கடந்த வாரம் கோவை அத்தர் ஜமாஅத் பள்ளிவாசலில், சில ஆலீம்களுடன்
பேசிக் கொண்டிருந்த பொழுது, ஜாக், த.த.ஜ என்று துவங்கி, குர்ஆன், ஹதீஸ், ஹதீஸ்கலை என்றெல்லாம்
உரையாடல் சென்று கொண்டிருந்தது. ’இல்ம்’ என்றால்
என்ன? என்ற கேள்வியை முன்வைத்தேன்.
’இல்ம்’ என்றால் என்ன?
அவர் ஒரு அதிதீவிர தப்லீக்வாதி. எனது கல்லூரி வகுப்புத் தோழர்,
ஒருவகையில் எனக்கு உறவினரும் கூட; அவரது மனைவி அவருக்கு நேரெதிர் தப்லீக் ஜமாஅத்தை
அடியோடு வெறுப்பவர். இப்படியொரு குடும்பம்! நேரெதிர் சிந்தனைகள் கொண்ட இருவர் எப்படி
இணைய முடியுமென்று தோன்றலாம். இதற்கு ஒரே பதில், தக்யா எனும் புனித மோசடிதான்!
தப்லீக் ஜமாஅத் என்பது இஸ்லாமின் அதிதீவிர அடிப்படைவாதிகள்.
அரை மீட்டர் நீள தாடியும், முழங்காலுக்கும் கீழே தொங்கும் அழுக்கு ஜுப்பாவும், கணுக்காலுக்கு
மேலே ஏறிய கால்சட்டையும் தின்று கொழுத்த தொந்தியுமாக, சுன்னத் எனப்படும் முஹம்மதின்
செயல்முறைகளை அப்படியே செயல்படுத்துகிறோமென்று கூறிக் கொண்டு குடும்பத்திரைக் கவனிக்காமல்,
வீதி வீதியாக திரிபவர்கள். இவர்களின் இன்னொரு பதிப்புதான் தலீபான்கள்.
இவர்களுக்கிடையே காணப்படும் மிக முக்கியமான வேறுபாடு
என்னவென்றால், தலீபான்கள் கடுமையான சூழலிலும்
சண்டையிடுமளவிற்குப் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்; இவர்கள் அர்த்தமில்லாமல் பேசியே கொல்லும்
வாய்களையும் உண்டு கொழுத்த தொந்திகளையும் கொண்டவர்கள். எந்தச் சூழலிலும் எவ்வளவு கொடுத்தாலும்
தின்று தீர்க்க தயங்க மாட்டார்கள். இவர்கள்
இரயில், பேருந்துகளில்கூட ஒரு துணியை விரித்து தொழுது கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.
தீனுக்காக(கொள்கை) தங்கள் வாழ்வை அர்பணிப்பதாகக் கூறிக் கொண்டு தீணுக்காக அலையும் ஒரு
கூட்டம்!
தப்லீக் ஜமாஅத்தைப்பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது;
தப்லீக் ஜமாத்தின் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக,
ஒரு தப்லீக்வாதியின் செயல்பாடுகளை முன்வைக்கிறேன்.
கல்லூரிக் காலங்களில் அவருக்கு இஸ்லாமில் பெரிய ஈர்ப்பு இருந்ததாகத்
தெரியவில்லை; வேறொரு நண்பர் வழியாக தப்லீக் ஜமாஅத் அவருக்கு அறிமுகமானது. ஆரம்பத்தில்
அவரிடம் குறிப்பிடும்படியான மாற்றங்கள் எதுவுமில்லை;
திருமணத்திற்குப் பிறகு அவரது செயல்பாடு தீவிரமாகத் துவங்கியது. வாரம் ஒருநாள், மாதத்தில்
மூன்று நாட்கள், வருடத்திற்கு நாற்பது நாட்கள், நான்கு மாதம் பத்து நாட்கள் என்று அவரது
தப்லீக் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.
இஸ்லாமியக் கொள்கைகளுகாகத் தானே என்று நமது தப்லீக்வாதியைப் எவரும் தடை செய்யவில்லை.
இது நாளடைவில் முற்றி வெறியாக மாறிவிட்டது.
உதாரணத்திற்கு அவரது குழந்தைகள் உடலில் காயம் அல்லது புண்
இருப்பதாகக் காண்பித்தால், உடனே தனது எச்சிலை துப்பி அந்த இடத்தில் ஓதி ஊதிவிடுவார்.
அதாவது முஹம்மதின் போதனைகளை அப்படியே பின்பற்றுகிறாராம். அவரது பெண்குழந்தைக்கு, 9 வயதாக இருக்கையில், வேறொரு பிரச்சினை துவங்கியது.
பெண்கள் உலகக் கல்வி பயில வேண்டிய அவசியமில்லை மதரஸாவிற்கு மட்டுமே அனுப்ப வேண்டுமென்று
தனது இஸ்லாமிய கொள்கையை பிடிவாதத்தைக் கையிலெடுத்தார். அதென்ன உலகக் கல்வி? அதைப்பற்றி
விரிவாக பிறகு சொல்கிறேன். இப்பொழுது நாம் தப்லீக்வாதியின் செயல்பாடுகளைத் காண்போம்.
அவர் எனது வார்த்தைகளுக்கு கட்டுப்படக் கூடியவர் என்பதால்
விவகாரத்தில் தலையிட நான் அழைக்கப்பட்டேன். எனது குழந்தைகளின் கல்விக்காக உதவுங்கள்
என்று கண்ணீர் விட்டார் தப்லீக்வாதியின் துணைவியர். எனது நண்பர் தப்லீக்வாதியிடம்,
”உனக்கு என்னதான் பிரச்சினை? குழந்தையை படிக்க ஸ்கூலுக்கு
அனுப்ப வேண்டாம்னு சொன்னாயா?” என்று ஆரம்பித்தேன்.
“நான் படிக்க வேண்டாம்னு சொல்லலை, உலகக் கல்வியைவிட மார்க்கக்
கல்விதான் என்றைக்குமே பயன்தரக் கூடியது. அதனால மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவத்தை
கொடுங்கன்னு சொல்லறேன்” என்றார்.
”உன்னோட மகள் மதரஸாவுக்கு போயிட்டுதானே இருக்கிறாள்? மறுபடியும்
என்ன மார்க்கக் கல்வி?”
