முதலில் குர்ஆனிலிருந்து
சில அறிவியல்(!) வசனங்கள்
குர் ஆன் 7:26.
Yābanī ādama qad anzalnā ʿalaykum libāsan yuwārī sawātikum
warīshan..
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும்
ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்...
குர் ஆன் 39:6
...wa-anzala lakum mina l-anʿāmi thamāniyata
azwājin..
.... கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை
உங்களுக்காக இறக்கினான்...
குர்ஆன் வசனங்களில்
வரும் ’anzalnā’ என்ற சொல்லில் பெரும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய முன்னறிவிப்பு மறைந்துள்ளதை
இஸ்லாமிய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதைப் பார்ப்பதற்குமுன், அவர்கள் தரும்
விளக்கத்தை மேற்கண்ட வசனங்களுக்குப் பொருத்திப் பார்க்கலாம்.
(பலியிடத்தக்க) கால்நடைகளும்,
மனிதர்களை அலங்கரிக்கும் ஆடைகளும், தராசு போன்ற கருவிகளும் பூமியிலே உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன்
விளக்கியுள்ளனர். இவைகளை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக்கொள்வதால் குர்ஆன் கூறுவது
நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பொருட்களும் உருவாவதற்கு, அதற்கேற்ற சூழல் இருக்க
வேண்டும். கால்நடைகளும், மனிதர் அணிவதற்குத் தகுந்த ஆடைகளும், தராசு போன்ற கருவிகள்
பூமில் உருவாக வாய்ப்பின்றி இருந்தது. ஆனால்
இன்றும் இவைகள் மனிதர்களின் பயன்படுத்திக் கொண்டிருப்பவைகள். ஆடைகளையும் தராசுகளையும் மனிதர்களால் உருவாக்க முடியாது; இவை
எங்கிருந்து வந்தன? யாரால் உருவாக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் மனித
இனம் இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறது.
விலங்குகள், ஊர்வன,
பறப்பன, புழு, பூச்சிகள், கிருமிகள், நுண்ணுயிர்கள்.... போன்ற பலவைகயான உயிரினங்கள்
பூமியிலே உருவானவைகள். ஆனால் பலியிடத்தக்க
பலியிடத்தக்க எட்டு ஜோடி கால்நடைகள் பூமியில் உருவானவைகள் அல்ல! அதென்ன எட்டு
ஜோடி என்கிறீர்களா? வெள்ளாடு, செம்பறியாடு, மாடு, ஒட்டகம், எருமை, கழுதை, கோவேறு கழுதை,
குதிரை போன்றவைகளாம். இவைகளும், ஆண்களுக்கு, கோவணம் முதல் கோட்சூட் வரையிலும் பெண்களுக்கு
புர்கா முதல் பிகினி வரையிலான உடைகள் பூமியில் உருவானவைகள் அல்ல. இவைகள் எங்கிருந்து
வந்தது என்பதிலும் மனிதர்கள் இன்றுவரை குழப்பதிலேயே இருந்தனர். வேறு எங்கிருந்தாவது
இறக்கியிருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இதற்கான பதிலை,
1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது பின்
அப்துல்லா என்ற பல்துறை வல்லுநர் வழியாக அல்லாஹ் அறிவித்திருக்கிறான். இவைகள் இப்பூமியில்
உற்பத்தியாகவில்லை, மேலேயிருந்துதான் இறக்கப்பட்டது என்பதை அற்புதமாக அறிவித்திருப்பதன்
மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.
இறங்கியது.. இறங்கியது...
என்கிறீர்களே எங்கே இறங்கியது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதற்கென்று சிறப்பு
ஆய்வுகள் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு ஆடை விற்பனை நிலையங்களுக்குச் செல்பவர்கள்
அங்கு, விற்பனைக்குத் தேவையான சரக்கு வாகனங்களிலிருந்து இறக்கப்படுவதை கவனித்திருக்கலாம்.
