இரவுப் பயணம் …!
உம்மு ஹானி : முஹம்மது நபியுடைய பெரிய தகப்பனார் அபூ
தாலிபின் மகள். இவரது உண்மையான
பெயர் ஃபகிதா. உம்மு-ஹானியை விரும்பிய முஹம்மது நபி திருமணம் செய்து
தருமாறு அபூ தாலிபிடம், கேட்கிறார். ஆனால்
ஏதோ சில காரணங்களால் அபூ தாலிப் மறுத்து,
உம்மு ஹனியை, ஹூபைரா என்பவருக்கு திருமணம்
செய்து வைத்து விட்டார். தன் கணவருடன் அபிசீனியாவில் வாழ்ந்து
வந்தார். அவரது கணவர் இறந்ததால், மக்காவிற்கு
குடிபெயர்ந்திருந்தார்.
தாயிப் நகரத்திற்கு
தன்னுடைய புதிய மார்க்கத்தைப் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்யச் சென்ற முஹம்மது
நபி, தாயிப் நகரவாசிகளின் ஏளனச் சொற்களால்
தாக்குதலுக்குள்ளானார். முயற்சி தோல்வியடைந்த மனவேதனையுடன்
கஅபாவில் படுத்திருந்தவர், இரவில் எல்லோரும் உறங்கியவுடன்
யாரும் அறியாமல் எழுந்து உம் ஹனியின் வீட்டிற்குச் சென்றார். இது முஹம்மது நபியுடைய மனைவி கதீஜா மற்றும் பெரிய தகப்பனார் அபூ தாலிப் ஆகியோரது
மரணத்திற்குப் பின் நிகழ்ந்த சம்பவம்.
கஅபாவில் படுத்திருந்த
முஹம்மது
நபியயை காணவில்லை என மக்கள் தேடிய
பொழுது அவர் உம்மு ஹனியின் வீட்டிலிருந்து
வெளியே வந்தவர், மக்காவின்
கஅபாவில் இருந்து ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல்
முகத்தஸ்) என்ற புனிதமான பள்ளிவாசல் வரை வான்வெளி பயணம்
மேற்கொண்டு, அங்கு மற்ற நபிமார்களுடன் தொழுகையில் ஈடுபட்டு,
அதன் பிறகு அங்கிருந்து அல்லாஹ்வை சந்திக்க, ஏழாம்
வானம் வரை சென்ற தனது விண்வெளி பயணத்தைப்
பற்றி மக்களிடம் கூறுகிறார். முஹம்மது நபியின் விண்வெளிப்பயணத்தை குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது,
தன்னுடைய அடியாரை
ஓரிரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த
ஒருவன் மகாப் பரிசுத்தமானவன்…
(குர் ஆன் 17:1)
புகாரி ஹதீஸ் 3207
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
நான்
இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி)
தூக்கமாகவும் (பாதி)
விழப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது.
எனது நெஞ்சம் சாறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது.
பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது.
பிறகு,
(என் இதயம்)
நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது.
மேலும்,
கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னும் (மின்னல் வேக)
வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
நான் (அதில் ஏறி)
ஜிப்ரீல் (அலை)
அவர்களுடன் சென்றேன்.
நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…
நெஞ்சைப்பிளந்து OPEN HEART SURGERY செய்து பாவம் நீக்கப்பட்ட கதையை இவர் சிறுவயதிலிருந்து
கூறிக் கொண்டிருக்கிறார். முஹம்மது நபிக்கு இரண்டுமுறை அறுவை சிகிச்சையால் பாவங்கள்
நீக்கப்பட்டிருக்கிறது. அவரது இறைநம்பிக்கையிலும் அறிவிலும் பெரிய குறைபாடு இருந்ததோ
என்னவோ?. நுண்ணறிவும் இறைநம்பிக்கையும் கூடுதலாக அவரது இதயத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது.
(இதில் BCI என்ற அதிநவீன அறிவியல் முன்னறிவிப்பு இருக்கிறது என்று முஃமின்கள் தொடரலாம்).
நம்மில் பலருக்கு இரத்தத்தில் கொழுப்பின் அளவு உயர்வது என்பது வெகுஅன்றாட நிகழ்வாகிவிட்டது.
