகளைவிட நன்மை அதிகம் இருந்தால் அதை இஸ்லாம் அனுமதிக்கிறது. மது பானம் பற்றி அல்லா கூறும்போது அதில் நன்மையும் தீமையும் உள்ளது. ஆனால் நன்மையைவிட தீமை அதிகம் என்று கூறி அதை தடை செய்கிறான். அணு உலையில் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது. அணு உலைகளின் துவக்க காலத்தில் கவனிக்கப்படாத பல விஷயங்கள் விபத்துகளின் போது கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. அதனால் பழைய அணு உலைகளைவிட பல 100 மடங்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தான் கூடங்குளத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளதாக கூறுகின்றனர்.  ஆதனால், இப்போதைய மேம்படுத்தப்பட்ட ஆணு உலைகளில் தீமையைவிட அதிக நன்மைகள் இருப்பதாகவே நாம் கருதுகிறோம்.  ஆனால் மக்கள் இதை புரிந்துகொள்ளும் வரை தள்ளிப்போடுவதில் நமக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறியுள்ளார்,
      மேலும். அவர். "உலகெங்கும் நிலக்கரி குறைந்து வரும் வேளையில், மின்சார பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கும். தொழில் வளம் குறையும். வேலைவாய்ப்புகள் பறிபோகும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பலவிதமான இழப்புகள் ஏற்படும். இதனை தடுக்க தங்கு தடையில்லாத மின்சாரம் வேண்டும்.  அதனால் அணு மின்சாரம் அவசியம்” என்றும் கூறியுள்ளார்.


      அணு மின்சாரம் பாதுகாப்பானது அல்ல. மலிவானது அல்ல என்பதையும், இந்த விஷயத்தில் ‘அறிவியல் மாமேதை’ அப்துல் கலாமும் பொய் சொல்கிறார் என்பதையும் ஏற்கனவே விரிவாக பலரும் எழுதியுள்ளனர்.


      ஆனால். கூடங்குளம் அணு உலை "பாதுகாப்பானது தான்” இதில் தீமையைவிட "நன்மையே அதிகம்” என்று நேரடியாக சொல்ல தைரியம் இல்லாத "மார்க்க மாமேதை" பிஜே, "பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். "தீமையைவிட நன்மையே அதிகம் என்று நம்புகிறோம்” என்றெல்லாம் பசப்பி, இஸ்லாத்தின் சாராய (மது) உதாரணத்தை எல்லாம் சொல்லி சமானிய மக்களை ஏமாற்றுகிறார்.

அது என்ன நன்மை அதிகம், தீமை குறைவு? அணு உலையைச் சுற்றி சில இலட்சம் மக்கள்தான் வசிக்கிறார்கள். கதிர்வீச்சு, விபத்து என்று எதுவானாலும் அந்த சில இலட்சம் மக்களுக்கு மட்டுத்தான் தீமை விளையும். ஆனால் அணு உலையில் கிடைக்கும் மின்சாரம் பல இலட்ச மக்களுக்கு அதிக நனமையை தருவதால் அந்த சில இலட்ச மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று இவர் கூறுகிறாரா? அல்லது குர்ஆன் கூறுகிறதா?

இண்டர்நெட். பேஸ்புக். வெப் டிவி போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் எல்லாம் அண்ணனுக்கு ஆலோசனை சொல்லும் டெக்னிக்கல் தம்பிகளே! அணு உலையின் ஆபத்துக்களையும், மின்சாரத்துக்கான மாற்றுவழிகளையும் கொஞ்சம் உங்கள் அண்ணனுக்கு சொல்லுங்கப்பா.

            மேலும். உங்கள் "அண்ணனின் பதிலில் உள்ள "உற்பத்தி பாதிக்கும், தொழில் வளம் பாதிக்கும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற வார்த்தைகள் எல்லாம் அவர் ஓரு தேர்ந்த கார்ப்ரேட் முதலாளி என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. அதனால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது, ஏனெனில் அண்ணன் உங்களுக்கு போதிப்பது மார்க்கமா? கார்ப்பரேட்தனமா? என்பதை தெளிவாக தெரிந்துக் கொண்டு அவரின் வழியை பின்பற்றுங்கள். ஏமாந்தால் உங்களையும் ஏகாதிபத்திய முதலாளிகளிடம் அடகுவைத்துவிடுவார்.
**************

      அணு உலைகள் வேண்டாம் என்று - இந்திய அரசாங்கம், இந்திய அணு சக்தி கழகம், மன்மோகன், நாராயணசாமி, ஸ்ரீகுமார் பானர்ஜி, காசிநாத் பாலாஜி, அப்துல் கலாம் என்று மாபெரும் ஆதிக்க. ஆளும் சக்திகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நாங்கள், பி,ஜே, போன்ற மார்க்க மாமேதைகளையும் எதிர்க்கொள்ள வேண்டிய அபத்தம் ஏற்படுகிறது.