இந்த இறக்குதலைத்தான் குர்ஆனும் குறிப்பிடுகிறது. இதுபோன்ற அரிய உண்மைகளைக் கூறுவதன்
மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.
குர் ஆன் 57:25
...wa-anzalnā maʿahumu
l-kitāba wal-mīzāna liyaqūma l-nāsu bil-qis'ṭi. wa-anzalnā l-ḥadīda fīhi basun shadīdun wamanāfiʿu
lilnnāsi...
..அவர்களுடன் வேதத்தையும், மக்கள்
நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும்,
மக்களுக்குப் பயன்களும் உள்ளன...
குர்ஆன் 57:25 வரும்
wa-anzalnā (இறக்கினோம்) என்ற சொல் (இங்கே, இங்கே,
இங்கே)அறிவியலை
வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் முன்பு பார்த்த 7:26, 39:6 போன்ற வசனங்களில்
வரும் ’anzalnā’-க்களை கண்டுகொள்ளாமல்
விட்டிருக்கின்றனர். இது முல்லாக்களின் ஓரவஞ்சனை,
இது அவர்கள் குர்ஆனுக்கு செய்யும் பச்சை (சிவப்பு, மஞ்சள் பிங்க்) துரோகம் என்று குற்றம்சாட்டுகிறேன்.
எனவேதான் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யத் தவறியதை, என்னால் முடிந்த அளவிற்கு
நிறைவேற்ற, குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனங்களுக்குள் அறிவியலை(!) ஏற்றியிருக்கிறேன். (இந்த இடத்தில்
நீங்கள், ஜஸாக்கல்லாஹ் ஹைர் என்று சொல்லவேண்டும்!)
குர்ஆன்
57:25-ல் அறிவியல் இருக்கிறதா?
இரும்பு மட்டுமல்ல
தனிமவரிசை அட்டவணையிலுள்ள அனைத்து தனிமங்களும் பெருவெடிப்பிற்குப் பிறகு உருவானவைகள்தான்.
சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
பெருவெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும் கன ஹைட்ரஜன் வாயுவின்
மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் எனவும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக்கரு உருவாகி
இருக்க வேண்டும் என்றும் அவைகளிலிருந்து ``லிதியம் மற்றும் ``பெரில்லியம் போன்றவற்றின்
தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும் எனவும் ஹாக்கிங் கூறுகிறார்.
ஹைட்ரஜன் அணுக்கள்
ஹீலியமாக இணைகிறது, ஹீலியம் வாயு கனமான கார்பன்,
நியான், ஆக்ஸிஜன், சிலிகான் ஆக மாற்றமடைகின்றன. சிலிகான் இரும்பாக மாற்றம் பெறுகிறது.
பெருவெடிப்பிற்குப் பின்னர் தோன்றிய சூரியன்கள் (நட்சத்திரங்கள்) மாபெரும் அதிவெப்ப
செம்பூதங்களாக(Red giant) இருந்தன. அதன் பின்னர் சிறிது காலத்துக்குப் பின்னர் பெரும்
சூப்பர்நோவாக்களாக வெடித்துச் சிதறின. சூப்பர் நோவாக்களாக வெடித்துச் சிதறிய இந்த சூரியன்களே
இன்று இருக்கும் சூரியன் மற்றும் பூமி போன்ற கிரகங்களின் அடிப்படை செங்கற்களாகவும்
ஏன் உயிர் தோன்றவும் இன்றியமையாத அடிப்படை செங்கற்களாக இருக்கும் தனிமங்களை உருவாக்கித்
தந்தன என்று ஆய்வு கூறுகிறது.
4.567 பில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சூரிய நெபுலாவிலிருந்து, நாம் வாழும்
இப் புவி மற்றும் இதர கோள்கள் தோன்றின. இளகிய நிலையிலிருந்த பூமியினுள், நெபுலக்களின்
சிதறல்கள், எரிகற்கள், விண்கற்கள் போன்றவைகள் புதைந்தது. பூமியில் மிக அரிதாக காணப்படும்
தங்கம் போன்ற உலோகங்ளும் இவ்வாறு வந்தவைகளே .