“இல்லை அது போதாது!” என்றார்
”பள்ளிக்கூடமே வேண்டாம்னு சொல்றியா?” என்றேன்
“ஓரளவிற்கு அவளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுது. இது
போதும் மதரஸாவில் சேர்த்துவிட்டால் மார்க்கக் கல்வியோட நீங்க எல்லோரும் விரும்பற மாதிரி
தமிழையும் படிக்கலாம்!” என்றார்
”நீ…படித்தவன்! இப்படியா பேசறது? கல்வினா... மொழிப்பாடங்கள்
மட்டுமல்ல!” என்றேன்.
“… …?”
“நீ இன்னைக்கு சம்பாதிச்சது, சாப்படறது எல்லாமே உன்னுடைய கல்வியாலதான்!”
“அறிவியலையும் புவியியலைம் படித்து நம்ம பெண்கள் என்ன செய்யப்
போறாங்க? எப்படியும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் அப்புற எதுக்கு தேவையில்லததையெல்லம்
படிக்கனும்?” என்றார்.
அவரது விளக்கம் என்னை கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.
என்னை அடக்கிக் கொண்டு,
“பைத்தியக்காரன் மாதிரி பேசாதே! படிச்சவங்க எல்லோரும் வேலைக்குப்
போகணும்னு அவசியமில்லை. படிக்கிறது அறிவு வளர்வதற்காகத்தான்! என்றேன்.
“அந்த ஸ்கூல்ல தொழுக ஏதாவது வசதியிருக்கா…? என் பொண்ணோட லுஹர் தொழுகையெல்லாம் பாழாய்ப் போகுது!” என்று பொரிந்தான்.
“ஸ்கூல்ல எப்படிடா தொழ முடியும்? அது எல்லோருக்கும் பொதுவான
இடம்!” என்றேன்.
“குழந்தைகளுக்கு ஏழு வயசானாலே தொழச் சொல்லி ஏவ வேணும்னு பெரியவங்க
சொல்லியிருக்கங்க, இவளுக்கு 9 வயசாகுது இன்னும் ஐவேளை தொழறதில்லை… அந்த ஸ்கூல்ல அதுக்கு
வாய்ப்பில்லை! நாளை மறுமையில அல்லாஹ்வின் விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டாமா..?
”சரி… ஸ்கூல்விட்டு வந்த பிறகு விடுபட்டதை தொழ வைக்க வேண்டியதுதானே?
“… …!”
”இவ்வளவு பேசறியே? அந்த ஸ்கூல்ல பெண்ணுங்க போடற யூனிஃபார்மை
பார்த்தியா? தலையை மறைக்கிறதில்ல, முழங்காலுக்கு மேல இருக்கற ஸ்கர்ட்டும் பார்க்கவே
சகிக்கலை!” என்ற பொழுது முஹம்மதின் போதனைகளின் சுயரூபம் வெளிப்பட்டது.
எங்களது குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தது ஒரு கிஸ்தவ மிஷனரி
பள்ளிக் கூடம்.
”அந்த வகுப்பில இருக்கிற எல்லொரும் சின்னக் குழந்தைகள், அவங்க
பெரியவங்களாகும் பொழுது அதற்குத் தகுந்த யூனிஃபார்ம் கொடுப்பாங்க…!” என்றேன் பொறுமையாக.
”இல்லை…! ரஸூல்(ஸல்) நமக்கு இப்படியெல்லம் ஆடை அணியச் சொல்லித்தரல…!”
“அவர் ஒட்டகத்திலேயும், கழுதையிலேயும்தான் போனாரு, நீயும்
அதுல போக வேண்டியதுதானே?” என்றேன். அவர் விடாப்பிடியாக
தொடர்ந்து ஆடையைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
திரைக்குப் பின்னால் இருந்து,
”ஸ்கூல் பிர்ன்பாலிகிட்ட போய் ஏதோ தகராறு செய்விட்டு வந்திருக்கிறார்!”
என்று எங்களது உரையாடலை இடைமறித்தார் நண்பரின் மனைவி.
“அங்கே போய் என்னடா…செய்தே?” என்றேன்.
”ஆமாம் என் மகள் தலைமறைக்காமல் வகுப்பில இருக்கிறா(ள்) இது அல்லாஹ்வோட தீனுக்கு எதிரானது. அதனால வகுப்பிலையும்
தலையை மறைக்க அனுமதி குடுங்கன்னு பிரின்ஸ்பால்கிட்ட அனுமதி கேட்டேன்!” என்றான்
“சரி அவங்க என்ன சொன்னாங்க?”
“அதெல்லாம் முடியாது எல்லோருக்கும் ஒரே நடைமுறைதான் உங்க
மகளுக்கு ஸ்பெஷல் அனுமதியெல்லாம் தரமுடியாதுன்னு சொல்லீட்டாங்க!”
”… …!”
“நீங்க மட்டும் தலையைமறைச்சு கன்னியஸ்திரி டிரஸ் போடலாமான்னு
கேட்டேன்!” என்றார்.
”இனி என் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அந்த சிஸ்டர்
மனசில என்னவெல்லாம் தோணுமோ?” என்ற நண்பரின் மனைவியிடம் விசும்பல் ஆரம்பமாகியிருந்தது. சிறிது நேரம் அமைதி
நிலவியது.
நான் என்ன சொன்னாலும் சிறிதுகூட தனது பிடிவாதத்தை தளர்த்தாமல் தப்லீக்வாதி பேசிக் கொண்டே இருந்தார். குழந்தையின் கல்வி தடைபடுவதை எப்படியாவது தடுக்கவேண்டுமென்று
தோன்றியது.
“சரி.. முடிவா என்னதான் சொல்ல வர்றே?” என்றேன்
“என் மகளை முழுநேர மதரஸாவில் சேர்த்தலாம்னு இருக்கேன்!” என்றார்
உறுதியாக
“உனக்கு அந்த ஸ்கூல் பிடிக்கலைனா வேற ஸ்கூலைப் பார்க்கலாமே?”
என்றேன்.
“…. ….?”
”கிறிஸ்தவ நிர்வாகம்தான் உனக்குப் பிரச்சினையா இருந்தால்,
முஸ்லீம்களின் நிர்வகத்தின் கீழிருக்கிற பள்ளிக் கூடத்தில் சேர்த்தலாமே? நீ… நினைக்கிற
மாதிரி உன் மகள் தலையை மறைக்கலாம், லுஹ்ர் தொழலாம். அங்கு அரபியும் ஒரு பாடமாகவும்
இருக்கிறது! என்றேன்.
எனது ஆலோசனையை மறுக்க முடியாமல், ஒன்றும் பேசாமல் அமைதியாக
இருந்தார்.
