யானைப் படையை
உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில்
முடிக்கவில்லையா? அவர்களுக்கு
எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட
கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்
குர்ஆன் 105:1-5
அறிஞர் பீஜே தயாரித்துள்ள அணுகுண்டுவைப்பற்றி
பார்ப்பதற்கு முன் குர்ஆனின் 105வது அத்தியாயமான
ஃபீல் (யானை)-ன் பின்னணியைப் பற்றி சுருக்கமாக கவனித்து விடுவோம்.
அறிஞர் பீஜே தரும் விளக்கம்
இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய
நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன்
முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில்
வழிபாடு நடத்த திரளான மக்கள் வந்து செல்வதில் பொறாமைப்பட்ட அப்ரஹா என்ற மன்னன்,
கஅபாவை இடித்துத் தகர்க்க யானைப்படையுடன் வந்தான். கஅபா ஆலயத்தை யானைப் படையினர் அழித்து விடாமல் தடுத்து அபாபீல் எனும்
பறவைகள் மூலம் இறைவன் அந்தப் படையினரை அழித்தான். அப்
பறவைகள் சூடான சிறுகற்களை
யானைப்படை மீது வீசி அவர்களை, மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கிவிட்டன.
இந்த வரலாற்றைத்தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகின்றது.
இந்த நிகழ்ச்சிநடந்த ஆண்டில்தான் நபிகள்நாயகம் (ஸல்) பிறந்தார்கள். நபிகள்நாயகம் (ஸல்) பிறந்த ஆண்டில் இதுநடந்ததால் சிறுவயதிலேயே இந்தநிகழ்ச்சி பற்றி நபியவர்கள் கேட்டு அறிந்திருந்தார்கள். மக்காவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்த நிகழ்ச்சியாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தபின், இதிலிருந்துமக்கள் ஆண்டுக் கணக்கைத் துவக்கினார்கள். அரபுகள் அனைவருக்கும், நபிகள் நாயகத்துக்கும் இது நன்றாகத் தெரிந்திருக்கும் போது, அவர்களுக்கே இதைச் சொல்லிக் காட்டுவது தேவையில்லை. அரபுகள் அறிந்து வைத்திருந்ததைவிட மிகக்குறைவான விபரத்தைத்தான் இந்த அத்தியாயம் கூறுகின்றது…
அறிஞர் பீஜே குறிப்பிடும் ஆட்சியாளரின்
முழுப் பெயர் அப்ரஹா அல்-அஷ்ராம்
(Abraha al-Ashram). அல்லாஹ்வின் தூதர் ஈஸாவின் போதனைகளை பின்பற்றக் கூடிய எத்தியோப்பியர்.
யானைகள் கொண்ட படையுடன் கஅபாவைத் தாக்க வந்த பொழுது அல்லாஹ் அனுப்பிய கற்காளால் தாக்கப்பட்டு
இறந்தார் என்பது முஹம்மதியர்களின் ஐதீகம். இரண்டாம் கலீஃபா உமர் ஹிஜ்ராவை அடிப்படையாகக்
கொண்டு இஸ்லாமிய ஆண்டு முறையை அமல்படுத்தும் வரை, அரேபியர்கள் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு
”யானைகளின் ஆண்டு”(Am al-fil)) என்று காலக்கணக்கை வைத்திருந்தனராம். அப்ரஹாவின் மரணத்திற்கு
இப்படியொரு காரணத்தை குர்ஆனைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. குர்ஆனின் இந்தக் கூற்றிற்கு
எவ்விதமான வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. வாதத்திற்காக, இவர்கள் கூறுவதை உண்மையென்று
வைத்துக் கொள்வோம்.
குர்ஆன்
கூறும் இந்த நிகழ்ச்சியில் சில குழப்பங்கள் உள்ளன.
இஸ்லாமியர்களின்
நம்பிக்கைபடி, கஅபாவை அல்லாஹ்வின் முதன்மை
இல்லம், அவனுக்கு மிகவும் பிடித்தமான, அணுவணுவாக இரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கும்
இல்லம் என்றே வைத்துக் கொள்வோம். அந்த இல்லம் முழுவதையும்
அரேபியர்கள், அல்லாஹ்விற்கு சிறிதும் பிடிக்காத,
மிகவும் வெறுத்து ஒதுக்கும்
ஹுபல், அல்லாத், மனாத், அல்-உஸ்ஸா மற்றும்
அவர்களின் உதவியாளர்களின் சிலைகளால் நிரம்பச் செய்து, பெரும் திரளான மக்கள்
அவற்றை வணங்கிக் கொண்டிருந்தனர்.
