Wednesday, 7 September 2016

இஸ்லாமிய விவாதம் ஒரு விளக்கம்




இந்தியாவில் இறை நம்பிக்கையாளர்களின் மூட பழக்கவழக்கங்களை அல்லது வாழ்க்கை முறைகளை அவர்கள் பின்பற்றும் சில கலாச்சாரங்களை இறை மறுப்பாளர்கள் நெடுங்காலமாக விமர்சித்து வருகிறார்கள் அவர்களின் அறியாமையை தோலுரித்து வருகிறார்கள்.
இதை இறை நம்பிக்கையாளர்கள் விவாத பொருளாக ஆக்குவதில்லை குறிப்பாக, இந்து, கிருத்துவர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்களும் இதை செய்தது இல்லை. இப்பொழுதும் கூட TNTJ-வினரை தவிர மற்ற முஸ்லிம்கள் விவாத நிலைக்கு தங்களை முன்னெடுப்பது இல்லை. காரணம் "இறை" தத்துவம் என்பது நம்பிக்கை சார்ந்த விடயமாகும். அதில் அறிவு, பொருள் சார்ந்த விடயங்கள் ஏதுமில்லை அதனால் அதை விவாதிப்பதால் மத நம்பிக்கைகளுக்கு எதிராக மாறுமே தவிர வேறொன்றையும் நிகழ்த்திட இயலாது. இஸ்லாமிய புரிதலில் மிக முக்கியமானது "மறைவானவற்றை" நம்புதல் ஆகும். இது இல்லாமல் இஸ்லாமியம் என்பதே இல்லை.
நிலை இப்படியிருக்க ... இந்த மண்ணடி விவாத வித்தகர்கள் எதை முன்னெடுத்து விவாத அழைப்பு தருகிறார்கள்? இதுவரை இவர்கள் நடத்திய விவாதங்களினால் அடைந்த பலன்கள் என்ன? சிடி வியாபாரம் செய்ததையும், அதன் மூலம் உணர்ச்சியூட்டி வெளிநாட்டு ரியால், டாலர்களை அறுவடை செய்ததையும் தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் இஸ்லாமிய நம்பிக்கைகளை சீர்குலைத்ததில் இவர்களின் பங்கு அதிகம். சுன்னத் ஜமாத்துடன் நடத்திய விவாதத்திலும் கிருத்துவகளிடம் நடத்திய விவாதத்திலும் பலன் பல நூறு ஹதீத்களை மறுத்ததும் புறக்கணித்ததும்தான். இவர்கள் புறக்கணித்த ஹதீத்களை பிற முஸ்லிம்கள் ஏற்கிறார்கள் .
இது ஒரு புறம் இருக்க இவர்கள் பெரும்பாலான முஸ்லிம்களை முஸ்லிம்கள் அல்ல காஃபீர்கள் (அல்லாஹ் முஹம்மதை மறுப்பவர்கள்) என்றும் முஷ்ரிக்கள் ( மாற்று வழிபாட்டாளர்கள் ) என்றும் கூறிவருகிறார்கள். ஆனால் அந்த பெரும்பாலான முஸ்லிம்களோ இவர்களை (TNTJ) முர்தத், (வெளியேறியவர்கள் -இஸ்லாத்திலிருந்து-) என்று கூறிவருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் மற்றவர்களை நோக்கி அதிலும் குறிப்பா என் போன்ற முர்தத்களை நோக்கி விவாத அழைப்பு தருவது என்பது வேலி ஓணானை எடுத்து நுழைத்து கொள்வதற்கு சமம் என்பதை இவர்கள் அறிய மறுக்கிறார்கள். இவர்களே முஸ்லிம்கள் அல்ல என்று ஒரு பிரிவு முஸ்லிம் சமூகம் அறிவிப்பு செய்த பின் இவர்கள் எந்த முஸ்லிம்கள் லேபிளில் விவாதிக்க வருகிறார்கள் என்பதை தெளிவு படுத்தவேண்டும்.
யார்_முஸ்லிம்கள்?
ஸுன்னத் ஜமாத்துனரா?

JAHQ,
இயக்க முஸ்லிம்களா?
ஸலஃபி ,முஸ்லிம்களா?
TMMKமுஸ்லிகளா?
போரா முஸ்லிம்களா?
அஹ்மதியா முஸ்லிம்களா?
ஷியா முஸ்லிம்களா?
TNTJ, தினரா?