“சரி..! பெரியவளாக ஆகும்வரை ஸ்கூலுக்குப் போகட்டும் அதன்
பிறகு மதரஸாவிற்கு மட்டும் போகட்டும்!” என்று மறுபடியும் ஒரு குண்டை போட்டார்.
எதையாவது பேசி இவரை பின்னர் சரிகட்டிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில்,
“சரி…! அதை பிறகு பார்க்கலாம்!” என்றேன். தற்காலிகமாக பிரச்சினை
ஒரு முடிவிற்கு வந்தது.
ஆனால் என் நண்பரின் போக்கு இன்னும் தீவிரமானது. வீட்டிலிருந்த
வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும் தீயிட்டு எரித்தார். உருவங்கள் இருக்கிறதென்று
தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எல்லாவற்றையும் அடியோடு நிறுத்தினார். தினசரி நாட்காட்டிகளில் அச்சிடப்பட்டுள்ள உருவங்கள் என்று
துவங்கி, குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தங்களைக் கூட மைபூசி அழித்து வைக்குமளவிற்கு
அவரது பக்தி முற்றியது. அவரது அதிதீவிர செயல்பாடு அவரை எங்கள் வட்டார தப்லீக் ஜமாஅத்தின்
பொறுப்புதாரியாக உயர்த்தியது. இதனிடையே என்னைப்பற்றிய செய்தி அவருக்கு காற்றுவாக்கில் செல்ல, இவருக்கும் ஏற்பட்ட
வாக்குவாதத்தின் காரணமாக என்னுடன் இருந்த நெருக்கம் படிப்படியாக குறையத் துவங்கியிருந்தது.
சில ஆண்டுகளில், அந்த பெண் குழந்தை எட்டாம் வகுப்பு துவக்கத்தில் பெரியவளானாள். மீண்டும் பிரச்சினை
ஆரம்பமானது; பள்ளிப்படிப்பை நிறுத்தியே ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார்.
மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கினேன்.
”அவள் தினமும் ஐவேளைத் தொழுகிறாள், நீ சொல்வதைப் போல பள்ளிக்கூட
வீட்டுப்பாடங்களியெல்லாம் விட்டுவிட்டு தஃலீம் தொகுப்பைப் படிக்கிறாள், குர்ஆன் ஓதுகிறாள், நின்றால் துஆ, நடந்தால் துஆ என்று எல்லாவற்றையும்
ஓதிக்கிட்டுதான் இருக்கிறாள் இன்னும் அவள் என்னதான்… செய்ய வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிற?”
என்றேன்.
”அவள் பெரியவளாகிவிட்டாள், இனி அவளுக்குரிய ஒழுக்கங்களை பின்பற்றி
நடக்கனும்!”
“… …!?”
“மதரஸாவிற்கு அனுப்பினால் அவர்கள், தீன் பற்றிய கல்வியை முழுமையாக
கற்றுக் கொடுத்துவிடுவார்கள்!”
“மதரஸாவிற்கு போகதவங்க எல்லாம் ஒழுக்கக் கேடாகவா நடக்கறாங்களா?
உங்க அம்மாகூட மதரஸாவுக்குப் போனதில்லை ஒழுக்கக் கேடாகவா இருக்காங்க?” என்றேன்.
இந்தக் கேள்வி நண்பரைக் சற்று குத்திவிட்டது.
“இங்க பாரு… என் மகளை எப்படி வளர்த்தனுங்கிறதுக்கு அடுத்தவன்
எவனும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டியதில்லை!” என்றார் முகத்தில் அடித்ததைப்போல,
மதக் கொள்கைகளின் மீது கொண்ட மூடத்தனமான பற்று, ஒரு நொடியில், நட்பு, உறவு என்று அனைத்தையும் தூக்கி
எறியச் செய்துவிட்டது.
எனது தன்மானம் சூடேறியது.
இனிபேசிப் பயனில்லை என்று எழுந்தேன். திரைக்குப் பின்னால் இருந்த அவரது மனைவி,
”அண்ணா… தயவு செய்து போகதீங்க…! அவருக்காக நான் மன்னிப்புகேட்கிறேன்”
என்றார் தழுதழுத்த குரலில்
தவறாகப் பேசிவிட்டதை எனது நண்பர் உணர்ந்ததாகத் தோன்றியது.
அமைதியாக இருந்தார்.
”உன் மகளைப் படிக்கவை! அவ… வேலைக்கு போகலைனாலும் நாளைக்கு
அவளுக்கென்று ஒரு குடும்பமாகும் பொழுது குழந்தைகளுக்காவது பாடம் சொல்லிக் கொடுக்கவாவது
உதவும் தயவு செய்து படிக்கவை!” என்றேன்.
”சரி.. அவளை ஸ்கூலுக்கு அனுப்பறேன்… ஆனால் ஒரு… கண்டிஷன்!”
”என்ன..கண்டிஷன்..?”
“அவள் முகத்தை மூடி புர்க்கா போட்டு கோஷா முறையிலதான் ஸ்கூலுக்குப்
போகனும். ஸ்கூல்ல இருந்த வந்தவுடன் தினமும் ஒரு மணிநேரமாவது மஃரிபுக்குப் பிறகு தஃலீம்
சத்தமாக படிக்கனும் அத வீட்ல இருக்கற மத்தவங்க எல்லோரும் கேட்கணும்!” என்றான்.
“ஸ்கூல்ல கொடுக்க்ற வீட்டுப்பாடங்களை படிக்கவும், எழுதவும்
வேண்டாமா…?”
”அதைபத்தின கவலை எனக்கில்ல…!”
“… …!?”
”இனி அவ அந்நிய ஆண்கள் முன்னால் முகத்தை மறைக்காமல் வரக்கூடது!”
”என் முன்னாலும் அப்படித்தானா…?”
“ஆமாம்!”
“டேய்… எனக்கு அவ.. மகள் மாதிரி!”
“நீ எப்படி நினைக்கிறேங்கிறத பத்தின கவலை எனக்கில்லை. ஆனால்
நான் என் மகளை மஹ்ரமாக வளர்த்த விரும்பறேன், கோஷா முறையில் வளரணும்!” என்றார்.
செய்வதறியாது அந்தப் பெண்குழந்தை பரிதாபமாக என்னைப் பார்த்தது.
அவரது மனைவிடமிருந்து விசும்பல் சத்தம் மட்டும் வெளிப்பட்டுக் கொண்டிருக்க, நான் ஒன்றும்
பேசாமல் வெளியேறினேன்.