நமது சூரியக்குடும்பம் மட்டுமே இது நடந்த ஒரே இடம் அல்ல. அண்டத்தில்
ஏறத்தாழ நமக்குத் தெரிந்து 200 பில்லியனுக்கும் மேற்பட்ட சூரியன்களும் அதைச் சுற்றி
கிரகங்கள் இருக்கின்றன. இத்தனை கிரகங்களிலும் ஏராளமான அதிக எடை கொண்ட உலோகப் படிவங்கள்
இருக்கின்றன. இரும்பு, சூரியக் குடும்பத்தில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. அண்டத்தில் பத்தாவது அதிகமாகக் கிடைக்கும் தனிமம்
என்று கணக்கிடப்படுகிறது.
இரும்பு, எப்பொழுதிலிருந்து,
யாரால் மனிதர்களிடையே பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பெற்றதென்று குறிப்பாக வரையறுக்க
இயலாது. பண்டைய எகிப்தியர்கள்
இரும்பை வானிலிருந்து வந்த உலோகம் என்று அழைத்திருக்கின்றனர். இதன் பொருள் எரிகற்களில்
காணப்படும் தனித்த இரும்புத்தாதுவை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்பதுதான். இதே கருத்தில் மெசபடோமியர்களும் இருந்திருக்கின்றனர்.
எனவே குர்ஆன் 57:25-ல் அறிவியல் முன்னறிவிப்பு
எதுவுமில்லை; பண்டைய கால நம்பிக்கைகளையே அது பிரதிபளிக்கிறது. மேலும், முஹம்மது ஆங்காங்கே
தான் கேட்ட கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் அல்லாஹ் என்ற கடவுளின் பெயரால் அளந்துவிட்டிருக்கிறார்
என்பதையும் நிரூபிக்கிறது.
குர்ஆன் 7:26-ல் வரும்
anzalnā வை ’அருளினோம்’
என்று மொழிபெயர்த்து குர்ஆனின் உளறலை சரிகாண முயற்சித்ததன் மூலம், பீஜே போன்ற இஸ்லாமிய
அறிஞர்கள் தங்களது இயலாமையை ஒப்புக்கொண்டு விட்டனர் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியுள்ளது.
குர்ஆனிலுள்ள கால்நடைகள், உணவு, ஆடை, தண்ணீர், தண்டனை, தராசு புத்தகம் என்று பல இடங்களில் anzalnā
(இறக்கினோம்) என்ற
சொல் பயன்படுள்ளது; இவைகளும் வானிலிருந்து இறக்கப்பட்டவைகளா என்ற கேள்வியை கண்டுகொள்ளாமல்,
இரும்பைமட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அறிஞர்களைக் காண பரிதாபமாகத்தான்
இருக்கிறது.
தஜ்ஜால்
12 கருத்துரைகள்:
//வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம் ... உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்....... கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான்// தெளிவான புத்தகத்தில் தனக்காக பிறரை கொலை செய்வதற்க்கு வெகுமதியாக பெட்ரோல் போன்ற எண்ணெயை மஃமீன்களுக்கு இற்க்கினோம் என்ற வசனம் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டுமே! அளவற்ற அறிவாளன் அதை குறிப்பிட்டுள்ளாரா?
Dear Tajjal, I want to congrats you first ,for you became a good man from the evil,also I have been started to read your meaningful articles which is seems that your Sharp criticizing on Islam I also to join with you for this work when i have time if we read the 1st chapter of Qur'an we can easily understand that Muhammad's lies where is the story ruled out by anybody, but the followers of Islam not have brain them-self, so the ever worst story is still troubling the world,but I hope it will come to an end soon.