அச்சிலைகளை வணங்கி, வழிபாடுகள்
செய்து அவற்றிடம் அபயம் தேடினர், அவற்றை நாடி பயணித்து ஹஜ் செய்தனர், கால்நடைகளை அறுத்து
பலியிட்டனர். முஹம்மதின் பாட்டனார் அப்துல் முத்தலிப், தனது மகன்களில் யாரைப் பலி இடவேண்டுமென்பதை
தீர்மானிக்க ஹுபல் சிலையிடம்தான் ஆலோசனை கேட்டு முடிவு செய்தாராம். கஅபாவில் இருந்த
சிலைகளை, அரேபியர்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே, கருதுமளவிற்கு சிலை வழிபாட்டில் மூழ்கியிருந்தனர்.
அப்ரஹா, அல்லாஹ்வின் தூதர் ஈஸாவைப்
பின்பற்றக் கூடிய, நம்பிக்கை மிகுந்த முஸ்லீம். பாகன் அரேபியர்களின் சிலை வழிபாட்டை
எதிர்ப்பவர். உண்மையில் அல்லாஹ் யாரை ஆதரித்திருக்க
வேண்டும்?
முஹம்மது,
கஅபாவை வெற்றி கொண்டு, 360 சிலைகளைத் தாக்கி உடைக்கும்வரை கஅபாவினுள் சிலை வழிபாடுதான்
நிகழ்ந்து கொண்டிருந்தது. சிலைகளை அல்லாஹ் எதற்காக காப்பாற்ற வேண்டும்?
நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்களது
இல்லத்தில் நீங்கள் மிகவும் வெறுத்து ஒதுக்கும் பொருட்களைக் கொண்டு நிரப்பினால், நீங்கள்
என்ன செய்வீர்கள்?
அதற்காக, எனது நேசத்திற்குரிய இல்லத்தைத்
தகர்ப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். எதற்காகவும்,
எந்த சூழலிலும் எனது இல்லம் தகர்க்கபடுவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறலாம். இதற்கான
பதிலை இறுதியில் கூறுகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் கூறப்படும்
அப்ரஹா, முஹம்மது பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு (C.E-570) அபாபீல் என்ற பறவைகள்
கற்களால் தாக்கியதால் தனது நாட்டிற்குத் திரும்பும் வழியில், உடல் முழுவதும் அழுகி,
சீழ் பிடித்து விரல்கள் ஒவ்வொன்றாக கழன்று விழுந்ததாம். இறுதியில் நெஞ்சு வெடித்து,
இதயம் வெளியாகி இறந்ததாக, இப்ன் இஸ்ஹாக் கூறுகிறது.
அரேபியாவில் அதே ஆண்டில், அம்மை
நோய் பரவியிருந்ததாக இப்ன் இஸ்ஹாக் கூறுவதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இனி
அறிஞர் பீஜேவின் அணுகுண்டைபற்றி பார்க்கலாம்.
... இன்னொரு செய்தி ஆழமாகச் சிந்திக்கும் போது விளங்கும் செய்தி. சிந்தனையைச் செலுத்த வேண்டிய ஒரு செய்தி இதனுள் அடங்கியிருக்கிறது
என்பதற்காகவே இது சொல்லப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். யானை மிகப்பெரிய உயிரினம். அவற்றைச் சிறிய
உயிரினமானபறவை இனம் அழித்த விதத்தைப்பற்றித்தான் இந்த அத்தியாயம் சிந்திக்கச்
சொல்கிறது. அப்பறவைகள் தமது அலகுகளில் தாங்கி வந்த கற்கள் சாதாரணக்கற்கள் அல்ல.
அதிக வெப்பமுடைய
கற்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. …
”அதிக வெப்பமுடைய கற்கள்” என்ற
சொல் இந்த அத்தியாயத்தில் எங்கே இருக்கிறது?
சில குர்ஆன் மொழிபெயர்ப்புகளைப்
பார்க்கலாம்,
கே.ஏ நிஜாமுத்தீன் மன்பஈ
..சுடப்பட்ட கற்களைக் கொண்டு அவர்களை அவை எறிந்தன. …
இக்பால் மதனீ
…(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
tamilquran. com
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள்
மீது அவை எறிந்தன.