மறுநாள், தனது வகுப்புத் தோழிகளுக்கு மத்தியில் கறுத்த ஆடையால்
உடல், முகம் என்று அனைத்தையும் மறைத்தவாறு அந்த சின்னஞ்சிறிய பெண் குழந்தை பள்ளிகூட
புத்தக மூட்டையை சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்தேன். எல்லாம் தெரிந்திருந்தும் என்னால்
தடுக்க முடியவில்லையே என்ற வேதனை என்னைப் பிடுங்கித் தின்றுகொண்டிருந்தது. மனது கேட்காமல்
பின்தொடர்ந்து சென்று அவளிடம்,
“ஏம்மா.. உனக்கு இப்படிப் போறது சிரமமாக இல்லையா? நான் உங்க
வாப்பாகிட்ட மறுபடியும் பேசறேன்!” என்றேன்.
“வேண்டாம்… மாமா…! நான் நிறைய படிக்கணும் அதுக்கு ஹெல்ப்
பண்ணுங்க...! அதுக்காக எந்த கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை…!” என்ற பொழுது, நிகாப்பிற்கு
இடையே தெரிந்த விழிகளில் நீர் தேங்கி நிற்பதை என்னால் காண முடிந்தது.
இன்றும் அந்த விழிகள் நினைவிற்கும் வரும் பொழுது நிலைகுலைந்து
போகிறேன்.
தனது மகள் உண்மையாகவே முகத்தை மறைத்துக் கொண்டுதான் செல்கிறாளா?
அல்லது நடிக்கிறாளா? என்பதை அவளை அறியாமல் பின் தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது, பள்ளிப்
பாடங்களைப் படிக்கவிடாமல், இஸ்லாமியப் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்த பின்னர்
மட்டுமே பள்ளிப்பாடங்களை படிக்க அனுமதிப்பது; அவ்வாறு பள்ளிப்பாடங்கள் படித்துக் கொண்டிருக்கையில்
இடையில் புகுந்து வேறு எதையாவது துஆக்களை அல்லது குர்ஆனின் அத்தியாயங்களை ஓதச் சொல்லி
நச்சரிப்பது என தப்லீக்வாதியின் செயல்பாடுகள் தொடர்ந்து கேவலமானது. அவரது திட்டம் என்னவாக இருந்தது என்றால்,
அவளுக்கு பள்ளிக்கூட கல்வியில் நாட்டமில்லை என்பதாகக் காண்பிக்க வேண்டுமென்பதுதான்.
இவரது மதவெறி மற்றும் இயக்கவெறிபாடுகள் காரணமாக அந்தத் தம்பதிகளுக்கிடயே மோதலும், விரிசலும் வளர்ந்து கொண்டேயிருந்தது.
ஒரு நாள், நான் அலுவலகத்திற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த
பொழுது, தப்லீக்வாதியின் மனைவி அவசர அவசரமாக எனது வீட்டிற்கு வந்தார். ஏதோ பிரச்சினை
என்பதுமட்டும் புரிந்தது.
”என்னாலதானே இத்தனை பிரச்சினை, பேசாம நான் தற்கொலை செய்யட்டுமான்னு?
என் மகள் கேட்கிறாள்” என்று சொல்லும் பொழுதே அவர் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.
நான் அதிரிச்சியில் அமைதியாக இருந்தேன். என் துணையார், அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
“இதை நீங்க உங்க கணவரிடம் சொல்ல வேண்டியதுதானே?” என்றேன்
“சொன்னேன்…!”
“… …!?”
“எனக்கு ரஸூலோட ’தீன்’ மட்டுதான் முக்கியம் அத பின்பற்ற விரும்பலைனா
அப்படியொரு மகளே எனக்கு வேண்டாம் செத்துத் தொலையட்டும்னு… சொல்லறாரு..!” என்று மீண்டும்
அழத்துவங்கினார்.
பிறகு அந்தச் சிறுமியை அழைத்து, சூழ்நிலைகளை எதிர்த்துப்
போராடவேண்டுமென்று அறிவுரை கூறி தேற்றினேன்.
இதற்கிடையில் தப்லீக்வாதி நாற்பது நாட்கள் ஜமாஅத் சென்றுவிட்டார்.
நாட்கள் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது அவர் திரும்பிவரும்வரையில். ஜமாஅத்திலிருந்து
திரும்பியதும் அவருக்கு இன்னும் வேகம் அதிகரித்திருந்தது. நாற்பது நாட்களும் அவருக்கு
நன்றாக வெறியேற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மீண்டும் அதே பிரச்சினை, இம்முறை அவரது மற்ற குழந்தைகளின்
கல்வியும் சேர்ந்து கேள்விக் குறியானது. படித்தது போதும், எட்டு வயதான தனது மகனுக்கு
குர்ஆனை மனனம் செய்து ஹாஃபிஸ் ஆக்கவேண்டுமென்ற திட்டமும் சேர்ந்து கொண்டது. மகனின்
கல்விக்கும் ஆபத்து வந்ததைக் கண்ட நண்பரின் மனைவி ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போனார்.
அவர்களுக்கிடையே கருத்துவேற்பாடு மேலும் தீவிரமானது.
”அவன் படித்தது போதும் ஹாஃபிஸ் கல்விக்கு இதுதான் ஏற்ற வயது
உடனே மதரஸாவில் சேர்க்க வேண்டும்!” என்று மீண்டும் பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார்.
எங்களுக்கிடையே நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களில் ஏற்பட்ட கருத்து
வேறுபாடு, இஸ்லாம் மீதான விமர்சனங்கள், நட்பில்
பெரும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. தப்லீக்வாதியிடம், எனது அறிவுரைகள் எடுபடாது என்று
தோன்றியது. எனவே இம்முறை, நான் எனக்குத் தெரிந்த, கல்வியை ஆதரிக்கக்கூடிய ஆலீம்களின்
உதவியை நாடினேன்.
“நீங்க எல்லோரும் அவங்க குழந்தைகளை டாக்டரக்கனும் இன்ஜினியராக்கனும்னு
ஆசைப்படறீங்க நான் ஹாஃபிஸ் ஆக்கணும்னு ஆசைப்படறேன் இதில் என்ன தப்பு இருக்கு?” என்றார்.
”உங்கள் குழந்தைகளை குறைந்தபட்ச கல்வியை அதாவது பத்தாம் வகுப்புவரைக்குமாவது
படிக்க வையுங்க!” என்றார் ஒரு ஆலீம்
“மறுமை வாழ்க்கைக்கு எந்த பயனும்தராத உலகக் கல்வியை உங்களை
மாதிரி உலமாக்களே ஆதரிக்கிறது சரியில்லை!” என்று அவர்களைத் திருப்பி மடக்கிவிட்டார்.
