Wednesday 12 November 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 5

“ஏன்.. என்ன ஆச்சு..? என்றேன்.


”ஒன்னுமில்லை..! என்றார்.


”அல்லாஹ், ஜிஹாதிகளை மிகவும் விரும்புவதாகப் படித்திருக்கிறேன்.ஏன் அது உண்மையில்லையா?”

“மத்தவங்களைவிட ஜிஹாதிகளை உயர்வாகக் சொன்னது நான்தான்” என்றார்.


“ஜிஹாதிகளால் உங்களுக்கு என்ன லாபம்?”


“அவர்கள் உன்னதமானவர்கள் இறைவனுக்காக உயிரைக் கொடுக்கவும்.எடுக்கவும் துணிந்தவர்கள்.அவங்களை மற்றவங்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்ட நினைத்தேன்.”

”அவங்க தங்களோட உடலையும், உயிரையும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் அது அவங்களோட தனிப்பட்ட உரிமை.அடுத்தவங்க உயிரை எடுக்கறதுக்கு இவனுக யார்?உயிரை மட்டுமா எடுக்கறானுக, உடைமைகளையும் கொள்ளையடிக்கிறாங்க!”




”அதைக் கொள்ளைன்னு கேவலம் பண்ணாத.. அது கனீமத்!(ganimat-போர்களில் கிடைக்கும் பொருட்கள்) நான் அவர்களுக்குக் கொடுத்தது இறைநம்பிக்கை உலகில் நிலைபெறனும்னா இந்த மாதிரி தேவைகள் இருக்கு!”







”உங்க ஜிஹாதிகளைப் பார்த்து மத்தவங்களும் ஆளுக்கொரு குரூப்பை அதேமாதிரி ஃபார்ம் பண்ணி வச்சிருக்கானுக. அவங்களும் இறைநம்பிக்கையை மட்டுமல்ல தேசபக்தியையும் முன்னிறுத்திதான் போராடராங்க.அவங்க ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகள்! அவங்களையும் நீங்க கட்டாயமாக ஜிஹாதிகள் கணக்கில சேர்த்து சொர்க்கலோக சல்லாபங்களை வழங்கனும்!”



”நீ யாரைச் சொல்லற?”


“எங்க ஊர்ல ஆன்மீகப் பணியோட, தேசப்பணியில் ஈடுபட்டு நாட்டுக்கு சேவை செய்யற எத்தனை குரூப் இருக்கு தெரியுமா?”


”… …?!”


”29-11-1997,14-02-1998 கோயமுத்தூர்ல இந்த ஜிஹாதிகளோட மோதல் நடந்தது. இதுல நவம்பர் 29ல் இருந்து டிசம்பர் 1 க்குள் அந்த மூனு நாள்ல,  ஏறக்குறைய அன்றைய மதிப்புக்கு ரூபாய் 70 கோடிக்கு நம்ம ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகளுக்கு கனீமத் கிடைச்சது, கூடவே 20 பேரோட உயிரும் கிடைச்சிருக்குன்னா பார்த்துக்கங்க! அட அவ்வளவு ஏன், அன்றைக்கு கோவையில நடந்த தாக்குதல்ல ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகள், கனீமத் பொருட்களை கைப்பற்றுவதை நான் நேர்லயே பார்த்திருக்கேன். ஒரு இத்துப்போன டீக்கடையில இருந்த பழைய பிஸ்கட்டைக்கூட விடலன்னா பார்த்துக்கங்க!”


“ஏய்…! நீ என்னத்தை உளறிகிட்டு இருக்கே!”




”அப்புறம் 14-02-1998-ல் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்த, தேசபக்தர்களின் ஜிஹாத் நடவடிக்கையிலும் ஏறக்குறைய ரூபாய்100 கோடிக்கு மதிப்புள்ள கனீமத் பொருள்களோட 58 பேரோட உயிர்களும் கிடைச்சதாம். அன்னைக்கும் இந்த ஜிஹாதிகளோட நடவடிக்கைகளை, நான் நேர்லையே பார்த்தேன். எல்லாத்தையும் விட தேசபக்தி ஜிஹாதிகளுக்கு  குஜராத்தில கிடைச்ச அன்ஃபால் (போர்களில் கிடைக்கும் பொருட்கள்)பற்றியும் உயிர்களைப்பத்தியும் உங்களுக்கே ரொம்ப நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன்.”




