Monday, 5 May 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -2

குர்ஆன் 6:101-ல், மனிதர்களை நோக்கி அல்லாஹ் எழுப்பும் கேள்வி இதுதான்.

வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?
பீஜே மொழிபெயர்ப்பு

முன் மாதிரியின்றியே வானங்களை மற்றும் பூமியைப் படைத்தவன்; அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு

அவன் வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்.
தர்ஜுமா.காம் வெளியீடு

(அவன்) வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி (எவரும்) இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?
கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு

அல்லாஹ்விற்கு மனைவி இல்லை அதனால் குழந்தையில்லை! இது நியாயமான வாதம்தானே?

இதைச் சொல்வதற்கு எதற்காக இத்தனை மொழிபெயர்ப்புகள் என்று கோபம் கொள்ள வேண்டாம்.  இதில் வழக்கம் போல குர்ஆனின் முட்டாள்தனமும் மொழிபெயர்ப்பாளர்களின் கைவரிசையும் உள்ளது.

அதைப் பார்ப்பதற்குமுன் மனைவி என்ற பதத்தை குர்ஆன் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் காணலாம்.  குர்ஆன் ஒரு அற்புதம்(!) என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதன் மொழிபெயர்ப்புகள் அதைவிட பேரற்புதமாகும். அதனால்தான் என்னவோ அண்ணன் பீஜே ஒரு விவாதத்தில், தமிழிலோ அல்லது வேறுமொழிகளில் உள்ளவைகளை நாங்கள் குர்ஆனாகக் கருதுவதில்லை என்றார். ஒவ்வொரு குர்ஆன் மொழிபெயர்ப்பாளரும் எத்தனை சிரமப்பட்டு, வேதனைப்பட்டு, விமர்சனங்கள் என்ற பெயரில் சகமுஸ்லீம்களிடம் செருப்படிபட்டு, சவுக்கடிபட்டு, மரண அடிபட்டு குர்ஆனை வேறொரு புத்தகமாகவே மாற்றி வெளியிடுகிறார்கள் தெரியுமா? அதை குழப்பக் குவியலான குர்ஆனுடன் ஒப்பிட்டால் எரிச்சல் வருமா,  வராதா? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு பெண்களைப்பற்றி புகழ்ந்துரைக்கும் ஒரு அழகிய வசனத்தைக் காண்போம்.




குர் ஆன் 2:223
உங்கள் மனைவியர் (نِسَاؤُكُمْ-nisāikum) உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!...

இவ்வசனத்தைப்பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள்; நம்மைப் போன்றவர்களாலும் மாற்று நம்பிக்கையிலிருப்பவர்களாலும் நிறையவே விமர்சிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் குர்ஆனின் மொழிநடைக்குள் செல்வோம்.

நிஸா என்பதன் மூலச்சொல் (ن س و) குர்ஆனில் ஏறக்குறைய 59 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ”அன்னிஸா” என்ற அத்தியாத்தைப்பற்றி குறிப்பிடும் பொழுது அண்ணன் பீஜே இவ்வாறு கூறுகிறார்.

மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, வாரிசுரிமை போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது "பெண்கள்' எனும் பெயர் பெற்றது.

தலைப்பைப்பற்றி இவ்வாறெல்லாம் கூறும் அண்ணன் பீஜே, குர்ஆன் வசனத்திற்குள் வரும் பொழுது ”உங்களது பெண்கள்” என்று பொருள்படும் ”Nisāukum” என்ற சொல்லை “உங்களது மனைவியர்” என்று மொழிபெயர்ப்பு செய்து தனது அடியார்களின் காதுகளில் பூந்தோட்டத்தை அமைக்கிறார். இவர் மட்டுமல்ல ஏறக்குறைய அனைத்து தமிழ் மட்டுமல்ல ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ”நிஸா” என்பதை பல இடங்களில் மனைவியென்றே மொழிபெயர்த்துள்ளனர். பிக்தால் போன்ற ஒரு சிலர் மட்டுமே “நிஸா” என்பதை “Women” என்று மொழிபெயர்த்துள்ளனர்.

குர்ஆன் நிஸா என்று குறிப்பிடும் 59 இடங்களையும் ஆய்வு செய்தால் அதுவே ஒரு தனி புத்தகமாக எழுத வேண்டிவரும். எனவே உதாரணத்திற்கு ஓரிரு வசனங்களை மட்டும் ஆய்வு செய்வோம்.

குர் ஆன் 2:187
நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம்(نِسَائِكُمْ-nisāikum) கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது...

குர்ஆன் 4:15
 உங்கள் பெண்கள்(نِسَائِكُمْ-nisāikum) வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்!...