“நாளைக்கு டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் மாதிரி விஷயங்களுக்காவது
உதவும். அதனால பத்தாவது வரையாவது படிக்க வையுங்க” என்றார் இன்னொரு ஆலீம்.
”குர்ஆனை மனனம் செய்வதற்குரிய மனநிலையும், ஆர்வமும் அந்தக்
குழந்தைக்கு இருக்க வேண்டும். ஆர்வமில்லாமல் வலுக்கட்டாயமாக ஹாஃபிஸ் கல்வியை ஒருவருக்குள்
நுழைக்க முடியாது!” என்றனர்.
வேறுவழியில்லாததால், தப்லீக்வாதி, மகனின் கல்விபற்றிய முடிவை
தள்ளிவிவைத்திருக்கிறார். ஆனால் பெண் குழந்தையில் கல்வியை பத்தாம் வகுப்புடன் முடித்துக்
கொள்வதாகவும் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். பெண்களுக்கு அந்த அளவிளான கல்வி போதுமென்பது
அவரின் முடிவு!
இதற்கிடையில் எனது பணி காரணமாக சில மாதங்கள் வேறு இடத்தில்
இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தப்லீக் நண்பர் ஒரு சொற்பத் தொகையை குடும்ப செலவிற்குக்
கொடுத்துவிட்டு மீண்டும், நான்கு மாதம் பத்து நாட்கள் ஜமாஅத்திற்கு சென்றுவிட்டார்.
குடும்பம் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தது.
இப்படியொரு கொடுமையை அந்த அப்பாவிப் பெண் எதற்காகப் பொறுத்திருக்க
வேண்டும்? பிடிக்கவில்லையெனில் விவாகரத்தை நாடியிருக்கலாமே? என்று உங்களுக்குத் தோன்றலாம்.
மிகப் பெரும்பாலும் பெண்கள் அமைதியாக இருப்பது குழந்தைகளுக்காக மட்டுமே! அதிலும் இந்தக்
கேடுகெட்ட இஸ்லாமில், விவாகரத்து போன்ற சூழலில் குழந்தைகள் தந்தையின் பொறுப்பில் மட்டுமே
ஒப்படைக்கப்படுவார்கள். தாய் குழந்தைகளை நினைத்து ஏங்கியேங்கி சாக வேண்டியதுதான்.
இவ்விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கையை என்னால் எளிதாக
மேற்கொள்ள முடியும். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென்ற
அந்தத் தாயின் வேண்டுகோள் காரணமாக, தப்லீக் ஜமாஅத்தின் மாவட்ட அளவிளான பொறுப்புதாரியைச்
சந்தித்து முறையிடுவதென்று முடிவு செய்தேன். தப்லீக் ஜமாஅத்தின் மாவட்ட அளவிலான பொறுப்புதாரியிடம்,
எனது நண்பரின் செயல்பாடுகளை விவரித்தேன். இன்றுவரை அவரிடமிருந்து உருப்படியான எந்த
பதிலும் கிடைக்கவில்லை. காரணம், மார்க்கக் கல்வி மட்டுமே முதன்மையானது. உலகக் கல்வி
அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்பதே தப்லீக் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
அந்தச் சிறுமி, இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறாள்…
இனி…அவளது கல்வி..?
இஸ்லாம் பெண்களை எப்படிக் கையாளுகிறது என்பதற்கு இது ஒரு
நடைமுறை உதாரணம். குறிப்பாக இஸ்லாமில் பெண்களுக்கு
கல்வி மறுக்கப்படுவது ஏன்?
நான் இப்படியொரு கேள்வியை கேட்ப்பதற்கு முன்பாகவே, இஸ்லாம்
கல்வியை ஊக்குவிக்கிறது, ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லையென இதோ சில இஸ்லாமிய தளங்கள்
துள்ளிக் குதித்து வருகின்றன. அவர்களின் விளக்கங்களை
விரிவாகப் படிக்க விரும்புபவர்களுக்காக தளங்களின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். எங்களால்
அங்கேயெல்லாம் போய்ப் படிக்க முடியாது, நீங்களே சுருக்கமாகக் கூறிவிடுங்கள் என்பவர்களுக்காக,
இஸ்லாம், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.
ஏனெனில், அது அறிவினதும் இறைத் தூதினதும் அடிப்படையில் உறுதியாக கட்டி எழுபப்பட்ட ஓர்
இறை மார்க்கமாகும்…
(“இக்ரஃ”) என்னும் ஓதுவீராக!என்ற வார்த்தைகளோடு ஆரம்பமாகி,
அதன் நிறைந்த கருத்தின் அடிப்படையில் உலகத்தில் வாழும் மனித சமூகத்தின் பண்பாடுகள்,
கலாச்சாரங்கள் ,அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள், மனித வாழ்க்கையின் வட்டத்திற்குள்
ஹராம், ஹலால் பேணவேண்டிய வடிவமைப்புக்கள் இது போன்று உலக ஆரம்பம் முதல் முடிவு வரை
"ஓதுவீராக!" என்ற வார்த்தையின் மூலமே அமையப்பெற்றது. இது தான் கல்வியின்
முக்கியத்துவத்திற்கு வரைவிலக்கணம். …
கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும்
வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.
ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது...
அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...!!!!!
…பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு
உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக இயம்பிக் கொண்டு இருக்கிறது. இச்செய்தியை
அறியாதவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். இன்று முஸ்லிம் பெண்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள்
என்றால் தலாக், வரதட்சணை கொடுமை, அடக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள்
போன்று எத்தனை எத்தனையோ சுமைகளை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளிலிருந்து விடுபட்டு
நம் நியாயமான கோரிக்கைகளைப் பெற கல்வி மிக மிக அவசியமானதாக இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் இஸ்லாமியர்களே அல்லர். பெயர்
தாங்கி முஸ்லீம்கள்; தங்களது சொந்தச் சரக்குகளையெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் விற்பனை
செய்பவர்கள்.
2012 அக்டோபர் 9-ம் நாள் மலாலா என்ற சிறுமி, மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து
வீட்டிற்குத் திரும்புகையில், பள்ளிக்கூட வாகனத்தில் வைத்து, இஸ்லாமியத் தீவிரவாதிகளான
தலீபான்களால் சுடப்பட்டார்.
மலாலா செய்த தவறு என்ன?
பெண்கள் கல்விக்காகவும், அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக குரல் உயர்த்தியதும் தான்!