“இதெல்லாம் ஜிஹாத் இல்ல! மதவெறிபிடிச்சவங்க... திட்டம் போட்டு செய்த கலவரம்! இதைப் போய் ஜிஹாத்னு சொல்லற நீ என்ன… லூஸா?” என்று எரிந்து விழுந்தார் பெரியவர்.


“இதென்ன அநியாயமா இருக்கு முஹம்மது, அன்னைக்கு குறைஷிகள், யூதர்கள், கிறிதவர்களுக்கும் இதையேதான் செய்தார்.இன்னைக்கு அந்த ’சுன்னா’வை கொஞ்சமும் தவறாம தலீபான்களும், ISIS ஜிஹாதிகளும் கடைபிடிக்கறாங்க!”


”… …!”


ஆக ஜிஹாதிகளும், ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகளும் கடவுளோட பேரைச் சொல்லிதான் கொலை செய்யறாங்கள், கொள்ளையடிக்கறாங்க, கற்பழிக்கிறாங்க. இந்த குரூப்ல ஒன்றை மட்டும் எப்படி புனிதமானத சொல்லறது?”


”உன்னோட உளறல கொஞ்சம் நிறுத்தறியா…? ஜிஹாதிகள் எனக்காக உயிரைத் தியாகம் செய்யறவங்க!”


”நம்ம ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகள் மட்டும் அவங்க பக்கத்து வீட்டுக்காரனுக்காகவா கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை செய்யறாங்க? அவங்களும் கடவுளுக்காக, கடவுள் பேரைச் சொல்லிதான் செய்யறாங்க!”


”உனக்கு பைத்தியம்தான்னு நினைக்கிறேன்!. டேய்… லூஸு ரெண்டும் வெவ்வேற!” என்று கத்தி, அமைதியானார்!


 



இனி இந்தப் பேசைத் தொடர்ந்தால் பெரியவர் என்னைக் கடித்துக் குதறிவிடுவார் என்று தோன்றவே சற்று பாதையை மாற்றினேன்.


“அய்யா கோபப்படாதீங்க நான் சொல்லறது பொய்யில்ல!ஒரு ஆட்சியாளருக்கு தனக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கற அடிமைகள் தேவை.அவர்களை தன்னிடமே தக்கவச்சிக்க அவர், மானே, தேனே, பொன்மானேன்னு கொஞ்சலாம்.அப்படி இளிச்சவாயன்கள் இருந்தால்தான் அவரோட வண்டி ஓடும்.உங்களுக்கு அப்படி ஏதாவது தேவை இருக்குதா?”


“நான் எந்த தேவையும் இல்லாதவன்!நான் செய்யறது செய்யச் சொல்லறதெல்லாம் மனிதர்களுக்காக, அவர்களது நன்மைக்காகத்தான்!”


“அய்யா இந்தக் கேள்வியை ஆரம்பத்தில இருந்து கேட்டுகிட்டே இருக்கேன்.நீங்க செய்யறாத சொல்லக்கூடிய ஒவ்வொரு செயலுமே உங்களை தேவையுள்ளவராகத்தான் காண்பிக்குது!”


”... ...!?”


“ஒரு உயிரினம் அல்லது ஜடப் பொருளின் ஒவ்வொரு அசைவு அல்லது மாற்றமும் ஏதோ ஒரு தேவையின் அடிப்படையிலதான் நடக்குது.நீங்கள் எந்தவிதமான தேவைகளும் இல்லாதவன்னு சொன்னால், நீங்கள் எந்தவிதமான மாற்றமும் இல்லாத ஜடமாக இருக்க வேண்டும்.ஆனால் உங்களின் நிலை அப்படியில்லையே?”


”... ...?!”


“பிரபஞ்சம், அர்ஷ், உதவிக்கு மலக்குகள், சொர்க்கம், நரகம், சாத்தான், வேதங்கள், பூமி, மனிதர்கள்,  தூதர்கள், ஜிஹாதிகள், அவங்களுக்கான விதி,  மரம் செடி கொடி.... இப்படி இன்னும் இன்னும்... இவ்வளவையும் உருவாக்கினது தேவையில்லாமலா?”


”நான் தேவையில்லாதவன் சொல்லறது அதனால் கிடைக்கிற பலன்களை வைத்துதான்.நீ லிஸ்ட் போட்டு சொன்ன எதிலிருந்தும் எந்தப் பலனையும் நான் அனுபவிகிறதுமில்லை; அவைகள் எனக்குள் எந்த மாற்றத்தையும் உண்டுபண்ணறதுமில்லை!”


“அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம் பேசிக்கிட்டு இருந்ததையே சொல்றேன். அல்லாஹ் மகிழ்ச்சியடைவான், நன்றி சொல்வான்(Q4:147), கோபப்படுவான்(Q2:90), கேலிசெய்வான்(Q9:79), சிரிப்பான், சபிப்பான்(Q5:60) குர்ஆன்ல சொல்லியிருக்கதாக சொன்னீங்களே... நினைவிருக்கா...?”


“ஆமாம் நான் சொன்னதுதான்! அதற்கென்ன...?” என்றார் நெற்றியை சுருக்கியவாறு,


“பொதுவாக, சிரிப்பது, மகிழ்ச்சியடைவது, நன்றி சொல்வது, கேலி செய்வது, சதி செய்வது, கோபப்படுவது போன்ற செயல்கள்ஒருவரது மனநிலை ஏற்படுற மாற்றங்களின் வெளிப்பாடுதானே?”


“ஆமாம்..!”


“ஒருவர் ரொம்ப ஆவலாக எதிர்பார்க்கிற, மனநிறைவை தரக்கூடிய  காரியங்கள், நிறைவேறும் பொழுது மகிழ்ச்சிய வெளிப்படுத்துகிறார், இல்லையா?”

“ஆமாம்..!”


“அதேமாதிரி விருப்பமில்லாத காரியங்கள் நடைபெறும் பொழுது, அவர்  வெறுப்பையும், கோபத்தையும் வெளிப்படுகிறார்.  அப்படித்தானே?”


“நீ சொல்லறது சரிதான்”


“ஒருவர், தனது எதிரியை வெற்றி கொள்வதற்காக செய்யற இரகசியமான குறுக்குவழிகள்தானே சூழ்ச்சி?”


“ஆமாம்!”


“எந்தவிதமான தேவைகளும், புறக்காரணிகளால் தன்னுள் எவ்வித மாற்றமும் அடைய முடியாத ஒருவரால்,  ஒருவரை எப்படி எதிரியாகக் கருதமுடியும்?”

“... ...!?”


”தேவைகளே இல்லாதவர் எதற்காக கோபம் கொள்ளவேண்டும்?எதிரிகளை அழிக்க சூழ்ச்சி செய்யனும்?”


“... ...?!”


”ஆக, எந்த விதமான விருப்பு வெறுப்புமில்லாத ஒருவரால், எப்படி இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்? எனக்குத் தெரிந்தவரையில் உணர்வுகள் என்பது நமக்குள் ஏற்படுகின்ற மாற்றத்தின் வெளிப்பாடுதான். மனிதர்களோட ஒவ்வொரு செயலும் அல்லாஹ்விற்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் உங்க குர்ஆனின் வாக்குமூலம்!!!”


”... ...?!”


”விருப்பு, வெறுப்பு என்பவைகள் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.அப்படிப் பார்க்கும் பொழுது அல்லாஹ்வாகிய உங்களுக்கு தேவைகள் இருக்குங்கறதுதான் உண்மை!”


“இல்லை...  நீ சொல்லறது தவறான விளக்கம்!”


“சரி... நான் சொல்லறது தவறாகவே இருக்கட்டும்.சரியான காரணத்தை நீங்க விளக்குங்க?”


“ஒரு பெற்றோர் தனது குழந்தைகளை கண்டிகிறதும், தண்டிக்கிறதும் வெறுப்பினால் குழந்தைகளின் நன்மைக்காகத்தான்.அதனால் பெற்றோர்களுக்கு எந்த லாபமும் இல்லை!”


“அய்யா, நீங்க சொல்லறது உண்மைதான் மறுக்கல. ஆனால் சராசரி மனுஷங்களை மாதிரி திரும்பவும் லாப நஷ்ட கணக்கைப்பத்தியே பேசறீங்க! நான் கேட்கறது தேவைகளைப்பற்றி, அதனால் ஏற்படும் மாற்றங்களைப்பற்றியது. பெற்றொர்கள் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்; தங்களோட குழந்தைகளின் செயல்களுக்காக, சமுதாயத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் அவங்களுக்கு இருக்கு.உங்களுக்கு அப்படி ஏதாவது நிர்பந்தம் இருக்க என்ன?”


“... ...!?”


”இஸ்லாமை விமர்சனம் செய்யறதும், கேள்விகேட்கறதுக்கும், உன்னோட வளர்ப்பு சரியில்லை அதனாலதான் நீ இப்படி இருக்கேன்னு என்னப்பார்த்து என்னுடைய நெருங்கிய சொந்தக்காரங்களே சொல்லியிருக்காங்க. இந்த மாதிரி தேவைகள் உங்களுக்கு இருக்கா?”