குர்ஆன் 4:23
...உங்கள் மனைவியரின்(نِسَائِكُمْ-nisāikum) அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு(نِسَائِكُمُ-nisāikumu) (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர்....

குர்ஆன் 65:4
உங்கள் பெண்களில்(نِسَائِكُمْ-nisāikum) மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.

இரண்டிற்கும் மேற்பட்ட பெண்களைக் குறிப்பிட அரபியில் நிஸா என்ற சொல் பயன்படுகிறது. இதில் ஒருமைச் சொல் கிடையாது. ஆனால் இவர்கள் மனைவியர்/மனைவி என்று மொழிபெயர்த்துள்ளனர்.  ”உங்கள் பெண்களிடம் விரும்பியவாறு செல்லுங்கள்” என்று அல்லாஹ் சொன்னதை, இவர்கள் எதற்காக மனைவியரிடம்” என்று திருத்தி மொழிபெயர்க்க வேண்டும்?

இதேபோல பெண்களைக் குறிப்பிட குர்ஆன் பயன்படுத்தியுள்ள im'ra-atan - im'ra-atayni என்ற பதங்களும் மொழிபெயர்பாளர்களை தர்மசங்கடத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது.  இதையும் மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் ’மனைவி’ என்றும் ஒரு சில இடங்களில் குர்ஆனின் உளறல் போக்கை சரிகாணும் விதமாக ‘பெண்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.  ஸுலைமானின் அடிமையாக இருந்த ஒரு ஜின், அரசி ஷிபாவைப்பற்றி குறிப்பிடுவதைக் கூறும் பொழுது,

குர்ஆன் 27:23
நான் ஒரு பெண்ணைக் (امْرَأَةً- im'ra-atan) கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள்.

குர் ஆன் 3:35
"இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' என்று இம்ரானின் மனைவி(امْرَأَتُ -im'ra-atu) கூறியதை நினைவூட்டுவீராக!

நாம் இதுவரைக் கண்ட பெண்பாலைக் குறிப்பிடும் இடங்களில் பெண் என்றோ அல்லது மனைவி என்றோ பொதுவாக மொழிபெயர்த்தால் விவகாரமான பொருள்வரும்.  பெண்கள் என்றால் யார்? தாயும் பெண்தான் தாரமும் பெண்தான்! மனைவி என்று மொழிபெயர்த்தால் முழுக் குர்ஆனும் காமெடி புத்தகமாகிவிடும். எனவே குர்ஆனை மொழிபெயர்த்தவர்கள் அவரவர் தேவைகளுக்கேற்ப மானே தேனே பொன்மானே என்று போட்டு நம்மிடம் ’ஜிகினா’ வேலை காண்பிக்கின்றனர்.

 பிறகு ஏன் அல்லாஹ் nisāikum, im'ra-atan போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

மனைவியரின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதித்த அல்லாஹ், அடிமைப் பெண்கள் விஷயத்தில் எந்த வரைமுறைகளையும் விதிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். திடீர்த் தாக்குதல்கள் மூலம் அப்பாவி பெண்களைக் கைப்பற்றி அடிமைகளாக்குவதும், திருமணபந்தமின்றி, அவ்வடிமைப் பெண்களிடம் கூடுவதும்; அவர்களைத் தங்களது பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியபின் சந்தையில் விற்பதும்; மீண்டும் வேறொருவர் வாங்கிப் பயன்படுத்துவதும்; மீண்டும் விற்பது.... இப்படித் தொடரும் கேடுகெட்ட செயலை பழிப்பிற்குரியதல்ல; இவர்களுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டதே என்கிறது குர்ஆன். (இதற்கும் விபச்சாரத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையாம்!) எனவேதான் அல்லாஹ் மனைவியர்கள் என்று கூறாமல் பெண்கள் என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறான்.

குர்ஆன், நேரடியாக மனைவியரைக் குறிப்பிடவே இல்லையா?

திருமணபந்தத்தில் இருக்கும் துணைவியர்களை அதாவது மனைவியைக் குறிப்பிட அரபியில்   أَزْوَاجًا-zawjan என்ற என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இப் பதத்தை இதே பொருளில் குர்ஆனும் ஏறக்குறைய 76 இடங்களில் பயன்படுத்தியுள்ளது. எனவே, பெண்களில் மனைவியரைப் பிரித்தறிவிக்கும் சொல்லை அல்லாஹ் அறியாமலில்லை.