இதில் நமது முஃமின்களும் கணிசமாக உள்ளனர். உணவுக்கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடல்பயிற்சி
என்று சிரமப்படுவதைவிட முஃமின்களும் இந்த உயர்தொழில்நுட்ப ஆன்மீகத்தை பயன்படுத்த வேண்டுகிறோம்.
OPEN HEART SURGERY தேவைப்படும் பொழுது மருத்துவரிடம் இதயத்தில் தேங்கியிருக்கும் பாவத்தையும்
சேர்த்து நீக்கிடுமாறும், ஜம்ஜம் நீரினால் தங்களது இதயத்தை கழுவி சுத்தம் செய்துதருமாறும்
முஃமின்கள் கேட்கலாம். எதற்காக இதை வலியுறுத்துகிறேன் என்றால் கண்மணி நாயகம் முஹம்மது(ஸல்)
அவர்களின் ஒரு சுன்னத்தை வாழவைத்த நன்மையும் முஃமின்களுக்கு கூடுதல் நன்மையாக கிடைக்குமல்லவா?.
இச்சம்பவத்தைப்பற்றி உம்முஹனி கூறுகையில் (OPEN HEART
SURGERY பற்றியல்ல விண்வெளிப்பயணத்தைப்பற்றி)
From Ishaq: 184
“Umm (Hani), Abu Talib's daughter,
said: “The Apostle went on no journey except while he was in my house. He slept
in my home that night after he prayed the final night prayer. A little before
dawn he woke us, saying, ‘O Umm, I went to Jerusalem.' He got up to go out and
I grabbed hold of his robe and laid bare his belly. I pleaded, ‘O Muhammad,
don't tell the people about this for they will know you are lying and will mock
you.' He said, ‘By Allah, I will tell them.' I told my negress slave, ‘Follow
him and listen.'”
அபூதாலிப்பின் மகள்
உம்மு (ஹானி)
கூறுவதாவது,
(அல்லாஹ்வின்)
தூதர் என்வீட்டிலிருந்ததைத்தவிர எந்தப் பயணத்திற்கும் செல்லவில்லை. இரவு
வணக்கத்திற்குப் பின் என் வீட்டில் உறங்கிவிட்டார்.
அதிகாலைக்கு சற்று முன்பாக எங்களை எழுப்பி, ”ஓ,
உம்மு நான் ஜெருசலேமிற்கு சென்றிருந்தேன்" என்று கூறி, வெளியே செல்ல முயன்றவரை அவரது உடையைப்
பிடித்து இழுத்து நிறுத்தினேன். "ஓ முஹம்மதே இதைப்பற்றி
மக்களிடம் கூறாதீர், அவர்கள் நீங்கள் பொய் சொல்வதாகக் கூறி
ஏளனம் செய்வார்கள் என்றேன். "அல்லாஹ்விற்காக, அவர்களிடம் நான் கூறுவேன்" என்றார். நான், என் நீக்ரோ அடிமையிடம், அவரை
பின்தொடர்ந்து சென்று கவனிக்க கூறினேன்)
தன்னுடைய பயண நினைவுகளில் மூழ்கியவாறு பள்ளியில் அமர்ந்திருந்த முஹம்மது நபியை
காணும் அபூஜஹ்ல், “ஏதாவது செய்தி
இருக்கிறதா?” என்றார். நபி
பதிலளிக்கையில், "ஆம். நேற்று
இரவு ஜெருசலேம் அழைத்துச் செல்லப்பட்டேன்." என்றார்.
தான் கேட்டது சரிதானா என்பதற்காக மறுபடியும், "ஜெருசலேமிற்கா?" என்றார் அபூஜஹ்ல்.
முஹம்மதை ஒரு பொய்யர் என்று நிரூபிக்க நல்ல வாய்ப்பு
கிடைத்ததாக நினைத்த அபூஜஹ்ல் முஹம்மது நபியிடம், "நான் மற்றவர்களையும் அழைத்து
வருகிறேன் அவர்களிடமும் இதைக் கூற முடியுமா? என்றார்.