நாம் மேலே கண்ட இஸ்லாமிய தளங்கள் பெண் கல்விக்காக குரல் கொடுக்கின்றனர்.
குர்ஆனும் ஹதீஸ்களும் கல்வியை குறிப்பாக பெண்கள் கல்வியை வலியுறுத்துகிறது என்றெல்லாம்
கூப்பாடு போடுகின்றன. இந்த இஸ்லாமிய தளங்கள்
மட்டுமல்ல எந்த ஒரு இஸ்லாமிய ஊடகமும் மலாலவை ஆதரித்து அவரது பெயரைக்கூட உச்சரிக்க மாட்டார்கள் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
சிறுமி மலாலாவும் பெண்களின் கல்விக்காக குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்காத்தானே
குரல் கொடுத்தார்?
தொடரும்…
தஜ்ஜால்
22 கருத்துரைகள்:
தஜ்ஜால்,
தவ்ஹீத் ஜமாஅத்தை அடுத்து இப்பொழுது தப்லீக் ஜமாஅத்தை அம்பலபடுத்த ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
உங்கள் வாழ்வில் நடந்த/நடக்கும் சம்பவங்களை இப்படி(எந்த பள்ளிவாசலில் யாரோடு என்ன எது குறித்து பேசினேன் என்று) விளக்கமாக கூறினால் அது நீங்கள் யார் என்ற அடையாளத்தை வெளிபடுத்திவிடும் சாத்தியம் உள்ளது. இதை தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.
வாங்க ஆனந்த்,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்!
இஸ்லாமின் எல்லாப் பிரிவுகளுமே ஆபத்தானதுதான்! அதில் இந்த தப்லீக் ஜமாஅத் என்பது ஒரு ஆளை மெல்லக் கொல்லும் விஷம்!
//உங்கள் வாழ்வில் நடந்த/நடக்கும் சம்பவங்களை இப்படி(எந்த பள்ளிவாசலில் யாரோடு என்ன எது குறித்து பேசினேன் என்று) விளக்கமாக கூறினால் அது நீங்கள் யார் என்ற அடையாளத்தை வெளிபடுத்திவிடும் சாத்தியம் உள்ளது. இதை தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது.// ஆலோசனைக்கு மிக்க நன்றி! இதைக் கவனத்தில் கொள்கிறேன்.
இது போன்ற கட்டுரையை எழுதியது தஜ்ஜால்தானா ஆச்சரியமாக உள்ளது
இது போன்ற கூட்டம் ஒன்று என் தம்பி ஒருவனை மசாலா அரைக்கிறது.
வாஙக ஈஸா,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
//இது போன்ற கட்டுரையை எழுதியது தஜ்ஜால்தானா ஆச்சரியமாக உள்ளது// புரியவில்லை. எழுதலாம் என்கிறீர்களா? எழுதக் கூடாது என்கிறீர்களா?
//இது போன்ற கூட்டம் ஒன்று என் தம்பி ஒருவனை மசாலா அரைக்கிறது.// அதெந்தக் கூட்டம் சொல்லுங்கள் கவனித்துவிடலாம்!
//இஸ்லாமின் எல்லாப் பிரிவுகளுமே ஆபத்தானதுதான்! அதில் இந்த தப்லீக் ஜமாஅத் என்பது ஒரு ஆளை மெல்லக் கொல்லும் விஷம்! //
அஹ்ளுஸ் சுன்னா என்ற தமிழ் மாத இதழ் சுன்னத் ஜமாஅத்தின் கொள்கை பிரகடன இதழ் என்று கூறிக்கொள்கிறது. அதின் ஆசிரியர் மாதத்துக்கு ஒரு சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு அதை பற்றி அந்த மாத இதழ் முழுவதும் பக்கம் பக்கமாக எழுதுவது வழக்கம். ஒரு சில மாதங்களுக்கு முன்பு தப்லீக் ஜமாஅத் ஒரு வழிகெட்ட கூட்டத்தினர் என்று அந்த மாத இதழ் முழுவதும் எழுதினார். அந்த ஜமாத்தை தோற்றுவித்தவர் முஹம்மது நபிக்கும் அவரது தோழர்களுக்கும் எதிராக எப்படியெல்லாம் எழுதியுள்ளார் என்று அவருடைய நூல்களில் இருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டினார். அதுசரி, இஸ்லாத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவும் மற்ற பிரிவுகளை வழிகேடர்கள் என்று சொல்வதும் சொல்வதோடு நிற்காமல் செயலில் இறங்கி அவர்களை கொல்வதும்தானே அழகிய நபிவழி(சுன்னத்)!
{{{ //இது போன்ற கட்டுரையை எழுதியது தஜ்ஜால்தானா ஆச்சரியமாக உள்ளது// புரியவில்லை. எழுதலாம் என்கிறீர்களா? எழுதக் கூடாது என்கிறீர்களா? }}}
ஈசா தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது. நீங்கள் இப்பொழுது தப்லீக் ஜமாத்தை தோலுரிக்க ஆரம்பித்துள்ளதை பார்த்து அவருக்கு ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது போலும்!
நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் பணி புரிந்தேன். அதில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் முஸ்லிம்கள். அதில் பலர் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள். அவ்வப்போது 40 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மார்க்க அழைப்பு பணிக்காக சென்றுவிட்டு வருவர். நீங்கள் படத்தில் காட்டியதுபோல், அவர்கள் எப்பொழுதும் வெள்ளை தொப்பி, வெள்ளை ஜிப்பா, வெள்ளை பைஜாமா என்று கிறிஸ்தவ பெந்தேகொஸ்தே பிரிவினர் போன்று வெள்ளையும் சொள்ளையுமாக காட்சியளிப்பர். அதில் 32 வயதுடைய ஒருவர் தீவிர தப்லீக்வாதி. அலுவலகத்திற்கு அருகாமையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு தினமும் தொழுகைக்கு சென்று வருவார். அவ்வப்போது அங்கு அவர் தப்லீக் ஸ்டைலில் சொற்பொழிவு ஆற்றுவது வழக்கம். இப்படி அவர் பேசுவது அந்த பள்ளிவாசலின் இமாமுக்கு பிடிக்கவில்லை என்றும் அவருக்கு என்மேல் ரொம்ப காண்டு என்று என்னிடம் மகிழ்ச்சியாக சொல்வார். தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த ஒருவரும் அங்கு வேலை செய்து வந்தார். ரம்ஜான் மாத நோன்பின்போது முஸ்லிம் ஊழியர்கள் அலுவலகத்திலேயே நோன்பை முடித்துக்கொண்டு மக்ரிப் தொழுகை செய்வர். ஆனால் இந்த தவ்ஹீத்வாதி அவர்களுடன் தொழுகையில் கலந்துகொள்ளமாட்டார். தவ்ஹீத் ஜமாஅத் பார்வையில் சுன்னத் ஜமாத்தினர் இணை வைப்பவர்கள் என்பதுதான் அதற்கு காரணம்.