ஆனால் அல்லாஹ் கூறுவதையெல்லாம் அப்படியே கூறினால் மனநிலை பாதிப்படைந்தவன் கூட இஸ்லாம் இருக்கும் திசைக்குக் கூடத் திரும்பமாட்டான். பிறகு கல்லாவை நிறைப்பதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் கூட்டத்தைக் கூட்டுவது எவ்வாறு? இதப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

எனவேதான், குர்ஆன் 2:187-ல் வரும் ”நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுவதன் மூலம் மனைவியர்களுடன் மட்டும்தான் கூடவேண்டுமென்ற பொய்த் தோற்றத்தை உருவாக்கி, தாங்களது புத்தகத்தின் மீது இல்லாத புனிதத்தை ஏற்ற முனைகின்றனர். விருப்பம் போல அடிமைப் பெண்களுடன் கூடிவாழலாம்(4:3,24,25, 24:6, 33:50, 70:30) என்ற குர்ஆனில் அனுமதி வழங்கியுள்ள அல்லாஹ்வை இவர்கள் முட்டாளாக்குகின்றனர்.


குர்ஆன் 6:115
உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை.

அல்லாஹ்வை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவனது வார்த்தைகளை மாற்றுபவர்கள் எவருமில்லையாம்!

மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கிறது; அரபுமொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது; அரபுமொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லாமல், மாறாக அதைவிட பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது; என்று முஸ்லீம்களும், தெளிவானது, விளக்கமானது, விவரிக்கப்பட்டது என்றெல்லாம் தன்னைத் தானே சொறிந்து கொள்ளும்  குர்ஆனின் அழகு இதுதான்!


நான் தலைப்பிலிருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டதாக நினைக்க வேண்டாம். நான் முன்பே கூறியபடி குர்ஆனின் அர்த்தமற்ற மொழிநடையை விவாதிக்கத் துவங்கினால் தனித்து ஒரு புத்தகத்தை எழுத வேண்டிவரும். ஆயினும் ஒரு சில செய்திகளைக் கூறுவது இங்கு தவிர்க்க முடியாததாகிறது. குர்ஆனை அதன் மூலமொழியில் அணுகினால் எப்படி இருக்கும் என்பதை விளக்கவே இவற்றைக் கூறுகிறேன். ஹதீஸ்களும், குர்ஆன் விரிவுரையாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் உதவில்லையென்றால் குர்ஆனின் ஆசிரியரென்று கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கே அது புரியாமல் போயிருக்கும்.

’அல்லாஹ்விற்கு மனைவியில்லை அதனால் வாரிசு இல்லை’ என்பதும் இதைப் போன்றதொரு ’தில்லாலங்கடி’ மொழிபெயர்ப்புதான்!

குர்ஆனைப் பொருத்தவரையில், வாரிசு என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே உருவாகவேண்டும் என்ற வரைமுறையில்லை. ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவால் இணைவதற்கும், வாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் திருமணமென்பது இரண்டாம் வாய்ப்புதான். ஏனெனில் ஒருவர் திருமணமின்றி அடிமைப்பெண்களுடன் உடலால் இணைவதையும் அதனால் குழந்தையைப் பெற்றெடுப்பதையும் குர்ஆன் தடைசெய்யவில்லை. மேலும் அவருக்குப் பிறந்த குழந்தை, சொந்த எஜமானின் குழந்தையாகக் கருதப்படும் அதேவேளையில், குழந்தையைப் பெற்றுக் கொடுத்த அந்த அடிமைப்பெண் அவரது மனைவி என்ற தகுதியைப் பெறுவதில்லை.

முஃமின்களுக்கு இத்தனை சலுகைகளை...

சிறிய திருத்தம்..!

முஃமின்களில் ஆண்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வழங்கிய அல்லாஹ்விற்கு மட்டும் மனைவி இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

அல்லாஹ் ஒரு ஆணா...!?
தொடரும்...



தஜ்ஜால்

Facebook Comments

8 கருத்துரைகள்:

Naga Che said...

அல்லாஹ் ஒரு ஆணா...!?

பயங்கர twistல முடிச்சிருகிங்க‌

தஜ்ஜால் said...

வாருங்கள் Naga Che,

twist எல்லாம் ஒன்றுமில்லை! குர்ஆனை வாசிக்கும் எவரும் இதை எளிதாக அறியலாம்.

Ant said...

//தாங்களது புத்தகத்தின் மீது இல்லாத புனிதத்தை ஏற்ற முனைகின்றனர். விருப்பம் போல அடிமைப் பெண்களுடன் கூடிவாழலாம்(4:3,24,25, 24:6, 33:50, 70:30) என்ற குர்ஆனில் அனுமதி வழங்கியுள்ள அல்லாஹ்வை இவர்கள் முட்டாளாக்குகின்றனர்.

குர்ஆன் 6:115
உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை.