அதற்கு சிறிதும் தயக்கமின்றி "ஆம்"
என்றார். தன் பயண நிகழ்வுகளை அவர்களிடம்
கூறினார். முஹம்மது நபியின் கூற்றைக் கேட்ட மக்கள் சிரித்து
வெவ்வேறு முறைகளில் ஏளனம் செய்கின்றனர். அம்மக்கள் தங்களது சந்தேகங்களை தீர்க்கும் வகையில், அங்கு
எத்தனை கதவுகள் இருந்தது?, எத்தனை ஜன்னல்கள் இருந்தது?
அங்கு நிலவிய தட்பவெப்ப நிலை என்ன? என்பது
போன்ற பலவிதமான கேள்விகளை மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றி கேட்கின்றனர்.
இப்னுல் கய்யிம் (ரஹ்)
கூறுகிறார்
காலையில் நபி (ஸல்) தங்களது
கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள்.
இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை 'பெரும்
பொய்யர்' என்று வருணித்தனர். ''உங்களது
பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக்
கூறுங்கள்'' என்று கேட்டனர். அல்லாஹ்
நபி (ஸல்) அவர்களின் கண்முன்
பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி
(ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும்
வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது
மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன
ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி
(ஸல்) எவ்வாறு கூறினார்களோ
அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை
ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை
விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
புகாரி
4710
இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்
(இரவின் ஒரு சிறு பகுதியில்
நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்)
குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) 'ஹிஜ்ர்' எனும் (வளைந்த)
பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்க அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச்
செய்தான். உடனே நான் அதைப் பார்த்தப்படியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்கலானேன்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
அறிவித்தார்.
முஸ்லீம் ஹதீஸ் எண்: 251அத்தியாயம்: 1, பாடம்: 1.75,
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
"(கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள்
கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில்
இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது
முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம்
தெரிவித்தேன்".
"(பைத்துல்
மக்திஸில்) இறைத்தூதர்களில்
ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன்.
அங்கு மூஸா (அலை) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து
ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர்
ஈஸா(அலை) அவர்களும் நின்று
தொழுது கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்)
உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக
ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும்
ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்".
"அப்போது
(ஒரு) தொழுகையின் நேரம்
வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது
முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே! இதோ இவர்தாம்
நரகத்தின் காவலர் மாலிக்.
அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று கூறினார்.
நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம்
சொல்லி விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Ishaq:183
"Upon hearing this
many became renegades who had prayed and joined Islam. Many Muslims gave up
their faith. Some went to Abu Bakr and said, 'What do you think of your friend
now? He alleges that he went to Jerusalem last night and prayed there and came
back to Mecca.'
(இஸ்லாமை ஏற்றுக்
கொண்டிருந்தவர்கள், இதை கேட்டவுடன் நம்பிக்கையிழந்தனர்.
சிலர் அபூபக்கரிடம் சென்று, “கடந்த இரவில்
ஜெருசலேம் சென்று அங்கு தொழுகை நடத்தி மெக்காவிற்கு திரும்பியதாக உறுதியாக கூறும்,
உங்களது நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்)
அவர் (முஹம்மது நபி) இதைக் கூறியிருந்தால் நம்புகிறேன், ஆம் அவர் கூறியது அனைத்தையும் நம்புகிறேன் உண்மையே என்றார். அபூபக்கர், இதன் பிறகே சித்தீக் ’உண்மையே
கூறுபவர்’ என்ற அடைமொழியுடன் அபூபக்கர் சித்தீக் என்று அழைக்கப்படலானார். ஆயினும் இந்த நிகழ்வை ஏற்க
மறுத்து சிலர் இஸ்லாமை விட்டு விலகினர்.
இச்சம்பவத்தின் பொழுது 70 - 80 பேர்களே
இஸ்லாமை ஏற்றிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
"மஸ்ஜித்" என்பது
முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் வழிபாட்டு இடத்தைக் குறிக்கும். "அல்மஸ்ஜிதுல்
ஹராம்" என்பது
சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். "அல்மஸ்ஜிதுல் அக்ஸா" என்பது
ஃபலஸ்தீனின் ஜெருசேலத்தில் உள்ள பைத்துல் மக்தஸைக் குறிக்கும்.