”நீ எல்லா விஷயங்களையும் குதர்க்கமாகவே புரிஞ்சு வச்சிருக்கே!”


“இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாலம் செய்யறதாகச் சொல்லறதும், தேவைகள் இல்லாதவன் செல்லறதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது!”


“நீ விதண்டாவாதமாகவே பேசிகிட்டு இருக்கே....!”


“அய்யா, அல்லாஹ்வுக்கு குர்ஆன் கொடுக்கும் தன்மைகளில் இருக்கற முரண்பாட்டைத்தான் சொல்லறேன்.சரி... தேவைகளே இல்லாத உங்களுக்கு உங்களுக்கு ஜிஹாதிகள் எதுக்கு?”


“ஜிஹாதிகளின் அவசியம் முஹம்மதிற்கு இருந்தது!”


“நீங்க சொல்லறதைத்தான் அவர் சொல்லிக்கிட்டு இருந்திருக்காரு!முஹம்மது மேல எதுக்கு பழியப் போடறீங்க?”


”அதென்ன முஹம்மது மேல திடீர் பாசம்?” என்றார் கிண்டலாக


”முஹம்மதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லைனு உங்களால் சொல்ல முடியலை.அதனால் முஹம்மதின் செயல்களுக்கு நீங்கதான் பொறுப்பு. போதாக்குறையாக விதியைவேறு எழுதிவச்சிருக்கீங்க அதனால எப்படிப் பார்த்தாலும் எல்லாத்துக்கும்  நீங்க மட்டும்தான் பொறுப்பு!”


”ஏப்பா நீ.... இந்த விதியைப்பத்திப் பேசறத விடவேமாட்டியா?”


”சரி... பேசவில்லை! சொர்க்கம் இருக்கு, அங்கே பாலும் தேனும் ஆறாக பெருக்கெடுத்து ஓடுது, தங்கம் இருக்கு, வெள்ளி இருக்கு, வைரம் இருக்கு வாழைப்பழம், திராட்சைப்பழம் இருக்கு கட்டில்களில் மார்பகம் பெருத்த கன்னிகள் தயாராக இருங்காங்கனு(Q 78:33) சொன்னது நீங்களா... இல்ல... அவரா?”


”நான் சொன்னதைத்தான் அவர் சொன்னார்”


”எந்த தேவைகளும் இல்லாதவன்னு சொல்லிகிட்டு, கவர்ச்சியான பொண்ணுகளைக் காட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன?அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர்  இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.  (Q 55:56) புத்தம்புது சரக்கு வச்சிருக்கேன் விளம்பரம் வேற செய்யறீங்க”


”அடப்பாவி...!!! அதெல்லாம் எனக்கில்ல... எல்லாம் உன்னை மாதிரி மனுஷங்களுக்காகத்தான்”


“சந்தடி சாக்கில என்னை அந்த லிஸ்ட்ல நுழைக்க வேண்டாம். தெரியாமத்தான் கேட்கிறேன், மார்பகம் பெருத்த பொண்ணுகள் வேணும்னு எவன் உங்ககிட்ட கேட்டது?”


”யாரும் கேட்கல..! நானாகத்தான் மனுஷங்களுக்கு பிடிக்குமேன்னு ஏற்பாடு செய்தேன்!”


”அய்யா... நான் தெரியாமத்தான் கேட்கிறேன், பாலூட்டிகளுக்கு இருக்கும் மார்பகங்களோட பணி என்ன?”


”குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக!”


“நித்திய கன்னிகளான ஹூரிகளுக்கு பெருத்த நிமிர்ந்த தளர்வடையாத மார்பகங்கள் எதுக்கு?”

”உங்களுக்கெல்லாம் பிடிக்குமேன்னுதான் பிரதியேகமா ஏற்பாடு (Q 55:35) செய்து வச்சிருக்கேன். அதுக்குப்போயி இப்படி கேள்வி கேட்கிறியே... உனக்கு வேண்டாம்னா விட்டுறு!”


“இந்த விஷயத்தை அத்தனை லேசில் விடமுடியாது.சொர்கத்திற்கு வர்ற மனுஷங்க எல்லோருமே நாக்கத் தொங்கப்போட்டுட்டு அலைவாங்கனு எப்படி முடிவு செய்தீங்க?”