      ஸ்,,,ஸ்,,, முடியலப்பா! தயவு செய்து. அண்ணனின் குழப்படிகளை மார்க்க விஷயத்தோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, அவருக்கு அந்நியமான அறிவியல் விஷயங்களில் எல்லாம் தலையிடாமல் இருக்கச் சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்.

அர்ஷத்.

Sunday, 11 December 2011

மர்ம இரவு.


மர்ம இரவு...!
”ஆரம்பத்தை நோக்கி”  என்ற தொடரில் “மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்” என்ற தலைப்பில் சில குர் ஆன் வசனங்களையும் அதன் பின்னணியிலுள்ள ஹதீஸ்களையும் அவற்றிலுள்ள முரண்பாடுகளையும் பார்த்தோம் மீண்டும் அதே வசனங்களை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
குர்ஆன் வசனம் 24:11 நிச்சயமாக எவர்கள் (நபியின் மனைவியான ஆயிஷா மீது) அவதூறைக் கொண்டுவந்தார்களோ அவர்களும் உங்களில் ஒருகூட்டத்தினர்தாம்; அ(வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம். எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்; (அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டு; அவர்களிலிருந்து எவன் இதனுடைய பெரும் பங்கை சுமந்து கொண்டானோ அவனுக்கு மகத்தான வேதனை உண்டு.
குர்ஆன் வசனம் 24: 12 இதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தங்களுடைய மனங்களில் நல்லதையே எண்ணி, இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?
குர்ஆன் வசனம் 24: 13 இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.
குர்ஆன் வசனம் 24: 16  அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?
கீழே உள்ள ஹதீஸ் சற்று பெரியதுதான், எனவே நமது தலைப்பிற்குத் தேவையானவற்றை மட்டும் பார்ப்போம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். ....
நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாஙகள் மதீனாவை நெருஙகிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தஙகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்;...
படையினர் சென்ற பிறகு நான் (தெலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு நான் அவர்கள் தஙகியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அஙகு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தஙகியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அஙகு அமர்ந்து கொண்டேன். படையினர் நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூஙகி விட்டேன்….
ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார்....
அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாஙகள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தஙகி விட்டிருந்தார்கள்…
(புகாரி 2661)
மேற்கண்ட குர் ஆன் வசனத்தின் பின்னணி இதுதான். அதாவது இயற்கைத் தேவைகளுக்காக படையினர் முகாமிட்டிருந்த இடத்தைவிட்டு சற்று தொலைவிற்கு சென்றவர் (இரவலாக வாங்கி அணிந்திருந்த) கழுத்தணி தவறிவிட்டதை உணர்ந்து தேடும் முயற்சியில் கடுமையாக ஈடுபடுகிறார். இந்த விவகாரத்தை முஹம்மது உட்பட மற்றெவரும் அறிந்திராத காரணத்தால், ஆயிஷா படையினரைத் தவறவிடுகிறார். பின் அங்கேயே உறங்கியும் விடுகிறார். அங்குவரும் ஸஃப்வான், ஆயிஷாவின் நிலைமையை உணர்ந்து தன்னுடன் அழைத்துக் கொண்டு மற்ற படையினருடன் இணைத்து விடுகிறார். அதற்குள் ஆயிஷா-ஸஃப்வான் தனிமை சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு ‘கிசுகிசு’ பரவிவிடுகிறது.
இந்த விவகாரம் முஹம்மதின் கோட்டைக்குள் குத்து-வெட்டு உருவாகுமளவிற்கு பூதாகரமாகிறது. எப்பொழுதும் முஹம்மதின் அங்கிப்பையிலிருந்து உடனுக்குடன் வெளியாகும் குர்ஆன் வசனங்கள் இம்முறை வேலைநிறுத்தம் செய்துவிட்டது. ஒரு மாதகாலத்திற்குப் பிறகு ஆயிஷா குற்றமற்றவர் என அல்லாஹ்வால் அறிவிவிக்கப்பட்டது என்கிறார் ஆயிஷா. இந்த வாகுமூலம் எந்த அளவிற்கு உண்மை?
இஸ்லாமில் தயமும் என்றொரு சடங்கு உள்ளதை அறிவீர்கள். (தெரியாதவர்களுக்காக: உடலைத் தூய்மைப்படுத்த தண்ணீர் கிடைக்காத காலங்களில் மண், மணல், கல், சுண்ணாம்பு சுவர் கொண்டு முகம் கை, கால்களில் தேய்த்துக் கொள்வதை தயமும் என்பர்கள்) குர் ஆனும் இதை அனுமதிக்கிறது. இவ்வனுமதி எப்படி வந்தது? இன்னும் சில ஹதீஸ்களை காணலாம்.
...தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!
(குர் ஆன் 5:06)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையே) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்த) எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.
அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதை எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலை வைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும் படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். ....
                                                                     (முஸ்லீம்)
    தற்சமயம், தயமும் என்ற மடத்தனம் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குத் தேவையில்லாதது. எனவே மற்ற ஹதீஸ்களை கவனிப்போம். கழுத்தணியை தேடுமாறு சிலரிடம் முஹம்மது கூறுகிறார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரி) அஸ்மாவிடம் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) தொலைந்துபோய்விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (உளூச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் தயம்மும் தொடர்பான (5:6ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
இதையடுத்து (என்னிடம்) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு சுபிட்சத்தை முஸ்லிம் களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்.
(முஸ்லீம்)
ஒட்டகத்தை கிளப்பியபொழுது அதன் அடியில் கழுத்தணி இருந்தது.
......
-(இது குறித்து) அல்அகபா உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரான- உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)து, முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.
(முஸ்லீம்)
முதலில் பார்த்த ஹதீஸ், படை முகாமிட்ட இடத்தில் கழுத்தணி தொலைந்ததாகக் கூறியது. அடுத்தது, கழுத்தணி தொலைந்தாலேயே முஹம்மதின் படையினர் முகாமிட நேர்ந்ததாகக் கூறுகிறது. படைவீரர்கள், தங்களை தண்ணீரில்லாத இடத்தில் முகாமிட வைத்துவிட்டதாக ஆயிஷாவைக் குறைகூறுவதை ஏற்றுக்கொண்டு தண்டிக்க ஆயிஷாவின் தந்தை அபூபக்கரும் இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக, அதிகாலை வரை தனது மடியில் முஹம்மது தலைவைத்துப் படுத்திருந்ததால் தன்னால் அசையக்கூட முடியவில்லை என்றும் கூறுகிறார் ஆயிஷா.
நிலைமை இப்படியிருக்க, இயற்கைத் தேவைகளுக்காக சென்றபொழுது கழுத்தணி தொலைந்தது, அதைத் தேடும் முயற்சியிலிருந்த பொழுது மற்றவர்கள் தன்னை விட்டுவிட்டுச் சென்றதாக ஒப்பாரி வைத்து பெரியதொரு கதையைக் கூறியது எதற்காக? மற்றவர்கள் அவதூறு கூறிவிட்டனர் என்று அல்லாஹ்வும்(!) வருத்தப்பட காரணமான, ஆயிஷா-ஸஃப்வான் தனிமைச் சந்திப்பு நிகழ்ந்தது எப்பொழுது?
கழுத்தணி தொலைக்கப்பட்டதை, முஹம்மது, அபூபக்ர் உட்பட படையினர் அனைவருமே மிக நன்றாகவே அறிவர். ஏனெனில் அனைவரும் புழுதியில் புரண்டுள்ளனர். இதற்கு காரணமான ஆயிஷாவின் நினைவு எள்ளவுமின்றி, இவர்கள் (முஹம்மது, அபூபக்ர், படையினர்) மறுநாள் மதியம்வரை கடத்தியதெப்படி?
உதாரணத்திற்கு, ஒருவர் தனது துணைவியுடன் செல்கிறார். பயணத்தின் பொழுது தன்னுடன் வந்த துணைவி என்ன ஆனார் என்பதை கவனிக்கமாட்டாரா? முஹம்மது அந்த அளவிற்கு பொறுப்பற்ற ஒரு மனிதர் என்பதையே இந்த ஹதீஸ் காண்பிக்கிறது.
அதிகாலை வரை முஹம்மது ஆயிஷாவுடனேயே இருக்கிறார், பிறகு ஆயிஷாவின் ஒட்டகத்தை கிளப்பும் பொழுது அதனடியில் கழுத்தணி கண்டெடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி ஆயிஷா முஹம்மதையும் அவரது படையினரையும் தவறவிட முடியும்? ஸஃப்வானை தனிமையில் சந்திக்க முடியும்?
இவைகள் எதுவும் நான் இட்டுக்கட்டி கூறியவைகளால்ல!. ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளவைகளை ஒருங்கிணைத்துக் காண்பிக்கிறேன் என்பதைத் தவிர வேறில்லை.