இது போன்ற கருத்தாக்கம் வரவேற்கப்படுகிறது.
அதே கோவையில் தான்.
வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை மட்டும் கோடானு கோடி முஸ்லிம்களில் ஒருவன்தான்.
மதநல்லிணக்கத்தோடு வாழ நினைக்கும் சராசரி முஸ்லிம்.
வீண் கற்பனை வேண்டாம்.
apo eesa Islam Penn kalviyai marukirathuu othukrengala . oru mudivuku vaanga. Intha seithi nalla irkina atha othukrenganu thane artham
Yes
//வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை மட்டும் கோடானு கோடி முஸ்லிம்களில் ஒருவன்தான்.//
என்ன ஈசா பாய் இப்படி சொல்லீட்டீங்க!
பல வருடங்களுக்கு முன்பு ஒரு முஸ்லிம் பெரியவர் என்னிடம் "தினமும் ஐந்து வேளை தொழுபவர்களுக்குதான் ஜும்ஆ, இல்லையென்றால் அது சும்மா" என்று கூறியது நினைவுக்கு வருகிறது!
தொழுகை(5 வேளை- குரான்படி 3 வேளை தொழுகைதான் கடமை என்று கூறுகிற கூட்டமும் உண்டு) புரியாதவர்கள் நஷ்டமடைந்தவர்கள், நரகவாசிகள் என்று குரான் கூறுகிறது. ஜமாஅத் தொழுகையை விடுபவர்களை அவர்களின் மண்ணறையில் பாம்பு குத்தும் என்று ஹதீஸ் கூறுகிறது. முஸ்லிமாக இருந்துகொண்டு இதையெல்லாம் நீங்கள் நம்புவதில்லையா?
தங்கள் நலனில் மிகுந்த அக்கரை கொண்டு விடுக்கும் ஒரு வேண்டுகோள், தயவு கூர்ந்து தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை தவிர்த்தும் இன்றியமையாத நிகழ்வில் புனைவாகவும் வெளியிட்டால் நல்லது (மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் நேர்வழியிலேயே செல்பவர்கள் என்பதால் ஏற்படும் அச்ச உணர்வே காரணம்).
ஏனைய சமுதாயத்தினரைவிடவும் இஸ்லாமியர்கள் ஏன் பின்தங்கிய நிலையில் வேலைவாய்ப்புகளில் உள்ளனர் என்பதை கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு இஸ்லாமிய பெண்மனியும் கல்விக்காக தன் குடும்தத்திற்குள்ளும் மதத்திற்குள்ளும் பொறும் போராட்டத்தை நடத்திதான் கல்வி பயில வேண்டியுள்ளது என்ற நிலை அவர்கள் மீது மிகுந்து மரியாதையை ஏற்படுத்துகிறது (நான் இதுவரை அவர்களை சராசரி நபர்களாகத்தான் கண்டுவந்தேன்).
இஸ்லாமிய பெண்களின் நிலையை அறிவதே வேதைனையானதாக உள்ளது. இஸ்லாமிய பெண்மனிகளை கொண்டு கட்டுரை வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அனைத்து பிரிவு பெண்களின் விடுதலைக்கு குரல் எழுப்புவதாக அமைந்துள்ளது. இதுவே உண்மையான பெண்விடுதலைக்கான குரலாகும். தங்கள் போராட்டம் தனிப்பட்ட நபருக்கானதல்ல என்பதை அறிந்து கொண்டேன். கட்டுரை தொடர்புடையவர்களிடையே நிச்சயம் விளிப்புணர்வை ஏற்படுத்தும்.
எல்லாம் தெரிஞ்சாலும் என்ன செய்ய.
நிஜவாழ்க்கை கஷ்டம். கு
வாங்க Javith Naseem,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
முஃமின்கள் சண்டைக்கு வருவார்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஈஸா நமது கருத்தை ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
வாங்க ஆனந்த்,
//வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை மட்டும் கோடானு கோடி முஸ்லிம்களில் ஒருவன்தான்.//
என்ன ஈசா பாய் இப்படி சொல்லீட்டீங்க! //
நம்ம ஈஸா பாய் மாதிரி முஃமின்களுக்கு உதவறதுக்காக தஸ்லீமா நஸ்ரின், 5 வேளைத் தொழுகையை ஒரு நேரமா சுருக்கனும்னு சொல்லியிருக்காங்க.
நீங்கள் 3 வேளைத் தொழுகை என்றதும், இஸ்லாமில் பல புதுமைத்திட்டங்களை அறிவித்த கேரளாவைச் சேர்ந்த சேகனூர் மவுலவி என்பவரின் பயான்களும் போராட்டங்களும் நினைவு வருகிறது. அமைதியை விரும்பும் முஃமின்கள் அவரை நிரந்தர அமைதிக்கு அனுப்பியது உங்களுக்கே தெரியும்!
வாங்க Ant,
நன்றிகள்!!!
//தங்கள் நலனில் மிகுந்த அக்கரை கொண்டு விடுக்கும் ஒரு வேண்டுகோள், தயவு கூர்ந்து தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை தவிர்த்தும் இன்றியமையாத நிகழ்வில் புனைவாகவும் வெளியிட்டால் நல்லது (மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் நேர்வழியிலேயே செல்பவர்கள் என்பதால் ஏற்படும் அச்ச உணர்வே காரணம்). // நண்பர் ஆனந்தும் இதையே கூறினார் உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்.
//ஏனைய சமுதாயத்தினரைவிடவும் இஸ்லாமியர்கள் ஏன் பின்தங்கிய நிலையில் வேலைவாய்ப்புகளில் உள்ளனர் என்பதை கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. // எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும், மற்ற கல்வி எதற்கு என்று நினைக்கும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அதிலும் பெண்கள் கல்வியின் நிலையை கேட்கவே வேண்டாம். இந்தப் பதிவில் குறிப்பிட்ட அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்தவைகளை நாகரீகம் கருதி நிறைய “எடிட்” செய்துவிட்டேன். கல்விக்காக அங்கு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூன்று குழந்தைகள் ஒரு தாய் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஒவ்வொரு நகர்வையும் மிக கவனமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தனது விருப்பத்திற்கேற்ப குழந்தைகளை வளர்க்கவும், தனது ஈமான்தாரித்தனத்தை உலகிற்குக் காண்பிப்பதற்காகவும் தப்லீக்வாதி “தலாக்” கூறி குழந்தைகளைப் பிரித்துச் செல்லத் தயாராக இருக்கிறார். இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு ஆதரவாக தப்லீக் ஜமாஅத்! இதைப்பற்றி இன்னொரு வாய்ப்பில் கூறுகிறேன்.