Sahih
International
Striking them with stones of hard clay,
Yusuf Ali:
Striking them with stones of baked clay.
Pickthall:
Which pelted them with stones of baked
سجيل (sijjeel)
means (desert) rocks that are hard, sharp and/or made out of clay.
According to Lisan Al-Arab Dictionary, سجيل (sijjeel) means:
(1)- السَّجِيلُ
الصُّلْب الشديد The Sijjeel is
the hard and the tough.
(2)- سِجِّيل؛ وقيل:
هو حجر من طين Sijjeel is
a rock from dried mud.
(3)- من سِجِّيل، تأْويله
كثيرة شديدة From Sijjeel means
it is in great quantities and it is tough.
ஸிஜ்ஜீல் என்றால் மண்கட்டி அல்லது
உலர்ந்து போன சேற்றுத் துண்டுகள். அறிஞர் பீ,ஜே ஸிஜ்ஜீல் என்பதன் பொருளை அறியாதவர்
அல்ல. ஏன் இவ்வாறு திரித்து, சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது
அவை வீசின.
…” என்று மொழிபெயர்த்து, அதிக வெப்பமுடைய கற்கள் என்று குர்ஆன் கூறுகின்றது என்று பொழிப்புரையும் செய்ய வேண்டும்?
அபாபீல் என்ற பறவை
உருவத்தில் சிறியது. ஒவ்வொரு பறவையும் தனது அலகு மற்றும் கால்களால் மூன்று
மண்கட்டிகளை சுமந்துவந்து எறிந்தன என்கிறனர். அவற்றால் அதிகபட்சமாக அரை அங்குல
அளவிற்கு மேல் எந்தப் பொருளையும் பற்றிப் பிடித்து தூக்க முடியாது. அது மண்கட்டி
அல்லாமல் கற்களாகவே இருந்தாலும், அபாபீல் அதனை எத்தனை உயரத்திலிருந்து எறிந்தாலும்
எவ்விதமான பாதிப்பையும் ஏற்பட வழியில்லை.
இதனை அறிஞர்
பீஜேவும் அறிவார். ஆனால் குர்ஆன் யானைப்படை அழிந்ததாகக் கூறுவதை சரிகாண, அப்ரஹாவின்
யானைப்படை பறவைகள் வீசிய கற்களிலிருந்து வெளியான வெப்பத்தைத் தாங்கமுடியாமல் இறந்ததைப்
போன்று சித்தரிக்கிறார். சாதரண மண்கட்டியை, கதிரியக்கத்தன்மையுடைய யுரேனியத்த்தின் அளவிற்கு ’பில்ட்அப்’ கொடுத்து, குர்ஆனில் அறிவியல் என்ற மதவியாபார தந்திரம் செய்கிறார்.
.... இது வெளிவெப்பத்தைக் குறிக்காது. ஏனெனில், வெளிப்படையான
வெப்பம் என்றால் யானைகளை அழிக்கும் அளவுக்கு வெப்பத்தைப் பலவீனமான அப்பறவைகளால்
எப்படித் தாங்கியிருக்க முடியும்?
மேலும் வெளி வெப்பமுடைய கற்களாக இருந்தால் அவை தரையில் விழுவதற்குள் சூடு ஆறியிருக்கும். அக்கற்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, கீழே விழுந்து வெடித்துச் சிதறும்போது ஏற்படும் வெப்பத்தையே இதுகுறிக்கிறது. சக்தி வாய்ந்த அணு குண்டுகளில் அதிக வெப்பம் இருந்தாலும் அவை வெடிக்கும் போதுதான் அந்த வெப்பம்பாதிப்பை ஏற்படுத்தும். வெடிக்காதவரை சாதாரண பொருளைப் போல் அவற்றைத் தொடலாம்.
அந்தக் குண்டுகளை உயரமான
இடத்திலிருந்து போட்டால்தான் குண்டு வீசியவர்களைப் பாதிக்காது. தரையில்
இருந்து போட்டால், குண்டு போட்டவர்களும் அழிந்து
போய்விடுவார்கள். இந்த உண்மைகள்
அனைத்தையும் உள்ளடக்கும் விதமாகத்தான் இந்தநிகழ்ச்சி அமைந்துள்ளது…
355. அணு குண்டு பற்றிய முன்னறிவிப்பு. onlinepj.com
அறிஞர் பீஜே, ஸிஜ்ஜீல் என்பதற்கு
பொருள், ”வெப்பமுடைய கற்கள்” என்பதை உறுதி செய்த பின்னர் அது உள்வெப்பமா? அல்லது வெளிவெப்பமா
என்பதை விவாதித்திருக்கலாம்.