ஆயிஷா-ஸஃப்வான் சந்திப்பு நிகழ்ந்த்து எப்பொழுது?

குர் ஆன் 24:11-16 வரையுள்ள வசனத்தின் தேவையென்ன?

அந்த மர்ம இரவின் இருளில் புதைந்துள்ளது என்ன?...!

தஜ்ஜால்

பின்குறிப்பு :
திருமணம், திருவிழா இன்னும் இதர பொதுநிகழ்வுகளில் இரவல் பொருட்களிக் கொண்டு வெளிப்பகட்டுகளிக் காண்பிப்பவர்களை அன்றாடம் நாம் காணலாம். போர்க்களத்திற்கு செல்லும் பொழுது பகட்டு எதற்கு? ஒருவேளை, இவர்கள் போர்க்களத்தை பொழுதுபோக்க ”SHOPPING“ செய்யும் வியாபாரச் சந்தையாக நினைத்து விட்டனரோ?.

Tuesday, 29 November 2011

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 4


தொடர் -4
சர்வ வல்லமையுடைய இறைவனால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர், இறைச்செய்தியை மக்களிடையே கூறவந்தவர், இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தவர் சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களால் அற்பமான இன்பங்களை நாடிச் செல்ல மாட்டார்கள் என்றும், அவர்கள் உணர்ந்து கொண்ட பேரின்பத்தின் முன் இந்த உலகமும் அதன் இன்பங்களும் அற்பமானவைகளே என்றும் நினைத்துக் கொண்டேன்

நிலையற்ற இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி நிலையான மறுஉலகவாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்பதே முஹம்மது நபி உலக மக்களுக்கு  அச்சமூட்டி கூறிய உபதேசங்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் உடல் தேவைகளுக்கானது அல்ல.  இது நிச்சயமாக, ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க செய்து கொண்ட திருமணங்கள்தான் என்பதை குழப்பமடைந்த எனது மனதிற்கு உணர்த்த  விரும்பினேன்.

நபி (ஸல்) அவர்களின்   மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லை.  எனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.

"The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food."இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.

வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு - அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)

"பெண்களை மிகவும் பிடிக்கும்" என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?

நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?

என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.
Ibn Sad's  “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.
…The apostle of Allah said, "Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men."

(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)

ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்) அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக "வயாக்கரா"வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.

அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம்  என்ன?

எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.

அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்?  நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ, தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை.  அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே  நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது. மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன்  நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.

எனவே நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையையும், பாலியல் பலத்தையும்  ஹதீஸ்களின் வழியாக எட்டிப்பார்த்தேன். முஹம்மது நபியின் மனைவியர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டவைகளில் சிலரைப்பற்றிய சுருக்கமான செய்திகள்.
முஹம்மது  நபியின் மனைவியர்கள்  பற்றிய செய்திகள்