”உலகத்தில நடக்கிற விஷயங்களை நீ பார்க்கறதே இல்லை போலிருக்கு..?” என்றார் சற்று நக்கலாக.


“சரி மனிதன் அலைபவனாக இருக்கட்டும். குர்ஆன் 7:43 என்ன சொல்லியிருக்குனு உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.


“ம்ம்.. தெரியும்.. அத நீயே சொல்லு!” என்றார்


“(Q 7:43) அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம்... மனிதர்களோட உள்ளத்திலிருக்கும் குரோதத்தை எடுத்து விடுவதாகச் சொல்லற நீங்கள், அவனது உணர்வுகளிலிருந்து காமத்தை எடுத்திருக்கலாம் ஹூரிகளை பிரத்தியேகமாக படைக்கிற வேலையாவது மிஞ்சியிருக்கும்!”


“… …!”


”சொர்க்கத்தில வைத்து மனிதர்களோட மனதிலிருக்கும் குரோதத்தை எடுக்கறதுக்குப் பதிலாக, இந்த உலகத்தில வாழும்போது நீக்கியிருந்தால், எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இந்த உலகமே சொர்க்கமா இருந்திருக்கும்; நீங்க வேலைமெனக்கெட்டு சொர்ர்கத்தை படைக்கவேண்டிய வேலையே இருந்திருக்காது!”


“எனக்கே ஆலோசனை சொல்லறியா?”


”சொர்க்கத்தில வைத்து விதவிதமாக லைவ் ஷோ பார்க்கறதுல உங்களுக்கு அலாதியான விருப்பம்னு சொல்லறேன்.!”


”... ...!?”


”சொர்க்கவாசியாக வருகிற ஆண்களுக்கெல்லாம் நூறுஆட்களுக்கு சமமான உடலுறவு சக்தியெல்லாம் வழங்குவீங்களாமே? அதென்ன கணக்கு 72 ஹூரிகள்?”


“... ...!?”


”எனக்கு ரொம்ப நாளாகவே இன்னொரு சந்தேகமும் இருக்கு, ஜிஹாதிகள்  என்றால் யார்?”


”இதென்ன கேள்வி,  அல்லாஹ்விற்காக உயிர் துறப்பவர்கள் ஜிஹாதிகள்!”

“கொல்லறவனும் அல்லாஹ் அக்பர்னு சொல்லறான், கொல்லப்படறவனும் அல்லாஹ் அக்பர்னு சொல்லறான்.இவங்கள்ல யார் ஜிஹாதி, இதெல்லாம் என்ன வகையான ஜிஹாத்?”


”... ...!?”




”போதாக்குறைக்கு, இந்த காட்டுமிராண்டி ஜிஹாதிகளுக்கு சேவகம் செய்யறேன் முஸ்லீம் பெண்களில் ஒரு கூட்டம் செக்ஸ் ஜிஹாத் செய்யறேன்னு கிளம்பிட்டாங்க. வரவர ஜிஹாதிகளோட கணக்கு ஒரு வரைமுறையில்லாம போயிட்டிருக்கு. சரி... பெண்களுக்காக உங்க சொர்க்கத்தில என்ன ஏற்பாடுகளை தயார்படுத்தி வச்சிருக்கீங்க?அவங்களுக்கும் ஏதாவது 72 ஐட்டங்கள் இருக்குதா?”


“பெண்களுக்கு,அழகிய விலைமதிப்பில்லா ஆபரணங்கள், உயர்ந்த உணவுவகைகள் தங்கத்தால் ஆன கட்டில்கள், இன்னும் அவங்களுக்கு பிடித்தமானவைகள் அங்கு கிடைக்கும்!ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள் (Q4:124).” என்றார்.


“உங்க ஆபரணங்கயும், தங்கம், வெள்ளி வைரங்களை ஒரு பயலும் சீண்டலைன்னு, எல்லாம் வீணாகப் போச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் புலம்பிக்கிட்டு இருந்தீங்க. திரும்பவும் அதையே சொல்றீங்களே...?போகற போக்கப் பார்த்தால் சொர்க்கத்தில் பெண்கள் நுழையறதே அல்லாஹ்வோட பெரிய கருணையின்னு சொல்லுவீங்க போல இருக்கும் போலிருக்கே?”


“... ...!?”


“பெண்களுக்கு பிடித்தமானது இருக்கட்டும்.நான் கேட்கறது பெண்களுக்காக நீங்க, உங்க தரப்பு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் பரிசுகள் என்ன?”