அணுகுண்டுகளை உயரமான இடத்திலிருந்து
எறிய வேண்டும், வெடிப்பை நிகழ்த்த அருகில் இருக்க வேண்டுமென்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்.
அணுகுண்டுகளை எப்படிக் கையாள வேண்டுமென்பதை கற்றுக் கொள்ள அணு ஆயுதவல்லரசுகள் அறிஞர்
பீஜே மற்றும் அவரது குழுவினர்களிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது(!) அணுகுண்டுகளின் நிலையை
’வெங்காயவெடி’ அளவிற்கு இறங்கிவிட்டனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப்பற்றி அறிஞர்
பீஜே அறியவில்லையென்று நினைக்கிறேன்.
இதைப் போன்ற உளறல்களுக்கு அறிஞர்
பீஜே மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அவருடன் இருக்கும் ’பொரி உருண்டை’களின் அறிவியல்(!)
கண்டுபிடிப்புக்களையே இங்கு பிரதிபளிக்கிறார்.
நாம் கஅபாவின் விஷயத்திற்குத் திரும்புவோம்.
கஅபா இடிக்கப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லையா?
முஸ்லீம் ஹதீஸ் 2589
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஸீத் பின் முஆவியா ஆட்சிக் காலத்தில்
ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை
முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து
முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்றுகூடும்வரை இறையில்லத்தை அதே
நிலையிலேயே விட்டு வைத்தார்கள். (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக
"மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்காகவே' அல்லது "அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே' அவ்வாறு விட்டு வைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள்
புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை
கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா, அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?'' என்று கேட்டார்கள்.
…….நான் (கஅபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என்
இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு
வருவேன்'' என்றார்கள். நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது, இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள்.
அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர்.
இறுதியாக ஒரு மனிதர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லை கீழே தள்ளினார்.
அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள், ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத்
தரைமட்டமாக்கினர்.
இது மட்டுமல்ல கஅபா பலமுறை முற்றிலும்
அழிந்து போயிருக்கிறது. அதைப்பற்றி மிக சுருக்கமாக கவனிக்கலாம்.
CE 683-ல், அப்துல்லாஹ் அஸ்ஸுபர், முஹம்மது விரும்பியவாறு இரண்டு வாசல்கள்
வைத்து கஅபாவை முழுமையாக மீண்டும் புதுப்பிகிறார்.
CE 692-ல் அப்துல் மாலிக் பின் மர்வான் ஒப்புதலோடு, ஹஜ்ஜாஜ் இப்ன் யூசுஃப்
தலைமையிலான படையின் கவண் தாக்குதலில் மீண்டும் கஅபாவின் சுவர்கள் சேதமடைந்தது. அப்பொழுது
ஏற்பட்ட அதிர்விலும், தீ விபத்திலும் கஅபாவின் கருப்புக்கல் சிதறுண்டு போனது.
CE 930-ல் ஹஜ் காலத்தில் காரமியர்களின் தாக்குதலில் பெருமளவிளான ஹஜ்
பயணிகள் கொல்லப்பட்டு, ஜம்ஜம் கிணற்றில் வீசி எறியப்பட்டனர். கஅபாவின் கவர்ச்சிப் பொருளான
கருப்புக்கல் களவாடப்பட்டது. அதை திரும்பவும் கஅபாவிற்கு கொண்டுவர இஸ்லாமியர்களுக்கு
20ஆண்டுகள் தேவைப்பட்டது.
இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போன கஅபா CE 1039-ல் மீண்டும் மறுசீரமைப்பு
செய்யப்பட்டது
CE 1979-ல் மெக்கா முற்றுகைக்குள்ளானது. அதைப்பற்றி தோழர் செங்கொடி அவர்கள் எழுதிய பதிவு.
மெக்கா வெற்றிக்குப் பின்னர் முழுவதுமாக
அல்லாஹ்வின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்வரை, கஅபாவில் ஹுபலின் அதிகாரமே நிலவியிருந்தது.