இந்த விண்வெளிப் பயணம் தொடர்பான செய்திகள் அனைத்தும்
வரலாற்று ஆதாரங்களுக்கு எதிரானவைகள். தாவூது நபி மற்றும் சுலைமான் நபியால் கிமு 958-951 கட்டப்பட்ட ஆலயம், கிமு 1004 -ல்
கட்டி முடிக்கப்பட்டது. கிமு 586-ல்
நெபுகத்நெஸ்ஸார் என்ற பாபிலோனிய மன்னரின் படையெடுப்பில் அந்த ஆலயம் முற்றிலும் தகர்கப்பட்டது.
இரண்டாவது கட்டப்பட்ட ஜெருசலேம் ஆலயம், கிபி 70
ஆண்டு டைட்டஸ் என்ற ரோமானிய மன்னரின் படையெடுப்பில் அதாவது நபி
பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் அந்த
யூதக் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அந்த யூதக் கோவிலை இருந்த இடம்
தெரியாதவாறு செய்து விட்டனர். இப்பொழுது நீங்கள் பார்க்கும்
எண்கோண (Octagon) வடிவ
பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா (Dome of Rock) கலீபா அப்து அல்-மாலிக் இப்ன் மர்வான் என்பவரால் கிபி 691-ல்
கட்டப்பட்டது அதாவது நபியின் மரணத்திற்கு பின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டது. கிபி 1016
ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் அழிந்த கட்டிடத்தை Zaher
Li-l’zaz என்பவரால் கிபி 1022 ல் மீண்டும்
கட்டப்பட்டது. அதற்கு கிப்லா இல்லை என்பதுவும்
குறிப்பிடத்தக்கது. கிபி 691வரை
மஸ்ஜிதுல் அக்ஸா இல்லை. குர்ஆன் 17:1 வசனம்
குறிப்பிடும் மஸ்ஜிதுல் அக்ஸா நபி உயிருடன் இருந்த பொழுது இல்லவே இல்லை.
இந்த வாததிற்கு ஆதாரம் இஸ்லாமிய
வரலாற்றிலேயே இருக்கிறது. நபியின்
மரணத்திற்குப் பிறகு, கலீபா உமர் அவர்களின் ஆட்சி காலத்தில்
ஜெருசலேம் முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அப்போது
அங்கு சென்ற கலீபா உமர் தொழுகைக்கு நடத்த இடம் தேடுகிறார். அங்கு
எந்த ஒரு பள்ளிவாசலும் இல்லாததால், கிருஸ்துவ
பாதிரியார் ஒருவர் தங்களது ஆலயத்தில் தொகை
நடத்திக் கொள்ள கோரிக்கை வைக்கிறார். கிருஸ்துவ ஆலயத்தில்
தொழுகை நடத்த விரும்பாத கலீபா உமர் கத்தாப் அவர்கள், குப்பைகூளத்துடன் காணப்பட்ட ஒரு
திறந்த வெளியை சுத்தம் செய்து தொழுகை நடத்தியதாக வரலாறு தெளிவாக குறிப்பிடுகிறது. அந்த திறந்த வெளி எதுவென்றால்
சுலைமான் நபி கட்டியதாக கூறப்படும் Solomon Temple என்ற
யூதக் கோவில் இருந்த இடம். நிர்வாக காரணங்களுக்காக, உமர் அவர்கள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார். மக்களின்
தேவைகளை விசாரித்து அறிகிறார். அவர் அங்கு புதிதாக ஒரு
பள்ளிவாசலை நிர்மாணனிக்கிறார். அது “மஸ்ஜிதுல் உமர்"
என்றழைக்கப்பட்டது.
இப்பொழுது என் மனதில் எழும் நியாயமான கேள்வி என்னவென்றால் நபி எங்கிருந்து
மிஹ்ராஜ் பயணம் சென்றார்?
கிபி 622-623 ல் குர்ஆன் 17:1 கூறும் மஸ்ஜதுல்அக்ஸா எங்கே?