1. கதீஜா

நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும்  உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்று ஃபாத்திமா (ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள்  (பாகம்-1) என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவி S.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரி என்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா  அவர்களது  உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்)  மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்)  இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி,  “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து  வைத்தீர்களே  தெரியவில்லையா?” என்றார்.
"நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். மெக்காவிலேயே சிறந்த ஆண்கள் இருக்கையில், வேறொருவருக்கு மணம் முடித்து வைக்க என்னால் முடியாது. என் அருமை மகளை முஹம்மதுவைப் போன்ற ஊர்சுற்றி, வெறும் பயலுக்கு எப்படி மணம் செய்து வைத்திருக்க முடியும்?” என்றார்.
முஹம்மதின் பெரிய தகப்பன்மார்கள் கோபமடைந்து, இந்த  உறவை ஏற்படுத்தியதே உங்கள் மகள் கதீஜாதான் என்றனர். கதீஜாவின் தந்தை வாளை உறுவினார். இருதரப்பும் சண்டைக்குத் தயாரானார்கள் . நிலைமை வீபரீதமாவதை உணர்ந்த கதீஜா நடந்தவைகளைக் கூறி தன்னுடைய திட்டத்தை ஒப்புக் கொண்டவுடன், அவரது தப்பனாரால் எதுவும் பேச முடியாமல் போனது. பின், இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின. (Persian Tabari, Volume-3, Page 832)
 இவர்களின் திருமணம் கிபி 595 ல் நிகழ்ந்தது. கதீஜா அம்மையாரின் பெரும் செல்வமும் முஹம்மது நபியின் நிர்வாகத்தின் கீழ்வந்தது. கதீஜா அம்மையாரின் வயது ஏறக்குறைய நபி (ஸல்) அவர்களின் தாய்க்கு சமமான வயது.  இவர்களுக்கு காசிம், தைய்யிப், தாஹிர் என்ற ஆண்  குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்மு குல்தும் மற்றும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தைகளும் இருந்தனர், ஆண் மக்கள்  குழந்தைப் பருவத்திலேயே  இறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.  பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்.   கதீஜா அவர்களுடனான திருமண வாழ்க்கையில்  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தனிமையை நாடி ஹீரா குகையில் இருப்பதையே விரும்பினார்.
குடும்பத்தையும்,  கதீஜா அவர்கள் திறம்பட நிர்வகித்து வந்த வியாபாரத்தையும் முஹம்மது நபி (ஸல்) சரியாக கவனிக்கவில்லை. அவர் தனது குடும்பத்திற்காக எவ்விதமான வியாபாரத்திலோ அல்லது  தொழிலிலும் ஈடுபடவில்லை. குழந்தைகளையும், பொறுப்பின்றி இருக்கும் கணவனையும் வியாபாரத்தையும் ஒருசேர கதீஜாவால் கவனிக்க முடியவில்லை. இதன் காரணத்தால் கதீஜாவின் வியாபரம் நொடிந்து, சுமார் 36,800கோடி ரூபாய் மதிப்புடைய செல்வங்கள் அனைத்தும் கரைந்து குடும்பம் தரித்திர நிலையைடைந்தது. இவ்வளவு செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்தது முஹம்மது நபியின் மகத்தான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இறுதிக் காலத்தில் அணிவதற்குக் கூட நல்ல ஆடைகளின்றி, மிகவும் வறுமையில் வாழ‍ந்தாகவும் ஹதீஸ்கள் கூறுகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 264,000 கோடி ருபாய்களை  இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பதிமுன்று ஆண்டுகள் பிரச்சாரத்தில், 264,000 கோடி  செலவு செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் என்பதிற்கும் குறைவான அவர்களையே இஸ்லாமில் இணைக்க முடிந்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்திருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். அன்றைய மெக்கா நகரத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருந்ததாகக் கொண்டாலும் முஹம்மது நபி தனது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 264 கோடி ரூபாய்களை செலவு செய்ததாகவே பொருள் தருகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது இன்றைய காலத்திலும் மிகப்பெரிய செல்வம்தான் அப்படியானால், ஆயிரக் கணக்கானவர்கள் மிகப்பெரும் செல்வத்தில் திளைத்திருக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் நிறைந்த நகரமாக மெக்கா மாறியிருக்க வேண்டுமே? இப்படியொரு மாற்றம் நிகழ்ந்ததா? உங்களால் இந்தச் செய்தியை நம்பமுடிகிறதா?
 கதீஜா கிபி 619 அல்லது 623-ல் மரணமடைந்தார் குறிப்பிடப்படுகிறது. கதீஜா அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள்  தனிமையில் வாழ்ந்தார்.HYPERLINK  \l "Safiya"
நபி (ஸல்) அவர்களுக்கு, நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் பலம் கதீஜா அம்மையாரின் மரணத்திற்கு பிறகே வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால், கதீஜா  அவர்கள் உயிருடன் இருந்தவரை வேறு எந்த பெண்ணையும் அவர் நாடிச் சென்றதாக ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.