“அங்கே அவங்களுக்கு பிடித்தமானவைகள் எல்லாமே அங்கு கிடைக்கும்!”


நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர் (Q41:31,32).திடீர்னு ஒரு சொர்க்கவாசி ஓரினச் சேர்க்கை செய்ய விருப்பம் தெரிவித்தால் அதுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கீங்க?”


“ஓரினச்சேர்க்கை செய்ய உலக வாழ்க்கையிலேயே அனுமதி கிடையாது சொர்க்கத்தில எப்படி அனுமதிக்க முடியும்?அதுமட்டுமல்ல அவர்களால் அப்படி கேட்கவும் முடியாது.அந்த மாதிரி தீய எண்ணங்களை அவங்களை விட்டு நீக்கப்படும்!”


“அதாவது அங்கேயும் நீங்க எதை விரும்பறீங்களோ அதைத்தான் சொர்க்கவாசிகளும் கேட்பாங்க, அப்படித்தானே?அப்புறம் எதுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும்னு முழம்போடறீங்க? 72 பெண்களோட குடியும், குடித்தனமாக 24 மணிநேரமும் கட்டிலில் புரளறதுக்கு உலக வாழ்க்கையில மட்டும் உங்களால் அனுமதிக்கப்பட்டதா என்ன?”

“… …?”

”ஆண்களுக்காக, தொங்கிப்போகாத பெருத்த மார்பகங்கள், எப்பவுமே தளர்ந்து போகாத பெண்ணுறுப்பு இருக்கற மாதிரியெல்லாம் ஹூரிகளை ஸ்பெஷலாக தயார்படுத்திய உங்களுக்கு, பெண்களுக்காக பிரதியேகமான ஆண்களைப் படைக்கவேண்டுமென்று தோன்றவே இல்லையா?”


“பெண்களும் விரும்பினால், அவர்களுக்கும் ஹூரிகள் அங்கே கிடைக்கும்”


“அதென்ன... பெண்கள் விரும்பினால்....? அப்போ.... ஆண்கள் எல்லோரும் உங்கிட்ட வந்து, அல்லாஹ்... அல்லாஹ்... எங்களோட காமஇச்சை அடங்கவே மாட்டேன் என்கிறது அதனால சொர்க்கத்தில எங்களுக்கு ஹூரிலீன் பெண்களை ஏற்பாடு செய்யுங்க... அவங்களுக்கு கொழுத்த மார்பகங்கள் இருக்கனும்... நைஞ்சு போகாத பெண்ணுறுப்பு இருக்கனும், ஆனாலும் அவங்க எப்பவும் கன்னியாகவே இருக்கற மாதிரி செய்தால் செய்தால் நல்லாயிருக்கும்னு உங்ககிட்டவந்து சொன்னாங்களா என்ன?”

”இல்லை...! நானாகத்தான் இந்த ஏற்பாட்டை செய்தேன்.மனிதர்களோட குணத்தையும் செயல்களையும் அடிப்படையாக வைத்து இப்படியொரு ஏற்பாடுகளை செய்தேன்!”


”அப்போ… பெண்களுக்கென்று எந்த உணர்வும் கிடையாது?”


“… …?”


“நீங்களாகவே ஆண்களுக்கு காம உணர்வை தூண்டியும் விடுவீங்க, லேகியமும் கொடுப்பீங்க, ஹூரிலீன் பெண்களையும் ஏற்பாடு செய்வீங்க அப்படித்தானே?”

“... ...!?”

“நல்லா இருக்கு உங்க நியாயம்! சொர்க்கத்தில பெண்களுக்கு என்ன இருக்குனு கேட்டால், அவங்க விரும்பியதைக் தருவேன்னு மழுப்புவீங்க. ஆக சொர்க்கத்திலேயும் இந்த அப்பாவிப் பெண்கள், ஹூரிகள்கூட லீலை செய்யதிட்டு வர்ற ஆண்களோட காலைக் கழுவிக் குடிக்கனும் அப்படித்தானே?”

”…. …!?”

“தன்னுடைய கணவன் ஹூரிகளே கதின்னு இருக்கதினால, வெறுத்துப்போன மனைவி, தனக்கும் ஆண் ஹூரிகள் வேணும்னு கேட்டால் கிடைக்குமா, கிடைக்காதா?”


”இதைத்தான்அப்பவேசொன்னேன். அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு…(Q25:16). பெண்கள் விரும்பியது கிடைக்கும்!”