அல்லாஹ்வை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவனது வார்த்தைகளை மாற்றுபவர்கள் எவருமில்லையாம்!// ஞானம்மிக்கோன் ஒரு வார்த்தையை பயன்படுத்தும் போது தெரியாமலா பயன்படுத்துவார். முஃமீன்களுக்கு அந்த வார்த்தைகள் எல்லாம் தற்காலத்திற்கு பொறுந்தாது என்று என்னுவதன் வெளிப்பாடே பொருளை மாற்றுவது.
இந்த கேள்விக்கு இதுவரை விளக்கம் பெறமுடியவில்லை:

//தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீஉண்ணும் நாளில் சாகவே சாவாய்"; என்று கட்டளையிட்டுச் சொன்னார்.// கூறுவது http://www.bibleintamilDOTcom/ref2009/u_mk07-14-23d05wwed.htm
ஆனால்
//17 ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார்.// இது http://www.biblegatewayDOTcom/passage/?search=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+2%2CGenesis+2&version=ERV-TA;NIV
உண்டாலா? அல்லது உண்னும் நாளிலா? நாள் என்றால் அதை தாண்டி மனிதன் உயிர் வாழ்கிறானே!

ஆனந்த் சாகர் said...

//விருப்பம் போல அடிமைப் பெண்களுடன் கூடிவாழலாம்(4:3,24,25, 24:6, 33:50, 70:30) என்ற குர்ஆனில் அனுமதி வழங்கியுள்ள அல்லாஹ்வை இவர்கள் முட்டாளாக்குகின்றனர்.//

இதே முஸ்லிம்கள் இவர்கள் அமைக்க விரும்பும் உலகளாவிய கலீஃபா ஆட்சி ஏற்பட்டால்(அது நடக்கப்போவதில்லை) அடிமை முறையை திரும்பவும் கொண்டுவந்து விருப்பம் போல அடிமைப் பெண்களுடன் ஜல்சா செய்யலாம் என்று கூறுவார்கள். உலகில் முஸ்லிமல்லாதோர் அதிகாரமிக்கவர்களாக இருப்பதால் நாகரிக உலகத்துக்கு ஏற்றபடி முஸ்லிம்கள் குரானின் வசனங்களின் பொருளை திரித்து நாடகமாடுகின்றனர். அவர்களின் திரிபுவாதத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள கூடாது.

ஆனந்த் சாகர் said...

//அல்லாஹ் ஒரு ஆணா...!?//

அல்லாஹ் ஒரு அலி(9) என்பது முஸ்லிம்களின் கருத்து. அல்லாஹ் தன்னை அவன்-இவன் என்று ஆண் பாலில் அழைத்துக்கொள்கிறான். பெண்களை பல வகைகளில் கேவலப்படுத்துகிறான். காஃபிர்களுக்கு ஆண் வாரிசுகள், தனக்கு மட்டும் பெண் வாரிசுகளா? என்று கோபப்படுகிறான். ஒரு அலி இப்படி நடந்து கொள்வதில்லை. எனவே அல்லாஹ் ஒரு அலியாக இருக்க வாய்ப்பில்லை. சரி, அல்லாஹ்வை அவன்-இவன் என்று சொன்னவன் எவன்-அவன் என்று பார்த்தால் அது முஹம்மதுதான் என்று தெரிய வருகிறது!

ஆனந்த் சாகர் said...

//ஹதீஸ்களும், குர்ஆன் விரிவுரையாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் உதவில்லையென்றால் குர்ஆனின் ஆசிரியரென்று கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கே அது புரியாமல் போயிருக்கும்.//

உண்மைதான். பொய்கள்,சமாளிப்புகள், பசப்பல்கள், புது புது அர்த்தங்களை வசதிக்கு ஏற்ப இட்டுக்கட்டுவது போன்ற நயவஞ்சக நடிப்புகளை அரங்கேற்றித்தான் இஸ்லாமிய அறிஞர்கள் எனப்படும் கபட வேடதாரிகள் குரானுக்கு போலி கவுரவத்தை ஏற்படுத்தி பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த வேடதாரிகளின் உதவி கிடைக்கவில்லை என்றால் அல்லாஹ்வின் நிலை நகைப்புக்கும் கேலிக்கும் உரியதாக ஆகிவிடும்.

நாட்டு வேங்கை said...

எப்பா, ஒரு புத்தகத்திற்குள் இத்தனை தகிடதத்தங்களா? ஆய்வு செய்து பாருங்கள் என்று மூச்சுக்கு முன்னூரு தடவை கூப்பாடு போடுகிறர்கள். உள்ளே போனால் நார் நாராக அல்லவா குர்ஆன் கிழிந்து தொங்குகிறது. தஜ்ஜாலின் பணி அபாரமானது.

மஜீத் said...

:)

தஜ்ஜால் தங்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள்.