குர்ஆன் எக்காலத்திற்கும் பொருத்தமானது என்று சொன்னால் பலரும் மறுக்கின்ன்றனர். அணு உலைப்பற்றி எல்லாம் குர்ஆன் என்ன சொலும் என்றும் விதன்டாவாத கேள்விகள் கேட்கின்றனர். குரான் சொல்லும் பதிலை பிஜே சொல்லுவதை படியுங்கள்.
உணர்வு பத்திரிகையின் குரல் : 13-ல் (நவ 29-டிச 01. 2011 ) பதில்கள் பகுதியில் "அண்ணன்” பி. ஜெயினுல் ஆபிதீன் "கடந்த கால அணு உலை விபத்துக்களின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, இஸ்லாத்தின் பார்வையில். இன்றைய சூழ்நிலையில் அணு உலைகள் அவசியமா?” என்ற கேள்விக்கு "அவசியம்’ என்று பதில் அளித்துள்ளார்.
“நன்மைகளும் தீமைகளும் கலந்துள்ள எந்த ஒரு காரியத்திலும் தீkrமைகளைவிட நன்மை அதிகம் இருந்தால் அதை இஸ்லாம் அனுமதிக்கிறது. மது பானம் பற்றி அல்லா கூறும்போது அதில் நன்மையும் தீமையும் உள்ளது. ஆனால் நன்மையைவிட தீமை அதிகம் என்று கூறி அதை தடை செய்கிறான். அணு உலையில் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது. அணு உலைகளின் துவக்க காலத்தில் கவனிக்கப்படாத பல விஷயங்கள் விபத்துகளின் போது கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. அதனால் பழைய அணு உலைகளைவிட பல 100 மடங்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தான் கூடங்குளத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆதனால், இப்போதைய மேம்படுத்தப்பட்ட ஆணு உலைகளில் தீமையைவிட அதிக நன்மைகள் இருப்பதாகவே நாம் கருதுகிறோம். ஆனால் மக்கள் இதை புரிந்துகொள்ளும் வரை தள்ளிப்போடுவதில் நமக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறியுள்ளார்,
மேலும். அவர். "உலகெங்கும் நிலக்கரி குறைந்து வரும் வேளையில், மின்சார பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கும். தொழில் வளம் குறையும். வேலைவாய்ப்புகள் பறிபோகும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பலவிதமான இழப்புகள் ஏற்படும். இதனை தடுக்க தங்கு தடையில்லாத மின்சாரம் வேண்டும். அதனால் அணு மின்சாரம் அவசியம்” என்றும் கூறியுள்ளார்.
அணு மின்சாரம் பாதுகாப்பானது அல்ல. மலிவானது அல்ல என்பதையும், இந்த விஷயத்தில் ‘அறிவியல் மாமேதை’ அப்துல் கலாமும் பொய் சொல்கிறார் என்பதையும் ஏற்கனவே விரிவாக பலரும் எழுதியுள்ளனர்.
ஆனால். கூடங்குளம் அணு உலை "பாதுகாப்பானது தான்” இதில் தீமையைவிட "நன்மையே அதிகம்” என்று நேரடியாக சொல்ல தைரியம் இல்லாத "மார்க்க மாமேதை" பிஜே, "பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். "தீமையைவிட நன்மையே அதிகம் என்று நம்புகிறோம்” என்றெல்லாம் பசப்பி, இஸ்லாத்தின் சாராய (மது) உதாரணத்தை எல்லாம் சொல்லி சமானிய மக்களை ஏமாற்றுகிறார்.
அது என்ன நன்மை அதிகம், தீமை குறைவு? அணு உலையைச் சுற்றி சில இலட்சம் மக்கள்தான் வசிக்கிறார்கள். கதிர்வீச்சு, விபத்து என்று எதுவானாலும் அந்த சில இலட்சம் மக்களுக்கு மட்டுத்தான் தீமை விளையும். ஆனால் அணு உலையில் கிடைக்கும் மின்சாரம் பல இலட்ச மக்களுக்கு அதிக நனமையை தருவதால் அந்த சில இலட்ச மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று இவர் கூறுகிறாரா? அல்லது குர்ஆன் கூறுகிறதா?
இண்டர்நெட். பேஸ்புக். வெப் டிவி போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் எல்லாம் அண்ணனுக்கு ஆலோசனை சொல்லும் டெக்னிக்கல் தம்பிகளே! அணு உலையின் ஆபத்துக்களையும், மின்சாரத்துக்கான மாற்றுவழிகளையும் கொஞ்சம் உங்கள் அண்ணனுக்கு சொல்லுங்கப்பா.
மேலும். உங்கள் "அண்ணனின் பதிலில் உள்ள "உற்பத்தி பாதிக்கும், தொழில் வளம் பாதிக்கும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற வார்த்தைகள் எல்லாம் அவர் ஓரு தேர்ந்த கார்ப்ரேட் முதலாளி என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. அதனால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது, ஏனெனில் அண்ணன் உங்களுக்கு போதிப்பது மார்க்கமா? கார்ப்பரேட்தனமா? என்பதை தெளிவாக தெரிந்துக் கொண்டு அவரின் வழியை பின்பற்றுங்கள். ஏமாந்தால் உங்களையும் ஏகாதிபத்திய முதலாளிகளிடம் அடகுவைத்துவிடுவார்.
**************
அணு உலைகள் வேண்டாம் என்று - இந்திய அரசாங்கம், இந்திய அணு சக்தி கழகம், மன்மோகன், நாராயணசாமி, ஸ்ரீகுமார் பானர்ஜி, காசிநாத் பாலாஜி, அப்துல் கலாம் என்று மாபெரும் ஆதிக்க. ஆளும் சக்திகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நாங்கள், பி,ஜே, போன்ற மார்க்க மாமேதைகளையும் எதிர்க்கொள்ள வேண்டிய அபத்தம் ஏற்படுகிறது.
ஸ்,,,ஸ்,,, முடியலப்பா! தயவு செய்து. அண்ணனின் குழப்படிகளை மார்க்க விஷயத்தோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, அவருக்கு அந்நியமான அறிவியல் விஷயங்களில் எல்லாம் தலையிடாமல் இருக்கச் சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்.
அர்ஷத்.
0 கருத்துரைகள்:
Post a Comment