”கணவன் ஒருபுறம் ஹூரிலீன் பெண்களோட கூத்தடிப்பானாம்; மனைவி இன்னொரு புறம் ஆண் ஹூரிகளோட கூத்தடிப்பாளாம்; ஆனால் இவங்க ரெண்டுபேரும் கணவன் மனைவியாம்! ஆனாலும் ரொண்டுபேரும் ஒருத்தர்மேல இன்னொருத்தர் அன்பாக இருப்பார்களாம்! ஹிஜாபைப் பேணவேண்டும், திரைக்குப்பின்னால்தான் இருக்கனும், கற்பைப் பாதுகாக்கனும், மறைவிடங்களைப் பேணிபாதுகாக்கவேண்டும்னு சொல்லிகிட்டு இருந்தீங்களே, சொர்க்கத்தில அப்படி எதையும் பாதுகாக வேண்டாமா? இந்த பிரபஞ்சத்த படைச்சு, பூமியப் படைச்சு, அதுல மனுஷங்களையும்,  பலவிதமான உயிரினங்களையும் படைச்சு, விதவித நபிமார்களையும் அனுப்பி நேர்வழி காண்பிகிறேன், நேர்வழி காண்பிக்கிறேன்னு ஒவ்வொருத்தரையும் இம்சித்தது இந்த கேடுகெட்ட வாழ்க்கைக்காத்தானா?”


”…. ….!”

”தெரியாமத்தான் கேட்கிறேன், திருமணம், அன்பு, காதல் கற்பு இந்த மாதிரி வார்த்தைகளுக்கெல்லாம் உங்க மறுமை அகராதியில் என்ன பொருள்?”


”... ...!”


”நீங்க சொல்ல மாட்டீங்கனு எனக்குத் தெரியும்.உங்க ஆலீம்கள் சொல்லறத அப்படியே சொல்லறேன். திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை செம்மையாக பகிர்ந்து கொள்வது இஸ்லாமிய திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும். திருமணம் என்பது பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

“… …!”

”திருமணத்தைபற்றிய இந்த விளக்கத்தைமுல்லாக்களும், முஸ்லீம்களும் எந்த அளவுக்குப் பின்பற்றாங்கனு என்னால் சொல்ல முடியும்! இப்ப நாம அதைபத்தி பேச வேண்டிய அவசியமில்லை. உலக வாழ்க்கை நடைமுறையைவிட உங்க சொர்க்கலோக வாழ்க்கை எந்தவிதத்தில உயர்ந்ததுனு சொல்லறீங்க?”

”… …!”

”இந்த மாதிரி வேலைகளை ஏற்பாடு செய்யறவங்களுக்கு, உலகவழக்கில வேறொருபேர் இருக்கு...!”

”என்னுடைய உயர்ந்த படைப்பான சொர்க்கத்தையும், என்னையும் நீ கேவலப்படுத்தறே. உனக்குத் தெரியுமா, ”அவன் செய்வதுபற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள் (Q 21:23).” என்றார்.

“அவன்செய்வதுபற்றிவிசாரிக்கப்படமாட்டானா?இப்படி ஏதாவது சொல்லி தப்பித்தால் மட்டுமே உங்களால் காலம்தள்ள முடியும். அல்லாஹ்விற்கு நீதியாளன் ஒரு பேர் இருக்கறாதாக சொல்லுவாங்க; அப்படியே அந்தப் பேரையும் மாத்திடுங்க. உங்களையும், உங்க குர்ஆனையும் நினைச்சா சிரிப்புதான் வருது”

”.... ...!??”

”அய்யா கோபப்படதீங்க இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை. யார் சொல்லறது சரிங்கிறத உங்க சொர்க்கத்தை நேர்ல பார்த்து முடிவு செய்வோம். வாங்க இப்பவே போகலாம்” என்றேன்.


“இல்லை... வேண்டாம்...!” என்றார் அவசர அவசரமாக,


நிச்சயமாக அங்கு ஏதோ குழப்பம் இருக்கிறது என்று மனம் பரபரக்கத் துவங்கியது.முதியவரின் முகம் சுருங்கிப்போய், கோபமும் இயலாமையும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. நான் அவரை நோக்கி,

“அய்யா... வாங்க அப்படியே பேசிக்கிட்டே நடப்போம்... வாங்க...!” என்றவாறு, எங்கே போக வேண்டுமென்பதே  தெரியாமல் அடியெடுத்து வைக்கத் துவங்கினேன்.