இவர்கள் அனைவருமே முஹம்மதையும் முஹம்மதின் அல்லாஹ்வையும் ஏற்றவர்களே இதில் இந்த TNTJ இயக்கத்தாரை மேற்கூறிய முஸ்லிம் வகையினர் முஸ்லிம்கள் என்று அங்கிகரிக்க வில்லை. அதனால் இவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்தில் விவாதிக்கும் தகுதி இல்லாதவர்கள் வெறும் இயக்கம் சார்ந்து இவர்கள் விவாதிக்கலாம்.
எங்களின் விவாத நிலை
இஸ்லாம் எனும் 1400 வருட அடிப்படைவாத அபாயத்தை விவாதிக்க ஒருநாள் இரு நாளோ ஒரு மாதம் இரண்டு மாதமோ போதாது. அதேபோல் முஹம்மது இல்லாமல் இஸ்லாம் ஒன்றே இல்லை என்பதை உறுதிப்பட கூறலாம் அதனால்,
முஹம்மது என்ற ஒன்றை தலைப்பின் கீழ் இஸ்லாத்தின் அனைத்து அபத்தங்களையும் முழுமையாக விவாதிக்க  EXமுஸ்லிம்களாகிய நாங்கள் தயார் இணைய தளம் வழியில் முழுமையா விவாதிக்கலாம். வாருங்கள் விவாத அழைப்பு புலிகளே?
இணைய தளம் மூலம் இஸ்லாமிய பிரச்சாரம், வசூல் செய்யலாம். அது ஹலால் என்றால் விவாதம் செய்வதும் ஹலாலே ..ஏன் இவர்கள் இணையம் மூலம் விவாதிக்க வருவதில்லை??
ஏன்னா? இணையம் வழி விவாதிப்பதால் வருமானம் வராது? மட்டும் அல்லாமல் விவாதித்துகொண்டிருக்கும் போதே பெரும் மக்கள் வசம் கருத்துக்கள் போய் சேர்ந்துவிடும். அதனால் இவர்கள் எடிடிங் பட்டி டிங்கரிங் பண்ண இயலாது. இது போன்ற பெறும் சிக்கல்கள் இருப்பதால் இணைய வழி விவாதத்திற்கு வருவதில்லை.
.....சரி இணையதள வழி விவாதத்தினால் சாதகம் என்ன ? இஸ்லாம்... அது மறைக்கப்பட்ட பக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். மிக மிக அதிகமான செய்திகளை முஸ்லிம்களும் மதம் சாராத முற்போக்களர்களும் கூட அறியப்படாமல் இருக்கிறார்கள் என்பது ஓர் எதார்த்த உண்மை. இங்கே நாங்கள் இணையதள விவாதத்திற்கு முஹம்மது என்ற முஸ்லீகளுக்கு அறியப்பட்ட பெயரை விவாத தலைப்பாக சூட்டியுள்ளோம். இந்த தலைப்பின் கீழ் வரும் விவாத பகுதிகள்:

1)
அரபு மொழியின் வரலாறு. அதன் அகராதி சார்ந்த கேள்விகள், மற்றும் குறுக்கு விசாரணைகள்.
2)முஹம்மதின் குடும்ப வரலாறு அதன் ஆதாரங்கள் அதன் மீதான கேள்விகளும், குறுக்கு விசாரணைகளும்.
3) முஹம்மது தூதர் என்பதற்கான சாட்சியங்கள். அதன் மீதான கேள்விகள், மற்றும் சந்தேகங்கள், குறுக்கு விசாரணைகள்.
4) குர்ஆன் வழங்கப்பட்டது, எழுதப்பட்டது சார்பாக எழும் கேள்விகள், சந்தேகங்கள், குறுக்கு விசாரணைகள்.
5) குர்ஆன் சார்ந்த கஃலீபாக்கள் எடுத்த முடிவுகள் அடிப்படையில் எழும் கேள்விகளும் சந்தேகங்களும், குறுக்கு விசாரணைகளும்.
6) இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குள் நிகழ்ந்த கொலைகள் அதற்கான வரலாற்று ஆதாரங்களை தடயங்களின் அடிப்படையில் விவாதிப்பது.
7) மேலும்...உஸூல் ,அகீதா, இஜ்மா, தஜ்வீத் முறைகள் ஷரியா சட்டங்களின் நிலை பற்றிய கேள்விகள் அதன் மீதான குறுக்கு விசாரணைகள்.
8) இஸ்லாமிய இமாம்களின் எண்ணிக்கையில் அடங்கா நூல்களை பற்றியும் அதன் தாக்கம் மற்றும் அதன் அபத்தங்கள் பற்றி ஒரு முழுமையான விவாதம். இதனுள்தான் இஸ்லாமிய நுண்ணரசியல் இருக்கிறது.
9) இஸ்லாமிய கடவுளான அல்லாஹ்வின் ஆற்றலை அதன் பின் விளைவுகளையும் குர்ஆன் ஹதீத் மூலமும் எதார்த்த நடைமுறை வாழ்க்கையின் மூலமும் விவாதிப்பது. கடவுள் இல்லை என்ற எங்களின் நிலையை உறுதி செய்யவும் முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கையை அற்றுபோக வைக்கவும் இது உதவும்
10) மேலும் ஜின், ஷைத்தான், மலக்குகள், சொர்க்கம், நரகம், கபுரு வேதனை கியாமத் நாள்… போன்ற அம்புலி மாமா கதைகளை அறிவார்ந்த ஒப்பீடோடு சுட்டிக்காட்டி இவர்களின் அறியாமையை தோலுரிப்பது எங்களின் கடமையாக இருப்பதால் இப்படிப்பட்ட முழுமையா விவாதம் இன்றைய கட்டாய தேவை.
11)ஹதீஸ் எழுதப்பட்ட வரலாறு அதன் மூல நூல்களின் இன்றைய நிலை என்ன என்பதை தடய ஆதார அடிப்படையில் விவாதிப்பது.
முஹம்மதுவின் பிறப்பு தொடங்கி ,அதாவது கிபி 570 தொடங்கி கிபி 1980 வரையிலான ஒட்டுமொத்த உலகளாவிய இஸ்லாமிய வரலாற்றை அதன் ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையாக விவாதிப்பதே சரியான விவாத முறையாகவும். அதன் தாக்கம் சரியான முறையில் மக்களை சென்றடையவும் வழி வகுக்கும் என்பதை உங்களின் பார்வைக்கு தருகிறோம்,