Praba
//1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது பின் அப்துல்லா என்ற பல்துறை வல்லுநர்//
முஹம்மதுவை பல்துறை வல்லுநர் என்பது அவரை அவமதிப்பதாகும். சரியாக சொல்ல வேண்டுமென்றால், அவரை அனைத்து துறை வல்லுநர் என்றுதான் கூற வேண்டும். அவருடய வழி காட்டலும் முன்மாதிரியும் இல்லாத எந்த துறையையாவது நீங்கள் குறிப்பிட முடியுமா? இந்த முஹம்மது என்கிற போதையை நீங்கள் அவ்வளவு லேசாக எடை போட்டு விட்டீர்களா? இந்த போதை இல்லாவிட்டால் பிறகு, இஸ்லாம் ஏது? அல்லாஹ் ஏது?
வாருங்கள் ANT,
//பெட்ரோல் போன்ற எண்ணெயை மஃமீன்களுக்கு இற்க்கினோம் என்ற வசனம் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டுமே! // அதை கண்டுபிடிப்பதற்கும், வெளியே எடுப்பதற்கும் காஃபிர்களின் உதவி கிடைக்கும் என்ற அறிவிப்பையும், நமது முல்லாக்கள் ஆராய்ந்து அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாருங்கள் பிரபா,
நன்றி
// ... I hope it will come to an end soon.// அதற்கான் முடிவு நமது செயல்பாடுகளில்தான் உள்ளது. நாம் மட்டுமல்ல மனிதநேய ஆர்வலர்கள் பலரும் இப்பெரும் முயற்சியில் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. அருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
வாருங்கள் ஆனந்த்,
//முஹம்மதுவை பல்துறை வல்லுநர் என்பது அவரை அவமதிப்பதாகும்.// உண்மைதான். முஹம்மது அனைத்து(!) துறையிலும் வல்லுநர் என்ற உங்களது கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
பல்துறை என்பதும் அனைத்து துறை என்பதும் ஒன்றுதான் ஆனந்த சாகர்.
இறக்கினோம் அருளினோம் இப்படி இடத்திற்கு தகுந்தாற்போல் அள்ளிவிடத்தான் அற்புதமொழி ரபு இருக்குல்ல. அதனால அள்ளிவிடத்தான் செய்வோம். ஜஸாக்கல்லாஹ் ஹைர், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லா, பரகத்துல்லா....
தஜ்ஜால் அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள் தொடருங்கள்.
(இந்த இடத்தில் நீங்கள், ஜஸாக்கல்லாஹ் ஹைர் என்று சொல்லவேண்டும்!) ஹி ஹி ஹி... என்ன ஒரு நக்கல்.
அல்லாவுக்கும் குரானுக்கும் பிராக்கெட்டில் தானே வாழ்வே ஓடுது...
வாருங்கள் நாட்டுவேங்கை,
//இடத்திற்கு தகுந்தாற்போல் அள்ளிவிடத்தான் அற்புதமொழி ரபு இருக்குல்ல. // அதேதான்! முல்லாக்கள் வண்டியே அரபு என்ற அரைவேக்காட்டுமொழியை நம்பிதான் ஓடுகிறது.
வாருங்கள் உறங்கா விழிகள்,
நன்றி!
எவ்வளவு சிரமப்பட்டு இல்லாத அறிவியலை குர்ஆன் வசனத்திற்குள் இறக்கியிருக்கிறேன். அதற்கு ஜஸாக்கல்லாஹ் சொல்ல மறந்துவிட்டால் என் நிலை என்னாவது? அல்லாஹ், என்னைத் தந்தூரி அடுப்பில் போட்டு பொசுக்கி விடமாட்டானா? இதைப்பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்!
வாருங்கள் இனியவன்,
//அல்லாவுக்கும் குரானுக்கும் பிராக்கெட்டில் தானே வாழ்வே ஓடுது...// அடுத்த பதிவில் பிராக்கெட்டின் மகிமையை நாமும் பயன்படுத்தலாம்.
Post a Comment