மெக்கா நகரவாசிகள் முஹம்மது நபியின் இரவுப் பயணத்தைப் பற்றி குறுக்கு
விசாரணை செய்கையில், அல்லாஹ், நபியின் கண்களில் பைத்துல்
மக்தஸை தோன்றச் செய்ததாகவும், அதன் அடையாளங்களைப்பற்றி
குறிப்பிட்டவுடன், அவர்கள் மறுத்துப் பேச முடியாமல்
போனதாகவும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. இல்லாத
ஒன்றை எப்படி காண்பிக்க முடியும்? முஹம்மது நபியின்
காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர்கள் அறியாத ஒரு மஸ்ஜிதைக் குறித்து
விசாரணை செய்து எவ்வாறு
உறுதிப்படுத்தியிருக்க முடியும்?
இது இன்னொரு விவாதத்தையும் முன்வைக்கிறது. முஹம்மது
அவர்கள் நபித்துவம் பெற்றதிலிருந்து ஹிஜ்ரத்திற்கு பிறகும் ஒன்றரை ஆண்டுகள் வரை
பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக கொண்டு தொழுதார்கள். அதன்
பிறகே நபியின் விருப்பப்படி மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) கிப்லாவாக மற்றப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.
நபியே உம்முடைய முகம் (கிப்லா மாற்றக
கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம் திரும்புவதை
திட்டமாக நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்புகின்ற
கிப்லாவுக்கு உம்மை திண்ணமாக நாம் திருப்பி விடுகிறோம். எனவே
உம்முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின்பால் திருப்புவீராக
(குர் ஆன் )
இல்லாத பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கிய ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் தொழுகை
நடந்துள்ளதாகவும் பொருள் தருகிறது. பைத்துல் முகத்தஸ் எங்கே?
இந்த மஸ்ஜிதுல் அக்ஸா தெடர்பான இன்னொரு ஹதீஸையும் பார்ப்போம்
புகாரி ஹதீஸ்
:3366,
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் (நபி - ஸல் - அவர்களிடம்)
அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன்
முதலாக அமைக்கப்பட்ட பள்ளி வாசல் எது என்று கேட்டேன். அவர்கள்,
அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள
புனித (கஅபா அமைந்திருக்கும்) இறை
இல்லம் என்று பதிலளித்தார்கள். நான், பிறகு எது என்று கேட்டேன். அவர்கள், (ஜெருஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா என்று
பதிலளித்தார்கள். நான், இவ்விரண்டுக்குமிடையே
எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது
என்று கேட்டேன். அவர்கள், நாற்பது
ஆண்டுகள் (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பது
ஆண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,
தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுது விடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை
நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது என்று சொன்னார்கள்.
முஸ்லீம் ஹதீஸ் எண்: 808 அத்தியாயம்: 5, பாடம்: 5.01,
அறிவிப்பாளர் : அபூதர் அல்கிஃபாரீ (ரலி)
"அல்லாஹ்வின் தூதரே! பூமியில் அமைக்கப்பட்ட
முதல் இறையாலயம் எது?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்மஸ்ஜிதுல் ஹராம்"
என்று பதிலளித்தார்கள். நான்,
"பிறகு எது?" என்று கேட்டேன்.
அவர்கள், "அல்மஸ்ஜிதுல் அக்ஸா"
என்று பதிலளித்தார்கள். நான்,
"அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன்.
அவர்கள், "நாற்பதாண்டுகள்"
என்று கூறிவிட்டு, "உங்களைத்
தொழுகை (நேரம்) வந்தடையும்
இடத்தில் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) அதுதான் (உங்களுக்கு) மஸ்ஜித்" என்று கூறினார்கள்.
இதில் இன்னொரு தவறும் உள்ளது. கஅபா, இப்ராஹிம்
நபியால் கிமு 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. (இன்னும் சில ஆதாரங்கள் கஅபா, ஆதம் நபியால்
கட்டப்பட்டது என்கிறது.) தாவூது நபி காலத்தல் துவங்கி
சுலைமான் நபி, Temple of Solomon (மஸ்ஜிதுல் அக்ஸா / பைத்துல் முக்அதிஸ்) கிமு 958-1004 ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெளிவாக கூறுகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1040 ஆண்டுகள்.
முஹம்மது நபி கூறியதில் ஆயிரம் ஆண்டுகள் பிழையுள்ளது.