தஜ்ஜால்,
//எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும், மற்ற கல்வி எதற்கு என்று நினைக்கும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அதிலும் பெண்கள் கல்வியின் நிலையை கேட்கவே வேண்டாம்.//
ஆமாம். முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கு யூதர்களின் சதி, கிறிஸ்தவர்களின் சதி, இந்துத்வாவின் சதிதான் காரணம் என்று அனைத்து பிரிவு இஸ்லாமிய தலைவர்களும் காலம் காலமாக கூறி வருவது இந்த உலகத்துக்கே தெரியும். காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்கள் என்றும் எல்லா வகையிலும் பின்தங்கியே இருப்பார்கள். அவர்களின் மார்க்கம் எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு உதவாது. மற்ற சமுதாய மக்களின் வளர்ச்சியை பார்த்து கோபப்பட்டு அவர்களை திட்டிக்கொண்டு இருப்பதால் அவர்களின் நிலை மாறப்போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தால் அது அவர்களுதான் நல்லது.
தங்களின் அனுபவம் கூறும் செய்திகள் அனைத்து இந்துக்களும்கூட அறிந்த அப்பட்டமான கொடுமைதான். தப்லீக் ஜமாத்தினர் மட்டுமல்ல, சுன்னத்துள் ஜமாத்தினரும் அவ்வாறுதான் நடந்துகொள்கிறார்கள். தவ்ஹீது தாதாக்கள் பெண் கல்வியை ஆதரிப்பதாக சொல்லுவதும் பொய்வேடமே. உண்மை நிகழ்வுகள் அவ்வாறில்லை.மறைமுகமாக மிரட்டி வருகின்றனர். இது போல் நான் அறிந்தவைகள் ஏராளம். தனது ஆறுவயது மகளுக்கு புர்கா போட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் வக்கிரபுத்திக்காரர்களும் உண்டு. தினசரி மாலை 4மணியளவில் நான் பார்க்கும் காட்டசிகளில் இதுவும் ஒன்று.
எப்படி ஐயா தங்களுக்கு செய்திக்கு தொடர்பான படங்களும் வீடியோக்களும் கிடைக்கின்றன. இரயில் நிலைய தொழுகை நல்ல தமாஷ். அல்லாவா? காசுபணமா?
முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டவா்கள். இந்துக்களை அடிமைப்படுத்தி சொத்துக்களையும் அரசியல் செல்வாக்கும் பெற்றதனால் இந்தியாவில் உயா் வருவாய் பிாிவினராக -மே்ட்டுக்குடியினராக வாழ்ந்தனா். அதனால் முஸ்லீம் பெண்களை முக்காடுயிட்டு வீட்டுக்குள் வைத்தனா்.எப்போதும் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பெற்ற மேட்டுக்குடியினா் பெண்களை வெளியே வேலைக்கு அனுப்ப மாட்டாா்கள்.சற்று ரோசக்காரா்களும் அனுப்ப மாட்டாா்கள்.
இன்று முஸ்லிம்கள் மே்ட்டுக்குடி மககளாக இல்லை. தங்கள் நிலைமைக்கு எற்ற ஒரு வாழக்கை முறையை ஏற்படுத்த பழைய கதைகள் நினைவுகள் தடுக்கின்றது.காயல்பட்டணம் கீழக்கரை போன்ற ஊா்களில் பணக்கார பெண்கள் கடைக்கு வருவாா்கள் இஅவர்களுக்கு துணைக்கு பல ஏழை பெண்கள் வருவாா்கள்.
இராமநாதபுரம் மாவட்டங்களில் முள்சுமப்பது பதனீா் காய்ப்பது பொன்ற மிகக்கடினமான வேலைகளை இந்து -பெண்கள் செய்வாா்கள்.முஸ்லீம் பெண்களை செய்ய விடமாட்டாா்கள். பாவம் வகைதொியாது மாட்டிக்கொண் தவிக்கின்றாா்கள். எங்கள் ஊாில் பஞ்சாயத்துயுனியன் பள்ளியில் ஆசிரியையாக ஒரு முஸ்லீம் பணியாற்றி வந்ததாா். சைவ பிள்ளை ஆசிரியாரைக் காதலித்தாா். உண்மையான தீவிரகாதல். காதல் ஜோடி ஊா்விட்டு போய் திருமணம் செய்தது. முஸ்லீம்கள் பொங்கி எழுந்து அப்பெண்னை பிாித்துக் கொண்டு சென்றாா்கள். ஆனால் அந்த பெண் கடைசி வரைக்கும் வேறு ஒருவனை திருமணம் செய்யவில்லை. சைவபிள்ளை மாப்பிள்ளை திருமணம் செய்ததா் -10 வருடங்கள் கழித்து- ஆனாலும் பழைய காதலியின் நினைவுகாரணமாக முழு குடிகாரன் ஆனாா். ஒரே ஊாில் வாழந்தாலும் இருவரும் ஜோடி சேரவில்லை.
பிற மத ஆண்களுக்கு பயந்து பெண்களை படிக்க தொழில் செய்ய அனுப்ப
விரும்பவில்லை முஸ்லீம்கள். விதிவிலக்குகள் விதி ஆகாது. முஸ்லீம் பெண்களும் படித்தால் கண்ணியமாக வாழ்வாா்கள்.திருநெல்வேலி மருத்துவ கல்லுாி முதல்வராக தற்சமயம் ஒரு முஸ்லீம் பெண் பணியாற்றி வருகின்றாா்.மிகச் சிறப்பாக செயல்படுகின்றாா். ஊா் மக்கள் அவரை பொிதும் பாராட்டுகின்றாா்கள்.
வணக்கம் நண்பர்களே நாண் கேராலவில் 11வருசமா வேல செய்யுரேன் இங்க உள்ள முஸ்லிம்ஸ் எல்லோரும் 100/80%டிகிரி படிச்சவங்க அப்போ குர்ஆண் தமிழ் நாட்டில் உள்ளவங்களுக்கு மட்டும் தப்பா சொல்லுச்ச ில்ல ிவங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்களா
Post a Comment