EXமுஸ்லிம்களின் சார்பாக சாதிக் சமத்

** எல்லாம் சரி...இந்த பதிவிற்கும் இணைத்திருக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?
அட..என்னங்க நம்ம மூமின்கள் என் மீது இத்தகைய மன நிலையில் இல்லை என்பதை மறுக்க முடியுமா?
9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அடுத்து
9:63. எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் – இது பெரும் இழிவாகும்.
அடுத்து
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்:
எனக்குப்பின் குழப்பங்களும், தீங்குகளும், வேதனைகளும் தோன்றும். நபிகளார் இருகரங்களையும் உயர்த்தியவராக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத் கூட்டமைப்பாக இருக்கும்போது அவர்களின் கூட்டமைப்பை பிரிக்க நாடுபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரியே அவனை வெட்டி விடுங்கள்”
மேலும் கூறினார்கள்:
எனது உம்மத்துக்கு மத்தியில் பிரிவினையை தோற்றுவிக்கின்ற மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி அவனை வெட்டி விடுங்கள்”
ஆதாரம்: ஸுனன் நஸாயி, பாகம் 07, பக்கம் 93-93
இப்போ சொல்லுங்க.
போட்டோவுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் வருதா?


Facebook Comments

3 கருத்துரைகள்:

Ant said...

விவாதமா? கட்டுரையில் கூடுதல் தகவல்கள் தேவை.
எப்போது? (ஆகஸ்ட் என உள்ளதே?)
நேரடியாக முஸ்றிக்காக அடையாளம் காட்டிக் கொள்வது முஃமீன்களிடமிருந்து ஆபத்தை கொண்டுவரும்.
கவணமுடன் செயல்படுக.
வாழ்த்துக்களுடன்.

A.Anburaj Anantha said...

எல்லாம் சரி...இந்த பதிவிற்கும் இணைத்திருக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?
அட..என்னங்க நம்ம மூமின்கள் என் மீது இத்தகைய மன நிலையில் இல்லை என்பதை மறுக்க முடியுமா?
9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அடுத்து
9:63. எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் – இது பெரும் இழிவாகும்.
அடுத்து
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்:
“எனக்குப்பின் குழப்பங்களும், தீங்குகளும், வேதனைகளும் தோன்றும். நபிகளார் இருகரங்களையும் உயர்த்தியவராக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத் கூட்டமைப்பாக இருக்கும்போது அவர்களின் கூட்டமைப்பை பிரிக்க நாடுபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரியே அவனை வெட்டி விடுங்கள்”
மேலும் கூறினார்கள்:
எனது உம்மத்துக்கு மத்தியில் பிரிவினையை தோற்றுவிக்கின்ற மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி அவனை வெட்டி விடுங்கள்”
ஆதாரம்: ஸுனன் நஸாயி, பாகம் 07, பக்கம் 93-93
Mohammed is a terrible cruel deadly terrorist hooligan

A.Anburaj Anantha said...

Let us call /address HIM as Mohammed only.Is he eligible for the title Nabi etc