நாம் விண்வெளி பயணத்தை தொடர்வோம். முஹம்மது நபி அவர்களின் விண்ணுலகப் பயணத்தில்
பல காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.
புகாரி ஹதீஸ்
: 7517
…"ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?" என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவையிரண்டும்
நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்" என்று
பதிலளித்தார்கள்.…
Readislam.net
என்ற
இஸ்லாமிய இணையதளத்தின் 'மிஃராஜ்'' பற்றிய
ஒரு கட்டுரையிலிருந்து…
…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து
நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு
ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது,
வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்),
ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம்
அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு
ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி
எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி
1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர்
விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார். அவரை வரலாறு ஏனோ மறந்தது.
பின்னர் கிபி 1937 BRUCKHAR
WALDEKKER ஜெர்மன்
ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா
ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில்
கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர்
நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில்
துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.
யூப்பரடீஸ்
மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால்
எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின்
தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின்
நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.
பறக்கும் குரங்கு அனுமன் தனது மார்பைப் பிளந்து காண்பித்த
பொழுது அங்கு இராமன் சீதை தெரிந்ததாக கூறுக் இந்துமதக் கதைக்கும் முஹம்மது கூறும் நெஞ்சம்
பிளக்கப்பட்ட கதைக்கும் அறியாமையில் எந்த வேறுபாடுமில்லை!
18 கருத்துரைகள்:
தஜ்ஜால்,
இஸ்லாத்தை கடந்த சுவடுகள் என்ற உங்களது தொடரின் ஒவ்வொரு பகுதியும் மிக அருமையாக இருக்கிறது. அந்த வரிசையில் இந்த பகுதியும் பிரமாதம். உங்கள் பொன்னான இந்த சேவையை தொடருங்கள். வாழ்த்துக்கள்.
ஒரு முஸ்லீம்கூட பின்னூட்டம் இட தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் நிலைமை பரிதாபம்தான்.
வாருங்கள் ஆனந்த்,
இஸ்லாத்தை கடந்த சுவடுகள் என்ற இத்தொடரில் வரும் அனைத்துமே இஸ்லாமின் மறுபக்கத்தைப்பற்றி கற்கத் துவங்கிய பொழுது நான் கண்டடைந்தவைகளே. இதில் என்னுடைய எழுத்துக்கள் குறைவு. நான் அன்று படித்தவைகளை அவ்வப்பொழுது தொகுக்கத் துவங்கினேன். எனவே இதில் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களும் ஆய்வுகளும் இடம்பெறுகிறது. எனவே பாராட்டிற்கு உரித்தானவர்கள் அவ்வறிஞர்களே!
எழுதுவதற்கு பின் நீண்ட ஆய்வு தெரிகிறது. உண்மை தேடும் முயற்சி தெரிகிறது.
தொடருங்கள்.
வாழ்த்துக்கள்
மூட மூட்டையின் முடிச்சுகள். அவிழதொடங்கியுள்ளது. வாழ்த்துகள் சகோ..
கண்ணுமணி முகம்மத் விடிந்ததும் மறந்துவிட்டாரா? தான் பார்த்ததை அப்படியே அவர்களிடம் ஏன் கூற முடியவில்லை அல்லா ஏன் எந்திரன் சினிமாவில் வருவதுபோல பிட்டு காட்டவேண்டும் முகம்மதின் காட்டுமிராண்டி காலத்திலேயே இந்த க்கதையை நம்பாமல் இதைப்பற்றி கேள்வி கேட்டிருக்கின்றனர் ஆனால் இப்போதும் இதை நம்பிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை நினைத்தால் புல் அறிக்கின்றது!!!!!
கண்ணுமணி முகம்மத் விடிந்ததும் மறந்துவிட்டாரா? தான் பார்த்ததை அப்படியே அவர்களிடம் ஏன் கூறமுடியவில்லை. அல்லா ஏன் எந்திரன் சினிமாவில் வருவதுபோல பிட்டு காட்ட வேண்டும் முகம்மதின் காட்டுமிராண்டி காலத்திலேயே இந்தக்கதையை நம்பாமல் இதைப்பற்றி கேள்வி கேட்டிருக்கின்றனர் ஆனால் இப்போதும் இதை நம்பிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை நினைத்தால் புல்லறிக்கின்றது!!!!