ஹுபலின் அதிகாரத்தில் இருந்த பொழுதுதான் குர்ஆன் குறிப்பிடும் யானைப்படை தாக்குதல்
நடந்துள்ளது என்பதை முன்பே பார்த்தோம்.
கஅபாவை அழிப்பதற்கு, அப்ரஹா யானைப்
படையுடன் வந்த பொழுது, நிகழ்ந்ததாகக் கூறப்படும் வான்வெளித் தாக்குதல், அல்லாஹ்வின்
அதிகாரத்தில் இருந்தபொழுது ஏற்பட்ட முற்றுகைகள் மற்றும் அழிவுகளின் பொழுது நிகழாமல்
போனது வேடிக்கை.
உண்மையில் அன்று கஅபாவைப் பாதுகாத்தது
பாகன் அரேபியர்களின்,
ஹுபல் என்ற கடவுளா? இல்லை அல்லாஹ்வா?
தஜ்ஜால்
13 கருத்துரைகள்:
puthiya thakavalkaL. nandri.
// பைத்துல் முகத்தஸ்தான் கஃபாவைப் பார்க்கினும் மேலானது, முன்னதாக இதுதான் கட்டப்பட்டது. இதுதான் மஹ்ஷர் மைதானமுள்ள நாடு, நபிமார்கள் ஹிஜ்ரத் செய்த இடம். அவர்களுக்கெல்லாம் இந்த பைத்துல் முகத்தஸ் கிப்லாவாக இருந்தது. நபி மூஸா (அலை) இறைவனுடன் பேசிய இடமாகிய தூர்ஸீனா மலை இந்த நாட்டில் தான் இருக்கிறது. ஆகவே இதனை விட்டு விட்டு கஃபாவின் பக்கம் கிப்லாவை மாற்றியது தவறு” என்று யூதர்கள் கூறினார்கள். // வாழ்க இணையம் யாரும் ஏமாற்ற முடியாது. //http://emsabai.com/Aug12-Article12.html// இங்கு தான் எந்த இடம் முதன்மையானது என்பது முஃமீன்களே ஒப்புக் கொள்வதை காணமுடிகிறது. ஆனாலும் உண்மைய ஏற்க சிந்திக்க வேண்டியது வருமே! சிந்திப்பார்களா?
Test
Every matter is questioned by three questions ie why? For what purpose? how? I will explain we all know water is a fluid( flowing liquid)1 how is it in liquid state? We can explain it by science.2 for what it is in liquid state . We can explain by the good and uses of water.3 why is it in liquid state in normal? aethist may answer it is natural but religionist says it is because of God s grace. This arguement never ends.
இப்பவும் இறையாலயத்தை பாதுகாப்பது யார்...??அல்லாவா..இல்லையே..!!ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் இஸ்லாம் அல்லாதவர்கள் நுழைந்துவிடாமல் பாது காத்தல் போன்ற நடவடிக்கைகளால் தான் ஆலயம் பாது காக்கப்படுகிறது. இதுக்கு நம் நாட்டு கோயில்களே தேவலை..ஆம் ஆயிரம் ஆண்டுகளாக ராஜ்ராஜன் கோயிலை பாதுகாத்துக் கொண்டிருப்பது எது..??அல்லாவா...??/அனைத்து மதத்தவரும் அனைத்து நாட்டவரும் பார்த்துவந்தும் பாதுகாப்பற்ற நிலையில் யாரால் பாதுகாக்கப்படுகிறது...??
இனியவன்...
வாங்க குட்டிப்பிசாசு,ANT
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வாருங்கள் இனியவன்,
கஅபா அல்லாஹ்வால் ஒருபொழுதும் பாதுகாக்கப்படவேயில்லை என்பதைத்தான் குர்ஆனும், ஹதீஸ்களும், வரலாறும் சொல்கின்றன.
what do you want to prove by this statements. By
common man
Do you want to prove Islam is fake or god is fake.
@Anoymous,
Both Islam & Allah are fake.
Hai Anand sagar
Which is original for this fakes. Fake must be compared with original. Then only we have a conclusion.
Are you able to realise the need of super power
In the stage of religionless and godless community which was in its self evolution.
ethu pj vrkku tazzal potta anugunduu
நல்ல ஆராய்ச்சி
Post a Comment