”இந்தப் பக்கம் வா...” என்றவாறு பெரியவர் எனக்கு வலது புறமாக கையைக் காட்டினார். நான் பெரியவரைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்தேன். நீண்ட நேரம் நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.


“அய்யா... நாம..ரொம்பதூரம் போகனுமா?” என்று மறுபடியும் உரையாடலைத் துவங்கினேன்.


“ஆமாம்... தூரம்தான்.குறுக்கு வழியொன்னு இருக்கு அதுல போனா அத்தனை தூரம் இருக்காது!” என்றவர் மீண்டும் அமைதியாகிவிட்டர். பெரியவரை ரொம்பவும் ’கார்னர்’ செய்துவிட்டேனோ என்றம் என்னுள். பெரியவரிடமிருந்து வெளிப்படும் ஒளியால் அருகிலிருப்பவற்றைத் தெளிவாக காணமுடிந்தது. கண்ணுக்கெட்டிய வரை சீரான சமதளத்தைத் தவிர வேறெதுவும் தென்படவில்லை; நீண்ட தூரம் சென்றது போலிருந்தது. எங்கும் ஒருவிதமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.


“இத்தனை நாட்களாக கடவுள் இல்லை, இல்லைனு சொல்லிகிட்டு இருந்தியே இப்ப என்ன சொல்லப்போற?” என்று பெரியவர் தனது அமைதியைக் கலைத்தார்

தொடரும்...



தஜ்ஜால்

Facebook Comments

5 கருத்துரைகள்:

Ant said...

தங்களை போலவே அதிக பணிபளு காரணமாக பின்னூட்டம் வழங்க இயலவில்லை(தட்டச்சு செய்ய அதிக நேரமாகும்). இருப்பினும் கட்டுரைகளை வாசிக்க தவறவில்லை. நல்ல கட்டுரையாளரை சமூக மாற்றத்திற்கு வித்திடும் ஒருவரை பின்னூட்டத்தின் வழியாவது ஆதரிக்காது போனால் கடமையில் இருந்து தவறியாதாகவே ஆகும். எனவே, பணிபளுவிற்கும் நடுவே இனி பின்னூட்டங்கள் தொடரும். கடமை தொடரும். சமூக மாற்றம் தொடங்கட்டும். உங்கள் பணி சிறக்கட்டும்.

Anonymous said...

நீங்க தான் உண்மையான பகுத்தறிவாதி. மத வன்முறை என வரும்போது, இந்துத்வாவை பற்றி மட்டும் பேசி சமூகத்துக்கு மிக பெரிய தீங்கை செய்யும் பெரியாரின் குஞ்சாமணிகள், ஜிகாத் பற்றி பேசணும்னா பயத்துல உச்சா போவாங்க. நீங்க அப்படி இல்லாமல் அனைத்து மத பயங்கரவாதத்தையும் சுட்டுறிங்க. இதற்கு தனி நெஞ்சுரம் வேண்டும்.

தஜ்ஜால் said...

வாங்க Ant,
பார்த்து ரொம்ப நாள் ஆச்சு! நீங்கள் சொல்வது உண்மைதான். பின்னூட்டங்கள்தான் எங்களை சீர்செய்ய உதவுகிறது. எனவே நமது விருந்தினர்கள் எங்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ ஆலோசனைக்கூறியோ எப்படி வேண்டுமானாலும், பின்னூட்டமிட்டு எங்களுக்கு உதவவேண்டும்!

தஜ்ஜால் said...

வாங்க Anonymous

நன்றி!

எங்களைப் பொறுத்தவரையில் அனைத்து மதக் கொள்கைகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தீவிரவாதமும் அப்படியே அதை யார் செய்தாலும் தவறுதான். இங்கு இஸ்லாம்பற்றி சற்று அதிகமாக விமர்சிக்கப்படுவது உண்மைதான். iஇது இஸ்லாமிற்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டதளம். ஆயினும் அவ்வப்பொழுது மற்ற டவுசர்களும் இங்கு கிழிக்கப்படும்.

இஸ்லாம்பற்றி பெரியாரின் தொண்டர்கள் சற்று அடக்கிவாசிப்பதில் எனக்கும் வருத்தம்தான்!

சிவப்புகுதிரை said...

நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் கட்டுரையை படிக்க முடிந்தது..வாசகர்களுக்கு புதிய கோணத்தில் இசுலாமை புறிய வைக்கின்றீர்கள்.உங்கள் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.