வாருங்கள் சாலமன்,
நன்றி!
இஸ்லாத்தைப்பற்றி ஆய்வுகளை, முதலில் எனக்கு நானே உண்மையை அறிவிக்கும் முயற்சியாகத்தான் துவங்கினேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முல்லாக்களின் மலுப்பல்கள் என்னை வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைத்ததுடன் உண்மைகளையும் புரிய வைத்தது. இதில் இணையத்தின் பங்கு அபாரமானது.
வாருங்கள் சாதிக்,
நன்றி!
மற்ற மதநம்பிக்கைகளுடன் ஒப்பிடும் பொழுது மூடத்தனத்தில் இஸ்லாம் சற்று சளைத்ததல்ல. அதன் அடிப்படையே மூடத்தனத்தில்தான் இருக்கிறது!
வாருங்கள் உயிரி,
இஸ்லாமியர்கள் சொல்வதைப்போல அன்றைய அரேபியர்கள் மூடர்கள் அல்ல. அவர்களிடம் முஹம்மதின் ஏமாற்று வேலை செல்லுபடியாகமல் போனதாலதான், அண்ணன் வாளைக் கையிலேந்த வேண்டிவந்தது!
நன்றி!
//'உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டனர். .. நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை... இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர்// அடையாளத்தை கூறினால் அதை ஏற்க முன்னதாக அதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் அப்போதுதான் ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் ஏற்க வேண்டுமானால் அவர்கள் எதை நம்புகிறார்களோ அதைதான் கூறியிருக்க முடியும் அதாவது அக்காலத்தில் மக்களிடையே இருந்த ஒரு கருத்தைதான் தான் கண்டதாக அதை புரிந்துகொண்டுதான் நிராகரித்தள்ளனர் என்பது தர்க்க அடிப்படையில் முடிவுசெய்ய முடியும்.
//'அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்// இருவருக்கும் இடையே ஏதோ ஒரு உறவை எடுத்துக்காட்ட குறிப்பிடபட்டதுபோல் உள்ளதே ஏதேனும் கிளைக்கதை உள்ளதோ?
why muhamaed went ஃபகிதா home in mid night?.
boss namma aalu eppavme ladies ilama thungave mattaru! ithu kooda theriyatha!
வாருங்கள் ANT,
//அதாவது அக்காலத்தில் மக்களிடையே இருந்த ஒரு கருத்தைதான் தான் கண்டதாக அதை புரிந்துகொண்டுதான் நிராகரித்தள்ளனர் என்பது தர்க்க அடிப்படையில் முடிவுசெய்ய முடியும்.// குர்ஆன் 17:1 பிற்சேர்க்கையாகவும் இருக்கலாம்!
அல்லா இவ்வுலகிற்கு 1.25 லட்சம் எண்ணிக்கையில் தூதர்களை அனுப்பியுள்ளதாக குரானில் கூறியுள்ளார.ஆனால் சொர்க்கத்தில் யுத அரேபிய வரலாற்றில் சொல்லப்பட்ட நபிகளை மட்டுமே சந்தித்ததாகச் சொல்கிறார. உலகில் பிற பகுதிகளுக்கு அல்லவால் அனுப்பப்பட்ட இறைதூதர்கள் என்ன ஆனார்கள் ? அவர்களை சொர்க்கத்தில் காணவில்லையே ஏன் ?
இந்த உமமு கலானியைத்தான் முதலில் தனக்கு திருணம் செய்து தரக் கேடகின்றார முகம்மது. ஆனால் திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் தந்தை மறுத்து விட்டார. அண்ணலின் தகுதி அவ்வளவுதான். கணவனை இழந்த பெண்ணாக உமமு இருந்தபோதுதான் முகம்மது கலானியின் வீட்டிற்கு யாரும் அறியாமல் போகின்றார் ? வேறு எதற்கு பழைய காதல் மோகமாக இருக்கலாம்! வரலாற்று நூல்களில் விளக்கம் இருந்தால் தஜ்லால் அவர்கள் தெரிவிப்பார்கள்.
Shut your bloody mouth
En rabbey unaku kooli koduka pothumanavan muttal naaye
Post a Comment